ஆறு மாதங்களுக்கு முன்பே ஈழம் குறித்த தமிழக மாற்றங்கள் வந்து விட்டது.அப்போதைய கால கட்டத்தில் இலங்கை குறித்த இந்திய மாற்றங்களாகவே அவை மாறியிருக்க வேண்டும்.காரணம் இந்திய அரசு அப்போதே ஈழம் குறித்த தனது வெளிநாட்டுக் கொள்கையின் பார்வையை மறுபார்வை செய்திருக்க வேண்டும்.
6 மாத கால கட்டத்திற்குள் ஏற்பட்ட இந்திய இலங்கை நிகழ்வுகளை மறு அசைவு போட்டால் பதிவுகளில் வெளிப்படும் உண்மைகளுக்கும் இந்திய அரசு செயலாற்றும் முறைக்கும் கூடவே பொதுமனிதப் பார்வைக்கும் தூர இடைவெளிகள் அதிகம் என்ற ஐயமும் எழுகிறது.இணையத்தில் உட்காரும் கணங்களில் தோன்றும் உண்மைகள் இருதினங்கள் இணையம் பக்கம் வராமல் இருந்தால் கண்ணைக் காட்டி காட்டுக்குள் விட்டது போன்ற உணர்வையும் தோற்றுவிக்கிறது.கட்சி என்ற வட்டத்துக்குள் நுழைந்து விடுபவர்களுக்கு கட்சித் தலைமையின் செயலே வேத வாக்காகி விடுகிறது.ஆனால் தமிழ் உணர்வு கொண்டு இப்போதைக்கு தமிழகத்தில் நிகழும் போராட்ட உணர்வுகளை மத்திய அரசு கூர்ந்து கவனிக்கத் தவறியதும் பெரும் ஆபத்துக்களை வருங்காலத்தில் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி வழிகோல்கிறதோ என்ற பயத்தையும் இப்போதைக்கு உருவாக்குகிறது.
மதச்சார்புகளை ஓரளவுக்கு சமன் செய்து காங்கிரஸ் ஆட்சி செய்கிறதென்றே இதுநாள் வரையிலான காங்கிரஸின் மதிப்பீடு இருந்தது.பி.ஜே.பி சோனியாவை அந்நிய நாட்டுக்காரி என்று பிரச்சாரம் செய்த கடந்த தேர்தலில் கூட தமிழ்நாட்டில் அப்படியொரு பார்வையோ அதற்கான தாக்கமோ இல்லாமல் இருந்தது.ஆனால் இன்றைய நிலையும் அதற்கான சூழல்களையும் யார் உருவாக்கியது?அரசியல் அனுதாபங்களும்,எதிர்ப்பும் ஜனநாயகத்தில் வரும் போகும்.
கார்கில் காலத்து தமிழக தேசப் பற்று எப்படியிருந்தது என்று எழுதவோ சொல்லவோ தேவையில்லை.பஞ்சாபிலும்,தமிழகத்திலும் ராணுவ வீரன் ஒரு மகத்தான மனிதன்.அந்த தேச உணர்வுகளுக்கும் நேற்று குழி தோண்டப் பட்டு விட்டது இராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கியும் ராணுவ வீரர்களை விரட்டியதன் மூலமும்.இராணுவ வாகனங்களை வழி மறித்தவர்களின் கூற்று வாகனங்களில் யுத்த தளவாடங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்ப படுகிறதென்று.இல்லை,ராணுவ வீரர்கள் தங்களது ராணுவப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் போதே இந்த மோதல் நிகழ்வு ஏற்பட்டது என்று மறுசாராரின் கூற்று.
கோவையின் கோபத்தின் மையம் தமிழர்களின் இனப் படுகொலையும்,முன்பு ரயில் வாகனங்களில் டாங்கிகள் வரிசையாக சென்றதும் அவை இந்தியாவிலிருந்து இலங்கை அரசுக்கு செல்கிறதென்ற செய்தியுமே.ஒருவேளை பொதுமக்களின் கோபங்கள்,நிகழ்வுகளின் புரிதல் தவறாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி செய்திகளையும்,நிகழ்வுகளின் உண்மைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பது மாநில,மத்திய அரசின் கடமையாகும்.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு Mr.மேனன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறார்.பேச்சு வார்த்தையின் சாரத்தை அவரோ அல்லது அரசாங்கமோ பொதுமக்களுக்கு சொல்வதில்லை.அல்லது சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற Classified கோட்பாடு, இலங்கையில் ஊடக தடையையும் மீறி வெளிச்சத்துக்கு வரும் நிகழும் அவலங்களைக் காணும் தமிழக மக்களுக்கு மேலும் கோபத்தை உண்டுபண்ணுகிறது.
இந்தியாவையும்,தமிழகத்தையும் பொறுத்தவரை நிகழும் அரசியல் நிகழ்வுகள் சுகமாயில்லை.மக்களின் அரசு என்ற பொறுப்பிலிருந்து நிலை தடுமாறும் மாநில,மத்திய அரசுகள் மக்களுடன்,மக்களுக்காக என்ற கோட்பாட்டிலிருந்து பிரள்வது தமிழகத்தில் இன்னும் பல நிகழ்வுகளையும்,விளைவுகளையும் உருவாக்கும். காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.
32 comments:
\\அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும். \\
விழித்தால் தானே...?
மிகச் சரியான பார்வை நண்பர் ராஜ நடராஜன்.
இந்தக் கோபம் நல்லதற்கல்ல என்று ஆள்பவர்கள் புரிந்து கொள்வதே உடனடித் தேவை.
இல்லையென்றால் இன்று இந்த இளைஞர்களால் கிளப்பப்பட்ட பொறி நாளை வேறு எங்கேனும் முட்டி நிற்கும்.
யார் இலங்கைக்குப் போய் என்ன பேசி வந்தாலும் மருந்தளவிற்குக் கூட தமிழக மக்களுக்குத் தெரிவிப்பதில்லை என்ற போக்கு மக்களாட்சியின் மாண்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.
//\\அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும். \\
விழித்தால் தானே...?//
வாங்க டக்ளஸ் சார்.விழிக்கவில்லையென்றால் விளைவுகள் திசை மாறிப் போனபின் வருந்துவதில் பயனில்லை.
உதாரணத்திற்கு ஒன்று, இந்திரா காந்தியின் காலத்தில் வங்கதேச போரின் போது ஜெனரல் கரியப்பா சொன்னாராம்.பாகிஸ்தான் line of control தாண்டி படை போவதற்கு அனுமதி கேட்டாராம்.அப்போதைய அமெரிக்க ஆதிக்கத்தின் அழுத்தத்தில் அந்த எண்ணம் கைவிடப்பட்டது.பலன் சியாச்சின், கார்கில் போன்ற விளைவுகள்.
//மிகச் சரியான பார்வை நண்பர் ராஜ நடராஜன்.
இந்தக் கோபம் நல்லதற்கல்ல என்று ஆள்பவர்கள் புரிந்து கொள்வதே உடனடித் தேவை.
இல்லையென்றால் இன்று இந்த இளைஞர்களால் கிளப்பப்பட்ட பொறி நாளை வேறு எங்கேனும் முட்டி நிற்கும்.
யார் இலங்கைக்குப் போய் என்ன பேசி வந்தாலும் மருந்தளவிற்குக் கூட தமிழக மக்களுக்குத் தெரிவிப்பதில்லை என்ற போக்கு மக்களாட்சியின் மாண்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.//
வாங்க மதிபாலா!உங்கள் முதல் வருகைக்கு நன்றி.வாழ்வாதாரங்களைச் சார்ந்து சிந்திக்கும் நமக்கே சில விசயங்கள் சரியாகப் புரியும் போது அரசு இயந்திரங்களில் அமர்ந்து கொண்டு நாட்டு நலன் வேண்டி பணிபுரிபவர்களுக்கு ஒரு பிரச்சினைக்கான அத்தனை தகவல்களும் அவர்களுக்கு கிட்டும் போது மக்கள் நலனுக்கு எதிரான போக்கு ஏன் என்பது கவலை அளிப்பதுடன் விளங்காப் பொருள் வித்தைகள் Hidden agenda ன்னு என்னமோ சொல்வார்களே அந்தமாதிரியா எனவும் யோசிக்கவும் வைக்கிறது.
//இந்தக் கோபம் நல்லதற்கல்ல என்று ஆள்பவர்கள் புரிந்து கொள்வதே உடனடித் தேவை.
இல்லையென்றால் இன்று இந்த இளைஞர்களால் கிளப்பப்பட்ட பொறி நாளை வேறு எங்கேனும் முட்டி நிற்கும்.//
அன்றைய இந்திய வெளியுறவுக்கு ஒரு தீட்சித்.இன்றைக்கு ஒரு மேனன்.அன்றைக்கு வரலாறுகளை தமக்கு தேவையான படி எழுதிக் கொள்வதற்கான சாத்தியங்கள் நிறையவே இருந்தன.இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இனி அது இயலுமா?
//காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.//
நிஜமாகவே தூங்குபவர்கள் என்றாவது ஒரு நாள் விழித்துக்கொள்வார்கள்! ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்கள்?
//நிஜமாகவே தூங்குபவர்கள் என்றாவது ஒரு நாள் விழித்துக்கொள்வார்கள்! ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்கள்?//
வாங்க பனங்காட்டான்!இந்த நேரம் பார்த்து பனம்பழத்தையும்,பனம்பழ சக்கர வண்டிகளையும் நினைவு படுத்திறீங்களே:)
அதானே!வெயில் வரும் வரை தூங்கினா அம்மாக்களோ சகோதரிகளோ மூஞ்சில தண்ணியக் கொட்டி விழிக்க வைப்பது நமது வழக்கம்.
தூங்கற மாதிரி நடிக்கிறவங்களுக்கு!!!ஏதாவது புது வைத்தியம் கண்டு பிடிக்க வேண்டியதுதான்.
வாங்க மதிபாலா!உங்கள் முதல் வருகைக்கு நன்றி//
நன்றி. முதல் வருகை என்பது தவறு. எப்போதும் உங்கள் பதிவினை படித்து வருகிறேன். முதல் பின்னூட்டம் என்பது வேண்டுமானால் சரி. அதற்குக் காரணம் எனது சோம்பேறித்தனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் என்னவென்றாலும் அதற்கான வருத்தங்கள்.
***
Hidden agenda ன்னு என்னமோ சொல்வார்களே அந்தமாதிரியா எனவும் யோசிக்கவும் வைக்கிறது.//
மக்கள் நலனே முதன்மை என்கிற போது என்ன ஹிட்டன் அஜெண்டா வேண்டிக்கிடக்கிறது ?
நமது வெளியுறவுக் கொள்கை அரசியல்வாதிகளின் கையில் இருந்து அதிகாரிகளின் கைகளுக்கு மாறிப்போயாகி விட்டது என்றே நினைக்கிறேன். அவர்கள் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கொள்கைகளை வடிவமைக்கிறார்கள்.
ஒற்றைக்கட்சி ஆட்சி முறை என்று மடிந்து போனதோ அந்தப் புள்ளிதான் அதிகாரிகளின் கைகளுக்கு நமது வெளியுறவுக் கொள்கைகள் போனது என்ற எண்ணம் எனக்குண்டு.
ஆனாலும் , இதே போன்ற தொடர்ச்சியான புறக்கணிப்புகள் தான் வடகிழக்கு இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. இன்று அப்பிரச்சினை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எப்போதாவது குண்டு வெடித்தாலோ இல்லை ஏதாவது தாக்குதல் நடை பெற்றாலோ வெறும் கண்டனக்குரல்களோடு முடிவு பெற்று விடுகிறது நமது நடுவண் அரசின் கடமை.
வேதனை - நமது மக்கள் பிரதிநிதிகளின் பேச்சிற்கும் , நமக்கும் சம்பந்தமில்லாத போதும் நமது பிரதிநிதிகளாக அவர்கள் இருப்பதுதான்.
ஆனந்தசங்கரியும் , டக்ளஸும் , கருணாவும் தமிழர் பிரதிநிதிகள் என்று இலங்கை அரசாங்கம் சொல்வது போல.
//நமது வெளியுறவுக் கொள்கை அரசியல்வாதிகளின் கையில் இருந்து அதிகாரிகளின் கைகளுக்கு மாறிப்போயாகி விட்டது என்றே நினைக்கிறேன். அவர்கள் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கொள்கைகளை வடிவமைக்கிறார்கள்.//
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.உண்மையான ஆட்சியாளர்கள் யார் என்றால் பீரோகிராட்ஸ்களே(beaurecrats).அரசியல்வாதிகள் கையெழுத்து இயந்திரங்களே.
//ஆனாலும் , இதே போன்ற தொடர்ச்சியான புறக்கணிப்புகள் தான் வடகிழக்கு இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. இன்று அப்பிரச்சினை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. எப்போதாவது குண்டு வெடித்தாலோ இல்லை ஏதாவது தாக்குதல் நடை பெற்றாலோ வெறும் கண்டனக்குரல்களோடு முடிவு பெற்று விடுகிறது நமது நடுவண் அரசின் கடமை.//
தமிழகம் அந்த நிலைக்கு தள்ளப்படாது என்றே நினைக்கிறேன்.காரணம் கல்வி,பொருளாதார வளர்ச்சி இவற்றை சமன் செய்யும்.
இப்போதைய தமிழக எழுச்சி நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புவோம்.
//வேதனை - நமது மக்கள் பிரதிநிதிகளின் பேச்சிற்கும் , நமக்கும் சம்பந்தமில்லாத போதும் நமது பிரதிநிதிகளாக அவர்கள் இருப்பதுதான். //
என்ன சொல்வதென்று தெரியவில்லை.
//ஆனந்தசங்கரியும் , டக்ளஸும் , கருணாவும் தமிழர் பிரதிநிதிகள் என்று இலங்கை அரசாங்கம் சொல்வது போல.//
இது நடப்பியல்.பார்க்கலாம் வரலாறு இவர்களை எப்படி எழுதி வைக்கிறதென்று?
/பேச்சு வார்த்தையின் சாரத்தை அவரோ அல்லது அரசாங்கமோ பொதுமக்களுக்கு சொல்வதில்லை.அல்லது சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற Classified கோட்பாடு/
சொல்லாமல் விட்டாலும் தவறில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டாற்போல் சாதித்து விட்டோம் என்று புளுகுவதும் சவால் விடுவதும் ஆத்திரத்தைத் தூண்டத்தான் செய்யும். இதற்கு முன்பெல்லாம் மேனோன் இலங்கை செல்லும்போதும் திரும்பும் போதும் முதல்வரை சந்தித்து தானே சென்றார். இப்போது அவரும் புறக்கணிக்கப் படுகிறாரா? ஏன் இது குறித்து ஆட்சேபணை தெரிவிக்காதது மட்டுமல்ல நடுவண் அரசின் இணக்கம் காட்டுவது நிஜமாகவே பதவிக்காக தமிழர் நலனை காவு கொடுக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பத்தான் செய்கிறது?
/காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்./
உண்மை சொன்னால் மட்டுமே போதும்
//சொல்லாமல் விட்டாலும் தவறில்லை. பூனை கண்ணை மூடிக் கொண்டாற்போல் சாதித்து விட்டோம் என்று புளுகுவதும் சவால் விடுவதும் ஆத்திரத்தைத் தூண்டத்தான் செய்யும். இதற்கு முன்பெல்லாம் மேனோன் இலங்கை செல்லும்போதும் திரும்பும் போதும் முதல்வரை சந்தித்து தானே சென்றார். இப்போது அவரும் புறக்கணிக்கப் படுகிறாரா? ஏன் இது குறித்து ஆட்சேபணை தெரிவிக்காதது மட்டுமல்ல நடுவண் அரசின் இணக்கம் காட்டுவது நிஜமாகவே பதவிக்காக தமிழர் நலனை காவு கொடுக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பத்தான் செய்கிறது?//
எவ்வளவோ பதிவுகளிலும் தமிழக மண்ணில் தெரியும் உணர்வுகள் மூலமாக சொல்வன சொல்வோம் என்று சொல்லியாகி விட்டது.இத்தனைக்கும் தமிழக அரசு தாக்குப்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் என்ன என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது.அரசியல் என்ற கோணத்தில் பார்த்தாலும் கூட கலைஞர் காய்களை நகர்த்திய விதம் திருப்திகரமாக இல்லை.
///காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்./
//உண்மை சொன்னால் மட்டுமே போதும்//
பாலா!புலம் பெயர் தமிழர்கள் தொலைக்காட்சியில் வெறும் நன்றி சொன்னால் போதும் என்கிற விளம்பரம் வரும்.
"உண்மை சொன்னால் மட்டுமே போதும்" என்ற எழுத்து உச்சரிக்கவே நன்றாக இருக்கிறது.
நடராஜன் அண்ணா,
எனக்கு தெரிந்த வரை, இந்தியா வினை விதைத்துக் கொண்டிருக்கிறது...இந்த போரை நடத்துவது இந்தியா தான் என்ற எண்ணம் பலருக்கும் அழுத்தமாகவே இருக்கிறது...
இது வரை படுகொலை செய்யப்பட்ட உயிர்களுக்கு இந்தியாவும் தான் பொறுப்பு...
கோவையில் நடந்தது தாக்குதல் என்று சொல்லமுடியாது...ஏனெனில், ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை...எதிர்ப்பை காண்பிக்கும் முகமாக, வாகனத்தின் மீதான தாக்குதலே...
இந்திய அரசு விழித்துக் கொள்ளாவிடில், இலங்கைப் போரிலிருந்து வெளிவராத வரை, இந்த நிலை மோசமாக வாய்ப்புண்டு.
உண்மையான அக்கறையுடன் இந்தியாவை நேசிக்கும் எந்த ஒரு நபரும் உங்கள் நிலையிலிருந்துதான் இப்பொழுது நடை பெறும் நிகழ்வுகளை கவலையோட கண்ணுற்று கொண்டிருப்பார்கள், ராஜா!
ஆனா, :-( already the seeds of hatred are sown deep in the psychic of people...
//Hidden agenda //
இதன் பின்னணியில்தான் இந்த மொத்த வெளியுறவு சமாச்சாரம் இயங்கி வருகிறது போல... முட்டாள்தனமான அணுகுமுறை என்பது மட்டும் தெரிகிறது. அப்படியாக அணுகி பிரச்சினையை சொந்த வீட்டிற்குள்ளும் கொண்டு வந்துவிட்டது மாதிரிதான் தோன்றுகிறது.
pre-maturedஅ தன்னை அமெரிக்காவாக நினைத்துக் கொண்டு தவறான இடத்தில் தனது நம்பிக்கையும், இதயத்தையும் வைக்கிறதோ ... காலம் பதிலுரைக்கும். சைனாக்காரன் கெட்டிக்காரனோ!!
//எனக்கு தெரிந்த வரை, இந்தியா வினை விதைத்துக் கொண்டிருக்கிறது...இந்த போரை நடத்துவது இந்தியா தான் என்ற எண்ணம் பலருக்கும் அழுத்தமாகவே இருக்கிறது...
இது வரை படுகொலை செய்யப்பட்ட உயிர்களுக்கு இந்தியாவும் தான் பொறுப்பு...//
வெளிநாட்டு உறவு என்ற பெயரில் தெரிந்தே வினை விதைத்தால் அதன் பயனை நாமும்,நமக்கு பின் நமது சந்ததியுமல்லவா அறுவடை செய்யவேண்டியிருக்கிறது:(
//கோவையில் நடந்தது தாக்குதல் என்று சொல்லமுடியாது...ஏனெனில், ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை...எதிர்ப்பை காண்பிக்கும் முகமாக, வாகனத்தின் மீதான தாக்குதலே...
இந்திய அரசு விழித்துக் கொள்ளாவிடில், இலங்கைப் போரிலிருந்து வெளிவராத வரை, இந்த நிலை மோசமாக வாய்ப்புண்டு.//
ஆர்ப்பாட்டங்களும் கோபங்களும் பல துறைகளின் மீது இது வரை திரும்பியிருக்கிறது.ஆனால் ராணுவ வாகன உடைப்பு என்பது எனக்குத் தெரிந்த வரை தமிழகத்தில் இது முதல் முறை என்பதாலும் இதன் தாக்கம் மேலும் வளர்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வினை தோற்றுவிக்கிறது.
இப்போதைக்கு எழுதிவிட்டு இன்னும் சில காலங்கள் போய் திரும்பி பார்த்தால் நிகழ்வுகளின் விளைவுகள் பயத்தையே உருவாக்குகிறது.
//இந்திய அரசு விழித்துக் கொள்ளாவிடில், இலங்கைப் போரிலிருந்து வெளிவராத வரை, இந்த நிலை மோசமாக வாய்ப்புண்டு.//
நேற்று பாகிஸ்தான்,நேபாளம்,இலங்கை நிலைகள் இந்தியாவுக்கு கவலையைத் தருகின்றது என்று மன்மோகன் சிங் கவலை தெரிவுத்துள்ளார்.
பாகிஸ்தான் failed state நிலைக்குத் தள்ளப்படாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கிறது.
நேபாளம் ஜனநாயகத்துக்கு வந்த குறுகிய காலத்தில் சோதனைகளை சந்திப்பது வருத்தத்தை உருவாக்குகிறது.மாறுதலுக்கான படியில் ஏறி விட்டதால் நேபாளம் தாக்குப் பிடிக்கும் என நம்பலாம்.
மேலே சொன்ன இரண்டும் பக்கத்து நாடுகளின் பிரச்சினை இந்தியாவை எப்படி பாதிக்கும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியவை.
ஆனால் தமிழ்நாட்டின் மொழி,கலாச்சார உறவால் ஈழ மக்களுடன் தொன்மையான உறவு கொண்டுள்ளதால் ராஜிவ் என்ற சோகத்தையும் உடைத்துக் கொண்டு உணர்வுகள் வெளிப்படத் துவங்கி விட்டது.
இலங்கை பற்றி நினைத்தாலே கண்ணுக்கு முதலில் தோன்றுவது அப்பாவி குழந்தைகள்,பெண்கள்,மக்களின் படுகொலை அவலங்கள்.ஊருக்கெல்லாம் உபதேசம் செய்த இந்தியா தனது வீட்டின் ஒரு பகுதியான தமிழக உணர்வை கவனிக்கத் தவறி விட்டது கவலைக்குரியதே.
//உண்மையான அக்கறையுடன் இந்தியாவை நேசிக்கும் எந்த ஒரு நபரும் உங்கள் நிலையிலிருந்துதான் இப்பொழுது நடை பெறும் நிகழ்வுகளை கவலையோட கண்ணுற்று கொண்டிருப்பார்கள், ராஜா!//
தெகா!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தமிழன் என்றல்ல,இந்தியன் என்ற உணர்வு இருப்பதாலேயே நிறை குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.ஆனால் தேச உணர்வுக்கும் பங்கம் வரும்படியாக நமது உணர்வுகளையும் மீறி அரசு நிலைப்பாடு கொள்ளும் போது விமர்சிக்க வேண்டியது அவசியப்படுகிறது.
//ஆனா, :-( already the seeds of hatred are sown deep in the psychic of people...
//Hidden agenda //
இதன் பின்னணியில்தான் இந்த மொத்த வெளியுறவு சமாச்சாரம் இயங்கி வருகிறது போல... முட்டாள்தனமான அணுகுமுறை என்பது மட்டும் தெரிகிறது. அப்படியாக அணுகி பிரச்சினையை சொந்த வீட்டிற்குள்ளும் கொண்டு வந்துவிட்டது மாதிரிதான் தோன்றுகிறது.//
உளரீதியாக வெறுப்புக்களை அதிகம் உருவாக்கி விட்டதற்கு இலங்கையில் ராஜபக்சே அரசும் தமிழக மக்களிடம் அதே வெறுப்புக்களை தோற்றுவித்ததில் காங்கிரஸ் அரசுக்கும் பங்குண்டு.
இவ்வளவு அவலங்கள் நிகழ்ந்தும் நம்பிக்கை அளிக்கும்படி ஏதாவது வார்த்தைகள் ஏதாவது திசையிலிருந்து வருகிறதா என்று யோசித்தால் கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது:(
//pre-maturedஅ தன்னை அமெரிக்காவாக நினைத்துக் கொண்டு தவறான இடத்தில் தனது நம்பிக்கையும், இதயத்தையும் வைக்கிறதோ ... காலம் பதிலுரைக்கும். சைனாக்காரன் கெட்டிக்காரனோ!!//
நேரு,நாசர் காலத்து அரசியலோடு எகிப்து நாட்டை ஒப்பிடும் போது இரு நாடுகளுக்கும் கல்வியில் முன்னேற வாய்ப்புக்கள் சமநிலையில் இருந்தனவாம்.50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் கல்வித்தரத்தில் இந்தியாவே முன் நிற்கிறது இப்போது.
இதே ஒப்பீட்டுடன் globalization ஆகி விட்ட தற்போதைய சூழலில் இந்தியா,சைனா பொருளாதாரத்தை ஒப்பீடு செய்யும் போதும் முந்தைய அதே சமநிலைகள் இருந்தும் சைனா நம்மை முந்திக் கொள்கிறது.நீங்கள் வசிக்கும் ஊரில் எப்படியென்று தெரியவில்லை.முன்பு ஜெர்மன்,அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஐரோப்பிய தரமான பொருட்கள் கிடைத்த வளைகுடா நாடுகளில் இப்போது எங்கு பார்த்தாலும் சைனாவின் நுகர்வோர் பொருட்கள்.
இந்த எல்லையைக் கடந்து நாடுகளின் பொருளாதார தளங்கள் அமைப்பது என்ற நிலையிலும் சைனாவே வலைவிரிப்பதில் முதலிடம் வகிக்கிறது,இலங்கை உட்பட.அரசியல் ரீதியாகவும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சைனா தனது கால்களை இலங்கையில் பதிக்கிறது.கூடவே பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு வக்காலத்தும் பேசுகிறது.
சிலருக்கு சில பாடங்கள் மட்டுமே நன்றாக வ்ரும்ங்கிற மாதிரி
மன்மோகன் சிங்,சிதம்பரம் = நிதித்துறை
மேனன் = அமெரிக்க இந்திய அணு ஒப்பந்த உடன்படிக்கை
பிரணாப் முகர்ஜி=காங்கிரசுடன் நீண்ட நாட்கள் நல்லுறவு.
காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.////////////
இந்தியா சிதறாமல் இருக்க ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் . சரியான பார்வை
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
மக்களின் கோபம் இதுவரையிலும் திரும்பியிருக்கிறது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்..!
//இந்தியா சிதறாமல் இருக்க ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் . சரியான பார்வை//
வாங்க சுரேஷ் குமார்.
சுரேஷ் பேர்ல ரெண்டு மூணு பேர் கடையத் திறந்து வச்சிருக்கிறதால எப்ப யார் வீட்டுக்குப் போகிறோம் என்பதில் கொஞ்சம் குழப்பம்:)
//நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க//
எனக்குத் தெரிஞ்ச நம்ம ஆளு பாக்யராஜதான்.இது யாரு புதுசா:)வாரேன் வாரேன் வூட்டுக்கு.
//மக்களின் கோபம் இதுவரையிலும் திரும்பியிருக்கிறது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்..!//
வாங்க இனிய பதிவரே உண்மைத் தமிழன்!நான் உங்க மாதிரி 'பெருசு'க வீட்டையே சுத்திகிட்டு இருக்கேனா வீட்டுக்கு வந்ததை கவனிக்கல.
Very valid view.
sorry for english.
//Very valid view.
sorry for english.//
தமிழர்கள் தமிழோடு இனி கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து கட்டி தனி பாத்தி கட்டவேண்டிய காலமிது.
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment