Followers

Saturday, October 25, 2008

ஈழத்துப் பிரச்சினையும் இந்திய மாற்றங்களும்

வணக்கம் அனைவருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தப் பதிவுக்குச் சென்றாலும் ஒன்று புலிகளின் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை என்ற கோட்டிலேயே பதிவுகளும்,பின்னூட்டங்களும் வருகின்றன.காரணம் என்ன?

இந்தப் பிரச்சினையில் புலிகளின் நிலை தவிர்த்து அடுத்தப் பக்கத்துக்கு இதன் அரசியல்,சமூகம்,பொருளாதாரம் சார்ந்த சூழல்களும் மாற்றங்களும் நிகழவில்லை என்பதும்
புலிகளின் வீரமோ அல்லது எதிர்நிலை கொள்பவர்கள் கூறும் தீவிரவாத முத்திரை முடிவுக்கு வந்து விட்டால் ஈழத்தமிழர் பிரச்சினையினை மேல் எடுத்துச் செல்வது இலங்கை அரசுக்கு எளிதாகி விடும் என்ற கோட்டிலே தற்போதைய ஈழத்துப் பிரச்சினை பயணிக்கிறது.

சரி புலிகளுக்குத்தான் இலங்கை அரசுடன் கூட்டு மனோபாவம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட்டு சேரும் மனோபாவத்தில் தற்போது இலங்கை அரசுடன் சமரச எண்ணங்களுக்கு துணைபோகத் தயாராக இருக்கும் ஏனைய தலைவர்களை ஈழத்து மக்கள் ஏற்றுக் கொண்டு ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளதா? கருணா,பிள்ளையான் தரப்பு பகுதியின் தற்போதைய நிலை எங்காவது முன்னிறித்தப் படுகிறதா?இவர்கள் நாணயத்தின் இரு பக்கங்களைப் பார்த்தவர்கள்.ஆனாலும் மக்கள் மத்தியில் சோபிக்கவில்லை என்ற தோற்றமே தெரிகிறது.எப்படியோ புலிகளைப் பலமிலக்கச் செய்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தனது பகடையை உருட்ட எளிதாக இருக்கும் என்ற நோக்கிலேயே தற்போதைய போர் முன்னிறுத்தப் படுகிறது.

பதிவர்களிலும்,பின்னூட்டமிடுபவர்களிலும் யாருக்காவது போருக்கான நேர் அறிமுகம் இருக்கிறதா?ஒருவேளை இதனைப் படிக்கும் ஈழத்தமிழனுக்கு போரின் வடுக்கள் இருக்கலாம்.ஒரு போரில் பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதும் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல கால அவகாசம் கொடுப்பதும்,அப்படி தனது உடமைகள் அனைத்தையும் விட்டுச் செல்பவர்களை பாதுகாப்பான இடத்தில் அமர்த்துவதும் போரியில் மரபு.விமானத் தாக்குதல் என்பது துள்ளியமாக போர் நிலைகளை அழிப்பதென்பது.அதற்கு முன்பு கூட அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளாகப் போகிறதென்று காகித நோட்டிஸ்களை விமானத்திலிருந்து போடுவதென்று விதிமுறைகள் உள்ளது.இதனையெல்லாம் இலங்கை அரசாங்கம் பின்பற்றியுள்ளதா எனத்தெரியவில்லை.காரணம் மனித வெறுப்பின் உச்சக்கட்டம் போரில் தெரிவது.அழிவு ஒன்றே குறிக்கோள்.இதில் இரு தரப்புமே பொறுப்புக்குள்ளாவார்கள்.

சாதாரண ஈழத்தமிழனும் இலங்கைக் குடிமகனும் சேர்ந்து வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை இத்தனை இழவும் இரத்தம் சிந்துதலுக்குப் பிறகும் கூட.சாதாரண சிங்களத்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களே.சாப்பாட்டுக் காரத்தை விட்டுப் பார்த்தால் உணவு முதற் கொண்டு எல்லாமே செரிக்கும்,நட்பு இசை என்று எல்லாமே இனிக்கும்.எனவே இரு மொழியின் மரபுகளும் மீண்டும் இணைக்கப் படுவது அவசியம்.

இங்கே புலிகளைக் குறை கூறவும் விமர்சனம் செய்யவும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.எதிர்தரப்பில் இலங்கையில் சமரசம் விரும்பாத கட்சிகளும் முக்கியமாக நம்மூர் இந்து தீவிரவாத அமைப்புக்களுக்கு நிகரான புத்த பிட்சுக்களும் சில சட்ட அமைப்புகளுமே புலிகளைத் தவிர்த்து இந்தப் போரை முன் கொண்டு செல்கிறது.புலிகள் சார்ந்த ஊடகங்களைக் கவனித்தால் புரியும் ஒன்று புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை என்பதல்ல.

புலிகளின் துவக்க கால முதல் கொண்டுள்ள ஒரே குறிக்கோள் தமிழீழம்.

இந்தக் கோட்டுக்கு இலங்கை அரசாங்கம் அன்றும் இன்றும் வரத்தயாரில்லை.இதற்கான காரணம் கொண்டே சுனாமி பொருளாதாரப் பங்கீட்டில் கூட ஈழத்துப் பகுதிகளுக்கு சம பங்கீடில்லை.ராஜ பக்சே சகோதரர்களின் முரட்டுத்தனம் சமாதானத்திற்கான திசையிலும் செல்வதாயில்லை.அவர்களது ஒரே குறிக்கோள் புலி ஒழிப்பு.அப்புறம் எல்லாம் தமது விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் என்பதும் அதுவே நிதர்சனமுமாகும்.

புலிகள் ஏனைய ஈழத்து அமைப்புகளை அணைத்துக் கொண்டு தங்களின் குறிக்கோளில் முன்னேறாமல் போனதும் அதே சமயத்தில் புலி எதிர்ப்பாளர்கள் ஈழத்து தமிழர்களுக்கென்று உறுதியான ஜனநாயக நிலைப்பாடு கொள்ளாததும் தமிழர்களின் பின்னடைவைத் தருகிறது.அனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இலங்கை சார்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவர்களும் வெறும் பகடைக் காய் நிலையில்தான் உள்ளது போல் தோன்றுகிறது. புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் மத அடையாளங்களை நிலை நிறுத்திக் கொள்ள காட்டிய ஆர்வத்தை தாங்கள் சார்ந்த நாடுகளிலும் உலக அரங்கிலும் ஈழத்துப் பிரச்சினையை இன்னும் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும்.மாறாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும்
தாங்கள் சார்ந்த வாழ்க்கையின் அழுத்தத்தில் மறைந்து போனவர்களாகவும் காணப் படுகிறார்கள்.

இலங்கை அரசின் வேர்கள் இந்துப் பத்திரிகை ராம் போன்றவர்களிடம் வேறூன்றியது போல் ஈழத்தமிழர்கள் ஊடக நிலையிலும் மொழி சார்ந்த நிலைக்கு அப்பால் போகவில்லை.தமிழ்நெட் போன்ற வலைத்தளங்கள் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும் எழுத்தும் கருத்து பரிமாறல்களுமின்றி செய்திகளை வெளியிடுகின்றது.இலங்கை விசயத்தில் ஓரளவுக்கு ஆங்கில ஊடகமான அவுட்லுக் இந்தியா மூலம் கருத்துக்கள் தருவது B.ராமன் மட்டுமே.காரமூட்டும் தெகல்கா சேலத்துக்குப் போய் குளத்தூர் மணீயையும் குளத்தூரையும் பற்றிச் சொல்லி விட்டு தற்போதைய மாற்றங்களை அலசாமல் போய்விட்டது.

சில பதிவுகளும்,பின்னூட்டங்களும் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் நேர்,எதிர்வினைகள் தமிழ்மணத்தில் பிரச்சினையை அலச ஆராய முற்படுவது வரவேற்க தக்கது.அரசியல் அந்தர் பல்டிகளை தொடாமல் விட்டுச் செல்கிறேன்.


இனி இந்தியாப் பக்கம் வந்தால் இந்தியாவின் நிலைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று பாகிஸ்தான்,சீனாவின் இலங்கையில் நிலை கொள்ளலைத் தவிர்ப்பது.அடுத்து ராஜிவ் காந்தியின் மரணம்.தற்போதைய தமிழகத்து எழுச்சி இதனையெல்லாம் புரட்டிப் போட்டுள்ளது. அடக்கப் படும் உணர்வுகள் புரட்சி செய்யும் என்பதற்கு ஈழத்துப் பிரச்சினையும் மொழியின் வேர் ஆழமானது என்பதற்கு தமிழக மாற்றங்களும் உதாரணங்கள்.எனவே இனி இந்திய இலங்கை வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து மாற்றங்கள் கொண்டு வரவேண்டிய நிலைக்கு இந்திய வெளியுறவுக் கொள்கை தள்ளப்பட்டிருக்கிறது.

ஈழத்துப்பிரச்சினையில் ஈழத்து தமிழனுக்கு குரல் கொடுப்பவன் கவிஞனாகவும் , ஒரு படைப்பாளியுமாய் இருக்கிறான்.படைப்பும் கவிதையுமே நிலைத்து நிற்கும் நிலை போக படைப்பாளியின் தனிப் பக்கங்களும் இனிப் பேசப்படும் நிலையில் தற்போதைய சிறைவாசங்கள்.இவையெல்லாம் ஈழத்துக்கு வலு சேர்க்கவே செய்யும்.இயக்குனர்கள் அமீரும்,சீமானும் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் புகுந்துவிட்டார்கள் இந்தக் கைதின் மூலமாக.

மனிதாபிமான அடிப்படையிலாவது துன்புறும் ஈழத்து மக்களுக்கு வேண்டிய முக்கியப் பொருட்கள் செல்வதற்கு இந்தியா நேரடியாகவோ அல்லது நார்வே,ஐக்கிய அமைப்புக்கள் போன்றவைகளுக்கு முன்னுரிமை தந்தோ செயல்பட வேண்டும்.ஈழத்து தமிழர்களின் உடமைகளும்,வாழ்விடங்களும் அவர்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.முக்கியமாக ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை ஜனநாயக முறைப் படி எந்த ஒரு அழுத்தங்களுக்கும் உட்படுத்தாமல் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை வழங்குவது முக்கியம்.அதற்கான முயற்சிக்கு இந்தியா துணை போனால் இந்தியாவின் சொந்த நலன்களுக்கு நல்லது.

22 comments:

பழமைபேசி said...

இது ஆக்கப்பூர்வமான பதிவு. யதார்த்தம்ன்னு ஒன்னு இருக்கு இல்லே?

ராஜ நடராஜன் said...

//இது ஆக்கப்பூர்வமான பதிவு. யதார்த்தம்ன்னு ஒன்னு இருக்கு இல்லே?//

வணக்கம்.உங்கள் வருகைக்கு நன்றி.எங்க ஊர்ப் பக்கம் பழம பேசுறான்னு சொன்னா விவாதிக்கிறான்னு அர்த்தம்:)

அப்புச்சி said...

ஈழப் பிரச்சினையை ஆழமாக பார்த்து பதிவிட்டுள்ளீர்கள்.சிறப்பாக உள்ளது
அன்புடன்
அப்புச்சி

ராஜ நடராஜன் said...

//ஈழப் பிரச்சினையை ஆழமாக பார்த்து பதிவிட்டுள்ளீர்கள்.சிறப்பாக உள்ளது
அன்புடன்
அப்புச்சி//

தங்கள் வருகைக்கு நன்றி அப்புச்சி.நான் சின்னப் பையனா இருக்கும் போது ஒரு அப்புச்சி இருந்தாரு.அவர்தான் ஊர் நாட்டாமை.நம்ம தமிழ்ச் சினிமா மாதிரி கம்பீர மீசை,நகை,முரட்டுக் குரல்ன்னு இல்லாம மென்மையா பேசும் 70 வயதைத் தாண்டிய பெரியவர்.உங்கள் பெயர் மூலம் அவரை நினைவுக்கு கொண்டு வருவது மகிழ்ச்சியைத் தருகிறது:)

குடுகுடுப்பை said...

அருமையான பதிவு.

ராஜ நடராஜன் said...

//அருமையான பதிவு.//

உங்கள் வருகைக்கு நன்றி.

ஆமா நீங்கள்தான் வருங்கால முதல்வர் நாநாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர்ன்னு கேள்வி.உங்களுக்கு முன்பே இங்கே ச்சின்னப் பையன் கட்சி அமைத்து கட்சிய தமிழ்மணத்துல ஆழ ஊன்றிட்டாருன்னு தெரியுமா தெரியாதா:)

பழமைபேசி said...

//வணக்கம்.உங்கள் வருகைக்கு நன்றி.எங்க ஊர்ப் பக்கம் பழம பேசுறான்னு சொன்னா விவாதிக்கிறான்னு அர்த்தம்:)//

அப்ப நீங்க இதைப் பாக்கலையா இன்னும்? உடனே பாருங்க.

Anonymous said...

//சரி புலிகளுக்குத்தான் இலங்கை அரசுடன் கூட்டு மனோபாவம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட்டு சேரும் மனோபாவத்தில் தற்போது இலங்கை அரசுடன் சமரச எண்ணங்களுக்கு துணைபோகத் தயாராக இருக்கும் ஏனைய தலைவர்களை ஈழத்து மக்கள் ஏற்றுக் கொண்டு ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளதா?//
ராஜ நடராஜன் அவர்களே ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்த இலங்கை தமிழ் தலைவர்கள் எவ்வளவு பேர் மற்றும் சாதாரண தமிழர்கள் எவ்வளவு பேர் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

ராஜ நடராஜன் said...

//ராஜ நடராஜன் அவர்களே ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்த இலங்கை தமிழ் தலைவர்கள் எவ்வளவு பேர் மற்றும் சாதாரண தமிழர்கள் எவ்வளவு பேர் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?//

அப்புச்சி உங்கள் மீள் வருகைக்கு நன்றி.எதிர்க் கருத்து தமிழனைக் கூடவே அணைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லாதது புலிகளின் தோல்விக்கும் இத்தனை நாட்களான போராட்ட இழுப்புக்கும் கூட காரணம் என்பதில் ஐயமில்லை.ஆனால் எதிர்க் கருத்து கருணாவின் நிலையை முந்தைய பதிவின் படத்தில் பாருங்கள்.

ராஜ நடராஜன் said...

வதா அவர்களுக்கு,

உங்கள் பெயரில் இப்படிக்கு அனந்தசகரி என்ற பெயருடன் பதிவுகளில் பின்னூட்டங்கள் காண்கிறேன்.இரு பெயரும் ஒன்றா எனத்தெரியவில்லை.எப்படியோ மனித நேயம் முன்னிறத்தப் படவேண்டும் என்ற இலக்கை மட்டும் வைத்து எனது பதிவுகளும் பின்னூட்டங்களும் வருகின்றன.ஒரு பிரச்சினையை அணுகும்போது ஒரு பக்கம் சார்ந்து நோக்கினால் சரியாக இருக்காது என நினைக்கிறேன்.நீங்கள் எந்த நிலைப்பாட்டில் விவாதங்களில் நுழைகிறீர்கள் என்று பழ.நெடுமாறனை அழைக்கும் விதத்திலும் இலங்கை ஜனாதிபதி ராஜ பக்சே வை அழைக்கும் முறையிலும் தெரிகிறது.யாருக்கும் புலிகளை ஊக்குவிக்க வேண்டுமென்ற ஆவல் இல்லை.ஆனால் புலிகளை விட்டால் தமிழனுக்கு நாதியில்லை என்கிற மாதிரிதான் இலங்கையின் வரலாறுகள் தமிழனுக்குப் போதிக்கின்றன.வாழ்வே அரசியலாய் முதிர்ந்திருக்கும் கலைஞரை விவாதிப்பதில் உங்களுக்கு அனுபவமோ அல்லது எனக்கு பக்குவமோ போதாது என நினைக்கிறேன்.எப்படியோ உங்களது ஒரு பக்கத்துப் பார்வை எனக்கு சரியாகப் படவில்லை. ஈழத்து தமிழனுக்கு யாராவது விடியலைத் தேடித் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்.பெருந்தலைகள்தான் பிரச்சினைகளை இழுத்துக் கொண்டு போகிறார்கள்.சாதாரண தமிழனும்,சிங்களவனும் ஒன்றாக வாழ்வதில் பிரச்சினைகள் இல்லை என்பதனை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.பழங்கதைகள் பலவும் முன்வைத்துள்ளீர்கள்.அவைகளையெல்லாம் விவாதித்தால் நாணயத்தின் மறுபக்கம் மாதிரி விவாதம் நீளக்கூடும்.எனவே உங்கள் வருகைக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

சிக்கிமுக்கி said...

ஐயா vatha ,

நீங்கள், 'இலங்கையின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும்' காப்பதற்காகப் படும் கவலையும் -

ஒடுக்கப்பட்டு பலவேறு கொடுமைகளுக் குள்ளாக்கப்பட்டு கொன்றழிக்கப்ப்டும் ஓர் இனத்தின் விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்தியிருப்பதும் -

இனவெறிக் கொடுங்கொடிய இலங்கைப் பேரினவாத அரசிடம் பட்டம் பரிசு பெற்று எழுதிவரும் இந்து ராம் வகையறாக்களை நினைவூட்டுகின்றது.

ராஜ நடராஜன் said...

//ஐயா vatha ,

நீங்கள், 'இலங்கையின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும்' காப்பதற்காகப் படும் கவலையும் -//

ஒரே வெட்டல் ஒட்டலை பல பதிவுகளுக்கும் வதா ஏன் அனுப்புகிறார் எனப் புரியவில்லை.நம்ம பின்னோட்டமெல்லாம் பாருங்க மனமும் மூளையும் என்ன கட்டளையிடுகிறதோ அதற்கேற்றார்ப் போல் எழுத்துக்கள் முளைக்கும்.

Anonymous said...

//ஒரு பிரச்சினையை அணுகும்போது ஒரு பக்கம் சார்ந்து நோக்கினால் சரியாக இருக்காது என நினைக்கிறேன்.//
//ஆனால் புலிகளை விட்டால் தமிழனுக்கு நாதியில்லை என்கிற மாதிரிதான் இலங்கையின் வரலாறுகள் தமிழனுக்குப் போதிக்கின்றன.//
நீங்கள் புலி பக்கம் சார்ந்தே எழுதுகிறீர்கள்.
இலங்கை தமிழனின் இவ்வளவு அழிவுக்கும் புலி தான் காரணம்.
புலிகளை விட்டால் தமிழனுக்கு நாதியில்லை என்பது ஒரு ஜோக்

ராஜ நடராஜன் said...

//நீங்கள் புலி பக்கம் சார்ந்தே எழுதுகிறீர்கள்.
இலங்கை தமிழனின் இவ்வளவு அழிவுக்கும் புலி தான் காரணம்.
புலிகளை விட்டால் தமிழனுக்கு நாதியில்லை என்பது ஒரு ஜோக்//

சிக்கி முக்கி மீள் வருகைக்கு நன்றி.இது புலிப்பக்கமல்ல.நடப்புக்களை எனது கோணத்தில் பார்க்கும் ஒரு முயற்சியே.இந்தப் பதிவு ஈழத்துப் பிரச்சினையை அலசும் ஒரு முயற்சியுடன் கருத்துப் பரிமாற்றங்களும் கூட.சரி உங்கள் கூற்றுப் படியே வைத்துக் கொண்டாலும் புலிகளை விட்டால் தமிழனுக்கு வேறு ஒரு மாற்று வழியைக் கூறுங்கள்.ஏற்புடையதாக இருக்கிறதா என்று பார்ப்போம்.

ராஜ நடராஜன் said...

அனானியாரின் கருத்தை தவறாக சிக்கி முக்கியென்று நினைத்து விட்டேன்.பெரும்பாலும் நான் அனானிகளை ஆதரிப்பதில்லை.ஆனால் பதிவின் கருத்துக் கொண்டும் தனிமனித கருத்துச் சுதந்திரம் பாதுகாப்பு கருதியும் அனானிகள் கருத்து நாகரீகம் கொண்டும் அனானிகளுக்கும் சுதந்திரம் தர நினைக்கிறேன்.

வெட்டல் ஒட்டலில் இன்று நான் கற்றுக் கொண்ட ஒன்று. ஒரு பகுதியின் சாராம்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் வெட்டி ஒட்டினால் மாறுபடும் பொருள் எப்படி மாற்று அர்த்தத்தை தரும் என்பது இப்பொழுது புரிகிறது.கூடவே ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்களைக் கூட இனி மேல் உன்னிப்பாக உற்று நோக்குவதற்கு இந்த வெட்டல் ஒட்டல் பொருள்மாற்றம் துணை புரிகிறது.

Unknown said...

மதிப்புக்குரிய இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களுக்கு!

அன்புடையீர்!

தமிழ் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இராமேஸ்வரத்தில் நடாத்திய ஓர் பிரமாண்டமான கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்கியுள்ளீர்கள். அக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகளாவிய தமிழ் மக்களின் வீரமிக்க தலைவன் என பிரகடனப்படுத்தியுள்ளீர்கள. அவரின் வீரச் செயல்கள் அனேகவற்றில் ஒரு சில, ஓர் ஜனாதிபதியையும்;, ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் உருக்குலைந்த நிலையில் சடலமாக்கியமை, இன்னோர் ஜனாதிபதியினுடைய கொலை முயற்சியில் அவரின் ஒரு கண் பார்வையை இழக்கச் செய்தமை, குண்டு வெடிப்புகள், கிளேமோர் குண்டுத்தாக்குதலகள்;, கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பஸ் வணடிகளிலும், ரயில் வண்டிகளிலும் பறித்தமை, கிளேமோர் தாக்குதல் ஒன்றில், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கிராமத்திலிருந்து பட்டினத்திற்கு சென்ற பஸ் வண்டியில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டு; 65 பேர் படுகாயமுற்றமை, ஆயிரக்கணக்கான விதவைகளை, மனைவியை இழந்தவாகளை, அநாதைகளை உருவாக்கியதோடு பலரை அங்கவீனர்களாக்கி கண்பார்வையை இழக்கச் செய்தமை, 22,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும், யுத்த முனைக்கு அனுப்பியும் உயிர்ப்பலி கொடுத்தமை, கர்ப்பிணி பெண்களை இதற்கு பாவித்தமை, பல அறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் அரச அதிபர்கள், திறமைமிக்க வைத்திய காலாநிதிகள், பொறியிலாளர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை பலி கொண்டமை ஆகிய அத்தனைக்கும் முழு பொறுப்பேற்க வேண்டிய ஒரேயொரு நபர் பிரபாகரனே. வீரமிக்க உலகளாவிய தமிழராக தங்களால் கௌரவிக்கப்பட்டவரின் சாதனைகளை மேலும் குறி;ப்பிடின், வடஇலங்கையில் பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறித்தெடுத்துவிட்டு வெறும் 500 ரூபா பணத்துடன் வெளியேற்றப்பட்ட மக்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அகதி முகாம்களில் வாடி,வதங்க வைத்ததோடு எமது மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வடக்கு கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த மக்களை ஓட்டாண்டியாக்கி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்து எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சிதைத்த இப் பெரு மகனாரை சினிமா உலகம் வீரமிக்க தமிழர் தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவாகிய தாங்களும், இயக்குனர் சீமான் போன்ற சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் இப்போதும் பிரபாகரன் அவர்களை வீரம் நிறைந்த தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து இலங்கை வாழ் தமிழ் மக்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய கொடூர செயல்;களை வீரம் செறிந்த செயலாக தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் திரு. பிரபாகரனை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். முறைப்படி அவரை கௌரவிப்பின் ஸ்ரீபெரம்புத்தூரில் அமைந்துள்ள கௌரவ ராஜீவ்காந்தி அவர்களின் ஞாபகசின்னத்துக்கு அண்மையில் ஓர் சிலை எழுப்புவீர்களேயானால் அது இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்வாறு மக்களின் பெரு மதிப்பை பெற்ற மிகச் சிறந்த ஓர் பிரமுகரை வெட்கப்படக் கூடிய வகையில் ஓர் முட்டாள் பெண்மணியின் உதவியோடு மற்றும பலருடன் தன்னையும் ராஜீவ்காந்தி அவர்களையும் சதை பிண்டமாக்கிய இம் மாவீரனின் சாதனையை ஞாபகப்படுத்தும். இலங்கைத் தமிழர்கள்தான் அது கூட விடுதலைப் பெற்றுத் தருவோம் என்று கூறிவந்த விடுதலைப் புலிகளால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உண்மை நிலையை கண்டறிய மறுத்து இஷ்டம்; போல் செயல்படுவீர்களேயானால் விடுதலைப் புலிகளின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் தமிழ் நாட்டை நாம் வலிந்து கேட்பது என்னவெனில் இலங்கை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுக்கு புத்துயிர்; கொடுக்கின்ற முயற்சியல் ஈடுபடாது ஒதுங்கி இருக்குமாறு வேண்டுகிறேன். சிங்கள அரசு தமிழ் மக்களை இன அழிப்பு செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யாகும். அதற்கு மாறாக இன்று தமிழ் மக்களை அழிக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளே.

யுத்தத்தால் தமிழ் மக்கள் சொல்லொணா கஸ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறை ஆட்சியில் அவர்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இப்போது படும் துன்பம் பெரிதல்ல. தமிழ் நாடு விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பலாத்காரமாக பிடித்திருக்கும் மக்களை விடுவிக்க செய்வதே பெரும் உதவியாக இருக்கும்.

தாங்கள் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல. சினிமாத் துறையில் ஈடுபட்டவர்கள் தற்போதைய முயற்சி வெறும் பயனற்றதென்றும் அதற்குப் பதிலாக நிலைமையை அறிவதற்காக ஒரு குழுவினர் இலங்கைக்கு சென்று உண்மையை அறிற்துவர வேண்டுமென வேண்டுவதே நியாயமானதாகும். திருமதி இந்திரா காந்தியை சீக்கியர்தான் கொலை செய்தவர் என்றபடியால் ஒரு சீக்கியர் முதலமைச்சராக வர முடியாது என்பது விதண்டாவாதமாகும். அதேபோலவே மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றியும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை பற்றியும் ஒப்பிட்டு பேசுவது விதண்டாவாதமாகும்.

ஒரு சிலர் தாம் நன்மை பெறுவதற்காக அல்லது தான் பிரபல்யமாவதற்காக முழு தமிழ் நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்குவது ஒரு தேச துரோக செயலாகும்.

நன்றி

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

Unknown said...

நடராஜன் அவர்களுக்கு,

எனது பின்னூட்டத்தினை பதிவிலிட்டதற்கு நன்றி. உங்கள் பின்னூட்டங்களையும் படித்தேன். இலங்கை பிரச்சனை தொடர்பாக தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டே தேனீ இணையத்தளத்திலிருந்து பின்னூட்டம் ஒன்றினை அனுப்பியிருந்தேன். எட்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வெளிவரும் தேனீ இணையத்தளம் இலங்கைத்தமிழாகளால் மிகவும் விரும்பி படிக்கப்படுகின்றது. வாசகர் பரப்பில் இலங்கைத்தமிழாகளிடைNயு தேனீ இணையத்தளமே ~நமபர் ஒண்| என்று கூடக் கூறலாம். எனவே தேனீ இணையத்தளத்தில் வெளிவந்த கருத்தாளமிக்க கட்டுரையொன்றினை தமிழ் நாட்டு மக்கள் படிக்கவேண்டுமென்ற நோக்கிலே உங்களுக்கு அனுப்பியிருந்தேன். இலங்கைத்தமிழ் மக்களின் பிரச்சனையை, இலங்கைத்தமிழ் மக்களின் கண்ணோட்டத்திலே தமிழ் நாட்டு மக்கள் அணுகவேண்டும். புலிகளுக்கெதிராக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது உண்மை. ஆனால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, இலங்கையிலுள்ள முழுமக்களுமே பாதிக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையையும் தமிழ் நாட்டு மக்கள் புரிய வேண்டும்.
இலங்கைத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மிகப்பெரும் தடையாகவுள்ள புலிகளை பலவீனமாக்கினால் அல்லது முற்றுமுழுதாக அழித்தால் மாத்திரமே, இலங்கையினதும் இலங்கைத்தமிழ் மக்களினதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.

தேனீ வாசகன்,
வ.திவாகர்

Anonymous said...

தேனீ இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையை அனுப்பிய வ.திவாகர் அவர்களுக்கும் அதை வெளியிட்ட நடராஜன் அவர்களுக்கும் நன்றி.

Anonymous said...

you are so innocent. haven't you heard about திவாகர் earlier? He is a well known Sri Lankan Government sponsored spammer from UK. If you leave your e-mail known at this blog, you will soon expect from anti-ltte and pro-sl government news pieces in your inbox. run.

ராஜ நடராஜன் said...

//you are so innocent. haven't you heard about திவாகர் earlier? He is a well known Sri Lankan Government sponsored spammer from UK. If you leave your e-mail known at this blog, you will soon expect from anti-ltte and pro-sl government news pieces in your inbox. run.//

Thanks buddy.Whoever say what everybody have their own right to express their opinion.Atlast we are the one who is going to judge what is right and what is wrong.

கயல்விழி said...

//பதிவர்களிலும்,பின்னூட்டமிடுபவர்களிலும் யாருக்காவது போருக்கான நேர் அறிமுகம் இருக்கிறதா?//

இல்லை, நிச்சயமாக இல்லை.

வசதியாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இணையதளத்தைப்படித்து கருத்து எழுதுபவர்களே நாங்கள் அனைவரும்.

அதனால் தான் மீண்டும் எழுதுகிறேன், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் பெரும்மான்மையினருக்கு என்ன விருப்பமோ, அதையே ஆதரிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் பெரும்மான்மையினருக்கு என்ன விருப்பமோ, அதையே ஆதரிக்கிறேன்.//

வருகைக்கு நன்றி கயல்விழி.உங்கள் விருப்பம் மட்டுமல்ல.இந்தப் பிரச்சினையை அணுகும்,பார்வையிடும் மனிதாபிமானிகள் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கமுடியும்.நம்ம மாதிரிப் பொதுக்கருத்தாளர்கள் இதில் என்ன ஆதாயமா தேட நினைக்கிறோம்? மனிதம் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தைத் தவிர.