நீண்ட காலமாய் தொடர்ந்து அரசியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்டாலின் தி.மு.க வின் வாரிசு அரசியலுக்கும் சட்ட அமைப்பில் இடம் இருந்தால் கருணாநிதியின் காலத்திலேயே முதல்வராவதற்கும் தி.மு.க சார்பில் முழு தகுதியுடையவரே.அதற்கான வெள்ளோட்டமாக முன்பே இளைஞரணி ஊர்வல மகுடம் சூட்டப்பட்டும் உள்ளது.எனவே கலைஞர் கருணாநிதி தனது வயதின் இயலாமையால் ஓய்வெடுக்க விரும்பினால் ஸ்டாலின் அரியணையேறுவதும் சரியே.
இதுவரை தமிழக வரலாற்றில் துணை முதல்வர் பதவி உருவாகியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி உருவாகியிருந்தால் அந்த மரபு வழியில் துணைமுதல்வர் பதவியில் தவறில்லை.அப்படியில்லாமல் இது புதுக்கலாச்சாரமாக தமிழகத்தில் முதல்வரின் மகன் என்ற முறையில் உருவாகுகின்றது என்றால் இந்தப் பதவி விமர்சனத்துக்குரியது.அதே வேளையில் கவர்னர் இதனை அங்கீகரித்திருப்பதும் இதில் சட்டத்திற்கு இடமிருக்கிறதென்றும் கருதவேண்டியிருக்கிறது.எனவே ஸ்டாலினின் நீண்ட அரசியல் வாழ்வில் பதவி உயர்வு என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்பதை உங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பயனுடையதாகும்.
கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கும் மதுரை கலாச்சாரத்துக்கு முத்திரையாகவும் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்து விட முடியும் என்று நிரூபண அரசியலுக்கும் உருவாய் வந்துள்ளார் மத்திய அமைச்சர் அழகிரி.தனிமனிதனாக இவர் நல்லவனாகவும் அதன் காரணமாகக் கூட மதுரை இவர் வசம் வந்திருக்கலாம்.அது ஊடகங்களில் முன்னிறுத்தப் படாமல் போயிருக்கலாம்.ஆனால் அழகிரி என்றவுடன் ஆட்டோ என்ற முத்திரை எப்படி வந்தது எனத் தெரியவில்லை.இது அவரது தனிக் குணநலன்களா அல்லது மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது இன்றைய தமிழக சினிமாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பங்கும் கலையின் மேல் உணர்ச்சி வசமான காதலும் அரிவாள் கலாச்சாரத்தின் ஊற்றாக மதுரை விளங்குவதும் அழகிரியின் தனிக்குணமாக மாற்றப்பட்டிருக்கலாம்.
நேற்று அபிஅப்பாவின் விமானத்தை தவறவிட்ட தமிழக மாணவர்களுக்கு அழகிரி உதவியதாக சூடான இடுகை காண நேர்ந்தது.மக்கள் மனோபாவங்கள் ஒருவரின் பொய்த்தோற்றங்கள் எப்படி கட்டமைக்கப் படுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அந்த இடுகை.டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காலம் காலமாக எத்தனையோ தனிமனிதர்களாலும் தமிழக மத்திய அமைச்சர்களாலும் ஊடகத்தின் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம்.ஆனால் பெயர் தெரிந்த ஒரு தனிமனிதனுடைய முகத்துக்குப் பின் இருக்கும் பலவீனங்கள் நிறை குறைகளை எடை போடாமல் துதிபாடும் துவக்க விழா நடத்துவது பலவிதமான பரிமாண எழுத்துக்களை பார்வையிடும் பதிவர்களுக்கு நல்லதா?
இடுகைகளிலும் இணைய திரட்டிகளிலும் பகுத்தறியும் சந்தர்ப்பங்கள் அமைபவர்களே ஓரப்பார்வை பார்க்கும் போது அன்றாட பிரச்சினைகளில் அல்லல் பட்டு வீட்டுக்கு வந்தால் திரைப்படமும் சீரியலும்தான் உலக நிகழ்வுகள் என காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நுகர்வோர்களை குறை சொல்வதிலும் அவர்கள் மீது தேர்தல் தோல்விகளின் கோபங்களை காண்பிப்பதிலும் என்ன நியாயம் இருக்க முடியும்?
அமைச்சர் அழகிரியின் செயல்திறனை விமர்சிப்பதற்கும் ஏனைய தமிழக அமைச்சர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கும் முதல் 100 நாட்கள் என்ற அமரிக்க அரசியலை இந்தியாவும் கடன் வாங்கிய நாட்களுக்குள் கணிக்கலாம்.
டிஸ்கி: எந்த தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட இடுகை.
12 comments:
பொறுப்பி பார்த்ததும் எனக்கு சிரிப்போ சிரிப்பு!
பொறுப்பு அறிவித்தல் --> பொறுப்பி (டிஸ்கி)
//பொறுப்பி பார்த்ததும் எனக்கு சிரிப்போ சிரிப்பு!//
பொறுப்பி சிரிப்பு ஏன்?ஆட்டோவா:)
அபி அப்பாவும் ஆட்டோ வெச்சிருக்கார்.
அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா அந்த மாணவர்கள் பத்தி இல்லை. விமானத்தில் காஷ்மீரூக்கு பறக்கும் மாணவர் எவனாவது 3 நிமிடத்தில் தன் அப்பாஅவிடம் இருந்து பணம் வாங்கிடுவான். எத்தனையோ எக்சேஞ்ச் இருக்கு.
அது பிரச்சனை இல்லை! மம்தாவுக்கு தயாநிதியை தெரிஞ்சிருக்கும். (என் வார்த்தையை கவனிக்கவும்)
ஆனா அழகிரியை மம்தாவுக்கு தெரிஞ்சி இருக்குமா? ஆனா அப்படியும் போய் கேட்டு முதல் அமைச்சரவை கூட்ட முடிவிலேயே ஒரு தனி ரயில் பெட்டியை பெற முடியுமா?
இதான் அழகிரி!
\
ஒரு வஞ்ச புகழ்ச்சி தினமனி தலையங்க்கம் அவரை உங்களிடம் இருந்து தனிமை படூத்துது. தப்பு, அவர் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். தவிர நல்ல மொழிபெயர்ப்பாளர் இது தெரியுமா உங்களுக்கு????????????????????????????????????/
//அபி அப்பாவும் ஆட்டோ வெச்சிருக்கார்.//
இதோ நீங்க கூப்பிட்டவுடனே வீட்டு முன்னாடி நிற்கிறார்:)பயந்துகிட்டே போகிறேன்.
//ஆனா அழகிரியை மம்தாவுக்கு தெரிஞ்சி இருக்குமா? ஆனா அப்படியும் போய் கேட்டு முதல் அமைச்சரவை கூட்ட முடிவிலேயே ஒரு தனி ரயில் பெட்டியை பெற முடியுமா?
இதான் அழகிரி!
\
ஒரு வஞ்ச புகழ்ச்சி தினமனி தலையங்க்கம் அவரை உங்களிடம் இருந்து தனிமை படூத்துது. தப்பு, அவர் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். தவிர நல்ல மொழிபெயர்ப்பாளர் இது தெரியுமா உங்களுக்கு????????????????????????????????????//
முதலாவதாக வருகைக்கு நன்றி.கூடவே கல்லூரி மாணவர்கள் நல்ல விதமா ஊர்ப்போய்ச் சேர்ந்ததுக்கும் மகிழ்ச்சியே!அழகிரியின் தனிப்பட்ட முயற்சியினால் ஒரு ரயில்பெட்டி வாங்கியிருக்கிறார் என்பது பாராட்டப்படவேண்டிய விசயம் என்பதோடு உதவி தனிமனித வழிபாட்டுக்கே உதவுகிறது என்பதே எனது கருத்து.
அவரது ஆங்கிலப் புலமை பற்றியெல்லாம் நான் விமர்சிக்கவும் இல்லை.கலைஞரின் மகன் என்பது கூடப் பொருட்டல்ல.பணம் என்ற காரணியும் அந்தக்கலாச்சாரத்த்தைக் கொண்டு வந்ததில் அவருக்கு முக்கிய பங்காக திருமங்கலம் அவரது முந்தைய வெற்றிக்கு காரணமாகிப் போனாலும் ஜனநாயக மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்.ஆனால் அடிதடிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர் என்ற அவரது பிம்பம் மறைவதற்கும் மக்களுக்கு நலன் புரியவும் மத்திய அமைச்சர் பதவி உதவும் என நம்புவோமாக.எழுத்துக்கள்,விமர்சனங்கள் சமூகத்தில் சில நல்லவைகளைக் கொண்டு வராவிட்டாலும் நல்லதைச் சொல்லியிருக்கிறோம் என்ற மனநிறைவோடு உங்கள் வருகைக்கு மீண்டும் ஒரு நன்றி.
ரயில் வண்டியை தவற விட்ட பயணிகளுக்கு உதவிய அழகிரி மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது தன அடியாட்களிடம் பொறுமை காக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று உயிர்கள் பிழைத்திருக்குமே
//ரயில் வண்டியை தவற விட்ட பயணிகளுக்கு உதவிய அழகிரி மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது தன அடியாட்களிடம் பொறுமை காக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று உயிர்கள் பிழைத்திருக்குமே//
அப்படி போடுங்க அருவாள!
அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து
//அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து//
வாங்க கிரி சார்!அதே!அதே! இவை தனிமனித வழிபாட்டுக்கு வழிவகுக்கும் என்று வாதாடுகிறேன்.
//அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து//
நீங்கள் தமிழனாக, தமிழ்நாட்டில் வாழ லாயக்கில்லாதவர் என நினைக்கிறேன் :) அஞ்சு ரூவாய்க்கு நோட்டுப் பொஸ்தகம் வாங்கி குடுத்தாலே 100 ரூவா செலவு செஞ்சு விளம்பரம் செய்யும் இனம் எமது இனம். செஞ்சவருக்கு விளம்பர மோகம் இல்லன்னாலும், 'ஆதரவாளர்களுக்கு' (இதற்கு வேறு வழக்குப் பெயர் இருப்பதாக அறிகிறேன்!) மோகம் இருக்குதே!
நல்லது (அது எந்த நோக்கத்துக்காக இருந்தாலும்) செய்பவருக்கு என் வாழ்த்துக்கள்.
//நீங்கள் தமிழனாக, தமிழ்நாட்டில் வாழ லாயக்கில்லாதவர் என நினைக்கிறேன் :) அஞ்சு ரூவாய்க்கு நோட்டுப் பொஸ்தகம் வாங்கி குடுத்தாலே 100 ரூவா செலவு செஞ்சு விளம்பரம் செய்யும் இனம் எமது இனம். செஞ்சவருக்கு விளம்பர மோகம் இல்லன்னாலும், 'ஆதரவாளர்களுக்கு' (இதற்கு வேறு வழக்குப் பெயர் இருப்பதாக அறிகிறேன்!) மோகம் இருக்குதே!
நல்லது (அது எந்த நோக்கத்துக்காக இருந்தாலும்) செய்பவருக்கு என் வாழ்த்துக்கள்.//
தஞ்சாவூர்காரரே!நான் இந்தியாவில் வாழ லாயக்கில்லாத சூழ்நிலையில்தான் குவைத் வந்தேன்:)ஆனாலும் ஊர்ப் பாசம் எங்க விடுது?காண்ட்ராக்டில் வந்ததால் ஏஜண்டுகளுக்கு ஒண்ணும் வரி கட்டவில்லை.
5 ரூவா ஒப்புமை சரியாகவே இருக்கிறது.இப்ப பாருங்க காசு கொடுத்து ஓட்டு வாங்கினா மறுபடியும் அந்தக் காச திரும்ப பெற குறுக்கு வழி தேவைப்படுது:(
நோக்கமெல்லாம் எனக்கு ஒண்ணும் கிடையாதுங்க.பக்க சார்பில்லாத நான் சுதந்திரப் பறவை.மனசுல படும் அரிப்போட அங்க இங்கன்னு பக்கத்துல பல நாடுகளையும் ஒப்புமை பார்க்கிறமா அதனால எங்கேயும் நிகழா சில விசயங்கள் தமிழகத்தில் மட்டுமே நிகழ்கிறதே என்ற ஆதங்கம்.
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment