பால் தாக்கரேயை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தேவை அரசியல்,இந்தி திரைப்படம் சார்ந்தவர்களுக்கு இருக்கலாம்.ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இந்திய குடிமகன்களுக்கு தாக்கரேவும் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதோடு விமர்சன பதிவுகள் சில வெளிவந்துள்ளது வரவேற்க தக்கது.
நேற்று சேட்டைக்காரனுக்கு பின்னூட்டம் போடும் போது கூட பம்பாய்,மும்பாய் மீதான பால் தாக்கரேவின் தாக்கங்கள் என்ற அளவிலே கருத்து சொல்லியிருந்தேன்.ஒரு தனி மனிதனாகவும்,அரசியல் பதவிகள் இல்லாமலும் கூட மராட்டிய மக்களை,அதிலும் குறிப்பாக பம்பாய்-மும்பாய் மராட்டிய மக்களை தன்பால் ஈர்த்த வசீகர வலிமை தவிர ஒரு காட்பாதர்க்கான பயம் மட்டுமே தாக்கரேயின் பலம் எனலாம்.
கால வெள்ளத்தில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மதராசி வெளியே போ என பம்பாய் மராட்டியர்களை ஒன்று திரட்டிய கலவரத்தில் தாராவி வர்தா பாய்,இன்னும் கேரளத்து சேட்டன்களின் எதிர் தாக்குதலில் பால் தாக்கரேயின் கோசம் வெற்றி பெறாமல் இன்றும் தாராவி தென்னிந்தியர்களில் குறிப்பாக தமிழர்களின் வாழ்விடமாகவும்,இந்தியாவின் மிகப்பெரிய சேரியாகவும் விளங்குகிறது.சேரியாக இருந்தாலும் மும்பாய்க்குள் நிகழும் மைக்ரோ பொருளாதார வளம் கொண்டது தாராவி.1960-70 பதுகளில் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட பம்பாயின் மில் தொழிலாளிகளின் போராட்ட பின்னடைவுக்கும்,கேரளா,வங்காளம் போல் கம்யூனிசம் வளர்வதற்கான அத்தனை கூறுகள் இருந்தும் கூட கம்யூனிசத்தை பின் தள்ளி சிவசேனா வளர்ந்ததற்கு தாக்கரே என்ற பெயர் சொல்லே காரணம்.
பிஜேபியின் இந்துத்வா வளர்ந்த காலத்தில் இந்து முஸ்லீம் பிரிவினையை பாம்பேயில் தூண்டியதற்கு சிவசேனா ஒரு முக்கிய காரணம்.வர்தா பாயை வேலு நாயக்கர் என நாயகனில் பெயர் மாற்றம் செய்த இயக்குநர் மணிரத்னம் சூழல்கள் அறிந்து பம்பாயின் முதல் கலவரத்தை தொடாமல் போனாலும் கூட பம்பாய் படத்தில் தாக்கரேயை மெல்லியதாய் தொட்டதில் இயக்குநர் மணிரத்னத்துக்கு பயமுறுத்தல் வந்ததாக செய்திகள் கசிந்தன.கசிந்த செய்தியை விடவும் தமிழக இஸ்லாமிய சகோக்கள் கதாநாயகி மனிஷா கொய்ராலாவை முஸ்லீம் பெண்ணாக உருவகப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மணிரத்னம் வீட்டில் கல்லெறிந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.கல்லெறிந்து எதிர்ப்பு காட்டுவதிலிருந்து இப்பொழுது துப்பாக்கி சென்சார் போர்டாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்.உண்மைகளை அப்படியே முன்வைப்பது மட்டுமே இந்த பதிவின் நோக்கமென்பதோடு மீண்டும் தாக்கரே பக்கம் திரும்புவோம்.
முந்தைய காலகட்டத்தில் கிரிக்கெட் மீதான வெறித்தனமென்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போது மட்டுமே என்பதை சொல்லித் தெரிவதில்லை.முன்பு போல் கிரிக்கெட் பார்ப்பதில் மஜா இல்லையென போன மாதம் ஒரு பாகிஸ்தானிய நண்பர் புலம்பிக் கொண்டார்.இரு நாட்டு அரசியல் செயல்பாடுகள் சாதாரண மனிதர்களை எப்படி பாதிக்குமென்பத//ற்கு முந்தைய இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தாக்கமும்,வாஜ்பாய் அரசு ரயிலு விட்டும்,முஷ்ரப் டெல்லி வந்தும்,காஷ்மீர் பிரச்சினை கொஞ்சம் பிசுபிசுத்த பின் இப்பொழுது thaw (பனிக்கட்டியிலிருந்து உருகிய நிலை) ஆகிப் போனதால் கிரிக்கெட்டின் முந்தைய நிலை இப்பொழுது இல்லை.தாக்கரே மும்பாய்க்குள் பாகிஸ்தானியரை விளையாட விட மாட்டோம் என்ற அறைகூவல் சரியானதா தவறானதா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்ற போதிலும் முந்தைய சூழலில் தாக்கரேவுக்கான துணிச்சல் என்பதோடு கிரிக்கெட் சார்ந்து பெரிதாக எதுவும் பிரச்சினை வளரவில்லையென்பது பாராட்ட தக்கது.

இன்றைக்கு சமாதி புகழாரம் அரசியல்வாதிகள் பலர் பாடினாலும் கூட தாக்கரேவின் நீதிமன்ற வாரண்டு புறக்கணிப்பெல்லாம் இந்திய இறையாண்மையை கேலி செய்வதாகவே இருந்தது.சத்ரபதி சிவாஜி, விடுதலைப்புலிகள் ஆதரவு,ஹிட்லர் பற்றிய புகழாரம் போன்றவை பல விமர்சனங்களுக்குட் பட்டதாயினும் வலிமையான ஆளுமையை தாக்கரே விரும்புகிறார் என்பது மட்டும் புரிகிறது.
இதுவரை சொல்லி வந்தவை முன்கதை சுருக்கம் மட்டுமே.மெயின் கதை என்னன்னா மும்பாய் பெண்களின் பேஸ்புக் கருத்து துணிவு.உண்மையான பெண் கல்வியென்ற வெளிப்பாடு இதுவே.அதிலும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து கொண்டு ஒரு பெண்ணின் கருத்து வெளிப்பாடு சுற்றுசூழலில் பாதிக்கப்பட்டோ அல்லது கேள்வி ஞானத்தாலோ இப்படியானதாகத்தான் இருக்க முடியும்.இஸ்லாமிய குண்டு வெடிப்பு தீவிரவாதங்கள் எப்படி இந்திய இறையாண்மைக்கு தீங்கானதோ அதுபோலவே சிவசேனாவின் இந்து இஸ்லாமிய பிரிவினையும். நம்ம பதிவுலக சகோக்கள் போல் பெயர்சொல் காரணமான ஆதரவும்,எதிர்ப்புமென்பதல்ல,.சரியானது எதுவாக இருக்க முடியும் என்பதே நமது நிலைப்பாடு.அந்த விதத்தில் அனைவருக்குமான கருத்துரிமை பேஸ்புக் கருத்து தெரிவித்த பெண்ணுக்குமுண்டு..கருத்து தெரிவிப்பது பொது வெளியில் நடமாடுபவர்களுக்கு எதிரானது என்றால் இணைய வளர்ச்சியை இந்தியாவில் முடக்கி விடலாம்.இல்லையென்றால் சுதந்திரமான கருத்துக்கள் வெளிவரவேண்டும்.