விடுதலைக்கான குரலாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலம்
ஈழத்தமிழர் பிரச்சினையை தந்தை செல்வா காலத்திற்கும் முந்தைய சிலோன் வாழ்க்கை நிலை,பிரபாகரன் சகாப்த விடுதலைப் போராளிகள் காலம்,விடுதலைப்புலிகளுக்கும்,ஏனைய போராளிகளுக்கும் அப்பால் தற்போதும் இனியும் தொடர்ந்து பயணிக்கும் மூன்று நிலைகளில் மட்டுமே மதிப்பீடு செய்ய முடியும்.மன்னர் காலத்து வாழ்க்கையை அடுத்து மக்களாட்சி கோட்பாட்டுடன் உலகம் பயணிக்கும் கால கட்டத்திலிருந்து இனி ஈழப்பிரச்சினையை அணுகலாம்.
எனவே தமிழீழ சுய நிர்ணய உரிமை என சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களால் தமிழ் ஐக்கிய முன்ணணி என்ற பெயரால் 1974 வருட அறிக்கையின் சில அம்சங்களிலிருந்து துவங்குவது தமிழீழ உணர்வின் விதைகள் தூவப்பட்ட காலமாகும் என்பதால் பொறுத்தமாகவும் ஈழ வரலாற்றின் துவக்கமாகவும் இருக்கும்.
தற்போதைய நிலைக்கும் ,விடுதலைப் புலிகளின் சகாப்தங்களுக்கும் முன்பும் தமிழீழ குரலுக்கான துவக்கமான காலமாய் எஸ்.ஜே.வி செல்வநாயகம் காலத்து சிலோன் நிலையையும்,போராட்ட காலத்துக்கான வித்துக்கள் விதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் ஆவண பூர்வமாக இங்கே பார்த்து விடலாம்.
துவக்கப்புள்ளியாக சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலம் தொட்டு ஈழ விடுதலைக்கான தேவையை நோக்குவோம்.இலங்கை என்று பெயர் மாற்றம் பெருவதற்கு முன் போர்த்துகீசியர்,டச்சுக்காரர்கள் பின் ஆங்கிலேயர்கள் காலமும் அதனைத் தொடர்ந்த சுதந்திரம் பெற்ற சிலோன் என்று அழைக்கப்பட்ட காலங்களே விடுதலைக்கான தேவைக்கான வித்தை விதைக்கிறது.அதற்கான சான்றாய் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் உரை இங்கே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றமாக...
ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமை.
Memorandum from Tamil United Front
to 20th Conference of Commonwealth Parliamentarians
Sri Lanka – 1 September 1974
சிலோன் தமிழர்கள் சார்பாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.எங்களது அன்பான வணக்கத்தை தெரிவிக்கிறோம்.
இந்த அறிக்கையை இங்கே சமர்ப்பிப்பதன் மூலம் உலகின் மனசாட்சியை தட்டி எழுப்புவதோடு, தமிழர்களின் மனித உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும், பல விதமான இனப்பாகுபாடுகளையும் ஏனைய முயற்சிகள் தமிழர்களின் இனப்படுகொலைக்கு மட்டுமே கொண்டு செல்லும்.
சிலோன் தமிழர்கள் பண்பாட்டால்,மதத்தால்,மொழியால்,நிலப்பரப்பில் சிங்கள தேசத்திலிருந்து பிரிந்து நிற்கும் தனி நாடாகும்.
ஐரோப்பியர்களின் படையெடுப்பிற்கு முன் வடக்கில் தமிழ் மன்னனின் ஆட்சியும் தெற்கில் இரு சிங்கள மன்னர்கள் என மூன்று அரசுகள் ஆட்சி புரிந்தன.1619ல் போர்த்துகீசியர் படையெடுப்பின் துவக்கம் முதற்கொண்டு 1659ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றிய பின் 1796ல் பிரிட்டிஷ்காரர்கள் வருகைக்குப் பின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் துவக்கம் கொண்டு 1815ம் ஆண்டு மூன்று அரசுகளுமே ஒரே ஆட்சியின் கீழ் வருகிறது.தனித் தனியாக ஆட்சி செய்யப்பட்ட தமிழ்,சிங்கள அரசுகள் பின் ஒரே நிர்வாகத்தின் கீழ் வருகிறது.இந்த கால கட்டத்தில் யாருடைய கருத்தையும் கேளாமல் சுய அதிகார அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதே பின்பு அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகி விடுகிறது.இதனை முதலில் கண்டி சிங்களவர்கள் எதிர்த்தார்கள்.1945ல் பிரிட்டிஷ்காரர்கள் அதிகார மாற்றம் செய்ய நினைக்கையில் அமைச்சர் குழுக்களின் ஆலோசனைகளை கேட்டார்கள்.பெரும்பான்மை இனத்தவர்களை சார்ந்திருக்கும் இதனை பெருமான்மையான தமிழர்கள் எதிர்த்தார்கள்.இதனை விசாரிக்க லார்ட் சௌல்பரியின் தலைமையில் ராயல் கமிசன் என்ற பெயரில் குழு அனுப்பியதில் சிறுபான்மையினரின் தேவைகளை பாதுகாக்க வேண்டியது குறித்த தேவையை உணர்ந்தார்கள்.
இது குறித்த எந்த சட்ட நடவடிக்கையும் சிறுபான்மையினர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வெள்ளை அறிக்கையும் தயாரிக்கப்பட்டாலும் கூட இவை நடைமுறை சாத்தியமில்லாத தனது ஏமாற்றத்தை சிலோன்,பிரிக்கப்பட்ட தேசம் என்ற பி.ஹெச்.பார்மர் (B.H.Farmer) புத்தகத்தின் முகவுரையில் சொல்லும் போது:
“இரு இனத்திற்குமிடையேயான முரண்பாடுகள் குறித்த குறைந்த அறிவே விசாரனைக் கமிசனுக்கு இருந்தது.நிகழ்வுகள் எனக்கும் விசாரணைக் குழுவுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது.”
இருந்த போதிலும் பிரிட்டிஷ் நிர்வாக ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதன் நம்பிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் மூன்று முக்கிய கருத்துக்களை முன் வைத்தார்கள்.
a) சம பங்கீடு
காலனித்துவ நாடுகளின் செயலாராக இருந்த டேவன்சயர் டியூக் சொன்னதின் அடிப்படையில் சட்டத்தில் சம பங்கீடு.இதன்படி ஒரு இனத்தில் மட்டுமே அதிகாரக் குவிப்பு இல்லாமல் அனைத்து வகுப்பினருக்கும் பங்கீடு என்பதோடு மொத்த மக்களின் நலன் சார்ந்த ஒன்றாக கருதியதை சவுல்பரி கமிசனர்கள் அனுமதிக்கவில்லை.
b) பெடரல் சட்ட அமைப்புக்கான தேவை
சுதந்திரம் பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே தமிழர்களின் உரிமைகள் மோசமாகும் நிலையில் பெடரல் (Indian model of Central and state governance) அரசு முறை முன்வைக்கப்பட்டது.இதன் மூலமாக இரண்டு வேறுபட்ட தேசங்களை ஒரே நாடாக இணைக்கமுடியும் என்று உணர்ந்த காரணத்தினால் இதனை முன்வைக்கப்பட்டது.Mr. S. W. R. D. பண்டாரநாயக்கா மே 1926க்கும் முன்பே பெடரல் அமைப்பை முன்மொழிந்தது இங்கே நினைவுகூறத் தக்கதாகும்.இருந்தாலும் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தவுடன் இதனை புறக்கணித்தார்.ஜுலை 17ம்தேதி சிலோன் மார்னிங்க் லீடர் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட அவரின் பேச்சின் குறிப்பில் ஒன்றாக
“பழைய வரலாற்றைப் பார்த்தால் தமிழர்கள்,கீழ் நாட்டு சிங்களவர்கள்,கண்டியன் சிங்களவர்கள் என்ற மூன்று பிரிவினர் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் எந்தக்காலத்திலும் இணைந்து வாழ விரும்பியதேயில்லை.இருந்தாலும் ஒருமித்த ஒன்றுபட்ட நாடாக கருதுகிறது” என்பதன் கருத்துக்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போது பெடரல் அமைப்பிலான அரசே இதற்கு தீர்வு என்று ஏற்றுக்கொண்டார்.
c) மூன்றாவதாக இந்த ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டு யாருடைய ஆலொசனையும் கேட்காமல் 1972ல் ஒருமித்த கருத்தாக புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.இந்த புதிய சட்டம் சவுல்பரி அரசியமைப்பின் குறைந்த பட்ச பாதுகாப்பையும் முற்றிலுமாக துடைத்ததோடு மட்டுமல்லாமல் சிங்களவர்கள் அல்லாத புத்தமதத்தை சார்ந்தவர்கள் அல்லாதவர்களுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது.இதன் காரணமாக தமிழர்கள் ஐக்கிய முன்ணணி என்ற அமைப்பில் அரசியல் கட்சிகளையும்,தொழிற் சங்கங்களையும்,கட்சிகள் சாராத அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைத்தது.இன்று தமிழ் ஐக்கிய முன்ணணி (Tamil United Front (TUF).) தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறது.தமிழ் ஐக்கிய முன்ணணி புதிய சட்டத்தை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் புதிய ஆறு அம்சத் திட்டத்தை முன் வைத்தது.
1972 ன் புதிய சட்டத்தின் ஆறு அம்ச திட்டங்கள்
a) சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் நிலை நாட்டபடவேண்டும்.
b) சட்டப்படி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் குடியுரிமை உத்தரவாதம் தேவை.
தனித்தனிப் பிரிவாக குடியுரிமை வழங்கவோ குடியுரிமையை நிராகரிக்கும் அதிகாரமோ இருக்க கூடாது.
c) மதச் சார்பற்ற நாடாக அனைத்து மதங்களையும் பாதுகாக்க வேண்டும்
d) அரசியல் அனைத்து கலாச்சார மக்களுக்கும் சட்ட அமைப்பு அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் தரவேண்டும்.
e) அரசியல் சட்டம் தீண்டாமை, ஜாதி,மத பேதமின்றி அனைவரையும் சமமாக பாதுகாக்க வேண்டும்.
f) சமூக மக்களாட்சியில் அதிகாரம் ஒருமுகப்படுத்தப் படாமல் அதிகார பரவலாக்குவதன் மூலமே ஆட்சி அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் விளங்கும்.
புதிய காலனியாட்சி முறையில்:
1. தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுப்பு
2. இன வேறுபாடு சட்டம்
3. சிலோன் தமிழர்கள் தாம் வாழும் மண்,மொழி,மதம்,கலாச்சாரத்தால் சிங்களவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்
4. சம பங்கீடு
5. பெடரல் அரசியல் சட்ட அமைப்பு
இரு தேசிய,இரு மொழி,பல மத சிலோன் நாட்டை ஒரு சிங்கள மொழி,புத்த மத முன்னிலைப்படுத்தலில் 1974 ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆகஸ்ட் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.தமிழ் மக்களுக்கான அடக்கு முறைக்கு சான்றாக 6 சான்றுகள் இங்கே குறிப்பிடப்படுகிறது.
1.குடியுரிமையும் தனிமைப்படுத்தலும்
சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே சிங்களத் தலைமைகளுக்கு தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை மறப்பதில் சிரமம் இருக்கவில்லை.சுதந்திரத்திற்கு முன் ஒரே தகுதியிலான குடியுரிமை பெற்றவர்கள்,1948ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் எண் 19ன் படி ஒரு மில்லியன் தமிழர்கள் குடியுரிமை இழந்தவர்களாக்கப்பட்டார்கள்.இந்த சட்டத்தினால் தமிழர்களும்,முஸ்லீம்களும் கூட பாதிக்கப்பட்டார்கள்.தமிழ்,முஸ்லீம் பெயர்கள் கொண்டவர்கள் அரசு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு தங்கள் குடியுரிமை சான்றிதழ்களை வழங்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டார்கள்.கீழ் கண்டவைகள் அவைகளில் சில:
a) அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு
b) கடவுச்சீட்டு(Passport) மற்றும் பயண சான்றுகள்
c) குடியுரிமை பத்திரம்
d) அரிசி வழங்குவதற்கான ரேசன் கார்டுகள்
e) தேர்தல் அட்டவணையில் பெயர்கள் சேர்த்தல்
f) சொத்துரிமைப் பத்திரங்கள் மாற்றம்
g) சிலோன் வியாபாரத்தில் பதிவு செய்தல்
h) சிலோன்காரர்களுக்கு பகுதியாகவோ முழுமையாகவோ ஒதுக்கப்பட்ட பகுதிகள்
இதற்கும் அடுத்த ஆண்டு 1949ம் வருட பாராளுமன்ற தேர்தல் மாற்ற சட்டம் எண்.48ன் படி தமிழர்களுக்கான ஓட்டுரிமைகள் மறுக்கப்படும் படி சட்டம் இயக்கப்பட்டது.பாதியாக இருந்த தமிழ் மக்கள் தொகைக்கு மாறாக வாக்குரிமைகள் சிங்களவர்களுக்கு 58 இடங்களும்,சிலோன் தமிழர்களுக்கு 15 இடங்களும்,இந்திய தமிழர்களுக்கு 14 இடங்களுமென மாற்றம் செய்யப்பட்டது.
கீழ்கண்ட அட்டவணை இந்த சமமின்மையை உறுதிப்படுத்தும்.
COMMUNITY 1947 1952 1956 1960 1960
% of seats % of seats % of seats % of seats % of seats
Sinhalese 63 73 73 78 77
Ceylon Tamils 13 12 12 11 11
Indian Tamils 7 Nil Nil Nil Nil
Muslims 6 8 7 6 7
மேற்கண்ட அட்டவணை சிறுபான்மையினருக்கும் வாக்குரிமை போன்று தென்பட்டாலும் உண்மையில் பெரும்பான்மையானவர்களுக்கு அதிக இடங்களைத் தருவதற்காக வகுக்கப்பட்ட சட்டமாகும்.
2. தமிழர் பகுதியில் தலையீடுகள்.
பெரும்பானமை தமிழர்கள் வசித்த கிழக்கு மாகாண பகுதியிலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்து சிங்கள வாக்குரிமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் நிலம் வாங்குவதற்கு தனி உரிமங்கள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் தண்டனைகளுக்குட்பட்டு வெளியேற்றபட்டார்கள்.இவையெல்லாம் மக்கள் இயக்கத்தால் இயல்பாய் நிகழ்ந்த ஒன்றாக இல்லாமல் அரசால் திட்டமிடப்பட்ட செயல்கள்.
3. மொழி
மற்ற மொழிக்காரர்களுடன் சம உரிமை என்ற முந்தைய நிலை மாறி தமிழர்கள் அவமதிக்கப்பட்டு ஏமாற்றம் அடைந்தார்கள்.1955ம் வருடம் வரை சிங்களர்களும்,தமிழர்களும் ஒரே உரிமையைக் கொண்டிருந்தார்கள் எனபதில் சந்தேகமேயில்லை.உண்மையில் சிங்களமும்,தமிழும் அரசு மொழிகள் என அரசு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்ததை பெரும்பான்மையானவர்கள் வரவேற்றார்கள்.
இது பற்றி திரு.S. W. R. D. பண்டாரநாயகே சொல்லும் போது:
ஒரு தேசத்தின் முக்கிய அங்கம் மொழியென்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.மொழி என்ற வாகனத்தின் மூலமாகவே மக்களின் ஆசைகள்,கனவுகள்,வெற்றிகள் என்பவை பல்லாண்டு காலமாக போற்றவும் பாதுக்காக்கப்பட்டும் வந்துள்ளது.எனவே ஒரு தேசம் எனபது மனவியல்,உணர்வுபூர்வமாக கலாச்சார அடிப்படையில் மொழியின் மூலமாகவே தேசத்தின் மதிப்பு வெளிப்படுத்தப் படுகிறது.இதனால் தான் ஒரு தேசத்தின் முக்கிய அங்கமாக மொழி கருதப்படுகிறது.சிங்கள மொழி மட்டும் அரசு மொழி குறிக்கோளாக இருந்தால் என்ன?ஒரு மொழிக்கும் மேலான திட்டத்திற்கு மறுப்பு இருந்தால் ஏனைய நாடுகள் இரு மொழிக்கும் மேலான அரசு மொழிகள் கொண்டிருந்தும் ஓரளவுக்கு திருப்தி கொள்ளும் நிலையே காணப்படுகிறது.
தமிழை தேசிய மொழியாகவும் அரசு மொழியாக கருதுவதில் எந்த தீங்குமில்லையென்றே நினைக்கின்றேன்.பல தரப்பட்ட வகுப்புகளிடமிருந்தும் இந்த நம்பிக்கையை கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகள் செய்கிறோம்.எனவே தனிப்பட்ட முறையில் இரு மொழிக்கொள்கையை கடைப்பிடிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது.மேலும் இதனால் எந்த தீமையோ,ஆபத்தோ,பிரச்சினையோ கிடையாது என நினைக்கிறேன்(அரசு ஆவண பூர்வமான அரசு கவுன்சில் தகவல்,25th May 1944:Vol.1 c809)
ஆனால் 1956ம் வருடம் மொழி திருத்த சட்ட எண் 33ன் படி சிங்கள மொழியே சிலோனின் அரசு மொழியாக விளங்கும் என அறிவிக்கப்பட்டது.இதனால் தமிழர்கள் தமிழ் மொழிக்கான சம உரிமைக்காக தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தார்கள்.தமிழ் பேசும் பகுதிகளான பட்டிகாலா,திருகோணமலை,வவுனியா,மன்னார்,ஜஃப்னா தமிழர் பகுதிகளில் அரசாங்க அலுவலகங்கள் முன்பு 1961ம் ஆண்டு 57 நாட்களுக்கு சத்யாகிரக போராட்டத்தை செய்தார்கள்.இதனால் அரசு நிர்வாகம் முடங்கிப் போயின.அரசாங்கம் அவசர கால சட்டத்தைப் பிறப்பித்து ராணுவ அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தையா வைத்தியநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள்.வட, கிழக்குப் பகுதியில் தமிழை சட்டப்படி உபயோகிக்க முயன்ற போதிலும் சிங்கள மொழி மட்டுமே பொதுவான அரசு சம்பந்தப்பட்ட மொழியாக இருந்தது தமிழர்களுக்கு அவமதிப்பையும்,சிரமத்தையும் உருவாக்கியது.
4. கல்வி
கல்வியிலும் கீழ்மைப் படுத்தலுக்கான சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
a) 1960ம் வருட கல்வி சீர்திருத்த சட்டம் எண் 5ன் படியும் 1961ம் வருட சட்டம் எண் 8ன் படி தமிழர்களாலும்,கிறுஸ்தவர்களாலும் நடத்தப்பட்ட பள்ளிகள் தடை செய்யப்பட்டன.ஆனால் புத்த பிரிவீனா பள்ளிகள் தன்னிச்சை பள்ளிகளாக அரசு உதவியுடன் நடத்தப் பட்டன.
b) எஸ்டேட்கள் என்று அழைக்கப்படும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிகள் அரசால் நிர்வகிக்கப் படாமல் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே எப்பொழுதும் போல் இருந்தது.
c) தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் பள்ளிகள் சிங்கள மொழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளாக மாற்றப்பட்டு சிங்கள மொழியை கற்க வற்புறுத்தப்பட்டார்கள்.
d) தென் சிலோனில் அரசால் எடுத்துக்கொள்ளப் பட்ட தமிழ்ப் பள்ளிகளில் அதிகம் தமிழ்க் குழந்தைகளே படித்த போதும் இவர்களுக்கு மாற்று வசதிகள் ஏற்படுத்தாமல் சிங்கள பள்ளிகளாக மாற்றப்பட்டது.
e) வடக்கில் தமிழ் மொழி வழிக்கல்வியாக இருந்த நான்கு பள்ளிகள் சிங்கள மொழி பள்ளிகளாக மாற்றப்பட்டது.
f) மேற்கல்வி கற்பதற்கான வழிகள்-தற்போதைய அரசு நிர்வாகம் ஆட்சிக்கு வந்த பின் இன பாகுபாடு பின்பற்றப்பட்டது.1970ல் தமிழ் மாணவர்கள் அனுமதி பெறுவதற்கு மேல் நிலை தேவைப்பட்டது.தகுதிகள் மறுக்கப்பட்டு கிராமப் புறங்களுக்கு முன்னுரிமை தருவதன் போர்வையில் இனப்பிரிவினையை உருவாக்கியது.1970ம் வருடம் தமிழ்,சிங்கள மாணவர்கள் பெறப்பட வேண்டிய மதிப்பெண்கள் தேவையைக் குறிப்பிடுகிறோம்.
கல்லூரிகளில் உள்நுழைவுக்கு தேவையான மொத்தம் மதிப்பெண்கள்
Tamils Sinhalese
Peradeniya- Engineering 250 225
Katubedde- Engineering 232 212
Medicine and Dentistry 250 229
Agriculture, Veterinary & Bio-Science 184 174
Physical Science 204 183
Architecture 194 180
இந்த பிரிவினை ஒரு அரசாங்கத் தவறு என்று அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் இந்த திட்டம் ரகசியமாக தொகுதி வாரியான அடிப்படையில் தொடர்ந்தது.இதன் அடிப்படையில் தமிழ் மாணவர்கள் தகுதியின் அடிப்படையிலேயே மேற்படிப்புக்கு தகுதி பெற்றவர்களாகிறார்கள்.
5. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள்.
1956ம் வருடம் முதல் 1961ம் வருடம் வரையும் 1974ல் தமிழர்கள் வன்முறைக்கு ஆட்பட்டார்கள்.1958ம் வருடம் சில சிங்கள குழுக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் தமிழர்கள் நிலப்பகுதிகள் அல்லாத பகுதிகளில் வசித்த தமிழர்கள் கொலை,துன்புறுத்தல்,கற்பழிப்பு மற்றும் திருட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது.1961ம் வருடம் சத்யாகிரகிகளை அப்புறப்படுத்த இந்த குழுக்கள் உபயோகிக்கப்பட்டது.1971ம் வருடம் அரசியல் சாராத கலாச்சார நிகழ்வில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.காவல்துறையும்,ராணுவமும் வன்முறையை குறிப்பிட முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விட்டது.
6. பட்டினியும்,சாவும்.
தேயிலை,ரப்பர்,தேங்காய் தோட்டங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தன.சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ரத்த ஓட்டமாக விளங்கும் தமிழ் தொழிலாளர்கள் மீது சொல்ல இயலாத அளவுக்கு அரசியல்,சமூக,பொருளாதார ரீதியாக தேசிய சட்டங்கள் மூலமாக ஒடுக்கப்பட்டார்கள்.மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மீது வேலை வாய்ப்பின்மை,குறைந்த ஊதியம்,உணவு பங்கீட்டு அளவு குறைப்பு போன்றவைகளால் இனப்படுகொலைக்கு நிகரான பட்டினிச் சாவு நிலை உருவாக்கப்பட்டது.இதன் மொத்த பாதிப்பாக அதிக இறப்பு விகிதமும், தோட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் உணவு, வேலைக்காக நகரங்களை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவானது.
தமிழர்களின் துயரங்களுக்கு காரணங்களை குறிப்பிட வேண்டுமானால்
1.அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்களில் சமமான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவது.
2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி புத்தக பாடங்களில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம்.
3. காவல்துறை,ராணுவத்தின் தொடர்ந்த செயல்கள்
4. அமைதியாக ஒன்று கூடுவதற்கு அனுமதி மறுப்பு
5. தமிழர்களும்,தமிழ் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறும் உரிமை மறுப்பு
6. சிறுபான்மையோரை பாதுகாக்கும் அடிப்படை உரிமையின்மை
7. சரியான காரணங்களின்றி கைது மற்றும் சிறையடைப்பு
8. கைதின் போதும்,சிறையிலும் மனிதாபிமானமற்ற குரூரமான தண்டனைகள்
9. புத்த மதத்திற்கு முக்கியத்துவமும் சட்ட அமைப்பில் அந்த மதத்தை பாதுகாப்பதும் முன்னிலைப்படுத்துவதும்
10. காங்கேசன்துறை மக்களில் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் வாக்குரிமை மறுப்பும் கடந்த இரு ஆண்டுகளாக இடைத்தேர்தல் மறுப்பும்.
காமன்வெல்த் மற்றும் தமிழர்கள்.
இன்று சிரிலங்கா இரு தேசம் என்ற கோட்பாட்டில் தமிழர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையை நோக்குகிறார்கள்.தமிழர்களின் பிரச்சினை உள்நாட்டு விசயமல்ல.இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் திரு.ராஜகோபாலாச்சாரி குறிப்பிட்ட படி:
“அதிகமான தவறுகள் குடும்பத்தின் சுவர்களிலும்,அதிகமான பொது தவறுகள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே நிகழ்கின்றன.ஒரு நாட்டின் உள் மாகாணங்களின் மதிப்பை மாற்றி அமைப்பதை உலகம் கருதுமானால் அப்புறம் மொத்த உலகின் முன்னேற்றத்திற்கு சந்தர்ப்பமே கிடையாது;சர்வாதிகாரம் உலகின் அதிகாரமாகி விடும்”.
தமிழர் பிரச்சினை சிரி லங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையென்ற முயற்சிகள் மேற்கொண்டால் அரசியல்,சமூக நிதர்சனங்களை அனுமதிக்காமல் தப்பிக்கவே வழிவகுக்கும்.அதிக ஆபத்துக்கள் கொண்ட இந்த சூழ்நிலை கை நழுவிப்போய் விடுமென்பதில் சந்தேகமேயில்லை.எல்லா வகையிலும் சிலோன் தமிழர்கள் தங்கள் உரிமைகளை பேச்சு வார்த்தைகள் மூலமாகவும்,சமாதான வழிகளிலும் அடைய விரும்புகிறார்கள்; மன கொதிப்பும்,ஏமாற்றங்களும் உருவாகும் சுற்றி வரும் பிரச்சினைகள் இப்பொழுதோ அல்லது சிறிது காலத்திலோ திரும்ப இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.
இன்றைய சிலோனில் மோசமான சூழ்நிலைகள் இன்னும் அதிக மோசமாகும் முன் உடனடி நடவடிக்கையும்,உதவியும் தேவை.கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இது குறித்த விவாதக் குறிப்பு இல்லாதுபோயினும்,சிறுபான்மை நாடுகள் பற்றி காமன்வெல்த் நாடுகளில் விவாதிக்கும் நிலை உருவாகும்.இதே போன்ற நிலைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருந்தும் காஷ்மீர் மற்றும் ஆப்பிரிக்க இனவேற்றுமை போன்றவற்றில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இங்கே மிகவும் மோசமாகும் சூழல்கள் மனிதாபிமான அடிப்படையில் சிலோன் தமிழர் பிரச்சினை குறித்து 20வது கான்பரன்ஸ் கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டும். அடிப்படை உரிமைகளுக்காக பலரும் வாழ்வை இழந்த பின்னரே உலக நாடுகள் சிறிய நாடுகள் சிரமத்திலிருக்கும் போது உதவுவதை தற்போதைய வரலாறுகள் காட்டுகின்றன.
CPA என்ற காமன்வெல்த் அமைப்பு
பாராளுமன்றத்தால்,இனம்,மதம்,கலாச்சாரங்களுக்கும் அப்பால் சட்டம்,உரிமைகள் என தனி மனித சுதந்திரத்தை பாராளுமன்ற ஜனநாய குறிக்கோள்களோடு இணைந்து மதிக்கும் அமைப்பு.எனவே சிலோன் தமிழர்களின் பிரச்சினைகள் இந்த கூட்டத்தின் அங்கத்தினவர்களின் அனுதாப கண்ணோட்டத்தோடு நோக்கும் எனபது எங்களின் நம்பிக்கை.இந்த அமைப்பு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.
S. J. V. Chelvanayakam, Q.C.,
President, Tamil United Front,
16, Alfred House Gardens
Colombo 3,
Sri Lanka.
அறிவிப்பு: பதிவின் நீளத்திலும்,மொழி பெயர்ப்பிலும் சில பகுதிகள் விட்டுப்போயிருக்க கூடும்.எனவே முழு வாசிப்பின் தேவை வேண்டி
பத்திரம் என்று அழகாக பெயர் சூட்டப்பட்ட பதிவின் ஆவணத்திலிருந்து இணைத்த ஆங்கில மூலத்தையும் இணைத்துள்ளேன்.
ஆதரவுக் குரல் நட்புக்களுடன்,ஆக்கபூர்வமான,நேர்மையான மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
இனியும் ஈழம் தொடரும்....