Followers

Friday, January 25, 2013

பாராளுமன்றத் தேர்தலின் இரு தேவைகள்

அரசியல் விமர்சனம் மற்றும் சில நிகழ்வுகளை அப்போதைய உணர்ச்சிகளில் சொல்லி விட்டு பின் திரும்பிப் பார்க்கும் போது உண்மையாகிப் போவதும் சில நேரங்களில் நினைத்ததுக்கு மாறாக போய் விடுவதுமுண்டு.இதற்கு உதாரணமாக 60 ஆண்டுகளில் இந்தியா அபார வளர்ச்சி பெற்றிருக்கிறது எனும் ஜனாதிபதி நாற்காலியை சூடாக்கிக் கொண்டிருக்கும் பிரணாப் முகர்கியை சொல்லலாம்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி பாணியில் கையை தட்டி சிரித்து விட்டு இதோ மறுபடியும் அரசியல் பேச வந்திருக்கிறேன்.

விரும்பா விட்டாலும் கூட வாரிசு அரசியலுக்கு ராகுல் வரும் சாத்தியமிருக்கிறது என்று முன்பு சொன்னதற்கான சாத்தியங்கள் காங்கிரஸ் சார்பில் உருவாகுவதும் தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வடிவேல் போனதை வடிவேலண்ணே!வேண்டாமென சொன்னதும் உண்மையாகிப்போனது.

சில அரசியல் விமர்சனங்கள் உண்மையாகிப்போனதின் நம்பிக்கையில்
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் நலனுக்கு எதிரான இரண்டு தீய இயக்கங்களாக பாட்டாளி மக்கள் கட்சி,இஸ்லாமிய தீவிரவாதத்தை விதைக்கும் இரண்டு நோஞ்சான் கட்சிகள் ஆனால் ஆபத்தான கட்சிகளை பாராளுமன்ற வளாகத்துக்குள் செல்லும் சந்தர்ப்பம் இல்லாமல் போக கடவது.முடிந்தால் இரு இயக்கங்களும் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்துப் பார்க்கட்டும்.இந்த கட்சி இயக்கங்களை தமிழக அரசியலிருந்து அப்புறபடுத்துவது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.கூடவே இவைகளுக்கு மாற்றாக குரல் கொடுக்க ஏதாவது இயக்கங்கள் வந்தால் பின் தங்கிய நிலையிலிருக்கும் மக்களை மேன்மை படுத்தும் திட்டங்களோடு முன்வந்தால் கரம் கொடுப்போம்

இதற்கான காரணமாக

1. சாதியால் மக்களை பிரிக்கும் ராமதாஸ் விசமத்தனத்தின் சுயநலம்.

2 கலாச்சார தீவிரவாதங்களை தமிழகத்தில் திணிக்க முயலும் இஸ்லாமிய இயக்கங்கள்.

ராமதாஸின் ஆதரவாளர்களும்,கலாச்சார தீவிரவாத ஆதரவாளர்களும் தீயாக தனியாகவோ அல்லது இணைந்தோ தங்கள் தேர்தல் பணியை இப்பொழுதிருந்தே ஆரம்பிக்கலாம்.ஒரு தீமை இன்னொரு தீமையை கட்டியணைப்பதில் தவறில்லை:)

பதிவை இன்னும் கொஞ்சம் வலுவாக்க பதிவர் இக்பால் செல்வனின் பதிவில் சொன்ன பின்னூட்டத்தின் சாரத்தையும் காபிக்கு சர்க்கரை மாதிரி கலக்கிக் கொள்கிறேன்.

இதுவரை ரஜனியாவது தனது அரசியல் ஆசையை வருவேன் ஆனால் வரமாட்டேன் பாணியில் சொல்லிகிட்டிருந்தார்.ஆனால் கமலோ தான் அரசியல் வனவாசம் செய்தவன் என்பதை துவக்க காலம் முதல் சொன்னதோடு இதுவரை செயல்படுத்தியும் இருக்கிறார்.ஜெயலலிதாவின் பாராளுமன்ற பகடை உருட்டல் இந்த முறை தற்போதைய சூழலில் புதிய அரசியல் அலையை வீசும் சாத்தியங்கள் உருவாக்கி இருக்கிறது.ஒரு புறம் வாரிசு அரசியல் இன்னொரு பக்கம் சுனாமி அறிக்கை மாதிரியான ஜெயலலிதாவின் அரசியல்,ராமதாஸின் சாதி வெறி,மதவாதிகளின் முகம் காட்டும் ஆசை,வீணாப்போன சீமான்,திருமா,பக்க பலமில்லாத வை.கோ,பின்னூட்டத்தில் விட்டுப் போன விஜயகாந்த் என ஒரு புதிய தேர்தல் அரசியல் விரைவில் அரங்கேறப் போகிறது.யார் எந்தப் பக்க கூட்டணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 



 

2 comments:

ராஜ நடராஜன் said...

சென்ற பதிவில் பல கருத்துரையாடல்களுக்கு மறுமொழி சொல்ல இயலாமல் ஏனைய தளங்களில் வாசிப்பு உள்வாங்கல் பின்னூட்டங்கள் என இயங்கிக் கொண்டிருந்தேன்.உரையாடலை நீட்டிக்காமைக்கு மன்னிக்கவும்

வவ்வால் said...

ராச நட,

உமக்கு நல்ல நகைச்சுவை திறனய்யா ,சிரிக்காம சோக்கு அடிக்கீர் ,

//விரும்பா விட்டாலும் கூட வாரிசு அரசியலுக்கு ராகுல் வரும் சாத்தியமிருக்கிறது என்று முன்பு சொன்னதற்கான சாத்தியங்கள் காங்கிரஸ் சார்பில் உருவாகுவதும் //

இந்த அருள் வாக்கினை அரேபியாவில் எந்த குகையில் பெற்றீர், எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியம்" ராகுல்" தான் அடுத்தவாரிசுனு அதையே கண்டுப்பிடிச்சுட்டீரே, அதுக்கு தனக்கு தானே ஒரு ஷொட்டு வேற :-))

அப்பிடியே ஒரு ஆறுமாசம் பின்னோக்கி போகவும்,நான் மன்னுமோகனை கழுவி ஊத்திய போது ,அப்போ மன்னுமோகனை ஆஹா ,ஓஹோனு நீர் பாராட்டி ,பட்டம் சூட்டியது நினைவில் வருதா :-))

மன்னு மோகன் என்ன செய்தாரோ எல்லாமே காங்கிரஸ் இயக்கும் சக்தி அன்னையின் ஆணை,ஆனால் அன்னைக்கு ஆலோசனையாக போவது மன்னுவின் திட்டங்கள், இது ஒரு லூப்,ஆக மொத்தம் இரண்டு பேரும் அவர் சொன்னதை இவரும்,இவர் சொன்னதை அவரும் செய்வதாக மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டது தான் மிச்சம் :-))

எனக்கென்னவோ இந்தியா-பாக் எல்லையில் பட்டாசு வெடித்து தான் முதல் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கும்னு தெரியுது(இது புரியனும்னா கொஞ்சம் அரசியம் அறிவும் ,பொது அறிவும் தேவைனு லோகநாயகர் போல சொல்லணும் போல)