Followers

Tuesday, April 28, 2009

எழுத்துக்கள் பல விதம்

சில எழுத்துக்கள் மனதில் கருத்தரித்து கணினியில் அடைகாத்தாலும் எல்லா எழுத்துக்களுமே உடனே பார்வைக்கு வந்து விடுவதில்லை.சில அப்போதைக்கே முட்டையிட்டு அடுத்த கண உஷ்ணத்தில் பிரசவிப்பதும் உண்டு.இன்னும் சில மன இறுக்கத்தின் நெருக்கத்தில் அப்படியே பிரசவமாகி விடுவதும் உண்டு.சரியான சுகப்பிரசவங்கள் நின்று வளரும்.

கொதி வந்து 10 நிமிசத்துல வடிக்கிற சோறு சீரியல் பார்க்குற அவசரத்துல கைப்பதம் சரியின்னு அப்படியே கொட்டி விடும் நேரங்களுமுண்டு.பக்கத்து வீட்ல பஜ்ஜி வாசம் வர்றமாதிரியிருக்கே நாம சாம்பாருக்கு ஊறவச்ச பருப்பை வடை சுட்டுப் பார்ப்போமேன்னு போட்டியாக தலைப்புக்கள் சில மாறி விடுவதும் உண்டு.

மீன் கவிச்சி தாங்கலயின்னாலும் கொளம்பு கொதிச்சு தட்டுக்கு வரும்போது ருசியாவும் சில இருப்பதுண்டு.தாளிக்காம சோறு எறங்காதுன்னு தமிழ்நாட்டு ருசிக்குத்தான் மவுசு அதிகம்.இதையெல்லாம் தாண்டி ரெண்டு வரி கவிதை ரத்தினச் சுருக்கம்,சிரிப்பே சிரிப்பு முத்திரைகளும் உண்டு.சில மெல்லிய தென்றல்.இன்னும் சில காட்டாறு.

பொன்னியின் செல்வன் எழுதுவதற்கு கல்கிக்கு எத்தனை நாளாச்சோ நானறியேன்.ஆனா ஒரு ஆங்கில எழுத்தாளனுக்கு 1500 பக்கத்துக்கு ஒரு நாவல் எழுத 4 வருசத்துக்கும் மேல் ஆச்சாம்.கேள்வி கேட்டவனே பதிலும் சொன்னானாம்.அப்ப ஒரு நாளைக்கு ரெண்டு வரிதான் எழுதியிருப்பாய் என்று.

எழுத்துக்கள் மென்மையாய் இருந்த காலங்கள் உண்டு.வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று.

22 comments:

குடுகுடுப்பை said...

நகைச்சுவையாக எழுதலாம் என்று நினைத்தால் கொலைகாரர்கள் அனுமதிப்பதில்லை.

அது சரி(18185106603874041862) said...

//
எழுத்துக்கள் மென்மையாய் இருந்த காலங்கள் உண்டு.வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று.
//

முற்றிலும் உண்மை...சில செய்திகளை படிக்கும் போதும், சில படங்களை பார்க்கும் போதும்...கையறு நிலையில்...மூச்சே அனலாகிறது...

vasu balaji said...

/வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று. /

கோபமும் முற்றி இப்போது இயலாமை தான் முட்டி நிற்கிறது

இயற்கை நேசி|Oruni said...

:-) அத்தனையும் உண்மை.

துளசி கோபால் said...

மென்மையா வன்மையான்னு பார்க்கறதில்லை.

எழுதணும், எழுதணும், எழுதணும் என்பதே மூச்சா இருக்கு. மூச்சு நின்னா கதை க்ளோஸ்(-:

வருண் said...

***துளசி கோபால் said...
மென்மையா வன்மையான்னு பார்க்கறதில்லை.

எழுதணும், எழுதணும், எழுதணும் என்பதே மூச்சா இருக்கு. மூச்சு நின்னா கதை க்ளோஸ்(-:***

:-))))

டீச்சர்,

அது "எழுதனும்" இல்லையா?

கொஞ்சம் எனக்கு தெரிகிற தமிழையும் குழப்பிவிட்டுறாதீங்க:-))

------------

நடராஜன்: அந்த அளவுக்கு நிதானம் என்றுமே இருந்ததில்லை. என்னவோ எண்ணங்களை பிரதிபளி(லி)க்க ஒரு வடிகால், எழுத்து. அம்புட்டுத்தான்!

துளசி கோபால் said...

வருண்,

தமிழறிஞர்கள்தான் சொல்லனும்/சொல்லணும், எழுதனுமா இல்லை எழுதணுமான்னு.

வன்மையா வலியுறுத்தினதா நினைச்சுக்குங்க(ளேன்)

வருண் said...

*** வன்மையா வலியுறுத்தினதா நினைச்சுக்குங்க(ளேன்)***

அப்படித்தான் நெனைச்சேன் டீச்சர். இருந்தாலும் கேட்டுருவோமே, டீச்சர்தானே னுதான் கேட்டேன்.

"Dont guess, ask" னு சொல்லுவாங்க இல்லையா?

நன்றி டீச்சர். நீங்க "பக்கதில் இருந்தது" தெரியாது!

உடனே பதில் வந்துவிட்டது!!!:-)))

ஷண்முகப்ரியன் said...

உங்கள் எழுத்தில் தேர்ந்து.உணர்ந்து ரசிக்கும் உங்கள் ரசனை புரிகிறது.அது தொடரட்டும்,நடராஜன்.

கிரி said...

//எழுத்துக்கள் மென்மையாய் இருந்த காலங்கள் உண்டு.வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று//

உண்மை தான் என்றாலும்..அது மாறிக்கொண்டே தான் இருக்கும்.

அது ஒரு கனாக் காலம் said...

எழுதுவது, உள் மனத்தின் வெளிப்பாடு, ... சில சமயங்களில் , ஆசை.

எப்படி இருந்தாலும் நாலு பேர் பார்கிறார்கள் / படிக்கிறார்கள் , ங்க்ற, ஊக்க சக்தி ரொம்ப பெரியது.

ராஜ நடராஜன் said...

//நகைச்சுவையாக எழுதலாம் என்று நினைத்தால் கொலைகாரர்கள் அனுமதிப்பதில்லை.//

வாங்க முதல்வரே!எழுத்துக்கள் மனதை விட்டு வராத நாட்களே பலருக்கும் இப்போதைக்கான அனுபவம்.

ராஜ நடராஜன் said...

//முற்றிலும் உண்மை...சில செய்திகளை படிக்கும் போதும், சில படங்களை பார்க்கும் போதும்...கையறு நிலையில்...மூச்சே அனலாகிறது...//

உங்கள் வரிகளை படிக்கும் இந்த கணம் விரல்கள் தட்டச்சின் பக்கத்தில்.கண்கள் நிலைகுத்தல்.தமிழகத்திற்கு தடுத்து நிறுத்தும் சக்தியிருந்தும் அரசியல் சண்டையில் தகுதியில்லாதவர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்.

ராஜ நடராஜன் said...

//கோபமும் முற்றி இப்போது இயலாமை தான் முட்டி நிற்கிறது//

நேற்று பயணிக்கும் போது வந்த நினைவுகள் பாலா.

சுதந்திர மூச்சுக்காக தன்னை மட்டும் அழித்துக் கொண்டு உயிர் விடுதல் என்பது இயல்பாய் வராத உணர்வு.இந்தி எதிர்ப்பின் மொழி உணர்வை தூண்டி விட்டதற்கு தீக்குளிப்புக்களுக்கு முதல் உரிமை உண்டு.முத்துக்குமரனைத் தொடர்ந்து எத்தனை மனித உயிர்கள்.

இது போதாதென்று புலம் பெயர்ந்த மண்ணில் பரமேஸ்வரனின் அகிம்சையாகத்தான் போராடிப் பார்ப்போமே என்ற உண்ணாவிரதம்,போராட்டங்கள் மேலைநாடுகளை திரும்ப பார்க்க வைக்கின்றது.ஆனால் பொது மனிதர்கள் மீதான தாக்குதலை நிறுத்து என்ற அனைத்துக் குரலுக்கும் முடியாது என்ற சமீபத்து அகங்காரம் எங்கிருந்து வருகிறது என்ற மூலத்தை ஆராய்ந்தால் கோபம் மட்டுமே வருகிறது.

ராஜ நடராஜன் said...

//:-) அத்தனையும் உண்மை.//

இயறகையை நேசிக்கத்தான் மனிதனே பிறந்திருக்கிறான்.மனிதம் மாய்த்து மிருகம் மட்டும் வளர்வதேன்?

ராஜ நடராஜன் said...

//மென்மையா வன்மையான்னு பார்க்கறதில்லை.

எழுதணும், எழுதணும், எழுதணும் என்பதே மூச்சா இருக்கு. மூச்சு நின்னா கதை க்ளோஸ்(-://

டீச்சர்!உங்கள் எழுத்தின் வேகம் பார்த்தால் எழுத்தே மூச்சு மாதிரிதான் தெரிகிறது.எனக்கு சொல்றதை விட எழுதுபவர்களின் எழுத்தை வாசிப்பதிலேதான் அதிக ஆர்வம்.

ராஜ நடராஜன் said...

//டீச்சர்,

அது "எழுதனும்" இல்லையா? //

நவீன நக்கீரர் வருணே வாங்க.நீங்க சொல்லும் வரை டீச்சரின் கருத்து மட்டுமே மனசில் நின்றது.சில சமயம் தட்டச்சு குழப்பி விடுவதும் உண்டு.

நேற்று ஜாக்கிசேகருக்கு ஜாக்கின்னு மனசு சொல்லுது.ஜாக்கு ன்னு தட்டச்சிப் பின்னூட்டம் வந்து விடுவதுமுண்டு.

ராஜ நடராஜன் said...

//நடராஜன்: அந்த அளவுக்கு நிதானம் என்றுமே இருந்ததில்லை. என்னவோ எண்ணங்களை பிரதிபளி(லி)க்க ஒரு வடிகால், எழுத்து. அம்புட்டுத்தான்!//

அதென்ன ளி ல:)

பளிச்சின்னு பிரதிபலிக்கனுமோ!
எண்ணங்களின் வடிகாலே எழுத்து.ஆனா அதுல பாருங்க.பதிவர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முத்திரை,சில கலந்து கட்டி கூட்டாஞ்சோறு.தொலைக்காட்சி ஊடகங்கள் வெளிக்கொணரா உண்மைகள்,சமயத்தில் உண்மையென நினைப்பவை பொய்ப்பித்தலும் என இணைய எழுத்துக்கள் சுவைபடவே இருக்கின்றன.

குட்டுவதில் கூட நாகரீகம் பளிச்சிடுகிறது இப்பொழுது.திட்டுவேதே பின்னூட்டம் என்பதை இலங்கையின் ஆங்கில எழுத்துக்கள் சுவீகாரம் எடுத்துக் கொண்டதை சமீபத்தில் டெய்லிமிரர் தளத்தில் கண்டேன்.

ராஜ நடராஜன் said...

//தமிழறிஞர்கள்தான் சொல்லனும்/சொல்லணும், எழுதனுமா இல்லை எழுதணுமான்னு.

வன்மையா வலியுறுத்தினதா நினைச்சுக்குங்க(ளேன்)//

வருண்!பாடலில் குற்றமில்லை என்று கோபால தேவியே சொல்றாங்க.

ராஜ நடராஜன் said...

//"Dont guess, ask" னு சொல்லுவாங்க இல்லையா?

நன்றி டீச்சர். நீங்க "பக்கதில் இருந்தது" தெரியாது!

உடனே பதில் வந்துவிட்டது!!!:-)))//

பதில் அப்பவே சொல்லீட்டீங்களா வருண்.நான் கவனிக்கவில்லை.நான் ஒவ்வொரு பின்னூட்டமா பார்த்துப் பார்த்து பதில் சொல்லிகிட்டே வருகிறேனா கவனிக்கவில்லை:)

ராஜ நடராஜன் said...

//உங்கள் எழுத்தில் தேர்ந்து.உணர்ந்து ரசிக்கும் உங்கள் ரசனை புரிகிறது.அது தொடரட்டும்,நடராஜன்.//

ஷண்முகப் பிரியன் சார்.உங்க மாதிரி எழுத்துக்களைப் படிப்பதே ஒரு தனி அலாதி.சில பதிவுகளுக்கு அப்பத்துக்கு அப்பவே பதில் சொல்லணும்.சில எழுத்துக்களை மெல்ல அசை போடணும்.அதனால் புக்மார்க் பண்ணிகிட்டேன் தற்போதைக்கு.

ராஜ நடராஜன் said...

////எழுத்துக்கள் மென்மையாய் இருந்த காலங்கள் உண்டு.வாழ்க்கை நீரோட்டத்தின் பிரதிபலிப்பே எழுத்து என்பதால் கோப மூச்சுக்களே தமிழ் எழுத்தாய் பிரசவிக்கிறது இன்று//

உண்மை தான் என்றாலும்..அது மாறிக்கொண்டே தான் இருக்கும்.//

வாங்க கிரி.மாத்தி மாத்தி ரவுண்டு கட்டுவது உங்கள் பதிவில் நல்லாவே தெரியுது:)

எழுத்தின் கோபங்கள் தனிந்து எழுத்துக்கள் சுதந்திரமாக மாற வேண்டும்.