இந்த செய்தியை ஒரு மணி நேரத்துக்கும் முன்பே இன்னும் சூடாக வெளியிட்டிருக்கலாம்.ஆனால் உறுதிசெய்யப்படாத தகவலாகவோ அல்லது புலம்பெயர் தமிழர்களை திசை திருப்பும் பொருட்டோ இருக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பொழுது காமன்வெல்த் தளத்தில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த செய்தி பகிர்வு.
.2010ல் ராஜபக்சே லண்டன் பயணத்தின் நேரத்து உணர்வுகள் தமிழர்களிடம் குறைந்து போய் விட்டதா அல்லது எலிசபெத் மகாராணியின் விழாவுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென்றோ முந்தைய புலம்பெயர் தமிழர்களின் கூட்டம் லண்டன் விமானநிலையத்திலும்,ராஜபக்சே தங்கியிருந்த ஓட்டல் முன்பும் எதிர்பார்த்த அளவுக்கும் குறைவான கூட்டமே கூடியதை காண முடிந்தது.தமிழர்களின் எதிர்ப்புக் குரலை எதிர்பார்த்திருந்த ராஜபக்சே தனது பயணதிட்டத்தை மாற்றியதும் கூட அவருக்கான உள்பயத்தை நிரூபிப்பதாகவே இருந்தது எனலாம்.
புலம்பெயர் தமிழர்கள் பல குழுவாக இயங்கினாலும் இந்த முறை மொத்த இணைப்புக்கான குரலையும் காணமுடிந்தது வரவேற்க தக்கது.காமன்வெல்த் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல் காலையில் இருந்தது ரத்து செய்யப்பட்டு ராஜபக்சே கலந்து கொள்ளாத நிகழ்வாக பிற்பகல் 1 மணி மதிய உணவுடன் 2.00 மணிக்கு கலந்துரையாடல் துவங்கும்.
நம்ம பதிவுலக பரிணாம குரு சகோ.சார்வாகன் ஆதாரமில்லாமல் ஒரு செய்தியை சொல்லக்கூடாது என்று எழுதப்படாத நியதியை வகுத்திருப்பதாலும் எப்படி இந்த செய்தியை நம்புவது என்று நினைப்பவர்களுக்கும் இணைப்பு இங்கே.
http://www.cbcglobal.org/events/details/commonwealth-economic-forum
மற்றும் ராஜபக்சே கலந்து கொள்ளாத மாற்றப்பட்ட பிற்பகல் நிகழ்ச்சி நிரல் இங்கே.
http://www.cbcglobal.org/images/uploads/docs/CEF2012_Brochure_Final.pdf
மனித உரிமை மீறல்களுக்கும்,பதவி என்ற பாதுகாப்பில் இறுமாப்போடு நடந்து கொள்ளும் ராஜபக்சேகளுக்கான எதிர்ப்புக் குரலை இன்னும் தொடர்வது மிகவும் அவசியம்.
15 comments:
வணக்கம் சகோ,
நல்ல தகவல்.இராஜபக்சே&கோ ஆட்சியில் இருக்கும் வரை தமிழர்கள்க்கு எந்த தீர்வும் கிடைக்காது.எப்படியாவது மேற்கத்திய நாடுகளை சமாதானப்ப்டுத்த மட்டுமே இராஜபக்சே விரும்புகிறாரே தவிர இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி அல்லதமிழர்கள் சாதி மதம் தாண்டி ஒன்றுபட்டு இது போல் எதிர்ப்பை தெரிவித்து ஒரு வாக்கெடுப்புக்கு வழி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்போம்.இப்படி ஒரு தீர்வுக்கான் கலந்துரையாடல் இராஜபக்சே குழு நீங்கலாக (இதர சிங்கள தலைவர்களையும் உள்ளடக்கி) மட்டும் நடை பெற்றால் இராஜபக்சே தாத்தா கூட வழிக்கு வந்து விடுவார்!.
டிஸ்கி:நாம் பரிணாம் குருவா???.வேண்டுமானால் உண்மை அறிவியலின் மாண்வன் என்று வேண்டுமானால் அழையுங்கள்.நம் தாத்தா நக்கீரன் இறைவன் என அழைக்கப் பட்டவ்ரிடமே பாட்டில் பிழை கண்டவர்.ஆகவே "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
ஆதாரம் என்பது (1)நெருங்கிய கால்த்தைய,(2)பல இடங்களில் பெறப்பட்ட ,(3) ஒன்றை ஒன்று சாராம தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
True information should be based on Earliest,Multiple and independent sources
இந்த மூன்றும் பொருந்துவதால் உங்கள் த்கவல் உண்மை.
நன்றி
//ரத்து!//
பின்வாங்கல் அல்லது நீக்கம்.
தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட ராஜபக்சே கூடிய விரைவில் அழிவது உறுதி .
இணையத் தமிழன்.
http://www.inaya-tamilan.blogspot.com/
சகோ.இப்ப பின்னூட்ட கச்சேரியை ஆரம்பிச்சடலாம்.ராஜபக்சேக்களின் பலமே அங்கேயும் ஒரு குடும்ப அரசியல் என்பதும் அண்ணன் பெயரே போர்க்குற்றவாளியென இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பது தெரிகிறது.ஆனால் அதிகார போதையிலும் தான் யாருக்கும் பொறுப்புக்கூற வேண்டியதில்லை என்று தம்பி ஆடும் ஆட்டம் பிபிசி நேர்காணலில் பல்லிளிக்கிறது.இன்னுமொரு தம்பி பணம் சேர்க்கும் கணக்குப்பிள்ளையென்பதால் இருக்கும் இடமே தெரியாமல் பின்புல பண வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நமது விமர்சனங்கள் அரச அதிகாரம் என்ற மையத்தை சுற்றியே.அந்தப் பாதுகாப்பு கவசத்தை ராஜபக்சேக்கள் இழக்கும் வரை அவர்கள் ராஜதந்திர ரீதியாக தப்பித்துக்கொள்ளும் சாத்தியம் மிக அதிகம்.
சிங்கள தலைவர்களில் ஒரு சிலர் இன அடிப்படைக்கும் அப்பாலிருந்து குரல் கொடுப்பது வரவேற்க தக்கது.இவர்களையும் உள்ளடக்கிய குரலாக தமிழர்களின் குரல் ஒலித்தாலும் தற்சமய சூழலில் ராஜபக்சேக்களுக்கு எதிரான வலுவான மாற்றுத் தலைமை இல்லையென்பதே உண்மை.
நாம் என்ன பரமார்த்த குருவென்றா விளித்தோம்:)தமிழ் பதிவுலக பரிணாம குரு பெயர்ப் பொருத்தம் உங்களுக்கு மிகவும் பொருத்தமே.எல்லோரும் எல்லா விசயங்களையும் மேலோட்டமாக பேசி விடமுடியும்.ஆனால் யாரும் தொடர்ந்து தொடாத ஒரு துறை சார்ந்தும்,அறிவியல் சார்ந்தும் சுட்டிகளின் ஆதாரங்களுடனும்,காணொளிகளுடனும் ஒரு பதிவைக் கொண்டு வரவும் பதிவிற்கான எதிர் கருத்துக்களுக்கும் எதிர் கருத்தாடல் செய்ய மிக மிக உழைப்பு தேவையென்பது உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.
நானே நவீன நடராசன்!என்னிடமேவா பாட்டில் பிழை கண்டீர் சகோ.சார்வாகன்:)
கோவி அண்ணே!காலையிலே உங்கள் தமிழ்ப் புலமை என் கண்ணை உறுத்திச்சு.2010 நவம்பரில் ராஜபக்சே ஓடிப்போனாரே அதுதான் பின்வாங்கல்.இந்த முறை அவரே வடை சாப்பிட விருப்பப்பட்டும் இல்லையென்று சொல்லி விட்டார்கள்.நீக்கம் என்பதும் கூட சரிப்பட்டு வரவில்லை.என்னவோ பணி நீக்கம் மாதிரி பொருள்படுகிறது.நானும் நாலைந்து கடைகள் போய் வந்தேன்.எல்லோரும் என்னைப் போலவே ரத்து சொல்கிறார்கள்.
வாங்க விஜய்!நீங்க ஷிட்னி ஷெல்டன் ரசிகரா!எனக்கும் முன்னாடி சிட்னியை ரொம்ப பிடிக்கும்.இப்ப வெறும் சட்னி மட்டுமே பிடிக்கிறது.நீண்ட வாசிப்புக்கான கால அவகாசம் கிடைப்பதில்லை.உங்கள் தளத்தில் படங்களைப் பார்க்கும் போது கண்ணைக் கட்டுதே வசனம் அந்த பசுமைகளுக்கே பொருந்தும்.
ராஜபக்சேக்களுக்கான எதிர்நிலை அதிகமென்ற போதிலும் பூகோள அரசியலில் இந்தியா,அமெரிக்கா,சீனா,ரஷ்யா எப்படி காய் நகர்த்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே ராஜபக்சேக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.யாருமே கண்டு கொள்ளாத குட்டித் தீவு இப்பொழுது கிழக்காசிய பொருளாதார,உலக அரசியலை தீர்மானிக்கும் நிலமாக மாறியுள்ளது.எனவே இலங்கை அரசு பிரச்சினைகளுக்கும் மத்தியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழர்களின் எதிர்ப்புக் குரல்,மனித உரிமைக் குழுக்களின் அழுத்தங்கள் என ஒரு புறமும் இந்தியா,அமெரிக்கா,ஐ.நா இரட்டை முக அரசியல் ஒரு புறமும் சீனா,ரஷ்யாவின் இலங்கை சார்பு நிலையென்ற பாதுகாப்பில்....
Srilanka goovernment is a hard nut to crack at present.
ஆனால் அடிக்க அடிக்க அம்மியும் நகரும்ங்கிற பழமொழிக்கேற்ப ஒரு புறம் ராஜபக்சேக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும் சாத்தியங்களும் உண்டு.
ராஜ்,
ராச பக்சே வடை ஊசிப்போன வடை எனவே வடையை கவ்வாமல்,
கோவி சொன்ன தமிழ் ஆராய்ச்சிக்கு போயிடுறேன்,
விலக்கு அல்லது தவிர்த்தல் என சொல்லலாம்.
விவாகரத்து என்பதை மண விலக்கம் (அ) முறிவு எனப்படித்துள்ளேன்.
ஆயத்தீர்வை ரத்து என்பதை ஆயத்தீர்வை விலக்கு அளிக்கப்பட்டது என சொல்வார்கள்.
அடுத்து தவிர்ப்பு அல்லது விடுவித்தல் என சொல்லலாம். இது கொஞ்சம் தூரமான இணைச்சொல் எனலாம்.
//ஆனால் அடிக்க அடிக்க அம்மியும் நகரும்ங்கிற பழமொழிக்கேற்ப ஒரு புறம் ராஜபக்சேக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும் சாத்தியங்களும் உண்டு. //
ஒப்புக் கொள்கிறேன்.
//ரத்து!//
அடுத்து ஒரு மொழி உலக வழக்கில் உள்ள சிறந்த சொற்களை கடன் வாங்குவதால் அந்த மொழியின் பயன்பாடு அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஆங்கிலத்தைப் போல.
வவ்வு!கீழே சகோ.சுவனப்பிரியன் எப்படி எனக்கு எடுத்துக்கொடுக்கிறார்ன்னு பாருங்க.அது ஏன் எல்லோருக்கும் ரத்து மேல் அவ்வளவு ஒரு ரத்து:)பத்தோடு பதினொன்றாக ரத்துவும் ஒரு மூலையில் தமிழில் உட்கார்ந்து விட்டுப் போகட்டுமே.இப்ப என் பெயரை சொன்னால் சுயபுராணமாகி விடுமென்பதால் ரோஜாவை துணைக்கு கூப்பிடுகிறேன்.ரோஜாவுக்கு கம்பீரமே ஜ தான்.ஆனால் அது வடமொழின்னு சிலர் உங்க மொழியில் குண்டாகி விடுகிறார்கள்:)ஒரு மொழியின் வளமே அதன் சொல் புழக்கத்தில் இருப்பதுதான்.
அப்புறம் ராஜபக்சே ஊசிப்போன வடைன்னுதான் நானும் நேற்று பதிவு போடும் வரை நினைச்சுகிட்டிருந்தேன்.இன்றைக்கு புலம் பெயர் தமிழர்கள் இரண்டாம் இன்னிங்சை கடைசி நேரத்தில் அடிச்சு ஆடி தங்கள் பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.சாலையின் நடை பாதையில் மட்டுமே நிகழ்ந்த மக்கள் போராட்டம் ஸ்காட்லாந்து யார்டு போலிஸ் துணையோடு நடு சென்டர்! ரோடுக்கு வந்து ராஜபக்சே பாடையில் போக தாரை தப்பட்டைகளுடன் தீக்குளியல் ஆகிவிட்டது.
தமிழகத்தில் ஆறு கோடி மக்களை வைத்துக்கொண்டு போராட முடியாத நண்டுக்குழுக்களுக்கு மத்தியில் சில ஆயிரம் புலம் பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை மேற்கத்திய உலகை உற்று நோக்க வைத்திருக்கிறார்கள்.
சகோ.சுவனப்பிரியன் ஸலாம்!
ரத்துக்கு நண்பர் வவ்வாலின் பின்னூட்ட பதிலுக்கு உங்களையும் கோர்த்து விட்டு விட்டேன்.ஒரு மொழியின் வளமே பல சொற்களின் உள்வாங்கலே என்பதற்கு ஆங்கிலம் சிறந்த உதாரண்ம்.
ராஜ்,
//அது ஏன் எல்லோருக்கும் ரத்து மேல் அவ்வளவு ஒரு ரத்து:)பத்தோடு பதினொன்றாக ரத்துவும் ஒரு மூலையில் தமிழில் உட்கார்ந்து விட்டுப் போகட்டுமே.//
உங்களை என்ன சொல்வது?
இப்போ யாரு 10,11 ,12 என இருக்க வேண்டாம் சொன்னது , ரத்துக்கு இணையா தமிழில் இல்லைனு நினைச்சுக்க கூடாது என விளக்கத்தோடு சொன்னேன், ரத்தை தமிழில் பத்தோடு ஒன்றாக வைத்துக்கொள்ள சொல்லும் பரந்த மனசு கேன்சலையும் தமிழில் வைத்துக்கொள்ள சொல்லிடலாமே :-))
அப்புறம் நான் தூய தமிழில் தான் கதைப்பேன் என நிற்பவன் அல்ல ஆனால் தெரிந்துக்கொண்டால் தவறில்லை என முயற்சிப்பவன்.
ரோஜா என்பது பெயர்ச்சொல் அலெக்சாண்டரை எந்த மொழியில் எழுதினாலும் அதான்.
அர்னால்ட் என்பதற்கு ஸ்காண்டிநேவியன்/ ஒல்ட் ஜெர்மனியில் கழுகு என்று பெயர் அதற்காக அவர் பெயரை கழுகு என்றா எழுத சொல்லப்போகிறேன்.
இல்லை அர்னால்ட் ஷ்வார்ஷ்நேகர் என்பதை அறந்தாங்கி சிவநேசன் என்றா எழுத சொல்ல சொல்கிறேன் :-))
ராஜ்,
//ஒரு மொழியின் வளமே அதன் சொல் புழக்கத்தில் இருப்பதுதான்.//
அப்போ தமிழின் ஒரு சொல் புழக்கத்தில் இருந்தால் தான் வளமாக இருக்கும், பிற மொழி சொல் இருப்பதால் அல்லனு தானே நீங்களும் சொல்லுறிங்க?
அப்புறம் என்ன கோவி மற்றும் அவர் சொன்னதன் அடிப்ப்டையில் நானும் சொன்னால்,
//அது ஏன் எல்லோருக்கும் ரத்து மேல் அவ்வளவு ஒரு ரத்து:)பத்தோடு பதினொன்றாக ரத்துவும் ஒரு மூலையில் தமிழில் உட்கார்ந்து விட்டுப் போகட்டுமே.//
இப்படி சொல்லுறிங்க. ஒரே பத்தியில் இப்படியான முரண்பாடு ஏன்?
தமிழின் கட்டுமரம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் அப்படியே கட்டமரன் என எடுத்துக்கொண்டார்கள். ஏன் எனில் கட்டுமரம் என்ற பொருளோ,அதற்கான சொல்லோ ஆங்கிலத்திலேயே இல்லை.இல்லாத நிலையில் எடுத்துக்கொள்ளலாம்ம், அல்லது உருவாக்கி இணைக்கலாம், ஆனால் அதனை கட்டாயம் என சொல்லவில்லை.ஒரு முயற்சி தான்.
ரோட் என்பதற்கு வீதி என்று தமிழில் இருக்கும் போது ரஸ்தா என்று சொன்னால் தமிழுக்கு நல்லது என்று நீங்கள் சொன்னால் , அதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை.நயா ரஸ்தா மெய்ன் ஹமரா ஸிந்தகி கா ஜாயேங்கே :-))
எப்படி இந்தி மேலயும் புல்டோசர் ஏத்துவோம்ல:-))
ஏக் காவ் மேய்ன் ஏக் கிசான் ரக தாதா!
வவ்வு!சண்டை போடனுமின்னே கோதாவுல இறங்கினா மல்லுக்கட்டித்தானே ஆகனும்:)
அப்ப பெயர்ச்சொல்லை அப்படியே ஏற்றுக்கலாம் வினைச்சொல்லுக்கு மாற்றம் வேண்டுமென்கிறீர்களா என்ன?இன்றைக்கு ரெட் ஜயன்ட்,சன் டிவின்னு தமிழ் வளர்ப்பவர்கள் முன்பு மெய்யாலுமே தமிழ் வளர்க்க ஆசைப்பட்டு காபிக்கு குளம்பியென்று பேர் வைத்தார்கள்.ஆனால் காபி மட்டுமே நிரந்தரமாக தமிழர்கள் நாக்கில் ஒட்டிக்கொண்டது.நீங்கள் சொல்வதோ கோவி சொல்வதோ சொல்லும் பொருளோடு ஒட்டிப்போனால் பிரச்சினையில்லை.நானும் முழு தமிழ்ச்சொற்களை பயன்படுத்த வேண்டுமென்று முயற்சி செய்து பதிவுலகில் வழக்க தமிழ் மட்டுமே அதிகம் புழங்குவதால் நானும் அப்படியே ஆகிவிட்டேன்.மேலும் சில நேரங்களில் என்னதான் முயற்சி செய்தாலும் அந்த கணத்தில் தமிழ் சொல் வந்து விழாது.நாம் விரும்பாமலே ஆங்கில பதம் குடு குடுன்னு என்னை எடுத்துக்கோயேன் என வந்து முன்நிர்கும்.
அர்னால்ட் ஷ்வார்ஷ்நேகரை அறந்தாங்கி சிவநேசன்னு மாற்ற முடியாது..நீங்க மாற்றினாலும் மொழிபெயர்ப்பு தப்பு::) ஏன்னு கேளுங்களேன்! ஒரு ஸ்காட்லாண்டுக்காரருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது யூத பெயர்களை எப்படி அடையாளம் காண்பது என்று சொல்லிக்கொடுத்தார்..இப்ப உங்க பேர் வவ்வால்தானே:) ஆனால் இது யூத பெயரில்லையாம். N விகுதி ஆங்கிலப்பெயரில் முடிந்தால் அது யூதப்பெயரின் அடிப்படையாம்.இன்னும் ஆங்கில z வந்தாலும் யூதப் பெயராம்.இது எந்த அளவுக்கு உண்மையென்ரு தெரியவில்லை.ஆனால் இந்த பேச்சு சி.என்.என் பார்த்துக்கொண்டிருந்த போது வந்து விழுந்த தகவல்.எனக்கென்னமோ ராமன்,முருகன்,க்ந்தன்,கிருஷ்ணன்,சிவநேசன் போன்ற பெயர்களிலிருந்து இடம்பெயர்ந்த பெயர்களாக இருக்கலாமென நினைக்கிறேன்.பெயர்ச்சொற்கள் எப்படி உருவாகின்றன என்பதும் கூட பெரும் ஆராய்ச்சிக்குரியவை.
முந்தைய பின்னூட்டம் போட்ட பின் உங்க பட போஸ்டர் ஞாபகம் வந்துடுச்சு.மாத்துனீங்களா இல்ல இன்னும் கொஞ்ச நாள் போஸ்டரை வச்சே ஓட்டிடலாம்ன்னு தேமேன்னு விட்டுட்டீங்களா?நான் சாயங்காலமா வந்து பார்க்கிறேன் உங்களை.
நீங்க என்னதான் போஸ்டர் அடிச்சு ஒட்டினாலும் நமக்குன்னு சில நண்பர்கள் கோஷ்டிகள் மட்டுமே கரை கடந்தும் வந்து இரை தேடுவார்கள்:)
இப்ப மொழி புழக்கத்துக்குப் போயிடலாம்.நான் என்ன சொல்ல வர்ரேன்னா ஒரு சொல் எங்கேயிருந்து வந்தது என்ற ஆதி அந்தம் தேடாமல் ஒரு சமூகத்தின் மொத்த நுனி நாக்கிலும் சரளமாக புழங்குவதால் மட்டுமே சொல் நிற்கும் என்பதே.
எனக்கு சமஸ்கிருதம் மீதெல்லாம் எந்த வெறுப்பும் கிடையாது.தெரிந்தா தெரிஞ்சுக்கலாமேங்கிற கேசுதான் நானும்.ஆனால் கோயில்கள் தவிர நடைமுறையில் எங்கும் சமஸ்கிருதம் இல்லையே!வந்து உட்கார்ந்து கொண்டாலும் ஆட்சேபனையில்லையென்றுதான் சொல்கிறேன்.இதில் என்ன முரண்பாடுன்னு மறுபடியும் நீங்க போட்ட அடைப்பானை உற்று எனும் உத்து உத்துப் பார்த்தேன்.எனக்கு எதுவும் முரண்பாடு தெரியல.யாராவது பின்னூட்டத்துக்கு வந்தால் உங்களுககு தெரியுதா இல்ல உங்களுக்கு தெரியுதான்னு கேட்கலாமென்று பார்த்தால் ஒரு ஆளையும் காணோம்.
ரோடு,வீதி,ரஸ்தா மூன்றில் எது புழக்கத்தில் இருக்கிறதென்று நீங்களே சொல்லுங்களேன்.
நீங்க என்னதான் ஏக் காவ் மேய்ன் ஏக் கிசான் ரக தாதா! திரும்ப திரும்ப சொன்னாலும் ரகு தாத்தா சொல்வதற்கு கமலஹாசன் உங்களுக்கு பக்கவாத்தியமா வரமாட்டார்.ஏன்னா அவர் இப்ப புதுக்கவிதைக்கு தாண்டி விட்டார்.பதிலுக்கு பதில் சொல்லிக்கிறேன்.
நயா ரஸ்தா மெய்ன் அப்னா ஸிந்தகி கிதர் ஜாயேங்கே :-))
இதையே ஏ.ஆர். ரகுமான் தமிழில் போடுற இசையை இந்திக்கு மாற்றுவது மாதிரி ஒரு ஹவாலி கவிதை உங்களுக்காக...
நயா ரஸ்தா மே
ஸிந்தகி அப்னா
ஜாயங்கே கா!
இந்த ரத்தம் வராத மொக்கையே ரக்த சரித்ரா:)
This document introduces the new features of Project Standard 2010 and Project Professional 2010.
Project 2010 Download can open and save files in the following file formats. Some formats allow you to save all the information in your project, and some formats allow you to save only the data contained in Project fields.
Post a Comment