Followers

Friday, January 28, 2011

எகிப்துக்காரனுக்கும் துணிச்சல் வந்துடுச்சு

பி.பி.சியும்,சி.என்.என் ஊடகங்கள் தங்கள் ஊது குழலை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்து விட்டன.ஒரு பெண் “ I am really couraged of their courage and I am proud of my people" என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.போராட்டத்துக்கான துணிவு வருவதற்கு 30 வருடமாகியது எகிப்தியனுக்கு துனிசியா பார்த்து.

நாற்காலியிலே சாகவேண்டுமென்ற கனவு எகிப்திய பிரதமர் ஹோஸ்னி முபாராக்கிற்கும் இருந்தது.இன்று அவரது ஆட்சித்தலைமையகம் நெருப்பு பற்றி எரிகிறது.முகப்படம் செருப்படி படுகிறது.மக்கள் தெருவில் கூடி கெய்ரோவில் கேரோவுக்கு காத்திருக்கிறார்கள். மக்கள் தகவல் தொடர்பு துண்டிப்பாக போன்,தொலைக்காட்சி,இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கின்றன.பத்து வருடமாக நான் எதிர்பார்த்து காத்திருக்கும் முபாரக்கின் வீழ்ச்சிக்கான தருணங்களில் மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

இவைகளின் சாத்தியம் இணைய தொடர்புகள்.ட்விட்டர்கள் என்ற படித்த இளைஞர்களின் கருத்துப்பரிமாறல்கள் என்பவற்றோடு முன்னாள் அணு ஆயுத தடை நிறுவனத்தின் இயக்குநர் முகம்மது எல்பராடியும் மறைமுக காரணம்.ஹில்லாரி கிளிண்டன் “We are concerned of people's safety and freedom of speach" என்று காத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதாயங்களுக்கும் குரல் கொடுத்து விட்டார்.

சுதந்திர,மக்கள் உரிமை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாழ்த்துக்கள். பழையன,அடக்கு முறை ஒற்றை மனிதன் ஆட்சி, வாரிசு அரசியல் ஒழியட்டும்.கூடவே அடிப்படைவாதிகள் ஆட்சி அதிகாரத்தை பற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும்.வாழ்த்துக்கள் எகிப்தியனுக்கு!

8 comments:

Rathi said...

ம்ம்ம்ம்....

//“We are concerned of people's safety and freedom of speach" என்று காத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதாயங்களுக்கும் குரல் கொடுத்து விட்டார்.//

SUPER!

அப்புறமா, தமிழ்மணத்தைப் பார்க்க எனக்கும் சற்று பயம் வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனையில் துனிசியாவின் சாயல் தெரியப்போக, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தகவல், தொழிநுட்ப கருத்துப் பரிமாற்ற ஊடகங்களும் முடக்கப்படுமோ என்று.

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்ம்....

//“We are concerned of people's safety and freedom of speach" என்று காத்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதாயங்களுக்கும் குரல் கொடுத்து விட்டார்.//

SUPER!

அப்புறமா, தமிழ்மணத்தைப் பார்க்க எனக்கும் சற்று பயம் வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனையில் துனிசியாவின் சாயல் தெரியப்போக, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தகவல், தொழிநுட்ப கருத்துப் பரிமாற்ற ஊடகங்களும் முடக்கப்படுமோ என்று.//

ரதி!மொழிப்போராட்டம் என்று இந்தி எதிர்ப்பு முந்தைய காலகட்டங்களில் வரும்போது இணையம்,கைபேசி என்ற சாதனங்கள் இல்லை.ஆனால் போராட்டம் சாத்தியமானது.எனவே போராட்டத்தின் ஆணிவேர்கள் மாணவர்களும் இளைஞர்களுமே.எங்க முதல்வருக்குத்தான் போராட்டம் என்றால் கல்லூரி விடுமுறை என்ற கலை நன்றாகவே வருகிறதே!

கருத்துப்பரிமாற்ற முடக்கங்களுக்கான திட்டங்கள் போடும்படி பூங்கோதைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி நான் இங்கே http://parvaiyil.blogspot.com/2010/03/blog-post_22.html

கவலைப்பட்டுக்கொண்டிருக்க அந்தக்கா நீரா ராடியாவிடம் டாடாபேசி பேசப்போய் விட்டார்கள்.

குடுகுடுப்பை said...

எகிப்து புரட்சியில் முபாரக் சென்று எல்பராடி வந்தால் தப்பிக்கும், இல்லையென்றால் இன்னோரு மத அடிப்படைவாத நாடு அங்கே வரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்..ம் ம்..

ராஜ நடராஜன் said...

//எகிப்து புரட்சியில் முபாரக் சென்று எல்பராடி வந்தால் தப்பிக்கும், இல்லையென்றால் இன்னோரு மத அடிப்படைவாத நாடு அங்கே வரும்.//

வருங்கால முதல்வரே!எப்படியிருக்கீங்க:)

நீங்கள் சொல்வது சரிதான்.எல்பராடி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.சுற்றுப்பயணம் இரு முக்கியமான அந்நிய செலவாணி எகிப்திய நாட்டுக்கு.ஆனால் ஊர் சுற்றிப்பார்க்க வருபவர்களை குண்டு வைக்கும் அடிப்படைவாத கட்சி ஒன்றும் எகிப்தில் இயங்குகிறது.போராடுபவர்கள் மாற்றங்கள் அடிப்படைவாதிகளின் கையில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//ம்..ம் ம்..//

நான் நசரேயன் ம்ம்ம் கொட்டி விட்டார் என்று நினைத்து விட்டேன்:)

நசரேயன் said...

ம்ம்ம்

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்//

இதுதான் அசலா:)