Followers

Sunday, May 3, 2009

பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

திரு.(யோ.திருவள்ளுவர்) சார்லஸ் ஆன்டனிக்கு என்ற இடுகையை ஆங்கிலத்தில் தந்து விட்டு இதனை யாராவது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தால் நல்லது என்று கூறியிருந்தார்.மொழி வல்லுனர்கள் யாராவது ஆங்கிலத்தின் சாரத்தை தமிழில் மொழிபெயர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இதுவரை யாரும் முன்வராத காரணத்தாலும்,ஆங்கில மூலம் அழகாக இருந்ததாலும் ஆங்கில எழுத்துக்களை எனது புரிதலோடு தமிழ்படுத்துகிறேன்.ஆங்கில மூலம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டியது
http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

இலங்கையில் ஈழம் தமிழர்களின் சாவும் அவர்களது வாழ்ந்த மண்ணின் அழிவும் கண்டு அதன் தூண்டு கோலாக சீக்கிய எழுத்தாளர் ஜெக்மோகன் சிங் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆன்டனிக்கு ஒரு பகிரங்க கடிதமொன்று எழுத அமைந்தது.நாகரீக சமூகத்தின் அனைத்து நாட்டவர்கள் தமிழ் போராளிகளுக்கும்,மக்களுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறார் இந்த எழுத்தாளர். அவரது பகிரங்க கடிதம் கீழே:

அன்பின் சார்ல்ஸ் ஆன்டனி,

வாழ்வுக்கான போராட்டம்,தனித்துவம்,சுதந்திரப் போராட்டத்துக்கான எனது பங்களிப்பை தயவு செய்து பெற்றுக் கொள்ளவும்.

பஞ்சாப்புக்கான போராட்டத்தை அருகில் இருந்த பார்த்த சாட்சியின் காரணமாக நீங்களும் உங்கள் மக்களும் எதற்காக வாழ்வுக்கான ஒரு போரை நிகழ்த்துகிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஊடகங்களில் உங்கள் அப்பா-வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பன்,அடுத்த நாள் எதிரி.ஒரு நாள் அவர் பாதுகாக்கப்பட்டார்.இன்று அவர் தேடப்படுகிறார்.சிலருக்கு அவர் தீவிரவாதி.பலருக்கு அவர் பாதுகாவலன்.யார் அவர் என்பதை சரித்திரம் தீர்மானிப்பதற்கு விட்டு விடுவோம்.

நான் ஒரு போராளி இனத்தைச் சார்ந்தவன்.சீக்கியர்கள் போராளிகளை நண்பர்களாக பாவிக்கிறார்கள்.பஞ்சாபில் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாயைத் திறந்து துணிச்சலான அறிக்கைகள் விடாவிட்டாலும்,நம்புங்கள் என்னை,பலர் ஈழ தமிழ் போராளிகளின் போராட்ட உறுதியையும்,உத்வேகத்தையும் வியக்கிறார்கள்.செய்திகளில் காணும் தற்போதைய உங்கள் போராட்டத்துக்கான வீழ்ச்சி பலருக்கும் சோகத்தையே உருவாக்குகிறது இங்கே.

உங்கள் மக்கள் ரசாயன ஆயுதங்களாலும்,விஷ வாயுக்களாலும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபக்க துப்பாக்கி சூட்டில் அகப்பட்டுக் கொண்டும்,சில மணி நேரங்களே தப்பிக்க இருக்கும் கணத்தில் இந்த கடிதம் எனது தார்மீக ஆதரவை உங்களுக்கு அளிக்கிறது,

தமிழ் ஈழம் மக்களின் அவலங்களால் நான் சோகம் கொள்கிறேன்.பெண்கள்,குழந்தைகளின் துயரப் புகைப்படங்கள் மலையையும் அசைய வைக்கும். சோகத்துடன், ஆனால் அப்படி ஆகவில்லை.அனைத்து உலகமும்,24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களும் வலி,வேதனைகளை தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போய் விட்டது.

தங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு ஓடுவதற்கு பலாத்காரமான அனைத்து ஆண்,பெண்,குழந்தைகளுக்கும் எனது இதயம் புலம்புகிறது முக்கியமாக தமிழீழம் போராளிகளுக்காக.இப்படி எழுதுவதால்,எனது எழுத்துக்கள் எனது உள்மனதின் உணர்வுகள் மட்டுமே என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.ஒரு சீக்கியனாக நான் உங்களது போராட்டத்தில் கலந்திருக்கவேண்டும்.எனது வேண்டுதலும் நல்வாழ்த்துக்களும் உங்களுடன் இருக்கட்டும்.தமிழீழத்தைப் பொறுத்த வரையில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் இருந்தபோதிலும்,உலக நிறுவனங்களும்,உலக சமுதாயமும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்களையும்,அவலங்களையும் துடைப்பதற்கான செயலில் தவறிவிட்டார்கள்.சீக்கியர்கள்,காஷ்மீரியர்கள்,வடகிழக்கு மக்களை கீழ்மைப் படுத்தியது போல் இலங்கை அரசாங்கமும் பகல்வெளிச்சத்து கொலையிலும்,சூறையாடலிலுமிருந்து தப்பித்துக் கொள்கிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தெருக்களில் போராடி ஐரோப்பிய தலைநகரங்களை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவது காண மகிழ்ச்சியாக இருக்கிறது.முக்கியமாக நார்வே தலைமையிடம் குரல் எழுப்பியதில் மனக்கிளர்ச்சியுறுகிறேன்.நார்வே புலம்பெயர் தமிழ் மக்கள் ஓஸ்லோவில் நார்வே பிரதம மந்திரியை முற்றுகையிட்டதை செய்திகளில் படித்தேன்.உலகநாடுகளின் வளர்ச்சிக்கான நார்வே மந்திரி எரிக் சொல்ஹைய்ம் " நார்வேயில் வாழும் தமிழர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் என்னால் அற்புதங்களை ஏற்படுத்த முடியாது" என்று சொன்னதாக அறிந்தேன்.

எரிக்சொல்ஹைய்ம் நார்வே நாட்டு அரசாங்கத்திற்கான NRK தொலைக்காட்சி ஊடகத்திற்கான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது " என்னால் குரல் எழுப்பும் தமிழர்களிடம் பேச முடிகிறது.நான் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைகளிடம் இலங்கையில் போரை நிறுத்த இயலுமா என பேசி பார்க்கிறேன்" என்றார்.இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்."ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது".

ஸ்காண்டிநேவியா நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதில் உறுதியும் ஆற்றலுமுடையவர்கள்.அதனால்தான் உங்கள் தலைமை நார்வேயை இருதரப்பின் பேச்சாளராக தேர்ந்தெடுத்தது.ஆனால் அரவிந்தம் தலையில் ஆணி அடித்தது மாதிரி சொன்னார் " நார்வே மையப் புள்ளியை தவறவிட்டு விட்டது.சமாதானத்துக்கான இரு தரப்பின் சார்பில்லாத அங்கமாக இருக்கும் நிலையில் எல்.டி.டி.இ யினை ஆயுதங்களை களையுமாறு சக நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்களுடன் கூடி அழுத்தம் தருவது முறையல்ல.இலங்கையின் இனப்படுகொலையின் கரங்களில் வன்னி மக்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை இதை விட கவலைக்குரியது.படிப்படியான இவர்களின் தோல்வியால் நார்வேகாரர்கள் அனைத்து உலக மத்தியஸ்தம் பேசும் எண்ணத்திற்கே தோல்வியை கொண்டு வந்திருக்கிறார்கள்.தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இன்னும் கூட நேரமிருக்கிறது,பூகோள அரசியல் குறிக்கோளர்களின் உடந்தையாக இல்லாமல் உலக மனித நாகரீகங்களுக்கு தங்களை உட்படுத்துவார்களேயானால் ".

நேரடியாகவும் மறைமுகமாகவுமான இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசின் அளவிடா அதிகாரத்தின் கால்களின் கீழ் தமிழீழ மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.ஈழ தமிழர்களுடனான இயற்கையான தமிழ்நாட்டு சகோதர உறவும் அலட்சியப் படுத்தப் பட்டுள்ளது.13 தமிழ் சகோதரிகளும் மேலும் பலரும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்கள் உங்களுக்கு ஆதரவாக,ஆனால் ஊடகங்களும்,அரசாங்கமும் இதுபற்றி கவனிக்கிறார்களா?முக்கியமாக நாடே தேர்தல் கள நிலையில் இருக்கும்போது.

தூரத்திலிருந்து நோக்கினால் அனைத்து தமிழர்களின் நிலைப்பாட்டில் தமிழக தலைமை ஏமாற்றுவதாகவும் உண்மையில்லாததுமாக இருக்கிறது.உங்கள் ஈடுபாடுகளை அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனக்கு,தமிழ் தலைமையைப் போலவே இந்திய தலைமையும் உங்களுடனும் உங்கள் குறிக்கோள்களுடனும் சாணக்கியர்களாக விளையாடுகிறார்கள் எனவே படுகிறது.வெற்றிகரமாக கூட.இந்தியா உங்கள் பகைவனா அல்லது நண்பனா என உலகால் புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா இந்த மாதிரி இரட்டைவேடம் போடவே செய்கிறது.இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது,இருந்தும் அமைதியான முகத்தை காட்டுகிறது.

நான் போர் விமர்சகனல்ல.ஆனால் நார்வே அமைதிப் பேச்சு நடந்த போது,உங்கள் மக்களின் போராட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது.நிச்சயமாக அப்பொழுது உங்கள் தலைமைக்கு நடைமுறைக் காரணங்கள் இருந்திருக்குமென நம்புகிறேன்.ஆனால் இந்த மாதிரியான சமாதானப் பேச்சு வார்த்தைகள் நம்பகத்தன்மையில்லாத விதிமுறைகளை மீறிய அரசுக்கு ஆயுதங்களை சேகரித்து மேலும் பல சாவுகளை உருவாக்கவும் அழிவுகளை உருவாக்கவே உதவியது.இந்தியாவும் சீக்கியர்கள்,காஷ்மீரிகள்,நாகா,மிஷோ வுக்கும் இதனையே செய்தது.9/11 க்கு பின்னால் மாற்றமடைந்த பூகோள அரசியல் நிலைகள் கூட நார்வேஜியன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது.

கடந்த வருடம் இந்த நேரத்தில் கொசோவொ ஒரு புதிய நாடாகப் பிறந்தது.அதற்கும் முந்தைய ஆண்டு,தைமூர் லியஸ்ட் சுதந்திரம் அடைந்தது.2009 தமிழ் ஈழத்துக்கு சொந்தம் என நினைத்தேன்.எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை இருக்கிறது இந்த வருடத்தில் ஏற்படாதென்ற போதிலும்.உங்கள் போராட்டம் இறுதி வடிவில் இருக்கிறதென்ற எண்ணம் உலகம் பூராவும் இருக்கிறது.

உண்மைகள் பாதிக்கபடுவதாலும் உண்மைகள் சரியாக வெளிப்படாத நிலையிலும் எனது முழு நம்பிக்கை அப்படியிருக்கக் கூடாதென்பது.உங்கள் போராட்டம் தொடர வேண்டும்.புரட்சி சுதந்திரம் என்ற கொடியை நீங்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க அட்டார்னி ஃப்ரூஸ் பெய்ன்,அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பச்சை அட்டை வைத்திருக்கும் ஜெனரல்.பொன்சேகாவின் மனித உரிமைக் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பது எனது முழு நம்பிக்கை.நியுயார்க்கை அடிப்படையாகக் கொண்ட இனப்படுகொலை தடுப்பு அமைப்பு இனப்படுகொலை நிகழும் எட்டு நாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறது,அதில் இலங்கையும் ஒன்று. உங்கள் மண்ணில் நிகழும் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி உலகுக்கு வெளிப்படுத்தும் என நம்புவோம்.

பாதுகாப்பு சபையில் கூட ஐ.நாவுக்கான மெக்ஸிகோ தூதர் க்ளாட் ஹெல்லன் தனது நாட்டின் ஜனத்தொகையை பாதுகாக்கும் பொறுப்புக்கான தீர்மானத்தை கொண்டுவருவதில் கூட சிறிய நம்பிக்கை ஏற்படுகிறது.

அன்பின் திரு.சார்ல்ஸ்,தெற்காசிய பூகோளத்தை மாற்ற நினைப்பவரின் மகனாக இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன்.எனது தரப்பிலிருந்து இதனைச் சொல்ல விரும்புகிறேன் கொசவோ சுதந்திரம் வெற்றியடைந்த போது " சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் சொன்னபடி, "சுதந்திரத்தை யாரும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.யாருக்கு தேவையோஅவர்கள் தங்களது உறுதியாலும்,பலத்தாலும் அதைப் பெற வேண்டும்". விரைவாகவோ,தாமதமாகவோ நீங்கள் அதைப் பெறுவீர்கள்.

நீங்களும்,உங்கள் மக்களும் உங்களது வாழ்நாளிலேயே சுதந்திரத்தை ருசிப்பீர்கள் என வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களின் மீது தனது ஆசிகளை தூவவும் அவர்களது துயரங்கள் முடிவுக்கு வரவும் உலகின் முன் சுதந்திர மனிதர்களாக உயர்ந்து நிற்கவும் துணைபுரிவாராக.

உண்மையுடன்
ஜெக்மோகன் சிங்

குறிப்பு: இந்த எழுத்தாளர் லூதியானா,பஞ்சாப்பில் வசிப்பவர்.அவரை அணுகவேண்டிய முகவரி jsbigideas@gmail.com

6 comments:

பழமைபேசி said...

அண்ணா, மூலம், மொழியாக்கம் ரெண்டுக்குமே நன்றிங்க அண்ணா!

ராஜ நடராஜன் said...

//அண்ணா, மூலம், மொழியாக்கம் ரெண்டுக்குமே நன்றிங்க அண்ணா!//

நன்றியை திரு.(யோ.திருவள்ளுவர்)க்கும் சொல்லுங்கள்.தமிழ்மணத்திற்கு கொண்டு வந்தது அவர்தான்.

thevanmayam said...

சப்பை மேட்டர்ன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன்.குப்பை மேட்டர் கூட இருக்குதாங்க?///
பின்னூட்டத்துக்கு நன்றி!!

thevanmayam said...

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தெருக்களில் போராடி ஐரோப்பிய தலைநகரங்களை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவது காண மகிழ்ச்சியாக இருக்கிறது.முக்கியமாக நார்வே தலைமையிடம் குரல் எழுப்பியதில் மனக்கிளர்ச்சியுறுகிறேன்.நார்வே புலம்பெயர் தமிழ் மக்கள் ஓஸ்லோவில் நார்வே பிரதம மந்திரியை முற்றுகையிட்டதை செய்திகளில் படித்தேன்.உலகநாடுகளின் வளர்ச்சிக்கான நார்வே மந்திரி எரிக் சொல்ஹைய்ம் " நார்வேயில் வாழும் தமிழர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் என்னால் அற்புதங்களை ஏற்படுத்த முடியாது" என்று சொன்னதாக அறிந்தேன்.
///
நல்ல மொழிபெயர்ப்பு நண்பரே!!
தொடருங்கள் பணியை!!

ராஜ நடராஜன் said...

//இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்."ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது".//

இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்."ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது".

உங்கள் வருகைக்கு நன்றி தேவா சார்.

பாலா... said...

/திரு.(யோ.திருவள்ளுவர்) சார்லஸ் ஆன்டனிக்கு என்ற இடுகையை ஆங்கிலத்தில் தந்து விட்டு இதனை யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் நல்லது என்று கூறியிருந்தார்./

தமிழில் என்று திருத்தவும். மொழிபெயர்ப்பு அதே வீச்சுடன் இருக்கிறது. பாராட்டுக்கள்