Followers

Friday, January 21, 2011

கபில் சிபலும் தன் வாயால் கெடுவார்

பயணக்கதைகள் சொல்லலாமென்றால் அரசியல் தில்லுமுல்லுகளும் ஆட்சி அதிகார தவறான பயன்பாடுகளும் முதலில் கபில் சிபலுக்கு கொட்டு வை என்றே கை பரபரக்கிறது.

மக்கள் ஆட்சியில் மக்கள் இன்னும் நம்பிக்கை கொள்வதற்கு கருத்து சுதந்திரமும்,பத்திரிகை துறை,நீதி துறை இன்னும் ஓரளவுக்காவது செயல்படுகிறது என்பதால் எனலாம்.ஸ்பெக்ட்ரத்தில் குழறுபடிகள் இல்லை என்றால் CAG அறிக்கையே வெளியிட்டு இருக்க கூடாது.அப்படி அறிக்கை வெளியிட்டும்,ராடியா பேச்சுக்களில் சில பொதுவாக்கப்பட்டும்,ஆ.இராசா ராஜினாமா,சி.பி.ஐ ஆதார தேடல்கள்,தமிழ்மையம் மீது கூட சந்தேகம் என்று விசாரணையின் கோணம் வளரும் நிலையில் ஸ்பெக்ட்ரம் பற்றிய CAG கணக்கு தவறானது என்று கபில் சிபல் சொல்லும் போதே கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட வேண்டுமென்று தோன்றியது மனதில். 

சரி! வாதாடும் திறமை படைத்த காரணத்தினாலும் கொடுக்கப்பட்ட பதவியின் தகுதியினாலும் கூடுதல் பொறுப்பு கிடைத்து டெலிகாம் துறையின் கணக்குகளை மேற்பார்வையிட்டு கருத்து சொல்லும் உரிமை ஜனநாயகமாகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட முயலின் மூன்று கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே அப்புறமென்ன இப்பொழுது திடீர் குட்டிக்கரணம் நான் CAG பற்றி தவறாகவே கூறவில்லையென்று.

"I mean no disrespect to any institution... I have neither directly or indirectly tried to interfere with any process going on," என்று கபில் சிபல் சொல்கிறார்.
இதனையும் தொடர்ந்து "I am fully aware of my responsibilities, my obligations, my duties not only as a Minister but also as a citizen of this country," என்கிறார்.
......................................................................................................................................
நீங்க சொல்லி முடிச்சிட்டீங்களா!இப்ப நாங்க என்ன சொல்றோம்ன்னா
Mr.Kapil cheap pal ! We too have a right to observe, get angered and comment on your political ethics of our beloved country.

தேசியக்கட்சி என்று நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தொடர்ந்து லஞ்சம்,ஊழல் என்ற தொடர்கதை தொடர்வது ஏன்?
ஆமாம்!மன்மோகன் சிங்கென்று ஒரு பிரதமர் இருந்தாரே?இன்னும் அதிகாரத்தில்தான் இருக்கிறாரா?


10 comments:

Thekkikattan|தெகா said...

காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தொடர்ந்து லஞ்சம்,ஊழல் என்ற தொடர்கதை தொடர்வது ஏன்?//

இதென்ன கேள்வி ராஜ நட! இருக்கிறதே ஒத்தை கட்சி அடிச்சிப் போட்டு திரும்ப நாம போயி நிற்கிற இடமும் அங்கேதான். I mean, do we have any other alternative source? அதான் தொடர்ந்து ஜோப்படிக்காரய்ங்கிட்டேயே போய் நிக்க வேண்டியதா இருக்கு... ஒரு வேளை அந்த ’காந்தி’ name tagஎ பிடிங்கிட்டா விடிவுகாலம் பொறக்கலாம் ...

நசரேயன் said...

//இன்னும் அதிகாரத்தில்தான் இருக்கிறாரா?
//

தெரியலையே

bandhu said...

//இன்னும் அதிகாரத்தில்தான் இருக்கிறாரா?//
இருக்கிறார். ஆனால் அவர் நாமெல்லாம் நினைத்த அளவு நல்லவர் ஒண்ணும் இல்லைன்னு தோணுது!

கும்மி said...

அவருக்கு தான் ஒரு அமைச்சர் என்னும் நினைப்பை விட தான் ஒரு வக்கீல் என்னும் நினைப்பே எப்பொழுதும் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ராஜ நடராஜன் said...

//காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் தொடர்ந்து லஞ்சம்,ஊழல் என்ற தொடர்கதை தொடர்வது ஏன்?//

இதென்ன கேள்வி ராஜ நட! இருக்கிறதே ஒத்தை கட்சி அடிச்சிப் போட்டு திரும்ப நாம போயி நிற்கிற இடமும் அங்கேதான். I mean, do we have any other alternative source? அதான் தொடர்ந்து ஜோப்படிக்காரய்ங்கிட்டேயே போய் நிக்க வேண்டியதா இருக்கு... ஒரு வேளை அந்த ’காந்தி’ name tagஎ பிடிங்கிட்டா விடிவுகாலம் பொறக்கலாம் ...//

தெகா!காங்கிரஸ்க்கு ஆப்பு வைக்கும் சந்தர்ப்பங்கள் ஜனதா,பி.ஜே.பிக்கு அமைந்தும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையென்றேதோன்றுகிறது.

அதனால் நீங்கள் சொல்லும்படி ஒத்தைக்கட்சி ஆட்சி முறையாகிப்போனது.காந்தி Tagக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்பதோடு மொத்த தேசத்தின் வளர்ச்சியின்மையின் பெரும்பங்காக ஸ்விஸ் வங்கி பணம் பதுக்கல்,லஞ்சம்,ஊழல் என்ற தேச நோய்களை பரவவிட்டதின் முக்கிய காரணி காங்கிரஸ்தான் என்பதில் சந்தேகமேயில்லை.

ராஜ நடராஜன் said...

////இன்னும் அதிகாரத்தில்தான் இருக்கிறாரா?
//

தெரியலையே//

நசர்!முதல் முறையாக தூங்குமூஞ்சி,பயந்தாங்கொள்ளி பிரதமரை பார்க்கிறோம்.

ராஜ நடராஜன் said...

////இன்னும் அதிகாரத்தில்தான் இருக்கிறாரா?//
இருக்கிறார். ஆனால் அவர் நாமெல்லாம் நினைத்த அளவு நல்லவர் ஒண்ணும் இல்லைன்னு தோணுது!//

பந்து!Mr.Clean என்ற பெயருக்கே பொருத்தம் இல்லாதவராகிப் போனார்.தஞ்சாவூர் பொம்மை கூட ஆடும்.இவர் கொலுவுக்கே லாயக்கில்லாத பொம்மையாகிப் போனார்.

ராஜ நடராஜன் said...

//அவருக்கு தான் ஒரு அமைச்சர் என்னும் நினைப்பை விட தான் ஒரு வக்கீல் என்னும் நினைப்பே எப்பொழுதும் இருக்கும் என்று நினைக்கின்றேன்.//

கும்மி!வக்கீல் என்ற நினைப்பு இருப்பதில் ஆச்சரியமில்லை.வாழ்க்கையின் மொத்த நாட்களில் அமைச்சர் பதவி நாட்களை விட வக்கீல்தனம் தான் அதிகம் என்பதால் அவரது குரலில் வக்கீல் பிரதிபலிப்பது அவர் பேச்சைக் கவனிக்கும் போது தெரியும்.

கபில் counter attack நல்லா செய்வார் என்பதற்காகவே மன்மோகன் இராசாவின் இடத்தில் இவரை நியமித்திருப்பார் என்பது இப்பொழுது புரிகிறது.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார் என்பது மட்டுமே CAG கணக்கு தவறு என்ற அவரது வாதத்தில் தெரிகிறது.

vasan said...

இந்த‌ யுபிஎ யின் த‌ங்க‌த் த‌லைவி 'த‌கத்தாய‌ சூரிய‌னின்' ஊழ‌ல் ப‌ற்றி ஒருவ‌ரிக் க‌ருத்து கூட கூறாம‌ல் ஊழ‌லுக்கு 'சைப‌ர் ச‌லி(கி)ப்புத் த‌ன்மை'(Zero tolerance) க்கு உத‌ராணமாய் ஐந்து அம்ச‌ திட்ட‌ம் தீட்டுகிறார்.
மேலைநாட்டு தொழில் அதிப‌ர்க‌ளின் அடிதாங்கி மான்டேக்சிங் அளுவாலியாவும். ஸ்பொக்ட‌ர‌ம் ப‌ற்றி க‌பில்'சீ'ப‌லை வ‌ழிமொழிந்து அழிச்சாட்டிய‌ம் ப‌ண்ணுகிறார். யுஎஸ் அணு ஒப்ப‌ந்த‌த்தில் ம‌ட்டும் குர‌லையும், இர‌ண்டு விர‌லையும் உய‌ர்த்திய‌ 'லீட்' பிர‌த‌ம‌ர், எதிர்க‌ட்சின‌ர் கோரும் ஜெபிசிக்கும், சுவிஸ் வ‌ங்கி க‌ருப்பு ப‌ணத்திற்கும் மட்டிம் அத்வானி சொன்ன‌ 'வீக்' பிர‌த‌ம‌ர் ஆகிவிடுகிறார்.

குட்ரோச்சி, போப‌ல் ஆன்ட‌ர்ச‌ன், சுவிஸ் வ‌ங்கி க‌ருப்புப் ப‌ண‌ம், காம‌ன்வெல்த் ஊழ‌ல், அந்நிய‌ நாடுக‌ளில் முத‌லீடு, அந்நிய‌ க‌ம்ப‌னிக‌ளின் பார்டிசிபேட்ட‌ரி நோட் வ‌ழியில் ப‌ங்குக‌ளில் முத‌லீடு, சைனா எல்லைப் பிர‌ச்னை, 26/11 (2008) மும்பை ச‌ம்ப‌வ‌ம், இல‌ங்கை த‌மிழ‌ர் அழிப்பு, த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்களின் தொட‌ர் ம‌ர‌ண‌ங்க‌ள் ப‌ற்றிய காங்கிர‌ஸ் த‌லைவி சோனியாவின் மௌனம்,அவ‌ரின் அந்நிய‌ பிற‌ப்பை அதிகம் நினைவூட்டுகிற‌து. 120 கோடி இந்திய‌ ம‌க்க‌ளை வ‌ழி ந‌டத்த‌ இந்த‌ புண்ணிய‌ பூமியின் புனித‌மும், புராத‌ன‌மும் அறிந்த‌ புத‌ல்வ‌னோ, புத‌ல்வியோ இல்லையா?

ராஜ நடராஜன் said...

வாசன் அவர்களுக்கு,

முதல் வருகையென நினைக்கிறேன்.தாமத மறுமொழி சொல்வதற்கு மன்னிக்கவும்.தமிழ் நாடு சுற்றியதில் தலைக்குள் பல விசயங்கள்:)

உங்கள் பின்னூட்டத்தின் மொத்த பதிலாக இந்தாட்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார்களே என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிளாக்குறதுல உள்ள ஒரே பயன் creating and accumulating opinions.

கருத்துப் பரிமாற்றங்கள் ஒரு நாளைக்கு மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது மட்டுமே இப்போதைக்கான நம்பிக்கை.