Followers

Tuesday, March 17, 2009

இனிமேல் நான் மொக்கையர் பக்கம்

விழுந்து புரண்டு மண்டைய ஒடச்சி ரூம் போட்டு யோசிச்சு தீவிரமா இல்ல இஃகி கின்னு சொல்லி சிரிச்சு எப்படியெல்லாம் பதிவர்கள் எழுத்துக்கு எழுத்துமாச்சு புத்திக்கு புத்தியுமாச்சு நடப்புக்களை கணிச்சதுமாச்சு காலங்களை குறிச்சு வச்சமாதிரியுமாச்சுன்னு மெனக்கெட்டு பதிவுகள் போட்டா பளீங் சடுகுடு குடு குடுன்னுன் ட்டு நாங்க போற ட்ராக்கிலேயே போவோமுன்னு இலங்கையும் மத்தியும் மாநிலமும் ஓடுது.

யாராவது லாஜிக்கில்லா மேஜிக் பேய்க்கதை சொல்றவங்க இருக்கிறீங்களா? இதோ இப்ப வாரேன் துன்னுட்டு.

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாங்க தலை

ராஜ நடராஜன் said...

//வாங்க தலை//

ஐ!உறுப்பினர் அட்டை அதுக்குள்ள கிடைச்சிருச்சு.

துண்டு போட்டு ஆள் பிடிக்கிறதுங்குறது இதுதானுங்களாண்ணா!

சின்னப் பையன் said...

வாங்க தலை..

ராஜ நடராஜன் said...

//வாங்க தலை..//

நான் தான் உங்க கூட்டணில ரவுண்டு கட்டி அடிச்சிட்டீருக்கேன:)

பழமைபேசி said...

விரக்தியா? போங்க தலை!!

ராஜ நடராஜன் said...

//விரக்தியா? போங்க தலை!!//

வெறும் விரக்தியில்லீங்கண்ணா!வி......ர......க்....தி....எத்தனை நல்ல பதிவருக!அத்தனையும் நல்ல பழம! ஆனா விலை போக மாட்டேங்குது நாட்டுல.

ரவி said...

ஹி ஹி

ராஜ நடராஜன் said...

//ஹி ஹி//

வாங்க செந்தழலாரே!

(பெரிய தலைகள் எல்லாம் எட்டிப் பார்க்குது:))

நசரேயன் said...

நான் துண்டு போட்டு உக்காந்து இருக்கேன், நீங்க சாப்பிட்டு வாங்க

குடுகுடுப்பை said...

நல்ல பதிவுக்கு இடையில் மொக்கையும் போடுங்கள் நல்ல பதிவுகளும் படிக்கப்படும்.

ராஜ நடராஜன் said...

//நான் துண்டு போட்டு உக்காந்து இருக்கேன், நீங்க சாப்பிட்டு வாங்க//

அச்சச்சோ!இவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்கீங்க!நான் மதியம் பதிவு போட்டு சாப்பிட்டு விட்டு இரவு சப்பாத்தி சாப்பிட்டு இப்ப காலை தோசை சாப்பிட்டு விட்டுப் பார்த்தா நீங்க உட்கார்ந்திருக்கீங்க!

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவுக்கு இடையில் மொக்கையும் போடுங்கள் நல்ல பதிவுகளும் படிக்கப்படும்.//

குடுகுடுப்பையாரே!எனக்கு பதிவு படிக்கப்படுகிறதா இல்லையா என்ற கவலையில்லைங்க.சொல்லப்போனால் பதிவு போடுவதை விட மற்ற பதிவுகளைப் படிப்பதிலேயே ஆர்வம்.என்னோட பிரச்சினை என்னன்னா நடப்புக்களை கணிக்கும் பதிவர்களின் பொதுக்கருத்துக்கள்,அதாவது ஜனநாயகத்தில் மெஜாரிட்டி எண்ணிக்கை நாட்டு நடப்புக்களில் புறக்கணிக்கப்படுகிறதே என்ற ஆதங்கம்.ஈழம் குறித்து கத்து கத்துன்னு கத்தியும் பொதுமக்கள் குண்டுபடுவது தவிர்க்கப்படவில்லை.மாற்றத்துக்கு குரல் கொடுத்த வழக்குரைஞர்கள் போலிஸ் அடிதடின்னு தடம்புரண்டு இப்ப தி.மு.க வக்கீல் காங்கிரஸ் வக்கீல்ன்னு இனம் பிரிஞ்சாச்சு.மாறுதலுக்கான ஒரு அருமையான சந்தர்ப்பத்தை திருமாவளவன்,வை.கோ,ராமதாஸ் போன்றவர்கள் உபயோகிக்கத் தெரியாமல் பழையபடியே குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள்.மத்திய அரசின் மெத்தனம் சொல்லிக்க வேண்டாம்.

ஆக நாம் பார்க்கும் பார்வை வேறு.நாட்டு நடப்பின் நிதர்சனம் வேறு.

அது சரி(18185106603874041862) said...

//
ஆக நாம் பார்க்கும் பார்வை வேறு.நாட்டு நடப்பின் நிதர்சனம் வேறு
//

ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல...நாட்டுல எல்லாரும் பார்க்கிற மாதிரி நாமும் பார்த்தா அதுல என்ன ஸ்பெஷல்?? நமக்கு பார்வை வேற மாதிரி இருக்கிறதுனால தான் எழுத வேண்டியதா இருக்கு...

அவர்கள் பார்க்கும் பார்வையை நாம் மாற்ற முடியாது...அதற்காக நாம் பார்க்கும் பார்வையையும் மாற்றிக் கொள்ள முடியாது...

பிரபு ஒல்லியானா நல்லாருக்காது...ரஜினி குண்டானாலும் நல்லாருக்காது..:0))

ராஜ நடராஜன் said...

//ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல...நாட்டுல எல்லாரும் பார்க்கிற மாதிரி நாமும் பார்த்தா அதுல என்ன ஸ்பெஷல்?? நமக்கு பார்வை வேற மாதிரி இருக்கிறதுனால தான் எழுத வேண்டியதா இருக்கு...

அவர்கள் பார்க்கும் பார்வையை நாம் மாற்ற முடியாது...அதற்காக நாம் பார்க்கும் பார்வையையும் மாற்றிக் கொள்ள முடியாது...

பிரபு ஒல்லியானா நல்லாருக்காது...ரஜினி குண்டானாலும் நல்லாருக்காது..:0))//

அது சரி அண்ணே!பதிவுப் பக்கம் பார்த்தீங்கன்னா எல்லோருமே விவரம் தெரிஞ்ச ஆட்களா இருக்கிறாங்க.அதே மாதிரி பொதுமக்களும் விவரமாத்தான் இருக்காங்க.ஆனா இதையெல்லாம் மீறி அரசாங்க தூண்கள் மக்கள் மனதை பிரதிபலிக்காத போது வருத்தமா இருக்குது.

பிரபு ஒல்லி,ரஜனி குண்டு பற்றி ஒரே வரில சொல்லனுமின்னா "சொல்லி வேலைக்காகாது" தென் இலங்கைப் பெண்ணிடம் அர்த்தம் கேட்ட போது " சும்மா சொல்லக்கூடாது ".

கிரி said...

காண்டாகிட்டீங்களா :-)))