பதிவர் அமுதவன் இடுகை காண நேர்ந்தது. யார் இந்த வவ்வால்? யாருக்காவது தெரியுமா?வவ்வால் வருவதும் வந்து விட்டு ஓடிவிடுவதும் இது ஒன்றும் முதல் முறையல்ல. எனது பழைய பதிவுகளை தேடியதில் 2008ம் வருட தினங்களில் ஒரு முறை காணாமல் போயிருக்கலாம்.தமிழ்மணத்தில் இணைவதில்லையென வவ்வால் விஸ்வாமித்திர சபதம் எடுத்துக்கொண்டும் அவரது பதிவை தேடிப் போய் வாசிக்கும்,சண்டை போடும் பதிவுலக வாசகர்கள் ஏராளம். அனானிகளின் குரு:)
மறுபடியும் 2010ம் ஆண்டு வாக்கில் காணவில்லை என காணா பாடியிருக்கிறேன். என்பதால் வவ்வால் மறுபடியும் பறக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆனால் எப்பொழுது வருவார் எனபது யாருக்குமே தெரியாது.முந்தைய வனவாசத்திற்கான காரணங்களில் இணைய தொடர்பு இல்லாத சூழல் என்று சொன்னதாக நினைவு.
இப்பொழுது மறுபடியும் காணவில்லையென பதிவர் அமுதவன் தேடுகிறார். எங்கிருந்தாலும் அவரின் பின்னூட்ட பகுதிக்கு வவ்வால் வரவும்.
எத்தனை அடிச்சாலும் தாங்குவேன் எனும் சில பதிவுலக நண்பர்களில் ஒட்டியும்,வெட்டியும் அசத்துவதில் வவ்வால் குறிப்பிடத்தக்கவர். 2010க்குப் பின் திரும்ப வந்ததில் கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவர் அமுதவன் சொன்னமாதிரி ஆள் யார் என்பது முக்கியமில்லை,சொல்லும் கருத்துக்கு மட்டுமே விவாதம் என்று விவாதத்தின் அடிநுனி வரை சென்று பெரும்பாலும் வெற்றிவாகை சூடுவதோடு சிலசமயம் மூக்கை உடைத்துக்கொண்டும் வருவது வழக்கம்.சரி!முட்டுச்சந்தில் வைத்து குத்துகிறார்களே இனி அந்தப்பக்கம் போவதில்லையென்ற சபதமெல்லாம் வவ்வாலுக்கு கிடையாது.அடுத்த பதிவுக்கும் போய் பின்னூட்ட முய் வைக்கும் விருப்பு வெறுப்பு இல்லாத பறவை வவ்வால்.முகமூடிகள்,அனானிகள், என்னைப்போன்ற இரண்டும் கெட்டான் என பதிவுலகம் அதளகளப்படுவதை அவரது எழுத்துக்களை விரும்புவோர்,விரும்பாதோர் அனைவரும் அறிவர்.. அவரது பதிவுகளை தொடர்பவர்கள் வரிசையை அவரது பின்னூட்டங்கள் சாட்சி சொல்லும்.
தமிழ்மணத்திலாவது பதிவு கண்ணில் பட்டது அதனால் கருத்துக்கும்,சண்டைக்கும் வருகிறேன் என்று சொல்ல காரணம் உண்டு.ஆனால் வவ்வால்-தலைகீழ் விகிதங்கள் தளத்தை தேடிச்செல்பவர்கள் மட்டுமே அவரது எழுத்து மற்றும் சண்டைப்பிரியர்கள். அவரது பதிவுகளின் எண்ணிக்கையை விட பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அதிகம்.
முந்தைய விவாதக்களம் தமிழ்மணத்தில் குறைந்த மாதிரி தெரிகிறது.பலரும் தமிழ்மணத்திலிருந்து விலகி முகநூல் பக்கம் சென்று விட்டார்களா என தெரியவில்லை.தமிழ்மணம் ஒரு மந்த நிலையில் இயங்குற மாதிரி தெரியுது. இதில் வவ்வாலின் பதிவுகள்,பின்னூட்டங்கள் இல்லாதது இன்னும் சுரத்தை குறைக்கிறது.
வவ்வால் நீங்கள் சொல்வதற்கு,சொற்போர் புரிய இன்னும் நிறைய இருக்கின்றன. திரும்ப வரவும்.
3 comments:
வவ்வால் எங்கிருந்தாலும் பின்னூட்டமிடவும்.
அவரது எழுத்துக்களை விரும்புகிறோமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். வெண்கலக்கடையில் யானை புகுந்த மாதிரி என்று சொல்வார்களே அதுபோல் ஒரு அதகளத்தை ஏற்படுத்திவிடும் எழுத்துக்குச் சொந்தக்காரர் அவர் என்பதனால்தான் அவருக்காக இத்தனைத் தேடல் என்று நினைக்கிறேன்.
அமுதவன் சார்! நலமா? உங்கள் பதிவு கண்டுதான் வவ்வாலைக் காணவில்லையென்ற தகவல் அறிந்தேன்.முன்பும் இப்படி வனவாசம் போயிருப்பதால் மீண்டும் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ திரும்புவார் என நினைக்கிறேன்.
Post a Comment