Followers

Wednesday, March 20, 2013

வை.கோ vs மாணிக் சந்த் -2009 பாராளுமன்ற தேர்தல்

விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.

விருதுநகர் தொகுதியென்றவுடன் காமராஜரின் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் நம்பிக்கையான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மாவட்டம் என்பதால்தான் பெயர்,முகம் அறிமுகமில்லாத மாணிக் சந்த் என்பவர் வை.கோ என்ற தமிழகம் அறிந்த கட்சித்தலைவரை தோற்கடிக்க முடிந்தது என்று நினைத்திருந்தேன்..மேலும் விருதுநகர் மாவட்டம் அண்ணாச்சிகளின் வியாபார முன்னேற்றங்களோடு கல்வி வளர்ச்சியிலும் முன்னேறிய மாவட்டம் என்ற கணிப்போடு வெளிநாடுகளில் படிக்கும் குழந்தைகளோடு ஒப்பிடும் போது தமிழக குழந்தைகளுக்கு வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும் கூட ஐ.க்யூ இயல்பாகவே அதிகமென விருதுநகர் நண்பர் ஒருவர் பெருமைப்பட்டுக்கொள்வார்.

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்பட பேசு நிகழ்ச்சியில் மாணிக் சந்த் என்ற இளைஞரைக் காண நேரிட்டது. கிட்டத்தட்ட நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத ஸ்டண்ட் காட்சியில் நடித்தால் டூப்ளிகேட் போடுவதற்கு வசதியான முக அமைப்பு.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மகேந்திரனோடு மாணிக் சந்த் விவாதிக்கும் போது இருவருக்கும் இலங்கை பிரச்சினையில் தங்கள் நிலைப்பாடுகளில் உணர்ச்சி வசப்பட ஒருமைத் தன்மையில் மாணிக்சந்த் ஒண்டிக்கு ஒண்டி எங்கே வரட்டும் என கோதாவில் இறங்கினார்.

விவாதத்தில் கோபம் பொங்குவது அதுவும் இலங்கைப் பிரச்சினை,அமெரிக்க தீர்மானம் நீர்ந்துப் போன நிலை,காங்கிரஸின் மத்திய ஆட்சி நிலைப்பாட்டில் தயக்கம் போன்ற சூழலில் உணர்ச்சி வசப்படுவதும் கூட தவறில்லை.பதவிகள்,பொறுப்பு இரண்டாம் பட்சம்தான்.அடிப்படையில் உணர்வுகளே முதன்மை வகிக்கின்றன என்பதால் காரசார விவாதங்களை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் விருதுநகரில் செயல்படாத ஒரு ரோபோவை உருவாக்கி அதன் கையில் காங்கிரஸ் கொடியைக் கொடுத்து கழக கூட்டணிகளில் ஏதாவது ஒன்றின் துணையோடு நிற்க வைத்தாலும் கூட ரோபோ ஜெயித்து விடும் போல் தெரிகிறது.

நேர்பட பேசு விவாதத்தின் போது மகேந்திரன் அமெரிக்க வரைவு தீர்மானம் குறித்தும் ஐ.நா மனித உரிமைக்குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் மனித உரிமைக்குழு அறிக்கை பற்றியும் குறிப்பிட்டார்.மாணிக் சந்த் எம்.பி யின் வரிசை வரும்போது மகேந்திரனை திருத்தும் விதமாக நவநீதம் பிள்ளையின் பெயர் நவீன் பிள்ளையென்றும் அவர் ஒரு ஆண் என்றும் விளக்கெண்ணை விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம்! இந்த மாதிரி களிமண்ணுகளா பாராளுமன்ற உறுப்பினர்?

இந்த மாதிரி இன்னும் எத்தனை புத்திசாலிகள் பாராளுமன்றத்தில்,வெளியுறவுக் கொள்கையில்,பீரோகிரட்டிக் வரிசையில் நிற்கிறார்களோ!

விருதுநகர் மாவட்டம் செய்த இரண்டு வரலாற்றுத் தவறுகள்

1967ல் படுத்துகிட்டே ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டு காமராஜரை தோற்கடித்தது.

2009ல் வை.கோவை பாராளுமன்றம் அனுப்பாமல் மாணிக்சந்த் என்ற மகாபுத்திசாலியை எம்.பி பட்டம் சுமக்க வைத்தது.

விருதுநகரே! இனியாவது விழித்துக்கொள்!



15 comments:

http://thavaru.blogspot.com/ said...

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமோ .. ராஜநட

ராஜ நடராஜன் said...

வாங்க!ஏதாவது ஒரு அடையாளத்தோடு வாங்களேன்!

கண் கெட்ட பிறகு கண் மருத்துவரிடம் போவதில்லையா?கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கிறதில்லையா?

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ராச நட,

//இந்த மாதிரி களிமண்ணுகளா பாராளுமன்ற உறுப்பினர்?//

இப்போ எம்.பி ஆ போற எல்லாருமே களிமண்ணு புள்லையார்கள் தான், அவங்கலாம் டெல்லிப்போறதே அரசியல்யாவரம் செய்யத்தான்.

டெல்லில தமிழக எம்பீக்களை யாருமே மதிப்பதேயில்லையாம், ஆளுக்கு ஆள் மத்திய அரசின் சில பல அனுமதிகள் வாங்கிக்கொடுத்து காசு சேர்க்கும் தொழிலில் பிசி :-))

வைகோவை மண்ணைக்கவ்வ வைத்ததில் திமுகவுக்கும் பெரும்பங்குண்டு, முக்கியமா கேடிப்பிரதர்ஸ் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு மாணிக்கத்துக்கு உதவி செய்தார்கள்னு படிச்சேன்.

விகடன் குழுமத்தை கேடி சகோக்கள் விலைப்பேசியதை வைகோ வெட்ட வெளிச்சம் ஆக்கி காப்பாற்றினார்,அந்தக்கடுப்பு. இப்பவும் விகடன் குழுமம் வைகோவுக்கு நல்ல கவரேஜ் கொடுக்க அதான் காரணம்.

Amudhavan said...

மாணிக் சந்த் என்கிறீர்கள், மாணிக் தாகுர் என்கிறீர்கள். அவருடைய பெயர் மாணிக்தாகுர் என்று நினைக்கிறேன். ராகுல்காந்தியின் நண்பர் என்பதாகவும் அவர் 'எப்படியும்'ஜெயிக்கவேண்டும் என்பதற்காக ராகுல் தனி அக்கறை எடுத்துக்கொண்டார் என்றும் அதற்காகவே ஏகப்பட்ட பணமூட்டைகளுடன் அவரை விருதுநகருக்கு அனுப்பிவைத்தார் என்றும் அன்றைய ஊடகங்கள் சொல்லின.
தகுதி திறமை என்றெல்லாம் பாராமல் வேறு 'என்னென்னவோ' காரணங்களுக்காக ஒருவருக்கு ஓட்டளிக்கும் மக்களை மெஜாரிட்டியாக வைத்துக்கொண்டு நாம் நியாய அநியாயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த வரிசையில் தகுதியான சிலர் அவ்வப்போது தப்பித்தவறி வெற்றிபெற்றுவிடுவதும் நம்முடைய அதிர்ஷ்டத்தில் சேர்த்தி என்றுதான் நினைத்துக்கொள்ளவேண்டும் போலும்.

V said...
This comment has been removed by the author.
V said...

அவர் பெயர் மாணிக் தாகூர். வட இந்திய பெயர் போல இருப்பதால் மாணிக்க தாகூர் என்று கூறி தொகுதியில் விளம்பரம் செய்தனர். ஈழ இறுதி போரின்போது வைகோவை தோற்கடித்து விருதுநகர் மக்கள் இமாலய தவறு செய்தனர். ஒரு வேளை வைகோ நாடாளுமன்றம் சென்று இருந்தால் சில உயிர்கள் காப்பற்றப்பட்டு இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!அவர் பெயர் மாணிக் தாகூர் என்பதுதான்.மாணிக் சந்த் பீடாவுக்கான உள்குத்து சொற்பதம்:)

இங்கே பொட்டிக்கடைகளில் மாணிக் சந்த் பீடாவை தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் ஒளித்து வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

களவும் கற்றுமற என ஒருமுறை இந்த பீடாவை அரைத்து கொஞ்சம் தலை கிறுகிறுத்தது.போதைக்கு ஊறுகாய் மாதிரி மாணிக் சந்தில் எதெல்லாமோ கலப்பதாக கேள்வி.இவர் பெயரைப் பார்த்தவுடன் மாணிக் சந்த் நினைவுக்கு வந்து விட்டது.

பணம் பார்த்தும்,திறமைகள் பாராமலும் வாக்களித்தாலும் கூட இப்படியா அதிபுத்திசாலியைத் தேர்ந்தெடுப்பார்கள்?

ராஜ நடராஜன் said...

வத்திக்குச்சி!அவர் பெயர் மாணிக் தாகூர் என்பதை பதிவின் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.மற்ற மாணிக் சந்த் அவருக்கான உள்குத்து அடைமொழி.வை.கோ தேர்ந்தெடுக்கப்படாதது தமிழகத்துக்கு பெரும் இழப்பே.மீண்டும் ஒரு முறை வை.கோவுக்கு வாய்ப்பு கிடைக்குமென நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.நீங்க ஏதாவது ஒற்றர் படையில் வேலையில் செய்றீங்களா:)எதற்கென்றாலும் ஒரு பின்புல செய்தியைக் கொண்டு வந்துடுறீங்களே!

மாறன் பிரதர்ஸ் தீயா வேலை செஞ்சாங்கன்னு சொல்வதோடு தூத்துக்குடி ஸ்டெரிலைட் சுற்றுச்சூழல் போராட்டம் காரணமாகவும் வை.கோவுக்கு எதிராக பணம் புரண்டிருக்குமல்லவா?

நீங்க இரவு 1 மணி வரை வை.கோ மீட்டிங்க் கேட்டுட்டு இப்படியா அவரை அம்போன்னு விடறது:)

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!அவர் பெயர் மாணிக் தாகூர் என்பதுதான்.மாணிக் சந்த் பீடாவுக்கான உள்குத்து சொற்பதம்:)

இங்கே பொட்டிக்கடைகளில் மாணிக் சந்த் பீடாவை தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் ஒளித்து வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

களவும் கற்றுமற என ஒருமுறை இந்த பீடாவை அரைத்து கொஞ்சம் தலை கிறுகிறுத்தது.போதைக்கு ஊறுகாய் மாதிரி மாணிக் சந்தில் எதெல்லாமோ கலப்பதாக கேள்வி.இவர் பெயரைப் பார்த்தவுடன் மாணிக் சந்த் நினைவுக்கு வந்து விட்டது.

பணம் பார்த்தும்,திறமைகள் பாராமலும் வாக்களித்தாலும் கூட இப்படியா அதிபுத்திசாலியைத் தேர்ந்தெடுப்பார்கள்?

வவ்வால் said...

ராச நட,

ஒற்றர்ப்படைனு சொல்லி எனக்கு உலை வைக்க பார்க்கிறிங்களே அவ்வ்.

நான் பல பத்திரிக்கைகளும் வாசிப்பதால் வந்த வினை, மேலும் எங்காவது மைக்செட் ,ஸ்பீக்கர் கட்டி பேசினாலும் என்ன தான் பேசுறாங்கன்னு கேட்பதுண்டு.

சு.சாமியை தூக்கி சாப்பிடுறப்போல பல அதிரடி செய்திகளை சில பேச்சாளர்கள் மேடையில் கக்குவார்கள் :-))

இலங்கைக்கு சாதகமாக மத்திய அரசு இருக்க ஒரு காரணம் சரத்பவாரின் வியாபார நோக்கம்னு கூட செய்தி,ஆனால் ஏனோ தமிழக துப்பியெறியும் பத்திரிக்கைகள் அதையெல்லாம் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.

பவார் கூட கேடிபிரதர்ஸ், தனி மொழிலாம் வியாபாரக்கூட்டாம் , கேட்ட எனக்கு ,தலை தான் சுத்திச்சு :-))

ஆனால் சிலவற்றை ஒப்பிட்டு பார்த்தால் உண்மையாக இருக்குமோனு நினைக்க வேண்டியிருக்கு.

நம்ம அரசியல்வாதிங்க காசுக்காகவோ அல்லது ஏதோ ஒன்றுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ரொம்ப காலத்துக்கு முன்னர் மாருதி கார் கம்பெனியில் உள்ல மத்திய அரசின் பங்கை குறைக்க போராட்டம் எல்லாம் நடந்தது, சிலகாலத்துக்கு பின்னர் அப்படியே ஆறப்போட்டு , நினைச்சாப்போல பங்கை குறைத்து விட்டார்கள் ,சவுண்டு விட்டப்பார்ட்டிகள் எல்லாம் இன்னும் அரசியலில் தான் இருக்கு :-))

அதே போலதான் எல்லா பிரச்சினையிலும், ஆறப்போட்டு நினைச்சதை செய்துவிடுவார்கள்.

// தூத்துக்குடி ஸ்டெரிலைட் சுற்றுச்சூழல் போராட்டம் காரணமாகவும் வை.கோவுக்கு எதிராக பணம் புரண்டிருக்குமல்லவா?//

வைகோ ஸ்டெர்லைட் பிரச்சினையில் மடங்கிட்டார்னு கேள்வி.

வைக்கோ எந்த பிரச்சினையிலும் உறுதியாக நிற்பதில்லை, எப்போ கொஞ்சம் தீவிரமாக தலை தூக்குதோ அப்போ மட்டுமே சீனுக்கு வரார். இதுவே அவர் மீதான நம்பிக்கை உருவாகமல் தடுக்குது.

இப்பவும் ஸ்டெர்லைட் இயங்கிக்கொண்டு தான் இருக்கு, ஆனால் இப்போ மதுபான எதிர்ப்பு யாத்திரைக்கு போயிட்டார் :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!அநியாயத்துக்கு பொய் சொல்ல கூடாது.பத்திரிகை படிச்சுட்டு,மைக்செட் மீட்டிங்கில் எங்கே நீங்க சொல்ற ரகசியமெல்லாம் வெளியே வருது? நன்னிலம் நடராசன், வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம்ன்னு எல்லாம் கலாய்க்கிற பார்ட்டிகளாச்சே:)

நீங்க மைக்செட் பார்ட்டின்னு சொன்னதால இதோ ஒரு பரிசு:)

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1119

வை.கோ வையும் சுட்டியில் சேர்த்துக்கலாம்.ஆனால் சரியான நேரத்தில் அந்தர் பல்டி அடித்து பேரைக் கெடுத்துக்கொள்கிறார் மனுசன்.எப்படியிருந்தாலும் 2014ல் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கட்டும்.

வவ்வால் said...

ராச நட,

எங்கே ஓய் கடையை தொறந்து வச்சுட்டு ,காத்து வாங்க போயிட்டீரா சத்தமே காணோம்?

நாம மைக் செட் பார்ட்டிங்க பேசுறது மட்டும் கேட்பதில்லை, அப்பாலிக்கா தனியாவும் பேசி இருக்கோம், சமயத்துல கூட சேர்ந்து சரக்கும் அடிச்சி இருக்கேன்,ஆனால் என்ன ஒன்னு நம்மள ஒரு பச்சப்புள்ளனு சொல்லிடுவாங்க, நாமளும் கடைசி வரிக்கும் ஒன்னும் தெரியாத பேக்கு போல ரியாக்‌ஷன் காட்டிக்கிட்டு இருக்கணும் கொடுமய்யா அது அவ்வ் :-((

ஜோதிஜி said...

நானும் பெயரைப் பார்த்ததும் தப்பாக எழுதி விட்டீங்களோ என்று தான் நினைத்தேன்.

வைகோ அந்த தேர்தலில் ஜெயிக்கும் வழியை பார்ப்பதை விட்டு ரொம்ப தெனாவெட்டாக ஊர் ஊராக திரிந்ததற்கு தண்டனை தான் இது.

எனக்கும் வருத்தம் தான்.