Followers

Monday, April 6, 2009

முதல்வன் , பிராஸ்ட்/நிக்சன் தொடர்புகள்

இயக்குநர் சங்கர் முதல்வன் படம் எடுப்பதற்கு முன் திரைக்கதைக்கும் படத்திற்கான கற்பனைக்கும் எங்கெல்லாம் ரூம் போட்டு யோசித்தாரோ தெரியாது.ஆனால் அர்ஜுன் ரகுவரனை நேரலையில் நேர்காணல் செய்யும் காட்சியையும் நேரலை என்ற உணர்வே இல்லாமல் ரகுவரனின் தொண்டர் ஹனீபா தலைவனைக் காப்பாற்றும் எண்ணத்தில் குறுக்கிடுவதும் நிச்சயம் புகழ்பெற்ற டேவிட் பிராஸ்ட்/நிக்சன் நேர்காணலே படத்திற்கான மூலக்கருவாக சங்கருக்கு அமைந்திருக்கக் கூடும்.

தொலைபேசி ஒட்டுக்கேட்டு வழக்கில் பிரபலமான வாட்டர்கேட் ஊழலில் பதவியை இழந்த அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் தனது பெயரை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக டேவிட் பிராஸ்ட் என்ற பிரிட்டிஷ் ஊடகவியலாளருடன் 600,000 டாலர் நேர்காணலுக்கு சம்மதித்த பிரபலமான உண்மை நிகழ்வே சங்கருக்கு உத்வேகத்தை (Inspiration)கொடுத்திருக்கும்.

பெரும்பான்மையான ஊடக நேர்காணலில்,உதாரணத்துக்குச் சொன்னால் பி.பி.சி வழங்கும் பேசுவது கடினம்(Hard Talk) நிகழ்வின் நிகழ்ச்சியாளர் எதிரில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கு ஆம் அல்லது இல்லையென்று நேரடியாக பதில் கூறி விளக்கம் தராமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் சுற்றி வளைத்து நழுவிய மீன்களாய் எதையாவது சொல்வது வழக்கம்.இந்த உத்தியை(Technique) ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாய் உண்டு.அதற்கான பதிலை பிராஸ்ட்/நிக்சன் திரைப்படம் தந்தது.

தொலைக்காட்சியில் 5 மில்லியன் பொதுமக்களால் காணப்பட்ட நிக்சனின் பதவி விலகலும் இறுதியாக விமானத்தில் பை பை சொல்லி பொதுவாழ்விலிருந்து ஒதுங்கிய நிக்சனை ஊடகவியலாளர் டேவிட் பிராஸ்ட் தனது பங்குகளையெல்லாம் விற்றும் கூட நண்பர்களிடமும் சொல்லி நிக்சனுக்கு நேர்காணலுக்கு தரவேண்டிய 600,000 டாலர்களை ஏற்பாடு செய்கிறார்.டேவிட் பிராஸ்ட்டுக்கு தனது எதிர்காலத்தைப் பணயம் வைத்து ஏற்பாடு செய்த நேர்காணல் இது.ரிச்சர்ட் நிக்சனுக்கோ பதவியிழந்த நிலையில் தனது பெயரை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.எனவே இந்த நேர்காணல் இருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஒன்று.

இந்த நிலையில் ஒவ்வொன்றும் 2 மணி நேரம் 11 முறை என(நிக்சனின் வெளியுறவுக் கொள்கை,உள்நாட்டுக் கொள்கை,சுயசரிதை,வியட்நாம் போரை கையாண்ட முறைகள் என) துவங்கும் நேர்காணலின் முதல் கேள்வியாக ஒட்டுக்கேட்ட பதிவுகளை ஏன் அழிக்கவில்லை(Why didn't you burn the tapes?) என்பதில் துவங்குகிறது நேர்காணல். எம்புட்டு செஞ்சுட்டோம் இதைச் செய்ய மாட்டோமா பாணியில் உன்னை மாதிரி எத்தனை ஆட்களைப் பார்த்திருக்கிறேன் என்று கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நிக்சன் நீண்ட விளக்கங்களுடன் பதிலை தந்து கொண்டிருக்கிறார்.இறுதியில் ரிச்சர்ட் நிக்சனை எப்படி டேவிட் பிராஸ்ட் தூண்டிலிட்டு கேள்விக்கொக்கியில் மாட்டுகிறார் என்பதும் நிக்சனை பொதுவாழ்க்கையில் மேலும் ஈடுபடாமல் நிரந்தர ஓய்வெடுக்கச் செய்கிற நேர்காணல் நிகழ்வுகளே கதை.

உண்மை நிகழ்வின் அடிப்படையில் திரைக்கதைப் புனையப் பட்டிருந்தாலும் நிக்சன் மப்புல டேவிட் பிராஸ்ட்டை நடு இரவில் எழுப்பி பேசுவது போன்றவை உண்மையல்ல என்றும் நிக்சன் மது அருந்துவதில்லையென்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சமயங்களில் ஸ்காட்ச் போன்று காணப்படும் (blonde Dubonnet,’ which is a French vermouth,non-alcoholic drink that looks like scotch.) பழச்சாறு மட்டுமே உண்பவர் என்கிறார் 13 வருடங்கள் நிக்சனுடன் இருந்த Jack Brennan.நேர்காணல் வெற்றியின் வருமானத்தில் 20% நிக்சனுக்கு தரப்பட்டது என்பதும் கூடுதல் தகவல்கள்.

பிராஸ்ட்/நிக்சன் சிறந்த திரைக்கதை,எடிட்டிங்,திரைப்படம்,நடிப்பு,இயக்குநர் என ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட திரைப்பட வரிசையில் ஒன்று.

29 comments:

rksrini said...

Actually That movie taken Based on Sujatha Navel .Before movie start they have announced that.

rksrini said...

Actually That movie taken Based on Sujatha Novel .Before movie start they have announced that.

ராஜ நடராஜன் said...

//Actually That movie taken Based on Sujatha Navel .Before movie start they have announced that.//

You mean Sujatha was first inspired by Nixson interviews?

பழமைபேசி said...

அண்ணா, இதெல்லாம் நமக்குத் தெரியாத தகவலுங்க... நன்றிங்க!

ராஜ நடராஜன் said...

//.Before movie start they have announced that.//

There is a close link between both interviews.Only director sankar can comment on this.

ராஜ நடராஜன் said...

//அண்ணா, இதெல்லாம் நமக்குத் தெரியாத தகவலுங்க... நன்றிங்க!//

வாங்கண்ணா வாங்க!எல்லாம் 49-0 பதிவின் எதிர்விளைவுதான் இந்த மாதிரி பதிவு.

என்னவெல்லாம் சொல்லிப் பார்க்கிறோம் தலய்க கேட்குற பாடக் காணோம்.

ஆ.ஞானசேகரன் said...

//பிராஸ்ட்/நிக்சன் சிறந்த திரைக்கதை,எடிட்டிங்,திரைப்படம்,நடிப்பு,இயக்குநர் என ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட திரைப்பட வரிசையில் ஒன்று//

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

எனக்கு புரியாத பார்வை நல்லா இருக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நன்றி தலைவா.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இவ்ளோ மேட்டர் வச்சிருக்கீங்க

ராஜ நடராஜன் said...

//நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே//

வருகைக்கு நன்றிங்க.
(விளிப்பதில் தயக்கம்.ஒரு முறை உங்கள் பதிவுப் பக்கம் எட்டிப் பார்த்துவிட்டால் தயக்கம் போய்விடும்:))

ராஜ நடராஜன் said...

//எனக்கு புரியாத பார்வை நல்லா இருக்கு//

புரியாத பார்வையா:)

ராஜ நடராஜன் said...

//நன்றி தலைவா.....//

வாங்க Sureஷ்!ஜேம்ஸ்பாண்டுகள் எப்படி இருக்காங்க:)

ராஜ நடராஜன் said...

//இவ்ளோ மேட்டர் வச்சிருக்கீங்க//

அது வேற ஒண்ணுமில்லீங்க!துவக்கத்துல ஈழத்துக்கு ஏதாவது நல்லது நடக்குமான்னு பார்த்தேன்.நம்ம தலய்க எல்லாம் கூட்டம் போட்டு தீர்மானம் போட்டாங்களா?இதோ வந்துடுச்சு தீர்வுன்னு நினைச்சா ராஜினாமா கடிதத்தில் துவங்கிய கதை இப்ப ஓட்டு பங்காளி சண்டைகள்ல வந்து நிக்குது.வெறுப்புல ரெண்டு சினிமா பார்க்கலாமுன்னு போயிட்டேன்.

பிடிச்சிருந்தா இன்னும் சில சினிமாக்களை அறிமுகப் படுத்திடலாம்:)

குடுகுடுப்பை said...

நான் கொஞ்சம் லேட்டா வரேன்.

ராஜ நடராஜன் said...

//நான் கொஞ்சம் லேட்டா வரேன்.//

இன்னுமொரு கொள்ளைக்காரர்கள் படம் பார்த்து முடியலையாக்கும்:)

கவிதா | Kavitha said...

நல்ல அலசல்.. எனக்கு தெரிந்து மனிரதனம் படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு நிஜ நிகழ்வை வைத்து தான்.. ...

:) சங்கரும்..அப்படியே... உங்கள் பதிவு சூப்பர் :)

திரை விமர்சனமோன்னு கொஞ்சம் கடுப்பாக வந்தேன்.. .:) ஆனா பழைய படமாச்சேன்னு ஒரு சந்தேகம் வேறு.. :) நல்லா இருக்குங்க...

அது சரி(18185106603874041862) said...

அண்ணே,

ஷங்கர் உங்கள்ட்ட மாட்டுனா, முதல்வன் படத்துல ரகுவரன் மாட்டினதை விட மோசமாயிடும் போலருக்கே? :0)))

பிராஸ்ட் நிக்சனை பாத்தியளா, ஒரு பீரடிச்சியளா, குப்புறப் படுத்தியளான்னு இருக்கணும்...அஞ்சு கோடி பேரு, அஞ்சு கோடி தடவை அஞ்சு, அஞ்சு பைசா திருடுனா தப்பான்னு கேட்டவரு கிட்ட இப்பிடியெல்லாம் தோண்டி துருவி கேள்வி கேக்கப்படாது...

நல்ல பகிர்வு...ஆனா படம் பார்க்கிற மாதிரி இருக்கா? இருந்தா சொல்லுங்க...எப்பனா டி.வி.டி வாங்கி பார்த்துரலாம்...ஆனா ஞாபகம் வச்சிக்கங்க...என்னோட ரசனையெல்லாம் ரொம்ப கேவலமான ரசனைன்னு ரொம்ப பேரு சொல்லிட்டாங்க...போக்கிரி, கரகாட்டக் காரன் மாதிரி படத்தை ரசிச்சி பார்க்கிற ஆள் நானு..

நசரேயன் said...

இம்புட்டு இருக்கா

ராஜ நடராஜன் said...

//நல்ல அலசல்.. எனக்கு தெரிந்து மனிரதனம் படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு நிஜ நிகழ்வை வைத்து தான்.. ...

:) சங்கரும்..அப்படியே... உங்கள் பதிவு சூப்பர் :)//

மணிரத்னம்,சங்கர் போன்ற தமிழுக்கு கிடைத்த இயக்குநர்கள் சில செய்திகளை எங்கிருந்தாவது திரட்டினாலும் தமிழக இயல்புக்குத் தகுந்தமாதிரி திரைக்கதை அமைப்பது பாராட்ட வேண்டியதுதாங்க.

ராஜ நடராஜன் said...

//பிராஸ்ட் நிக்சனை பாத்தியளா, ஒரு பீரடிச்சியளா, குப்புறப் படுத்தியளான்னு இருக்கணும்...அஞ்சு கோடி பேரு, அஞ்சு கோடி தடவை அஞ்சு, அஞ்சு பைசா திருடுனா தப்பான்னு கேட்டவரு கிட்ட இப்பிடியெல்லாம் தோண்டி துருவி கேள்வி கேக்கப்படாது...//

வாங்கோண்ணா வாங்கோ!இல்ல,நிக்சன்/ஃப்ராஸ்ட் நேர்காணல் சங்கருக்கு கதை அமைப்பதற்கான கருவாக அமைந்திருந்தால் அதையே கொஞ்சம் நீட்டியிருந்திருக்கலாம்.

எனக்கு இரு படங்களுக்குமான தொடர்புக்கான நாட் எப்படி கிடைச்சதுன்னா நேரலையில் அர்ஜுன் கேள்வி கேட்டுவிட்டு ரகுமான் தடுமாறுவாரே அந்த கணத்தில் ஹனிபா நம்மூர் தொண்டர் பாணியில் குறுக்கிடுவாரே அதே நிகழ்வு உண்மை ஃபிராஸ்ட்/நிக்சன் நேர்காணலில் நடந்தது என்பது மட்டுமே.

இயக்குநர் சங்கர் சண்டைக்கு வர்றமாதிரி இருந்தா "சங்கர் சார்!உங்க முதல்வன் படத்தைப் பார்த்து frost/nixon படத்தோட இயக்குநர் Ron Howard உங்க கதையைச் சுட்டுட்டாருன்னு சொல்லிவிட வேண்டியதுதான்:)ஏன்னா முதல்வன் தான் முதல்வன்.frost/nixon 2008க்கான ஆஸ்கர் போட்டிக்கான படம்.

ராஜ நடராஜன் said...

//நல்ல பகிர்வு...ஆனா படம் பார்க்கிற மாதிரி இருக்கா? இருந்தா சொல்லுங்க...எப்பனா டி.வி.டி வாங்கி பார்த்துரலாம்...ஆனா ஞாபகம் வச்சிக்கங்க...என்னோட ரசனையெல்லாம் ரொம்ப கேவலமான ரசனைன்னு ரொம்ப பேரு சொல்லிட்டாங்க...போக்கிரி, கரகாட்டக் காரன் மாதிரி படத்தை ரசிச்சி பார்க்கிற ஆள் நானு..//

ஏன்?போக்கிரி விஜய்யை ஒரு தூக்கி தூக்கி விட்டதே!பாட்டுக்களும் நல்லாவே இருந்தது.கரகாட்டக்காரனும் மக்களால் வரவேற்கப்பட்ட படமாச்சே.எனவே அவ்வளவு ஒண்ணும் மோசமான ரசனையில்லை.(ஒரு வேளை வில்லு எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லியிருந்தீங்கன்னா உங்கள ஒரு மாதிரியா நானும் பின்னூட்டம் பார்ப்பவர்களும் பார்த்திருப்போம்:)

எனக்கு திகில்(Horror)படங்கள் பிடிப்பதில்லை.கிரி ஹாஸ்டல் பதிவு போட்டாரேன்னு டி.வி.டி வாங்கிட்டு இன்னும் பார்க்கவில்லை.பேசிகிட்டே கதையை எடுத்துச் செல்லும் படங்களும்,ஆவலால் தவிப்பூட்டும்(suspense)படங்களும் பிடிக்கும்.

ராஜ நடராஜன் said...

//இம்புட்டு இருக்கா//

வாங்க நசரேயன்!மெல்ல மெல்ல கதையை நகர்த்தும் படங்கள் பிடிக்கும் என்றால் தாராளமாக படம் பார்க்கலாம்.

இல்லைன்னா வேகமா ஓடணுமின்னா
behind the enemies line போன்ற ஆக்சன் படங்கள் பார்க்கலாம்.

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு உங்கள் பார்வை. நீங்கள் சொன்ன மாதிரி காப்பி அடித்தாலும், அதில் நம் சரக்கை கொண்டு வருவதற்கு திறமை வேண்டும். கஜினி கூட ஒரு ஆங்கில படத்தை தழுவி இருந்தாலும், நம் தமிழ் படத்தின் திரைகதை, மிகவும் நன்றாக இருந்தது - அப்படின்னு சொல்வாங்க

ராஜ நடராஜன் said...

//ரொம்ப வித்தியாசமா இருக்கு உங்கள் பார்வை. நீங்கள் சொன்ன மாதிரி காப்பி அடித்தாலும், அதில் நம் சரக்கை கொண்டு வருவதற்கு திறமை வேண்டும். கஜினி கூட ஒரு ஆங்கில படத்தை தழுவி இருந்தாலும், நம் தமிழ் படத்தின் திரைகதை, மிகவும் நன்றாக இருந்தது - அப்படின்னு சொல்வாங்க//

வாங்க!கனாக் காலங்கள் நினைக்க நல்லாவே இருக்கும் எப்பொழுதும்:)
நம்ம இயக்குநர்கள் இருக்கும் தொழில்நுட்பங்களுடன் கலக்கவே செய்கிறார்கள்.முக்கியமாக கதையை எங்கிருந்து கொண்டு வந்தாலும் நமது மண்ணுக்குத் தகுந்தமாதிரி மாற்றிக் கொடுப்பது பாராட்டப் படவேண்டிய விசயமே.

நாயகன் கூட ஃகாட்ஃபாதர்லருந்து சுட்டதுங்கிறாங்க.ஆனால் பிரமிக்க வைக்கும் நடிப்பும் இயக்கமும்.

எனவே மாற்றான் தேசத்துப் படங்களும் சுவைக்கும்:)

கவிதா | Kavitha said...

எனக்கு நாயகன் தவிர்த்து வேறு எந்த மணிரத்னம் படமும் பிடிக்கவில்லை.. நாயகன் கூட கமலுக்காக...

அதிகபிரசங்கித்தனமாக வசனங்களின் தினிப்பு அதுவும் வயதுக்கு ஏற்றார்போன்று இல்லாமல் இருக்கும்... குறிப்பாக அஞ்சலி, சின்ன குழந்தைகள் பேசக்கூடாத பார்க்ககூடாத விஷயங்கள் காட்டப்படும்.. :(

Suresh said...

Wow டேவிட் பிராஸ்ட்/நிக்சன் நேர்காணல் பத்தி நல்லா சொன்னிங்க நமக்கு தொரியாது உங்க பதிவு படிச்சு தெரிஞ்சிகிட்டேன் ... தலைவா

//என்ற சந்தேகம் நீண்ட நாட்களாய் உண்டு.அதற்கான பதிலை பிராஸ்ட்/நிக்சன் திரைப்படம் தந்தது./

எனக்கும் உண்டு தலை

//றுதியில் ரிச்சர்ட் நிக்சனை எப்படி டேவிட் பிராஸ்ட் தூண்டிலிட்டு கேள்விக்கொக்கியில் மாட்டுகிறார் என்பதும் நிக்சனை பொதுவாழ்க்கையில் மேலும் ஈடுபடாமல் நிரந்தர ஓய்வெடுக்கச் செய்கிற நேர்காணல் நிகழ்வுகளே கதை.
/

Very intresting thalai want to see that..




ungal varugaikku romba nandri, unga follower ayutaen ... adikadi inimae kadaipakkam vanga thalaiva

Bhuvanesh said...

புது தகவலா இருக்கு சார்!!

ராஜ நடராஜன் said...

//புது தகவலா இருக்கு சார்!!//

வாங்க!வாங்க!புவனேஷ்!பதிவுகளை மேஞ்சுகிட்டிருந்தாலும் எல்லாருடைய வீட்டுக்கும் போக இயலுவதில்லை.இதோ உங்களுக்கு ஒரு ஹலோ சொல்ல வாரேன்:)