Followers

Tuesday, March 31, 2009

அருந்ததிராயின் பார்வையில் இலங்கை

அருந்ததிராய் பற்றி முன்னுரை கூறுவதற்கு அவசியமில்லாத காரணத்தால் நேராக அருந்ததிராயின் பதிவின் கருத்துக்குப் போய் விடலாம்.அதற்கு முன் இந்தப் பதிவை ஒட்டிய அருந்ததிராயின் கருத்துக்கு வெட்டி ஒட்டலாக ஆங்கில மூலத்தை அன்புடன் பாலா பதிவிட்டுள்ளார்.அதே ஆங்கில மூலத்தை சுகுணா திவாகரும் அவரது பாணியில் தமிழ்படுத்தியுள்ளார்.பதிவும் பின்னூட்டங்களும் அவரவர் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லும்.

இலங்கையின் மனித அவலங்களும் அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளும் மனித உரிமையும், இனவெறிக்குமிடையே எதுவெல்லும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.தமிழக அரசியல் ஈழம் குறித்த பார்வையை பொம்மலாட்டமாகி விட்டது.அந்த சோகத்தில் நானும் ஏனைய மனித நேயம் கொண்ட பதிவர்களும் நிலை தடுமாறியது ஈழம் குறித்த பதிவுகள் குறைவதிலிருந்து நன்கு தெரிகிறது.தமிழக அரசியல் மட்டும் ஈழம் குறித்த தீர்வாகி விட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் தமிழக ஓட்டு அரசியலையும் ஈழத்தையும் தனித்து தனித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வரும் தேர்தலை கட்சி,ஈழம் என்ற பார்வையில் பார்க்காது தங்கள் தொகுதியில் திறமையுள்ளவர் என்ற தனிமனிதப் பார்வையில் மட்டுமே இந்த தேர்தலை தமிழர்கள் அணுக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.இலங்கை ஒரு பெரும் வலைப்பின்னலாய் சூழ்ச்சிகள்,சுயநலங்கள்,அரசியல்,தீவிரவாதப் போர்வை என பல பரிமாணங்களில் நிகழும் நிகழ்வுகள் பிரதிபலிக்கிறது.இலங்கை அரசு நினைப்பது போல் மனித அவலங்களை எளிதாக உலகின் கண்களில் இருந்து மறைத்து விட முடியாது.நிகழ்ந்தவைகள் தோல்விகள் என்ற விரக்திகளை களைந்து நடப்பவைகளின் நியாயங்களை எழுத்துக்களாக பதிவு செய்வது பதிவுலக எழுத்தாளர்களின் கடமையாகிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களுக்குட்பட்டு தங்கள் குரல்களை ஒலித்துக்கொண்டே இருப்பதும் அவசியமாகிறது.கட்சி அரசியலால் குழம்பியிருந்தாலும் தமிழகப் பொதுமக்களின் உணர்வுகள் ஈழத்து மக்களுக்கு எப்பொழுதும் ஆறுதல் தருவதாகவே இருக்கும்.

இனி அருந்ததிராய் சொன்னது நான் புரிந்துகொண்டபடி.

வடமுனையில் தோன்றும் சப்தமின்மை ஒரு பயங்கரத்தை உருவாக்கும் சாத்தியங்களை தோற்றுவிக்கின்றன.இந்தியாவிலும் முக்கியமாக உலக அரங்கிலும் எந்தவிதமான ஊடகச் செய்திகள் இல்லாமையும் அல்லது அங்கு என்ன நிகழ்கிறது என்ற உண்மை அறிய முடியாத நிலையும் ஏன் என்பது மிகவும் கவலைக்குரிய விசயம்.

கசியும் சில செய்திகளில் காணப்படுவது என்னவென்றால் இலங்கை அரசாங்கம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கொஞ்சமாவது தென்பட்ட ஜனநாயகத்தையும் அத்திப் பழ இலைகளாய் தனித்தனியாகப் பிரித்தெடுத்து, பேசமுடியாத அளவுக்கு குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக செய்கிறது.

ஒருவனோ ஒருத்தியோ நிரூபிக்காத வரையில் தமிழன் ஒரு தீவிரவாதி என்ற கொள்கையில் பொதுமக்கள் வசிக்குமிடம்,மருத்துவமனைகள்,தஞ்சம் புகுந்த இடம் என்று குண்டுகளைப் பொழிந்து அனைத்தையும் போர்க்கள பூமியாக மாற்றிவிட்டது.200,000க்கும் மேற்பட்ட மக்கள் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர் என்று நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.போர் டாங்கிகள்,விமானங்கள் உதவியுடன் ராணுவம் முன்னேறிச் செல்கிறது.

கூடவே,தங்கள் நில புலன்களைத் துறந்த மக்களை மன்னார்,வவுனியா மாவட்டங்களில் குடிபுகுத்துவதாகக் கூறி "நலன் கிராமங்கள்" அமைப்பதாக அரசாங்க அறிக்கைகள் தெரிவிக்கின்றன.டெய்லி கிராஃப் செய்தியின்படி (Feb 14, 2009) இந்த கிராமங்கள் "சண்டைப்பகுதியிலிருந்து தப்பித்தோடும் பொதுமக்களை கட்டாயமாக அடைத்து வைக்கப்படும் இடங்கள்".

பட்டவர்த்தனமாக அல்லது அப்பட்டமாக சொல்வதென்றால் நாசிப் படையின் வதை முகாம்களா இவை? இலங்கையின் முந்தைய வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர டெய்லி டெலிகிராஃப் க்கு சொன்னது "சில மாதங்களுக்கு முன்னால் கொலம்போவில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற கருத்தில் தமிழர்கள் அனைவரும் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் சொன்னது.ஆனால் இந்த தனிமனித விபரங்களை 1930ல் நாசிகள் உபயோகித்தது போல் அரசாங்கம் தங்கள் குறுகிய நலன்களுக்கு உபயோகிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.அனைத்து தமிழ் மக்களையுமே தீவிரவாதிகள் என்று அரசாங்கம் முத்திரை குத்தப் போகிறார்கள்.

அரசின் குறிக்கோளான தமிழ்விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றாக அழிக்க நினைப்பது ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கான அறிகுறியைக் காட்டுகிறது.ஐ.நாவின் அறிக்கையின் படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.மேலும் பலர் சொல்ல முடியாத அளவுக்கு பலத்த காயங்களுடன் உள்ளனர்.கண்ணில் கண்ட சாட்சிகள் சிலரின் சொற்களின் படி போர்ப்பகுதிகளின் நிலை நரகம் போல் காட்சியளிக்கிறது.

இவைகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது அல்லது இலங்கையில் நிகழ்வது என்னவென்று தெரியாதவண்ணம் மிகத் தந்திரமாக மக்களின் பார்வைக்குட்படாதவாறு மறைக்கப்படுவெதென்பது ஒரு திறந்தவெளி இனவெறிப் போரே. இலங்கையின் தண்டிக்கப்பட இயலாத சுதந்திரத்துடன் செய்யும் இந்தக் குற்றங்கள் இனவெறுப்பின் முகத்திரையைக் கிழிக்கிறது.இந்த செய்கைகள் முதலாவதாக தமிழர்களை தனிமைப்படுத்தவும் அவர்களது உரிமைகளைக் குறைக்கவுமே பயன்படுத்தப் படுகிறது.இந்த இனவெறுப்பு நீண்ட வரலாறு,சமூகத்தில் தனிமைப்படுத்தல்,பொருளாதர தடை,திட்டமிட்ட படுகொலைகள்,வன்கொடுமைகள் நிறைந்தது. பல ஆண்டுகளாய் நிகழும் இந்த உள்நாட்டுப் போர் துவக்கத்தில் அமைதியாக,சத்யாக்கிரகப் போராட்டமாகவே வேர்கொண்டது.

ஏன் இந்த மவுனம்? இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர சொல்வது " ஒரு சுதந்திரமான ஊடகம் சுத்தமாக இப்பொழுது இலங்கையில் கிடையாது" சமரவீர மேலும் சொல்வது,"வெள்ளை வாகனம்,சாவுக் குழு என சமுதாயமே பயத்தால் உறைந்து கிடக்கிறது." எதிர்க் குரல் எழுப்புவர்களும் முக்கியமாக பத்திரிகையாளர்கள்,ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள்.

உலக ஊடகவியலாளர் அமைப்பு கூறுவது," இலங்கை அரசாங்கம் ஒரு கூட்டுக் கலவையாக தீவிரவாத எதிர்ப்பு சட்டங்கள்,ஆள்கடத்தல்,கொலை என ஊடகவியலாளர்களின் எதிர்ப்புக் குரல்களை அடக்குகிறது.

இதில் வருத்தப்பட வேண்டியதும் இன்னும் உறுதி செய்யப்படாத செய்திகளும் இந்திய அரசாங்கம் ராணுவ தளவாட உதவிகளை மனிதர்களுக்கு எதிரான குற்றங்களாய் இலங்கை அரசுக்கு செய்கிறதென்பது.இது உண்மையானால் இது கோபத்திற்கும் கண்டனத்துக்கும் உரியது.மற்ற நாட்டின் அரசுகள் எப்படி?பாகிஸ்தான்?சைனா? இவர்கள் எந்த உதவியை அல்லது நிலைமைகளை சீர்கெடுக்கிறார்கள்?

தமிழ்நாட்டில் இலங்கையின் யுத்தத்தின் தாக்கத்தால் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குத் தானே தீக்குளித்துக் கொண்டார்கள்.
பொதுமக்களின் கோபம்,ஆத்திரம் பெரும்பாலானவைகள் நியாயமானதும் சில அரசியல் சூழ்ச்சிகள் கொண்டதும் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதில் ஆச்சரியப்படத்தக்கது இந்த ஆதங்கங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளை பயணிக்காதது.ஏன் இந்த அமைதி?இந்தியாவில் வெள்ளை வாகனம் போன்ற பயங்கள் இல்லையே,குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில்.இலங்கையில் நிகழும் செயல்களின் அளவும் இந்த அமைதியும் மன்னிக்க முடியாதவைகளாகும்.மிக முக்கியமாக இந்தப்பிரச்சினையில் பொறுப்பற்ற முறையில் கால் நுழைத்த இந்திய அரசாங்கத்தின் நீண்ட கால வரலாறான முதலில் ஒரு பக்கத்தில் சார்ந்தும் பின் அடுத்த பக்கத்துக்கு சார்பாக இருப்பதும்.

பலரும்,முக்கியமாக நானும் இந்தப் பிரச்சினை குறித்து மிக முன்பே பேசியிருக்க வேண்டும்.ஆனால் பேச இயலாமைக்கு காரணம் போர் பற்றிய போதிய அளவு உண்மைகளும் செய்திகளும் கிட்டாமையே.எனவே பலர் கொல்லப்படும் நிலையிலும் மேலும் பலர் வதை முகாம்களுக்கு செல்லும் நிலையிலும், 200,000 மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் நிலையிலும் ஒரு இனப் படுகொலை நிகழப் போகும் தருணத்திலும் ஒரு மயான அமைதி நிலவுகிறது இந்த மாபெரும் தேசத்தில்.

இது ஒரு மனித அவலம்.உலகம் இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் தாமதிக்காமல் இன்னும் காலதாமதமாகும் முன்.

Sunday, March 29, 2009

சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள்

மீ த பர்ஸ்ட்,ரிபீட்டே,சிரிப்பான் போன்ற வாக்கியங்கள் பதிவுகளில் மறுமொழியாளர்களின் யாருக்கும் சொந்தமில்லாத லோகோ மாதிரி ஆகி விட்டது.பதிவர்கள் பெரும்பாலும் தங்களது நையாண்டித்தனத்தால் பின்னூட்டமிடுவது பல நேரங்களில் மனதுக்குள் சிரிக்கவும்,புன்முறுவல் பூக்க வைக்கவும் செய்கிறது.சில சமயங்களில் முதலுக்கே மோசமாகி விடுமோன்னு இஃகி!கி என்ற வாய்விட்டு சிரிக்க வைத்து விடும் பதிவுகளும் பின்னூட்டங்களும் உண்டு.அப்படி ரசித்தவை, சிரித்தவை சில!

பதிவர் வருணின் ஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும் (http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_10.html ) பதிவில்

துளசி டீச்சரின் அசத்தல் பின்னூட்டம் ஒன்று .

// எதுக்கு இப்படி வேண்டாத சந்தேகம் உங்களுக்கு வந்துருக்கு.

எதா இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்தும்/கேவலப்படுத்திக்கும் உரிமை நமக்கு மட்டும்தான்.

அதென்ன மத்த ஆளுங்க அந்த உரிமை எடுத்துக்கறது?

நானும் இன்னும் கடவுள் பார்க்கலை.

சேரிநாயைப் பார்த்துட்டேன்.

நாயைக் கண்டால் கடவுளைக் காணோம்:-))))

மற்றொன்று பதிவர் கவிதாவின் நாமக்கல் சிபியைக் கிண்டலடிக்கும் நானெல்லாம் ஊர்ப் பெயரை கூடவே வச்சு சுத்துவதில்லை என்றது.

பதிவர் கவிதாவின் நின்று போன என் நிச்சயதார்த்தம் ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/blog-post_24.html ) சீரியசான பதிவில் பதிவர் நாமக்கல் சிபியின் பின்னூட்டம் இப்படிப் போகிறது....

நாமக்கல் சிபி: //விழுப்புரம் கவிதா! உங்களுக்கு பிடிச்சு இருந்தா வச்சுக்க வேண்டியது தானே, யாரு தடுக்க போறா?//

இப்படிக்கு

'நாமக்கல்' சிபி!

பதிவர் கவிதாவின் மறுமொழி பாருங்கள்:)

கவிதா: //விழுப்புரம் கவிதா! உங்களுக்கு பிடிச்சு இருந்தா வச்சுக்க வேண்டியது தானே, யாரு தடுக்க போறா?
//

கவிதா கெஜானனன் னே போதும்.. நான் என்ன சில பேரு மாதிரி ****** ஆ?? ஊர் பேரை கூடவே எடுத்துக்கிட்ட சுத்தறத்துக்கு... :)

(உங்களுக்கு என்ன வார்த்தை பிடிக்கிறதோ அந்த வார்த்தையை பில் பண்ணிக்கவும்..)

சிபி உங்களுக்கும் தான்... :))

எனது துண்டு போட்டுக்கவா பதிவில் வருங்கால முதல்வர்

"தஞ்சாவூர்லயும் உண்டு, கிராமத்துக்கு போகிற அனைத்து பஸ்ஸிலும் துண்டு போடும் பழக்கம்.

நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு."

ஆஸ்கர் நடிகையை பார்ட்டியில் சந்திக்கும் விக்கிரமாதித்தன் கதைகள் பதிவரின் வேதாளத்தின் நையாண்டித்தனம்.

வேதாளத்துக்குப் போட்டியா ஆவிகள் இருப்பது உண்மை எழுதும் கனவுலகப் பதிவர்

செய்யறதுக்கு வேலை இல்லேன்னா வரக்கூடிய பிரச்சினைகள்...ன்னு சக்கர நாற்காலியை சுழற்றி விட்டு சுற்றி சுற்றி வந்தேங்க பாடும்:)

இப்படி பதிவிலும் பின்னூட்டத்திலும் முத்து மாதிரி சில கிடைத்தால் பரவாயில்லை.ஆனால் பதிவும் பின்னூட்டமும் கும்மியும் குசும்புத்தனமாகவே இருக்கும் குசும்பனின் குசும்பு பற்றி என்ன சொல்ல? அக்கம் பக்கம் பார்த்துப் படி:)))

டிஸ்கி: வெண்ணிலா கபடிக்குழு 50 புரோட்டா போட்டியாளர் மாதிரி தேறும் பதிவர் யாராவது இருக்கிறீங்களா?

Wednesday, March 25, 2009

துண்டு போட்டுக்கவா?

பதிவுகளிலும் துண்டு போட்டுக்க முடியும் என நான் தெரிந்து கொண்டது கவிதாயினி ராப் பின்னூட்டங்கள் மூலமாக.பதிவுகளில் துண்டு போட்டுக்கவே அரக்க பரக்க ஓடிவருகிறோம்.வாகனம்(பஸ்)பேருந்து நிலையம் வருவதற்கு முன்னே கொட்டக்கொட்ட விழித்து துண்டுபோட்டுக் கொண்டிருந்த கவிதாயினி ராப் எங்கே போனார் என்று தெரியவில்லை.எங்கிருந்தாலும் தமிழ்மணம் மேடைக்கு வரவும்.

இப்படி பதிவில் முதல் இடம் பிடிக்க துண்டு போட ஓடுவது மாதிரி தமிழகத்தில் வாகனங்களில் துண்டு போட்டுக்கொள்ளும் பழக்கம் மற்ற மாவட்டங்களில் எங்கிருந்து துவங்கியது என தெரியவில்லை.ஆனால் எனக்குத் தெரிந்து கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி-வால்பாறை வாகனம். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பொள்ளாச்சி-வால்பாறை வாகனத்துக்கு துண்டு போட யாராவது முயற்சி செய்திருக்கிறீர்களா?

பொள்ளாச்சி-கோவைக்கு சுமார் 10 நிமிடத்திற்கு ஒரு முறை வாகனம் கிட்டும்.அதுவே மேற்கே போகாமல் தெற்கு நோக்கி வால்பாறை பயணம் செய்ய வேண்டுமென்றால் சுமார் 30 நிமிடம் அல்லது 45 நிமிடத்திற்கும் மேல்தான் ஒரு வாகனம் வந்து நிற்கும்.ஆழியார் அணைக்கட்டு வரையுள்ள சமதரைப் பகுதி தாண்டினால் மலை மேல் நோக்கிய,மரங்கள் அடர்ந்த ஊசி முனை வளைவுகளும் வாகன ஓட்டுனர் மிக கவனமாக ஓட்டவேண்டிய குறுகிய வளைந்த சாலைகள் கொண்ட நீண்ட பயணமது.

(முதல் இந்திய விமானி JRD Tata மாதிரி முதன்முதலாக துணிந்து மலைப்பாதையில் வண்டி விட்டவர் ABT மகாலிங்கத்தின் அப்பா நாச்சிமுத்து என நினைக்கிறேன்.)

பெரும்பாலான பயணிகள் பொள்ளாச்சி,ஆழியார்,அட்டைகட்டித் தாண்டி வாட்டர்பால்ஸ் வரையோ அல்லது அதையும் தாண்டி ரொட்டிக்கடை தாண்டி வால்பாறை வரை பிரயாணம் செய்யும் கால இடைவெளி சுமார் 3 மணி நேரமிருக்கும்.இவ்வளவு நீண்ட வளைந்த பயணத்திற்கு இடம்பிடிக்க வேண்டியே கோவை மாவட்டத்தில் முதல் முறையாக துண்டு போடும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாமென நினைக்கிறேன்.

மற்ற திசைகளிலும் நான் பயணித்திருந்தாலும் துண்டு போட்டோ அல்லது வண்டிக்குள் முண்டியடித்தோ பயணித்ததில்லை.நான் துண்டு போடவா பதிவு போடுவேன் என்று நினைத்து எனது கருத்துக்கு வலு சேர்க்கவோ என்னவோ நடிகர் மணிவண்ணன் ஒரு திரைப்படத்தில் "ஏண்டா பொள்ளாச்சி பஸ்க்கு அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்கிறீங்க என்பார் ".

பொள்ளாச்சி-கோவைக்கு வண்டி போகப் போக பிரயாணிகளை ஆள் சேர்க்கும் வாகன ஓட்டுனர் எதிர்மாறாக பொள்ளாச்சி வால்பாறை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்தியவுடன் கம்பி போட்ட ஒரு ரூமுக்குள்ளோ அல்லது இருவரில் ஓட்டுனர் டீ குடிக்கவோ போய்விடுவார்.நீண்ட பயணத்தில் இடம் கிடைக்காதோ என்ற ஆதங்கத்தில் துவங்கியதே துண்டு போடுவதோ அல்லது முண்டி அடிப்பதோ பழக்கம்.

செக்கிங்க் இன்ஸ்பெக்டர் எனும் சோதனைப் பதிவாளார் அல்லது கலெக்சன் எனும் காசை வாங்கும் காசாளர் யாரோ ஒருவர் பொள்ளாச்சி வாகன நிலையத்தில் எப்பொழுதுமே இருப்பார்.வாகனம் பேருந்து நிலையத்தை வந்தடையும் இடைவெளியில் யார் முன்பு வருகிறார்களோ அவர்களுக்கு அந்த அந்த இருக்கைக்கான இடத்தில் உட்காரும்படியாக பயணச்சீட்டை முன்பே பயணிகளுக்கு தரலாமே.இதனால் முண்டியடித்தல் தவிர்க்கப் படுமல்லவா?

சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும் முண்டியடிப்பதையும்,துண்டு போடுவதையும் முன்னுரிமைச்சீட்டு தந்து நெரிசலைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் வாகன நிலையத்துக்குள்ளும் கணினிகள் புகுந்து விளையாடும் காலகட்டத்தில் வாகனக் காப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில் மக்கள் பதிவுகளுக்கும் வந்து துண்டு போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.செய்வார்களா?

Monday, March 23, 2009

கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு

மாடு,எருமை,துணி துவைக்கிற ஆறுன்னு முங்கியெழுந்த எனக்கு சின்னவயசுல கறுப்பு (கூடவே கற்பு)ன்னா என்னன்னே தெரியாது.பத்துக்கு ஒண்ணு கொஞ்சம் வெள்ளையடிச்ச மாதிரி தேறுவான்.மொத்த விகிதாசரத்துல கறுப்புதான் அதிகமிங்குறதால அதப் பத்தியெல்லாம் ஒரு நினைப்பே இல்லாமல் இருந்தது.

ஆனால் டவுனுக்குப் படிக்க(அது என்னவோ பி.ஏ வாம்) போயிட்டு வந்த ஒரு பக்கத்து வீட்டு அண்ணன்(பேரு மறந்து போயிடுச்சு)படிச்ச எளந்தாரிங்கிறதால கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாத்தான் திரிவாரு.அப்புறம் ஏதோ கெவர்மெண்ட் வேலை வேற கெடச்சா மனுசனுக்கு சொல்லவா வேண்டும்.இம்புட்டு கொடுத்து வச்ச மனுசனுக்கு ஒரே ஒரு பிரச்சினை என்னன்னா நாம கறுப்பா பொறந்துட்டேமேன்னு.மூஞ்சியக் கழுவுனா கண்ணாடி பார்க்கிறது,பவுடரப் போட்டா கண்ணாடியப் பார்க்கிறதுன்னு மனுசன் அந்த வயசுக்கே உள்ள தன் உணர்வுல மிதந்துகிட்டிருந்தாரு.கூடவே குமுதம்,விகடன் வாங்கிப் படிக்கிற பழக்கத்தால ஓசு குமுதத்துக்கு ஆசைப் பட்டு நான் அவர் வீட்டுக்கும் போயிட்டிருந்தேன்.

நான்:அண்ணா குமுதம் படிச்சிட்டீங்கன்னா கொடுங்களேன்.

அண்ணன்: இந்தா எடுத்துகிட்டுப் போ.டேய் நடராஜா நான் இன்னைக்கு கொஞ்சம் சிவப்பா இருக்கேனா.

நான்:ஆமாண்ணா நேத்தைக்கு விட கொஞ்சம் சிவப்பாத்தான் இருக்கிறீங்க.

இப்படி அவரைப் பார்க்கும் போதெல்லாம் என்ன பேசினாலும் பேச்சு இறுதியில் சிவப்புல வந்து முடிந்து விடும்.

நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.இப்படி ஒரு நாள் அண்ணன்கிட்ட பேசிகிட்டுருக்கும் போது நடராஜா பார் நான் எப்படி சிவப்பாயிட்டேன்னு முண்டா பனியனைத் திறந்து நெஞ்சைத் திறந்து காட்டுனாரே பார்க்கலாம்:)

இப்படி அவர் சொன்னதைப் போய் கூட்டாளிக கிட்டச் சொல்லிச் சிரிச்சி நெஞ்சழகன்னு பேரு வச்சோம்.

சரி அத விடுங்க! ஒரு நாள் பாவாடைப் பிராயத்திலிருந்த அத்தை மகள் தனத்துகிட்ட என்னைக் கட்டிக்கிறியான்னு விளையாட்டுக்கு கேட்டதுக்கு மாட்டேன் நீ கறுப்பாயிருக்கேன்னுடுச்சு.ஆனா இன்னொரு தூரத்து சொந்தம் கன்னியம்மா நம்ம கறுப்பு கவர்ச்சியிலோ அல்லது விளையாட்டுக்கு சித்தி வீட்டுல தங்கச்சி கூட நான் சேலை கட்டி விளையாண்டுதுல மயங்கியோ சித்தி வீட்டுக்கு அடிக்கடி ஓடி வந்துரும்.ரேடியோப் பொட்டில வர்ற இங்கிலீசு நியூசுல என்ன சொல்றாங்கன்னு என்னோட ஆங்கிலம் பரிட்சிக்கும்.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றாங்கன்னா இங்கிலிசுபீசுவேன்.(அவன் மூக்கால பேசறதெல்லாம் அப்ப யாருக்குப் புரியும்?இந்த மாதிரி இங்கிலீசு குசும்புக்கெல்லாம் சிரிக்கிறது சென்னை சினிமாத் தியேட்டர்களில் சகஜமப்பா:)
எல்லாம் எங்கே எப்படி புருசன் வீட்டுல குடித்தனம் நடத்துதுகளோ?நான் கல்லூரி, திரவியம் ஓடி பாலைவனம் வந்துட்டேன்.சும்மா சொல்லக்கூடாது வெயிலுக்கும்,குளுருக்கும் கறுப்பு நல்லாவே தாங்குது!

Sunday, March 22, 2009

And the oscar goes to

சென்ற பதிவே நீளமாகி விட்டது.ஆஸ்கர் முழு நிகழ்வையும் கருத்தில் கொண்டு முந்தைய பதிவும் இப்பொழுதும் குறைக்க முடியவில்லை.மன்னிக்கவும்.கூடவே பரிட்சையில நல்ல பிள்ளையா கருத்தை மட்டும் கொண்டு 5 பக்கம் எழுதினா செமஸ்டருக்கு தள்ளி விட்டுட்டாங்க.அடுத்த செமஸ்டரில் அதே 5 பக்கத்தை 30 பக்கமா ரீல் விட்டா 60 மார்க் அள்ளிட்டு வருது.ஆஸ்கர் காரனே துண்டு துண்டாகத்தான் நிகழ்வைப் பொட்டலம் கட்டி வச்சிரிக்கான். நாம முழு பலாப்பலத்தை முழுசா உருச்சி வச்சி பதிவுக்குள்ள அனுப்பறோம்.அதனால .........

Hosting starting with a song.

Best supporting actress - Penelope cruz-vicky christina-Barcelona

Best original Screen play hosting - Steve martin and Tina fey said

"Importance of writing -Screen play-good poster

Every writer starts with a blank page
And every blank page was once a tree
And every tree was once a Chinese seed"

Best original screen play

Frozen River by Courtney Hunt
Happy go lucky by Mike Leigh
In Bruges (Bruz) by Martin McDonough
Milk by Dustin Lance
Wall-e Screenplay by Andrew Stanton, Jim Pearson

Oscar goes to Dustin Lance for milk

------------------------------------------------------------

Adapted Screenplay

The Curious case of Benjamin Button Screenplay by - Eric Roth-Screen story Eric Roth and Robin Evicord (Based on the short story by T.Scott Fitzgerald)
Doubt -Based on his Stage play and Screenplay by John Patrick Shanley
Frost Nixon by Peter Morgan
The Reader by David Hare
Based on the novel by Bernhard Schlink
Slumdog millionaire Screenplay by Simon Beaufoy
Based on the novel Q&A by vikas Swarup (Draft dated 4th Nov 2007)

Adapted Screenplay winner of Slumdog millionaire Simon Beaufoy said "There are certain places in universe you never imagine standing ....for me moon, South Pole, missworld and here in Oscar award ceremony"
-----------------------------------------------------

Best Animation (Best Cartoon)

Kung Fu Panda
Star wars, The Clone Wars
Dr.Seuss Horton Hears a Who!
Madagascar: Escape 2 Africa
Wall-E
Space chimps
The Tale of Despereaux
Bolt

Animated feature film Oscar goes to Wall-E - Andrew Stanton-

---------------------------------------------------------------

Animated Short Film (Cartoon Short Film)

La maison en Petits cubes
Lavotory - Love story
Oktapodi
Presto
This way up

Winner is La maison en Petits cubes - Kunio Kato
--------------------------------------------------

Art Direction

The curious case of Benjamin button
The Duchess
The dark knight
Changeling
Revolutionary Road

Oscar goes to The Curious Case of Benjamin Button
Art Direction: Donald Graham Burt
Set Direction: Victor Z.Zolfo
----------------------------------------------------

Costume Design
Revolutionary Road
The Duchess
Milk
The Curious case of Benjamin button
Australia

Winner
The Duchess - Michael O Connor
------------------------------------------------------
Make up Artist

The curious case of Benjamin button
The dark knight
Hellboy II: The Golden Army

Oscar goes to Greg cannon - The curious case of Benjamin button

------------------------------------------------------------------

The very first movie to win the best picture in 1927 The winds

Best Cinematography

The Curious Case of Benjamin Button
Slumdog Millionaire
The Dark Knight
Changeling
The Reader

The Oscar goes to Slumdog millionaire- Anthony Dod Mantle

--------------------------------------------------------------

Where we would have been if Thomas Edison wouldn't have invented the stethoscope

The world of digital animation he is God. He is the pioneer and expertise on CGI Ed Katmel.Out of 47/44 movies are nominated movies. Scientific and technical awards goes to Ed Katmel.
------------------------------------------------------------------------------------------

I have missed Comedy

-------------------------------

Live action short film

Auf Der Strecke (On the Line)
Manon on the Asphalt
New Boy
The pig

Spielzeugland (Toyland) - Winner Jochen Alexander Freydank - Spend 4 years on this 14 minutes movie

------------------------------------------------------------------------------------------
Actor Supporting Role

Philip Seymour Hoffman
Jose Brolin
Robert Downey Jr.
Michael Shannon
Heath Ledger

Won by Heath Ledger, movie The Dark Knight

--------------------------------------------------------------------------------------------

Documentary

Werner Herzog -Director - Encounters at the end of the world said " During the last two decades we have experienced massive on slaughter on our sense of reality, digital effect in cinema, photoshop, virtual reality and so on."
Scott Hamilton Kennedy - Director/Producer
The Garden - Thayisouk phrasayath - Co Director- The betrayal
Ellen Kuras (Woman) - Director The betrayal (Nerakhoon)
Carl Deal - Director/Producer - Trouble the water
Tia Lessen - Director / Producer - Trouble the water

Winner - James Marsh, Simon Chinn - Man on Wire

One documentary director laughingly said ” Thank you very much! Everybody crying but now I have to go on! There was a producer and star of documentary of my own this year one about religion and didn’t get nominated. I know It's a touchy subject. But someday we all do have to confront the notion that our silly gods cost the world too greatly.

but their I go ruining the ending. The documentary film makers truly are the windows of the world. They give us candid look beyond our own circumstances. They give us the truth and make us to aware the great humanity around us.
I wish you all join me applauding and thanking all the documentarians. You have to go see more of their films starting with mine"

-----------------------------------------------------------------------------------------------

Documentary on short subject

The Conscience of Nhem En
The final inch
Smile Pinki
The witness: From the Balcony of Room 306.

Oscar goes to Smile Pinki - Megan Mylan (woman)
--------------------------------------------------------------------------

Visual Effects

The Curious Case of Benjamin Button
The Dark Knight
Iron Man

Award goes to The Curious Case of Benjamin Button
Eric Barba, Steve Preeg, Burton Dalton, Graig Barron
------------------------------------------------------------------------------

Sound Editing

The Dark Knight
Iron Man
Slumdog Millionaire
Wall-E
Wanted

Oscar goes to The Dark Knight - Richard King
--------------------------------------------------------------------

Sound Mixing

The Curious Case of Benjamin Button
The Dark Knight
Slumdog Millionaire
Wall-E
Wanted

Oscar goes to Slumdog Millionaire- Ian Tapp, Richard Pryke and Resul Pookutty

Resul Pookutty get excited and then started saying " I share this stage with two magicians who created the very ordinary sounds of Bombay, the hack of new Bombay into a sole string, artful, resonance called son Slumdog millionaire. I come from a country and civilization that given the universe a word
that word is presided by silence and more silence, that word is "OM".So I dedicate this award to my country. Thank you Academy! This is not just a sound award! This is the history has been handed over to me. My sincere and deepest gratitude to my teachers,Danny Boyle,Christian colson,Paul Richy,Parvez,Tabu and everybody who contributed for this film,Free Mantle and all the sound mixers- I dedicate this to you guys. Thank you Academy! Thank you very much! "
--------------------------------------------------------------------------------------------

Film Editing Nominees are

Frost / Nixon
The Dark Knight
Milk
Slumdog Millionaire
The Curious Case of Benjamin Button

Oscar goes to Chris Dickens - Slumdog Millionaire

--------------------------------------------------------------------------

Jean Hersholt Award (Comedy)

Humanitarian award - Jerry Lewis

------------------------------------------------

The nominees for the Best Score are

The Curious Case of Benjamin Button - by Alexandre Desplat
Defiance by James Newton Howard
Milk by Danny Elfman
Slumdog Millionaire by A.R.Rahman
Wall-E by Thomas Newman

A.R.Rahman's Said: "Before coming I was excited and terrified, the last time I felt like that was during my marriage.Em! there is a dialogue from my Hindi film called “Mera pas ma hai! which means I have nothing but I have my mother? so mother is here! Em! and her blessings are there with me! Em! I am grateful for to come all the way. I want to thank the academy for being so kind and all jury members, I want to thank Sam Shuwartz,RDBR,all the crew slumdog,Mr.Gulzar,Rakipalam,plazzi,my musician in chennai,mumbai.And I want to say in Tamil which says which I normally say after every award which is "Ella Pugazum Iraivanukke",God is great! Thank you."

---------------------------------------------------------------------

If the score is the narrative of the movie, the song is the functuation.The song can transport us with its energy and communicate in ways the dialogue alone cannot.
This is mmmusic and ffeelings that stay with us long after the film has left the theatre, Here are this years best original song nominees. Two from Slumdog millionaire and one from Wall-E

Oh! Sareh maaroo! Oh! sayooo.... (from Slumdog millionaire, Music and Lyric by A.R.Rahman and M.I.A)
This is you think that we all bound.... We are coming down to the ground..... (from Wall-E, Music by Peter Cabrial and Thomas Newman)
Jai ho! (from Slumdog Millionaire, Music by A.R.Rahman and Lyric by Gulzar)

Oscar goes to Jai ho!

A.R.Rahman said, " I just want to thank again the whole crew of Slumdog Millionaire, especially Danny Boyle for giving such a great opportunity and all the people from Mumbai, and the essence of the film is about the optimism and the power of a hope in our lives, and all my life had a choice of hate and love and I choice Love and I am here. God Bless!"
-------------------------------------------------------------------------------------------------------------------

Best Foreign language film

The languages are German, French, Japanesh, Austria and Hebrew but the themes cut across all spoken words.

The Baader Meinhof Complex (Terror from Germany Directed by Uli Edel)
The Class (Simulation from France Directed by Laurent Cantet)
Departures (Death from Japan Directed by Yojiro Takita)
Revanche (Crime from Austria Directed by Gotz Spielmann)
Waltz with Bashir (War Directed by Ari Folman)

Oscar goes to Departures-Japan.
-------------------------------------------------

Best Director

Danny Boyle - Slumdog Millionaire
Ron Howard - Frost/Nixon
David Fincher - The Curious Case of Benjamin Button
Stephen Daldry - Reader
Cus Van Sant - Milk

Oscar goes to Danny Boyle,Slumdog Millionaire

--------------------------------------------------

Best Actress

Am Hathweth -
Kate Wins let - Reader
Melissa Leo - Frozen River
Merryl Streep - Doubt
Angelina Jolie - Changeling

Oscar goes to Kate Wins let

Here it is Kate Wins let expression: "I will be lying if I haven't made the version of this speech! Before I think I am probably 8 years old and staring into the bathroom mirror and this would have been a shampoo bottle! Well this is not Shampoo bottle now! I feel very fortunate to have made it all the way from there to here. I like to thank some of the people along the way you had faith in me! Emma friends and family especially my mum and dad, they are in this room somewhere, that whistles something, and then only there you are! Yeah! mm! I love you! (thanks to some more plus husband and children) I want to acknowledge the fellow nominees these gorgeous! I think we all can’t believe we are in cassette with Merryl Streep at all, I am sorry Merryl, but you have to suck that up, thank you everybody! Bravo"
--------------------------------------------------------------------
Best Actor

Frank Langella - Frost Nixon
Sean Fenn - Milk
Richard Jenkins - The reader
Brad Pitt - The Curious Case of Benjamin Button
Mickey Rourke - The Wrestler

Oscar goes to Sean Fenn - Milk
(Warning! story subjected on Homosexuals and their freedom)
-------------------------------------------------------------------------------------

Few lines narration of Steven Spielberg

“All film makers are the part of larger celluloid fabric. The shadows are movies cast or depth to the light that shown on all of us from the very first film that ran through projectors. Films inspired that every one sat in a theatre or worked in front of or behind the camera. So we honour our current nominees, let’s not forgot the nominees that came before them and continue to inspire us to reach every chance we get. Take a look"

Best Picture Nominees are

The Curious Case of Benjamin Button
Frost / Nixon
Milk
The Reader
Slumdog Millionaire

And the Oscar goes to Slumdog millionaire - Producer Christian Colson

Disclaimer:
(Movie details are watched,heard with courtesy of sky movies. I have tried to give the version of the induvidual's speech and hosting crews as it is said and If any error subject to the topic and conversation entirely belongs to me.)

ஆஸ்கர் விருதில்

ஆஸ்கர் விருதில் ஏ.ஆர்.ரகுமான் குரல் "எனது வாழ்நாள் முழுதும் அன்பு,வெறுப்பு என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியதில் நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.அதனால் நான் இங்கே என்ற ஏ.ஆர்.ரகுமானின் குரல் "அன்பே சிவம்" போலவே பெரும்பாலோரிடம் போய்ச் சேரவில்லை. அதற்கு பதிலாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற ஆஸ்கர் விருதின் குரல் பெரும்பாலும் அனைவராலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆஸ்கர் விருது விழாவில் கண்டதும் கேட்டதும் தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பெற்ற விருதினால் இந்த பதிவு சாத்தியமாகிறது.முந்தைய ஆஸ்கார் விருதுகள் சிறந்த நடிகை,நடிகர்,இயக்குநர் யார் என்ற ஆர்வத்துடன் முடிந்துவிடும்.இந்தமுறை தொழில்நுட்பம்,இசை,நடிப்பு,கதை,இயக்கம் போன்ற துறைகளின் பார்வை ஸ்லம்டாக் மில்லினர் வெற்றியால் உலக நாடுகள் தங்கள் பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளது.

ஆஸ்கார் மேடையில் பரிசை வெற்றியாளருக்கு அளிப்பவர்களின் பல்சுவைப் பேச்சு இனிமையாக இருந்தது.உதாரணத்திற்கு கீழே சில.போட்டிப் படங்களின் வகை,படம்,பரிசு பெற்றவர்கள் விபரம் தனியாக ஆங்கிலத்திலும் தருகிறேன்.இனி.....


* சிறந்த திரைக்கதைக்காக பரிசை தட்டிச் சென்ற ஸ்லம்டாக் மில்லினர் திரைக்கதையாசிரியர் சைமன் பூபொஃ சொன்னது " உலகத்தின் சில இடங்களில் நிற்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.எனக்கு நிலவு,சவுத் ஃபோல்,உலக அழகிகள் போடியம் போன்றவை".

* ஒரு சிறந்த எழுத்துக்கான தகுதி என்ன? திரைக்கதை அல்லது நல்ல போஸ்டர் ஆனால் பெரும்பாலும் திரைக்கதையே தகுதியை தட்டிச் செல்கிறது.(பதிவுகளின் சிறந்த எழுத்துக்கான தகுதி என்னவென்பதை உங்கள் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன்).

* ஒவ்வொரு எழுத்தாளனும் வெறும் பக்கத்துடன் துவங்குகிறான்.அந்த வெற்றுப் பக்கம் ஒரு சமயம் மரமாக இருந்தது.அந்த மரம் ஒரு காலத்தில் விதையாக இருந்தது.

* காதலுக்கான ஒரு முழு திரைப்படக் கதை 1927 முதன் முறையாக த விண்ட் என்ற படத்தின் கருவிலிருந்து தொடர்கிறது.

நம்ம ஊர்க் திரைக்கதைக் கோணங்கள் இந்த மூலத்திலிருந்து வருபவைகள் என நினைக்கிறேன். சில வரிகளில் கதை சொல்வது எப்படி? இங்கே:

* பையன் பெண்ணைச் சந்திக்கிறான்.ஆனால் பையன் இன்னொரு பெண்ணிடம் விழுகிறான்.அப்புறம் பையன் முதல் பெண்ணுடன் தான் அன்பு செலுத்தியிருக்க வேண்டுமென உணரும்போது காலம் கடந்து விடுகிறது.(நம்மூர்க் கதாசிரியர்கள் இருவரையும் சேர்த்து வைத்து சுபம் போட்டு விடுவார்கள்)

* அனிமேசன் படங்கள் பட்டையைக் கிளப்புகிறது.தொழில்நுட்பக்காரர்களுக்கும்,குழந்தைகளுக்கும்,அனிமேசன் பிரியர்களுக்கும் நல்ல வேட்டை.

* ஆர்ட் டைரக்சன்,மேக்கப்,காஸ்ட்யூம் என்ற நமது திரைத்தொழில் நிபுணர்களுக்கு தங்கள் திறமையை மெருகுபடுத்த பார்க்க வேண்டியவை ஆஸ்கர் போட்டிப் படங்கள்.

* குறுகிய நேரடி ஆக்சன் படமான டாய்லாண்ட் என்ற படத்தின் பரிசைத் தட்டிச்சென்ற ஜோசன் அலெக்ஸாண்டர் ஃப்ரேடங்க் 14 நிமிட படத்துக்கு 4 வருடம் உழைத்தாராம்

நாத்திகப் பிரியர்களுக்கு: (சிறந்த டாகுமெண்டரிக்கான பரிசை தருபவர் சிரிப்புடன் சொன்னது- பெயர் மறந்து விட்டது) அனைவருக்கும் நன்றி.எல்லோரும் அழுதுகொண்டிருக்கிறார்கள் ஆனால் நான் தொடரவேண்டும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிப்புக்கான எனது படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.கதை மதம் சம்பந்தப்பட்ட விவாதத்திற்குரியது. இந்த முட்டாள் கடவுள்கள் ரொம்ப அதிகமாகவே பெரும் இழப்பை இந்த உலகத்திற்கு தந்துவிட்டார்கள் என்று என்றாவது ஒரு நாள் நாம் அனைவரும் உணரவேண்டும்.எனது டாகுமெண்டரியின் முடிவை கெடுத்து விட்டதால் தகுதி வாய்ப்பை இழந்துவிட்டது.டாகுமெண்டரி படம் தயாரிப்பவர்கள் இந்த உலகின் ஜன்னல்கள்.நமது வாழும் சூழலுக்கும் அப்பாற்பட்ட நிஜங்களை உண்மையாக இவர்கள் படம்பிடித்துக் காண்பிக்கிறார்கள். இவர்கள் உண்மையுடன் நம்மைச் சுற்றி இருக்கும் மனித குலத்தை உணரும்படிச் செய்கிறார்கள்.டாகுமெண்டரியன்களுக்கு என்னோடு சேர்ந்து நன்றியையும் கரவொலியையும் தரவேண்டுகிறேன்.எனது படத்தின் துவக்கமாக டாகுமெண்டேரியன்களின் படங்களைப் பாருங்கள்.

ரெசூல் பூக்குட்டி துவக்கத்தில் உணர்ச்சிவசப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டு பின் சுதாரித்துக்கொண்டு சொன்னவை: பம்பாயின் இயல்பான கலைநயமான சத்தங்களை தயாரித்த இரு மேஜிக்காரர்களுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்கிறேன்.ஓம் என்ற அமைதி,அமைதிக்குள்ளும் அமைதி என்ற சொல்லை உலகிற்கு தந்த தேசத்தில் இருந்து நான் வருகிறேன்.இந்த விருதை எனது நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்.அகாடமிக்கு நன்றி!இது ஒலிக்கான விருது அல்ல!ஒரு சரித்திரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனது ஆழ்ந்த நன்றியை எனது ஆசிரியர்களுக்கும்,டானி போயல்,கிறிஸ்டியன் கோல்சன்,பால் ரிச்சி,பர்வேஸ்,தபு மற்றும் இந்தப் படத்திற்கு உழைத்த அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஃப்ரி மேண்ட்ல் ஒலிக்கலவையாளர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.நன்றி அகாடமி! மிகவும் நன்றி என்று முடித்துக் கொண்டார்.

* நம்மூர் கதாநாயகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.ரசிகர்களின் ஆர்வத்தில் எத்தனை எத்தனை விசில்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.ஆனால் த ரீடர் படத்துக்கான சிறந்த நடிகை பரிசை தட்டிச் சென்ற கேட் வின்ஸ்லட் எனது அம்மா,அப்பா இங்கே எங்கோ உட்கார்ந்திருக்கார்கள் விசில் அடித்தால் நல்லது என்று சொல்லி வயதான அப்பாவின் ஒற்றை விசிலில் மகிழ்ச்சியடைந்து Yeah! என்று குரல் எழுப்பி லவ் யூ சொல்லி முகம் மலர்ந்தார்.15 முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட போட்டி நடிகை Merryl Streep ஐ நோக்கி " I am sorry Merryl,but you have to suck that up" என்றார்.

* ஸ்லம்டாக் மில்லினர் இயக்குநர் டானி போயல் குழந்தை மாதிரி குதித்து விட்டு எல்லோருக்கும் நன்றி சொல்லி பின் படத்தின் இறுதியின் நடனத்தை அமைத்தவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதற்கு, வயது 80 ஆகி விட்டது என்று இதயபூர்வமான மன்னிப்பை வேண்டினார்.

* விருதில் கலந்துகொண்ட சோபியா லாரன் எப்படி உடலை பாதுகாக்கிறார் என்ற ரகசியத்தை நமது நடிகைகள் தேட முயல்வது நல்லது.

சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஸ்லம்டாக் மில்லினர் தயாரிப்பாளர் கிறிஸ்டியன் கோல்சன் இந்தப் படத்தை பட்ஜெட் குறைபாட்டால் நினைத்தபடி எடுக்க இயலவில்லை என்றார்.

* ஸ்லம்டாக் மில்லினருக்கு சரியான போட்டியாக பெஞ்சமின் பட்டன் திரைப்படம் அனைத்து துறைகளிலும் போட்டி போட்டது.பாஸ்டன் பாலா அவரது பதிவில் ஏன் இந்தப் படத்தைப் பற்றி சிலாகித்தார் என்பது புரிகிறது.ஆனாலும் நடிப்பில் ஆளுக்கு ஆள் போட்டி போட்ட படமும் என்னைக் கவர்ந்ததும் டவுட் என்ற திரைப்படம். மெரில் ஸ்டிரிப் ஏன் சிறந்த நடிகைக்கான விருதை கேட் வின்ஸ்லட்டிடம் தவற விட்டார் என்பதற்காக இனி ரீடர் திரைப்படம் காணவேண்டும்.பதிவின் நீளம் கருதி ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நிகழ்வுகள் ஆங்கிலத்தில் அடுத்த பதிவில்.

Thursday, March 19, 2009

மொக்கை துவக்க விழா

மொக்கை போடறுதுன்னு முடிவெடுத்த பிறகு இடமென்ன வலமென்ன?அதனால வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம இருக்கிறத வச்சி தேத்திட வேண்டியதுதான். நேத்தைக்கு பரிசலோட வீட்டுக்குப் போனப்ப எல்லோரும் அங்கீகாரத்துக்குத்தான் எழுதறாங்கன்னு சொல்லிகிட்டுருந்தாரு.நான் அங்கீகரமாவது கிங்கீகரகமாவது எழுதறது பிடிச்சிருக்குன்னு பின்னூட்டக் கடிதாசி போட்டு விட்டு வந்தேன்.பார்த்தாரோ இல்லையோ பதிவோட பக்கத்துக்கே வெளிச்சம். இன்னொரு பதிவரு நீங்கெல்லாம் சிண்டிகேட் வச்சு சில்மிஷம் பண்ணிகிட்டு இருக்கீங்கன்னு சிரிச்சிகிட்டு இருந்தாரு.

பதிவெழுதறதுக்கு யார் யாருக்கு என்ன காரணமுன்னு காரண காரியமெல்லாம் நான் தேடுறதில்லைங்க.தனிமனித விளாசல்,மதம் பிடிச்சு திரியறது ரெண்டைத் தவிர எல்லா வீட்டுக்கும் சத்தமில்லாம அல்லது சில சமயம் சத்தம் போட்டுகிட்டு வந்துடறேன்.சொல்லப் போனா எழுதற ஆர்வத்தையும் தாண்டி பதிவர்கள் எழுத்துக்களும் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பின்னூட்டத்தில் புன்முறுவல் பூப்பதும்,பல்கோணப் பார்வையும் ரொம்பவே நல்லாயிருக்கு.எனவே படித்தல்,புரிதலில் இருக்கும் ஆர்வம்,நேரம் எழுத்தில் காண்பிப்பதில்லை.

சரின்னுட்டு சூடான பகுதியில யார் தேறுறாங்கன்னு போனா பதிவர் கமலக்கண்ணன் பெண்களின் சல்வார் கமீஸ் அணிவது பற்றியும் ஓடுற பைக்ல துப்பட்டா பறக்க விடாதீங்கன்னும் நல்லது சொல்லிகிட்டிருந்தார்.சொன்னதோடு நின்னுருந்தா பரவாயில்லை.சாருநிவேதிதா சொன்னது உண்மைதான் இந்தியர்கள் செக்ஸ் ஸ்டார்வேசன் ஆட்கள் அப்படின்னாரு.இது என்ன பொதுப்புத்தின்னு தெரியல.ஒருத்தர் பிரபலமாகி விடுவதாலேயே அவர் சொல்லும் எல்லாக் கருத்துக்களும் சரியாகத்தான் இருக்கும் என்று எடுத்துக் கொள்வது.சாரு நிவேதிதா சொல்வது உண்மையில்லைங்க.இந்தியனை விட காஞ்சவன் தேசம் தேசமா அலையிறான்னு சொல்லிவிட்டு வந்தேன்.

குறைந்தபட்சம் கண்ணும் கண்ணும் நோக்கினால் அங்கீகரமாவது இந்தியாவில் உள்ளதென நினைக்கிறேன்.அதையும் தாண்டி ஆண்,பெண் நட்புங்கிற நிலைக்கும் கூட முன்னேறியுள்ளது.கல்லூரி காலங்களில் மும்பையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் தாதரிலிருந்து நண்பர்கள் பிரவின்,முகர்ஜி,நான் கிளம்பினோம்.எங்கள் இருக்கைக்கு வந்த இரு பெண்மணிகளில் ஒருவர் எங்களிடம் வந்து மற்ற பெண்ணைக் காட்டி வேலூர் மருத்துவக்கல்லூரியில் சேரப்போவதாகவும் சென்னை வரை மருத்துவப் பெண்ணிடம் பேசிக் கொண்டு போகும்படியும் சொல்லிவிட்டு ரயில் கிளம்பும் வரை இருந்து விட்டு போய்விட்டார்.நாகரீகமான அந்த அறிமுகத்தால் தவறான எந்தப் பார்வையுமில்லாமல் அந்தப் பெண்ணிடம் சகஜமாக பேசிவிட்டு அவ்வப்போது சாப்பாடும் பங்கு போட்டு சாப்பிட்டு விட்டு சென்னை சென்ட்ரல் வரை சென்றோம்.

ரயில் பயணம் நினைவு வந்தவுடன் இன்னொரு நினைவு வருகிறது.இப்படித்தான் இன்னொரு நண்பர் பட்டாளத்தில் சுப்பரமணி என்பவன் வண்டி போகும் அவசரத்தில் பக்கத்தில் இருக்கையில் வந்து அமர்ந்த ஒருவரைப் பார்த்து இந்திக்காரன் என்று நினைத்து எருமை மாடு மாதிரி வந்து முட்டிகிட்டு உட்கார்ரான் பாருன்னான்.யோவ் எனக்கும் தமிழ் தெரியுமுன்னு வந்தவர் சொல்ல ரெண்டு பேருக்கும் எகிறிகிச்சு.

மணியடிக்கப் போறாங்க.ரெண்டு நாளைக்கு வார இறுதி.அதனால கணினிப் பக்கம் வந்தாலும் வருவேன்.இல்லைன்னா சமையல்கட்டு ஆராய்ச்சி,காய்கறி,சூப்பர்மார்க்கெட்டுன்னு சுத்திகிட்டு இருப்பேன்.ஞாயிற்றுக்கிழமை வந்து இடம்,வலம்,நடு என்று பதிவுகளை தரிசிக்கிறேன்.வணக்கம்.

Tuesday, March 17, 2009

இனிமேல் நான் மொக்கையர் பக்கம்

விழுந்து புரண்டு மண்டைய ஒடச்சி ரூம் போட்டு யோசிச்சு தீவிரமா இல்ல இஃகி கின்னு சொல்லி சிரிச்சு எப்படியெல்லாம் பதிவர்கள் எழுத்துக்கு எழுத்துமாச்சு புத்திக்கு புத்தியுமாச்சு நடப்புக்களை கணிச்சதுமாச்சு காலங்களை குறிச்சு வச்சமாதிரியுமாச்சுன்னு மெனக்கெட்டு பதிவுகள் போட்டா பளீங் சடுகுடு குடு குடுன்னுன் ட்டு நாங்க போற ட்ராக்கிலேயே போவோமுன்னு இலங்கையும் மத்தியும் மாநிலமும் ஓடுது.

யாராவது லாஜிக்கில்லா மேஜிக் பேய்க்கதை சொல்றவங்க இருக்கிறீங்களா? இதோ இப்ப வாரேன் துன்னுட்டு.

Sunday, March 15, 2009

பதிவனுக்கு தன் சமையல் பொன் சமையல்.

இந்த வார இறுதியில் தங்ஸுக்கு போட்டியா சமையல் கட்டுக்குள்ள பூந்து விட்டேன்.அதென்ன லாவகமோ பெண்களுக்கு! ஒரு பக்கம் சட்டில கொதிக்குது.இன்னொரு பக்கம் அம்மி கடமுடன்னு சத்தம் போடுது. வெங்காயம் பலகைக்கும் கத்திக்கும் இடையில் மாட்டிகிட்டு குத்துப்பட்டும் பல்லைக் காட்டுது.எல்லாம் சரியா வருது நேரத்துக்கு துன்னுறதுக்கு.அப்படியிருந்தும் நொள்ளை சொல்லலீன்னா சாப்பிட்ட மாதிரியே இருப்பதில்லை:) சரி சரி அது சரி!(அண்ணா என்ன வெச்சு காமெடி கீமடின்னு கேட்டு வைக்காதீங்க இஃகி!இஃகி!)இப்ப வெஜிடபிள் குருமா சமையலைக் கவனிப்போமா?

முதலில் காலிபிளவரை ஒரு சுடுதண்ணில உப்பு போட்டு முங்க வச்சாச்சு.பின் பூ பூவாய் பிரித்தெடுத்து குளிர்நீருல தூங்க வச்சாச்சு.அப்புறம் பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு நறுக்கியாச்சு.ரெடிமேடு பட்டாணி டப்பாவுல கொஞ்சம் கொட்டியாச்சு. இப்ப பெரிசா எனக்குன்னே தயாரிச்ச எவர்சில்வர் பிளேட் ஒன்று எடுத்து ஒரு முழு வெங்காயம் சிறுசா நறுக்கிக் கொண்டேன்.

அப்புறம் ரெண்டு பச்சை மிளகாய் கையிலே பிடித்து முறுக்கி துண்டு பண்ணிகிட்டேன்.அப்புறம் இஞ்சியோட முதுகு தோல உரிச்சி அதையும் வெட்டிகிட்டேன்.ஆ!பூண்டு ரெண்டு மூணும் இஞ்சிக்கு பக்கத்துல உட்கார வைச்சாச்சு.அப்புறம் ஒரு தக்காளிய குறுக்கும் நெடுக்குமா வெட்டி வச்சிகிட்டேன்.அலமாரியத் தேடி கொஞ்சம் குருமிளகு,சோம்பு,சீரகம் சேர்த்தாச்சு.முதல் கட்டமா சில்வர் தட்டுல வெட்டுன பொருட்களும் மிளகு,சோம்பு,சீரகம் வகையறாக்கள் தயார்.

இப்ப அடுப்பு பத்த வச்சாச்சு.கொலாஸ்ட்ரல் கம்மின்னு பேர் போட்ட எண்ணெய் ஊத்தியாச்சி.முதல்ல இஞ்சிய சொய்.அப்புறம் பூண்டு சொய்ங்.அப்படியே பச்சை மிளகாய் வதக்கியாச்சு.வெங்காயம் முன்னுக்கு வருகிறார்.தக்காளி இப்ப.கண்ணு மசாலா டப்பாக்களை தேடுது.கொஞ்சம் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி மற்றும் மல்லிப் பொடிய தூவியாச்சு.எல்லாத்தையும் கரண்டில துளாவி விட்டு இறக்கி வச்சு கொத்திமல்லிய கழுத்தை திருகி போட்டு உட்கார வச்சாச்சு.

இப்ப கால்பிளவர் வெள்ளை,உருளைக்கிழங்கு தளிர் மஞ்சள்,கேரட் ஆரஞ்சு,பட்டாணி,பீன்ஸ் பச்சை வண்ணம் ஒரு தட்டில்.இன்னொரு தட்டில் வதக்குன பல்பொருட்கள் சூடு தணிஞ்சிருச்சு.சூடு தணிஞ்ச கலவையை அப்படியே மிக்சியில போட்டு ஒரு சுத்து விட்டு இட்லி மாவு பதத்துல எடுத்தாச்சு.

இப்ப மறுபடியும் அடுப்பு பத்த வச்சாச்சு.தட்டுல இருந்த காய்கறிகளில் முதலில் கேரட் சட்டில போட்டாச்சு.( கவனிக்க எண்ணெய் மீண்டும் இல்லை.)அப்புறம் பீன்ஸ்,காலிபிளவர்,பட்டாணி வரிசையாக.காய்கறி உடம்புல இருந்த ஈரப்பதம் சுண்டுனவுடன் அரைச்சு வச்ச மசாலாவக் கொட்டி ஒரு கலக்கு.அப்புறம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விட்டு ஒரு பட்டை ஒரு லவங்கம் சேர்த்து ரெண்டு நிமிச மெல்லிய கொதி.

இப்ப கொஞ்சம் தேங்காய்ப் பால் பவுடரை சுடுதண்ணியில் கலக்கி பில்டருல வடித்து குருமாக்குள்ள கொட்டி கருவேப்பிலை கொஞ்சம் போட்டு மூடி வச்சாச்சு.மறுபடியும் ரெண்டு நிமிசம் மெல்லிய கொதி விட்டு அடுப்புல இருந்து இறக்கியாச்சு.வெஜிடபிள் குருமா சப்பாத்தியோட கம கம.சாயந்திரம் பார்த்தால் சொந்தக்காரங்க படையெடுப்பில் குருமாவைக் காணோம்.

ஓட்டு பார்க்க நேரமாயிடுச்சு

சிலேட்டுக் குச்சி,பென்சில்,பேப்பர்,பேனான்னு இருந்தா வரும் விரக்திக்கு டபால்ன்னு வீசிட்டு போயிடலாம்.கணினில அதுவும் அலுவல்காரனடையத தூக்கி எறிஞ்சா முதுகில டின்னு கட்டி இருக்கிற இருப்புக்கு ரீசெசன்னு வீட்டுக்கு அனுப்பி விடுவான்.

ஒபாமா மாற்றங்கள் வேண்டும் கோசம் போட்டே ஜெயிச்சிட்டாரு.ஈழ அதிர்வுகளில் தமிழகமும் அரசியலில் மாற்றம் பெறும்ன்னு பதிவு தலைகள் எல்லாம் சொல்றத நம்பிகிட்டு தமிழகத்துல மாற்றம்ன்னா நாமளும் போய் ஒரு முத்திரை குத்திட்டு வரலாமுன்னு மனசுக்குள்ள திட்டமெல்லாம் இருந்துச்சு.நினப்புதான் பொளப்பக் கெடுக்கும் கண்ணு ஒழுங்கா வேலையப் பார்ன்னு உள்ளுக்குள்ளிருந்து வேற எவனோ கத்துறான்.

நடப்பு அரசியல்ல தலைகள் அவுகளுக்குன்னு ஒரு கணக்கு வச்சிருக்காக.இதெல்லாம் தெரியாம பழமையண்ணன் வேறு நொய்யலாற்று கணக்கு,வித்தைக்காரன் கணக்குன்னு அவரு பாட்டுக்கு விடை கேட்டுகிட்டுத் திரியறாரு.

மூணாவது அணின்னு புதுசா சிலபேரு கிளம்பியிருக்காக.போன முறை தமிழக எலெக்சனுக்கு ஹாட் மச்சின்னு பேரு சொல்லி பதிவருக ஊடு கட்டி விளையாடுனாக.ரெண்டு மூணு வருசம் கழிச்சி அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தா கடைசி பதிவு 2006ல தூங்கிட்டிருக்குது.ஹாட் மச்சி பதிவர்கள் திருந்திட்டாங்க:)

தி.மு.க,காங்கிரஸ் கூட்டணில விசயகாந்துக்கு வெத்தலை பாக்கு வச்சிருக்காகளாம்.கலஞரு பா.ம.க லருந்து யாரும் எட்டிப் பாக்கலேங்கிறார்.மருத்துவரு அங்கிருந்து யாரும் கூப்பிடலேங்கிறார்.கண்ணசத்துதேன்னு கண் மூடி திறந்தா காங்கிரசுலருந்து ப.ம.கவுக்கு டீ குடிக்கலாம் வாங்கன்னு அழைப்பு வந்திருக்காம்.சாயந்திரமா பார்த்தா கலஞரு திருமாவளவன் எங்க கூடத்தான் கூட்டு.அதனாலதான் அவர உள்ள தள்ளாம விட்டு வச்சிருக்கோம்ங்கிறாரு.அந்தப் பக்கம் பார்த்தா வை.கோ கண்ணப்பன காணோமுன்னு தேடிகிட்டு இருக்கிறாரு.தமிழுக்காரன் எதச் சொன்னாலும் நம்புறாங்கப்பான்னு செயலலிதா திடீர் உண்ணாவிரதம் இருந்திட்டாங்க.முட்டையடியும்,மொட்டைத் தலைகளும் சத்தத்தைக் காணோம்.

குருட்டுப் பார்வை பார்க்காம பதிவுக்காரங்களுக்கு அது சரி இது தப்புன்னு சரியாவே தெரியுது.இருந்தாலும் பதிவு வட்டத்தை தாண்டி பல்லாங்குளி ஆட முடியறதில்லை.வெண்ணிலா கபடிக் குழுவுல நல்லா ஆடுறவன் கைய முறிக்கிற மாதிரி வக்கீலுக மண்டைய உடச்சி இப்ப தி.மு.க வக்கீலு,காங்கிரஸ்கார வக்கீலுன்னு ஒற்றுமையக் களச்சாச்சி.குரலு விட்டவனையெல்லாம் பாதுகாப்பு சட்டத்துல பாதுகாப்பா வச்சாச்சி.இதெல்லாம் தெரியாம பதிவருக காங்கிரசுக்கு ஆப்பு,கலஞருக்கு மூப்பு ன்னு என்னென்னமோ புலம்புறாங்க.நல்ல நாள்லயே ஓட்டு போடாம ஊட்டுல தூங்கிற கேஸுக நிறைய இருந்துச்சு.இப்ப இருக்கிற நாட்டு நடப்புல சொல்லிக்கவே வேணாம்.

என்னமோ போங்க தமிழ்நாட்டு அழிச்சாட்டியம் தாங்காம பாகிஸ்தான் தமாசுகளைப் பார்த்தா சர்தாரிக்கும் நவாசுக்கும் நாற்காலி சண்டை.இருக்கிற கிச்சு கிச்சு பத்தாதுன்னு மும்பாய் குண்டுவெடிப்புல துவங்குன பிரணாப் பாகிஸ்தான் அறிக்கைகள் வேறு இன்னும் ஒய்ந்தபாடில்லை.

அடுத்த பிரதமரு யாருங்க?மன்மோகன் சிங்கா?எனக்கு லீவு வேணுமுன்னு நேத்தைக்கு சொல்லிட்டாரு.அப்ப ராகுல்?இல்ல அத்வானியா?ஜெயிச்சா லேப்டாப் தருவேன்ங்கிறாரு.அஸ்க்,புஸ்க் தமிழ்நாட்டுல தேறணுமே!மூணாவது அணில மாயாவதி விருந்துக்கு கூப்பிட்டுருக்காக!எதுக்கு?அவருக்கு பிரதமர் குர்ஸி வேணுமாம்.

யாரங்கே அலறுவது?குண்டுச்சத்தம் கேட்குதா?செத்த பிறகு வந்து அச்சச்சோ சொல்லுகிறோம்.எங்களுக்கு ஓட்டு பார்க்க நேரமாயிடுச்சு.

Wednesday, March 11, 2009

மை டியர் நாய்க்குட்டிகள்

அம்மா ஆடு வளர்க்கல,மாடு வளர்த்தாங்க,கோழி வளர்த்தாங்க கூடவே சித்தப்பா பையன் தங்கராஜ் எங்கிருந்தோ பிடிச்சிகிட்டு வந்த ஒரு நாய்க்குட்டியும் வளர்த்தாங்க.சோறு போடுவதில் அம்மாவுக்கு வாலாட்டினால் எப்பவாவது தண்ணிக்குள்ள முக்கி விளையாட்டு காட்டுவதால எனக்கும் கொஞ்சம் வாலாட்டும்.

வாயில எளிதா நுழைந்த வார்த்தை ஜிம்மின்னு பெயராச்சு.தங்கராஜ் அமெரிக்க மாடு மேய்ப்பவன் ஸ்டைலில் அவன்,மாடு,ஜிம்மி என ஒரு நாள் மேய்ச்சல் நிலத்துக்குப் போய்விட்டான்.மாடு மேய்ந்து கொண்டிருந்தது.ஜிம்மி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது.மேய்ந்து கொண்டிருந்த மாடு திடிரென புஸ்,புஸ் என மூச்சு விட்டது.படுத்துக்கொண்டிருந்த ஜிம்மி நால் கால் பாய்ச்சலில் மாட்டின் பக்கம் திடீரென ஓடியது.தம்பி ஜிம்மி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.மாட்டின் அருகில் ஓடின ஜிம்மி ஒரு பாம்பை வாயால் இடதும் வலதுமாக கடித்து துப்பிவிட்டு இறந்து விட்டது.தம்பி அலறி அடித்துக் கொண்டு ஜிம்மி பக்கம் போய் பார்த்தான்.ஜிம்மியும் பாம்பும் இறந்து கிடந்தன.பின் வீட்டிற்கு வந்து அம்மா,அப்பாவிடம் சொல்லி நாயை,பாம்பை தனித் தனியாக அங்கேயே புதைத்தார்கள்.நேரடியாகப் பார்க்காததால் தம்பி சொன்ன ஜிம்மியின் வீரக்கதை சோகத்தை ஏற்படுத்தினாலும் அதி மன அதிர்வுகளை எனக்கு ஏற்படுத்தவில்லை.

குவைத்தில் முந்தைய பிரதமரும்,இளவரசுருமான ஷேக் அப்துல்லா அல் சபாவின் மகளின் வாகன ஓட்டுனராக ஜேம்ஸ் என்ற நண்பன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அந்தம்மா இந்திய மதிப்பில் அப்போதைக்கு 1 1/2 இலட்சம் விலையுள்ள ஒரு நாயை லண்டனிலிருந்து கொண்டி வந்தார்.அது breed செய்த நாலைந்து குட்டிகளில் முடி புசு புசுவென்று இருந்த அழகான நாய்க்குட்டியை ஜேம்ஸ் வீட்டிற்கு கொண்டு வந்து தந்தார்.அல்சேசன் உடல்வாகு,பொமரேனியன் முடி ஸ்டைல் என ஒரு புதிய தோற்றம் அது.பழக்கதோசத்தில் அதுவும் ஜிம்மியாயிற்று.

துவக்கத்தில் பால் பின் நாங்கள் சாப்பிடும் உணவே அதன் உணவுமானது.மாமியார் வீட்டில் இருந்ததால் வேளை வேளைக்கு உணவளித்துக் கொண்டிருந்தாங்க.துவக்கத்தில் குளியல் அறையில் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் பழக்கப் படுத்தினோம்.குளியல் கதவு திறந்திருந்தால் அதுவாகவே போய் விடும்.தினமும் குளியல்,சாப்பாடு என நாட்கள் நகர்ந்தன.மூன்று மாத வளர்ச்சிக்குப் பிறகு ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதென்றால் அதுவாகவே வாசல் கதவை பிராண்ட ஆரம்பித்தது. கதவை திறந்தால் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கிழே ஓடி குப்பைத் தொட்டி அருகில் போய் உட்கார்ந்து திரும்ப தானாகவே வீட்டுக்கு வர ஆரம்பித்தது.யாரும் பழக்காமல் தன்னியல்பான அதன் செய்கைகள் எங்களை ஆச்சரியப் பட வைத்தது.நாளுக்கு நாள் கூடிய நட்பில் அய்யா படுக்கையிலும் வந்து அமைதியாக உட்கார ஆரம்பித்து விட்டார்.லொள்,லொள் என எப்பொழுதும் சப்தமிட்டதில்லை.குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிட்டது.இப்படி இனிமையாக போய்க் கொண்டிருந்த நட்பு பக்கத்து வீட்டு வர்கீஸ் சேட்டன் மூலம் இறுதிக்கு வந்தது.

புதியதாக வாங்கிய கணினியை பக்கத்து வீட்டு வர்கீஸ் சேட்டன் வேண்டுமென்று கேட்டதற்கு வச்சுக்கோ காசு எப்ப தரமுடியுமோ அப்ப தந்தால் போதுமென்று சொல்லி கொடுத்து விட்டேன்.ஒரு வருட காலமாகியும் காசு தேறுவதாகக் காணோம்.சரி காசு கேட்டுப் பார்க்கலாம் என காசு கொடேன் என்று கேட்டதற்கு இன்னும் மூன்று நாட்களில் தந்து விடுகிறேன் என்றான் சேட்டன்.மூன்று நாட்கள் பின் ஒரு வாரமாகியது.பின் பத்து நாட்கள் ஆகியது.இதற்கிடையில் மாமியார் சேட்டனின் மனைவியிடம் வாய் கொடுக்க சேட்டனின் மனைவி நாங்கள் ஒன்றும் உங்களிடம் கம்ப்யூட்டர் வாங்கவில்லை என்று வாதம் திரும்பி விட்டது.

ஒரு நாள் வார இறுதி வெள்ளிக்கிழமை ஹாயாக சோபாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.கதவு பெல் ரிங்.கதவைத் திறந்தால் போலிஸ்காரன் நின்று கொண்டிருக்கிறான்.ஜிம்மி தலையை எட்டி நோக்கி விட்டு சப்தமில்லாமல் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்டது.டிராபிக்கில் போலிசைக் கண்டாலே எனக்கு அலர்ஜி.அதுவும் வீட்டில் வந்து போலிஸ் நின்றதும் மனசு திக்.பக்கத்தில் சேட்டன் இன்னொரு இந்தியனுடன் சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறான்.போலிஸ் அரபியில் என்னமோ சொல்கிறான்.பக்கத்தில் நின்று கொண்டிருந்த இந்தியன் நீ ஏன் வீட்டில் நாய் வளர்க்கிறாய்.பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது என்றான்.அடப்பாவி!தொலைக்காட்சி சத்தமாவது தொந்தரவுன்னு சொல்லியிருந்தாலாவது பொருந்தும்.சத்தமிடாத தனக்குத் தானே ஒழுங்குகளைக் கற்றுக்கொண்ட ஜிம்மி தொந்தரவென்றால்?எனது பயந்த தோற்றத்திலும் அரபி தெரியாத முக லட்சணத்தையும் பார்த்து போலிஸ் என்னை ஸ்டேசனுக்கு கொண்டு போய் கம்பியில்லா ஒரு அறையில் நிறுத்தி வைத்து விட்டான்.அரைமணி நேரம் கழித்து போலிஸ்காரனுக்கு அதிகாரி வந்ததும் என்னிடம் ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டதும் வாய் படபடவென வார்த்தைகளை ஜிம்மியின் பூர்வீகம் பற்றி கொட்டியது.பிளாட்களில் நாய் வளர்ப்பது தவறு என்று சொல்லி எனது ஐ.டி கார்டை திரும்பத் தந்து கேஸ் பதிவு செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

சேட்டனின் தொல்லையால் யாருக்காவது கொடுத்து விடலாம் என்று ஜிம்மியை நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிய குவைத்தி டாக்டர் ஒருவர் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டோம்.ஜிம்மிக்காக நான்,மனைவி,குழந்தைகள்,மாமியார் என நாள் முழுவதும் அழுதோம்.

புத்திர சோகத்திலும்,போலிஸ் ஸ்டேசன் போன அவமானத்திலும் சேட்டன் மீது முறையாக நீதிமன்றத்தில் மனு பதிவு செய்து வாய்தா மேல் வாய்தாவாக சேட்டன் நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுத்து இறுதியில் பிடிவாரண்டில் போலிஸ் கைதியாக ஒரு வாரம் சிறைபட்டான்.சிறைவாசத்திற்கு பின் கோர்ட்டுக்கு ஒழுங்காக வந்து காசை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தருவதாக உறுதியளித்தான்.கோர்ட்டிற்கு வெளியே ஏண்டா இப்படி செய்தாய் எனக் கேட்டேன்.என் மனைவியின் தூண்டுதலால் இப்படியாகி விட்டது மன்னித்துக் கொள் என்றான்.நான் முழுப்பணத்தையுமே மன்னித்து விட்டேன்.அவன் சல்மியாவிலிருந்து வீட்டைக் காலி செய்து விட்டு வேறு ஒரு பகுதிக்கு குடித்தனம் புகுந்து விட்டான்.

Tuesday, March 10, 2009

Bruce Fein

Bruce Fein 1972ல் ஹார்வேர்டு சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து பின் முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில் உதவி அட்டார்னி ஜெனரலாக பணி புரிந்த காலம் தொட்டு அமெரிக்க அரசியல் சட்டம் மற்றும் உலக சட்டங்களில் சுமார் 40 வருடமாக பழம் தின்று பழுத்த வழக்கறிஞர்.கிளிண்டன்,ஜார்ஜ் புஷ் Jr மற்றும் முந்தைய உதவி ஜனாதிபதி டிக்செய்னி உள்பட அனைவரையும் தங்கள் பதவியை தவறாக உபயோகித்ததாக இம்பீச்மெண்ட்(Impeachment)க்கு உட்படுத்த வேண்டும் என்றவர்.

தமிழ்நெட் வலைத்தளத்தில் ஈழத்தமிழர்களின் சட்ட ஆலோசகராக அவரது பெயர் அவ்வப்போது காணப்பட்டாலும் ஈழத்தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அமெரிக்க பிரஜையென்றும் சரத்பொன்சேகா பச்சை அட்டை வைத்திருப்பவர் என்ற அடிப்படையிலும் 1000 பக்கங்கள் கொண்ட வழக்கினை அமெரிக்க நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்துள்ளது தமிழர்கள் மத்தியில் ஃபுருஸ் பெயினின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது.

போனவாரம் தீபம் தொலைக்காட்சியில் புருஸ் ஃபெயினுடனான நேரடி உரையாடலின் மறுஒலிபரப்பு காண நேர்ந்தது.பல தரமான ஈழம் சார்ந்த தொலைக்காட்சி ஊடகங்கள் ஐரொப்பிய நாடுகளில் தோன்றி பலவிதமான காரணங்களால் இழுத்து மூடப்பட்டு விட்ட நிலையிலும் தீபம் தொடர்ந்து தனது சேவையை அளித்து வருவது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைக்கும் விசயம் என நினைக்கிறேன்.தேர்வு செய்யப்பட்ட தரமான நிகழ்ச்சிகள்,திரைப்படங்கள் என கலக்கி கொண்டிருந்த தீபம் மெல்ல தமிழ் மெகா சீரியல் பக்கம் தாவியதும் தனது இயல்புகளிலிருந்து மாறியது போல் தோன்
றியது.

மனித அவலங்கள்,போர் முனை,உலக தமிழர்கள் போராட்டம்,வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஈழம் குறித்த ஓட்டு அரசியல் என பல பரிமாணங்களை எடுத்திருக்கும் ஈழம் புதியதாக தனது நியாயங்களை,கருத்துக்களை கலந்தாய்வாக தமிழ் மக்களுக்கு குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தரும் ஒரு வாய்ப்பாக ஃபுருஸ் பெயின் கருத்துக்களும் கேள்வி பதில்களும் அமைந்திருந்தது.ஃபுருஸ் பெயினுடனான நேர்காணல் தற்போதைக்கும் கூடவே எதிர்காலத்துக்குமான ஒரு முக்கியமான பதிவும் கூடவே உலக மக்களுக்கும் அதிலும் குறிப்பாக லாபியிஸ்ட்களுக்கு ஈழம் குறித்த பார்வையினை தரும் ஒரு நல்ல வாய்ப்பு.

ஆனால் நேர்காணல் கண்ட மனித உரிமை வழக்கறிஞர் சகோதரரும்(பெயர் நினைவில்லை)தொலைக்காட்சி ஊடாக கேள்வி கேட்ட தமிழர்களும்,தீபம் தொலைக்காட்சியும் சேர்ந்து நிகழ்ச்சியின் தரத்தைக் குறைத்து விட்டார்கள்.நேர்காணல் சகோதரர் சரளமான ஆங்கிலம் பேசினாலும் உச்சரிப்புக்களை வாய்திறந்து சொல்லியிருக்கலாம்.கேள்வி கேட்டவர்கள் தமிழ் பேசி கேள்வி கேட்டு பின் மொழி பெயர்ப்பு தவிர்த்து ஆங்கிலத்தில் நேரடியாக ஃபுருஸ் பெயினிடம் கேள்விகளை வைத்திருக்கலாம்.தீபம் தொலைக்காட்சி குரல்களின் ஒலியினை சீர்படுத்தியிருக்கலாம்.யார் என்ன (அதிலும் தமிழில்)கேட்கிறார்கள் என்பதே காண்பவர்களுக்குப் புரியவில்லை.இதற்கு மத்தியிலும் நேர்காணல் சகோதரர் கேள்வியின் மொழி பெயர்ப்பு மற்றும் ஃபுருஸ் பெயினின் பதில்களில் ஊகித்தறிந்தவை சில.

கேள்வி: தற்போது 1000 பக்கங்களாக அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்க்கிப்பட்ட வழக்கின் மொழி பெயர்ப்பை தமிழில் தர இயலுமா?

பதில்: இந்த முயற்சி நடைபெறுகிறது.சட்டம்,மொழி பெயர்ப்பு காரணங்களால் கால அவகாசம் தேவைப் படுகிறது.

கேள்வி: ராஜபக்சே மீதும்,அவரைச் சார்ந்தவர்கள் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் அமெரிக்க நீதி மன்றத்திலோ அல்லது உலக நீதிமன்றத்திலோ தனி மனிதர்கள் வழக்கு பதிவு செய்ய இயலுமா?

பதில்: இயலும்.அதற்கான தக்க ஆதாரங்கள்,நீதிமன்ற முறைகளை கடைப்பிடித்தால்.

கேள்வி: ஒரே காலத்தில் நிகழ்ந்த பாலஸ்தீனியர் குண்டுவீச்சு,தமிழர்கள் மீது குண்டு வீச்சு இரண்டில் பாலஸ்தீனம் உலக ஊடகங்களால் முன்னிறுத்தப் பட்டதேன்?

பதில்: இலங்கையில் எண்ணெய் வளம் போன்ற உலக ஆதாயங்கள் இல்லாததும் மத்திய கிழக்கு நாடுகளின் அழுத்தம் போன்ற உலக பார்வை இல்லாததே.

கேள்வி: குண்டு வீச்சில் இன்னல்படும் மக்களுக்கு உதவுவதில் தாமதங்கள் ஏற்படுவதேன்?

பதில்: இதில் உலகின் போக்கு மெத்தனமாக இருக்கிறதென்றும்,நிகழ்பவைகளை அவசரமாக உடனடியாக மாற்றி விடமுடியாதென்பதும் தோல்வியின் விரக்தியில் அமைதியாக இருந்து விட்டால் பின் வரும் காலங்கள் மிகுந்த சோகத்தை உருவாக்கி விடும்.

ஃபுருஸ் பெயின் கூறியவற்றில் முக்கியமான ஒன்று இந்த தருணத்தில் நமது அனைவரின் குரல்களையும் விடாமல் ஒலிக்கச் செய்வதே முக்கியம்.

(பதிவுகள் பக்கமும், தமிழக வழக்கறிஞர்,காவல்துறை அடிதடிகளுக்குப் பின் தமிழ்நாட்டை நாடி பிடித்துப் பார்த்தால் சோகம்,விரக்தி காணப்படுவதாக தோன்றுகிறது)

இந்த நேர்காணலின் தினங்கள் கழிந்து தற்போது கிழக்கில் கருணா ராஜபக்சேவிடம் மந்திரி பதவி பெற்றுவிட்டார்.பிள்ளையான் தான் சார்ந்தவர்களின் ஆயுதங்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டார்.புதிய பரிமாணங்கள் எந்த திசை நோக்கி பயணிக்கும் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.