Followers

Thursday, March 21, 2013

ஹம்மர் ரெய்டும் ஜனநாயக அநீதிகளும்

காட்பாதர் படத்தின் இத்தாலிய மாபியா கும்பல்களை நேரடியாக காண வேண்டுமென்றால் இந்திய அரசியல்வாதிகளின் குடும்ப கும்பல்களை ஒப்பிட்டால் போதும்.இருக்கும் ஆட்சி அமைப்புகளில் ஜனநாயகம் ஒன்றுதான் சிறந்தது.ஆனால் அதனை இந்திய மாபியா கும்பல்கள் பயன்படுத்தும் விதம் இப்பொழுது சமூக அக்கறையோடு போராடும் மாணவர்களுக்கே இவர்களிடம் நம்பிக்கையில்லாமல் போய் விட்டது.இளம் வயதினர் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுகிறார்கள் என சில மாங்காய்கள் சொன்னால் பெருசு அன்னா ஹ்சாரேயும்தானே போராட்டக்களத்தில் குதித்தாரே?

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சம பொருளாதார போட்டி காலமிது.ஆனாலும் இந்தியா சீனாவுடன் போட்டி போட முடியாமல் போவதற்கு முக்கிய காரணங்களே இந்த இந்திய மாபியா கும்பல்களும் இவர்களுக்கு வாலாட்டும் பீரோகிரட்டிக்குகளும்தான்..இந்த பெரும் கூட்டத்துக்கு மத்தியில் நாட்டுப் பற்றோடும்,சமூக அக்கறையோடும் செயல்படும் ஒன்றிரண்டு நல்ல மனிதர்களும் காணாமல் போய் விடுகிறார்கள்.

ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தால் எவ்வளவு வேண்டுமென்றாலும் திருடிக்கொள்ளலாம். கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டால் சி.பி.ஐ ரெய்டா?அப்படியே ரெய்டுன்னாலும் கூட ஒரு பிஸ்கோத்து வண்டி ஹம்மருக்கா ரெய்டு?ஒரு உழைப்பு திறனுமில்லாத ஸ்டாலின் பையனால் எப்படி கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிக்க முடிகிறதென்றல்லவா 2G காலகட்டத்தில் ரெய்டு நடந்திருக்க வேண்டும்? இது வரை தி.மு.க எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடித்த காங்கிரஸின் காரணம் ரெய்டு பிளாக்மெயில்தான் காரணமா?

தமிழகத்தில் அம்போன்னு போக இருக்கும் காங்கிரஸ் தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,தி.மு.கவுக்கு ஒரு கண்ணாவது போக வேன்டுமென்று துணைக்கு தி.மு.கவையும் இழுக்கும் முயற்சியா ரெய்டு?

சிபிஐ மேல் இருந்த மொத்த நம்பிக்கையும் போய் விட்டது.ஆளும் கட்சியின் அடியாட்கள் இவர்கள்.

எதிர்பார்க்காமலே விழுந்த ஒரு விக்கெட்டால் வாய்தா ராணிக்கு ஒரே குஷியாக இருக்குமே!

15 comments:

வவ்வால் said...

ராச நட,

இதெல்லாம் நடக்கலைனா தான் ஆச்சர்யப்படனும்.

இது போல ஏகப்பட்ட விவகாரங்கள் திமுகவுக்கு இருக்கு.

இன்னும் சொல்லப்போனால் கூட்டணியில் இருந்துக்கொண்டே காங்கிரஸ் கொஞ்சம் ,கொஞ்சமாக திமுகவுக்கு செக் வைத்துக்கொன்டு தான் இருந்தது.

அடுத்து சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு ரெய்டு வரலாம். ஏன் எனில் இதற்கான வேலைகளை பிப்ரவரியிலே ஆரம்பித்துவிட்டார்கள்.

டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா , 435 கோடி எங்களுக்கு சேது சமுத்திர திட்ட அலுவலகம் கடன் வைத்துள்ளது,விசாரித்து பணம் வாங்கிக்கொடுக்க ஒரு தீர்ப்பாயம் வைங்கனு பெட்டிஷன் போட்டிருக்கு.

நிறைய பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பெருசா சேது சமுத்திர திட்டத்தில் வேலை நடக்கவில்லை, இதில் கடன் வேறு வைத்துவிட்டார்கள் என ஆரம்பித்தால் ,ஒதுக்கப்பட்ட பணம் என்னாச்சுனு இயல்பாக ஒரு கேள்வி எழும், அப்புறம் பாலுவுக்கு பால் ஊத்த சிபிஐ வரும் என தெளிவாக காங்கிரஸ் முன்னரே காய்ய் நகர்த்திட்டு தான் இருக்கு, இப்போ விலகல் என வந்ததும் எல்லாம் வேகம் எடுக்கும்.

சென்னையில் பெரிய கை வீட்டில் சிபிஐ நுழைந்தது ஒரு எச்சரிக்கை மணி, அதாவது யார் மீதும் கை வைக்கத்தயார்னு முன்னோட்டம் காட்டியிருக்காங்க.

இதற்கடுத்து மதுரைப்பக்கம் காத்தடிக்கும், அஞ்சா நெஞ்சர் ஒரு பொறியியல் கல்லூரி கட்டி பிரச்சினையில் இருக்கு,அனுமதிக்கொடுத்த பின்னர் கல்லூரி இயங்கவில்லை எனில் அனுமதி ரத்தாகும்,ஆனால் அஞ்சா நெஞ்சர் மத்தியில் அமைச்சராக இருப்பதால் சும்மா அனுமதியை விட்டு வச்சிருந்தாங்க,இப்போ
அதுக்கான அனுமதி ரத்தாகிடும் :-))


அப்புறம் உரமானிய ஊழல் , கொலை வழக்கு என சுற்றி அடிச்சா கழகத்தின் கோட்டை கலகலத்துவிடாதா :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!அரசியல் கிசுகிசுக்களின் பல்கலைக்கழகமே:)

குறிப்பிட்ட நாட்டின் மீதான (Country specific)தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்ங்கிற மத்திய அரசு குறிப்பிட்ட மனிதர்கள் (Targeted specific )மீதான குடைச்சலை கொடுக்கிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் ஆந்திர மாநிலத்தின் ஜெகன் மோகன் கூட.

டி.ஆர் பாலுவெல்லாம் பழத்தையும் தின்னு கொட்டையையும் முழுங்க கூட பார்ட்டி.சேது சமுத்துர திட்ட கடனையெல்லாம் திரும்ப வாங்குவது சாத்தியமான ஒன்றா?எல்லாம் கடலில் கொட்டிய மணல் மாதிரிதான்.

அஞ்சா நெஞ்சரெல்லாம் சட்டமன்றத் தேர்தலின் போதே பம்மியவர்தான்.இப்ப பதவியும் இல்லாமல் போனதால் இன்னும் பம்முவார்.தனக்கான தகுதிகளையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் ஸ்டாலின் சகோதரன்தானே என்ற பெருந்தன்மை வேண்டும்.இரண்டுமில்லாமல் வயித்தை மட்டும் நிமித்திகிட்டு நானும் இளவரசன் தான் என மல்லுக்கட்டுவது சொத்து பங்காளி சண்டையாகவே முடியும்.

எப்படியிருந்த தி.மு.க இப்படி ஆயிருச்சே:(

இன்னும் எடுத்துக்கொடுத்தா விஸ்வரூப எசப்பாட்டு பாடுறதுக்கு பதிலா அரசியல் தெம்மாங்கு பாட வசதியா இருக்கும்:)

வவ்வால் said...

ராச நட,

நான் என்ன பெருசா கிசு கிசுத்துட்டேன், ஊருல பேசிக்கிறத விடவா, அதாவது இணைய அரசியல் கிசு கிசு ஒரு ரகம், தெருமுக்கு அரசியல் கூட்ட கிசு கிசு ஒரு ரகம் ரெண்டுக்கும் ஒரு பாலம் அமைத்து புதுசா ஒரு ரூட் போட்டால் ஏகப்பட்ட கோணங்கள் வெளிப்படுது.

இணைய மக்களுக்கு லோக்கல் அரசியல் தெரியலை,லோக்கல் அரசியல் தெரிந்தவர்களுக்கு இணையம் தெரியலை.

கடலில் கொட்டிய மணல் தான் ஆனால் எல்லாத்தையும், ஆனால் காங்கிரஸ் எதிர்கால திட்டத்தோடு ஆவணப்படுத்தவே டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் மூலம் கோரிக்கையை போட்டு வைக்குது,நாளைக்கே சேது சமுத்திர திட்டத்தில் ஊழல்னு யாராவது கேட்டால் நாங்க எல்லாம் சரியா செஞ்சோம் ,திமுக அமைச்சர் தான் பொறுப்பு கணக்கை காட்ட சொல்லுங்கனு அல்வா கொடுக்கும் :-))

இம்புட்டு நாளா சும்மா இருந்துட்டு இப்போ போய் காசுக்கொடுக்கலைனு கேட்கிறாங்கன்னா அதுக்குள்ள ஒரு நுண்ணரசியல் இல்லாமலா இருக்கும்? இதெல்லாம் இதுக்கு முன்னர் ஒதுக்கின நிதி எப்படி செலவாச்சுனு கேட்க போடப்படும் தூண்டில், விரைவில் சு.சாமி போல யாராவது என்க்கிட்டே ஆதாரம் இருக்குனு கிளம்புவாங்க :-))

ஆனால் எனக்கு ஒன்னு புரியலை சேது சமுத்திரம் திட்டம் பற்றி ஆரம்பத்தில் வேகம் காட்டிய திமுக இரண்டாம் முறை மத்திய ஆட்சி பொறுப்புக்கு வந்த பின், அடங்கிவிட்டது ஏன்?

உட்ச நீதி மன்றத்தில் வழக்கு இருக்கு ஆனால் அதனை விரைந்து முடிக்க வைக்க முயற்சித்து இருக்கலாம், ஆடம்ஸ் பிரிட்ஜ் பற்றி தெளிவான அஃபிடவிட் தாக்கல் செய்தாலே வழக்கு நிற்காது,ஆனால் அதிலேயே சொதப்பி வழக்கை இழுக்கவிட்டு இப்போ ஆட்சிகாலமே முடிய போகுது, கூட்டணி விட்டும் வந்தாச்சு, செலவு பண்ண பணதுக்கு ஒரு ரெண்டடி பள்ளம் வெட்டினாங்களானு கூட தெரியலை.

# திமுகவின் வீழ்ச்சிக்கு காரணம் ரத்த உறவுகளிடையே அரசியல் போட்டி என்பதை விட அனைவரும் "தொழில் அதிபர்களாக" உருவெடுத்து எதாவது செய்யனும்னு போட்டிப்போட்டது தான் முக்கிய காறனம் என நினைக்கிறேன், அவர்களின் தொழில் அபிவிருத்திக்காக மத்திய அரசில் ஒட்டிக்கொன்டிருக்க வேண்டும் என ஆசைப்பட்டு , கட்சியின் நற்பெயரை கெடுத்துவிட்டார்கள்.

பக்சேவின் மருமகன் நிஷாந்த் விக்ரமசிங்கே மூலம் கேடிபிரதர்ஸின் விமான சேவைக்கு இலங்கையின் உதவி கிடைத்து இருக்கு, அவர்களின் முதல் சர்வதேச விமான சேவையே இலங்கைக்கு தான் என்பதை கவனித்தலே புரியும், எல்லாம் இலங்கையில் வியாபாரம் செய்ய தமிழக நலனை காவு கொடுத்தார்கள்.

ராஜ நடராஜன் said...

//இணைய மக்களுக்கு லோக்கல் அரசியல் தெரியலை,லோக்கல் அரசியல் தெரிந்தவர்களுக்கு இணையம் தெரியலை.//

அடடா!என்ன ஒரு புது தத்துவம்:)

முன்னாடி வங்கிப் பணியாளர்கள் கூட கணினி வந்தால் வேலை போயிடும்ன்னு பயந்தாங்க.அதோடு டோஸ்,பாக்ஸ் புரோ படிச்சிட்டா தப்பிச்சிடலாம்ன்னு மெதுவா பொட்டி தட்ட ஆரம்பிச்சாங்க.இப்ப ஏ.டி.எம்,கிரடிட் கார்டுன்னு வந்து நிற்குது.இந்திய ஊழலை தடுப்பதற்கு ஒரு நல்ல வழி இருக்குது.சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் எந்த வியாபார டிரான்சாக்சன்னாலும் எந்த வங்கி மூலமாக இருந்தாலும் ரிசர்வ் வங்கியில் கணக்கு வரும் மாதிரி கொண்டு வந்து விடலாம்.5 சி 10சி கறுப்பு பண மாற்றங்கள் கட்டுப்படுத்தக்கூடியவைதான்.இந்தியாவில் நிறைய சட்டமுறைகள் இருக்கின்றன.ஆனால் நிர்வாக அணுகுமுறையில் தவறி விடுகிறோம்.

இங்கே ஹவாலா பணம் மாற்றல் தவிர எந்த பண மாற்ற நிறுவனங்களிடமும் ஐடி கார்டு எண் இல்லாமல் பணமாற்றம் செய்ய முடியாது.

சி.பி.ஐ எப்படி இயங்குதுன்னு விக்கிபீடியாவை ஒரு நோட்டம் விட்டா செயல்படும் முறை,சுதந்திர அமைப்புன்னு சொல்லிகிட்டு அரசு பக்கசார்பாக இயங்குதல்,குற்றங்களின் வரிசைன்னு சொல்லி மம்முட்டி நடிச்ச ஒரு சி.பி.ஐ டைரி குறிப்புன்னு பிலிம் காட்டி முடியுது:)

http://en.wikipedia.org/wiki/Central_Bureau_of_Investigation

காங்கிரஸ் உரிச்ச வாழைப்பழத்தை சாப்பிடுன்னு பிஜேபிக்கு உரிச்சு கொடுக்குது.சேது சமுத்திர திட்டமே பிஜேபியினால் கொண்டு வரப்பட்டு அப்புறம் எதிர்க்கட்சியான பின்பு ராமர்பாலம்ன்னு திரும்பிகிச்சு.மீண்டும் ஒரு முறை சேது சமுத்திரத்தை தூசி தட்டும் வாய்ப்பு தமிழக எம்.பி வாய்ப்புக்களைப் பொறுத்து இருக்கிறது.அது இல்லாட்டியும் கூட டி.ஆர்.பாலுவை கையைக் காட்டும் வாய்ப்பு இருக்கிறது.இப்ப தலீவர் ஆட்டத்தைக் களைச்சு ஆடுறதால இன்னும் கொஞ்சம் பொறுத்து பார்க்கலாம்.

சேது சமுத்திர திட்டத்தோடு பிஜேபி அஜெண்டாவில் ஸ்விஸ் வங்கி கணக்கு வச்சவங்க கணக்கையெல்லாம் கொண்டு வருமான்னு பார்க்கனும்.இல்லை பிஜேபியும் லிஸ்ட்ல இருக்குன்னு அப்படியே அமுக்குதான்னு தெரியல.பார்க்கலாம்.

கழக தாத்தா பசங்க வளர்ப்பு முறைக்கும்,மாறன் பிரதர்ஸ் வளர்ப்பு முறைக்கும் நிறைய வித்தியாசமிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.ஆனால் வரன் கொடுத்த சிவன் தலையிலேயே பரிசோதனை செய்றேன் பேர்வழின்னு தலீவருக்கு எதிரா திரும்பியது மாறன் பிரதர்ஸ் பணக்கொழுப்புத்தான்.

நண்டு கொழுத்தா வளையை விட்டு வெளியே வந்துதானே ஆகனும்.கேடி பிரதர்ஸ் விமான சேவை இப்பவே அரசல் புரசலாக வெளியாகியுள்ளது.

நான் அப்புறமா வந்து ஆட்டத்தை மறுபடியும் துவக்குறேன்.


சார்வாகன் said...

வணக்கம் சகோ,

அடுத்து அடுத்து மூன்று பதிவா!!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வழக்கம் போல் அமெரிக்க தீர்மானத்தை நீர்த்து போக செய்து, சமர் சால்ட் அடித்து ஆதரவாக ஓட்டும் போட்டு காங்கிரஸ் கட்சி நழுவி விட்டது.

இலங்கை விவகாரத்தில் காங்கிரசுக்கு சளைத்த்வர்கள் இல்லை என வட இந்திய கட்சிகளும் காட்டி விட்டன.

கைவிட்ட திமுக'வை இலேசாக சுண்டுகிறது காங்கிரசு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

24ஆம் சிங்ககேசி இராசபக்சேவுக்கு நித்ய கண்டம் ,பூரண ஆயுசு போல் ம்ம்ம்ம்ம்ம்ம்


காணாமல் போன 13ஆம் திருத்தம் எனவும் சில குரல் கேட்கிறது.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!!

வேகநரி said...

//அடுத்து அடுத்து மூன்று பதிவா!!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
அவரை நீங்க உசுப்பேத்தி விட்டிங்க சகோ. அவரும் மூன்று நல்ல அரசியல் பதிவு தந்தார்.
//காணாமல் போன 13ஆம் திருத்தம் எனவும் சில குரல் கேட்கிறது//
இதை விட இலங்கை தமிழருக்கு வடகிழக்கு பகுதி கொண்ட ஈழ மாநிலம் என்று இந்தியா கஷ்டப்பட்டு அந்த காலத்திலே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது. அதை நாசப்படுத்தியவர் புலிகள்.இனி வடகிழக்கு பகுதி கொண்ட ஈழ மாநிலம் என்பது நடைமுறைசாத்தியமற்றது. தமிழ் பேசும் அரபு மக்கள் தங்களுக்கு தமிழர்கள் மீது நம்பிக்கை கிடையாது என்கிறார்கள், பதிலாக இலங்கை தமிழ் மக்களின் தொப்பிள் கொடி உறவான சிங்களவங்களையே தாம் நம்புகிறோம் என்கிறார்கள். இலங்கை தமிழ் மக்களில் கூட பெருமளவில் கிழக்கு மானில தமிழர்களிடம் மாநில இணைப்பிற்க்கு எதிர்ப்பு இருப்பு இருக்கிறது. மற்றும் தற்போது பல தமிழர்கள் சிங்கள மானிலங்களில் பெருமளவில் குடியேறி வாழ்கிறார்கள். இலங்கையில் வாழும் இந்திய தமிழர்கள் எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இதை ஈழ மாநிலம் ஆதரித்தது கிடையாது.நன்றி சகோ.

சார்வாகன் said...

வணக்கம் சகோ நரி,

உங்களின் இலங்கை சார் கருத்துகள், தமிழகத்தின் பொதுக் கருத்துக்கு எதிராக இருப்பினும் ,நாம் அதனையும் பரிசோதித்து பார்க்கவே விரும்புகிறோம்.

இதில் ஒரு முக்கிய சிக்கல் என்ன்வெனில் இலங்கை வாழ் தமிழர்களின் மனநிலை,வாழ்வியல் சூழல்,சமூக பாதுகாப்பு வெளியில் சரியாக தெரிவது இல்லை.

1.புலிகள் இப்போது பிரச்சினையில் இல்லை என்ற நிலையில் மட்டும் எதிர்காலம் கருதி பேசுவதே நல்லது.

2.இப்போது வட கிழக்கில் வாழும் தமிழர்கள் நிலை கடந்த 4 ஆண்டுகளில் முன்னேறி இருக்கிறது என சொல்கிறீர்களா?

3.வடக்கு,கிழக்கு மாநிலங்கள் தனித்தனியாக இப்போது போல் அதிகாரம் அற்று இருப்பது சரியா?

4. தமிழர்களின் இடங்களில் சிங்களர்,முஸ்லிம்கள் தொடர்ந்து குடியேற்றப் படுவது சரியா?

5.இலங்கை முஸ்லிம்களை ,பௌத்த இனவாதிகள் பொதுபலசேனா போன்றோர் சகோதர பாசத்துடன் நடத்துகிறார்களா?

சொல்லுங்கள்!!

நன்றி!!!

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட அமெரிக்க தீர்மானம் (1) பற்றி மொழி பெயர்ப்பு செய்தும் கூட தொடர்ந்த வரைவு திருத்தங்களில் முக்கியமாக 4 வது மாற்றத்தில் திருப்தியில்லாமல் பதிவை இணைக்கவில்லை.மன்னிக்கவும்.

இப்போதைய நிலையில் புதிய புரட்சியாக மாணவர்கள் போராட்டம் ஒன்றே நம்பிக்கையளிக்கும் விசயமாக உள்ளது.ஆனாலும் பலரும் பலவிதமான நோக்கில் கருத்து சொல்கிறார்கள்.பொது வாக்கெடுப்பு,தமிழீழம் என்ற இரண்டு கோரிக்கைகளை நோக்கி மட்டுமே செல்வது நல்லது என நினைக்கிறேன்.ஆனால் இரண்டு கோரிக்கைகளுக்கும் தடையாக ரஷ்யா,சீனாவின் வீடோ இருக்கின்றன.இதனை தகர்த்து முன் செல்லும் நுணுக்கங்களை அரசியல் ஆய்வாளர்களும்,புலம் பெயர் தமிழர்களும்,தமிழ் ஆர்வளர்களும்,மாணவ குழுக்களும் சிந்திப்பது நல்லது.

ராஜ நடராஜன் said...

வேகநரி!மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

13ம் அரசியல் சட்ட திருத்தம் சாத்தியமில்லை,அதனை புலிகள் சிதைத்து விட்டார்கள் என்கிறீர்கள்.இலங்கை,இந்திய அரசுகளின் இடையே விடுதலைப்புலிகளை உட்படுத்தாமல் செயல்படுத்த முயன்ற காரணமாகவே ராஜிவ் காந்தி,ஜெயவர்த்தனா உடன்படிக்கை தோல்வியில் முடிந்தது.அப்பொழுதும்,இப்பொழுது ஐ.நா மனித உரிமைக்குழுவிலும் 13ம் சட்ட திருத்தத்தை வலுப்படுத்துவது இந்தியா மட்டுமே.13ம் சட்ட திருத்தத்தை கொண்டு வரக்கூடாது என்பதற்காகத்தான் புதிய சட்ட திருத்தங்களுக்கு ராஜபக்சே அரசு முயற்சி செய்தது.இதனை சட்ட விரோதம் என நீதிபதி ஷிரானி பண்டாரநாயக எதிர்த்த காரணத்தால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இலங்கை 13ம் சட்ட திருத்தத்தை அமுல்படுத்த மாட்டோம் என அறிக்கையும் விடுத்து குப்பையிலும் போட்டு விட்டது.எனவே 13ம் சட்ட திருத்தம் மறுபடியும் புதிப்பிக்க வேண்டும் எனப்து இந்தியாவின் கோரிக்கை மட்டுமே.தமிழர்களின் தாகம் தமிழீழம்.

சகோ.சார்வாகன் சில கேள்விகளை முன் வைக்கிறார்.அதற்கு உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வேகநரி!உங்கள் பின்னூட்டத்தின் மையப்புள்ளியை தொடாமல் விட்டு விட்டேன்.அரபு நாடுகள் இலங்கை அரசு மீதான பாசத்தாலோ அல்லது சிங்களவர்கள் மீதான அன்பாலோ ஐ.நா.மனித உரிமைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கைகள் தமது நாட்டின் நலன் சார்ந்தும்,இன்னொரு நாட்டின் உறவு சார்ந்தும்,இன்னுமொரு நாட்டிற்கு எதிராக இன்னொரு நாட்டை ஆதரிக்க வேண்டுமென்ற அடிப்படையில் உருவாகிறது.

அரபு நாடுகளுக்கு உறவு சார்ந்து என்றால் இலங்கை மக்கள் பலர் அரபு நாடுகளின் வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள் என்ற டிபளமெடிக் காரணம் ஒன்று.அடுத்து பெட்ரோலிய பொருளாதாரம்.இதனை விட முக்கியமானது இலங்கை மனித உரிமை மீறல்களை அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆதரித்தால் இலங்கை மனித உரிமை மீறல்கள் போல் அரபு சட்ட திட்டங்களும் மனித உரிமைக்குழுக்களுக்கு முக்கியமாக அம்னெஸ்ட்டியின் அறிக்கைகளுக்கு எதிரானவை என்பதால் தம் மீதும் தீர்மானங்கள் ஒரு நேரத்தில் திரும்ப பாயும் என்ற காரணத்தால்தான்.

பகைவனுக்கு பகைவன் நண்பன் என்ற பழைய பல்லவி மாதிரி மனித உரிமை மீறல் நாட்டின் இன்னொரு மனித உரிமை மீறல் நாடும் நண்பன் என்ற புதிய கொள்கையே.

வேகநரி said...

சகோ,
//புலிகள் இப்போது பிரச்சினையில் இல்லை என்ற நிலையில் மட்டும் எதிர்காலம் கருதி பேசுவதே நல்லது.//
13ஆம் திருத்தம் பற்றி இப்போ பேச வேண்டிய தேவை வந்தபடியால் இதை விட சிறந்த ஏற்பாட்டை இந்தியா செய்து கொடுத்ததை நாசமாக்கியது பற்றியும் சொல்ல வேண்டி போய்விட்டது. பாகிஸ்தான்காரன் நாசமாக்கிட்டான் என்று வைத்து கொள்வோம்.
//இப்போது வட கிழக்கில் வாழும் தமிழர்கள் நிலை கடந்த 4 ஆண்டுகளில் முன்னேறி இருக்கிறது என சொல்கிறீர்களா? //
இதில் என்ன சந்தேகம். துன்பத்தில் இருந்து மீண்ட அனுபவங்களை அவர்கள் சொல்வதை நேரில் கேட்டே அனுபவிக்க முடியும். ஈராக்கில் தான் போர் கொடுமையானது இல்லை ஆனால் ஈழ போர் பொற்காலம் 4கட்ட ஈழ போர் வரும் என்பது எல்லாம் தமிழகத்தில் நடக்கும் மோசமான ஏமாற்று வேலைகள்.
//வடக்கு,கிழக்கு மாநிலங்கள் தனித்தனியாக இப்போது போல் அதிகாரம் அற்று இருப்பது சரியா?//
இதை பற்றி நீங்களும் நானும் கதைப்பது ஒரு பைசாவுக்கு பெறமதியற்றது. ராஜ நடராஜன் சொல்லிட்டாரே தமிழகத்தின் தாகம் ஈழம். பல மாதங்களுக்கு முன்பு நான் ரொறென்ரோவில் நின்ற போது இலங்கையின் சமகால பிரச்சனைகள் என்று ஒரு கருத்தரங்கம் இலங்கை தமிழர்கள் நடத்தினானாங்க.நானும் வேடிக்கை பார்க்க போயிருந்தேன்.இலங்கை தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபடம இருப்பதிற்கு முக்கிய தடை பக்கதில் தமிழகம் என்றார் அங்கே பேசின ஒருவர். யாருமே மறுக்கவில்லை. அது சரிதான் என்பதை சமீபத்தில் நானும் உணர்ந்தேன்.
//இலங்கை முஸ்லிம்களை பௌத்த இனவாதிகள் பொதுபலசேனா போன்றோர் சகோதர பாசத்துடன் நடத்துகிறார்களா?//
இப்படி கேட்டதிற்கே நாங்களும் சிங்களவங்களும் சகோதர பாசத்துடன் பழகுகிறோம் என்று முமீன்கள் அடிக்க வந்துவிடுவார்கள் சகோ.

வேகநரி said...

சகோ சார்வாகன்,
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் அரபு மக்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கு. சிங்களவன்களுடன் சேர்ந்து வாழுதல், பிரச்சனைகள் ஏற்படும் போது பேசி தீர்த்தல் என்று நல்லவங்களா,புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.ஆனா அங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கு பிரச்சனை தீர கூடாது.ஏதாவது பிச்சனை இருந்து கொண்டேயிருக்க வேண்டும். இந்தியாவுக்கு அடிக்கடி வந்து இலங்கையை பற்றி முறைபாடு செய்து இலங்கை தமிழர்களிடம் தங்களை ஹீரோவாக காட்டி கொள்வது. இப்போ அமெரிக்காவிடமும் அடிக்கடி முறைபாடு செய்து தங்களை ஹீரோவாக காட்டி கொள்வது இதன் மூலம் இலங்கை தமிழர்களின் தலைமை நாங்களே என்று தேர்தல் வெற்றிகளை அள்ளி கொள்வது.

வேகநரி said...

சகோ சார்வாகன்,
எதிர்காலம் கருதி பேசுவதே நல்லது என்று நீங்க சொன்னது சரியானதும் இலங்கை தமிழர்களினதும் தேவையானதும் கூட. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் நீண்ட கால ஈழ யுத்தமான நீண்டகால துன்பத்தை உதவி செய்து முடித்து வைத்தாங்க. இப்போ இலங்கை தங்கள் பூரண கட்டுபாட்டிலே வைத்திருக்க வேண்டும் என்பதிற்காக யுத்தத்தில் என்ன நடந்தது என்று இலங்கைக்கு மிரட்டல் விடுகிறார்கள். அதில் கூட அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இலங்கையில் நடந்த..... என்பதை தான் மிக தெளிவாக குறிப்பிடுகிறார்கள். தமிழகம் மட்டும் இலங்கை தமிழர்களின் எதிர்காலம் பற்றி அக்கறைபடாமல் 4 வருடத்திற்கு முன்பு நடந்ததை வைத்து எதற்காக போராடுகிறார்கள்? அதுவும் பாதிக்கபட்ட இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டாம், பொருளாதார தடை கொண்டுவா என்று இந்தியாவை கேட்டு? இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய குறுகிய தமிழ் இன வாதமோ திராவிடவாதமோ(?) தேவையில்லை. மனிதாபிமானம் மட்டும் போதும். புலிகளின் உத்தியோக தலைமை பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி தெளிவாக சொல்கிறார்.
கேள்வி
Did any political party in Tamil Nadu ever do anything for you at all ?
அவரின் பதில்
Absolutely nothing. Delhi, on the other hand, is doing a lot of developmental work like building houses and laying railway lines. Maybe your law doesn't permit states to get involved directly. But all Tamil Nadu parties are doing now is fomenting trouble between us and the Sinhalas.

http://goo.gl/hIcs6

வவ்வால் said...

ராச நட,

தத்துவம் சொல்வதில் தமிழனை யாரும் அடிச்சிக்க முடியாது, ஹி...ஹி நானும் தமிழன் தானே :-))

//.இந்திய ஊழலை தடுப்பதற்கு ஒரு நல்ல வழி இருக்குது.சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் எந்த வியாபார டிரான்சாக்சன்னாலும் எந்த வங்கி மூலமாக இருந்தாலும் ரிசர்வ் வங்கியில் கணக்கு வரும் மாதிரி கொண்டு வந்து விடலாம்.5 சி 10சி கறுப்பு பண மாற்றங்கள் கட்டுப்படுத்தக்கூடியவைதான்.இந்தியாவில் நிறைய சட்டமுறைகள் இருக்கின்றன.ஆனால் நிர்வாக அணுகுமுறையில் தவறி விடுகிறோம்.//

எல்லா நடைமுறையும், சட்டங்களும் இங்கே இருக்கு,ஆனால் அதனை கட்டாயமாக யாரும் பின்ப்பற்றுவதில்லை, பின்ப்பற்ற தவறியவர்களுக்கு தண்டனையும் இல்லை :-))

எந்த வியாபார பரிவர்த்தனையிலும் ஒரு லட்சத்திற்கு மேல் கேஷாக பணம் கொடுக்க கூடாது, மேலும் பான் கார்ட் எண் கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்த விதியை சொல்லி கஸ்டமர் வியாபாரம் செய்யாமல் ஓடிவிட்டால் என்ன செய்வது என ஒரு குறுக்கு வழியாக ,டம்மி அக்கவுண்ட் மூலம் செக் போட்டு கணக்கு காட்டிவிடுவார்கள்,பான் கார்ட் எண்ணும் அப்படியே :-))

எல்லா வியாபார அமைப்பிலும் நல்ல கணக்கு ஒன்னு ,நொள்ளக்கணக்கு ஒன்னு என வச்சிருப்பார்கள் :-))

நிலம் பத்திரப்பதிவு செய்யவும் பான் கார்ட் எண் கொடுக்கணும், ஆனால் அதெல்லாம் இல்லாமலே பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார்கள் சார்பதிவாளர்கள், ஆனால் அதைக்காரணம் காட்டி நம்ம கிட்டே காசு மட்டும் புடுங்கிடுவார்கள் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் ஒரு விலையுண்டு, நாம் தட்சணையை சரியாக்கொடுத்துவிட்டால் போதும் காரியம் கச்சிதமாக முடிந்துவிடும்!

// டி.ஆர்.பாலுவை கையைக் காட்டும் வாய்ப்பு இருக்கிறது.இப்ப தலீவர் ஆட்டத்தைக் களைச்சு ஆடுறதால இன்னும் கொஞ்சம் பொறுத்து பார்க்கலாம்.//

காங்கிரஸ் மட்டும் கெட்டப்பெயரோடு போய்விடுமா, கூட சேர்த்து கழகத்தையும் இழுக்கும், இன்னும் கொஞ்ச நாளில் கழகத்தின் பல தில்லாலங்கடிகள் எல்லாம் வெளியாகும், சட்டப்படி நடவடிக்கை இருக்கோ இல்லியோ, கரிப்பூசும் வேலையை கண்டிப்பாக செய்வார்கள், ஈவிகேஸ்.இளங்கோவன் எல்லாம் மீடியாவில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டார் :-))

மாணவர்கள் போராட்டத்தினை மறைமுகமாக முன்னெடுத்து ,தாத்தாவை கார்னர் செய்து அரசியல் ராசதந்திரம் தனக்கும் தெரியும்னு அம்மையார் காட்டிட்டாங்க.

பொது மக்களிடமும் நல்ல பெயர் இல்லை, மத்தியில் கூட்டணியிலும் முறிவு என ,அரசியல் புதைக்குழியில் கழகம் என்பதே இன்றைய நிலைமை.

கழகத்தின் இருண்டகாலத்தின் துவக்கம் இந்நிலை.

ஜோதிஜி திருப்பூர் said...

பதிவை விட அசின் தலைவரின் பார்வை அற்புதம்.