பேசாப் பொருள் எனும் ஜிடிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுபா என்பவரின் நேர்காணல் காண நேரிட்டது.அம்மாவின் இலக்கியம் பிள்ளைக்கும் பற்றிக்கொண்டதென்பதே இவரைப்பற்றிய முகவுரைக்கு சரியாக இருக்கும்.தமிழ் கலாச்சாரத்தின் ஆதி தமிழகமாக இருந்தாலும் இன்று தமிழின அவலத்தையும் பறைசாற்றிக்கொண்டிருப்பதை இங்கே பேசாப் பொருளாக்கி தமிழின் சிறப்புக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் மலேசியா மற்றும் மேற்கத்திய புலம்பெயர் தமிழர்களும் எனலாம்.தோண்ட தோண்ட இன்னும் தேடும் புதையல்கள் என்பதையே இங்கே பேசும் தமிழ் மரபுகள் உரக்க சொல்கின்றன.
உ.வே.சாமிநாதய்யர் முதற் கொண்டு தமிழ் சுவடிகளை ஓரளவுக்கு ஆவணப்படுத்தியுள்ளோம் என்ற போதிலும் கூட மேற்கத்திய நாடுகள் தங்கள் கலாச்சார விழுதுகளை ஆவணப்படுத்துவது போல் நாம் செய்யவில்லை யென்ற போதிலும் அதற்கான ஆர்வங்களும்,தனி மனித சுய முயற்சிகளும் குறையவில்லை என்பதை தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.கணையாழி பத்திரிகை தமிழ் இலக்கிய வட்டத்துக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.
சுபா இவற்றோடு இணைந்து கொள்வது மட்டுமல்லாமல் அவரின் தேடலின் ஆர்வம் கூகிள் குழுமம் முதல் தமிழ் மரபு பதிவுகளாக துவங்கி பதிவுகளிலிருந்து டாட் காமர்களாக மாறுவதில் வேறுபட்டு அறக்கட்டளையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பது சிறப்பு.இவர் சார்ந்த குழுமத்தில் பலரின் பங்களிப்பு இருக்கின்ற போதிலும் என் ரசனையை ஈர்த்தவை ஓலைச்சுவடிகளும்,தேடலுக்கான பயணங்களுமே..இவற்றோடு குரல்களையும் பதிவு செய்வோம் என்ற புதிய பார்வை.
தரிசு நிலத்தை பட்டா போட்டுக்கொள்ளுங்கள் என்று கூகிள் சொன்னதை தொடர்ந்து கருத்துக்கள்,படங்கள்,காணொளி என்று நிறைய பகிர்வுகள் செய்கிறோம்.ஒலி என்றதும் கானா பிரபுவும்,காணொளி என்றதும் சின்னக்குட்டியும் கூடவே பெரும் காணொளிக்கு சார்வாகன் மட்டுமே பதிவுலகில் நினைவுக்கு வருகிறார்கள்.இதனை இன்னும் வளமை படுத்தலாம். அன்றாட வாழ்வின் சப்தங்களை இசை மயமாக்கியதில் இளையராஜாவுக்கு பெரும் பங்குண்டு.பிடோவன் (பீத்தோவன் என நாம் எழுதுவதின் சரியான உச்சரிப்பாம்) சொந்த சோகக் கதை தேடப்போய் இளையராஜாவின் சிம்பொனி பிரபலமாகாமல் போனதே என்ற சோகம் வந்து அப்பிக்கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் குறைந்த பட்சம் மூன்று நான்கு தலைமுறைகளின் குரல்களையும்,உருவங்களையும் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புக்கள் நமக்கு இருக்கின்றன.பிரிட்டிஷ் காலத்து புகைப்படங்கள் இன்று அரிய பொக்கிசமாக தோன்றுவது போல் இன்றைய குரல்கள்,காணொளிகள் பிற்காலத்தில் வரலாற்று ஆவணமாகக் கூடும் சாத்தியங்களுண்டு.எனவே சுய சேமிப்பு என்ற அளவிலாவது காணொளிகள்,குரல்களை பதிவு செய்வோம் என்கின்ற புதிய பரிமாணத்தை தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கியது.
சொல்வதை விட சொல்லாமல் சுட்டிகளை விட்டுச் செல்வதே சுபாவுக்கும்,தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் கௌரவப்படுத்துவதாக அமையும். சுபாவை அறிமுகப்படுத்தியதில் ஜிடிவிக்கு நன்றி உரித்தாகுக. இலக்கிய ஆர்வலர்கள் தமிழ் மரபோடு இணை ஆசிரியர்களாக இணைந்து கொள்ளலாம்.
தமிழ் வளர்ப்போம்.தமிழ் மரபு வளர்ப்போம்.
தேடலில் காணக்கிடைத்தவைகள் சில:
ஓலைச்சுவடிகள்
பத்மா சுப்ரமணியம் பரதம்
முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம்
சின்ன மருது பெரிய மருது சிலைகள்
பனங்கிழங்கை படத்திலாவது பார்க்க முடிகிறதே!
தமிழ் மரபு பதிவுகள்
http://tamilheritagefoundation.blogspot.com/
தமிழ் மரபு அறக்கட்டளை
http://www.tamilheritage.org/
10 comments:
Samuka akkarai ulla padaippu
கடலில் விழும் சூரியன்
நெருப்பாய் சிவக்கும் வானம்
ஓங்கி அடிக்கும் அலைகள்
ஓயாமல் துடிக்கும் இதயம்
நாட்களை என்னும் மனசு
நடந்ததை நினைக்கும் வயசு
ஒருமுறை பார்த்து துடிக்க
இரு விழி போடும் கணக்கு
இருளில் எழும்பும் நிலவு
கனவில் தவழும் நினைவு
இடைவெளி என்பது பெரிது
இரு மனம் துடிக்குது சேர்ந்து
வரும்வரை காத்திருக்கும் கண்கள்
வரமுன்னே சிரித்துவிடும் உதடு
தலையணையை அணைத்திடும் கைகள்
காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம்
காணாமல் கனக்கும் இதயம்
காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்
கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்
பிரியாமல் வாழுகின்ற சுகம்
ராஜ்,
உங்களுக்கு எல்லாம் டீ.விப்பொட்டியில வந்தா தான் எல்லாம் தெரிய வரும் :-))
என்ன பனங்கிழங்கை எல்லாம் காணாமல் போச்சா ஏன் சொல்ல மாட்டிங்க, கண்ணைக்கட்டிக்கிட்டு வாழ்ந்தால் எல்லாமே காணாமல் போன மாதிரி தான் தெரியும்.
எலெக்ட்ரிக் ட்ரெயினில் டெய்லி விக்குறாங்க, தேசிய நெடுஞ்சாலையில் எல்லா டோல் கேட்டிலும் கட்டணம் செலுத்த நிறுத்தும் போதும் ஒரு கூட்டமே ஒடி வந்து பனங்கிழங்கு ,வேர்க்கடலை,கொய்யாப்பழம்னு விக்குது.
இந்த வெள்ளிக்கிழை கூட 10 கொய்யாப்பழமும் பனங்கிழங்கு ஒரு கட்டும் வாங்கினேன்(கட்டுன்னா 5 கிழங்கு)
அவிச்சதோ,சுட்டதோ விருப்ப தேர்வு. நான் வாங்கியது ஒரே நார் , தூக்கிப்போட்டாச்சு ,இது போல வழிப்பயணத்தில் வாங்கினால் இப்படி ஆவது வழக்கம் :-))
கொய்யாப்பழம் சூப்பர், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு சைட் டிஷ் ஆ சாப்டாச்சு :-))
திண்டிவனம் மார்க்கமா பயணம் செய்தால் கொய்யாப்பழம் வாங்க மறக்காதீங்க.
--------
என்னது இளைய ராஜா சிம்பொனி போட்டரா ? எப்போ?
நடா...சுகம்தானே.ஒழுங்கா gtv பாக்கிறீங்கன்னு தெரியுது !
வணக்கம் சகோ,
நல்ல பதிவு.பழங்கால தமிழ் கருத்தாக்ங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் ஆசை நம்க்கு உண்டு. கூகிள் ஆண்டவர் துணை இருப்பதால் இதனை செய்ய முடியும் என்ற சூழலில் வாழ்கிறோம்.
ஆனால் இந்த சுவடிகள் அனைத்தும் வட்டெழுத்து,கிரந்தம் எழுத்துகளில் உள்ளது.இவற்றை அறிந்த நம் சகோக்கள் எவரேனும் நம்க்கு கற்றுக் கொடுப்பார்களா?
இந்த வகையிலும் ஏதேனும் செய்ய முயற்சிக்க்லாம்!!!!!!!!
நன்றி
இளைய தலைமுறைகள் அறிந்து கொள்ளவேண்டிய பொக்கிஷங்கள் இவைகள்....!
கவி அழகனே! வேறு என்ன சொல்ல!
பாஸ்:) உங்க பின்னூட்டத்துக்காக வேண்டியே அவசர அவசரமாக அடுத்த பதிவை இணைத்து விட்டு வருகிறேன்.
ஏன் சொல்ல மாட்டீங்க?கடலில் உட்கார்ந்துகிட்டு கிணற்று நீச்சல் பழகறவனை கிண்டல் ஏன் செய்ய மாட்டீங்க?அண்ணா சாலையில் இந்தக் கடைசிலேயிருந்து அந்தக்கடைசிக்கு போகுற தூரத்துல ஒரு நாடு இருந்தா டீவி பொட்டியைப் பார்க்காமல் வேற என்ன சொல்ல முடியும்?
நேற்று ராத்திரிதான் ஒரு டிஷ்சை மறுபடியும் திசை மாத்தி வச்சேன்.முன்னாடி கலைஞர் தொலைக்காட்சின்னு ஒரு சேனல்தானே இருந்தது.ராத்திரி கையோடு கையா சேனலை திருப்பினா கலைஞர் குடும்பம் மாதிரியே சேனலும் நிறைய குட்டி போட்டிருக்குதே:)
நானும் ஊருக்கு வந்தப்போ பல ஊரு சுத்தினேன்.என் கண்ணுல ஒரு கிழங்கும் மாட்டல.கையில குழந்தையை வச்சுகிட்டு ஊசி,பாசி மணி விற்கிற பெண் பிச்சை கேட்குதேன்னு காசு கொடுத்தா அந்தப் பொண்ணு நரிப்பல்லு ராசின்னு சொல்லி என்கிட்ட மறுபடியும் காசு புடிங்கிடுச்சு.பல்லு எங்கே போச்சுன்னே எனக்கு இப்ப நினைவில்ல:)
கொய்யாப்பழத்துல உப்பு,மிளகா தூவறது பம்பாய் பழக்கம்.இப்ப அங்கே சைட் டிஷ்ஸா!
நானெங்கே இளையராஜா சிம்பொனி போட்டார்ன்னு சொன்னேன்!அவர் லண்டன் பயணத்தையும் இசைத்தட்டு வெளி வராத குளறுபடியையும் சொன்னேன்.
ஹேமா!நலமாக இருக்குறீங்களா?எங்கே ஒரு கூட்டத்தையும் காணோம் உங்களையும் சேர்த்து!
நேற்று வரைக்கும் பார்த்த ஒரே தமிழ் சேனல் லண்டன் ஜிடிவி மட்டுமே.நேற்று பெட்டியை மாற்றிப்போட்டதுல நிறைய தமிழக சேனல்கள்.
வவ்வாலுக்கு போட்ட மறுமொழியை வாசிக்கவும்:)
சகோ!சார்வாகன்!நலமாக இருக்கிறீர்களா?80-85 எடை குண்டனாக இருந்த நான் இன்னும் ஐந்து எடை கூட தொடர்ந்து கணினியில் உட்காரமல் இப்பொழுது நடக்க ஆரம்பித்து விட்டதும்,வேலைப்பளுவோடு அனைத்து பதிவுகளையும் மேய முடியவில்லை.மன்னிக்கவும்.சரியான வாய்ப்பில் மொத்தமாக மேய்ந்து விடுகிறேன்.
நீங்க சொன்னது போல் கூகிளின் துணையால் நிறைய ஆவணப்படுத்தும் சாத்தியங்கள் இப்பொழுது இருக்கின்றன.
வட்டெழுத்து,கிரந்தம் படிக்க தெரிந்தவர்கள் தமிழகத்திலே முக்கியமாக தமிழக தொல்பொருள் துறை சார்ந்து பணி செய்பவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கின்றேன்.அரசு ஆவணப்பாதுகாப்பை பூதம் காப்பது மாதிரி காப்பது முதற் கடமையாக நினைப்பதால் வட்டெழுத்து,கிரந்தம் எழுத்துக்களை எதிர்கால சந்ததிக்கும் சொல்லிக்கொடுக்கும் முயற்சி இதுவரை இல்லையென்றே தெரிகிறது.உங்கள் பின்னூட்டம் மூலமாக அலாவுதீன் விளக்கு மாதிரி யார் கண்ணிலாவது பட்டு தமிழக அரசு பாடத்திட்டத்துக்குள் கொண்டு வந்தால் நல்லது.
தனி மனிதர்களின் க்ளிக்குகளாய் நிறைய நிழற்படங்கள் சேர்ந்திருக்கின்றன.ஆனால் ஒலி சார்ந்த ஆவணங்கள் குறைவே.இப்பொழுது காணொளியுடன்,ஒலியும் சேர்ந்து கொள்வதால் நீங்கள் வெளியிடும் பெரும் காணொளிகள் மாதிரி இயல்பான வாழ்க்கை முறை ஆவணங்கள் பெருகுவது சிறப்பாக இருக்குமென நினைக்கின்றேன்.நன்றி.
மனோ!நலமா?அத்தி பூத்தாற் போல பின்னூட்டங்கள் போடுறீங்க போல இருக்குதே!எனக்கும் ஒரு பூ தொடர்ந்து போடுவதற்கு நன்றி.
Post a Comment