"வேதாளத்த எங்க வேணும்னாலும் அனுப்பி வைக்கலாம்...அது எப்பிடினா ஒழிஞ்சா சரி! இந்த மாதித்தன் பயலும் தான்.. அது ரெண்டையும் அப்படியே எங்கனா அண்ட வெளில தள்ளி விட்றுங்க!"// என்று என் காதில் கிசுகிசுத்தார்.
வேதாளக் காதாயிற்றே! அதுசரி யின் முணுமுணுப்பு வேதாளத்தின் காதில் கணீரென்று கேட்டது.உடனே விக்கிரமாதித்தனிடம் "இவரு பொன்னியின் செல்வன் மிதப்பில பழைய நட்பையெல்லாம் மதிக்காம உன்னையும் என்னையும் அண்டத்துல விடறதுக்கு "கூ" செய்யறாரு பார்த்தியான்னு சொன்னதும் அதற்கு விக்கிரமாதித்தன் " இவருக்கென்ன நவாஸ் செரிப் பின்னு நினைப்பா? முஷ்ரஃப் விமானத்தில் ஏறியதும் விமானத்துல சுத்த விடறதுக்கு!முஷ்ரஃப் திரும்ப வந்து என்னென்னல்லாம் நடந்துருச்சுன்னு வா அவருக்கு மறுபடியும் கதை சொல்வோம்" என்றான்.
நானும் இரண்டுபேரும் என்னிடம் சமத்தாகத்தானே இருந்தீங்க!உங்களை ஏன் அண்டத்துல விடறதுக்கு நினைக்கிறாருன்னு சொன்னதும் வேதாளம் " இந்த சிறுக்கி நமிதா ஏதாவது கொடுத்து மயக்கி இருப்பா" என்றது.அப்பொழுதுதான் நான் நமிதாவின் நினைவு வந்தவனாக " என்ன நமிதா! மச்சான் நல்லா கவனிச்சிகிட்டாரா என்று கேட்டேன்.அதற்கு நமிதா இனிமேல் நான் அதுசரி மச்சான்ஸ் கூடவே சுத்தப்போறேன்.உன்கூட வந்தா வெறும் கொள்ளுத்தண்ணிதான் கிடைக்கும்.இவர் டெக்கீலாவெல்லாம் கொடுத்து என்ன நல்லாக் கவனிச்சுக்கிறாரு.அதனால நான் உன்கூட "டூ" நான் வரமாட்டேன் என்றது.நீ கா ன்னுல்ல முன்னமெல்லாம் பாட்டுப் பாடிட்டுருந்த.இப்ப என்ன டூ ன்னல்லாம் புதுசா என்னென்னமெல்லாமோ சொல்கிறாய் என்றேன்.இதெல்லாம் நம்ம மச்சான்ஸ் அதுசரிகிட்ட கத்துகிட்டேன் என்றது.
அந்த நேரம் பார்த்து சந்திராயன் நிலவுக்குப் போய் விட்டு திரும்ப வருவது தெரிந்தது.பரவாயில்லையே கோளங்கள் ரொம்பத்தான் முன்னேறிடுச்சு.நினைச்ச இடத்துக்கெல்லாம் வண்டி கிடைக்குதேன்னு வியப்புல நம்ம பழைய ஸ்டைல் பஸ் நிறுத்தும் கோணத்தில் நின்றேன்.பிரயாணத்துக்கு முன்னால எத்தனைதான் வீட்டிலருந்து துவங்கி ரயில்வே ஸ்டேசன்,பஸ் ஸ்டாண்டு வரைக்கும் பழம பேசுனாலும் அந்த வண்டி புறப்படுறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னாடி "கண்னு!நேரம் நேரத்துக்கு சாப்பிடு!நல்லாப் படி!கோடி வீட்டு கண்ணாத்தாள கேட்டதாச் சொல்லு! இந்த மாதிரி குசலம் பேசிக்கிற சுகமே தனிதான்.
நானும் பழைய பழக்கத்துல அனைவருக்கும் டாட்டா சொல்லி சந்திராயனுக்குள் போகலாமுன்னு வாசல் கதவை நெருங்கியதும் அதுசரியிடம் "நமிதாவ நல்லாக் கவனிச்சுக்கங்க!இப்ப வேதாளம்,விக்கிரமாதித்தன்,நமிதா கெட்டப்புல பார்க்க நல்லாவே இருக்கீங்க!இருந்தாலும் துளசி டீச்சர் கிட்ட சொல்லி ஒரு நாய்க்குட்டியும் கூட்டத்துல சேர்த்துகிட்டீங்கன்னா அந்தக்காலத்து ரஞ்சன் மாதிரி காடு,மலைன்னு சுத்திப் பாட்டு பாடிகிட்டே கதை சொல்லலாம்!நான் ஊருக்குப் போய் சேர்ந்ததும் கடுதாசி போடறேன்"என்று சொல்லி விட்டு சந்திராயனுக்குள் நுழைந்தேன்.சந்திராயன் என்னை முதலாம் பாகம் துவக்கம் கொல்லைப்புறத் தோட்டம் நோக்கி பயணித்தது.

சும்மா சொல்லக்கூடாது சந்திராயனை.ஆள் இல்லாம உட்கார்ந்த இடத்துல இருந்துகிட்டே இம்புட்டு தூரப் பிரயாணம் போறது சாதனைதானே!ன்னு வியப்பில் ஆற அமர்ந்து கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தால் எனது கோர்வையில்லாத சிந்தனை மனித குல வளர்ச்சி பற்றி Bigbang தியரிலிருந்து ஆரம்பிச்சு மனிதகுல துவக்க நியாண்டர்தால் மனிதன் துவங்கி மனிதனின் முதல் கண்டு பிடிப்புக்களாய் நெருப்பின் உபயோகம்,கூடவே தெய்வம் கொள்கைப் பரிணாமம், காடு மேடா அலைந்ததில் மிதமிஞ்சிய நிலைக்கு வந்து விட்டதாலும்,காட்டு வாழ்க்கை மாறி நீர் நிலங்கள் தேடி குடியேற்றம்,நீர் நிலம் அக்கம் பக்கத்து தனது இன வளர்ப்பு வாழ்க்கை பிடித்து மொகஞ்சோ தாரா,ஹரப்பா,சிந்து சமவெளி சுமேரியா நாகரீகம்,திராவிட ஆரிய,எகிப்திய,ரோம் நாகரீகம், போர்க்குணம் ரத்தத்தின் அணுக்களில் துவங்கிய வாழ்க்கை மண்,பெண்,பொன் என்று பரவல்,நிறம்,மொழி,பழக்க வழக்கங்களில் துவங்கி தேசங்கள் உருவாக்கம்,தேசங்கள் உருவானதும் அதன் விரிவாக்கம் என போர்கள்.






இது வரை பார்த்ததில் கண்ணுக்குத் தெரியாத அல்லது இல்லாத சில விசயங்கள்,கோட்பாடுகள் என்னவென்று நோக்கினால் ஜாதிகள்,மதங்கள்,தேச எல்லைகள் என்ற மனக்கோடுகள்.ஆனால் மனித குலத்தை ஆக்கிரமிக்கும் செயல் வடிவங்களாய் இவைகளே முன்னிற்கின்றன.ஒருவேளை இதுவரை சென்ற நமது பயணங்களின் தூரங்களில் இவைகள் இனிவரும் காலத்தில் பொய்ப்பிக்கப்படலாம்.

யுகங்களின் மாறுதல்களில் இனி வரப்போகும் மாறுதல்கள் யாரரிவார்?இத்துடன் அண்டங்கள் அடங்கிய மேல் நோக்கிய மேக்ரோ பயணம் நிறைவடைகிறது.இத்துடன் சுபம் போட்டு விட்டு விடுவேன் என்று பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கும் பெருந்தகைகள் வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....