Followers

Sunday, March 24, 2013

மாணவ சகோதர சகோதரிகளே!உங்கள் நண்பர்கள் யார்?

தமிழகத்தின் மீண்டும் ஒரு முறை புரட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவ தோழமைகளுக்கு நன்றியோடு மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தும் கால அறிக்கை வந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட மனிதாபிமான உணர்வுகளும்,பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவும் இருப்பதை ஊடக நேரலைகளின் மூலம் உணர முடிகிறது.அதே நேரத்தில் உண்ணாவிரத போராட்ட மாணவர்களின் தனிக்கருத்துகளில் பல மாற்றுக்கருத்துக்களும் எதிரும் புதிருமாகவும்,இடது வலதுசாரி சித்தாந்த வாசங்கள் காணப்பட்டதன் விளைவாக இந்தக் கருத்துக்கள் சில மாணவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமென்ற நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.

.ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய மத்திய அரசின் ஏமாற்று வித்தைகளை போராட்டக் கோரிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமைக்குழுவில் தனது ஆதரவாளர்கள் யார்,ஆதரவின்மையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவே இலங்கை வாக்கெடுப்பை இந்தியாவின் ஆலோசனையையும் மீறி வற்புறுத்தியது.இந்தியா இலங்கை ஆதரவு, ஆதரவின்மையிலிருது தப்பிப்பதற்காகவே மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு விரும்பியது.இலங்கை அரசு தான் தோல்வியடைவோம் என அறிந்தும் தீர்மான ஆதரவு நாடுகள்,தமது ஆதரவு நாடுகளை அறிந்து கொள்ள விரும்பியது.இலங்கை அரசுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒவ்வொருவரும் தமிழர்களின் ஆதரவாளர்கள் யார், ஆதரவின்மையாளர்கள் யார் என்று அறிந்து கொள்வது முக்கியம்.

அமெரிக்க தீர்மான ஆதரவு நாடுகள்
 
 இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகள்

நடுநிலை நாடுகள்
 பட உதவி யின் இணைய தேடல்: rste.org

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலம் தொட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பல ஊடகங்களும்,தமிழ் உணர்வாளர்களும்,இணைய கருத்துப் பரிமாறல்களும் செய்து வந்தன.என்ற போதிலும் மொத்த தமிழர்களையும் உலகையும் உலுக்கவில்லை.

போருக்குப் பின் ஒப்புக்கு சப்பாணியாக பான் கி மூன் இலங்கை பயணம் செய்தார். 2009ல் ஐ.நா மனித உரிமைக்குழு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.இதில் திருப்தியடையாத மனித உரிமைக்குழுக்களின் அழுத்தங்களின் காரணமாக 2011ல் Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka என முவர் குழுவை அமைத்தார்.



மூவர் குழுவின் உறுப்பினர்கள்

1. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும்,மனித உரிமைக்குழு தேசிய ஆணையத்தின் உறுப்பினர மர்சூகி தருஸ்மன்- Marzuki Darusman,

2. தென் ஆப்பிரிக்காவின் நீதிபதியும் டெஸ்மன்ட் டூடுவின் சமாதான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் யாஸ்மின் சூகா - Yasmin Sooka

3/ அமெரிக்காவின் மிக்ஸிகன் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவன் ஆர். ராட்னர் - Steven R. Ratner

இம் மூவரின் இலங்கை போர்க்குற்ற அறிக்கை பக்க சார்பில்லாமல் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களையும்,விடுதலைப்புலிகளின் தவறுகளையும், பொது மக்களை பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளையும்,விடுதலைப்புலிகள் மீதான சிறுவர்களையும் போரில் பயன்படுத்தியது போன்ற குற்றங்களையும் இதன் அடிப்படையில்தான் துவங்கியிருக்க வேண்டும்.மாறாக இலங்கை அரசு இம்மூவர் குழு ஐ.நா அறிக்கையை தருஸ்மன் அறிக்கையென்றும் தனது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் நிராகரித்தது.இதனிடையே தமிழகத்தில் கட்சிகளின் நலன் சார்ந்த ஆனால் தமிழ் உணர்வோடு ஈழமக்களுக்கான குரல்கள் ஒலித்தன.

தி.மு.க அ.தி.மு.க பங்காளிச் சண்டைகளுக்கும் அப்பாலும்,திருமாவளவன் தி.மு.க சார்பு குரலுக்கு அப்பாலும் ஈழப்பிரச்சினை பற்றிய கவலைகள் இருக்கவே செய்தன.பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஐ.நா.மனித உரிமைக் குழுவுக்குள் சென்றதைப் பாராட்ட வேண்டும்.ராமதாஸ் குழுவினரின் சாதி பிற்போக்குத்தனம்,ஈழ ஆதரவு இரண்டையும் வெவ்வேறு தராசுகளில் எடை போடுவது நல்லது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிரந்தர ஈழத்தமிழர்களின் குரலாக வை.கோ,நெடுமாறன் போன்றவர்களின் குரல் ஒலித்தாலும் அதற்கான வலுவான மக்கள் பலமில்லாமல் இருந்தது.
புதிய குரலாக சீமான் உருவாகினாலும் கூட அவரது உணர்ச்சி வசப்படல்,தெளிவான சிந்தனையற்ற தன்மை அல்ட்ரா போராளியாக மட்டுமே பிரதிபலித்தது.மே 17 இயக்க இளைய தோழர்கள் திருமுருகன்,உமர் போன்றவர்களின் உலக அரசியல் தெளிவு நம்பிக்கை அளித்தாலும் கூட மெரினா மெழுகுவர்த்தி போராட்டங்கள் வரவேற்பை பெற்றாலும் கூட மக்களிடையே பரவலாக போய்ச் சேரவில்லை.பத்திரிகையாசிரியர் அய்யநாதன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக பேசி வந்தனர்.சென்ற பாராளுமன்ற தேர்தலின் காலத்தில் கவிஞர் தாமரை இந்தியா மீது அறம் பாடினார்.புலம் பெயர் தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும்,மனித உரிமைக்குழுக்களின் துணையோடும், உண்ணாவிரதம், ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என பல வகையிலும் போராடியும் கூடஇலங்கை அரசு இந்தியா,சீனா,ரஷ்யா கவசங்களோடு அனைத்து அழுத்தங்களையும் உலக அரங்கில் உதாசீனப்படுத்தி வந்தது.ஒருங்கிணைந்த தன்மையற்ற நிலையில் தமிழர்களிடம் ஓரளவுக்கு சோர்வும் கூட காணப்பட்டது

இலங்கைப் பிரச்சினையை உலகம் திரும்ப பார்க்க வைத்ததின் பின்புலமாக புலம் பெயர்கள் தமிழர்கள் இருந்திருக்க கூடுமென்றாலும் கூட இலங்கையின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை.உலக அரங்கில் கொண்டு வந்ததின் முக்கிய பங்கு சேனல் 4 தொலைக்காட்சிக்கும்,அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டு வந்ததுமே.

இதனைத் தொடர்ந்து திருடனையே நீதிபதியாக நியமித்த கதையாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்- LLRC என்ற பெயரில் இலங்கையே தன்னைத் தானே பரிசோதித்துக்கொள்வதாக அறிவித்ததன் அடிப்படையிலேயே இப்பொழுது இரண்டாம் முறையாக அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நான்கு வரைவு மாற்றங்கள் செய்யப்பட்டு நீர்த்துப் போய் இருந்தாலும் கூட அமெரிக்க தீர்மானத்தை ஒட்டியே மேலும் தமிழர்கள் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து உதவப் போவதில்லை.

இப்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க,அ,தி.மு.க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தங்கள் போன்றும்,கலைஞர் கருணாநிதி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகிக்கொள்கிறது என்று காங்கிரஸை கழட்டி விட்டது போன்ற சூழலுக்கு ஏற்ப இந்தியா செயல்படும்.எனவே ஓரளவுக்கு மனித உரிமைகளை மதிக்கும் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்காவின் ஆதரவோடு மட்டுமே ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கான வழிகளை தேட முடியும்.

மாணவர்கள் போராட்டங்கள் அவசியமான ஒன்று என்பது நிரூபணமாகி விட்ட ஒன்று என்ற போதிலும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பெப்சி,கோகா கோலாவை புறக்கணிப்போம் போன்ற போராட்ட அணுகுமுறைகள் போராட்டத்துக்கு உதவாது.பெப்சி,கோகா கோலா புறக்கணிப்பு போராட்டம் ஏற்கனவே அமெரிக்கா ஈராக்கின் ஆக்கிரமிப்பில் பரிசோதனை செய்து பார்த்து தோல்வியடைந்த ஒன்று.அமெரிக்கா ஒரு புறம் மனித உரிமைகளை வலுப்படுத்தவும் இன்னொரு புறம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவது போன்ற இரட்டை கொள்கையாக போராட்ட களம் அமைய வேண்டும்.அமெரிக்கா மீதான எதிர்ப்பு சீனா,ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் முக்கியமாக இலங்கைக்கு உதவுவது மாதிரியாக அமைந்து விடும்.

ஒவ்வொரு இடத்தின் தூதரகங்கள் சார்ந்து மக்கள் போராட்டங்கள்,ஒரு நாட்டின் பிரச்சினைகள்,அரசியல் நகர்வுகள் என அத்தனையும் அரசு கொள்கைகள் அமைவதற்கு ஆவணப் பத்திரங்களாகின்றன என்பதை பத்திரிகை செய்திகளுக்கும் அப்பால் என்ன நிகழ்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.எனவே போராட்டக்கள சாதுர்யம்,ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த அல்லது மனித உரிமைகளைக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளீன் நட்போடு இன்னும் மேல் நோக்கி நகர்வதே ஈழத்தமிழர்களுக்கு விடியலைப் பெற்றுத் தரும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தின் குரலையும்,ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஜனநாயக ரீதியாக முன்கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அரசியல் சுயநலங்கள்,ஓட்டுக்கு பணம் போன்றவைகளை புறம் தள்ளி யார் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குரல் கொடுப்பார்கள் என்றுணர்ந்து  செயல்பட வேண்டிய தருணமிது.மொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது கட்சி சார்ந்து நாடாளுமன்றத்தில் வலுவான நிலையை கொண்டு வருமென்றாலும் கூட ஜனநாயக ரீதியாக ஆரோக்கியமான ஒன்றல்ல.தமிழர்களின் மனநிலை என்னவென்பதை தேர்தல் முடிவுக்கு பின் அலசுவோம்.



12 comments:

naren said...

சகோ. ரா.ந.
///மாணவர்கள் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட மனிதாபிமான உணர்வுகளும்அ,பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவும் இருப்பதை ஊடக நேரலைகளின் மூலம் உணர முடிகிறது.///
தவறு. ஈழ போராட்டம் ஒரு பேஷனாக போய்விட்டது. சில மாணவர்களுக்கு இராஜ பக்சே தமிழக அரசியலவாதி என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். கருணாநிதிக்கு தன் பாவங்களை போக்க கிடைத்துதான் ஈழ மக்களுக்கான போராட்டம் என்ற கும்ப மேளா, அதில் முக்கி அவருடைய பாவத்தை கழுவ பார்க்கிறார்.
ஈழ மக்களுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் கல்லூரி மாணவர்கள் ”ஸ்டிரை”க்கில் போராடுவதைப்போல போராடும் தமிழக அரசியல்வாதிகளை பார்த்து, இவர்களை விட நாங்கள் நன்றாக போராடுவோம் என்று மாணவர்கள் போராடுகிறார்கள்.

முதலில், தேவை இராஜ பக்சே போர்குற்றவாளியாக்க வேண்டுமா அல்லது ஈழ மக்களின் நலம் காக்க வேண்டுமா?. இராஜ பக்சேவை ஒழித்தால் இன்னொரு இராஜ பக்சே வரமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்? ஏதோ செய்யப்போகிறேன் என்று சென்ற இந்திய இராணுவத்தை, ஒட்டு மொத்த ஈழ தமிழ் மக்களை அழிக்க ஈழ பெண்களை கெடுக்க வந்தவர்கள் போல சித்தரித்துவிட்டு, இந்தியாவை வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க சொன்னால் எடுக்க தயாராக இருக்குமா. இந்திய இராணுவமும் தயாராக இருக்குமா. வெளிப்படையற்ற செயல்களால்தான் இந்தியா உதவ முடியும்.

இந்தியா ஈழ மக்களுக்கு உதவ வேண்டுமென்றால்:
1) பிரபாகரனை தற்போது இருக்கும் ஈழ சூழ்நிலையிலிருந்து வேறுப்படுத்த வேண்டும்.
2) ஈழப்போராட்டத்தை, இந்திய எதிர்ப்பாளர்களான Usual Suspectsலிருந்து பொதுமக்கள் கைகளுக்கு செல்ல வேண்டும். மாணவர்கள் போராட்டம் ஒரு உதாரணம்.
3) தற்போதுள்ள சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என தெளிவு வேண்டும். தனி ஈழம்தான் என்பது கடைசி குறிக்கோள் என்றாலும் அதை அடைய பல கட்டங்களை தாண்ட வேண்டும்.

நாடாளாமன்ற தேர்தலில், மக்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளை நிர்நயம் செய்து வாக்களிகின்றார்கள், அதில் ஈழப்பிரச்சனையும் ஒன்று, அதை மற்றப் பிரச்சனையுடன் எப்படி கோர்த்து வெற்றி பெற வைக்கப்போகிறார்கள் என்பது அரசியல் சாணக்கியர்களின் கைகளில் தான் இருக்கிறது. அப்படியில்லையென்றால், தேர்தல் திருடர்களின் வழி என்று தான் வரும். ஈழப்பிரச்சனைதான் ஒரே பிர்ச்சனையென்று எடுத்துச்செல்றால், எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வவ்வால் said...

ராச நட,

// இந்தக் கருத்துக்கள் சில மாணவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமென்ற நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.//

மாணவர்களுக்கு கருத்து சொல்லனும்னு நினைச்சது சரி,அதை தெளிவா சொல்லி இருக்கீங்களா?

உங்கப்பதிவைப்படிச்சா மாணவ்ர்கள் எல்லாம் இப்போ நாம எதுக்காக ,யாருக்கு எதிரா போராடுறோம்னு சந்தேகமே வந்துடும் :-))

# மாணவர்கள் போராட்டம் என்பது உணர்வுகளின் வெளிப்பாடு என்பது முற்றிலும் உண்மை ஆனால் அதன் நிலைத்த தன்மை தன்னிச்சையாக நீடிக்க இயலாது என்பது யதார்த்தம்.

எனவே வெகுசீக்கிரத்தில் மாணவர்களின் உணர்வை ஏதோ ஒரு அரசியல் சக்தி மடைமாற்றிக்கொள்ளும்,அனேகமாக அம்மையார் தான் அறுவடை செய்வார் என நினைக்கிறேன்.

ஆளும் அதிகார வர்க்கம் நினைச்சால் ஒரு போராட்டத்தினை சத்தமேயில்லாமல் முடக்கவும் முடியும், ஊதி விட்டு வளர்க்கவும் முடியும்.

கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வருமாம்,அதே போல போராட்டம் உச்சம் அடைந்து அதனை செயல்முறையில் ஒருங்கிணைக்க என சில அரசியல் தலைகள் உள்ளே வரும் அப்போ எல்லாம் வெளிச்சமாகும்.

ராஜ நடராஜன் said...

நரேன்!நான் மத்தவங்க கடை சுத்திகிட்டு பதிவு போட்ட பின் இங்கே கடைப்பக்கமே வரவில்லை.தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

நீங்க ராஜபக்சே,கருணாநிதி என பெயர்களைக் குறிப்பிட்டதால் இருவரையும் ஒரு ஒப்பீடு செய்து பார்ப்போம்.

இருவரும் வெவ்வேறு மனநிலையாளர்கள் என்ற போதிலும் கூட முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலையின் காலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள்.கலைஞர் கருணாநிதி இப்பொழுது ஆட்சி பீடத்தில் இல்லாமல் டெசோ,கூட்டணியிலிருந்து விலகல் என்று தி.மு.கவை மீண்டும் நிலை நிறுத்த அரசியல் செய்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் கூட இப்பொழுது ஆட்சியில் இல்லாத காலத்தில் இலங்கை குறித்த செய்திகளையும் தனது தவறுகளையும் உணர்ந்தே இருக்கிறார் என நினைக்கிறேன்.ஒரு வேளை ராஜபக்சே சொன்னார் என பிரணாப் சென்னை வந்து சொன்னதை நம்பியிருக்கவும் கூடும்.முள்ளிவாய்க்காலின் துயரங்களின் போது ராஜபக்சேவும்,சரத்பொன்சேகாவும் இலங்கையில் இல்லை.போரையும்,கட்டளைகளையும் முன் கொண்டு சென்றது கோத்தபயதான்.மேலும் வெள்ளைக்கொடி நிகழ்வின் போது அனைவரையும் சுட சொல்லி கட்டளையிட்டதும் கோத்தபயதான் என இப்போது தகவல்கள் கசிகின்றன.இறுதியாக ஒரு சிலர் எடுத்த முடிவுகள் வெற்றியடையாமல் போய் விட்டது என்பது மட்டுமே இப்பொழுது நிதர்சனம்.

இப்பொழுது கலைஞர் கருணாநிதியிடம் ஆட்சிக்காலத்தில் இல்லாத அறிக்கை மாற்றங்கள் தெரிகிறது.ஆனால் ராஜபக்சே பிரதர்ஸ் இன்னும் தெனாவெட்டாகவே திரிவது போலவே தெரிகிறது.

ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித் தருவது இது போன்ற தவறுகள் இனியும் நேரக்கூடாது என்பதோடு ஆட்சி வலிமையில் எதுவும் செய்து விடலாம் என்கிற தவறான முன்னுதாரணத்தைக் கொண்டு வந்து விடும்.இலங்கை அரசும்,இன்னும் சில அமெரிக்க எதிர்ப்பாளர்களும் ஆப்கானிஸ்தான்,ஈராக் என வெவ்வேறு களநிலைகளை இலங்கையோடு ஒப்பிடுகிறார்கள்.மூன்றுமே வெவ்வேறு கோணத்தில் பார்க்கப்பட வேண்டியவை என்பதோடு இலங்கையோடு காஷ்மீர் ஒப்பீடும் கூட தவறுதான்.இலங்கையின் போர்க்குற்றங்களைப் பேசினால் உடனே காஷ்மீரை ஒப்பிடுவது இலங்கை ஆட்சியாளர்கள் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிதான்.

ஆப்கானிஸ்தான் விமான தாக்குதல்கள் அனைத்தும் ஊசிமுனை குறிபார்த்த தாக்குதல்கள். மனிதர்கள் இல்லாத சில விமான தாக்குதலில் சிவிலியன்களும் பலியாகியிருக்கிறார்கள் என்பதையும் கூட அமெரிக்க ஊடகமே உண்மைகளைக் கொண்டு வந்துள்ளது.அதுபோலவே ஈராக்கின் மனித உரிமை மீறல்களையும் கூட அமெரிக்க ஊடகங்களும்,விக்கிலீக்ஸும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

மாறாக இலங்கையில் இராணுவம் சார்ந்த குறிப்பிட்ட embeded photo-videographers தவிர பொது ஊடக இலங்கை,மேற்கத்திய,இந்திய பத்திரிகை,தொலைக்காட்சியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் மூடிமறைக்க திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது.

போரில் மக்கள் சாவது இயற்கைதான் என்ற ஜெயலலிதாவின் முந்தைய நிலைக்கும் திட்டமிட்டே மக்களை இலங்கை அரசு கொன்றுள்ளது என்ற உண்மை வெளிப்பட்ட இப்போதைய காலகட்டத்திற்கும் வித்தியாசமுள்ளது.

war excess is there to see and cannot be verified if it is 40000 or 1,70,000 according to UN and human rights groups.

தனி ஈழம் கோரிக்கை வெற்றியடைகிறதோ இல்லையோ சம உரிமை இல்லாத சட்டங்கள் இருக்கும் வரை ஈழம் நோக்கிய கோரிக்கை சரியென்றே நினைக்கின்றேன்.ஒன்றுபட்ட இலங்கையே என்பதை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதும் அந்த முடிவை தொடர்ந்த வாழ்க்கையை ஈழத்து மக்கள் அமைத்துக் கொள்ளட்டும்.இந்த முடிவை எடுக்க இப்பொழுது எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

தற்போதைய கூட்டணிக்கலைப்பு சதுரங்கத்தால் ஜெயலலிதாவின் 40க்கு 40 கனவு சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்ற போதிலும் போராட்ட அணுகுமுறை,ஆட்சி செயல்பாட்டால் ஜெயலலிதாவின் பாராளுமன்ற எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளது.போகிற போக்கைப் பார்த்தால் தி.மு.க விஜயகாந்துடனும் அ.தி.மு.க வைகோவுடனும் கூட்டணிக்கான சாத்தியமிருக்கிறது.

மன்மோகன் சிங் மிகவும் களைப்பாகி விட்டார்.பாரளுமன்ற தேர்தல் ஐந்தாண்டு பூர்த்தியாவதற்கு முன்பே வருவது நல்லது.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!இன்னுமா புரியலை!அவ்வ்வ்வ்!

சீனா,ரஷ்யா இலங்கைக்கு வெளிப்படையாக உதவுகிறது.அமெரிக்கா ஐ.எம்.எஃப் உதவி என இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவதோடு மனித உரிமை மீறல்கள் எனவும் காய்நகர்த்துகிறது.ஒரு வேளை ராஜபக்சேக்களை கவிழ்க்கும் திட்டமாக கூட இருக்கலாம்.எனவே அமெரிக்க தீர்மானம் நீர்த்துப்போயிருந்தாலும் கூட கடந்த நான்காண்டுகளில் பல தரப்பட்ட குரல்கள் உக்கிரமாகவும்,டிப்ளமெட்டிக்காகவும் தமிழர்கள் தரப்பில் எழுந்திருந்தாலும் கூட நோஞ்சான் அமெரிக்க தீர்மானம் மட்டுமே இலங்கைப் போர்க்குற்றங்கள் மீது அனைவரின் பார்வையையும் திருப்பியிருக்கிறது.கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் இன்னும் இருப்பதால் கிடைத்த அமெரிக்க துரும்பை வைத்துக்கொண்டாவது கரையேறுவது நல்லது.ஈழத்தமிழர்களின் மீதான அக்கறை கொண்ட கம்யூனிஸவாதிகளும் இருக்கிறார்கள் என்ற போதிலும் கம்யூனிச போராட்டத்தின் வலிமை தீர்வுகளில் வந்து சேராமல் அமெரிக்க கொள்கைகள் பிரச்சினையை திசை திருப்பி விடும்.எனவே அமெரிக்க நிலை சார்ந்த போராட்டமே வெற்றிக்கு வழிவகுக்கும்.

பெப்சி தடை என மாணவர்கள் போராட்டம் செய்யப்போவதாக ஒரு மாணவர் சொன்னார்.பெப்சி தடை ஏற்கனவே ஈராக் போருக்கு முன்பு லண்டனில் பரிசீலனை செய்த ஒன்று.

பம்பாயில் ஒரு பையன் இட்லியோடு சாம்பாரையும் சேர்த்து உறிஞ்சி விட்டு தண்ணீருக்கு பதிலாக பெப்சியை குடித்த போது எனக்கு ஒரே சிரிப்பு:)

நம்ம பசங்க இட்லிக்கு பெப்சி குடிக்கிற மாதிரி யாராவது இருந்தால் நானும் வந்து போரட்டத்தில் கலந்துக்குறேன்:)

Gm said...

good job.... my site www.tamilkangal.blogspot.in

ஜோதிஜி said...

என் தளத்தை ஈழம் குறித்து புள்ளி விபரங்களோடு அறிய உங்கள் தளம் பலருக்கும் உதவக்கூடும்

Unknown said...

பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

usha.digitalinfo said...
This comment has been removed by the author.
usha.digitalinfo said...
This comment has been removed by the author.
usha.digitalinfo said...
This comment has been removed by the author.
usha.digitalinfo said...
This comment has been removed by the author.
usha.digitalinfo said...
This comment has been removed by the author.