Followers

Thursday, May 14, 2009

போர் நிறுத்தம் செய் - ஒபாமா

பல மக்களின் பட்டினி,மனித உயிர்ப்பலியென இலங்கை அரசின் இனப்படுகொலைகளின் உச்சத்தில் ஈழ மக்களின் அவலங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை எட்டியிருக்கிறது.மாறுதலுக்கான குரலாக வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் குரல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

தமிழகத்திலிருந்து தமிழனாக நாம் குரல் எழுப்பியும் (எதிர் குரல் எழுப்பியும்) இது வரை ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்ய இயலவில்லை.ஆனாலும் குரல் எழுப்பும் தமிழா!துவண்டு விடாதே!ஈழக் கனவு இப்பொழுதுதான் சரியான பாதையை நோக்கி நடைபோடுகிறது. இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது இன்னும் சில நாட்கள் ஆட்சி செய்யும் அரசால். ஈழம் புலம் பெயர் மக்களின் குரலால் மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமானக் குரலுக்கு ஏங்கி நிற்கிறது. ஒபாமா போன்ற மாறுதல் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள மனிதர்களிடமிருந்து நம்பிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவே
யுத்தத்திற்காய் நேற்று ஓர் போய் செய்தாய்
மனிதாபிமானத்திற்கு இன்று ஒரு குரல் கொடு

நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்.

மனித நேயம் காட்ட எலும்பும் தோலுமாய்
ஈழத்தமிழன் கையேந்துகிறான்.

போர் நிறுத்தம் செய்.

ஒபாவின் குரல் காணொளி தகவலுக்கு
http://enathu-pathivukal.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form

இடுகைக்கான ஆக்கத்தை தந்த பதிவுகள் பதிவருக்கு எனது நன்றி.

15 comments:

கவிதா | Kavitha said...

//இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது//

ம்ம்ம்.... :((( விஜய் டிவி யில் ஒரு குடும்பத்தின் அழுகையை பார்த்தேன்.. தாங்கமுடியவில்லை. .எத்தனை ஆயிரம் உயிர்கள் இப்படி அங்கே.. :((((

ராஜ நடராஜன் said...

////இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது//

ம்ம்ம்.... :((( விஜய் டிவி யில் ஒரு குடும்பத்தின் அழுகையை பார்த்தேன்.. தாங்கமுடியவில்லை. .எத்தனை ஆயிரம் உயிர்கள் இப்படி அங்கே.. :((((
//

மாறுதல் குரலோனின் குரலால் மாறுதல்கள் உருவாகிறதா எனப் பார்க்கலாம்.

jackiesekar said...

நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்.//

எதையாவது செய்து போர் நிறுத்தம் செய்தால் மகிழ்ச்சி...

கிரி said...

//நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்//

நல்லா சொன்னீங்க.. பார்ப்போம் என்ன ஆகிறது என்று

ராஜ நடராஜன் said...

//நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்.//

எதையாவது செய்து போர் நிறுத்தம் செய்தால் மகிழ்ச்சி...//

வாங்க ஜாக்கி!எல்லோரும் வேண்டுவது போர் நிறுத்தம் மட்டுமே இப்போது.

ராஜ நடராஜன் said...

//நல்லா சொன்னீங்க.. பார்ப்போம் என்ன ஆகிறது என்று//

வாங்க கிரி!ஒபாமாவின் குரல் நம்பிக்கையைத் தருகிறது.ஒபாமா விடுத்த வேண்டுகோளையும் மீறி இலங்கை அரசு செயல்படுமென நான் நினைக்கவில்லை.மீறி செயல்படுமானால் அதற்கான மேல் அழுத்தங்களை கொடுப்பது இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து கவனித்து வரும் அனைவரின் கடமை.

(நேற்று உங்கள் பதிவு,சிவா போன்றோரின் CNN குறித்த ஓட்டளிப்பு பதிவுகள் கூட ஒபாமாவின் குரலுக்கு காரணமாக இருக்கலாம்:)

(Whatever happens in whitehouse will end in CNN and Vice Versa)

Suresh Kumar said...

ஈழ தமிழர்களுக்காக ஒபாமாவின் குரல் ஒலித்தது வரவேற்க தக்கது . அது வெறும் குரலாக இல்லாமல் செயலாக இருக்கட்டும் . இந்தியாவிலும் புதிய அரசு அமையும் அதுவும் நல்ல மாற்றங்களை கொண்டதாக் இருக்கும்

Anonymous said...

ஒபாமா பின்வருபவற்றையும் கூறியுள்ளார்.
So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

ராஜ நடராஜன் said...

//ஈழ தமிழர்களுக்காக ஒபாமாவின் குரல் ஒலித்தது வரவேற்க தக்கது . அது வெறும் குரலாக இல்லாமல் செயலாக இருக்கட்டும் . இந்தியாவிலும் புதிய அரசு அமையும் அதுவும் நல்ல மாற்றங்களை கொண்டதாக் இருக்கும்//

காங்கிரஸ் தவிர்த்து பி.ஜே.பி அல்லது மூன்றாம் அணிகள் மட்டுமே இப்போதைக்கு கொஞ்சம் நம்பிக்கை.அதுவும் பூரணமாக வெளிநாட்டு கொள்கைகளை வகுக்கும் என்று சொல்லி விடவும் முடியாது.

தற்போதைக்கு நம்பிக்கை தரும் ஒரே விசயம் புலம் பெயர் மக்கள்,மலேசிய தமிழர்கள் போன்றோரின் குரலே.

ராஜ நடராஜன் said...

//ஒபாமா பின்வருபவற்றையும் கூறியுள்ளார்.
So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.//

அனானி!அதிகார பூர்வமாக மத்தியஸ்தம் செய்யும் நிலையில் மட்டுமே இது சாத்தியம்.கொல்பவன் ஆயுதத்தை விட்டு விட்டு கொல்லப்படுவோமா என்பவர்களிடம் ஆயுதத்தைக் கீழே போடு என்பது என்ன நியாயம்.அயர்லாந்து வரலாறுகள் தெரிந்தே இப்படியா?

ஆனாலும் ஒபாமா முன்னிறுத்தியது மக்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதும் உதவி நிறுவனங்களை அனுமதிக்கப் படவேண்டும் என்பதே.

ஷண்முகப்ரியன் said...

வெறுமனே நல்ல எண்ணங்கள் மட்டுமே வன்முறைகளுக்குத் தீர்வைத் தரமுடியுமா,ராஜநடராஜன்?

கலையரசன் said...

ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
www.kalakalkalai.blogspot.com

நசரேயன் said...

நடக்குதான்னு பொறுத்து இருந்து பார்ப்போம்

பாலா... said...

குரல் கொடுத்தவரெல்லாம் காணாமப் போய்ட்டாங்களே! என்ன நடக்குதுன்னே புரியலைங்க‌

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்