Followers

Saturday, January 29, 2011

யாருக்கும் வெட்கமில்லை இங்கே

இங்கிருந்து அங்கே ஓடுவது!மீண்டும் அங்கிருந்து இங்கே ஓடி வருவது! தலைவர்களும் பல்லைக்காட்டி கட்சியில் சேர்த்துக்கொள்வது.இதைப்பார்த்து நாமும் அரசியலில் சகஜமப்பா என்று சிரிப்பான் போட்டு விட்டு ஓடி விடவேண்டியது.எவனுக்காவது இப்படித்தான் அரசியலில் வாழ வேண்டுமென்ற கொள்கை இருக்கிறதா? இருக்கிறார்கள் என்றால் அந்தக்கட்சியை முன்னிறுத்துங்கள்.அதுவே நொள்ளைகள் சொல்லாமல் மக்கள் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.இல்லைன்னா இப்படியே புலம்பிகிட்டே ஆள் மாற்றி இன்னொரு ஆளுக்கு ஓட்டு போட்டு குண்டு சட்டில குதிரை ஓட்டி காலம் ஓட்டுங்கள்.

சுயமரியாதைன்னு சொல்லிகிட்டு ஓட்டுப்பிச்சை கேட்கும் சுயநலவாதிகளுக்கு சுயமரியாதைன்னா என்ன என்று தெரியுமா?

Simply stink you guys.பற்கள் நற நற....

Friday, January 28, 2011

எகிப்துக்காரனுக்கும் துணிச்சல் வந்துடுச்சு

பி.பி.சியும்,சி.என்.என் ஊடகங்கள் தங்கள் ஊது குழலை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்து விட்டன.ஒரு பெண் “ I am really couraged of their courage and I am proud of my people" என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.போராட்டத்துக்கான துணிவு வருவதற்கு 30 வருடமாகியது எகிப்தியனுக்கு துனிசியா பார்த்து.

நாற்காலியிலே சாகவேண்டுமென்ற கனவு எகிப்திய பிரதமர் ஹோஸ்னி முபாராக்கிற்கும் இருந்தது.இன்று அவரது ஆட்சித்தலைமையகம் நெருப்பு பற்றி எரிகிறது.முகப்படம் செருப்படி படுகிறது.மக்கள் தெருவில் கூடி கெய்ரோவில் கேரோவுக்கு காத்திருக்கிறார்கள். மக்கள் தகவல் தொடர்பு துண்டிப்பாக போன்,தொலைக்காட்சி,இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கின்றன.பத்து வருடமாக நான் எதிர்பார்த்து காத்திருக்கும் முபாரக்கின் வீழ்ச்சிக்கான தருணங்களில் மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

இவைகளின் சாத்தியம் இணைய தொடர்புகள்.ட்விட்டர்கள் என்ற படித்த இளைஞர்களின் கருத்துப்பரிமாறல்கள் என்பவற்றோடு முன்னாள் அணு ஆயுத தடை நிறுவனத்தின் இயக்குநர் முகம்மது எல்பராடியும் மறைமுக காரணம்.ஹில்லாரி கிளிண்டன் “We are concerned of people's safety and freedom of speach" என்று காத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதாயங்களுக்கும் குரல் கொடுத்து விட்டார்.

சுதந்திர,மக்கள் உரிமை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாழ்த்துக்கள். பழையன,அடக்கு முறை ஒற்றை மனிதன் ஆட்சி, வாரிசு அரசியல் ஒழியட்டும்.கூடவே அடிப்படைவாதிகள் ஆட்சி அதிகாரத்தை பற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும்.வாழ்த்துக்கள் எகிப்தியனுக்கு!

மூன்றாம் அணி சாத்தியமே!

தமிழக பயணத்தில் அரசியல் களம் புரியாத அல்லது அறிந்து கொள்ள நேரமில்லாத ஆண்கள்,பெண்கள் என்ற உழைக்கும் வர்க்க,இல்லத்தரசிகள் என்று சிலரின் வாக்கு யாருக்கு என்று கேள்வி எழுப்பியதில் தி.மு.க-அ.தி.மு.க என்ற நிலைக்கும் அப்பால் அவர்கள் வரவில்லை என்பதோடு இணைய விவாதங்களும் கூட இங்கேயே போய் சங்கமிக்கின்றன.ஈழம் மட்டுமல்லாது தமிழக சமூக அக்கறை கொண்டவர்களும் தனித்தனி இயக்கங்களாக இயங்குகிறார்கள் குறைந்த பட்சம் காகித அடையாள அட்டை வரையாவது.

தி.மு.க - அ.தி.மு.கவுக்கு எதிராக மூன்றாம் அணிக்கான சாத்தியங்கள் இருக்கிறது தலைமை யார் என்ற ஈகோ மட்டும் களைந்து விட்டால்.

எந்த மலரும் அன்றே விதையிட்டு அன்றே மலர்வதில்லை.சீமான் என்ற தோட்டக்காரனுக்கு இது முன்பு புரிந்திருந்தும் இடையில் வந்த அ.தி.மு.க குழப்ப காய்ச்சல் சீமான் அ.தி.மு.க பக்கம் தாவினாலும் சாடாமல் இருந்தாலும் இரு பெரும் திருடர்களில் ஒருவர் மீண்டும் வென்று தங்கள் பல்லைக்காட்டி சிந்திக்கும் மக்களை நோக்கி தமது கட்டவிழ்ப்புக்களை நிகழ்த்துவார்கள்.

தீர்வுக்கு இன்னும் கூட கால அவகாசம்  இருக்கிறது.

முகம் அறியப்பட்ட அவரவர் கட்சித்தலைவர்கள் ஒரே கோட்டு கொள்கைக்காக வேண்டியும்,மொழிக்காக நம்மை கோமாளிகள் என்று சிரித்துக்கொண்டிருக்கும் சிங்களவனுக்கு தமிழ்நாடு என்ற பூகோளம் சார்ந்துதான் உன் வாழ்க்கையும் என தெரிவிக்கவும், மத்திய அரசுக்கும்,இரு கட்சிகள் பரிட்சித்துப்பார்த்து விட்டோம் .....இரண்டின் சுவடுகள் அறிந்த பின் கொஞ்சம் சமரசம் மட்டும் தமக்குள் செய்துகொண்டால் ஒட்டு மர ஓட்டுப்பூக்கள் என்ற மூன்றாம் நிலை மலர்கண்காட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து விடமுடியுமென்றே நினைக்கின்றேன்.

பழமை பேசியின் பதிவான சீமானின் நாம் தமிழர் கட்சி பின்னூட்டம் போடும் போது எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வென்றே இருந்தது.ஆனால் ஒரே இயக்க உணர்வுள்ள வை.கோ.பெரியார் திராவிட கழகம்,பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கம்,இன்னும் பத்து நாட்களில் யாருடனாவது சேர்ந்து விடுவது என்று காத்திருக்கும் பாட்டாளி கட்சி,உழைப்பாளர் வர்க்க கம்யூனிஸ்ட்கள் இன்னும் பலர் என்று குழு அமைத்தால் கீழே கண்ட கட்சிகளின் முதல்,இரண்டு நிலைகளில் நிற்பவையும் அதனை சார்ந்து நிற்கும் சில கட்சிகளையும் தவிர்த்தால் பேச்சு வார்த்தைகளில் மூன்றாவது அணி சாத்தியமே.

இடப்பங்கீடு?யாருக்கு வெல்லும் வாய்ப்புக்கள் அதிகமோ அந்த தொகுதிகள் விட்டுக்கொடுப்பும்,தோள் கொடுப்பும்.உங்களுக்குள் ஒற்றுமையென்றால் பரவாயில்லை.ஆனால் நாற்காலி,மகுட கனவென்றால் தலைமை உங்களில் ஒருவரல்ல! ஏனென்றால் அதில் தான் என்ற ஈகோவுக்கான சாத்தியம் இருக்கிறது.இதன் காரணம் கொண்டே மூன்றாம் அணிக்கான தயக்கங்களும் இதுவரை இயலாமையும். எனவே நிர்வாகம் கற்ற உமாசங்கர் ஐ.ஏ.எஸ் போன்ற ஒருவரை அல்லது புதிய ஒருவரை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தி தட்டி ஒட்டும் அடிப்படை தொண்டன் வரை மாவட்டம் தோறும் அமைத்து விட்டால் மூன்றாம் அணி சாத்தியமே.

பாராளுமன்றமே கூட்டுக்குழுவாக இயங்கும் போது சுயநலமில்லாத,மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தும் கொள்கை,மொழி உணர்வாளர்களை இணைப்பதில் தமிழகத்தில் ஏன் இது சாத்தியமில்லை?

கழட்டி விட்ட முதல் இரண்டு கட்சிகளை தவிர்த்துப் பட்டியலைப் பாருங்கள்.இப்பவே ஜெயிச்ச மாதிரி கண்ணைக்கட்டுதே!

பழமைண்ணா!இதுக்குப் பேருதான் நேர் அணுகுமுறை என்பது.பதிவை சுட்டதுக்கு நன்றி சொல்லுங்கள்:)

   1. திமுக
   2. அதிமுக
   3. தமிழ்ப் பேராயக் கட்சி
   4. அ.இ.கற்றும் வேலையற்றோர் கட்சி
   5. அ.இ.ஏழை மக்கள் முன்னேற்றக் கழகம்
   6. அ.இ.ல.தி.மு.க
   7. அ.இ.மக்கள் முன்னேற்றக் கழகம்
   8. அ.இ.மூவேந்தர் கழகம்
   9. அ.இ.முஸ்லீம் லீக்
  10. அம்பேத்கார் மக்கள் இயக்கம்
  11. அம்பேத்கார் மக்கள் கட்சி
  12. அருந்ததியர் தமிழக முன்னேற்றக் கழகம்
  13. பாரதீய பார்வார்டு ப்ளாக்
  14. காமன்வீல் கட்சி
  15. காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை
  16. தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
  17. ஜனநாயக பார்வார்டு ப்ளாக்
  18. திராவிடத் தெலுகர் முன்னேற்றக் கழகம்
  19. திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்
  20. திராவிடக் கட்சி
  21. இந்து மக்கள் கட்சி
  22. இந்திய கிறித்துவர் முன்னணி
  23. இந்திய ஜனநாயகக் காங்கிரஸ்
  24. இந்திய சமத்துவக் கட்சி
  25. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
  26. காமராசர் ஆதித்த்னார் கழகம்
  27. காமராசர் தேசியக் காங்கிரசு
  28. காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசு
  29. கொங்குநாடு மக்கள் கட்சி
  30. கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
  31. எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
  32. எம்ஜிஆர் கழகம்
  33. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்
  34. எம்ஜிஆர்-எஸ்.எஸ்.ஆர் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
  35. மக்கள் மாநாடு கட்சி
  36. மக்கள் தமிழ்த் தேசக் கட்சி
  37. மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
  38. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  39. மார்க்சிஸ்டு பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  40. மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  41. இந்திய பார்வார்டு ப்ளாக்
  42. அரவிந்த பால பஜனோர் கட்சி
  43. பசும்பொன் பார்வார்டு ப்ளாக்
  44. பாட்டாளி மக்கள் கட்சி
  45. புதிய நீதிக் கட்சி
  46. புரட்சிகர பார்வார்டு ப்ளாக்
  47. சுபாசிஸ்டு பார்வார்டு ப்ளாக்
  48. தமிழ் அரசு கழகம்
  49. தமிழ் தேசியக் கட்சி
  50. தமிழ் மாநிலக் காங்கிரசு
  51. தமிழ் மாநிலக் காமராஜ் காங்கிரசு
  52. தமிழ்நாடு பார்வார்டு ப்ளாக்
  53. தமிழ்நாடு மக்கள் கட்சி
  54. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
  55. தமிழ்நாடு தொழிலாளர் கட்சி
  56. தமிழ்த் தேசியக் கட்சி
  57. தமிழகத் திராவிடக் கட்சி
  58. தமிழக ஜனதாக் கட்சி
  59. தமிழக மக்கள் முன்னணி
  60. தமிழக முன்னேற்றக் கழகம்
  61. தமிழர் பூமி
  62. தமிழக முன்னேற்ற முன்னணி
  63. தமிழகப் பெரியார் திராவிடர் கட்சி
  64. தாயக மறுமலர்ச்சிக் கழகம்
  65. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
  66. தொண்டர் காங்கிரசு
  67. தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
  68. உழவர் உழைப்பாளர் கட்சி
  69. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  70. விவசாயி அன்புக் கட்சி
  71. நமது கழகம் (பல்லடம் ப.கோ.கிட்டு அவர்களுக்கு தராசு சின்னத்தில் வாக்குக் கேட்டேன்... இஃகி)
  72. புதிய தமிழகம்
  73. பாரத தமிழகம்
  74. திராவிட முஸ்லீம்
      முன்னேற்றக் கட்சி
  75. அதிமுக (நால்வர் அணி)

Friday, January 21, 2011

கபில் சிபலும் தன் வாயால் கெடுவார்

பயணக்கதைகள் சொல்லலாமென்றால் அரசியல் தில்லுமுல்லுகளும் ஆட்சி அதிகார தவறான பயன்பாடுகளும் முதலில் கபில் சிபலுக்கு கொட்டு வை என்றே கை பரபரக்கிறது.

மக்கள் ஆட்சியில் மக்கள் இன்னும் நம்பிக்கை கொள்வதற்கு கருத்து சுதந்திரமும்,பத்திரிகை துறை,நீதி துறை இன்னும் ஓரளவுக்காவது செயல்படுகிறது என்பதால் எனலாம்.ஸ்பெக்ட்ரத்தில் குழறுபடிகள் இல்லை என்றால் CAG அறிக்கையே வெளியிட்டு இருக்க கூடாது.அப்படி அறிக்கை வெளியிட்டும்,ராடியா பேச்சுக்களில் சில பொதுவாக்கப்பட்டும்,ஆ.இராசா ராஜினாமா,சி.பி.ஐ ஆதார தேடல்கள்,தமிழ்மையம் மீது கூட சந்தேகம் என்று விசாரணையின் கோணம் வளரும் நிலையில் ஸ்பெக்ட்ரம் பற்றிய CAG கணக்கு தவறானது என்று கபில் சிபல் சொல்லும் போதே கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட வேண்டுமென்று தோன்றியது மனதில். 

சரி! வாதாடும் திறமை படைத்த காரணத்தினாலும் கொடுக்கப்பட்ட பதவியின் தகுதியினாலும் கூடுதல் பொறுப்பு கிடைத்து டெலிகாம் துறையின் கணக்குகளை மேற்பார்வையிட்டு கருத்து சொல்லும் உரிமை ஜனநாயகமாகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட முயலின் மூன்று கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே அப்புறமென்ன இப்பொழுது திடீர் குட்டிக்கரணம் நான் CAG பற்றி தவறாகவே கூறவில்லையென்று.

"I mean no disrespect to any institution... I have neither directly or indirectly tried to interfere with any process going on," என்று கபில் சிபல் சொல்கிறார்.
இதனையும் தொடர்ந்து "I am fully aware of my responsibilities, my obligations, my duties not only as a Minister but also as a citizen of this country," என்கிறார்.
......................................................................................................................................
நீங்க சொல்லி முடிச்சிட்டீங்களா!இப்ப நாங்க என்ன சொல்றோம்ன்னா
Mr.Kapil cheap pal ! We too have a right to observe, get angered and comment on your political ethics of our beloved country.

தேசியக்கட்சி என்று நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தொடர்ந்து லஞ்சம்,ஊழல் என்ற தொடர்கதை தொடர்வது ஏன்?
ஆமாம்!மன்மோகன் சிங்கென்று ஒரு பிரதமர் இருந்தாரே?இன்னும் அதிகாரத்தில்தான் இருக்கிறாரா?






Thursday, January 20, 2011

சேவலு 1500 ரூவா

அலோ!யார் பேசறது?
ஆ...சொல்லுங்ண்ணா
இல்லீங்ண்ணா நான் வாங்கினதே 1500 ரூபாய்க்கு
எனக்கு கட்டுபடியாகுதுங்ண்ணா!
இல்லீங்ண்ணா! 1600ன்னா புடிச்சிட்டு போங்கண்ணா இல்லேன்னா விட்டுட்டுப் போயிடுங்க
சரிங்ண்ணா!அம்முனிகிட்ட போன் சொல்லி சொல்றேன்.புடிச்சிட்டுப் போங்க...

இப்படி பொள்ளாச்சி பஸ்ல நின்னுகிட்டே போனில் பேசிக்கொண்டிருந்தவர் பக்கத்துல நின்றுகொண்டிருந்த நண்பரிடம்,நம்ம காளியப்பண்ண!வாங்குன வெலக்கி கொறவா கேக்குறாரு” என்றார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு குறுகுறுங்குது.ஆட்டு விலையத்தான் பேசிக்கிறாங்களோன்னு.எங்கடா வாயைத் திறக்க வாய்ப்பு கிடைக்கும்ன்னு பயணிக்கிற எனக்கு கேட்கவா வேண்டும்?

நான்:அண்ணா!ஆட்டு விலையா 1500 சொன்னீங்க?
பயணி::இல்லீங்ண்ணா!சேவக்கோழி என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டார்.
நான்:என்னங்ண்ணா!சேவலுக்கா இந்த வெல?
பயணி:ஆமாங்ண்ணா!இது பந்தயத்துக்கு விடறது என்றார்
நான்:பந்தயம்ன்னா நீங்க போட்டிக்கு விடறவரா?
பயணி:இல்லீங்ண்ணா!கோழிய வாங்கி பழக்கி விற்கறதோட சரி
நான்:கோழிய எங்கயேருந்து வாங்குவீங்க
பயணி:பல்லடம்,அவினாசி,திருப்பூர்,பொள்ளாச்சி,திண்டுக்கல்ன்னு
நான்:எத்தன ரூவாய்க்கு பந்தயம் போகும்.
பயணி:1 லட்சம் 2 லட்சத்துக்கு கூட போகும்.

காங்கயம் காளைய பொள்ளாச்சி சந்தையில வித்துகிட்டிருந்த காலம் போய் இப்ப சண்டைக்கோழியும்,கோழிப்பண்ணையும் கொங்கு நாட்டின் வணிகப் பெருக்கங்களா?

மதுரக்காரங்க வருசத்துக்கொரு தடவ ஜல்லிக்கட்டு விளையாண்டா இங்கே வருசம் முழுதும் கோழிச்சண்டையா இல்ல இதுவும் ஜல்லிக்கட்டுக்கு பங்காளியா?தெரிஞ்சவங்க சொல்லுங்க!

பதிவுக்கு மத்தளமா மணவாடு ஆந்தராவில் கோதாவரி கோழிச்சண்டை கூகிளண்ணன் கிட்ட கடன் வாங்கி இளகாத கோழி பிரியர்களுக்காக இங்கே.

எனக்குத் தெரிஞ்சு சண்டைக்கோழி வளர்க்கவும், காசு வெச்சு விளையாடுறதுலயும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பசங்க கில்லாடிகள்.

Tuesday, January 18, 2011

நல்லகண்ணு vs சீமான் vs தமிழகம்

 தமிழகத்தில் தடுக்கி விழுந்தாலும்,எழுந்து நின்றாலும் வலையுலகில் சொல்வதற்கு நிறையவே இருக்குது.ஆனால் சொல்லும் சூழல்,மனநிலைகள் பலருக்கும் அமைவதில்லை பயணத்தில் இருந்த நான் உட்பட.இரு புத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையில் சூடான பரிந்துரையில் இடம் பிடிக்கும் சீமானை கடிந்தும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு போன்றவர்கள் அரசியலில் வெளிச்சம் போடவேண்டுமென்றும் சொல்லி தமிழக அரசியல் கடையில் துவங்குகிறேன் இந்த வருட முதல் பதிவை.

பதிவின் பொருள் தமிழகம் மற்றும் இரு தனிப்பட்ட மனிதர்களின் ஆளுமைக்கும் அப்பால் புதிதாய் பிறந்த சீமானின் அரசியல்,இயக்க கொள்கை,முழக்கங்கள்,தடுமாற்றங்கள் பற்றிய விமர்சனத்தோடு ஒரு சிலருக்காவது நம்பிக்கையூட்டிய சீமான் தடம் புரள்கிறாரோ என்ற கவலையை உருவாக்குகிறது பலருக்கும் என்பதும் சீமான் விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறார் என்பதும் அவரது பலவீனமும் பலமும் என்பேன்.அதற்கும் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவின் அரசியல் நிலைப்பாட்டை  சொல்லி  எந்த வித ஆளுமை தமிழனை ஆட்கொள்ளும் என கோடிட்டு காட்டி விட்டு தொடரலாம்.


நேற்று வின் தொலைக்காட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது பற்றிய விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் பேச்சையும் முகபாவங்களையும் கவனிக்க நேர்ந்தது.மென்மையான குரலோடு தமிழக முதல்வர் தொட்டு எதிர் விமர்சனத்துள்ளாகும் ராஜபக்சே வரை கவனத்துடனும்,சாதுரியத்துடனும் கண்ணியமாக வார்த்தைகளையும், கருத்துக்களை சொன்னார்.ஒரு பண்பட்ட,பக்குவபட்ட மனிதராக காட்சியளித்தார்.நல்லகண்ணு அவர்களின் அரசியல் வீச்சு என்னவென்று பார்த்தால் நேர்மையானவர்,கம்யூனிஸ்ட்,அரசியல்வாதி என்ற பிம்பங்களோடு இவர் அரசியல் தலைமைக்கு சிறந்தவர் என கணிக்கலாமா? இவரை அறிந்தவர்கள் என்ற பட்டியலில் கம்யூனிஸ்ட்கள்,உழைப்பாளர் வர்க்கம்,பத்திரிகை மேய்பவர்கள்,நம்ம எலி வலைக்குள் ஊர்பவர்கள் என்ற வரையறைக்குள் அடங்கலாமென நினைக்கிறேன்.

இவரின் முழு வீச்சும் தமிழகத்தில் வீசப்படாததற்கு காரணமாக நேர்மை,நாணயம்,எளிமை என்பதற்கும் அப்பால் தமிழனுக்கு கொஞ்சம் முகப்பூச்சும்,அரிதாரமும் தேவைப்படுகிறது என்பதே உண்மை.திராவிட இயக்கங்கள் மொழியென்ற முகப்பூச்சும்,அரிதாரமும் இட்டுக்கொண்டு பவனி வந்ததாலும் இவர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் சமூகத்தின் அடிமட்ட மனிதர்களுக்கும் சேர்ந்து குரல் கொடுத்தும் மொழி அரிதாரத்தில் திராவிட இயக்கங்கள் தமிழனைக் கட்டிப்போட்டன எனலாம்.மொழி,கலை,இலக்கியம்,திரைக்கவர்ச்சி,அரசியல் கனவு,சூழ்ச்சிகள்,அரசியல் தந்திரங்கள்,நிர்வாகம்,ஆளுமை மேம்பாடு,தமிழனின் மனோபாவம் என்ற மொத்த கலவையில் கம்யூனிஸ்ட்டுகளும் பெரியவர் நல்லகண்ணுவும் காணாமல் போய் விடுகிறார்கள்.ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு இலக்கணம் திரு.நல்லகண்ணு என்றாலும் தமிழக அரசியல் நடைமுறை சாத்தியங்களில் காணாமல் போய்விடுகிறார் என்பது வருத்தத்திற்குரியது.இதற்கும் மேல் இவரைப் பற்றி மேலும் விவரிக்க இயலாது போகும் நிலையிலேயே தமிழக அரசியல் தடுமாறிப்போகிறது.எனவே தடாலடி அரசியல் மட்டுமே தமிழர்களை தன்பக்கம் இழுக்கிறது என்பது உண்மையும் சோகமும் கூட.

இனி சீமானைப் பார்ப்போம்.சீமான் அவர்களே!புன்முறுவலோடு கை குலுக்கி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் சென்னை பயணித்தில் சந்திக்க நினைத்தும் ஊர்கள் சுற்றும் கால அவகாசமின்மையால் உங்களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.இருந்தாலும் சந்திப்பின் நினைப்பை எழுத்தில் கொண்டு வருவது எளிதாகவும்,விரிவாகவும் இருக்குமென நினைக்கிறேன். வலையுலக இயக்கத் தோழர்கள் யாராவது செய்தி சொல்லாமல் போனாலும் கூட சீமான் என்ற சொல் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதால் கருத்து பரிமாறல்களுக்கு வேண்டியாவது இங்கே .

இளமை,துடிப்பு,வேகம்,கோபம்,உணர்ச்சிவசப்படுதல் என்ற கோட்டுக்குள் மொழி உணர்வும்,ஈழம் குறித்த அக்கறையும்,இளைய சமூகத்தை கவரும் தன்மையும்,எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தற்போதைய அ.தி.மு.க சார்பும் தமிழக அரசியலுக்கு மாற்றாக வருவாரோ என்று கணிப்பவர்களுக்கும்,அவரின் பின் செல்ல நினைப்பவர்களில் சிலருக்கும் எதிர் விமர்சனத்தையும் வருத்தத்தையும் தருகிறது.2016 தான் தனது அரசியல் களம் என்று நினைத்தால் இயக்கத்தை கட்டி எழுப்பவும்,தாக்கு பிடிக்க இயலுமா  என்று கணிக்கவும்  5 வருட கால அவகாசம் உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க வென்றாலும் கூட இன்னும் 5 வருடத்திற்கும் அப்பாலும் தி.மு.க தனது ஆக்டோபஸ் கரங்களை பரவ விடும் என்றும் எதிர்பார்க்க முடியாது.காரணம் ஒப்புக்கு சப்பாணியாக ஏனைய தி,மு.க தலைவர்கள் வீற்றிருப்பதால் கலைஞர் கருணாநிதியின் தனிமனித ஆளுமை மட்டுமே தி.மு.க என்ற விருட்சத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது எனலாம்.எனவே வலுவான களம் அமைக்கவும்,அரசியல் நெளிவு,சுழிவுகள் கற்கவும் சீமானுக்கு கால அவகாசம் இருக்கிறது தூரப்பார்வையும் பொறுமையும் இருந்தால்.இந்த தேர்தலுக்கான குறியாக தி.மு.க வீழ்த்தப்பட இயலா விட்டாலும் தனது பலம் என்னவென்பதை கணிக்கும் விதமாக ஒரு சில இடங்களிலாவது தன் இயக்க வாக்காளர்களை தனித்து நிறுத்த முயற்சி செய்யலாம்.இல்லையென்றால் உட்கார்ந்து கொண்டே உயரமாய் காட்சி அளிக்கும் கலைஞரை எதிர்த்தும் கூட நிற்க துணியலாம்.

இவைகளுக்கும் அப்பால் ஓட்டு வங்கி,காசு கொடுத்தால் ஓட்டு விற்கப்படும் விளம்பரப்பலகைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் மூன்றாவது கூட்டணிக்கான முயற்சிகளைத் தேடலாம்.ஆனால் ஈழம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணித்தாலும் ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தனிமனித ஈகோ,தனது கட்சியென்ற எதிர்கால சுயநலம் காரணமாக ஒன்றாகும் சாத்தியமில்லையென்பது தெரிகிறது.ஈழம் என்பது தமிழகத்தில் அரசியல் வியாபாரமாகிப்போனது வருத்தத்திற்குரியது.

கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் ஈழமென்பது வெளியுறவுக்கொள்கை என்பது மத்திய அரசுக்கு புரிகிறதோ இல்லையோ தமிழகம் சார்ந்த தமிழகத்தின்  வெளியுறவுக் கொள்கை என்பது  ஈழம் சார்ந்த கொள்கை உடைய தமிழக தலைவர்களுக்கு புரிய வேண்டும்.துவக்கப்புள்ளியாக கச்சத்தீவு பற்றிய விழிப்புணர்வாவது தலைவர்கள் என்பவர்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும்.இல்லையென்றால் ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்ய இந்தியா வந்தார்கள் என்பது சரித்திரம் என்பதோடு புரியாமல் போனாலும் கூட சீனாவின் மின்பொருட்கள் சென்னை நகரம் முழுவதும் கிடைக்கிறது என்பதை விட கோவை நகரிலேயே சீனாவின் துணிகள் விற்கப்படுகின்ற அவல நிலை உணராத மந்த புத்தியிலேயே நமது முன்னோர்களும் கூட இருந்திருப்பார்கள் என்று எளிதாக உணரலாம்.

இந்த நிலையில் அ.தி.மு.கவின் பின் செல்வது என்பது  நாம் தமிழர் இயக்கமென்ற ஓடி ஜெயிக்கும் குதிரை சறுக்கிக் கொள்வது என்பேன்.ஜெயலலிதா என்ற சண்டிக்குதிரை மீது அரசியலை பணயம் வைப்பது எவ்வளவு அரசியல் தொலைப்பார்வை கொண்டதாக இருக்கும்?தி.மு.கவின் வீழ்ச்சி மட்டுமே இந்த தேர்தலின் தேவையென்றால் அஸ்திவாரமான கலைஞரை சாய்த்தாலே போதும்.கலைஞர் கருணாநிதியை வீழ்த்துவது சாத்தியமில்லையென்றாலும் கூட அரசியல் போர் தெரிந்த வீரனோடு மல்லுக்கட்டிய பெருமையாவது மிஞ்சும்.வென்றாலும் பெருமை.வீழ்ந்தாலும் பெருமை.இது என்னோட பார்வை.

அரசியலில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டித்தான் என்பதாலும்,சிறை சினம்,கொள்கை சார்ந்த கோபம் இருக்கிறதென்றால் அரசியல் வெற்றிகள் மட்டுமே ஏனைய குறைகளைப் பின் தள்ளும்.கூட்டணி கணக்கு மட்டுமே வெற்றியென்ற நிலையில் உங்கள் அரசியல் கணக்கு சரியாக இருந்தாலும் கூட்டணி வெற்றிக்குப் பின்னாலும் உங்கள் குரல்,கோரிக்கைகள் காது கொடுத்து கேட்கப்படுமா என்பதை இப்பொழுதே தீர்மானியுங்கள்.இல்லையென்றால் ம.தி.மு.க வின் நாஞ்சில் சம்பத் அவர்கள் கலைப்புலி தாணுவை இமயம் தொலைக்காட்சியில் நேற்று விமர்சித்த நிலைக்கு நீங்களும் ஒரு நாள் தள்ளப்படுவீர்கள்.

அடுத்து அ.தி.மு.க விற்கு ஸ்பெக்ட்ரம்,தமிழக மக்களில் ஒரு பகுதியினருக்கு குடும்ப அரசியல் கோபம்,திரைப்பட ஆக்டோபஸ்,ஏனைய கூட்டணி அமைக்கும் திறன்,தனது ஓட்டு வங்கி என்பவற்றாலும் வெற்றி வாய்ப்புக்கு சாத்தியமிருக்கிறது.நாற்காலி கனவு,தி.மு.க எதிர்ப்புக்கும் அப்பால் அ.தி.மு.கவின் குரல் பிரதிபலிப்பது என்ன? குறைந்த பட்சம் சென்ற தேர்தலில் ஒலித்த தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மாற்றாக கணினி என்ற குரலைக் கூட இன்னும் காணோம்.

அதே நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் அரசியல் சூட்சுமம்,ஆட்சி அனுபவம்,இலவசம், காசு கொடுத்தால் சாதிக்கலாம் நம்பிக்கை,கண்ணுக்குத் தெரியாத அரசியல் வெற்றி தில்லுமுல்லுகள்,கட்சியின் நிரந்தர ஓட்டு வங்கி,இணைக்கும் கூட்டணி போன்றவைகளையும் தி.மு.கவின் அரசியல் பலத்தை எளிதாக எடை போட்டு விடமுடியாது.வலையுலக விவாதங்கள் பற்றிக் கவலைப்படாத பெரும்பான்மை கூட்டமே தமிழகம்.எனவே தி.மு.க vs அ.தி.மு.க என்ற அதே சுழற்சியில் மாற்றங்கள் தேவையென்ற ஒற்றைக்குறிக்கோள் தவிர 2011 தமிழக தேர்தல் களம் சீமானுக்கோ நாம் தமிழர் இயக்கத்துக்கோ தனித்துவமான எதிர்காலத்தை உருவாக்காது என்பது மட்டும் நிச்சயம்.