Followers

Wednesday, June 22, 2011

ராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமா?

பதிவுக்குப் போறதுக்கு முன்னாடி யாராவது கடைப் பக்கம் வந்தீங்கன்னா வடை சூடா கிடைக்குதா அல்லது முன்பு மாதிரியே ஆறிப்போய்த்தான் கிடைக்குதான்னு தயவு செய்து சொல்லுங்க.காரணம்,முன்னாடி பதிவர்கள் சித்ரா   கடை திறக்க ரொம்ப நேரமாகுதுன்னு சொல்லியிருந்தாங்க.போன வாரம் பதிவர் கிரி ஒன்னு டெம்ப்ளட் மாத்துங்க அல்லது வேண்டாத ஸ்கிரிப்ட்டுகளை தூக்குங்க என்றார்.இப்ப வேண்டாத ஸ்கிரிப்ட்டையெல்லாம் தூக்கி எறிஞ்சு எளிதான டெம்ப்ளட்டைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.இக்பால் செல்வன் போன வாரம் போட்ட பதிவைப் பார்த்து Arial மற்றும் 12Px ஐ 13 Px ஆக மாற்றியுள்ளேன்.நேரம் கிடைக்கும் போது இன்னும் கொஞ்சம் மெல்லிய முகப்பூச்சு மட்டும் செய்யலாமுன்னு இருக்கிறேன்.எனவே பதிவு தரவிறக்கம்,பின்னூட்ட வேகம் பற்றி யாராவது சொல்லுங்க.
சரி!இப்ப கச்சேரி ஆரம்பிச்சிடலாம்.

இவ்வளவு நாள் என்னமோ விளையாட்டுத்தனமா நேரு மாமா,இந்திரா காந்தி அன்னை,ராஜிவ் அண்ணன்னு சொந்தம் கொண்டாடி மன்னராட்சிக்கு மாறாக ஒரு பரம்பரை ஆட்சி வருவதற்கு இந்திய மக்கள் துணை போய் விட்டார்கள்.தமிழகத்திலும் கருணாநிதி அதற்கான வித்திட்டார்.தற்போதைக்கு அந்த கனவுகள் தவிடு பொடியாகி விட்டது ஒரு புறமிருக்க அதிகார பிறப்பின் இருப்பால்,விருப்பால் மத்தியிலும்,மாநிலத்திலும் அதற்கான சூழல்கள் உருவாகக் கூடும்.சுயமான முயற்சியாளர்களாய் இருந்திருந்தால் ராகுல்,ஸ்டாலின் போன்ற ஆளுமைகள் இந்தியாவிற்கு தேவையென்றாலும் வாரிசு அரசியலின் விளம்பரத்தால் இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வது இந்தியா என்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிற வாசகப் படி இதனை காலம் எப்படி பதிவு செய்யப்போகிறது என்று கணிப்பதற்காக வேண்டி இந்த பதிவு.

இப்ப சுப்ரமணியன் சாமி என்ன சொல்றாருன்னா,ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு வர முடியாதாம்!ஏனய்யா உனக்கு எப்ப பார்த்தாலும் குட்டையக் குழப்பி விடுறதே பொழப்பா போச்சுன்னு அலுத்துக்கொள்றவங்களுக்கு அவர் என்ன சொல்றாருன்னா...சோனியா பெருந்தன்மையா பிரதமர் நாற்காலியை மன்மோகன் சிங்கிற்கு விட்டுக் கொடுத்திட்டதாகத்தான் நான் கூட முன்னாடி நம்பிகிட்டிருந்தேன்.ஆனால் சோனியாவுக்கே பிரதமர் நாற்காலி மேல ஒரு கண்ணு இருந்துச்சாம்.அதுல மண்ணை அள்ளிப் போட்டது நம்ம முந்தைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்கிறார்.எப்படின்னா சட்டப்படி சோனியா பிரதமர் ஆகமுடியாதுன்னு தமிழ்நாட்டுல இருந்து டெல்லிக்கு மூடிய கடிதம் போகிறமாதிரி ஒரு கடிதத்தை எழுதி அதனை சோனியாவுக்கு அனுப்ப அந்தக் கடிதத்தை படிக்கும் போது சாட்சியாக இருந்தவர்கள் அப்போது சதாம் உசைன் ஈராக் ஊழலில் சிக்கிக் கொண்ட நட்வர்சிங்கும்,பிரதமர் மன்மோகன் சிங்கும் என்கிறார் சுப்ரமணியன் சாமி.

எனவே ராகுல் காந்தி சோனியாவின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சோனியா மட்டுமல்ல அவரது இரு குழந்தைகளும் பிரதமராக முடியாதுன்னு பத்த வச்சுட்டார்.இதற்கு சுப்ரமணியன் சாமி சொல்லும் இன்னுமொரு காரணமென்னவென்றால் ராகுல் காந்தி இத்தாலியன் பாஸ்போர்ட்டில்தான் வேறு ஒரு பெயரில் ஐரோப்பா முழுவதும் சுற்றி வந்தாராம்.

Does Subramanian swamy got a valid point.? 
காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

எவன் மாட்டுவான்னே ராத்திரி தூங்குற போது சுப்ரமணியன் சாமி நினைச்சுகிட்டு தூங்குவாரோன்னு தெரியல. மாட்டுனது திக்விஜய் சிங்க். சிங்கை ஜன்பத்தின் ஊதுகுழல் என்று ஒரு காய்ச்சு 

நானே இந்த திக்விஜய் சிங்க் என்கிற காங்கிரஸ் சிங்குச்சாவை எங்கேயாவது ஒரு பிடி பிடிக்கனுமின்னு பார்த்தேன்.அதற்குள் சுப்ரமணியன் சாமியே முந்திக்கொண்டார்.ஹசாரேவும்,ராம் தேவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தா முந்தைய முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் வாய்ஸ் கொடுக்குற மாதிரி காங்கிரஸ்க்கு ஊதுகுழல் திக்விஜய் சிங்க்.நல்லதுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை,நீ ஏன் ஊழலுக்க்கு எதிராக குரல் கொடுக்கிறாய் என்று திக்விஜய் சிங் அறிக்கை விட்டா இந்தாளை என்ன செய்யலாம்?கரிச்சுக்கொட்டுறதத் தவிர வேறு வழியில்லை.

சரி காங்கிரஸ்தான் இந்த லட்சணத்துல இருக்குதுன்னு பார்த்தா பி.ஜே.பி சொல்லவே வேண்டாம்.தற்போது 2G.4G,ஆதர்ஸ்,காமன்வெல்த் ஊழல்....இதற்கு செயல்படாத பிரதமராக மன்மோகன் சிங்க்,ஊழலுக்கு எதிரான ஹசாரே,ராம் தேவ் குரல்கள்....எவ்வளவு அருமையான சந்தர்ப்பங்கள்.உருப்படியா ஏதாவது மக்களிடம் போய்ச் சேருகிற மாதிரி ஏதாவது செய்ததா என்றால் இல்லை.பல பத்திரிகைகளும்,சில தொலைக்காட்சி ஊடகங்களே இதுவரையிலும் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய பணியை செய்திருக்கின்றன.

உள்நாட்டுப் பிரச்சினைகளை பின் தள்ளி நாம் சீனாவுடன் தெற்காசிய பொருளாதாரத்தில் போட்டி போட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.ஊழல், மாவோயிஸ்ட்,பாகிஸ்தான் என்ற பெரும்பிரச்சினகளிலும் சாலை, கல்வி,சுகாதாரம் என்ற அடிப்படைக் கட்டமைப்புக்களிலும் பின் தங்கி 2020ல் இந்தியா வல்லரசு என்ற வார்த்தை இப்ப 2050க்கு பின் தள்ளப்பட்டு விட்டது.எனவே காங்கிரஸ் என்ற வாரிசு அரசியல்,பி.ஜே.பி என்ற மத அடிப்படைகளைக் கடந்து இந்தியா புதிய தலைமைகளையும்,கட்சி மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்.அதனை கல்வி மேம்பாடு மட்டுமே செயல்படுத்தும்.

அரசியல் பதிவு போடக்கூடாதுன்னு பார்த்தாலும் இந்த மாதிரி செய்திகள் ஏதாவது கண்ணுல பட்டா .நான் என்ன செய்வேன்:) 

22 comments:

ஜோதிஜி said...

அடேங்கப்பா புதுச்சட்டையா?

ஜம்ன்னு உள்ளே வரமுடியுது?

யார் அந்த புண்ணியவான்?

ஜோதிஜி said...

நாம் சாகுற வரைக்கும் இந்த துர்பாக்கியம் நடந்துடக்கூடாதுன்னு ஆண்டவப் பெருமாளை வேண்டிக்கொள்வோம்.

வாய்பே இல்லை. வேறு ஒன்றுக்குத்தான் இந்தாளுக்கு வாய்ப்பு இருக்கும்

A.R.ராஜகோபாலன் said...

நிகழும் அரசியல்
நிகழ்வுகளை
நிதர்சனமாய் எழுத்துக்களால்
நிறுத்திய விதம் அருமை
நிகரில்லா பதிவு

rajamelaiyur said...

Super political post . .

செங்கோவி said...

கடையை ஈஸியாத் திறக்க முடியுது பாஸ்...வழக்கத்திற்கு மாறாக பதிவில் காமெடி தூக்கலா இருக்கே!

ஹேமா said...

எதுவும் சொல்லத் தெரியாட்டி ஓட்டாவது போட்டிட்டுப் போய்டுவேன்.எதையும் காணேல்ல!

ராஜ நடராஜன் said...

//அடேங்கப்பா புதுச்சட்டையா?

ஜம்ன்னு உள்ளே வரமுடியுது?

யார் அந்த புண்ணியவான்?//

ஜோதிஜி!இது ஒன்றும் கம்ப சூத்திரமல்ல.எல்லாமே புதுச்சட்டை ரெடிமேடா Design கூகிள் பிளாக்கரே தருகிறார்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!இரண்டாவது பின்னூட்டம் ராகுலுக்குப் போட்டுட்டீங்களாக்கும்:)

நீங்க சொல்ற மாதிரியில்ல.இப்பவே காங்கிரஸ் கொம்பு சீவிட்டுத்தான் இருக்குறாங்க.திக்விஜய் சிங்க் ராகுல் பிரதமர் பதவிக்கு ரெடியாகிட்டாருன்னு குரல் விடுறதும் கூட்ட வெள்ளோட்டம் பார்க்கத்தான்.

பி.ஜே.பியின் உள்சண்டைகள் இருக்கும் வரை காங்கிரஸ் காட்டுல மழைதான்.

இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் கூடாதென்ற விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்.

ராஜ நடராஜன் said...

//நிகழும் அரசியல்
நிகழ்வுகளை
நிதர்சனமாய் எழுத்துக்களால்
நிறுத்திய விதம் அருமை
நிகரில்லா பதிவு//

ARR!பதிவுல சுத்துறவங்களுக்குத் தெரியுது நம்முடைய புலம்பல்.மொத்த இந்தியாவுக்குமில்ல காதுக்குள்ள விழனும்.

ராஜ நடராஜன் said...

//Super political post . .//

இன்னைக்கு உங்க கடைக்கு வந்தேனே!
நல்ல பின்னூட்டங்களாப் போடுறீங்க,அப்புறம் ஏன் என் வழி குறுக்கு வழின்னு கூவுறீங்க:)

ராஜ நடராஜன் said...

//எதுவும் சொல்லத் தெரியாட்டி ஓட்டாவது போட்டிட்டுப் போய்டுவேன்.எதையும் காணேல்ல!//

ஹேமா!கடை வெள்ளையடிச்சுகிட்டிருக்கேன்:)ஒட்ட வச்சுடுறேன்.

நட்சத்திரப்பதிவு அடுத்து என்ன புதுசு?

ராஜ நடராஜன் said...

//கடையை ஈஸியாத் திறக்க முடியுது பாஸ்...வழக்கத்திற்கு மாறாக பதிவில் காமெடி தூக்கலா இருக்கே!//

பாஸ்!தகவலுக்கு ரொம்ப நன்றி.நம்ம ரிலாக்ஸாத்தான் இருக்க விரும்பறோம்.ஊர் உலகத்துல நம்மளையெல்லாம் மேய்க்கிற பசங்க டென்சன் படுத்தி விட்டுடறாங்க.என்ன செய்றது:)

நிரூபன் said...

டெம்பிளேட் இப்போ சூப்பர் பாஸ்,
கடையினை இலகுவாகவும்,
வேகமாகவும் திறக்க முடிகிறது.

நீங்கள் தமிழ் மணம் இணைத்த பின்னர் தான் மீதிக் கருத்துக்களைப் பகிர முடியும்.

நிரூபன் said...

காங்கிரசிற்கு மாற்றீடாக வேறு கட்சியொன்று அரசியல் கட்சியொன்று வந்தால் தான் ஈழத் தமிழர் விவகாரத்திலும் கடைக்கண் பார்வை கிடைக்கும் என நினைக்கிறேன்.

ஆகவே ராகுல் காந்தி பிரதமராகும் விடயம்.....வேண்டவே வேண்டாம்.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

டெம்பிளேட் இப்போ சூப்பர் பாஸ்,
கடையினை இலகுவாகவும்,
வேகமாகவும் திறக்க முடிகிறது.

நீங்கள் தமிழ் மணம் இணைத்த பின்னர் தான் மீதிக் கருத்துக்களைப் பகிர முடியும்.//

சகோ!கருத்துக்கு நன்றி.மூன்று கடல் தாண்டியும் வேகமா திறக்குதுன்னா மகிழ்ச்சிதான்:)முன்பு வில்லங்கமே தமிழ் மணம் நிரலி இணைப்பதில்தான் போல இருக்குது.மறுபடியும் நிரலியை புதுப்பித்துள்ளேன்.ஓட்டுப்பட்டையெல்லாம் இப்ப தமிழ்மணம் உதவிப்பக்கத்துல காணமப் போயிட்டுது.பழையதுலருந்து தேடி ஒட்ட வைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//காங்கிரசிற்கு மாற்றீடாக வேறு கட்சியொன்று அரசியல் கட்சியொன்று வந்தால் தான் ஈழத் தமிழர் விவகாரத்திலும் கடைக்கண் பார்வை கிடைக்கும் என நினைக்கிறேன்.

ஆகவே ராகுல் காந்தி பிரதமராகும் விடயம்.....வேண்டவே வேண்டாம்.//

காங்கிரஸ் தமிழ் விரோதக் கட்சி.இதற்கு முக்கிய காரணம் பிரணாப் என்ற குள்ளனும் ,மேனன்,நாரயணன் என்ற கள்ளன்களும்.

பி.ஜே.பி மதப்பிரிவினைக்கட்சியென்ற பிம்பம்.பாராளுமன்றத் தேர்தல் காலத்திலேயே வெங்கய்யா நாயுடு இலங்கை குறித்த பி.ஜே.பியின் நிலையை சொல்லி விட்டார்.
கம்யூனிஸ்ட்டுகள் சீன,ரஷ்ய சார்பாளர்கள்.மேலும் தற்போதைய நிலையில் தேய்பிறையில் உள்ளார்கள்.

எனவே மத்திய அரசில் யார் இருந்தாலும் தமிழகத்தின் எம்.பிக்களின் கூட்டுக்கணக்கும்,அரசு சார்ந்த நிலையுமே இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க உதவும்.அதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பம் கருணாநிதியின் ஆட்சிக்கு கிடைத்தது.வாழ்க்கை மொத்த அனுபவம் இருந்தும் பணம்,சுயநலம்,இன்னும் நமக்குத் தெரியாத காரணங்கள் அனைத்தும் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போகவே செய்தது.

பதவியில்லாத மனிதனை இன்னும் விமர்சிக்க வேண்டுமா என்று நினைத்தாலும் கடந்த காலத்தின் மாறா வடுக்கள் தி.மு.க என்ற மையப்புள்ளியிலே முடிகிறது.

ராகுலின் எதிர்கால ஈழ நிலைப்பாடு என்னவென்று இப்போதைக்கு கூற முடியாது.ஆனால் வாரிசு அரசியலுக்கு எதிராக இப்பொழுதே எதிர்க்கலாம்.

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட புதுசு வேகமாய் திறக்கிறது.

2050 யாவது இந்தியா வல்லரசு ஆயிடுமா ....

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

புது டெம்ப்ளேட், அழகா இருக்கு! நானும் உங்கட பழைய டெம்ப்ளேட் பார்த்து, பார்த்து போர் அடிச்சிருச்சுன்னு சொல்லுவோம்னு நினைப்பேன் ஆனா அப்படி சொல்லுறது ரூடுன்னு விட்டர்றது. எப்படியோ மாத்திபுட்டிய நல்லது... நல்லது.

ராவூலு பத்தி, யோவ் அந்தாளு எம்பூட்டு செவப்ப அழவா இருக்காப்ளே நமக்கெல்லாம் பெருமைதானே கொண்டு போயி யூ. என் ல உட்கார வைச்சா டி. வி யில பார்த்து ரசிக்க. ஒருத்தன் செவப்பா மொழு மொழுன்னு இருக்கப்பிடாதே உங்களுக்கெல்லாம் பொற்ற்ற்றாமை :)))

கருமம், கருமம்... எப்போதான் நம்மை எல்லாம் பிடிச்ச பீடைச் சனியன்கள் எல்லாம் ஒழியப்போவுதோ! :((

Unknown said...

நல்ல கட்டுரை சுருங்கச் சொல்லி
விளங்க வைத்தீர் நன்றி

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்

ராஜ நடராஜன் said...

//தவறு said...

ராஜநட புதுசு வேகமாய் திறக்கிறது.

2050 யாவது இந்தியா வல்லரசு ஆயிடுமா ....//

அப்படி போடுங்க கேள்விய!

அவன் - இவன் கதை வசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் தோற்றார் போங்க!

வசனம்:இரண்டாவது காந்தி மண்டேலாவா?மகிந்த ராஜபக்சேவா?

ராஜ நடராஜன் said...

தெகா!ஊமக்குசும்பு செய்றீங்களே:)

மூக்குல மொணங்குற பிரணாப் முகர்ஜியே ஹில்லாரிகிட்ட பேசும் போது,வேற நாட்டு அறிக்கையைப் படிக்கும் கிருஷ்ணாவே நமக்கு வாய்ச்சிருக்கும் போது ராகுல் யு.என்ல பேசறது ரொம்ப அதிக கனவாத் தெரியல் உங்களுக்கு:)

கடைக்கு வெள்ளையடிக்கிறது பத்தி முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல.எப்படியோ இப்பவாவது கமெண்டினீங்களே.நன்றி.

ராஜ நடராஜன் said...

//நல்ல கட்டுரை சுருங்கச் சொல்லி
விளங்க வைத்தீர் நன்றி

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்//

அய்யா!உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

நமக்கு கவிதை எழுதத் தெரியாட்டியும் ரசிக்கிறது பிடிச்ச விசயம்.உங்கள் கவிதைகளில் எதுகை மோனைகள் சிறப்பாக இருக்கின்றன.

தொடருங்கள்.இனியும் வருவோம்.