நறுக்குன்னு நாலு வார்த்த கேட்கும் பதிவர் பாலா ஜெய்ஹிந்த்புரம் பதிவில் போட்ட பின்னோட்டம் ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.
http://jaihindpuram.blogspot.com/2009/04/blog-post_26.html
பாலாவின் வரிகள் அடைப்பானில்.
//மன்னிக்கணும். நொடிச்சி விழுந்தாலும் தன்னம்பிக்கையோட திரும்ப எழுந்து கம்பீரமா நடக்கிறத பாசிடிவா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன். அங்கயே உக்காந்து அழுது யாராவது தூக்கமாட்டாங்களானு இருக்கிறதுதானே இன்றைக்கு இயல்பா இருக்கு.//
தன்னம்பிக்கை என்பது பொதுவாக இந்திய மனப்பான்மையில் இல்லையென்பதற்கும் அது ஒளிந்து கிடக்கிறதென்பதற்கும் ஒரு சின்ன உதாரணம்.
கோவாவில் Flee market ல் மேடான இடத்தில் ஒரு ஹிப்பி உட்கார்ந்திருந்தான்.அவனுக்கும் கீழே கைக்கெட்டும் தூரத்தில் ஒரு சின்னப் பாறையும் மேடும்.கொஞ்சம் தூரத்தில் கடற்கரை மணலும் கடல் அலையும்.
கடற்கரைப் பக்கமிருந்து வந்த ஒரு நடுத்தர இந்தியர் நடந்து வந்து பாறைக்கு அருகில் வந்ததும் மேடு மேல் ஏறி வருவதற்கு கொஞ்சம் தயங்கினார்.அருகில் இருந்த ஹிப்பியிடம் கையை நீட்டி உதவி கேட்டார்.ஹிப்பி சொன்னான் " your legs and hands are alright.climb up and come " என்றான்.வேறு வழியில்லாமல் இந்தியர் கொஞ்சம் சிரமப் பட்டு மேலே வந்து விட்டார். உனக்கு நீயே உதவி என்ற மனப்பான்மையினால்தான் cliff hanging (தமிழென்ன!யாராவது உதவுங்களேன்)கூட மேலை நாட்டில் சாத்தியப் படுகிறதென நினைக்கிறேன்.
10 comments:
யாராவது நுண்ணரசியல் பேசுவதற்கு முன்பே ஒரு பின்னூட்டம் போட்டு விடுகிறேன்.
ஹிப்பி சின்ன வயசுக்காரன்.எனவே ஒருமை.இந்தியர் கொஞ்சம் வயதானவர். எனவே " ர் "
தன்னம்பிக்கையை மட்டுமல்ல,நாம் நமது மூதாதையர்களின் பல நல்ல இயல்புகளை இழந்து விட்டோம்.அவர்களின் தவறுகளை மட்டும் பிடித்துக் கொண்டோம்.
//தன்னம்பிக்கையை மட்டுமல்ல,நாம் நமது மூதாதையர்களின் பல நல்ல இயல்புகளை இழந்து விட்டோம்.அவர்களின் தவறுகளை மட்டும் பிடித்துக் கொண்டோம்.//
வாங்க சார்!இலக்கியம் படிக்கவும் இருப்பிலக்கியம் புரியவும் கடந்து வந்த தூரங்கள் அதிகமாகப் போய்விட்டது என்பதில் சந்தேகமில்லை.அதே நேரத்தில் மாறுதல்களுடன் நாமும் மாறுகிறோம் என்ற பார்வையிலும் வாழ்வியலைப் பார்க்கவேண்டியிருக்குது.
ராஜநடராஜன் அருமையான பதிவு
நானும் ஏதாவது சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அது உங்கள் முதல் பின்னூட்டம் போல யாராவது தவறாக புரிந்து கொண்டால் என்ற பயத்தை தருகிறது..எனவே...
//ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.//
ஒரு இடுகையாக இடத் தூண்டியது...
இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். இந்தியர்கள் ஒரு வேலையை தானே தனியாக முடிக்க நினைப்பதில்லை. முடிந்த வரை ஒரு வேலையை பிறரிடம் பகிர்ந்தே செய்ய நினைக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்லது கூட.They are good team player.மிக கடினமான வேலை வரும் போது எளிதாக 2- 3 பேர் உடனடியாக இணைந்து வேலை செய்யும் போது ஒத்ததிர்வு விளைவு (resonance effect)ஏற்பட்டு கடின வேலையும் எளிதாக முடிகிறது. பிறரிடம் உதவி பெருவது போல் பிறருக்கு உதவி செய்யவும் தயங்குவது இல்லை.கணிபொறி துறையில் இது போல் நல்ல புரிந்து கொண்ட நண்பர்கள் இணைந்து வேலை பார்க்கும் போது உண்மையிலேயே ஒரு சில வேலைகள் நம்ப முடியாதபடி விரைவில் முடிவதை பார்த்துள்ளேன்
//நானும் ஏதாவது சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அது உங்கள் முதல் பின்னூட்டம் போல யாராவது தவறாக புரிந்து கொண்டால் என்ற பயத்தை தருகிறது..எனவே...//
கிரி!ரொம்ப உசாரத்தான் இருக்கிறீங்க:)
//ஒரு இடுகையாக இடத் தூண்டியது...//
மணியண்ணா!உங்க மாதிரி தமிழ் புலமை இருந்தா தினமுன் ரெண்டு பதிவாவாது போட்டு கூட்டத்த சேர்த்திடலாமே!
நானெல்லாம் எம்புருஷனும் கச்சேரிக்கு கூட்டம்:)
//இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். இந்தியர்கள் ஒரு வேலையை தானே தனியாக முடிக்க நினைப்பதில்லை. முடிந்த வரை ஒரு வேலையை பிறரிடம் பகிர்ந்தே செய்ய நினைக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்லது கூட.They are good team player.//
Is it one more dimension of positive thinking?Nice to learn a new approach.
நன்றி. பின்னூட்டத்தால ஒரு நல்ல இடுகை கிடைச்சது. இது கூட ஒரு வித்தியாசமான பயனா இருக்கே.
Post a Comment