Followers

Wednesday, April 15, 2009

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்

என் இனிய பாரதிராஜாவுக்கு!கட்டிடத்துக்கு வெளியே வராமலிருந்த தமிழ் திரைப்படத்தை ஆடு,கோழி,அன்றாட வாழ்வின் முகங்கள் கூட நடிக்க முடியுமென்று கிராமிய மணத்தோடு சினிமாவின் திசையை திருப்பிப் போட்ட கரகரக் குரலானே!

ஆங்கிலப் படத்துக்கு சவால் விடும் திகிலோடுதானே படம் செய்தாய்!திரைக்குப் பின்னால் நிகழ்பவையும்,படம் எடுக்கும் முறைகளின் நுணுக்கங்களையும் கோடி காட்டியிருக்கிறாயே!எங்கே வெட்டணும்ங்கிற எடிட்டிங் கலை கூட நல்லாத்தான்யா இருக்குது.பாட்டும்,பாட்டைச் சார்ந்த உனது படப்பிடிப்பும் ஒன்றுக்கு ஒன்று சங்கீதப்பார்வை செய்யத்தானே செய்யுது.முகக் கலைஞன் எனும் மேக்கப்மேன்,ஒட்டியே நடிக்கும் நடிகன் என நடிகையை உரசிப்பார்த்து விட நினைக்கும் திரைக்கும் அப்பாலும் செல்லுலாய்ட் பாய்கிறதே.

கதைக்குள்ளும் நீயும் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதும் தெரிகிறதே.இதையெல்லாம் மீறி நடிப்புக்கு மொழி தேவையில்லையென்று நானா படேகரை கொண்டு வந்து போட்டிருக்கிறாயே!படம் பார்க்கும் எந்தக் கொம்பனும் இதுதான் கிளைமாக்ஸ் என்று யூகிக்காத வண்ணம் கதை சொல்லியிருக்கிறாயே!இத்தனையிருந்தும் பாரதிராஜா லேபிள் பெயர் இருந்தும் உன்னோட பொம்மலாட்டம் பெட்டிக்குள் போய் சுருண்டு விட்டதாமே!

எங்கே விட்டாய் கோட்டை?விளம்பரமா?அதுதான் சன் டிவியின் செய்திக்கு முன் இசையோட சுத்திகிட்டு வரும் பூமி கிளிப்,கிளிப்,கிளிப் என வெட்டி வெட்டி வெட்டி எடிட்டிங் செய்து விட்டு சன் செய்திகள் கூட வருதே!சன் டிவிக்காரனே படத்தோட பாதி விளம்பரத்தைக் கொண்டு போயிருப்பானே!

Something wrong!ஓ!ரசனை விட்டுப்போச்சா?அதெப்படி ஐயா ரசனை விட்டுப் போகும்?பாலுமகேந்திரா,பாரதிராஜா பெயரெல்லாம் ரசனை மாறிப்போக வேண்டிய விசயமா என்ன?சராசரி ரசனைக்குத்தான் வில்லு பிடிக்குதுன்னா வில்லு பற்றி போட்டுத் துவைச்ச பதிவர் வட்டம் கூட பொம்மலாட்டம் பற்றி சொல்லாமப் போனது எப்படி?(ரீசெசனால படம் பார்க்கும் சிக்கனமோ என்னவோ?)

படம் பார்த்த பதிவர்கள் உங்கள் பக்கங்களில் உங்கள் எண்ணங்களைப் பதியுங்கள்.அதுவே பாரதிராஜா என்ற சமூகப் பார்வையாளனுக்கும்,தனக்கென ஒரு பாணியென சிவாஜிக்கு முதல்மரியாதை செய்த நல்ல கலைஞனுக்கும் நாம் செலுத்தும் மரியாதை.

டிஸ்கி:ஒவ்வொரு நாளும் வீடு வீடா போய் டேராப் போடறதால நம்ம வீடு பூட்டியே கிடக்குது.அதன் காரணமாகவும் கூடவே சில தினங்களுக்கு முன் பதிவர் ராதாகிருஷ்ணன் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பற்றி பதிவு போட்டிருந்ததன் விளைவாலும் அவர் பதிவுக்கும் பொம்மலாட்டம் மாதிரி குறைந்த பதிவர்களே எட்டிப்பார்த்திருப்பதும் அப்படி என்ன காரணத்தால் படப்பெட்டி தூங்கியிருக்கும் என்ற ஆர்வத்தாலும் நேற்று இரவு படம் துவக்கம் முதல் இறுதிவரை அசையாமல் பார்த்துவிட்டு இன்று அந்த ஆனந்த இம்சையை பதிவு செய்ய நினைத்த விளைவே இந்த பதிவு.

17 comments:

பழமைபேசி said...

ஆமாங்கண்ணே, அப்பப்ப இடுகை இடுங்க....

//நினைத்த விளைவே இந்த பதிவு. //

இந்த இடுகை! இஃகிஃகி!!

கள்ளிப் பழக் கதையும் படிக்கிறது?!

ராஜ நடராஜன் said...

//ஆமாங்கண்ணே, அப்பப்ப இடுகை இடுங்க....

//நினைத்த விளைவே இந்த பதிவு. //

இந்த இடுகை! இஃகிஃகி!!

கள்ளிப் பழக் கதையும் படிக்கிறது?!//

எப்பவும் தமிழ்மணத்துக்குள்ளேயே சுத்திகிட்டுருப்பேனா!இன்னைக்கு எங்கயும் போகல.இதோ வந்துடறேன்:)

சின்னப் பையன் said...

ரொம்ப நாள் கழிச்சி ஒரு தமிழ் படம் பாக்கலாமேன்னு இதை பாத்தேன். பாதி படத்துலேயே நிறுத்திட்டேன்.

ராஜ நடராஜன் said...

//ரொம்ப நாள் கழிச்சி ஒரு தமிழ் படம் பாக்கலாமேன்னு இதை பாத்தேன். பாதி படத்துலேயே நிறுத்திட்டேன்.//

கரண்ட் கட் ஆயிடுச்சுங்களா:)காரணமும் சொன்னால்தானே புரியும்!

ஆமா!நீங்க இன்னும் ஒரு திங்கட்கிழமை வரை சைலன்ஸ் சொன்னதாக நினைவு.

கிரி said...

//வில்லு பற்றி போட்டுத் துவைச்ச பதிவர் வட்டம் கூட பொம்மலாட்டம் பற்றி சொல்லாமப் போனது எப்படி?//

இது தாங்க செம கடுப்பு..

நல்ல படத்தையும் ஊக்குவிக்க மாட்டேங்குறாங்க ..வில்லு போன்ற படங்களையும் ரொம்ப மட்டமா ஒட்டி தள்ளுறாங்க..

எப்படி தான் படம் எடுக்க வேண்டுமோ!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல

எவ்வளோ முயன்றும் இந்த படம் பார்க்க முடியாமல் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன் :-( நல்ல படம்..

இந்த படம் பலருக்கு பிடிக்காது என்று நினைக்கிறேன்.. வழக்கமான மசாலாக்கள் இல்லாததே காரணம்

ராஜ நடராஜன் said...

//நல்ல படத்தையும் ஊக்குவிக்க மாட்டேங்குறாங்க ..வில்லு போன்ற படங்களையும் ரொம்ப மட்டமா ஒட்டி தள்ளுறாங்க..

எப்படி தான் படம் எடுக்க வேண்டுமோ!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல//

வாங்க கிரி!பதிவர்கள் பதிவுகள் இட்டாலே நல்ல படங்களின் வீச்சு பரவுமே.இந்த மாதிரி படங்களையெல்லாம் குறைந்தபட்சம் எதிர்வினையாவது செய்யாமல் முடக்கிப் போடுவது தமிழ்பட உலகுக்கு மசாலாக்களை மட்டுமே உருவாக்கும்.

குடுகுடுப்பை said...

நல்ல படம் நானும் விமர்சனம் எழுதனும்னு நினைச்சேன்.நானா படேகரோட முகத்துக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

//நல்ல படம் நானும் விமர்சனம் எழுதனும்னு நினைச்சேன்.நானா படேகரோட முகத்துக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம்.//

அதச் சொல்லுங்க முதல்வரே!மனுசன் என்னமா இயல்பா அசத்துகிறார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

படம் பார்த்த அன்று என்னால் தூங்கமுடியவில்லை...அந்த படைப்பாளியின் உழைப்பு ஏன் வீணானது என்ற நினைப்புதான்.

G.Ragavan said...

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். ஊகிக்க முடியாத முடிவு. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் ஓடாமல் போனதிற்குக் காரணம் அது பாரதிராஜாவின் படம் என்பதால் இருக்கலாம். பாரதிராஜாவின் படம் என்றால் கண்டிப்பாக முயற்சி செய்வது என் வழக்கம். ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் பொம்மலாட்டம் மிக அருமையான படம். படமெடுக்கின்றவர்களுக்குப் பாடம்.

அது சரி(18185106603874041862) said...

நான் படம் பார்க்கலை...ஆனா கருத்து சொல்லியே தீருவேன் :0))

படத்துல மசாலா பத்தலையோ என்னவோ? தவிர, பாரதிராஜான்னாலே பழைய ஜெனரேஷன்னு ஒரு இமேஜ் இருக்கு...கடைசியா அவரு படம் எப்ப ஹிட்டாச்சி??

அவரு பட ரசிகர்கள் எல்லாம் நடுத்தர வயசாகி, மிட் லைஃப் க்ரைசிஸ்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன்...எப்படியும் கொஞ்ச நாள்ல டி.வி.ல வரும் இல்லாட்டி 100 ரூபா குடுத்து திருட்டு டி.வி.டி வாங்குனா குடும்பத்தோட பார்க்கலாம்...தியேட்டருக்கு போனா 300 ரூவா பழுத்திரும்னு கணக்கு போட்ருக்கலாம்... காசை பத்தி கவலைப்படாதவங்கன்னா, ஐ.டி.மக்களும், கல்யாணம் ஆகாதவங்களும் தான்....அவங்க பாரதிராஜா படம் பார்க்கிறதில்லை...ஏன்னா அவரு போன ஜெனரேஷன்...அவங்க பார்க்கிறது அமீர், ஷங்கர், பாலா படங்கள்....

இது தலைமுறை இடைவெளி தல...பாரதிராஜான்னு மட்டுமில்ல, பாக்யராஜ், பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், பிரபு, கார்த்திக், மோகன், இன்னும் பல நடிகர்கள் எல்லாம் போன தலைமுறை...இப்ப மார்க்கெட் பண்றது கஷ்டம்...

பாரதிராஜாவோட வழக்கமான டார்கெட் ஆடியன்ஸ் யாரு? கிராமத்து மக்கள், இல்லாட்டி சிட்டியும் இல்லாம கிராமமும் இல்லாம இருக்க ஊர் மக்கள்...அவங்களுக்கு ஒரு த்ரில்லர் ஸ்டோரி பிடிக்கும்னு சொல்ல முடியாது..போதாக்குறைக்கு நானா படேகரை எத்தினி பேருக்கு தெரியும்? என்னை கேட்டா நானா படேகரான்னு ஏன்யா எங்கிட்ட கேட்கிற? நீ படேகரா இல்லியான்னு ஒனக்கே தெரியலையான்னு திருப்பி கேள்வி தான் கேட்பேன்...

இந்த காரணம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :0))

(ச்சே....சுருக்கமா பின்னூட்டம் போடலாம்னு எம்புட்டு ட்ரை பண்ணாலும் பெரிசாயிடுதே!)

ராஜ நடராஜன் said...

//படம் பார்த்த அன்று என்னால் தூங்கமுடியவில்லை...அந்த படைப்பாளியின் உழைப்பு ஏன் வீணானது என்ற நினைப்புதான்.//

வாங்க!ராதாகிருஷ்ணன் சார்!இந்தப் பதிவை எழுத தூண்டியதே உங்க பதிவைப் பார்த்துதான்.நன்றி.

கீழே அதுசரி என்னமோ சொல்றாரு.எதிர்வினை செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்.திரும்ப வந்தீங்கன்னா அதையும் கொஞ்சம் பாருங்க.

ராஜ நடராஜன் said...

//நான் படம் பார்க்கலை...ஆனா கருத்து சொல்லியே தீருவேன் :0))

படத்துல மசாலா பத்தலையோ என்னவோ? தவிர, பாரதிராஜான்னாலே பழைய ஜெனரேஷன்னு ஒரு இமேஜ் இருக்கு...கடைசியா அவரு படம் எப்ப ஹிட்டாச்சி??//

அதுசரி:)

வாங்கோண்ணா!வாங்கண்ணா!ரசனையில என்னங்க பழைய ஜெனரேஷன்,புதிய ஜெனரேஷன்?

ராஜ நடராஜன் said...

//அவரு பட ரசிகர்கள் எல்லாம் நடுத்தர வயசாகி, மிட் லைஃப் க்ரைசிஸ்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன்...எப்படியும் கொஞ்ச நாள்ல டி.வி.ல வரும் இல்லாட்டி 100 ரூபா குடுத்து திருட்டு டி.வி.டி வாங்குனா குடும்பத்தோட பார்க்கலாம்...தியேட்டருக்கு போனா 300 ரூவா பழுத்திரும்னு கணக்கு போட்ருக்கலாம்... காசை பத்தி கவலைப்படாதவங்கன்னா, ஐ.டி.மக்களும், கல்யாணம் ஆகாதவங்களும் தான்....அவங்க பாரதிராஜா படம் பார்க்கிறதில்லை...ஏன்னா அவரு போன ஜெனரேஷன்...அவங்க பார்க்கிறது அமீர், ஷங்கர், பாலா படங்கள்....//

சில ரசனைக்கெல்லாம் வயசே கிடையாதுங்கண்ணா.நான் என்ன சொல்ல வர்றேன்னா திரைப்பட ஒழுங்கமைப்புகள் இல்லாத வரையிலும்,காப்பி செய்யும்,பார்க்கும் எளிமை இருக்கும் வரையிலும் திருட்டு டி.வி.டிய திருத்தமுடியாது.முன்பெல்லாம் பெண்களால் பாராட்டப்பட்ட ஒரே படம் என்ற தலைப்போட விளம்பரம் வரும்.இப்ப திரைப்படம் எடுப்பவர்களின் முக்கிய டார்கெட்டே நீங்க சொல்லும் ஐ.டி மகாஜனங்களும்,திருவல்லிக்கேணி மெஸ்ஸோட மெம்பர்களும்தான்:)

அமீர்,சங்கர்,பாலா படம் பார்க்கணுமுன்னா அப்ப நேந்துக்க வேண்டியதுதான்.வருசத்துக்கு அல்லது ரெண்டுவருசத்துக்கு ஒரு முறை மூணே படம்தான் பார்ப்பேன்னு:)

ராஜ நடராஜன் said...

//இது தலைமுறை இடைவெளி தல...பாரதிராஜான்னு மட்டுமில்ல, பாக்யராஜ், பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், பிரபு, கார்த்திக், மோகன், இன்னும் பல நடிகர்கள் எல்லாம் போன தலைமுறை...இப்ப மார்க்கெட் பண்றது கஷ்டம்...//

சரிங்கண்ணா உங்க வாதப்படியே வச்சுகிட்டாலும் மார்க்கெட்டிங் என்ற முக்கிய விசயம் இருக்கறதால அடைப்பானிலிருக்கிற அம்புட்டு பேர்ல பாக்யராஜ்,பிரபுன்னு அங்க இங்கன்னு வந்துட்டுப் போவது தவிர யாருடைய முயற்சியாவது தெரியுதா?மார்க்கெட் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கைனாலதானே பாரதிராஜா படம் எடுத்திருக்காரு.என்னதான் மனுசன் சொல்ல வர்றாருன்னு பார்க்க வேண்டியாவது ஒரு தடவை மேட்னி,மாலை,வார இறுதி டைம் பாஸ்ன்னு தியேட்டர் போகலாமே!

உருப்படாத படத்துக்கெல்லாம் படம் பார்த்துட்டு வரும் நாலு பேர புடிச்சி படம் நல்லாயிருக்குது,படம் சூப்பர்,அந்த நடிகருக்காக,இந்த நடிகைக்காக வேண்டி ஒரு தடவை பார்க்கலாங்கன்னு புருடா விட்டு விளம்பரம் செய்வதை விட பாரதிராஜா என்ற எழுத்தே விளம்பரம்தானுங்கண்ணா:)

ராஜ நடராஜன் said...

//பாரதிராஜாவோட வழக்கமான டார்கெட் ஆடியன்ஸ் யாரு? கிராமத்து மக்கள், இல்லாட்டி சிட்டியும் இல்லாம கிராமமும் இல்லாம இருக்க ஊர் மக்கள்...அவங்களுக்கு ஒரு த்ரில்லர் ஸ்டோரி பிடிக்கும்னு சொல்ல முடியாது..போதாக்குறைக்கு நானா படேகரை எத்தினி பேருக்கு தெரியும்? என்னை கேட்டா நானா படேகரான்னு ஏன்யா எங்கிட்ட கேட்கிற? நீ படேகரா இல்லியான்னு ஒனக்கே தெரியலையான்னு திருப்பி கேள்வி தான் கேட்பேன்...//

பாரதிராஜாவுக்கும்,இளையராஜாவுக்கும் பட்டிக்காட்டு கதையும்,இசையும் விட்டா வேற ஒண்ணும் தெரியாதுன்னு இருந்த காலமெல்லாம் உண்டு.அதையெல்லாம் அவர்கள் முறியடுத்து விட்டார்கள் என நினைக்கிறேன்.எனவே கிராமம்,கிராமம் சார்ந்த ரசிகர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.அப்படியெ கிராமப் பக்கம் படம் ஓடிலைன்னு வச்சுகிட்டாலும் பெரும்நகரப் பாதிப்பு இல்லாதது ஏன்?

ரசனைகளை வளர்ப்பவன் தான் கலைஞன்.அந்த விதத்தில் நானாபடேகரை(சேர்த்தே போட்டுவிட்டேன்:))அறிமுகப் படுத்தியதற்கு பாரதிராஜாவை பாராட்டியே ஆகவேண்டும்.நீ படேகரா இல்லையான்னு உனக்கே தெரியாதா என்ற சிரிப்பலைகளுக்கும்:) அப்பால் பாரதிராஜாவின் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு புதுமுகம் அறிமுகமாகி சித்தி மாதிரி பிரபலமெல்லாம் ஆகியிருக்காங்க.

படமும்,பதிவும் ரசனைகளை குண்டுச் சட்டி குதிரைகளாய் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போக வேண்டும் என்பதனை ஊக்குவிக்க வேண்டும்.

நீண்ட விவாதத்திற்கு ஊக்கமூட்டிய பின்னூட்டத்துக்கு நன்றிங்கண்ணா.

ராஜ நடராஜன் said...

//பாரதிராஜாவின் பொம்மலாட்டம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். ஊகிக்க முடியாத முடிவு. எனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம் ஓடாமல் போனதிற்குக் காரணம் அது பாரதிராஜாவின் படம் என்பதால் இருக்கலாம். பாரதிராஜாவின் படம் என்றால் கண்டிப்பாக முயற்சி செய்வது என் வழக்கம். ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் பொம்மலாட்டம் மிக அருமையான படம். படமெடுக்கின்றவர்களுக்குப் பாடம்.//

வாங்க!வாங்க ராகவன்.அதுசரி அண்ணங்கிட்ட எதிர்வாதம் செஞ்சுட்டு உங்களிடம் வரலாமென்றிருந்தேன்.முன்பு திரைப்படக் கல்லூரிக்கெல்லாம் ஒரு மவுசு இருக்கும்.ஐ.டிக்குப் பிறகு அந்த மவுசு எப்படின்னு தெரியல.நீங்க சொன்ன மாதிரி திரைப்படம் சார்ந்த ஆர்வலர்களுக்கு ஒரு பாடமாகவே வைக்கலாம் இந்தப் படத்தை.உங்கள் வருகைக்கு நன்றி.