சமீபத்தில் பதிவர் ஜாக்கி சேகர் அரசியலுக்கும் அப்பாலான அபி அப்பாவைப் பற்றி சொல்லியிருந்தார்.மனம் கனத்தது என்பதனை விட கண்கள் பனித்தன சொல் பொருத்தமாக இருக்கும்.ஆனால் அரசியல் என்று வரும் போது அபி அப்பாவின் தூணைக்கட்டிப் பிடித்துக்கொள்ளும் அடிவருடித்தனம் சொல்லி மாளாது.தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பான இணைய நீரோட்டத்தை ஆழம் பார்க்கும் முதல் மாதிரியாகவே அவரது பதிவு இருந்ததை புலம் பெயர் ஈழ தமிழர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் என்பதை பதிவுகளின் கோபங்களும்,பின்னூட்டங்களும் உரக்கச் சொல்லுகின்றன.யாருக்கு பின்னூட்டம் சொல்வது என்றே தெரியவில்லை.
அதனால் பதிவர் செந்தில் சென்ற பதிவுக்கு இட்ட ஒற்றைப் பின்னூட்டத்திற்கான எனது மறுமொழியையே எனது பின்னூட்ட கருத்தாக மீண்டும் ஒரு முறை இங்கே வெளிப்படுத்துகிறேன்.
இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயலலிதா,வை,கோ இன்னும் அரசியலில் உள்ள பலரையும் காலை வாரி விடுவதிலேயே கண்ணும்,மண்டையுமாக இருக்கிறார்.அது போலவே ஜெயலலிதாவும் கூட.ஏனையோரும் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு குறைந்தவர்களாயில்லை.அதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன என்பது வேறு விசயம்.ஆனால் நான் மையப் படுத்த நினைப்பது தமிழர்களிடையே நிகழும் சகோதர சண்டைகளை.இணையமும் குறைந்ததாக இல்லையென்பதை பதிவுகளும் படம் போட்டுக் காண்பிக்கின்றன.இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.இப்படியான சிதறிக் கிடக்கும் தமிழர்களின் நிலையே இலங்கை அரசின் பலமாக அமைகிறது.
இன்றைய நிலையில் ஈழப்பிரச்சினை பல பரிமாணங்களை உட்கொண்டது.
1.தமிழகம் சார்ந்த அரசியல் மற்றும் மக்கள் குரல்களைப் பிரதிபலிப்பது.
2.இந்தியா மத்திய அரசின் இலங்கை இரட்டை வெளிநாட்டுக்கொள்கைகள்
3.புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் அதன் எதிர்ப்பு நிலை
4.இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு விதமான பிரதிபலிப்பு
5.அன்றாட வாழ்வில் சிரமப் படும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்
6.மனித உரிமைக் குழுக்களின் போர்க்குற்றங்களுக்கு எதிரான குரல்கள்
7.இலங்கை அரசுக்கு எதிரான சிங்களவர்களின் குரல்
8.அமெரிக்கா,சீனா,ரஷ்யா,இந்தியாவின் சுயநல உலக அரசியல்
8.இவை அனைத்தையும் பின் தள்ளிவிடும் போக்கான ராஜபக்சே அரசு.
9.ஐ.நா என்ற அமைப்பின் ஆமை வேகம்
10.தனி தமிழீழமா?ஒற்றைக் குடியரசா என்ற புதிர்
மேற்சொன்ன 10 பெரும் வளையத்துக்குள் ஒப்பிட்டால் சகோதர சண்டைகள் ஒரு பொருட்டானதே அல்ல.ஈழப்பிரச்சினை இப்பொழுது உலக அரங்கிற்குள் வந்து விட்டதால் மேற்கொண்டும் தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிப்போம்
கவிஞர் தாமரையின் இந்த காணொளி காணவும்.
http://www.colombotelegraph.com/index.php/thamarai-on-un-resolution-against-sri-lanka/.