வேக வேகமாக ஒரு பதிவு போட்டே ஆக வேண்டும்.காரணம் கோவையைப் பொறுத்த வரையில் தமிழக அரசியல்வாதிகள் ரொம்ப ரொம்ப நல்லவங்க.மக்களின் மனம் அறிந்தோ அல்லது அரசியல் சதுரங்கத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி திரும்ப தன் நிலைக்கு திரும்புவது மாதிரி அரசியல் அந்தர் பல்டிகள் அடித்தாலும் நிலைகளை சீர்தூக்கி இந்த முறை கோவை மக்களை குழப்ப வேண்டாமென்றோ அல்லது தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே ஆராய்ந்தோ பெருந்தன்மையாக தி.மு.கவும் அ.தி.மு.க ,ம.தி.மு.க ,பாட்டாளி,திருமா என தேர்தல் களத்தில் எவரும் இல்லை.
எனவே கோவை வாக்காளர்களுக்கு சரித்திரத்தில் சேர்ந்து கொள்ள ஒரு அறிய வாய்ப்பு 49ஓ.
ஜனநாயகம் என்பதே மக்களின் உணர்வுகளை மதித்து அதன்படி ஆட்சி செய்வது.அதற்கான சாத்தியங்களில் நம்பிக்கை இழக்கச் செய்கிறது தற்போதைய தமிழக அரசியல் களம்.கோவையில் களத்தில் இருப்பவர்களும் 49 ஓ போட துணை புரிபவர்கள் போலத்தான் தெரிகிறது.பரிட்சித்துப் பார்க்க அறிய வாய்ப்பு.கோவை வாக்காளர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது.ஒன்று பதிவுகளிலும்,தமிழகத்திலும் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளை தேர்தலில் வெளிப்படுத்தி வருங்கால அரசியலுக்குப் பாடமாக 49 ஓ போடுவது. இயலாது போயின் டெபாசிட் இழக்கச் செய்வது. பொறுப்பு கோவை வாக்காளர்களைச் சார்ந்தது.
------------------------------------------------------------------------------------------------
பதிவர் பரக்கத் அலிக்கு நன்றியும் அவர் அனுமதியுடன் கீழ் கண்ட செய்திகளையும் இணைக்கின்றேன். முழு விபரங்களுக்கு
http://electionbarakath.blogspot.com/2009/04/blog-post_26.html
வாக்காளர்கள்:
மொத்த வாக்காளர்கள்: 11,58,344
ஆண் வாக்காளர்கள்: 5,88,550
பெண் வாக்காளர்கள்: 5,69,794
போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. ஆர். பிரபு (காங்கிரஸ்)
2. நடராஜன் (சி.பி.எம்.)
3. பாண்டியன் (தே.மு.தி.க.)
4. செல்வகுமார் (பி.ஜே.பி.)
அடங்கிய சட்டசபைத் தொகுதிகள்:
1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோவை வடக்கு
5. கோவை தெற்கு
6. சிங்காநல்லூர்
தற்போதைய எம்.பி: சுப்பராயன் (சி.பி.ஐ.)
தற்போதைய எம்.எல்.ஏ.கள்:
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 14 முறை
சி.பி.ஐ: 4 முறை வெற்றி
சி.பி.எம்: 1 முறை வெற்றி
காங்கிரஸ்: 5 முறை வெற்றி
தி.மு.க.: 2 முறை வெற்றி
பி.ஜே.பி.: 2 முறை வெற்றி
---------------------------------------------------------------------------------------
இந்தி எதிர்ப்பு மெட்ராஸில் தோன்றி கோவையில் வேரூன்றியது,உண்மையான திராவிட இயக்கமாக பெரியார் வண்டி கட்டிகிட்டு வந்த இடம்,ஜி.டி ஹால்,சன்மார்க்க சங்க கட்டிடக் கருத்தரங்கு,வானம்பாடிகளின் கவிதை,மரபுகள் மாறாத ஆன்மீக சொற்பொழிவு,உழைப்பாளிகளின் பங்கு என எத்தனையோ கலாச்சார வேர்கள் ஊன்றிய இடம்.எனவே பெரிதாக பதிவை நீட்டி வளர்க்க வேண்டிய அவசியமில்லை.
5 comments:
இந்த இடுகையை வழிமொழிகிறேன்!
வாங்க மணியண்ணா!
வாங்க!வாங்க!ஞானசேகரன்.
49 ஓ ரகசியமாக இட முடியாது என்பது ஒரு குறை.... அதை ரகசியமாக பதிவு செய்ய ஆவனை செய்தால்.... 70% நான் நம்புவேன்..
//49 ஓ ரகசியமாக இட முடியாது என்பது ஒரு குறை.... அதை ரகசியமாக பதிவு செய்ய ஆவனை செய்தால்.... 70% நான் நம்புவேன்..//
இதுவும் ஒரு குறை என்பதுடன் பல பூத்களில் இதற்கான வசதியும் இல்லையென்று பதிவர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment