Followers

Sunday, March 22, 2009

ஆஸ்கர் விருதில்

ஆஸ்கர் விருதில் ஏ.ஆர்.ரகுமான் குரல் "எனது வாழ்நாள் முழுதும் அன்பு,வெறுப்பு என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியதில் நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்.அதனால் நான் இங்கே என்ற ஏ.ஆர்.ரகுமானின் குரல் "அன்பே சிவம்" போலவே பெரும்பாலோரிடம் போய்ச் சேரவில்லை. அதற்கு பதிலாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற ஆஸ்கர் விருதின் குரல் பெரும்பாலும் அனைவராலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆஸ்கர் விருது விழாவில் கண்டதும் கேட்டதும் தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பெற்ற விருதினால் இந்த பதிவு சாத்தியமாகிறது.முந்தைய ஆஸ்கார் விருதுகள் சிறந்த நடிகை,நடிகர்,இயக்குநர் யார் என்ற ஆர்வத்துடன் முடிந்துவிடும்.இந்தமுறை தொழில்நுட்பம்,இசை,நடிப்பு,கதை,இயக்கம் போன்ற துறைகளின் பார்வை ஸ்லம்டாக் மில்லினர் வெற்றியால் உலக நாடுகள் தங்கள் பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளது.

ஆஸ்கார் மேடையில் பரிசை வெற்றியாளருக்கு அளிப்பவர்களின் பல்சுவைப் பேச்சு இனிமையாக இருந்தது.உதாரணத்திற்கு கீழே சில.போட்டிப் படங்களின் வகை,படம்,பரிசு பெற்றவர்கள் விபரம் தனியாக ஆங்கிலத்திலும் தருகிறேன்.இனி.....


* சிறந்த திரைக்கதைக்காக பரிசை தட்டிச் சென்ற ஸ்லம்டாக் மில்லினர் திரைக்கதையாசிரியர் சைமன் பூபொஃ சொன்னது " உலகத்தின் சில இடங்களில் நிற்பது கற்பனைக்கும் அப்பாற்பட்டது.எனக்கு நிலவு,சவுத் ஃபோல்,உலக அழகிகள் போடியம் போன்றவை".

* ஒரு சிறந்த எழுத்துக்கான தகுதி என்ன? திரைக்கதை அல்லது நல்ல போஸ்டர் ஆனால் பெரும்பாலும் திரைக்கதையே தகுதியை தட்டிச் செல்கிறது.(பதிவுகளின் சிறந்த எழுத்துக்கான தகுதி என்னவென்பதை உங்கள் தீர்ப்புக்கு விட்டு விடுகிறேன்).

* ஒவ்வொரு எழுத்தாளனும் வெறும் பக்கத்துடன் துவங்குகிறான்.அந்த வெற்றுப் பக்கம் ஒரு சமயம் மரமாக இருந்தது.அந்த மரம் ஒரு காலத்தில் விதையாக இருந்தது.

* காதலுக்கான ஒரு முழு திரைப்படக் கதை 1927 முதன் முறையாக த விண்ட் என்ற படத்தின் கருவிலிருந்து தொடர்கிறது.

நம்ம ஊர்க் திரைக்கதைக் கோணங்கள் இந்த மூலத்திலிருந்து வருபவைகள் என நினைக்கிறேன். சில வரிகளில் கதை சொல்வது எப்படி? இங்கே:

* பையன் பெண்ணைச் சந்திக்கிறான்.ஆனால் பையன் இன்னொரு பெண்ணிடம் விழுகிறான்.அப்புறம் பையன் முதல் பெண்ணுடன் தான் அன்பு செலுத்தியிருக்க வேண்டுமென உணரும்போது காலம் கடந்து விடுகிறது.(நம்மூர்க் கதாசிரியர்கள் இருவரையும் சேர்த்து வைத்து சுபம் போட்டு விடுவார்கள்)

* அனிமேசன் படங்கள் பட்டையைக் கிளப்புகிறது.தொழில்நுட்பக்காரர்களுக்கும்,குழந்தைகளுக்கும்,அனிமேசன் பிரியர்களுக்கும் நல்ல வேட்டை.

* ஆர்ட் டைரக்சன்,மேக்கப்,காஸ்ட்யூம் என்ற நமது திரைத்தொழில் நிபுணர்களுக்கு தங்கள் திறமையை மெருகுபடுத்த பார்க்க வேண்டியவை ஆஸ்கர் போட்டிப் படங்கள்.

* குறுகிய நேரடி ஆக்சன் படமான டாய்லாண்ட் என்ற படத்தின் பரிசைத் தட்டிச்சென்ற ஜோசன் அலெக்ஸாண்டர் ஃப்ரேடங்க் 14 நிமிட படத்துக்கு 4 வருடம் உழைத்தாராம்

நாத்திகப் பிரியர்களுக்கு: (சிறந்த டாகுமெண்டரிக்கான பரிசை தருபவர் சிரிப்புடன் சொன்னது- பெயர் மறந்து விட்டது) அனைவருக்கும் நன்றி.எல்லோரும் அழுதுகொண்டிருக்கிறார்கள் ஆனால் நான் தொடரவேண்டும். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிப்புக்கான எனது படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.கதை மதம் சம்பந்தப்பட்ட விவாதத்திற்குரியது. இந்த முட்டாள் கடவுள்கள் ரொம்ப அதிகமாகவே பெரும் இழப்பை இந்த உலகத்திற்கு தந்துவிட்டார்கள் என்று என்றாவது ஒரு நாள் நாம் அனைவரும் உணரவேண்டும்.எனது டாகுமெண்டரியின் முடிவை கெடுத்து விட்டதால் தகுதி வாய்ப்பை இழந்துவிட்டது.டாகுமெண்டரி படம் தயாரிப்பவர்கள் இந்த உலகின் ஜன்னல்கள்.நமது வாழும் சூழலுக்கும் அப்பாற்பட்ட நிஜங்களை உண்மையாக இவர்கள் படம்பிடித்துக் காண்பிக்கிறார்கள். இவர்கள் உண்மையுடன் நம்மைச் சுற்றி இருக்கும் மனித குலத்தை உணரும்படிச் செய்கிறார்கள்.டாகுமெண்டரியன்களுக்கு என்னோடு சேர்ந்து நன்றியையும் கரவொலியையும் தரவேண்டுகிறேன்.எனது படத்தின் துவக்கமாக டாகுமெண்டேரியன்களின் படங்களைப் பாருங்கள்.

ரெசூல் பூக்குட்டி துவக்கத்தில் உணர்ச்சிவசப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டு பின் சுதாரித்துக்கொண்டு சொன்னவை: பம்பாயின் இயல்பான கலைநயமான சத்தங்களை தயாரித்த இரு மேஜிக்காரர்களுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்கிறேன்.ஓம் என்ற அமைதி,அமைதிக்குள்ளும் அமைதி என்ற சொல்லை உலகிற்கு தந்த தேசத்தில் இருந்து நான் வருகிறேன்.இந்த விருதை எனது நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்.அகாடமிக்கு நன்றி!இது ஒலிக்கான விருது அல்ல!ஒரு சரித்திரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனது ஆழ்ந்த நன்றியை எனது ஆசிரியர்களுக்கும்,டானி போயல்,கிறிஸ்டியன் கோல்சன்,பால் ரிச்சி,பர்வேஸ்,தபு மற்றும் இந்தப் படத்திற்கு உழைத்த அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஃப்ரி மேண்ட்ல் ஒலிக்கலவையாளர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.நன்றி அகாடமி! மிகவும் நன்றி என்று முடித்துக் கொண்டார்.

* நம்மூர் கதாநாயகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.ரசிகர்களின் ஆர்வத்தில் எத்தனை எத்தனை விசில்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.ஆனால் த ரீடர் படத்துக்கான சிறந்த நடிகை பரிசை தட்டிச் சென்ற கேட் வின்ஸ்லட் எனது அம்மா,அப்பா இங்கே எங்கோ உட்கார்ந்திருக்கார்கள் விசில் அடித்தால் நல்லது என்று சொல்லி வயதான அப்பாவின் ஒற்றை விசிலில் மகிழ்ச்சியடைந்து Yeah! என்று குரல் எழுப்பி லவ் யூ சொல்லி முகம் மலர்ந்தார்.15 முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட போட்டி நடிகை Merryl Streep ஐ நோக்கி " I am sorry Merryl,but you have to suck that up" என்றார்.

* ஸ்லம்டாக் மில்லினர் இயக்குநர் டானி போயல் குழந்தை மாதிரி குதித்து விட்டு எல்லோருக்கும் நன்றி சொல்லி பின் படத்தின் இறுதியின் நடனத்தை அமைத்தவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதற்கு, வயது 80 ஆகி விட்டது என்று இதயபூர்வமான மன்னிப்பை வேண்டினார்.

* விருதில் கலந்துகொண்ட சோபியா லாரன் எப்படி உடலை பாதுகாக்கிறார் என்ற ரகசியத்தை நமது நடிகைகள் தேட முயல்வது நல்லது.

சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஸ்லம்டாக் மில்லினர் தயாரிப்பாளர் கிறிஸ்டியன் கோல்சன் இந்தப் படத்தை பட்ஜெட் குறைபாட்டால் நினைத்தபடி எடுக்க இயலவில்லை என்றார்.

* ஸ்லம்டாக் மில்லினருக்கு சரியான போட்டியாக பெஞ்சமின் பட்டன் திரைப்படம் அனைத்து துறைகளிலும் போட்டி போட்டது.பாஸ்டன் பாலா அவரது பதிவில் ஏன் இந்தப் படத்தைப் பற்றி சிலாகித்தார் என்பது புரிகிறது.ஆனாலும் நடிப்பில் ஆளுக்கு ஆள் போட்டி போட்ட படமும் என்னைக் கவர்ந்ததும் டவுட் என்ற திரைப்படம். மெரில் ஸ்டிரிப் ஏன் சிறந்த நடிகைக்கான விருதை கேட் வின்ஸ்லட்டிடம் தவற விட்டார் என்பதற்காக இனி ரீடர் திரைப்படம் காணவேண்டும்.பதிவின் நீளம் கருதி ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நிகழ்வுகள் ஆங்கிலத்தில் அடுத்த பதிவில்.

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பின் படத்தின் இறுதியின் நடனத்தை அமைத்தவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதற்கு, வயது 80 ஆகி விட்டது என்று இதயபூர்வமான மன்னிப்பை வேண்டினார்.
//


எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க தல

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் த ரீடர் படத்துக்கான சிறந்த நடிகை பரிசை தட்டிச் சென்ற கேட் வின்ஸ்லட் எனது அம்மா,அப்பா இங்கே எங்கோ உட்கார்ந்திருக்கார்கள் விசில் அடித்தால் நல்லது என்று சொல்லி வயதான அப்பாவின் ஒற்றை விசிலில் மகிழ்ச்சியடைந்து Yeah! என்று குரல் எழுப்பி லவ் யூ சொல்லி முகம் மலர்ந்தார்.15 முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட போட்டி நடிகை Merryl Streep ஐ நோக்கி " I am sorry Merryl,but you have to suck that up" என்றார்.
//

நான் ஆஸ்கர் விருது நிகழ்ச்சி பார்க்கலை...ஆனா எங்க ஊரு BAFTA...ல கேட்டும் அவங்க அப்பாவும் சேந்து விசில் அடிச்சாங்க....ஒரு தடவை இங்க ஒரு பார்ட்டில மீட் பண்ணிருக்கேன்...ரொம்ப ஜாலியான ஆனா க்ளவரான‌ பொண்ணு..

அது சரி(18185106603874041862) said...

ஆமா, ஏதோ மொக்கை போடப் போறதா அறிவிப்பு விட்டீங்க...இதுல மொக்கையா ஒண்ணும் காணோமே?? :0))

ராஜ நடராஜன் said...

//எல்லோரும் நல்லவங்களா இருக்காங்க தல//

வாங்க சுரேஷ்!ஆஸ்கார் விருது குறுந்தகடு கிடைச்சா கட்டாயம் பாருங்க.மனுசனுங்க ஆளாளுக்கு வித்தியாசம்.

ராஜ நடராஜன் said...

//நான் ஆஸ்கர் விருது நிகழ்ச்சி பார்க்கலை...ஆனா எங்க ஊரு BAFTA...ல கேட்டும் அவங்க அப்பாவும் சேந்து விசில் அடிச்சாங்க....ஒரு தடவை இங்க ஒரு பார்ட்டில மீட் பண்ணிருக்கேன்...ரொம்ப ஜாலியான ஆனா க்ளவரான‌ பொண்ணு..//

I will be lying if I say I have not made my speech ன்னு சொல்லிட்டுத்தான் பேச்சை ஆரம்பிச்சாங்க.நீங்க சொல்றதப் பார்த்தா நிகழ்ச்சிக்கு முன்பே ஒத்திகை பார்த்திருப்பாங்க போல இருக்குது.

பழமைபேசி said...

//அது சரி said...
ஆமா, ஏதோ மொக்கை போடப் போறதா அறிவிப்பு விட்டீங்க...இதுல மொக்கையா ஒண்ணும் காணோமே?? :0))
//

அண்ணன்னால அதெல்லாம் முடியாது... இஃகிஃகி!!

ராஜ நடராஜன் said...

//ஆமா, ஏதோ மொக்கை போடப் போறதா அறிவிப்பு விட்டீங்க...இதுல மொக்கையா ஒண்ணும் காணோமே?? :0))//

அது வேற ஒண்ணுமில்லை.வெள்ளிக்கிழமை வார விடுமுறையா!சமையல் கட்டுல போய் உப்புமா பண்றேன் பேர்வழின்னு தங்ஸ்க்கு வெங்காயம்,பச்சை மிளகாயெல்லாம் வெட்டிக் கொடுத்துட்டு இந்த ஆஸ்கர் சி.டியப் பார்த்த எஃபகட்தான் பதிவு.

அப்பப்ப மொக்கையும் போடுவோமில்ல:)

ராஜ நடராஜன் said...

//அண்ணன்னால அதெல்லாம் முடியாது... இஃகிஃகி!!//

தூங்கிட்டுருந்த சிங்கத்த தட்டி எழிப்பிட்டாங்கய்யா!தட்டி எழுப்பிட்டாங்க!

வருண் said...

****பழமைபேசி said...
//அது சரி said...
ஆமா, ஏதோ மொக்கை போடப் போறதா அறிவிப்பு விட்டீங்க...இதுல மொக்கையா ஒண்ணும் காணோமே?? :0))
//

அண்ணன்னால அதெல்லாம் முடியாது... இஃகிஃகி!!

March 22, 2009 4:56 AM ****

உண்மைதான் ;-)

கிரி said...

//அதற்கு பதிலாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற ஆஸ்கர் விருதின் குரல் பெரும்பாலும் அனைவராலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது//

சின்னதா சொன்னதால் இருக்குமோ!! :-)

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு ராஜ நடராஜன்

ராஜ நடராஜன் said...

////அதற்கு பதிலாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற ஆஸ்கர் விருதின் குரல் பெரும்பாலும் அனைவராலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது//

சின்னதா சொன்னதால் இருக்குமோ!! :-)//

வாங்க கிரி!ஆஸ்கரில் இசைத்த தமிழ் ஒலி என்பதால் இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு ராஜ நடராஜன்//

வாங்க முரளிகண்ணன்.