Followers

Wednesday, May 27, 2009

செஞ்சிலுவை சங்கம்

குஜராத் பூகம்பத்திற்கு அள்ளிக் கொடுத்த தமிழகம்,கார்கிலுக்கு குரல் கொடுத்த தமிழகம் கடல் எல்லைக்கு சில மைல் தூரத்திலிருக்கும் தமிழனுக்கு குரல் கொடுத்து மட்டும் நின்று விட்டோம்.போரில் அனைத்தும் இழந்த மக்களுக்கு உதவும் விதமாக நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.உதவிகளை ஏற்றுக் கொள்ள செஞ்சிலுவை சங்கம் தனது கரங்களை நீட்டி வரவேற்க தயாராக உள்ளது.

இப்போதைய தேவை நீர்,உணவு,உடை,இருக்க இடம்,மருந்து,மருத்துவம்.இதற்காக வேண்டி தமிழகம் எப்படியாவது உதவி செய்தாக வேண்டும்.சேர,சோழ,பாண்டியர்களின் பெருமை பேச நிறைய இருந்தாலும் ஒற்றுமையில்லா உறவுகள் மாதிரி இப்போதும் கொள்ளுப்பேரன்களாய் பல கட்சிகளாய் தோன்றி நவீனம் நம்மை சுற்றி இறுக்கும் கயிறுகளின் மென் அழுத்தங்களின் வலிகள் தெரியாமல் பிரிந்து கிடக்கிறோம்.

போரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்.காரணம் தற்போதைய சூழலில் போரால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க பூர்வமாகவும்,அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது. ஹைதர் அலி காலத்து (40 வருடம்) அலி என்னும் கப்பல் உதவிக்கு வர தயாராக இருக்கும் போது கப்பல் ஓட்டிய தமிழன் பேருக்கு தமிழகமும் மனிதாபிமானத்துடனாவது உதவட்டும்.(கடல் என்ற கருவி இதுவரை நமக்கு பாதுகாப்பு என்ற நிலை போய் இப்பொழுது எதிரியா நண்பனா என்ற விவாதத்தை எழுப்புகிறது.)

திரைப்படம் சார்ந்தவர்கள்,நட்பு நிலையில் நிற்கும் திருமா,கனிமொழி போன்றவர்கள் செஞ்சிலுவை முயற்சியாக கலைஞரை அணுகலாம்.

It's a hard nut to crack but can be achieved.Hope helping cannot be visualized as interfering into a country's sovereignty.

17 comments:

நசரேயன் said...

//போரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்//

எப்ப நடந்தது ???

கவிதா | Kavitha said...

//அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது.//

நிஜமாகவா? நம்பலாமா?

முன்ன எல்லாம் எனக்கு இருந்தது. .இப்ப இல்லை.. :(((((((

அதுவும் தேர்தலின் வெற்றிக்கு பிறகு உடல்நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் போதும் டில்லி சென்றது.. ம்ஹிம்.. சொல்ல ஒன்னும் இல்லை...

என்னவோ போங்க.. சொல்றீங்க நம்பலாமா வேண்டாமான்னு தெரியல..

ஆ.ஞானசேகரன் said...

//போரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்.காரணம் தற்போதைய சூழலில் போரால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க பூர்வமாகவும்,அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது.//

நாம மட்டுதான் சொல்லி வருகின்றோம், அவர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதாகவே தெரியல நண்பா

ராஜ நடராஜன் said...

//எப்ப நடந்தது ???//

கட்சி மாற்றமா:) கலைஞரின் நிகழ்கால அரசியலை வரலாறு எழுதி வைக்கும்.அந்தக் கருத்தில் எனக்கு மாற்றம் இல்லை.அதே வேளையில் கட்சி நோக்கோடு ஒரே கண் பார்வை பார்ப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.குடும்ப அரசியலுக்கும் அப்பால் கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் கலைஞரை ஆதரித்தே ஆகவேண்டும்.நம்ம அரசியல் கண்ணோட்டம் கட்சி சார்பில்லாத தாமரை இலைத் தண்ணீர் மாதிரிங்கண்ணா!நல்லவை பாராட்டவும் தவறும் போது சுட்டிக்காட்டவுமான அரசியல் நோக்கு.

ராஜ நடராஜன் said...

//நிஜமாகவா? நம்பலாமா? //

கலைஞரின் தற்போதைய அரசியல் குழறுபடிகள்,குடும்ப அரசியல் அவரும் ஏனைய தலைவர்களுக்கு குறைந்தவர் என்பதில் சந்தேகமில்லை.ஆனாலும் தமிழ் உணர்வில் அவர் குறைந்தவர் என்று மதிப்பிடுவதும் தவறே.முதலமைச்சர் என்ற நாற்காலியில் இருக்கும் வரை அவரிடம் நாம் முறையிடவும் அதனை நிவர்த்தி செய்வதற்கான தார்மீகக் கடமையும் அவருக்கு உள்ளது.கட்சி சார்பு என்ற பார்வைக்கும் அப்பால் மனிதாபிமானம் என்ற நிலையிலேயே ஈழத்தமிழர்களின் அவலங்களை காண வேண்டும்.

ராஜ நடராஜன் said...

//அதுவும் தேர்தலின் வெற்றிக்கு பிறகு உடல்நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் போதும் டில்லி சென்றது.. ம்ஹிம்.. சொல்ல ஒன்னும் இல்லை...//

கவிதா!ஈழம் குறித்த அரசியல் சண்டைகளில் கலைஞர் நிலை தடுமாறி இருந்தாலும்,தேர்தல் வெற்றிகள் அரசியல் கூட்டல் கழித்தலில் சாதகமாகிப் போகி இருந்தாலும்,குடும்ப அரசியல் என்ற முத்திரை குத்தப்பட்டு விட்டாலும் மத்திய அமைச்சரவையில் இருந்தும் ஈழத்துப் பிரச்சினையில் குரல் கொடுக்கவில்லையென்றாலும் தமிழ்நாட்டு பங்காக மத்திய அரசியலில் நமது அமைச்சர்கள் உள்ளார்கள் என்ற பார்வையும் தேவையாக இருக்கிறது.இதனால் தமிழ்நாட்டுக்கும் சில நல்லது நடக்க வாய்ப்பும் இருக்கிறது.எனவே அடம்பிடித்தாவது காரியம் சாதிக்கும் கலைஞரை பாராட்டலாம்.கட்சியென்ற ஒரு பக்கம் பார்க்காமல் இரு பக்க சமன்பாடுகளுக்கான அரசியலையும் பொதுநலன் குறித்த பார்வையில் பார்க்க நினைக்கிறேன்.

(சொல்ல வந்தது செஞ்சிலுவை சங்கம் மூலமாக ஏதாவது செய்ய இயலுமா என்பது.ஆனால் கலைஞர் அரசியல் என்று தடம் புரள்கிறது)

கிரி said...

//திரைப்படம் சார்ந்தவர்கள்,நட்பு நிலையில் நிற்கும் திருமா,கனிமொழி போன்றவர்கள் செஞ்சிலுவை முயற்சியாக கலைஞரை அணுகலாம்.//

உங்களுக்கு ரொம்ப நம்பிக்கைங்க

ஷண்முகப்ரியன் said...

உங்கள் நல்ல எண்ணங்கள் பலிக்கட்டும், ராஜ நடராஜன்.

ராஜ நடராஜன் said...

//உங்களுக்கு ரொம்ப நம்பிக்கைங்க//

வாங்க கிரி!நம்பிக்கைதானே வாழ்க்கை.

சூது கவ்வும் நிகழ்வுகளில் தமிழர்கள் அழுந்திப் போவது நன்றாகவே தெரிகிறது.இப்போதைய சுய உலக அரங்கில் அவதியுறும் மக்களைப் பற்றியும் அவர்களது பாதுகாப்பு குறித்து யாரும் குரல் எழுப்பாதது கவலை கொள்ளச் செய்கிறது.நம் பங்குக்கு இப்போதைய நிலையில் ஏதாவது செய்ய இயலுமா என்ற நம்பிக்கைதான்.

இருந்தும் தமிழக அரசியல் மாற்றங்களுக்கான காலம் வந்து கொண்டிருக்கிறது.ஓயப் போவதில்லை உணர்வுகள்.

ராஜ நடராஜன் said...

//உங்கள் நல்ல எண்ணங்கள் பலிக்கட்டும், ராஜ நடராஜன்.//

வாங்க ஷண்முகப்ரியன் சார்.எண்ணங்கள் போல் செயல்.நாம் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம்.ஒன்று இறுக்க கண்ணை மூடிக் கொள்ளவேண்டும்.வலைப்பக்கம் வரக்கூடாது,அடுத்தவன் துயரம் பற்றி அங்கலாய்க்க கூடாது.

அல்லது மனதில் துளிர்விடும் நல்ல எண்ணங்களின் அலைகளை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

Suresh Kumar said...

மக்களுக்கு அன்றாட தேவைகள் கிடைக்க இயற்கையை வேண்டுகிறேன்

அது ஒரு கனாக் காலம் said...

பிரார்த்தனை பெரிதும் பயனளிக்கும் , அதே போல், மேல் மருவத்தூர் மன்றும் அதே போல் நிறய உறுபினர்கள் உள்ள பெரிய கட்டமைப்பு உள்ள நிறுவங்கள் இப்பொழுதே மருந்து, உடை , படுக்கை, போன்ற அத்தியாவசிய பொருட்களை ஓன்று சேர்க்கலாம் ... காஞ்சி மடம் கூட இது பற்றி சிந்திக்கலாம்,... மறைந்த தினகரனின் மகன் இதற்காக, மெரினா பீச்சில் பெரிய கூட்டம் நடத்தலாம் , இஸ்லாம் தோழர்களையும் சேர்த்து கொள்ளலாம்.... எதாவது செய்ய வேண்டும்,....

சகாராவின் புன்னகை said...

நடராஜன், எம் மக்கள்மீதான தமிழ் நாட்டு மக்களின் அன்பை எவ்வளவுகாலமாக உணர்கிறோம் நண்பரே, ஆனால் இனி எந்த நடவடிக்கையும் காலம் கடந்தது அன்பரே

//கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்.....//

ஹா ஹா அரசியல்வாதிகளை நம்புகிற சமுகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கோ...

ராஜ நடராஜன் said...

//மக்களுக்கு அன்றாட தேவைகள் கிடைக்க இயற்கையை வேண்டுகிறேன்//

வாங்க சுரேஷ் குமார்!அந்த முட்கம்பிகளுக்கு அப்பால் மக்கள் விடுபட்டால்தானே இயற்கை உதவும் சாத்தியங்கள் கிட்டும்.நீரும்,நிலமும்,இயற்கை வாழ்வும் இனி அவர்களுக்குரியதான காலம் எப்போது?

ராஜ நடராஜன் said...

//நடராஜன், எம் மக்கள்மீதான தமிழ் நாட்டு மக்களின் அன்பை எவ்வளவுகாலமாக உணர்கிறோம் நண்பரே, ஆனால் இனி எந்த நடவடிக்கையும் காலம் கடந்தது அன்பரே
//

வாங்க சகாரா!குரல் கொடுத்தும் சூழ்ச்சிகளின் வலைகளிலிருந்து தப்பிக்க இயலாமல் போனது வருத்தத்தை உருவாக்குகிறது:(

ராஜ நடராஜன் said...

//ஹா ஹா அரசியல்வாதிகளை நம்புகிற சமுகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கோ...//

என்னங்க செய்வது சமூக கட்டமைப்புக்கள் அரசியல்வாதிகளை நம்பியே வாழ்வியலை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில்.இதில் அரசியல் கட்டமைப்புக்களை விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமில்லை.ஆனால் அதின் ஓட்டைகளை மட்டும் கவனித்து அரசியல் நிகழ்த்தும் தனிமனித சுயநலத்தினால் அரசியல் விரக்தியே தோன்றுகிறது.

ராஜ நடராஜன் said...

//பிரார்த்தனை பெரிதும் பயனளிக்கும் , அதே போல், மேல் மருவத்தூர் மன்றும் அதே போல் நிறய உறுபினர்கள் உள்ள பெரிய கட்டமைப்பு உள்ள நிறுவங்கள் இப்பொழுதே மருந்து, உடை , படுக்கை, போன்ற அத்தியாவசிய பொருட்களை ஓன்று சேர்க்கலாம் ... காஞ்சி மடம் கூட இது பற்றி சிந்திக்கலாம்,... மறைந்த தினகரனின் மகன் இதற்காக, மெரினா பீச்சில் பெரிய கூட்டம் நடத்தலாம் , இஸ்லாம் தோழர்களையும் சேர்த்து கொள்ளலாம்.... எதாவது செய்ய வேண்டும்,....//

கனாக்காலம்!ஆக்கபூர்வமான கருத்தை விதைத்திருக்கிறீர்கள்.நம்மிடம் உதவும் மனங்கள் நிறைய இருக்கின்றன.ஆனால் அரசு அதிகாரப் பூர்வமாக கொண்டு செல்வதே பயனளிக்கும்.முன்பு பழ.நெடுமாறன் முயற்சியால் பொருட்களை சேர்த்தும் அதனை உரிய நேரத்தில் கொண்டு போய் சேர்க்க இயலவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.