Followers

Monday, December 22, 2014

இந்துத்வா மதமாற்றம்

வவ்வாலை பதிவுலகில் தேடி வந்த காரணத்தோடு மறுபடியும் ஒரு பொது விவாதத்தை தொடுகிறேன். இணையத்தில் கருத்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காலமும், நிகழ்வுகளும் தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.உலகெங்கும் மதவாதங்கள் பெருகுவதை  சில வருடங்களுக்கு முன்பு பி.பி.சியின் நிகழ்ச்சியொன்றில் காண நேர்ந்தது. பல வருடங்களுக்குப் பின்பும் அது தொடர்கதையாகிறது.

இதில் பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையிலும்,ஜனநாயகத்து ஆசைப்பட்டும் இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகளில் தீவிரவாதத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்குகிறது. மோடி,அருண் ஜெட்லி போன்றவர்கள் நல்லாட்சி மீதான கவனம் செலுத்தும் அதே வேளையில் அல்லக்கை எம்.பிக்களும்,இந்துத்வா சார்பாளர்களும் தங்கள் கோர முகத்தைக் காட்ட துவங்கி விட்டார்கள்.மனித நேயம் தேடுபவர்களுக்கு ஈராக்,சிரியாவில் நிகழும் இன வன்முறைகளும் பி.ஜே.பியின் ஆட்சியில் நிகழும் மத மாற்றங்களும் அதிர்ச்சியை உருவாக்குகின்றன. 

In Kerala 30 Christians convert. VHP says : We helped"

ஒருவர் இந்துவாக இருந்து கிறுஸ்துவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ ஆவதற்கு மூளைச் சலவை என்பதற்கும் மேலாக இந்து மதத்தின் குறைபாடுகள் என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் ஒரு கிறுஸ்துவரையோ அல்லது இஸ்லாமியரையோ மறுபடியும் இந்துவாக மதம் மாற்றம் செய்வதில் மூளைச் சலவை என்பதை விட பி.ஜே.பியின் அதிகார பீடம் தரும் மமதை இந்துத்வாவாதிகளுக்கு உருவாகிறது. இதன் காரணமாகவே நேற்று முளைத்த தமிழ்க் காளான் எச்.ராஜா தமிழகத்தின் நீண்ட அரசியலில் பல நேரம் நிமிர்ந்த நடையும்,சில சமயம் சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கிக்கொள்ளூம் வை.கோ வை மிரட்ட முடிகிறது.

பி.ஜே.பியின் அசுர பலத்தை ஐந்தே ஆண்டுகளில் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளூம் செயல்களுக்கான விதையை மெல்ல விதைக்கிறது.

Valsad Conversions Spark Anger

இன்றைய காலகட்டத்தில் கிறுஸ்துவ மதம் பரப்புவது வியாபாரமாகிப் போனாலும் கூட கிறுஸ்துவ மதம் இந்தியாவின் கல்வி,மருத்துவ துறைக்கு மிகச்சிறந்த சேவையை செய்திருக்கிறது. அதே போல் இஸ்லாத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்த முகலாயர்கள் இந்தியாவின் கலை,கட்டிடம்,அரசியல்,நிர்வாகம் என தமது சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் முகலாய மன்னர்களின் காலத்தில் பாபர்,ஜஹாங்கீர்,அக்பர் வரை கட்டாய மதம் மாற்றம் அதிகம் சட்ட பூர்வமாக நிகழ்ந்திருக்க வில்லை. 

இந்துத்வாவாதிகளால் இடித்து தள்ளப்பட்ட பாபர் மசூதி கூட பாபர் கட்டியதல்ல. பாபரின் கவனமெல்லாம் காபூல் மீதே இருந்தது. அயோத்தியாவில் கட்டப்பட்ட பாபர் மசூதி 1528ல் மீர் பக்கி  என்பவரால் கட்டப்பட்டது என்றும் பின்பு வந்த அவுரங்கசீப்பின் காலத்தில் கட்டப்பட்டது என்றும் இரு தகவல்கள் இணையத்தில் உலாவுகின்றன. ஆட்சியை கைப்பற்றும்  எண்ணத்தில் தனது சகோதரர்கள்,அரசன் ஷாஜகான் என அனைவரையும் சிறையில் அடைத்த கல் நெஞ்சக்காரனாக அவுரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டாலும் தாஜ்மஹாலின் வைரங்கள், பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்ட மும்தாஜ்,ஷாஜகானின் ஆடமரத்திலிருந்து வேறுபட்டு ஆறடி நிலமே சொந்தமடா என அவுரங்கசீப் எளிமையாக ஒரு ஒற்றைக்கதவு சிறிய இடத்தில் மரணித்துப் போனார் அவுரங்கசீப்.

பெரும் யானைப்படை,குதிரைப்படை,காலாட் படைகளைக் கொண்ட இந்திய மன்னர்களிடம் போர் புரிவதோடு,கைப்பற்றிய இடங்களை தக்க வைத்துக்கொள்ள இந்து,இஸ்லாமிய திருமணங்களை முகலாயர்கள் ஆதரித்தார்கள். குறிப்பாக அக்பரின் காலம் தீன் இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கியது. பின்பு வந்த அவுரங்கசீப்பின் காலத்திற்கு பின்பே கட்டாய மத மாற்றம் வடக்கில் உருவாகியுள்ளது. தற்போது ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதிகள் ஈராக்கில் யெகுதி மதம் மாறாதவர்களுக்கு வரி விதிப்பதை போல ஜெசியா வரியை அவுரங்கசீப் அறிமுகப்படுத்தினார். 

வடக்கு முழுதும் முகலாய அரசு வியாபித்திருந்தும் தக்காண பீடபூமிக்கு கீழே தற்போதைய மராட்டியா,கர்நாடகா, தமிழகத்தில் ஊடுறவ இயலவில்லை. பதிலாக முகலாய ஆட்சிக்குட்பட்ட சுய அதிகாரம் கொண்ட ஹைதராபாத் நிஜாம்,ஆற்காடு நவாப் போன்றவர்களின் காலத்தில் இந்துமதத்தின் வர்ணாசிரம பிரிவுகள்,அரசு சலுகைகளுக்காக மத மாற்றம் உருவாகியிருக்கலாம்.

அப்படியிருந்தும் மராட்டியாவில் சத்ரபதி சிவாஜி,வடக்கில் ராஜ்புத்திரர்கள்,சீக்கியர்கள் போன்றவர்களின் இந்து அரசு தன்மையும் எதிர்ப்பும் அவுரங்கசீப்பின் கனவுகளை பூர்த்தி செய்யவில்லை.முகலாயர் காலம் வரை இஸ்லாமிய மதம் என்பது மங்கோலிய,துருக்கிய,பெர்சிய,சுபி கலவையாக மட்டுமே இருந்தது. இப்பொதைய வகாபியிசம் உருவாகியிருக்கவில்லை.ஆட்சிக்கு தொல்லை தரும் அரசியல் வாரிசுகள்,குடும்பத்தாரை மெக்காவுக்கு வழியனுப்பி வைக்க மட்டுமே செய்தார்கள்.   

பின்பு இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல் மதமாற்றத்தையும் உருவாக்கினார்கள்.இதற்கான சாட்சியமாக இப்பொழுதும் கோவா,டையு,டாமன் பகுதிகளை கூறலாம்.

மதமாற்றங்கள் அறியாமை,அரசியல்,பொருளாதார,சமூக, சமயம் என்ற பலவற்றின் கலவை. மங்கோலிய,முகலாய படையெடுப்புக்களில் கோயில்கள் இடிப்பு சாத்தியமென்ற போதிலும் அதற்கு நிகரான குஜராத் கலவரங்கள்,கிறுஸ்துவ பாதிரியாரை உயிரோடு கொழுத்திய வன்முறைகளையும், ரத்தக்கறையையும் இந்துத்வா தனது முகத்தில் பூசிக்கொண்டுள்ளது.

பல படையெடுப்புக்கள்,இந்தியாவை ஓட்டாண்டியாக்கிய பின்பும்,மத மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் இந்து மதம் சைவம்,வைணவம்,ஜைன மதம் என தனது வேர்களை ஊன்றியிருக்கிறது. இதற்கான காரணம் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இந்தியர்களிடமிருக்கிறது. மாறாக எகிப்திய நாகரீகம்,பாரசீகம்,ஆட்டோமன் பேரரசுகள் அனைத்தும் இஸ்லாமிய தேசங்களாக மாறியிருக்கின்றன. இப்பொழுதும் இனி வரும் காலங்களின் இணைய பரிமாறுதல் இந்திய தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்பதால அரசியல் நிழலில் ஆர்.எஸ்.எஸ் செய்யும் மத மாற்றங்கள் அவசியமில்லாதவை என்பதோடு பெரும் ஆபத்தை இந்திய தேசத்திற்கு சேர்க்கும். 

காந்தியை சுட்ட கோட்சே தேசப்பற்றாளன் என்று வரலாற்றை திரிக்கும் இந்துத்வாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழகத்தின் திராவிட கழகங்களின் கிழட்டு நிலையில் தமிழர்கள் பி.ஜே.பியிடம் கவனமாக இருப்பது அவசியம். தமிழகத்தின் திராவிட கழகங்கள் தனி மனித ஆளுமை,ஊழல் போன்றவற்றில் சிக்கிவிட்டாலும் கூட திராவிட இயக்கங்கள்,பெரியாரின் கொள்கையோடு முழுவதும் இணைந்து செயல்படா விட்டாலும் கூட இரு கழகங்களும் தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டு நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும்.எனவே முகங்கள் மாறினாலும் கூட திராவிட இயக்கங்களின் வழியே தமிழகம் மேலும் நடைபோடுவதே தமிழகத்தை தனித்துவப் படுத்தும்.

காந்தியால்தான் பாரதம் இரண்டாக உடைந்தது என்று புதிய வரலாற்றுக்கதைகள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பழைய வரலாற்றைப் பற்றி சொல்லியாக வேண்டும். மேலே தொட்ட முகலாயர்களின் படையெடுப்புக்களுக்கு ஒரே வழி காபூல்,பாகிஸ்தான் தொட்ட இந்துகுஷ் பிரதேசம் மட்டுமே.இமயமலையெல்லாம் கடந்து வரும் சாத்தியமில்லாமல் ஆற்றுக்கணவாயில் தங்களுக்கும், குதிரைகளுக்கும் இளைப்பாறியே துருக்கிய, மங்கோலிய, பாரசீக,முகலாயப் படையெடுப்புக்கள் உருவாகின.தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் கோட்டை கொத்தளங்களை அமைக்கத் தெரிந்த இந்திய மன்னர்களுக்கு ஒன்றாக சேர்ந்து  அரண் சுவர் கட்டத் தோன்றவில்லை.சீனா சுத்தி சுத்தி சுவர் கட்டி ரோடு போட்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார்கள்.இந்திய பிரிவினை மவுண்ட்பேட்டன் காலத்து பிரிட்டிஷ் ராஜ்யம்,ஜின்னா என்ற பிடிவாதக்காரர், இந்திய காங்கிரஸ் என்ற முக்கிய காரணிகள் உண்டு. சுதந்திர இந்தியாவின் பதவி பங்கீடுகளுக்கிடையில் காந்தி என்ற தனிமனிதன் இந்து,முஸ்லீம் என்ற கோட்டை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இருந்தார். ஆஷ் துரையின் கொலையில் கூட வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை திவாலாக்கும் முயற்சியில் ஆஷ் முன்னிலை வகுத்தார் என்ற கோணத்தில் வாஞ்சிநாதனின் சனாதன துப்பாக்கிச் சூட்டை  நியாயப்படுத்தலாம்.

காந்தியால்தான் பாரதம் இரண்டாக உடைந்தது என்று புதிய வரலாற்றுக்கதைகள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பழைய வரலாற்றைப் பற்றி சொல்லியாக வேண்டும். மேலே தொட்ட முகலாயர்களின் படையெடுப்புக்களுக்கு ஒரே வழி காபூல்,பாகிஸ்தான் தொட்ட இந்துகுஷ் பிரதேசம் மட்டுமே.இமயமலையெல்லாம் கடந்து வரும் சாத்தியமில்லாமல் ஆற்றுக்கணவாயில் தங்களுக்கும், குதிரைகளுக்கும் இளைப்பாறியே துருக்கிய, மங்கோலிய, பாரசீக,முகலாயப் படையெடுப்புக்கள் உருவாகின.தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் கோட்டை கொத்தளங்களை அமைக்கத் தெரிந்த இந்திய மன்னர்களுக்கு ஒன்றாக சேர்ந்து  அரண் சுவர் கட்டத் தோன்றவில்லை.சீனா சுத்தி சுத்தி சுவர் கட்டி ரோடு போட்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார்கள்.

இந்திய பிரிவினை மவுண்ட்பேட்டன் காலத்து பிரிட்டிஷ் ராஜ்யம்,ஜின்னா என்ற பிடிவாதக்காரர்,இந்திய காங்கிரஸ் என்ற முக்கிய காரணிகள் உண்டு. சுதந்திர இந்தியாவின் பதவி பங்கீடுகளுக்கிடையில் காந்தி என்ற தனிமனிதன் இந்து,முஸ்லீம் என்ற கோட்டை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இருந்தார். ஆஷ் துரையின் கொலையில் கூட வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை திவாலாக்கும் முயற்சியில் ஆஷ் முன்னிலை வகுத்தார் என்ற கோணத்தில் வாஞ்சிநாதனின் சனாதன துப்பாக்கிச் சூட்டை  நியாயப்படுத்தலாம்._(ஆஷ் கொலை வழக்கு பற்றி தேடித்திரிந்து ஒருவர் முழு தகவலும் சொல்லியிருந்தார். பதிவு போடுவேன் என்று தெரிந்திருந்தால் குறிப்புகள் செய்திருக்கலாம்.) கோட்சேவுக்கு சிலை வைக்கும் பேர்வழிகள் காந்தியின் கொலையை நியாயப்படுத்துவதை இந்துத்வாவாதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பல மதங்கள்,கலாச்சாரங்கள் என ஒருமுகப்பட்ட இந்தியாவை அதன் ஜனநாயகத்தை ஆர்.எஸ்.எஸ்,பாகிஸ்தான் போன்றவைகள் மெல்ல அசைத்து மட்டுமே பார்க்க முடியும்.

ஒற்றைப் பதிவில் பழைய வரலாறு,இந்துத்வா தீவிரவாதங்களை ஆழமாக சொல்ல முடியவில்லையென்ற போதிலும் முடிந்தால் மதங்களை கடந்து வந்து விடும் ஆற்றலும் முடியாத பட்சத்தில் தனது நம்பிக்கைக்கு ஒரு ஊன்றுகோல் தேவையென்ற மனநிலையில் இருப்பவர்கள் கற்றுத் தெளிந்தோ பட்டறிந்தோ இயல்பாக இங்கொன்றும் அங்கொன்றுமாக மதமாற்றங்கள் செய்து கொள்வதில் தவறில்லை. அது தவிர்த்து ஒரே நாளில் கேரளாவில் 30 பேருக்கு சாமி வந்துடுச்சு என்றும் குஜராத்தில் 100 பேருக்கு கோயில் பூசை நடத்துவதெல்லாம் கட்டாய மதமாற்ற பட்டியலில் சேரும்.

குறிப்பு: பதிவின் கருத்துக்கள் முழுவதும் என்னை சார்ந்தவை மட்டுமே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடும் புரிதலும் இருக்கும்.ஒவ்வொன்றும் அவரவர் சார்ந்தவை.

பதிவுக்கான தகவல்:

1. In Kerala 30 Christians convert. VHP says : We helped"

2. Valsad Conversion  Spark Anger

http://www.ndtv.com/article/india/in-kerala-30-christians-convert-local-vhp-says-we-helped-637848?pfrom=home-lateststories


http://www.ndtv.com/article/india/valsad-conversions-spark-anger-637719

2 comments:

தனிமரம் said...

கட்டாய மத மாற்றத்தினால் எந்த மதத்தையும் பாதுக்காக்க முடியாது!

Amudhavan said...

எடுத்துக்கொண்ட விஷயத்தின் ஊடாக வரலாற்றை எழுதிச்செல்லும் உங்களின் பாணி எப்போதுமே பிடிக்கும். நீங்கள் வலையுலகில் தீவிரமாக இல்லையென்பதால்தான் நான் வவ்வால் பற்றிய பதிவுப் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்கவில்லை.
தங்கள் சுயமுகத்தை முற்றிலும் மறைத்துக்கொண்டு மோடி, வளர்ச்சி, கறுப்புப்பணம் ஒழிப்பு, விலைவாசிக்குறைப்பு, ஊழல் ஒழிப்பு என்ற இவற்றை மட்டுமே முன்வைத்து மக்களின் நம்பிக்கையை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக்கூட அல்ல ஒரேயடியாகத் தங்களின் ஒரே அஜெண்டாவுக்குத் திரும்பிவிட்டார்கள்.
ஆரம்பத்தில் முப்பது, நூறு என்று ஆரம்பித்தவர்கள் இப்போது ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் என்று மதம் மாற்றப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
ஏமாந்துபோன மக்கள் என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்.