Followers

Sunday, March 15, 2009

ஓட்டு பார்க்க நேரமாயிடுச்சு

சிலேட்டுக் குச்சி,பென்சில்,பேப்பர்,பேனான்னு இருந்தா வரும் விரக்திக்கு டபால்ன்னு வீசிட்டு போயிடலாம்.கணினில அதுவும் அலுவல்காரனடையத தூக்கி எறிஞ்சா முதுகில டின்னு கட்டி இருக்கிற இருப்புக்கு ரீசெசன்னு வீட்டுக்கு அனுப்பி விடுவான்.

ஒபாமா மாற்றங்கள் வேண்டும் கோசம் போட்டே ஜெயிச்சிட்டாரு.ஈழ அதிர்வுகளில் தமிழகமும் அரசியலில் மாற்றம் பெறும்ன்னு பதிவு தலைகள் எல்லாம் சொல்றத நம்பிகிட்டு தமிழகத்துல மாற்றம்ன்னா நாமளும் போய் ஒரு முத்திரை குத்திட்டு வரலாமுன்னு மனசுக்குள்ள திட்டமெல்லாம் இருந்துச்சு.நினப்புதான் பொளப்பக் கெடுக்கும் கண்ணு ஒழுங்கா வேலையப் பார்ன்னு உள்ளுக்குள்ளிருந்து வேற எவனோ கத்துறான்.

நடப்பு அரசியல்ல தலைகள் அவுகளுக்குன்னு ஒரு கணக்கு வச்சிருக்காக.இதெல்லாம் தெரியாம பழமையண்ணன் வேறு நொய்யலாற்று கணக்கு,வித்தைக்காரன் கணக்குன்னு அவரு பாட்டுக்கு விடை கேட்டுகிட்டுத் திரியறாரு.

மூணாவது அணின்னு புதுசா சிலபேரு கிளம்பியிருக்காக.போன முறை தமிழக எலெக்சனுக்கு ஹாட் மச்சின்னு பேரு சொல்லி பதிவருக ஊடு கட்டி விளையாடுனாக.ரெண்டு மூணு வருசம் கழிச்சி அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தா கடைசி பதிவு 2006ல தூங்கிட்டிருக்குது.ஹாட் மச்சி பதிவர்கள் திருந்திட்டாங்க:)

தி.மு.க,காங்கிரஸ் கூட்டணில விசயகாந்துக்கு வெத்தலை பாக்கு வச்சிருக்காகளாம்.கலஞரு பா.ம.க லருந்து யாரும் எட்டிப் பாக்கலேங்கிறார்.மருத்துவரு அங்கிருந்து யாரும் கூப்பிடலேங்கிறார்.கண்ணசத்துதேன்னு கண் மூடி திறந்தா காங்கிரசுலருந்து ப.ம.கவுக்கு டீ குடிக்கலாம் வாங்கன்னு அழைப்பு வந்திருக்காம்.சாயந்திரமா பார்த்தா கலஞரு திருமாவளவன் எங்க கூடத்தான் கூட்டு.அதனாலதான் அவர உள்ள தள்ளாம விட்டு வச்சிருக்கோம்ங்கிறாரு.அந்தப் பக்கம் பார்த்தா வை.கோ கண்ணப்பன காணோமுன்னு தேடிகிட்டு இருக்கிறாரு.தமிழுக்காரன் எதச் சொன்னாலும் நம்புறாங்கப்பான்னு செயலலிதா திடீர் உண்ணாவிரதம் இருந்திட்டாங்க.முட்டையடியும்,மொட்டைத் தலைகளும் சத்தத்தைக் காணோம்.

குருட்டுப் பார்வை பார்க்காம பதிவுக்காரங்களுக்கு அது சரி இது தப்புன்னு சரியாவே தெரியுது.இருந்தாலும் பதிவு வட்டத்தை தாண்டி பல்லாங்குளி ஆட முடியறதில்லை.வெண்ணிலா கபடிக் குழுவுல நல்லா ஆடுறவன் கைய முறிக்கிற மாதிரி வக்கீலுக மண்டைய உடச்சி இப்ப தி.மு.க வக்கீலு,காங்கிரஸ்கார வக்கீலுன்னு ஒற்றுமையக் களச்சாச்சி.குரலு விட்டவனையெல்லாம் பாதுகாப்பு சட்டத்துல பாதுகாப்பா வச்சாச்சி.இதெல்லாம் தெரியாம பதிவருக காங்கிரசுக்கு ஆப்பு,கலஞருக்கு மூப்பு ன்னு என்னென்னமோ புலம்புறாங்க.நல்ல நாள்லயே ஓட்டு போடாம ஊட்டுல தூங்கிற கேஸுக நிறைய இருந்துச்சு.இப்ப இருக்கிற நாட்டு நடப்புல சொல்லிக்கவே வேணாம்.

என்னமோ போங்க தமிழ்நாட்டு அழிச்சாட்டியம் தாங்காம பாகிஸ்தான் தமாசுகளைப் பார்த்தா சர்தாரிக்கும் நவாசுக்கும் நாற்காலி சண்டை.இருக்கிற கிச்சு கிச்சு பத்தாதுன்னு மும்பாய் குண்டுவெடிப்புல துவங்குன பிரணாப் பாகிஸ்தான் அறிக்கைகள் வேறு இன்னும் ஒய்ந்தபாடில்லை.

அடுத்த பிரதமரு யாருங்க?மன்மோகன் சிங்கா?எனக்கு லீவு வேணுமுன்னு நேத்தைக்கு சொல்லிட்டாரு.அப்ப ராகுல்?இல்ல அத்வானியா?ஜெயிச்சா லேப்டாப் தருவேன்ங்கிறாரு.அஸ்க்,புஸ்க் தமிழ்நாட்டுல தேறணுமே!மூணாவது அணில மாயாவதி விருந்துக்கு கூப்பிட்டுருக்காக!எதுக்கு?அவருக்கு பிரதமர் குர்ஸி வேணுமாம்.

யாரங்கே அலறுவது?குண்டுச்சத்தம் கேட்குதா?செத்த பிறகு வந்து அச்சச்சோ சொல்லுகிறோம்.எங்களுக்கு ஓட்டு பார்க்க நேரமாயிடுச்சு.

6 comments:

அது சரி said...

இந்த வாரம்...இப்படி!ன்னு செய்தி சுருக்கம் வாசிச்ச மாதிரி நல்லா இருக்கு :0))

அது சரி said...

//
குருட்டுப் பார்வை பார்க்காம பதிவுக்காரங்களுக்கு அது சரி இது தப்புன்னு சரியாவே தெரியுது.
//

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே??

ராஜ நடராஜன் said...

அது சரி!என்னோட புலம்பல் செய்தி வாசிச்ச மாதிரி இருக்குதாக்கும் உங்களுக்கு:)

ராஜ நடராஜன் said...

//என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே??//

அது சரி இது தப்புன்னு தெரியறதுலதான் பதிவ விட்டு பல்லாங்குளி ஆடமுடியறதில்லைங்கண்ணா.காமெடியாவது கீமெடியாவது.

நசரேயன் said...

நான் துண்டு போட ஓடிவந்தா, நீங்க குண்டு போடுறீங்க

ராஜ நடராஜன் said...

//நான் துண்டு போட ஓடிவந்தா, நீங்க குண்டு போடுறீங்க//

வெள்ளை துண்டு காட்டுறாங்க!குண்டு போடாதீங்கன்னுதான் நான் சொன்னேன்.