Followers

Wednesday, January 18, 2012

மதமென்ற முக்காடு!

சின்னப்பையனாக இருக்கும்போது ஒருத்தன் சினிமா பார்த்துவிட்டோ அல்லது அம்புலிமாமா கதை படித்து விட்டோ சொல்லும் கதைக்கு ரவுண்டு கட்டி உட்கார்ந்துகிட்டு ஐந்தாறு பேர் வாய்பிளந்து கதைகேட்குற நினைவுல பதிவிலும் சினிமாக்கதை சொல்லி பார்க்கலாமேயென்று பார்த்தால் அண்ணாத்த விடமாட்டாங்க போல இருக்குதே!இரண்டு படத்துக்குத்தான் கதை சொன்னேன்.அதுக்குள்ள இன்டர்வெல் விடப்பான்னா என்ன நியாயம்?
 
நாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்வோம் என்று நினைத்தால் சிலர் முட்டிப் பார்த்திடுவோம் வாருங்கள் என்றே பதிவிடுகிறார்கள்.இதைக்கண்ட சிலருக்கு திட்டவும் கூடாது, கொட்டவும் செய்யனும் என்கிற சூத்திரம் தெரிவதுமில்லை. இதனால் எதிர் வாதம் கூட பலவீனப்பட்டுப் போகிறது.
 
குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று  பெண்கள் திட்டுவது போல் மதம் என்ற சொல்லில் அப்படி என்னதான் இருக்குதோன்னு தெரியவில்லை.பொது விமர்சனம் செய்வதில் தவறில்லை.ஆனால் மதம் என்ற முகமூடி போட்டுக்கொண்டு மட்டுமே விமர்சிப்பேன் என்பது சரியாகப் படவில்லை.ஒரு சமூகத்தின் அவலத்தையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தும் போது சில ஒப்பீடுகளையும் செய்து பார்க்க மறந்துவிடுகிறீர்கள்.வடிவேலு ஜோக்கு மாதிரி உனக்கு வந்தா ரத்தம்!எனக்கு வந்தா தக்காளி ரசம்ங்கிற மாதிரி இருக்கிறது உங்கள் பொது உலக மத வாதங்கள்.

விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சிக்கும் அதே வேளையில் அவர்களின் போராட்டம் எதற்காக என்ற ஆழ்ந்த சிந்தனையில்லாமல் கஜனிக்கு வந்த குறைந்த நேர மறதி சிண்ட்ரோம் எதற்காக?புலி படுத்தால் எலியும் ஏறி விளையாடும் என்பது ஏட்டு எலிகளின் எழுத்துக்களிலேயே பிரதிபலிக்கிறது. இன்று புலிகளின் எதிர்ப்பு சக்தியில்லை.இலங்கை அரசு மக்களுக்கு தீர்வுகளைக் கொண்டு வந்து விட்டதா?அதற்கான குரல் கொடுக்கும் மானிடம் உங்களிடமில்லையென்பது அறிந்ததே.ஆனால் குறைந்தபட்சம் மௌனம் கொள்ளலாமே!மாறாக காய்ந்த புண்ணைக் கீறிப்பார்க்கும் சுகம் கொண்டு உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேன்டுமென்ற குரூர மனப்பான்மை எழுத்துக்களில் தலைவிரித்தாடுகின்றன.

விடுதலைப்புலிகள் இலங்கையில் வாழும் சிலரை அந்நியப்படுத்தியதில் மொத்த மதக்கோபம் கொள்ளும் பதிவுலக பத்தி!ஜீவிகள் காஷ்மீரிகளையும்  மதம் என்ற பெயரால் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை. விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் நீங்கள் பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தை மதமென்ற பெயரில் ஆதரிக்கும் தகுதிகள் இழந்து விடுகிறீர்கள். இஸ்ரேலியர்கள் மேல் உள்ள கோபத்தில் ஈரான் ஜனாதிபதி ஹொலகாஸ்ட் என்ற ஒன்று நிகழவேயில்லையென்ற வாதத்திற்கு ஆதரவு தருபவர்கள் இலங்கையில் இனப்படுகொலை நிகழவேயில்லையென்ற ராஜபக்சே சகோதரர்களின் வாதத்திற்கு துணை போகிறீர்கள் என்று அர்த்தம்.

ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும்.மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும். இதையெல்லாம் விட சமூக கலந்துரையாடலில் மதம் பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள் பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம்.நாளை பொழுதொரு தினம் ஒருவேளை சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும்.அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தின் பொதுவுடமை சொத்தல்ல. 

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தகர்ந்ததில் மகிழ்ந்த தலிபானிசத்தனத்தை கைவிடுங்கள். இரட்டைக்கோபுரம் இடிந்தது கூட இஸ்ரேலின் சதியென்ற  கான்ஸ்பைரசி தியரிக்கு ஆமாம் போடுவதெல்லாம் மதம் என்ற ஒற்றை நோக்கால் மட்டுமே.பழனிபாபாவைக் கூட ஒசாமாவுக்கு பக்க துணைக்கு அழைக்கிறீர்கள்.ஆனால் இருவருக்குமுள்ள வாழ்க்கையின் இரு பக்கங்களை பதிவு செய்ய தவறி விடுகிறீர்கள்.தேவையெல்லாம் மதம் என்ற தட்டைப்பார்வை மட்டுமே.திருமறை,திருக்குறள் நெட்டுரு செய்யும் தனி மனிதன் மீதோ கணீர் குரலில் பாடும் நாகூர் ஹனிபா,திருவாசகம் இசைக்கும் இளையராஜா, தேவாலயப் பாடல்  மீதோ யாராவது விமர்சனம் செய்கிறார்களா? இல்லை...ஏனென்றால் அவை ஆன்மீகம் நோக்கிய அசரிரீக் குரல்கள். 

உங்கள் மீதுமட்டும் கோபத்தின் வெறுப்பு மேகம் மெல்லப்படர்வதை உணர்ந்தும் உணராமல் இருக்கிறீர்கள்.காரணம் மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை.பெத்தடின் என்ன செய்யுமென்பதை கண்ணதாசன் இருந்திருந்தால் கடிதம் போட்டாவது உங்களுக்கு ஒரு கவிதை பாடச்சொல்லி அழைத்திருக்கலாம்.மதமென்ற தாகம் உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். அதற்காக பதிவுகளை வேடிக்கை பார்த்துகிட்டிருப்பவர்களையும் அழைப்பிதழை பொதுவில் ஏன் வைக்கிறீர்கள்?மேற்கத்திய நாட்டவனைப் பிடிக்காது, இஸ்ரேலியனைப் பிடிக்காது,இலங்கைத் தமிழனையும் பிடிக்காது.நீங்கள் பிடிக்க நினைக்கும் மீன்கள் எல்லாம் மதம் என்ற வலைக்குள் மட்டும்தான்.வலையில் மாட்டுவதோ கிணற்றுத் தவளைகள் மட்டுமே.

உங்கள் கோபங்களை மொத்தமாக இன்னொருவருக்கும் பாரமாக சுமத்துகிறீர்கள்.இனியும் உங்கள் எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் அல்ல! நிழல் யுத்தம் செய்யாதீர்கள்.வருங்காலம் வரலாற்றை எப்படி எழுதுமென்று இப்பொழுதே தீர்மானிக்க முடியாது.அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்?

இவ்வுலகு ரசனை பகிருங்கள்.அவ்வுலக தித்திப்பு உங்களுக்கே உரித்தாகுக.

டிஸ்கி!நான் தனிமனித தாக்குதலுக்கு சொந்தக்காரன் அல்ல.இந்தப் பதிவு முன்பு கோப பின்னூட்ட விவாதங்கள் செய்து களைத்துப்போன இரு தரப்பு நண்பர்கள் சார்ந்தோ எதிரானதோ அல்ல.பதிவின் பின்ணணி போரின் அவலத்தில் இருக்கும் மனிதர்களைக் கொச்சைப்படுத்துவதை இனியும் தவிர்க்கவே.பொது மானுடம் கற்போம்.

139 comments:

ஹேமா said...

நடா... நீங்களுமா!என்ன எழுதியிருக்கிறீங்கன்னு தெரில.நிச்சயம் கும்மியடிப்பாங்க.வந்து வாசிக்கிறேன் !

என்ன...நிறைய லீவு குடுத்திருக்கிறாங்களாகும் !

சார்வாகன் said...

அருமை சகோ
மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டி தீர்த்து இருக்கிறீர்கள்.
நன்றி

ஓசூர் ராஜன் said...

பழனிபாபாவைக் கூட ஒசாமாவுக்கு பக்க துணைக்கு அழைக்கிறீர்கள்.ஆனால் இருவருக்குமுள்ள வாழ்க்கையின் இரு பக்கங்களை பதிவு செய்ய தவறி விடுகிறீர்கள்.அருமை சகோ, நன்றி!

vasu balaji said...

very good one rajanna:)

காட்டான் said...

நன்றி நாடா..!!
சில செய்திகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது.. நானும் பின்னர் வந்து பார்க்கிறேன்..!

Anonymous said...

நாலு ஈழ தமிழர்கள் தங்கள் மதத்தை கேள்விக்கு உட்ப்படுத்துகிறார்களே என்பதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை போராட்ட தியாகங்களை கொச்சை படுத்தினார்கள் பாருங்கள்.. இது தான் மனிதர்களுக்கும், மதம் கொண்ட மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடு!

Amudhavan said...

மதமுக்காடு போட்டுக்கொண்டு ஒரு இனத்தின் தியாக இளைஞர்களையே கொச்சைப்படுத்தும் நபர்களை கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிக்காமல் இருக்கும் பதிவுலகிற்கு சுட்டிக்காட்டும் பணியினை மிகச்சரியான முறையில் செய்திருக்கிறீர்கள். இப்போது மதமுக்காடு இல்லாமல் 'ஆதரவு போன்ற'முக்காடு ஒன்றை அணிந்துகொண்டு பதிவுலகில் விஷ ஊசிகளுடன் சிலர் களமிறங்கியிருக்கிறார்களே அவர்களை அடையாளம் காண முடிகிறதா உங்களால்?

குறும்பன் said...

மதம் என்ற சொல் இடுகையில் இருந்தால் டிஸ்கி போட்டே ஆக வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சே :(. நன்றாக சொல்லி உள்ளீர்கள் மதம் பிடித்தவர்களின் 'மதம்' நீங்குமா?

Riyas said...

//உங்கள் எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் அல்ல!//

உண்மை,ஏற்றுக்கொள்கிறேன்..

இஸ்லாத்தை கேவலப்படுத்திய பதிவுகளுக்குப்போய்..

"உங்கள் எதிரிகள் முழு இஸ்லாமியர்களும் அல்ல" என்று அங்கே பதிந்திருப்பின் உங்கள் நடுநிலைமை கண்டு வியந்திருப்பேன்..

நான் ஒன்றும் விடுதலைப்போராட்டத்துக்கு எதிரானவனோ,ஈழத்தமிழர்களுக்கு எதிரானவனோ அல்ல.. அவர்களில் எனக்கும் நிறைய நண்பர்கள் உண்டு..
இங்கே பின்னூட்டமிட்டிருக்கும் ஹேமா அக்கா,காட்டான் அண்னே போன்றோரும் நான் நேசிப்பவர்களே..

இங்கே பிரச்சினை இஸ்லாமியர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் அல்ல.. இஸ்லாத்தை தாக்கும் பதிவர்கள்,ஈழத்தமிழர்களை தாக்கும் பதிவர்கள் என இரு சாராரும்தான் பிரச்சினையின் வழிகாட்டிகள். இங்கே ஒருவரை மட்டும் நிறுத்தச்சொல்லிவிட்டு மற்றவர் தாக்கிக்கொண்டேயிருந்தால் பிரச்சினை தொடரத்தான் செய்யும்.. இந்த பிரச்சினை எங்கே ஆரம்பித்தது என்று நோக்கினாலே யார் இவற்றுக்கெல்லாம் காரணம் என நன்றாக புரியும்..

A.R.ராஜகோபாலன் said...

””.பொது விமர்சனம் செய்வதில் தவறில்லை.ஆனால் மதம் என்ற முகமூடி போட்டுக்கொண்டு மட்டுமே விமர்சிப்பேன் என்பது சரியாகப் படவில்லை.ஒரு சமூகத்தின் அவலத்தையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தும் போது சில ஒப்பீடுகளையும் செய்து பார்க்க மறந்துவிடுகிறீர்கள்.”””

அருமையான வரிகள்,எல்லோரும் பின் பற்றவேண்டிய விதிகள்

A.R.ராஜகோபாலன் said...

”””இதையெல்லாம் விட சமூக கலந்துரையாடலில் மதம் பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள் பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம்.நாளை பொழுதொரு தினம் ஒருவேளை சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும்.அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தின் பொதுவுடமை சொத்தல்ல. ”””


மதம் பேசி மனிதத்தை வதம் செய்யும்
வலிமையற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய வாக்கியம் இது.

கோவி.கண்ணன் said...

//ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும்.மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும்.//

நான் ஒருவேளை அவ்வித நிலைப்பாடு கொண்டிருந்தால் இதைப் படிக்கும் போது என்னை யாரோ
செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும்.

கோவி.கண்ணன் said...

13- (நெகட்டிவ்) வாக்கு கிடைக்கும், அத்தனையும் ஒரே ஆளோ ஒரு குழுவோ பல்வேறு பெயர்களில் அங்கிருந்து வருபவை தான், டிஸ்கி போட்டுவிடுங்கள், இந்த பதிவின் நெகட்டிவ் வாக்கு பாஸிட்டிவ் என்றே கொள்ளப்படும் என்று.

கோவி.கண்ணன் said...

//மேற்கத்திய நாட்டவனைப் பிடிக்காது, இஸ்ரேலியனைப் பிடிக்காது,இலங்கைத் தமிழனையும் பிடிக்காது.நீங்கள் பிடிக்க நினைக்கும் மீன்கள் எல்லாம் மதம் என்ற வலைக்குள் மட்டும்தான்.வலையில் மாட்டுவதோ கிணற்றுத் தவளைகள் மட்டுமே.//

கண்டிப்பாக, இல்லாட்டி வெறும் பழைய துணி மட்டுமே சிக்கும்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ராஜ நடராஜன்,

//குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று பெண்கள் திட்டுவது போல்//

//தட்டைப்பார்வை//

//மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை.//

மேற்கண்ட உவமானங்கள் சொல்லும் மேட்டர் ரொம்ப சிம்பிள்.

என் முகத்தில் வழியும் தக்காளிசாரை துடைப்பார் எவருமில்லை..!

அடுத்தவர் முகத்தில் வழியும் ரத்தத்தை நான் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறேன்..!

இங்கே, நியாயம் பேசி மறுத்தால்...
மதமென்ற முக்காடு அணிவிக்கப்படுகின்றேன்,
நயமான நடுநிலை முக்காடு போர்த்தியவர்களால்..!

சார்வாகன் said...

சகோ
முக்கியமான் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.இந்த பரிணாம் எதிர்ப்பு என்பது கூட மதப் போர்வையிலேயே செய்யப் படுகிறது.விமர்சனம் செய்யக் கூடாது என்பதல்ல மதத்தின் குறிப்பிட்ட விள்க்கம் இதனை மறுக்கிறது என்பதாலேயே எதிர்ப்பதுதான் சிக்கல்.

அம்மதம் சார்ந்த கற்றறிந்த வல்லுனர்கள் கூறினாலும் குரல் எடுபடுவது இல்லை.
http://www.evolutionandislam.com/home


இந்த விமர்சனங்கள் அனைத்திற்குமே அறிஞர்களிடம் பதில் உண்டு என்பதும்,பெரும்பானமையான பல்கலை கழகங்களில் பாடமாக கற்பிக்கப் படுகிறது. அப்படி பரிணாமம் தவறு என்று நிரூபித்தால் நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறினால் இதுவும் ஒரு __________ கான்ஸ்பைரேசி என்பார்கள். எங்கே போய் நிற்குமோ!!!!!!!!!!!!!!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//என் முகத்தில் வழியும் தக்காளிசாரை துடைப்பார் எவருமில்லை..!//

அதனால்...

நானே வலியை பொறுத்துக்கொண்டு துடைக்க முற்பட்டாலுங்கூட அதற்கும் பலர் அனுமதிப்பதில்லை...

இந்நிலையில் சிலர் வருகின்றனர்...
அது ரத்தம்தான் என்று அறிந்து..!

என் காயத்துக்கு மருந்திட்டு கட்டு போட்டு விட..!

ஆனால், பாவம் அவர் படும் பாடு..!

இக்காரணத்துக்காகவே சிலசமயம் இவர்கள் கொலையும் செய்யப்படுகின்றனர்..!

துளசி கோபால் said...

மதம் ஏதாயிலும் சரி. மனிதன் நன்னாயால் மதி!

ஸ்ரீ நாராயணகுரு சொல்லி வச்சுட்டுப் போயிருக்கார்.

சார்வாகன் said...

என் முகத்தில் வழியும் தக்காளிசாரை துடைப்பார் எவருமில்லை..!

அடுத்தவர் முகத்தில் வழியும் ரத்தத்தை நான் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறேன்..!//
ச‌கோ ஆஸிக்
'என் முக‌ம்" என்று எத‌னை குறிப்பிடுகிறீர்க‌ள்?
த‌மிழ‌நாட்டில் வாழும் த‌மிழ‌ன் என்ப‌துதான் என‌க்கும் உங்க‌ளுக்குமான் பொது முக‌ம் என நான் நினைக்கிறேன்.த‌மிழ்நாட்டில் யார் முக‌த்திலும் நிஜ‌ த‌க்காளி சாறு கூட‌ வ‌ழிவ‌தாக தெரிய‌வில்லை.இதில் மாற்றுக் க‌ருத்து இருப்பின் தெரிய‌ப் ப‌டுத்த‌லாம்.
**************

இல‌ங்கை நில‌வ‌ர‌ம் வேறு.ப‌ல இன முர‌ண்க‌ளில் த‌மிழ் இன‌த்திலும் ம‌த‌ரீதியான் வேறுபாடு வ‌ந்தது உண்மை. அதில் இஸ்லாமிய‌ த‌மிழ‌ர்க‌ளும்
பாதிக்கப் பட்டனர். அதற்கு காரணமாக் கூறப்படும் வி.பு அமைப்பு இல்லாத சூழலில்,இலங்கை அரசு இப்பிரச்சினைக்கு ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்யாத சூழலில் யாரை எதிர்த்து குரல் எழ வேண்டும்?.

கோவி.கண்ணன் said...

//த‌மிழ‌நாட்டில் வாழும் த‌மிழ‌ன் என்ப‌துதான் என‌க்கும் உங்க‌ளுக்குமான் பொது முக‌ம் என நான் நினைக்கிறேன்.//

தாடி வைத்துக் கொண்டால், மீசை மழித்துக் கொண்டால், திருநீறு பூசிக் கொண்டால் திருமுகமாகி இன அடையாளம் மாறாதா ?

:)

Riyas said...

// கோவி.கண்ணன் said...
//ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும்.மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும்.//

நான் ஒருவேளை அவ்வித நிலைப்பாடு கொண்டிருந்தால் இதைப் படிக்கும் போது என்னை யாரோ
செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும்.//

ஈராக்கில்,ஆப்கானிஸ்தானில்,பலஸ்தீனில் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டபோது உங்கள் எல்லோரின் சமூகப்பார்வை என்னவானதென்று தெரியவில்லை.. அவ்வாறான நிகழ்வுகளின் போது நீங்களும் ஒன்னும் செய்யமாட்டிங்க, செய்றவனையும் வாய்மூடி இருக்க சொல்கிறீர்களா..?

ஈழப்போராட்டத்தின் வலிகளினாலும் வேதனைகளினாலும் ஈழத்தமிழனுக்கு வரும் கோபங்கள் நியாயமானதுதான்.. அங்கே நீங்கள் போய் நீங்க மட்டுமா யுத்தத்தில் சாகிறீங்க உலகத்துல நிறைய நாட்டுல இப்படி சாகிறாங்க So,Take it eazy அப்பிடின்னு உங்களால் சொல்ல முடியுமா?

இங்கே உலகம் சுயநலமானதுதான்.. ஒரு இனத்தின் அழிவைக்கண்டு அவ்வினம் கொதிப்படைவதில் எந்த தவறும் இல்லை..

கோவி.கண்ணன் said...

//ஈராக்கில்,ஆப்கானிஸ்தானில்,பலஸ்தீனில் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டபோது உங்கள் எல்லோரின் சமூகப்பார்வை என்னவானதென்று தெரியவில்லை.. //

தெரியவில்லை என்றால் 'எனக்கு தெரியாது அதனால் தான் சொன்னேன் என்று கூறிவிட முடியமா ?'

என்னைப் பொறுத்த அளவில் மக்கள் பிணங்களில் ஒழுகும் அவர்களது இரத்தமும் ஒரே நிறமானது என்று தான் நினைக்கிறேன். மற்றவர்கள் அதில் மதத்தைத் தேடுவதால் ஆதரவு / எதிர்ப்பு நிலைப்பாடுகளாக அதனை ஆக்கிக் கொள்கிறார்கள்.

இன்னிக்கு ஈராக்கில் அமெரிக்காரன் விலகிய பிறகு அன்றாடம் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதும் அதில் கொல்லப்படுவதும் யார் ? இதைத் தடுப்பதற்கான முயற்சி என்ன ?

இதற்கெல்லாம் எம்போன்றவர்கள் கவலைப்படுகின்றனர், அங்கே குண்டு வைப்பவனும் மனிதன் கொல்லப்படுபவனும் மனிதன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் தான்

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

நடா... நீங்களுமா!என்ன எழுதியிருக்கிறீங்கன்னு தெரில.நிச்சயம் கும்மியடிப்பாங்க.வந்து வாசிக்கிறேன் !

என்ன...நிறைய லீவு குடுத்திருக்கிறாங்களாகும் !//

ஹேமா!நேற்று விக்கிபீடியாவுக்கும்,கூகிளுக்கும் ஆதரவாகவும் சோபா,நாற்காலி மாதிரி பேச்சுரிமைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராகவும் மௌன விரதம்:)மேலும் பின்னூட்டக் கருத்துக்களையும் பார்த்து விட்டு கருத்துக்கள் சொல்லலாமே என்று இப்ப பின்னூட்டம் தொடர்கிறேன்.

நிறைய லீவா!இங்கே வெள்ளி,சனி என்று இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்குது.கூடவே அலுவல் அதிகார பூர்வமா முகநூல்,ட்விட்டரையெல்லாம் மேய வேண்டிய கட்டாயம்:)எனவே பணியும் லீவு மாதிரிதான்.

தருமி said...

காட்டான் மிகச் சரியாகச் சொல்லியுள்ளார். நன்றி.

//இஸ்லாத்தை தாக்கும் பதிவர்கள்,// - யாருங்க அவர்களெல்லாம்? மதங்களில் உள்ள, மத நம்பிக்கைகளில் உள்ள எனக்குக் தெரிந்த தவறுகளை நான் சுட்டுவதுண்டு. மதங்களைப் பதிவர்கள் எப்படி தாக்க முடியும்? நம் கைகளில் இருப்பது பேனாதான்; பீரங்கியுமல்ல, கடப்பாரையுமல்ல.

Unknown said...

நடராஜன் சார், ரொம்பவே நொந்திட்டீங்க போலீருக்கு
பதிவில் தெரியும் உங்கள் ஆதங்கம் நன்றாகவே எங்களுக்கு புரிகிறது
ஆனால் புரிய வேண்டியவங்களுக்கு புரியாதே சார்

ராஜ நடராஜன் said...

//சார்வாகன் said...

அருமை சகோ
மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டி தீர்த்து இருக்கிறீர்கள்.
நன்றி//

சகோ!நமக்கு பிடித்தது போக சில சமயம் நம்மை பாதிப்பவையையும் பதிவு செய்ய வேண்டியிருக்குது.இந்தப் பதிவில் எத்தனை பேர் சார்பு கருத்து கொண்டவர்கள்,கோப நிலை கொண்டவர்கள் என்று தெரியாது.ஆனால் நிறைய பேர் பதிவைப் பார்வையிட்டுள்ளார்கள்.பதிவின் சாரம் சிலருக்கு உடன்பாடாக இருக்கலாம்.இன்னும் சிலருக்கு மறுக்க வேண்டுமென்று கூடத் தோன்றலாம்.ஆனால் மௌனப்பார்வையாளர்களே அதிகம்.

முன்பு தனிமனிதர்களுக்கான சூடான விவாதங்களாய் இருந்தவை இப்பொழுது தமிழர்கள் என்ற ஒற்றைக்கோட்டிலிருந்து மதம் என்ற நிலையில் கோபத்தையும்,இன துவேசத்தையும் கொண்டு வரும் சூழல் உருவாகிறது.இதே நிலை தொடர்ந்தால் பின்பு பதிவுலகம் வருத்தப்படும் அபாய சூழல்களை நாம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.அதனை தவிர்ப்போமே என்ற எண்ணத்தில் எழுந்த கருத்துக்களே இவை.

Unknown said...

//குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று பெண்கள் திட்டுவது போல் மதம் என்ற சொல்லில் அப்படி என்னதான் இருக்குதோன்னு தெரியவில்லை//

//காரணம் மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை//

இதையும் நீங்கதான் எழுதியிருக்கிறீங்க
அப்புறம் எதுக்கு சார் உங்க நேரத்தை விரயம் செய்றீங்க

Riyas said...

@தருமி..

//மதங்களைப் பதிவர்கள் எப்படி தாக்க முடியும்? நம் கைகளில் இருப்பது பேனாதான்; பீரங்கியுமல்ல, கடப்பாரையுமல்ல//

உங்கள் கைகளில் உள்ள பேனா சிலவேளை விஷத்தை கக்கிவிடுகிறது..

//இஸ்லாத்தை தாக்கும் பதிவர்கள்,// - யாருங்க அவர்களெல்லாம்?//

இங்கே இஸ்லாத்தை தாக்கி எழுதும் பதிவர்கள் என்று வரவேண்டும்..

தருமி ஐயா!

நான் சின்னப்பையன், நீங்க பேராசிரியர் இப்படியான வசன பிழைகளெல்லாம குறை சொல்லாமல் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வோம்..

ராஜ நடராஜன் said...

//ஓசூர் ராஜன் said...

பழனிபாபாவைக் கூட ஒசாமாவுக்கு பக்க துணைக்கு அழைக்கிறீர்கள்.ஆனால் இருவருக்குமுள்ள வாழ்க்கையின் இரு பக்கங்களை பதிவு செய்ய தவறி விடுகிறீர்கள்.அருமை சகோ, நன்றி!//

வாங்க ராஜன்!நீங்க பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூரா அல்லது இன்னுமொரு ஒசூரா!பெங்களூர் ஒசூரில் நீச்சல் போட்ட கல்லூரி அனுப வங்கள் உண்டு:)

பழனிபாபாவை இவர்கள்தான் பதிவு செய்யவில்லை.நாமாவது பின்னூட்டத்தில் பதிவு செய்வோமே!

ஒசாமாவுக்கும்,பழனிபாபாவுக்கு ஒரு அடிப்படை ஒற்றுமை உண்டு.அரேபிய ஷேக்குகள் அமெரிக்கா,ஐரோப்பியா சார்ந்த வாழ்வை வாழும் போது ஒசாமாவுக்கு ஷேக்குகளுக்கான அத்தனை வசதிகள் இருந்தும் மதம் என்ற பெயரால் வழி மாறிப்போன மனிதன்.அதே போல் பழனிபாபாவின் தூரத்து சொந்தம் ஒருவர் எனக்கு பழக்கம்.அவர் கூறக் கேட்டது பழனிபாபா ஊட்டி கான்வென்ட்டில் படித்தவர்.சமூகம் சார்ந்த சிந்தனையுள்ளவர்.அதே நேரத்தில் அவரது மேடை சொற்பொழிவுகள் பலருக்கும் கோபம் ஊட்டியவை.

பதிவுலகம் பிரிவினைகள் நோக்கிய பாதையில் செல்ல வேண்டாமே.பதிவு மதம் சார்ந்த கருத்து வெளிப்பாடாக இருந்தாலும் தமிழர் என்ற பொதுவெளியில் இணைந்து செல்வோமே!

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...

very good one rajanna:)//

ஏற்கனவே ஒரு பாலண்ணா!இப்ப ராஜண்ணவா:)

ராஜ நடராஜன் said...

//காட்டான் said...

நன்றி நாடா..!!
சில செய்திகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது.. நானும் பின்னர் வந்து பார்க்கிறேன்..!//

வாங்க!நாம் வெளிப்படுத்தும் முறையில் தோற்று விடுகிறோம்.அதனால் யார் செவிடன்,யார் சங்கு என்பது கூட விவாதமே:)

ராஜ நடராஜன் said...

//கந்தசாமி. said...

நாலு ஈழ தமிழர்கள் தங்கள் மதத்தை கேள்விக்கு உட்ப்படுத்துகிறார்களே என்பதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை போராட்ட தியாகங்களை கொச்சை படுத்தினார்கள் பாருங்கள்.. இது தான் மனிதர்களுக்கும், மதம் கொண்ட மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடு!//

கந்தசாமி!நட்பு ரீதியாக மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே!ஒரு சிலரின் விசமத்தன கருத்துக்களால் பெயர்ச்சொல்லால் மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

உலகில் எதுவும் முழுமையான ஒன்று அல்ல.விடுதலைப்புலிகளின் போராட்டங்களும் அப்படியே.தவறுகள் இல்லாமல் இல்லை.ஆனால் நிகழ்ந்த தவறுகளுக்கு நிவர்த்தி என்ன என்று யாருமே சொல்வதில்லை.மாறாக விரோத உணர்வைக் கொண்டு வருவது மட்டுமே குறிக்கோள் என்பதும் அதுவும் மதம் என்ற வட்டத்துக்குள்ளேயே என்பது மட்டுமே பொதுக் கருத்தாளர்களைப் பாதிக்கிறது.

உங்கள் நண்பர் குழு அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளைப் புண்படுத்தும் விதத்தில் பதிவுகள்,பின்னூட்டமிட்டதையும் தவிர்த்திருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//Blogger Amudhavan said...

மதமுக்காடு போட்டுக்கொண்டு ஒரு இனத்தின் தியாக இளைஞர்களையே கொச்சைப்படுத்தும் நபர்களை கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிக்காமல் இருக்கும் பதிவுலகிற்கு சுட்டிக்காட்டும் பணியினை மிகச்சரியான முறையில் செய்திருக்கிறீர்கள்.//

அமுதவன் சார்!பல பரிமாணக் கருத்தையும் வெளியிடுபவர்கள் இது குறித்து மௌனம் காப்பது ஆச்சரியமான விசயம்.இது மாதிரியான காழ்ப்புணர்ச்சி பதிவர்களை எந்த திசை நோக்கி நகர்த்தும் என்ற புரிதல் இருந்தும் மௌனம் காப்பது வருத்தமே.

ஆதரவு முக்காடு எனக்குப் புரியவேயில்லை!இன்னும் வளரனுமோ:)

ராஜ நடராஜன் said...

//குறும்பன் said...

மதம் என்ற சொல் இடுகையில் இருந்தால் டிஸ்கி போட்டே ஆக வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சே :(. நன்றாக சொல்லி உள்ளீர்கள் மதம் பிடித்தவர்களின் 'மதம்' நீங்குமா?//

உங்களுக்கு ரொம்பத்தான் குறும்பு போங்க:)

டிஸ்கி போட்டதன் காரணம் ரியாஸ்,சிராஜ்,ஆசிக் முகமது போன்ற நண்பர்களும் என்னுடன் கலந்துரையாடல்கள் செய்கிறார்கள்.இன்னும் சொல்லப் போனால் பதிவுக்கு தொடர்பில்லாத, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்காத, அதே நேரத்தில் மதம் என்ற பெயர்ச் சொல்லுக்குள் மட்டுமே இருக்க வேண்டிய சமூக கட்டாயத்தில் அமைதியாக இருக்கும் பதிவுலகம் சார்ந்த நண்பர்களுக்கும் இது அவர்கள் குறித்த பதிவல்ல என்பதற்காகவே.

ராஜ நடராஜன் said...

//Riyas said...

//உங்கள் எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் அல்ல!//

உண்மை,ஏற்றுக்கொள்கிறேன்..//

ரியாஸ்!உங்கள் பின்னூட்டக் கருத்துக்கள் நீளமாக இருப்பதால் முழுவதையும் அடைப்பானுக்குள் கொண்டு வரவில்லை.காரணம் நானே வள வளன்னு நீண்ட பின்னூட்டம் போடுபவன்.கூகிளண்ணன் பின்னூட்டம் அனுமதிக்காத சந்தர்ப்பங்களை பலமுறை சந்தித்ததால்:)

இந்தப் பதிவுக்கும் பின்னூட்டத்தும் நிறைய பேர் வந்து போயிருக்கலாம்.ஆனால் கருத்துக்கள் முன் வைப்பதில்லை என்பது போலவே உங்கள் பின்னூட்டங்களை பல இடங்களில் கண்டிருக்கிறேன்.Soft approach! தமிழில் எப்படி சொல்றது? மென்மையான கருத்துக்கு சொந்தக்காரர் என்று வைத்துக்கொள்வோமே!

அவரவர் நம்பிக்கைகள் சார்ந்து நிற்பதில் தவறில்லை.ஆனால் நம்பிக்கைகளிலும் Soft,Mediocre,Extremism என்று நம்பிக்கைகள் மூன்று வகைப்படுகின்றன.Extremism என்பதற்கு மதம் தவிர உலகில் வேறு ஒன்றுமேயில்லை என்ற நிலை.இணையம் தேடினால் உங்களால் இது போன்ற தளங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.எதையும் மதக்கண் கொண்டே பார்ப்பது.ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கூட அதே கண்ணோட்டம்தான்.

மேலும் பெயர்ச்சொல் காரணமாகவோ,தனது நம்பிக்கை சார்ந்தோ இவற்றை ஆதரிப்பது தனது கடமை என்ற நிலையில் பின்னூட்டமிடுவது அவசியமென்ற தேவை Mediocre நம்பிக்கையாளர்களுக்கு உருவாகிறது.

நான் சொல்ல வருவதெல்லாம் மதம் என்பதோடு பலவற்றையும் கலந்துரையாடுங்கள்,அனைத்தையும் மதத்தை உட்படுத்திப் பார்க்காதீர்கள் என்பதே.

சவுதியில் வாழும் நண்பர் (ஆசிக் முகமதா!நினைவில்லை)சவுதி உணவுப்பொருட்கள் குறித்து பதிவிட்டிருந்தார்.நான் பின்னூட்டமிட்டதாக நினைவு.பொதுக் கருத்துக்களில் பெயர்ச்சொல் நோக்காது இணைந்து கொள்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

இனி உங்கள் பின்னுட்டம் சார்ந்த் அடுத்து....

ராஜ நடராஜன் said...

ரியாஸ்!உங்கள் பின்னூட்டத்துக்கான தொடர்ச்சியாக...

நான் யாருடைய மனதையும் புண்படுத்துவது மாதிரி இடுகைகளை முன்வைப்பதில்லை.அதே நேரத்தில் Article going below level என்று நினைத்தாலும் பின்னுட்டங்கள் செய்ய மாட்டேன்.எனவே மதவாதிகளைப் புண்படுத்துவர்களுடன் நான் கருத்துக்களை முன் வைக்காத காரணத்தால் மட்டுமே நான் அவர்களின் கருத்துக்கு ஆதரவாளன் என ஆகி விடமுடியாது.

பதிவுலகம் மதம் சார்ந்து மாறும் நிலைகளை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை.முதலில் மதம் என்ற ஒரே வட்டத்துக்குள் மட்டுமே பதிவுகள் வர ஆரம்பித்தன.பின் மதம் என்ற நிலையில் ஆதரவான பின்னூட்டங்கள் உருவாகின.இன்னொரு புறம் எந்த மதத்தையும் உட்படுத்தாத யாரையும் புண்படுத்தாத பரிணாமம் சார்ந்த பதிவுகளை தருமி ஐயா நீண்ட காலமாக பதிவிட்டு வந்தார்.கோவிக்கண்ணனும் நாத்திகம் சார்ந்த சமூக கருத்துக்களை வெளியிட்டதோடு நட்பாகவே எதிர் விவாதமும் செய்து கொண்டிருந்தார்.சமீப காலமாக பதிவர் சார்வாகன் பரிணாமம்,நாத்திகம் சார்ந்த மேற்கத்திய நாடுகளில் புத்தகங்கள்,கலந்துரையாடல்கள்,காணொளி,அவர்கள் கல்வி சார்ந்த விவாதங்கள் செய்வதையெல்லாம் பதிவிட்டுக் கொண்டு வருகிறார்.இவற்றில் உடன்பாடுடையவர்கள் உண்டு.உடன்பாடில்லாத ஆசிக் முகமதா அல்லது முகமது ஆசிக்கா!அவர் சார்ந்த கருத்துக்களை முன்வைத்த வரையிலும் கூட பதிவுலகம் பிரச்சினைக்குள் இல்லை.

பிரச்சினைகளின் ஆரம்பம் மதம் சார்ந்தவர்கள் என்ற அன்பினால்,நட்பினால் பின்னூட்டம் என்ற நிலையிலும்,சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டும் என்ற முகமன் துவங்கிய சிறு வட்டங்கள் உருவாகியது.

வவ்வால் said...

ராஜ்,

ஒரு படத்த உங்களை நிம்மதியா பார்க்க விட மாட்டேன்கிறாங்க போல :-))
ஆதங்கத்தை கொட்டி தீர்த்துட்டிங்க.
இந்த மத வியாதி என்பது தீராத சூளை நோய் போல :-))

இதுக்கு வைத்தியம் பார்க்க எந்த மருத்துவக்கல்லூரில படிக்கனும் னு யாராவது சொன்னா புண்ணியமா போகும்.

எனக்கும் புலிகளின் வன்போக்கில் உடன் பாடு இல்லை. ஆனால் அதை சுட்டிக்காட்டுகிறேன் என்று போனால் பாதிக்கப்பட்டவர்களின் மனமும் நோகும். என்பதால் சுட்டிக்காட்டுவதில்லை.ஆனால் ஒருவரைக்குற்றம் சொல்ல ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லிவிடுகிறார்கள்.

இதே போல தானே நாங்களும் என்பார்கள் ஆனால் இவர்கள் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஆதரிக்கிறார்களே.

இங்கே யாராவது யாசர் அராபத்தை விமர்சித்து இருக்கிறார்களா இல்லையே, ஆனால் ஓசாமவை விமர்சித்தாலும் தவறு என்று முன் வரும் போது எப்படி , நியாயம் இருப்பதாக சொல்ல முடியும்.

இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி எல்லா மதத்தினரும் பாலஸ்தீனத்திற்கு சாதகமான எண்ணமோ அல்லது எதிர்ப்போ காட்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஈழம் என்பதற்கு எதிரான எண்ணம் எப்படி வளர்த்துக்கொள்கிறார்கல் சிலர் என்பது எனக்கு புரியவில்லை.

இப்போது யார் மீது யார் கல்லெறிகிறார்கள் என்பதே தெரியாமல் சரமாறியாக எறிந்துக்கொண்டு இருக்கிறார்கல் என்றே தெரிகிறது.மாட்டினவனுக்கு மண்டை பிளப்பு தான் :-))

ராஜ நடராஜன் said...

ரியாஸ்!இன்னும் உங்களுக்கான மறுமொழி தீர்ந்தபாடில்லை.தொடர்கிறேன்.

பிரச்சினையில் தீக்குச்சி பத்த வைத்த தருணமாக தமிழ்மணத்தில் எந்த வித உள்நோக்கங்களும் இல்லாமல் கருத்து சொல்லும் வீச்சில்(Flow), Parodyயாக நகைச்சுவையாக சொன்ன சாந்தியும்,சாந்தியோட அக்காவும் என்ற பதத்திற்கு உரிமை கொண்டாடுவதில் உத்வேகமானது மதத்தின் தாக்கம்.வரம் கொடுத்தவன் தலையிலேயே வரத்தை பரிசோதித்த கதையாக தமிழ்மணம் முடக்குவோம் என்ற நிலைப்பாட்டில் மதவெறியின் உச்சம் வெளிப்பட்டது.

எனது நிலைப்பாட்டை விவரிக்க அந்த கட்டத்தில் சொன்ன எல்லோரும் நண்பர்களே என்ற பதிவு மட்டுமே சாட்சியாக முடியும்.நீஙகள் ஏன் மதத்தைப் புண்படுத்துவர்கள் தளத்தில் பின்னூட்டம் செய்யவில்லையென்பது பொருத்தமாக இருக்காது.

எனவே ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக பதிவுகள் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக துவங்கி தொடர்ச்சியாக கோபத்தின் வெளிப்பாடாக ஐடியா மணி மத்யஸ்தம் செய்கிறேன் பேர்வழியென உள்ளே நுழைந்து,பின் தாடி மீசையென மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்த,ஓ!இவர் இலங்கைத் தமிழரா அப்ப இன்னொரு அஸ்திரம் எடு என்று இதோ விடுதலைப்புலிகள் இலங்கை முஸ்லீம்களுக்கு செய்தது என்று பதிவிடுவதில் கூட தவறில்லை.ஆனால் பதிவின் மன குரூரம்,மத ஆக்கிரமிப்பு எண்ணங்கள் எங்கே வெளிப்படுகிறதென்றால் முந்தைய மொழியான கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்புக்கு எதிரா இப்ப இணையம் சுற்றுகிறோமே அதனால் இழியோருக்கு சென்றவிடமெல்லாம் தொடுப்பு என்று பதிவுகள் வலம் வருகின்றன.

பிரச்சினைகளை ஓரளவுக்கு எனக்குப் புரிந்த வரையில் விளக்கி விட்டேன்.நன்றி ரியாஸ்.

ராஜ நடராஜன் said...

A.R.ராஜகோபாலன்!முந்தைய பின்னுட்டம் நண்பர் ரியாஸ்க்குப் போட்டு மூச்சு முட்டுகிறது.அதனால் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள நீங்க சசிகலா-ஜெயலலிதா குறித்த பதிவுக்குப் போயிடலாம்:)

உங்கள் பெயர் எனக்கு முன்பே அறிமுகமாக இருந்தாலும் சசிகலா குறித்த பதிவைப் படித்தும் என்னால் கருத்து சொல்ல இயலவில்லை.காரணம் தங்கமலை ரகசியம் மாதிரி ஜெயலலிதா-சசிகலாவுக்கு இடையில் என்ன நிகழ்கிறதென்பது யாருக்குமே தெரியாது.பதிவுலக கருத்துக்களோ,நக்கீரன் உண்மைகளுக்கு கூட உத்தரவாதமில்லையென்பதால் நக்கீரன் புளுகு மூட்டையாக இருக்கும் என்பதாலும் குட்டையைக் கிளப்பி மீன்பிடித்து பலன் அடைபவர்கள் யாராக இருக்கும் என்ற புரிதல் இருப்பதாலும் பின்னூட்டத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டேன்.

இந்தப் பின்னூட்டத்தை அந்த பதிவின் பின்னுட்டமாக எடுத்துக்கொள்ளவும்:)

ரிலாக்ஸ் செய்ய வைத்ததற்கும்,பதிவின் கருத்துக்கான பின்னூட்டத்திற்கும் நன்றி.

suvanappiriyan said...

திரு ராஜராஜன்!

//எனவே ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக பதிவுகள் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக துவங்கி தொடர்ச்சியாக கோபத்தின் வெளிப்பாடாக ஐடியா மணி மத்யஸ்தம் செய்கிறேன் பேர்வழியென உள்ளே நுழைந்து,பின் தாடி மீசையென மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்த,ஓ!இவர் இலங்கைத் தமிழரா அப்ப இன்னொரு அஸ்திரம் எடு என்று இதோ விடுதலைப்புலிகள் இலங்கை முஸ்லீம்களுக்கு செய்தது என்று பதிவிடுவதில் கூட தவறில்லை.//

பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை சரியாகவே கணித்திருக்கிறீர்கள். மற்றபடி எல்லா இடங்களிலும் மதத்தை அதாவது பின்பற்றும் மார்க்கத்தை வெளியில் வரும் போது அதன் அடையாளங்களை கழட்டி வைத்து விட வேண்டும் என்ற பெரும்பான்மையான பதிவர்களின் முடிவோடு நான் வெறுபடுகிறேன். இஸ்லாத்தை முழமையாக கடைபிடிக்கும் ஒருவன் மற்ற மார்க்கத்தவரோடு சந்தோஷமாக வாழ முடியும். அதற்கு மார்க்கம் ஒரு தடையில்லை என்பதையும் இங்கு பதிய விருமபுகிறேன்.

ராஜ நடராஜன் said...

// ”””இதையெல்லாம் விட சமூக கலந்துரையாடலில் மதம் பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள் பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம்.நாளை பொழுதொரு தினம் ஒருவேளை சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும்.அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தின் பொதுவுடமை சொத்தல்ல. ”””


மதம் பேசி மனிதத்தை வதம் செய்யும்
வலிமையற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய வாக்கியம் இது.

January 19, 2012 6:43 AM
Delete
Blogger கோவி.கண்ணன் said...

//ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும்.மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும்.//

நான் ஒருவேளை அவ்வித நிலைப்பாடு கொண்டிருந்தால் இதைப் படிக்கும் போது என்னை யாரோ
செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும்.//

கோவி!நீங்க மிக நீண்ட ஆண்டுகளாக பதிவுகளில் கருத்தாக்கம் முன்வைத்துக்கொண்டு வருகிறீர்கள்.அப்பொழுதெல்லாம் வராத கோபக்கணைகள் இப்பொழுது வருவதிலிருந்தே பதிவுலகின் வளர்ச்சி தெரிந்திருக்குமே:)இதுல இன்னொரு விசயம் என்னன்னா நல்லா அடிச்சு ஆடிகிட்டிருந்த நிறைய பேர் செஞ்சுரி போட்டது போதுமென்றோ அல்லது அலுவல்,குடும்பம்,போரடிச்சுப் போச்சு இன்ன பிற காரணங்களால் பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்ற தியரியில் இப்போதைய நிலையென நினைக்கின்றேன்.

நீங்கள் ஒப்பீடு செய்த கழிப்பகம் தியாரிட்டக்கலாக சரியாக இருந்தாலும்,மத நம்பிக்கையாளர்களுக்கு ஒவ்வாமையென்ற காரணத்தால் உங்கள் மீதான விமர்சனங்கள் உருவாகியுள்ளன என நினைக்கின்றேன்.

நான் உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் சொன்னது போல் அவரவர் நம்பிக்கை சார்ந்த நிலையிலேயே இன்னும் விவாதம் செய்து கொண்டுள்ளோம்.இப்பொழுது மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கிக்கொள்வதில் உள்ள சிக்கலால் பதிவு சார்ந்த கருத்துக்கள் தனிமனித கோபங்களாக மாறி விடுகின்றன.

என்ன அடுத்த பின்னூட்டத்தில் மைனஸ்,பிளஸ் கணக்கெல்லாம் போடுறீங்க!நான கணக்குல ரொம்பவே வீக்கு:)

பதிவுகள் எண்ணிக்கை,ஹிட் கணக்குகளில் எனக்கு நம்பிக்கையில்லை.பின்னூட்டக் கலந்துரையாடலே நான் சார்ந்த தளம்.
நண்பர் வவ்வால் எனக்குப் பின்னூட்டம் போட்ட மாதிரி பதிவுகளின் எண்ணிக்கையை விட போட்ட பின்னூட்டங்களின் நேர எண்ணீக்கை அதிகம்.

மீன் பிடிக்கும் போது பழைய துணிகளும் சிக்கத்தானே செய்கின்றது:)
இதுல உள்குத்தெல்லாம் எதுவுமேயில்லை!ஆங்கிலப் படங்களின் சினிமா தாக்கமோ என்னவோ நானும் மீன் பிடிக்கிறேன் பேர்வழின்னு உள்ளதிலேயே விலை அதிகமான மீன் குச்சி (Fishing Rod),நைலான் நூல் கண்டு என கொண்டு போய் நூல் விட்டா கிடைச்சது மீனோட பழைய துணியும்தான்:)

உங்களின் மூன்று பின்னூட்டங்களை ஒன்றாக்கி விட்டேன் கோவி.கண்ணன்.நன்றி.

சிராஜ் said...

சகோ ராஜ நடராஜன்,

/* பிரச்சினையில் தீக்குச்சி பத்த வைத்த தருணமாக தமிழ்மணத்தில் எந்த வித உள்நோக்கங்களும் இல்லாமல் கருத்து சொல்லும் வீச்சில்(Flow), Parodyயாக நகைச்சுவையாக சொன்ன சாந்தியும்,சாந்தியோட அக்காவும் என்ற பதத்திற்கு உரிமை கொண்டாடுவதில் உத்வேகமானது மதத்தின் தாக்கம்.வரம் கொடுத்தவன் தலையிலேயே வரத்தை பரிசோதித்த கதையாக தமிழ்மணம் முடக்குவோம் என்ற நிலைப்பாட்டில் மதவெறியின் உச்சம் வெளிப்பட்டது. */

தமிழ்மணம் நிர்வாகி ஒரு flow வில், parody யாக சொன்னது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த வார்த்தை அறியாமல் கூறி இருந்தாலும், ஒரு பிரிவை காயப்படுத்தி விட்டது என்று தெரிந்த வுடன் வாபஸ் வாங்கி இருக்கலாமே. அப்படி செய்து இருந்தால் அது மிக உயர்வாக இருந்து இருக்குமே. பரவா இல்லை , அது யாரோ யாரையோ தாக்கப் போய் வேறு விதமாக எதிர்பாராமல் சென்று விட்டது என்று எடுத்துக் கொள்வோம்.

நாம் உள்ளதை உள்ளபடி ஆராய்வோம், இங்கு நான் சொல்வது யாரையும் தாக்க அல்ல. ஒரு refresh அவ்வளவே. குல்பியானந்தா பதிவு வழிய இழுக்கப்பட்டதா? அல்லது அதுவும் ஒரு flow வில்,
parody யாக வந்ததா???? இது பற்றி உங்கள் கருத்தென்ன??? அதன் பின்னூட்டங்களை போய் பார்வை இடுங்கள். இதை சொல்வதற்காக நீங்கள் என்னை தவறாக நினைக்கக் கூடாது நடா. எந்த இலங்கை பதிவரும் அதை கண்டிக்க வில்லை. மாறாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள்.சரி அது ஒரு குரூப் என்று வைத்துக் கொள்வோம். மற்ற இலங்கை பதிவர்களாவது கண்டித்து இருக்கலாமே. அப்படி ஒன்றை பார்த்ததாக எனக்கு நினைவில்லை. அதன் பின் தானே அனைத்தும் தொடங்கியது.

சிராஜ் said...

இன்று நடுநிலையாளர் வேடம் போடா நினைக்கும் கோவி கண்ணனும் அங்கு பின்னூட்டம் இட்டதாக நினைவில் உள்ளது. நிச்சயம் அது அந்த பதிவை கண்டித்து அல்ல, மாறாக கூடுதல் எண்ணெய் தான் அண்ணாச்சி ஊற்றினார். என்றால், கோவி கண்ணன் அந்த பதிவை சரி காண்கிறாரா????

சிராஜ் said...

பொங்கல் கொண்டாட விரும்புவர்கள் தாராளமாக கொண்டாடிக்கொள்ளட்டும். நாங்கள் வேண்டாம் என்று பதிவு போட்டோமா? இல்லையே. நீங்கள் ஏன் கொண்டாடவில்லை என்று எங்களை ஏன் வம்பு இழுக்க வேண்டும்???? கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் எங்கள் இஷ்டம் தானே??? அந்த பதிவில் ஏன் எந்த நடுநிலையாளர்களும் வந்து கருத்து கூற வில்லை????

நடா, சுருக்கமாக நாங்கள் முதல் தாக்குதல் நடத்தவில்லை, பதில் தாக்குதல் தான் தொடுத்தோம். யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இப்பொழுதும் இல்லை எப்பொழும் வராது.

ராஜ நடராஜன் said...

சகோ!முஹமத் ஆஷிக்!உங்கள் பெயரிலும் ஆஷிக் அகமது என்ற பதிவர்களின் பெயர்களில் எனக்கு எப்பொழுதும் ஒரு குழப்பம் உண்டு.காரணம் பதிவர் சார்வாகன் பதிவுகளுக்கு ஈடு கொடுத்து தொடுப்புக்களுடன் பதிவு இடுவதில் உங்களில் பெயரில் இருவரில் ஒருவர்.

என்னுடைய உவமானங்கள் ரொம்ப சிம்பிளாக புரிந்தது போல் நீங்கள் சொல்லும்

//என் முகத்தில் வழியும் தக்காளிசாரை துடைப்பார் எவருமில்லை..!

அடுத்தவர் முகத்தில் வழியும் ரத்தத்தை நான் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறேன்..!//

என்ற அடைப்பான் வரிகள் நிச்சயமாக எனக்குப் புரியவில்லை.நான் வடிவேலை துணைக்கு கூப்பிட்டது ஒரு எதுகை மோனைக்காகவே!

ஈராக்,லிபியா,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இலங்கை,சூடான்,நைஜீரியா என்று அநீதிகள் எங்கு நிகழ்ந்தாலும் அதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவன் நான்.எனக்கு மதம் ஒரு பொருட்டல்ல.மனித நேயம் அடிப்படையிலேயே கருத்துக்களை முன் வைக்கிறேன்.இலங்கைத் தமிழன் எனது மொழிக்காரனாகவும், எனது பக்கத்து வீட்டுக்காரனாவும் உள்ளதால் கூடுதல் அக்கறை வந்து விடக்கூடும்.

நீங்கள் சொன்ன கருத்து எனக்குப் புரியாமல் இருந்தாலும் பதிவர் சார்வாகன் அடுத்த பின்னூட்டத்தில் சொல்வது ஒருவேளை உங்களது பின்னூட்டத்துக்கு மறுமொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.நன்றி.

சிராஜ் said...

மற்றபடி ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும். இதற்க்கு முன் இருந்த ஜாதி மத வேறுபாடுகளில் இருந்து அம்மக்கள் வெளியில் வந்து புது வாழ்வு வாழ வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.

அவர்கள் பட்ட கஷ்டங்கள் போதும். இலங்கை இந்துக்களும், இலங்கை முஸ்லிம்களும் ஒன்றிணைவதற்கான வழிகளை ஆராய வேண்டும். அதற்க்கு பதிவர்களும் பங்களிக்க வேண்டும். அதை விடுத்து இன துவேச பதிவுகள் இடுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் எனபது தான் எங்களின் விருப்பமும்.

ராஜ நடராஜன் said...

//சார்வாகன் said...

என் முகத்தில் வழியும் தக்காளிசாரை துடைப்பார் எவருமில்லை..!

அடுத்தவர் முகத்தில் வழியும் ரத்தத்தை நான் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறேன்..!//
ச‌கோ ஆஸிக்
'என் முக‌ம்" என்று எத‌னை குறிப்பிடுகிறீர்க‌ள்?
த‌மிழ‌நாட்டில் வாழும் த‌மிழ‌ன் என்ப‌துதான் என‌க்கும் உங்க‌ளுக்குமான் பொது முக‌ம் என நான் நினைக்கிறேன்.த‌மிழ்நாட்டில் யார் முக‌த்திலும் நிஜ‌ த‌க்காளி சாறு கூட‌ வ‌ழிவ‌தாக தெரிய‌வில்லை.இதில் மாற்றுக் க‌ருத்து இருப்பின் தெரிய‌ப் ப‌டுத்த‌லாம்.//

ஆஷிக்!உங்களை சிட்டிசன் போட்டுக்குறேன்.அப்பத்தான் குழப்பம் நீங்கும்:)இதோ நீங்க கேட்ட கேள்விக்கு பதிவர் சார்வாகன் என்னமோ சொல்கிறார்.

உங்கள் இருவரையும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய சார்வாகன் மாற்றுக்கருத்திருப்பின் தெரிவிக்கலாமென்பதால்....

தமிழ்நாட்டில் யார் முகத்திலும் நிஜத்தக்காளி கூட வழிவதாக இல்லையென்றாலும் நிஜமான முட்டைகள் வீசிய சரித்திர சான்றுகள் உண்டு:)

நிஜமா முகத்தில் நிஜத்தக்காளி வழிவதைப் பார்க்கனும்ன்னா ஸ்பெய்ன்,போர்ச்சுகல் பக்கம் போகவேண்டியிருக்கும்.உலகத்துல அவனவன் தக்காளியில்லாமல் கஷ்டப்பட்டா அந்தாளுக தக்காளி வீசியே தக்காளி நீச்சலடிக்கிறாங்க.தக்காளி வீச்சு விழாவாம்:)

அந்தக் கொடுப்பினை அனுபவங்களை இந்தியாவில் அனுபவிப்பவர்களும் கூட இந்தி நடிகர்களில் அக்சய் குமாரும்,காத்ரீனாவும்தான்:)

சிராஜ் said...

/* இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி எல்லா மதத்தினரும் பாலஸ்தீனத்திற்கு சாதகமான எண்ணமோ அல்லது எதிர்ப்போ காட்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஈழம் என்பதற்கு எதிரான எண்ணம் எப்படி வளர்த்துக்கொள்கிறார்கல் சிலர் என்பது எனக்கு புரியவில்லை. */

சகோ வவ்வால்,

ஈழத்து மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அப்படி ஒரு கருத்தை நீங்கள் எப்போதும் சொல்ல முனையாதீர்கள். ஆனால் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உண்மை. இதில் மறைக்க எதுவும் இல்லை. ஏன் என்று நீங்களும் கேட்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

தவறாக என்ன வேண்டாம் வவ்வால். கடந்த கால நிலையை மாற்றி புது தேசம் படைக்க ஈழ தமிழர்கள்(பதிவர்கள்) கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த கால இன துவேசங்களை மறைக்க அவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால் நிலைமை அவ்வாறா இருக்கிறது???? மீண்டும் மீண்டும் அதே துவேசம் அல்லவா வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் கவனிக்க வில்லையா?

ராஜ நடராஜன் said...

// ஸலாம் சகோ.ராஜ நடராஜன்,

//குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று பெண்கள் திட்டுவது போல்//

//தட்டைப்பார்வை//

//மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை.//

மேற்கண்ட உவமானங்கள் சொல்லும் மேட்டர் ரொம்ப சிம்பிள்.

என் முகத்தில் வழியும் தக்காளிசாரை துடைப்பார் எவருமில்லை..!

அடுத்தவர் முகத்தில் வழியும் ரத்தத்தை நான் சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறேன்..!

இங்கே, நியாயம் பேசி மறுத்தால்...
மதமென்ற முக்காடு அணிவிக்கப்படுகின்றேன்,
நயமான நடுநிலை முக்காடு போர்த்தியவர்களால்..!

January 19, 2012 6:57 AM
Delete
Blogger சார்வாகன் said...

சகோ
முக்கியமான் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன்.இந்த பரிணாம் எதிர்ப்பு என்பது கூட மதப் போர்வையிலேயே செய்யப் படுகிறது.விமர்சனம் செய்யக் கூடாது என்பதல்ல மதத்தின் குறிப்பிட்ட விள்க்கம் இதனை மறுக்கிறது என்பதாலேயே எதிர்ப்பதுதான் சிக்கல்.

அம்மதம் சார்ந்த கற்றறிந்த வல்லுனர்கள் கூறினாலும் குரல் எடுபடுவது இல்லை.
http://www.evolutionandislam.com/home


இந்த விமர்சனங்கள் அனைத்திற்குமே அறிஞர்களிடம் பதில் உண்டு என்பதும்,பெரும்பானமையான பல்கலை கழகங்களில் பாடமாக கற்பிக்கப் படுகிறது. அப்படி பரிணாமம் தவறு என்று நிரூபித்தால் நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறினால் இதுவும் ஒரு __________ கான்ஸ்பைரேசி என்பார்கள். எங்கே போய் நிற்குமோ!!!!!!!!!!!!!!!//

சகோ சார்வாகன்!உங்கள் பதிவின் தொடுப்புக்களை ஆராயும் காலமும்,நேரமும்,மனமும்,அகன்ற பார்வையுமிருந்தாலே பாதிக்கிணறு தாண்டி விடலாம்.

பூமி தட்டையென்ற தியரிக்கு எதிர்ப்பு தெரிவித்த கலிலியோவுக்கு மதவாதிகளே எதிரிகளாகிப் போனார்கள்.காலவாக்கில் மேற்கத்திய மதவாதிகளும் மனம் மாறிப்போக வில்லையா?

நீங்க தொடுப்பு போட்டுகிட்டேயிருங்க.நன்றி.

Riyas said...

@ராஜ நடராஜன்..

நீண்ட விளக்கங்களுக்கு நன்றிகள்.

ராஜ நடராஜன் said...

//துளசி கோபால் said...

மதம் ஏதாயிலும் சரி. மனிதன் நன்னாயால் மதி!

ஸ்ரீ நாராயணகுரு சொல்லி வச்சுட்டுப் போயிருக்கார்.//

துளசி டீச்சர்!பின்னூட்ட மறுமொழியை இங்கிருந்தே ஆரம்பிக்கலாமென்றிருந்தேன்.அப்புறம் ஹேமா கோவிச்சுக்குவாங்களோன்னு அகர வரிசையிலேயே துவங்கிட்டேன்:)

டீச்சர்!நான் பிறந்தது இந்துக்குடும்பத்தில்.கல்விக் காலம் கிறுஸ்துவப் பள்ளி.வாழ்க்கையோ இஸ்லாமிய தேசம்.

என்னோட கருத்து வெளிப்பாடுகளுக்கு இதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

மதம் ஏதாயிலும் சரி ங்கிறதுக்கு தமிழ்நாட்டுப் பொழிப்புரை என்னன்னா

ஒன்றே குலம்!ஒருவனே தேவன்.

இப்ப அதற்கும் மீறிய பரிணாமக் கருத்துருவாக்கமும் கூட உருவாகும் கால சூழலில் தனது மதம் என்ற ஒற்றை நிலையிலேயே சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் கூட ஆன்மீக தேடல் மாதிரியான கோயில்,குளம் சுற்றிய அனுபவங்களைப் பகிர்கிறீர்கள்.கூடவே சீடை,பலாப்பழ பாயாசம்ன்னு வேற அசத்துறீங்க.உங்களை மாதிரி சமையலில் ஜலீலா அவர்கள்.யாராவது பெயர்ச்சொல்லில் உங்களிருவருக்கும் பின்னூட்டம் இடுகிறார்களா?

மெக்கா,அறுபடை,ஜெருசலம்ன்னு ஒன்றாகப் பார்த்தால் பிரச்சினையில்லை.ஆனால் மூன்றும் ஒன்றில்லை என்பதற்கும் வியாக்கியானங்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்.எனவே பிரச்சினையின் ஆரம்பம் இங்கே துவங்குகிறது.

நீங்க பதிவுல எவ்வளவு வள வளக்கிறீங்களோ அந்த மாதிரி எனக்குப் பின்னூட்ட வியாதி:)

இன்னும் ஏதாவது சொல்லிகிட்டே இருப்பேன்.உங்கள் கருத்துக்கு நன்றி டீச்சர்.

ராஜ நடராஜன் said...

கோவி.கண்ணன் said...

//த‌மிழ‌நாட்டில் வாழும் த‌மிழ‌ன் என்ப‌துதான் என‌க்கும் உங்க‌ளுக்குமான் பொது முக‌ம் என நான் நினைக்கிறேன்.//

தாடி வைத்துக் கொண்டால், மீசை மழித்துக் கொண்டால், திருநீறு பூசிக் கொண்டால் திருமுகமாகி இன அடையாளம் மாறாதா ?

:)//

கோவி!திருநீறு பூசிக்கொள்வது,தாடி வைத்துக்கொள்வதாவது இன அடையாளங்களாகிப் போகின்றன.இங்கே அத்தைக்கு மீசை முளைச்சா மாதிரி மீசைக்கு என்ன சம்பந்தம்:)

இந்தி நடிகர்களில் சாருக் கான், அமீர் கான்,சல்மான் கான்,அக்சய் குமார்,சஞ்சய் தத்,அக்சய் கன்னா என்று ஒருவர் கூட நிரந்தர மீசை வைத்துக்கொள்வதில்லை:)

ராஜ நடராஜன் said...

ரியாஸ்!திரும்ப வந்துட்டீஙளா!நீங்க ஒரு அடைப்பான் எனக்கும்,இன்னொரு அடைப்பான் கோவி.கண்ணனுக்கும் போட்டிருக்கீங்க.

எனக்கான விளக்கம் எனது முந்தைய பதிவுகளை தேடினால் (அது ஒன்றும் கடினமானதல்ல!மாதங்களை க்ளிக்கினால் இடுகைகள் ஏதாவது காணப்படலாம்.இருந்தாலும் நினைவு படுத்தலுக்காக சுருக்கமாக இங்கே சொல்லி விடுகிறேன்.

அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் யுத்தத்தையும்,ஈராக் யுத்தத்தையும் வேறு வேறாக விவாதிக்க வேண்டும்.இரண்டையும் ஒற்றைக்கோட்டில் வைக்க இயலாது.9/11க்கும் அதற்கும் முற்பட்ட கால கட்டங்களில் தலிபான்களின் செயல்கள்,மதம் சார்ந்த நிலையென்ற நிலையிலும்,ஈராக் போர் ஜார்ஜ் புஷ்சின் கிறுக்குத்தனத்தாலோ அல்லது சதாம் ஹுசைனின் குவைத் ஆக்கிரமிப்பு காரணமாக GCC நாடுகள் அமெரிக்காவின் துணையோடு செய்த போர் எனவும் அதை விட முக்கியமாக மத்திய கிழக்கு எண்ணை வளங்கள் அமெரிக்காவுக்கு முக்கியம் என்ற நிலையிலும்,சதாம் டாலர் எண்ணைப் பொருளாதாரத்துக்குப் பதிலாக யூரோ எண்ணைப் பொருளாதாரம் என்று அமெரிக்காவுக்கு செக் வைத்தது என நிறைய உலக அரசியல் அடங்கியிருக்கிறது.

போர்கள் ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,இலங்கை என எங்கே நிகழ்ந்தாலும் அப்பாவிகளாக குழந்தைகள்,பெண்கள்,முதியோர்,போருக்கு சம்பந்தமில்லாதவர்களாக இதில் அவதியுறுகிறார்கள்.இதில் ஈராக்.ஆப்கானிஸ்தான்,லிபியா போன்ற நாடுகளின் போர் இன அழிப்பு என்ற எல்லைக்குள் வருவதில்லை.இலங்கை மட்டுமே இதற்கு விதி விலக்கு.

நாடு சார்ந்தல்லாது அனைவருக்குமான மனித நேயம் கொள்வோம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தள நிர்வாகிக்கு அவர்களுக்கு...

மற்றவர்களின் பெயர்களில் எவ்வித குழப்பமும் வராத உங்களுக்கு...

எப்போதோ நான் போட்ட பதிவை நியாபகம் வைத்துள்ள உங்களுக்கு என்னுடைய பெயரில் மட்டும் ஏக குழப்பம். முன் பின்னாக குதப்பி குதப்பி எழுத்துப்பிழைகளுடன் கக்குகிறீர்கள். அதுவும், இன்று தெளிவாக நான் இரண்டு பின்னூட்டம் இட்டு தை நீங்கள் படித்த பிறகு..!

இதற்கு காரணம் என்ன தெரியுமா..?

உங்களை கேள்வி கேட்போரை உங்களுக்கு பிடிக்க வில்லை என்பதுதான். கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை என்றால்... 'நீ சொல்வதுஎனக்கு புரியவில்லை' என்று சொல்லி விடுவதுதான் உங்கள் நடுநிலை தரப்பின் நியாயம் போலும்..!

ராஜ நடராஜன் said...

சகோ!சிராஜ்!வாங்க.ரியாஸ்க்கு சொன்னது போல் பின்னூட்டம் இணைக்காமல் மறுமொழி மட்டும் சொல்லி விடுகிறேன்.

தமிழ்மணக் கூட்டமைப்பில் ஒருவரான இரமணீதரன் சொன்னதை லூஸ்ல விட்டுருக்கலாம் என்றே இப்பொழுதும் எனக்குப் படுகிறது.காரணம் இப்பொழுது ஏனைய இஸ்லாமிய நண்பர்கள் யாரும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை.அந்த சொல்லுக்கான parody ஐ விட அதிக வசவுகளைக் கொண்ட பதிவுகளும்,பின்னூட்டங்களும் வந்து விட்டன.இதனால் இழப்புக்கள் மட்டுமே இருதரப்புக்குமே.

ஒரு நிறுவனத்தின் இக்கட்டான அவசரநிலைகளில் உடனடியாக ஒரு முடிவைக் கொண்டு வந்து விடமுடியாது.தமிழ்மணம் காலம் தாழ்த்தியாவது தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.எனவே இதனை மீண்டும் கேள்விக்குட்படுத்துவது சரியா?இப்பொழுது தமிழ்மணம் கடந்த நிலையில் மட்டுமே பதிவுகள் வருகின்றன.அதிலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தருகிறவர்கள் என்ன என்று அறியாமல் ஆதரவு தருவதாக ஒருவர் பதிவு போடுகிறார் பாருங்கள்.சும்மா சொல்லக்கூடாது மனிதநேயத்தின் 2012க்கான நோபல் பரிசே தரலாம்:)

பதிவுகள் போடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருந்தாலும் பதிவுலகின் அடிப்படை நட்பு மட்டுமே.நட்பு கொன்று விட்டு நாம் எழுத்தில் என்ன செய்து விடப்போகிறோம்.

நீங்களும் எதிர்ப்பதிவு போட்டீர்கள்.ஆனால் இந்த பதிவு உங்களுக்குரியதல்ல என்று ஏற்கனவே பின்னூட்டத்தில் சொல்லி விட்டேன்.

மேலும் நான் ஏற்கனவே பதிவுலகில் உள்ளபடியெல்லாம் வளைகுடா நாடுகளில் இஸ்லாம் இல்லையெனவும்,இந்திய பாகிஸ்தானிய தலிபானிசத்தன்மை கொண்டவை என யாருக்கோ பின்னூட்டம் போட்டுள்ளேன்.

எனக்கு சவுதி அரேபியா குறித்த மாற்றுக்கருத்துக்கள் உண்டு.ஆனால் ஏனைய வளைகுடா நாடுகளில் குறிப்பாக குவைத்தில் ஏனைய நாட்டினரையும்,அவர்கள் சார்ந்த மதத்தையும் வெறுக்கும் நிலைகள் எல்லாம் இல்லை.அப்படி வெறுப்பவர்களாக சிலர் இருந்தாலும் அடிப்படைவாத தன்மை கொண்டவர்களாக இருக்க கூடும்.Politicallly liberals are dominating.so no problem.

தொழுகை,ஈகை,சமத்துவம் என்ற அடிப்படைகள் கொண்ட இஸ்லாமியத்தின் பிம்பத்தை தலிபான்கள் உதவி கொண்டு ஒசாமா மாற்றி விட்டார்.

அதன் பாதிப்புகளாகவே மதம் சார்ந்த பதிவுகளும் வெளிப்படுவதாகவே உணர்கிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ தள நிர்வாகி மற்றும் இங்கே பின்னூட்டமிட்டோருக்கு:

'செருப்பால் அடித்தது போன்று உணர வேண்டிய தருணம்' ஒன்று சொல்லட்டுமா..?

நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் இணைய வசதி பெற்றுக்கொள்ளும் முன்பு...

ஒன்பது வயதில் (1985) இருந்தே தினம் தினசரிகள் படிப்பதும், இந்திய வானொலி செய்திகள் விடாமல் கேட்பதும் வழக்கம்.

இலங்கை முஸ்லிம் தமிழர்களின் மீது இழைக்கப்பட்ட வன்கொடுமைகள்,

அவர்கள் மீதான புலிகளின் தொடர் படுகொலைகள்,

அகதிகளாக முஸ்லிம் தமிழர்கள் வீடு/நாடு இவற்றிலிருந்து எதிரிகள் தேசம் நோக்கி இரக்கமின்றி மொத்தமாக வெளியேற்றப்பட்டது,

'சொந்த நாட்டிலேயே' கடந்த இருபது வருடங்களாக அகதிகள் முகாமில் அவர்கள் இருப்பது...

போன்ற அவர்களின் சொல்லொணாத்துயர நிலை எல்லாம் எனக்கு தெரிய வந்தது எப்போதெனில்...

நான் இந்த இணைய வசதி பெற்ற பின்னர் அவர்களின் தளங்களில் இருந்துதான்..!

நடுநிலை முக்காடுகள் போட்டு இருக்கும் தமிழர்களாகிய நாம்...
'செருப்பால் அடித்தது போன்று உணர வேண்டிய தருணம்' ஒன்று உண்டென்றால் அது இதுதான்..!

ராஜ நடராஜன் said...

சகோ சிராஜ்!கோவி.கண்ணன் பொங்கல் குறித்த இடுகையின் தலைப்பு மட்டும் பார்த்தேன்.அதன் உள்ளடக்கம் என்னவென்று எனக்குத் தெரியாது.

உங்களின் ஈழத்தமிழர் குறித்த அக்கறைக்கும் நடுநிலைக்கும் நன்றி.இப்போதைய தேவை வடகிழக்கில் வாழும் தமிழர்கள் இன அடையாளம் பார்க்காது மொழி அடிப்படையில் தங்கள் சம உரிமைக்காக பாடுபடுவதே அவர்களுக்கு எதிர்கால சந்ததிக்கு விடியலைத் தரும்.வடக்கு திசையில் பிரபாகரன் பாதிப்பு காரணமாக இலங்கை அரசு விடுதலைப்புலிகள் கண்ணோட்டத்திலேயே அனைத்து தமிழர்களையும் பார்க்கலாம்.கிழக்கில் கருணா,பிள்ளையான் குழுக்கள் இலங்கை சார்பாக இருக்கிறார்கள்.ஆனந்த சங்கரி,டக்ளஸ் போன்றவர்களும் கூட.இவர்களால் ஏதாவது தீர்வுக்கான வலிமை கொண்டவர்களா?

இவர்களை விடுங்கள்.அப்பொழுதும் சரி!இப்பொழுதும் சரி அரசு சார்ந்த நடுநிலையாளர்களாகவே இலங்கையின் முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கான தீர்வாகவாது இலங்கை அரசு செய்துள்ளதா?

எனவே யார் தமிழர்களுக்கான அங்கத்துவம் தராதவர்கள் என்ற புரிதலின்றி விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் அவர்கள் மீதான கோப விளம்பரம் மாதிரியான பதிவுகள் யார் நலனுக்காக?இது ஊரை இரண்டுபடுத்தும் விசமத்தனம் கொண்டது என்பது மட்டுமே எனது ஆதங்கம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

உங்கள் கருத்துக்கு நன்றி சகோ!ரியாஸ்.

ராஜ நடராஜன் said...

//இன்னிக்கு ஈராக்கில் அமெரிக்காரன் விலகிய பிறகு அன்றாடம் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதும் அதில் கொல்லப்படுவதும் யார் ? இதைத் தடுப்பதற்கான முயற்சி என்ன ?

இதற்கெல்லாம் எம்போன்றவர்கள் கவலைப்படுகின்றனர், அங்கே குண்டு வைப்பவனும் மனிதன் //

கோவி!உங்கள் மனித நேயத்தோடு நானும் பங்கு கொள்கிறேன்.ஆனால் அமெரிக்கா வெளியேறிய பிறகும் குண்டு வெடிப்பு தொடர்வது ஏன் என்ற கேள்வியை வைக்க முடியாது.ஏனென்றால் ஈராக்கின் துவக்கத்தை கிட்டத்தட்ட 1980களிலிருந்தும் ஈரான்,ஈராக் போரிலிருந்து துவங்க வேண்டும்.காரணம் இந்தப் போரே இஸ்லாமியத்தின் இரு பிரிவு மற்றும் இரு நாட்டு அரசியலுடன் ஏனைய அண்டை நாடுகளும் சேர்ந்த ஒன்று.

முந்தைய சதாம் ஹுசைனின் அமெரிக்கா சார்ந்த நிலையில் ஈரானுக்கான போர்,போரினால் நாட்டுப்பொருளாதாரம் சீரழிவு,குவைத்துடன் பொருளாதார உதவிப் பேச்சு வார்த்தைகளில் தோல்வி,பின் எதிர்பாராத குவைத் ஆக்கிரமிப்பு,அதனைத் தொடர்ந்த அமெரிக்காவின் வளைகுடா நிலைகொள்ளல்,பின் சதாம் டாலர் பொருளாதாரத்திலிருந்து யூரோ பொருளாதாரம் என்ற நிலை,அமெரிக்க பொருளாதார தடைகள்,பின் சதாமிடம் WMD (Weapon of mass destruction) இருக்கிறதென்று போர் தொடுத்தல்,மனிதர்கள் வாழ்வியலில் மாற்றம்,ஈரான் சார்ந்த ஷியா முஸ்லீம்களின் ஆட்சி,போர்க்குணம் கொண்ட சதாம் வழித்தோன்றல்கள்,இவற்றோடு தலிபான்களின் தலையீடும் என்று தகவல்கள் என குண்டு வெடிப்புக்கள் தொடர்கின்றன.

ஈராக்கின் இயல்பு நிலைகள் சிதைந்ததில் அமெரிக்காவுக்கு பெரும் பங்குண்டு.இப்பொழுது ஈரான் மீது வேறு குறி.வளைகுடா இனியும் எந்த ரூபத்தில் மாறும் என சொல்ல முடியாது.

பாதிக்கபடுபவர்கள் என்னவோ அப்பாவி பொதுமக்களே.

ராஜ நடராஜன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் தான்//

சி.பி!1000 பதிவு கண்ட அபூர்வ பதிவர் என வாழ்த்துக்கள்.நிறையவே உழைத்திருப்பது உங்கள் எண்ணிக்கை கண்டபோதுதான் புரிந்தது.

தொடரட்டும் உங்கள் கமெண்டுகள்.

விவாதம் என்னவோ சர்ச்சைக்குரியதுதான்.இத்தோடு சர்ச்சைகள் முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//சுவனப்பிரியன் said...
பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை சரியாகவே கணித்திருக்கிறீர்கள். மற்றபடி எல்லா இடங்களிலும் மதத்தை அதாவது பின்பற்றும் மார்க்கத்தை வெளியில் வரும் போது அதன் அடையாளங்களை கழட்டி வைத்து விட வேண்டும் என்ற பெரும்பான்மையான பதிவர்களின் முடிவோடு நான் வெறுபடுகிறேன். இஸ்லாத்தை முழமையாக கடைபிடிக்கும் ஒருவன் மற்ற மார்க்கத்தவரோடு சந்தோஷமாக வாழ முடியும். அதற்கு மார்க்கம் ஒரு தடையில்லை என்பதையும் இங்கு பதிய விருமபுகிறேன்.

சகோ!சுவனப்ரியன்!நீண்ட நாட்களாக மதம் சார்ந்து மட்டுமே பதிவு செய்து வருபவரில் நீங்களும் ஒருவராக இருக்கலாமென்று நினைக்கின்றேன்.அல்லது கோவி.கண்ணனுடன் விவாதம் செய்யும் மூத்தவர் என நினைக்கிறேன்.
முந்தைய விவாத நிலைகள் போய் இப்பொழுது தனிமனிதக் கோபங்கள் குழுக்களாக மாறி வரும் சூழலிலும் நீங்கள் மத அடையாளங்களை தனித்துவ படுத்துங்கள் என்பதில் மாறுபடுகிறேன் என்கிறீர்கள்.

9/11க்கு முன்பான நிலையில் பாகிஸ்தானியர்கள் தங்கள் குர்தா ஆடை உடுத்துவதில் பெருமிதம் கொண்டவர்கள்.அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு,பாகிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின் பாகிஸ்தான் என்ற அடையாளத்தை யாரும் சொல்லாமலே குர்தாவை பெரும்பாலும் பொது இடங்களில் அணிவதில்லை.அப்படியே அணிந்தாலும் வார இறுதி விடுமுறைக்கு மட்டுமே.

பிரான்சில் பெண்கள் முகத்தை மறைக்க கூடாதென்ற சட்டம்.அவ்வளவு தூரம் போவானேன்!உங்கள் அண்டை நாடான குவைத்தில் கூட காரோட்டும் பெண்கள் முகம் மூடி காரோட்டக்கூடாதென்ற சட்டம் துவக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் அரசு சொல்லும் பாதுகாப்பு காரணங்களைப் புரிந்து இப்பொழுது பெண்கள் முகத்தை மறைப்பதில்லை.எனவே மார்க்கம் சார்ந்த நிலைகள் சட்டத்தாலும்,கால மாற்றங்களாலும் நிச்சயம் நிகழும்.மார்க்கம் ஒன்றும் உடலோடு ஒட்டிப்பிறந்ததல்ல.வேண்டுமென்றால் உடுத்திக்கொள்ளலாம்.தேவையில்லையென்றால் அகற்றி விடலாம்.

நீங்கள் சொல்வது போல் மார்க்கம் எதற்குமே தடையில்லை.மனிதர்கள் அவரவர் அளவுகோட்டில் கொள்ளும் நிலையிலேயே தடைகள் உருவாகின்றன.

மார்க்கம் சார்ந்தோ,மார்க்கம் சாராமலோ சக மனித நேயம் இருக்கும் மனிதனை நேசிப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.ஆனால் மதம் என்ற கோட்டுக்குள் மட்டுமே அனைத்தையும் நேசிப்பேன் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.

வவ்வால் said...

சகோ சிராஜ்,

//ஈழத்து மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அப்படி ஒரு கருத்தை நீங்கள் எப்போதும் சொல்ல முனையாதீர்கள். ஆனால் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டார்கள் என்பது உண்மை. இதில் மறைக்க எதுவும் இல்லை. ஏன் என்று நீங்களும் கேட்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.//

இவ்வளவு கருத்து நெரிசலிலும் என் கூற்றைக்கவனித்தமைக்கு நன்றி.

ஒரு சிலர் என்று தான் சொல்லி இருக்கேன் , பொதுமைப்படுத்தவில்லை.

நான் புலிகளின் வன்செயலில் உடன்ப்பாடில்லை என முதல் வரியாக சொன்னதையும் கவனத்தில் கொள்ளவும். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் நான் புலிகளின் வன் செயலை விமரிசிக்கப்போய் தமிழின துரோகி பட்டம் எல்லாம் வாங்கி இருக்கிறேன். ஏன் எனில் இங்கே புலிகள், ஈழம் என்பதைப்பிரிக்க முடியாத சூழல்.

புலிகளை விமர்சித்தால் அது ஈழத்தமிழரை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டு ரசாபாசமாகி விடுகிறது.2006-07 இலே நான் பேசியவை இவை.

அமிர்த லிங்கம், போன்றவர்களை கொன்றிருக்க கூடாது , ஒரு புரிதல் உடன் சேர்ந்து செயல்ப்பட்டிருக்க வேண்டும், என்று PLO-ஹமாஸ், பகத் சிங்க்- காந்தி எல்லாம் உதாரணம் காட்டி ஒரு பதிவில் பேசி வாங்கிக்கட்டிக்கொண்டது தான் மிச்சம்.

இன்னும் சொல்லப்போனால் ஈழம் என்று சொல்லாமல் இலங்கைத்தமிழர் பிரச்சினை என பேச சொல்வேன். திட்டு தான் கிடைக்கும். இலங்கைத்தமிழர் என்று தனியே ஒரு வகை இருப்பதை அறிவீர்களா? ஆனாலும் தமிழ் இனம் என்ற அளவில் எப்போதும் நான் ஆதரவளிக்கவே விரும்புவேன்.

மதம் என்ற ஒன்றால் இணைவதை விட மொழி, மண் சார்ந்து ஒரு பிணைப்பு ,வித்தியாசம் இல்லாமல் இணைக்க வேண்டும் என்பதே எனது சித்தாந்தம்.அது எனக்கு சரி, மற்றவர்களுக்கு எப்படியோ?

//மீண்டும் மீண்டும் அதே துவேசம் அல்லவா வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் கவனிக்க வில்லையா?//

அவர்கள் மட்டுமே பெரும்பான்மை அல்லவே. அவர்களுக்கு என்று தனிக்கொள்கை இருக்கலாம், அதை வைத்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்க வேண்டுமா? பெரும்பாலோர் மாற்றுக்கருத்து கொண்டவர்களே,ஆனால் அவர்கள் கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள்,அதுவே அவர்களையும் குற்றம் சாட்ட ஒரு காரணமாகி விடக்கூடாது.யாசர் அராபத்- ஒசாமா ஒப்பீட்டை கவனிக்கவும், முன்னவர் போராளி, பின்னவர் தீவிரவாதி என்றே சொல்ல முடியும். அவரையும் புனிதப்படுத்துவது என்னுடைய பாமர மூளை ஏற்க மாட்டேன்கிறது.

என்னைப்போன்றோர் அனைத்து மதத்தின் மூடக்கொள்கைகளையும் விமர்சிப்போம். எதையும் விட்டு வைப்பதில்லை. கண்ணில் அதிகம் படுவது விமர்சனத்துக்குள்ளாகும்.இது துவேசத்தின் அடிப்படையில் அல்ல பகுத்தறிவின் அடிப்படையில். ஹி..ஹி ஒரு சுய விளக்கம்/ விளம்பரம்!

கருத்துப்பிழை இருப்பின் சூழலின் குழப்பத்தின் தாக்கமே என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தள நிர்வாகிக்கு அவர்களுக்கு...

மற்றவர்களின் பெயர்களில் எவ்வித குழப்பமும் வராத உங்களுக்கு...

எப்போதோ நான் போட்ட பதிவை நியாபகம் வைத்துள்ள உங்களுக்கு என்னுடைய பெயரில் மட்டும் ஏக குழப்பம். முன் பின்னாக குதப்பி குதப்பி எழுத்துப்பிழைகளுடன் கக்குகிறீர்கள். அதுவும், இன்று தெளிவாக நான் இரண்டு பின்னூட்டம் இட்டு தை நீங்கள் படித்த பிறகு..!

இதற்கு காரணம் என்ன தெரியுமா..?

உங்களை கேள்வி கேட்போரை உங்களுக்கு பிடிக்க வில்லை என்பதுதான். கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை என்றால்... 'நீ சொல்வதுஎனக்கு புரியவில்லை' என்று சொல்லி விடுவதுதான் உங்கள் நடுநிலை தரப்பின் நியாயம் போலும்..!//

சகோ ஆஷிக் சிட்டிசன்!இப்படி போட்டால்தான் இனிமேல் எனக்கு நினைவிருக்கும்.நான் வெளிப்படையாகவே பெயர்க்குழப்பம் என்று சொல்லியும் எப்படி மறக்கும்ன்னா நான் என்னங்க பதில் சொல்றது:)

எழுத்துப்பிழைகள் இருக்கலாம்.நீண்ட பின்னூட்டங்களாக ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி வருகிறேன்.ரிவிசன் செய்ய கால நேரமில்லை.

நீங்கள் கேள்வி கேட்பது எனக்குப் பிடிக்கவில்லையென்றால் பொறுப்பாக நான் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பேனா!ஒரே சொல்லில் நன்றி வணக்கம் சொல்ல மாட்டேனா:)

உண்மையில் நான் சொன்ன உவமைக்கு நீங்கள் போட்ட உவமை எனக்குப் புரியவேயில்லை.இதற்கும் மேல் நான் எப்படி நிருபிப்பது என தெரியவில்லை.

எப்போதோ போட்ட பதிவை நான் நினைவில் வைத்திருப்பதன் காரணம் நான் பெயர்கள் அறிந்து பின்னூட்டம் போடுபவனல்ல.கருத்துக்கள் எனது மூளை நாளங்களை தூண்டுவதாகவோ,பதிவின் சாரம் நன்றாக இருக்கிறதென்று உணர்ந்தால் பின்னூட்டம் இடுகிறேன்.அதேபோலவே பதிவர் சார்வாகன் தனிமனிதக் கோபங்கள் இல்லாது அவர் சார்ந்த நிலைக்கான ஆதாரங்களை நிறையவே கொடுக்கிறார்.அவற்றில் உண்மையும் இருப்பது கண்கூடாக வெளிப்படவும் செய்கிறது.அதேபோல் மதம் சார்ந்தும் ஆழ்ந்த கருத்துக்களை வைப்பவர்களையும் நான் மதிக்கிறேன்.அந்த மாதிரியான ஒரு விவாதமாக பல இணைப்புக்கள் கொண்டு விவாதித்தது எனது நினைவில் ஒட்டிக்கொண்டது.எனவேதான் பெயரில் குழப்பம் என்று சொன்னேன்.

எனது நிலைப்பாட்டை விளக்கி விட்டேன்.
Sorry if any typo.

அது ஏன் ரொம்ப தூரமா தள நிர்வாகின்னு சொல்லி விலகுறீங்க சகோ:)

ராஜ நடராஜன் said...

//~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ தள நிர்வாகி மற்றும் இங்கே பின்னூட்டமிட்டோருக்கு:

'செருப்பால் அடித்தது போன்று உணர வேண்டிய தருணம்' ஒன்று சொல்லட்டுமா..?

நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் இணைய வசதி பெற்றுக்கொள்ளும் முன்பு...

ஒன்பது வயதில் (1985) இருந்தே தினம் தினசரிகள் படிப்பதும், இந்திய வானொலி செய்திகள் விடாமல் கேட்பதும் வழக்கம்.

இலங்கை முஸ்லிம் தமிழர்களின் மீது இழைக்கப்பட்ட வன்கொடுமைகள்,

அவர்கள் மீதான புலிகளின் தொடர் படுகொலைகள்,

அகதிகளாக முஸ்லிம் தமிழர்கள் வீடு/நாடு இவற்றிலிருந்து எதிரிகள் தேசம் நோக்கி இரக்கமின்றி மொத்தமாக வெளியேற்றப்பட்டது,

'சொந்த நாட்டிலேயே' கடந்த இருபது வருடங்களாக அகதிகள் முகாமில் அவர்கள் இருப்பது...

போன்ற அவர்களின் சொல்லொணாத்துயர நிலை எல்லாம் எனக்கு தெரிய வந்தது எப்போதெனில்...

நான் இந்த இணைய வசதி பெற்ற பின்னர் அவர்களின் தளங்களில் இருந்துதான்..!

நடுநிலை முக்காடுகள் போட்டு இருக்கும் தமிழர்களாகிய நாம்...
'செருப்பால் அடித்தது போன்று உணர வேண்டிய தருணம்' ஒன்று உண்டென்றால் அது இதுதான்..!//

ஆஷிக் சிட்டிசன்! உங்கள் பின்னூட்டம் நீண்டிருப்பதால் அடைப்பான் போடாமலே கருத்து சொல்லலாமென்றிருந்தேன்.அப்புறம் கேள்வி கேட்பது பிடிக்கவில்லையென்று என்மீதே குற்றம் சுமத்துவீர்கள் என்று முழுதாக ஒட்டவைத்துவிட்டேன்.இனி கூகிளண்ணன் விட்ட வழியில் தொடர்கிறேன்.

அப்ப செய்திப்பத்திரிகைகளும்,இந்திய வானொலியும் கொண்டு வந்த செய்திகளின் உண்மைகளை விட இணையம் உண்மைகளை கொண்டு வருகிறது என்பது உண்மைதானே.

இலங்கை முஸ்லீம்கள் மீது கொண்ட வன்முறைகளுக்கான காரண காரியங்களை மட்டுமே மதம் என்ற வட்டத்தில் மனதில் வைத்து வன்மம் கொள்வதால் நாம் சாதிக்கப் போவதென்ன என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.

என்னுடைய நிலையிலோ உங்கள் நிலையிலோ இலங்கை முஸ்லீம்கள் குறித்த விவாதத்தை முன்னெடுப்பதை விட இலங்கை முஸ்லீம்களின் குரல்கள் இது குறித்து வெளிப்படுகிறதா என்றால் இல்லை.கடந்து போன ஒன்று என்று அவர்கள் மருகினாலும் கூட தங்கள் அரசியல் நலன்களையாவது முன்னெடுத்து செல்ல முயல்கிறார்களா என்றால் அதுவும் தென்படவில்லை.

மொத்தத்தில் இந்துவாக,முஸ்லீமாக இனம் பிரிந்து Divide and Ruleன் உலகளாவிய கருத்தை இலங்கை அரசுக்கு வலுப்படுத்துவோம்.நன்றி.

சிராஜ் said...

/* மதம் என்ற ஒன்றால் இணைவதை விட மொழி, மண் சார்ந்து ஒரு பிணைப்பு ,வித்தியாசம் இல்லாமல் இணைக்க வேண்டும் என்பதே எனது சித்தாந்தம்.அது எனக்கு சரி, மற்றவர்களுக்கு எப்படியோ?
*/

முஸ்லிம்களை பொறுத்த வரை.
இஸ்லாம்...
நாடு...
மொழி...

இது தான் வரிசை. நான் அறிந்த வகையில் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்படிதான். மாற்றுக்கருத்து உள்ளவர்களும் இருக்கலாம். நம்புவீர்களோ மாட்டீர்களோ, நான் இந்த ஆர்டர் மாறி யாரையும் சந்தித்தது இல்லை. சில சமயங்களில் 2 ம், 3 ம் இடம் மாறலாம்.

சிராஜ் said...

/* என்னைப்போன்றோர் அனைத்து மதத்தின் மூடக்கொள்கைகளையும் விமர்சிப்போம். எதையும் விட்டு வைப்பதில்லை */
நீங்கள் தாராளமாக இஸ்லாத்தை விமர்சியுங்கள். ஆக்கப்பூர்வமான வழிகளில் விமர்ச்சனம் செய்யுங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வது எங்கள் கடமை.
இதில் எந்த தயக்கமும் வேண்டியது இல்லை.

சிராஜ் said...

அதை விடுத்து உள்குத்து பதிவு, வெளி குத்து பதிவெல்லாம் போட வேண்டியது இல்லை. நேரடியாகவே பதிவிடலாம். ஆக்கப்பூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார். முஹம்மத் ஆசிக், அஹமத் ஆசிக், சுவனப்பிரியன், குலாம் , ஹைதர் அலி அனைவரும் அதைத்தான் செய்கிறார்கள்.

சிராஜ் said...

இன்று கூட பாருங்கள் கோவி கண்ணன் "'செருப்பால் அடித்தது" என்ற வார்த்தையை பயன்படுத்தி தேவை இல்லாத சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். இவரிடம் நாம் பேசும் மொழி பேச முடியாது. அவருக்கு புரியாது. அவருக்கு கக்கூஸ் மொழி தான் புரியும். எத்தன பேர்கிட்ட செருப்படி வாங்கி இருக்காருன்னு யாருக்கு தெரியும்?????

சிராஜ் said...

ஒரு வேல இந்தியாவில செருப்பால அடிச்ச அடில, வலி தாங்க முடியாம சிங்கபூர்ல செட்டில் ஆயிட்டாரோ????

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அன்புள்ள தள நிர்வாகி அவர்களுக்கு...

நீங்கள் இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்யும் முன்னர் அதைப்பற்றி அறிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள் அதுதான் ஆரோக்கியம்.

உதாரணம்,

இங்கே...முகத்தை மூட சொல்வது மார்க்கம் என்றும், முகத்தை மறைக்காதவர்கள் மார்க்கத்தை கழட்டி விட்டு வெளியே சென்று விட்டதாகவும் எழுதி உள்ளீர்கள்.

"இந்த விஷயத்தில் இஸ்லாம் சொல்வது என்ன, என்று அறிந்த பின்னர் கொஞ்சம் உண்மையை எழுதலாமே..." என்பதே என் வேண்டுகோள்.

இதுபோன்று பலர் பல தவறான தகவல்கள் தெரிவிப்பதால் அறிந்தோர் அது பற்றி எழுதி பதிய வேண்டி இருக்கிறது.

ஆனால், இது தவறென்று உங்களைப்போன்றவர்களால் பிரஸ்தாபிக்கப்படுகிறது.

இது இப்படியே தொடர்ந்தால்...
பதிவுலகிற்கு அது கேடு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தள நிர்வாகி அவர்களே...

ஆதாரம் இன்றி வெற்று வன்மம் கொண்டு பொய்யாக தமிழில் இஸ்லாமிய மார்க்கம் பற்றி தூற்றி எழுதுவோரை சுட்டிகளுடன் பட்டியல் போட்டு, 'இவர்களை வாய்ப்பிருந்தும் கண்டித்து உள்ளீர்களா' என்று கேட்டால்... 'அதெல்லாம் நான் பார்க்கவில்லை என்று சொல்கிறீர்கள்'. (உற்று நோக்கி, தொட்டு எடுத்து, நக்கி பார்க்க சாத்தியம் இருந்தும்... ஏதும் செய்யாமல் இதற்கு பெயர் தக்காளி ஜூஸ்..! இரத்தம் அல்ல..! என்ற முடிவுக்கு வருவது ஏனோ..!)

ஆனால்,
எங்கோ தூரத்தில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகள், பாமியான் சிலை, பற்றி எல்லாம் அது இரத்தம் என்று நான் அறியாவிட்டால்... நான் மதவாதி..! பயங்கரவாதி..!

ஐயா தள நிர்வாகி அவர்களே...

அடுத்தவர் முதுகில் குறை காணும் முன்னர் தங்கள் முகத்தையாவது ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளலாமே...?

இப்போதுதான் நடுநிலை முக்காடு நழுவி விட்டதே..?

சிராஜ் said...

சகோ நடா,
/* ஒரு நிறுவனத்தின் இக்கட்டான அவசரநிலைகளில் உடனடியாக ஒரு முடிவைக் கொண்டு வந்து விடமுடியாது.தமிழ்மணம் காலம் தாழ்த்தியாவது தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.எனவே இதனை மீண்டும் கேள்விக்குட்படுத்துவது சரியா? */
நான் இப்பொழுது அந்த கேள்வியை மீண்டும் கேட்கவே இல்லை. இப்படி நடந்து இருக்கலாம் என்று தான் சொன்னேன்.

சிராஜ் said...

/* நாம் உள்ளதை உள்ளபடி ஆராய்வோம், இங்கு நான் சொல்வது யாரையும் தாக்க அல்ல. ஒரு refresh அவ்வளவே. குல்பியானந்தா பதிவு வழிய இழுக்கப்பட்டதா? அல்லது அதுவும் ஒரு flow வில்,
parody யாக வந்ததா???? இது பற்றி உங்கள் கருத்தென்ன??? அதன் பின்னூட்டங்களை போய் பார்வை இடுங்கள். இதை சொல்வதற்காக நீங்கள் என்னை தவறாக நினைக்கக் கூடாது நடா. எந்த இலங்கை பதிவரும் அதை கண்டிக்க வில்லை. மாறாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்கள்.சரி அது ஒரு குரூப் என்று வைத்துக் கொள்வோம். மற்ற இலங்கை பதிவர்களாவது கண்டித்து இருக்கலாமே. அப்படி ஒன்றை பார்த்ததாக எனக்கு நினைவில்லை. அதன் பின் தானே அனைத்தும் தொடங்கியது. */

இதில் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்....

சிராஜ் said...

நடா,

/* பொங்கல் கொண்டாட விரும்புவர்கள் தாராளமாக கொண்டாடிக்கொள்ளட்டும். நாங்கள் வேண்டாம் என்று பதிவு போட்டோமா? இல்லையே. நீங்கள் ஏன் கொண்டாடவில்லை என்று எங்களை ஏன் வம்பு இழுக்க வேண்டும்???? கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் எங்கள் இஷ்டம் தானே??? அந்த பதிவில் ஏன் எந்த நடுநிலையாளர்களும் வந்து கருத்து கூற வில்லை????

நடா, சுருக்கமாக நாங்கள் முதல் தாக்குதல் நடத்தவில்லை, பதில் தாக்குதல் தான் தொடுத்தோம். யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இப்பொழுதும் இல்லை எப்பொழும் வராது. */

இது பற்றியும் உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ரொம்ப தூரம் செல்ல வேண்டாம்...

இந்த மாதம்
வட்டாட்சியார் அலுவலகத்தில் ராத்திரியில் ரகசியமாக
பாகிஸ்தான் கொடி ஏற்றி
அதன்மூலம் மதக்கலவம் தூண்டி
அதை பி ஜெ பிக்கு ஓட்டு அறுவடை யாக்க முயற்சித்த கயவர்களை...
பற்றி கண்டித்து வேண்டாம்... வருத்தப்பட்டாவது உங்களில் எத்தனை நடுநிலை முக்காடுகள் பதிவு போட்டுள்ளீர்கள்,
சொல்ல முடியுமா..?

அதை நான் பதிவாக போட்டால் தீவிரவாதி என்பீர்கள்.

சரி வேண்டாம்...

எனவே...
ஒரு மாற்றுப்பார்வையுடன்...

அவர்களை கண்டுபிடித்த காவல்துறை நல்லவர்களை பாராட்டி பதிவிட்டேன்.

உங்களில் எத்தனை நடுநிலை முக்காடுகள் இவர்களை பாராட்டி உள்ளீர்கள்..?
சொல்ல முடியுமா..?

இப்போது மேலே சென்று நான் எழுதிய முதல் பின்னூட்டத்தை படியுங்கள்... புரியுதா என்று பார்க்கிறேன்..!

ராஜ நடராஜன் said...

// //ஹேமா said...

நடா... நீங்களுமா!என்ன எழுதியிருக்கிறீங்கன்னு தெரில.நிச்சயம் கும்மியடிப்பாங்க.வந்து வாசிக்கிறேன் !

என்ன...நிறைய லீவு குடுத்திருக்கிறாங்களாகும் !//

ஹேமா!நேற்று விக்கிபீடியாவுக்கும்,கூகிளுக்கும் ஆதரவாகவும் சோபா,நாற்காலி மாதிரி பேச்சுரிமைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராகவும் மௌன விரதம்:)மேலும் பின்னூட்டக் கருத்துக்களையும் பார்த்து விட்டு கருத்துக்கள் சொல்லலாமே என்று இப்ப பின்னூட்டம் தொடர்கிறேன்.

நிறைய லீவா!இங்கே வெள்ளி,சனி என்று இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்குது.கூடவே அலுவல் அதிகார பூர்வமா முகநூல்,ட்விட்டரையெல்லாம் மேய வேண்டிய கட்டாயம்:)எனவே பணியும் லீவு மாதிரிதான்.

January 19, 2012 9:38 AM
Delete
Blogger தருமி said...

காட்டான் மிகச் சரியாகச் சொல்லியுள்ளார். நன்றி.

//இஸ்லாத்தை தாக்கும் பதிவர்கள்,// - யாருங்க அவர்களெல்லாம்? மதங்களில் உள்ள, மத நம்பிக்கைகளில் உள்ள எனக்குக் தெரிந்த தவறுகளை நான் சுட்டுவதுண்டு. மதங்களைப் பதிவர்கள் எப்படி தாக்க முடியும்? நம் கைகளில் இருப்பது பேனாதான்; பீரங்கியுமல்ல, கடப்பாரையுமல்ல.//

தருமி ஐயா!தொடர் கருத்தில் உங்கள் பின்னூட்டம் பார்க்க தவறி விட்டேன்.நானறிந்து இதுவரை யாரையும் தாக்காமல் அறிவுபூர்வமாக மதம் சார்ந்த் கருத்துக்களை வெளியிடுபவர்கள் நீங்கள்,பதிவர் சார்வாகன் எனலாம்.கோவி.கண்ணன் நீண்ட காலமாக கருத்துக்கள் வைத்தும் இப்பொழுது விவாதங்களில் சிக்கிக்கொண்டார்.மதம் சார்ந்த விவாதங்களின் போக்கு சரியாக இல்லை.வாய்மூடி மௌனியாக இருக்கும் பட்சத்தில் இவற்றின் பரிமாணம் வேறு திசை நோக்கியே செல்லக்கூடும்.

நம்ம கையில் பேனா கூடா இல்லை.வெறும் தட்டச்சு பட்டன்கள் மட்டுமே:)

ராஜ நடராஜன் said...

சகோ!முகமது ஆஷிக்!நான் பொறுமையாக அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் மதிப்பளித்து பதில் சொல்லி வருகிறேன்.இது வரையில் இன்னும் பதிவர் வவ்வால் அவர்களின் கருத்தும்,பதிவர் சிராஜின் வினாக்களும் என தர்க்கம் அதன் சரியான பாதையில் போய்க்கொண்டேயுள்ளது.உங்களின் தொடர் பின்னூட்டங்களில் உங்கள் கோபத்தின் வெளிப்பாடு தென்படுவதோடு பதிவுகள் ஏன் பின்னூட்டங்களால் திசை மாறிப்போகின்றன என்பதற்கு இறுதியாக நீங்கள் இடும் பின்னூட்டம் உதாரணம்.

எதைப் படிக்க வேண்டும் படிக்கக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நினைக்கிறேன்.நீங்கள் அதையேன் படிக்கவில்லையென்று எதிர்க்கேள்விகள் போடுகிறீர்கள்.

பதிவர் சுவனப்ரியன் ஒரு கருத்தை வெளியிட்டார்.அதற்கு நான் மறுமொழி சொல்லியுள்ளேன்.இடையில் நீங்கள் புகுந்து திருநெல்வேலிக்கே அல்வாங்கிற மாதிரி இஸ்லாமைப் படிக்கவேண்டும் என்கிறீர்கள்:)

என்னைக் கவரும் எதையும் உள்வாங்கிக் கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

நான் ஏற்கனவே டிஸ்கியில் முன்பு விவாதித்து களைத்துப் போன இருதரப்பு நண்பர்களுக்கான பதிவல்ல என்று குறிப்பிட்டுள்ளேன்.பின்னூட்டத்திலும் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.அப்படியிருந்தும் உங்கள் பின்னூட்டத்தில் கோபச் சொற்கள் உதிர்வதின் காரணம் என்ன என்பதையும் என்னால் உணர முடிகிறது.

எனது நடுநிலை முக்காடு நீக்கியதற்காக உங்களுக்கு நன்றி சொல்லி உங்களுக்கான மறுமொழியை முடித்துக்கொள்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//Karikal@ன் - கரிகாலன் said...

நடராஜன் சார், ரொம்பவே நொந்திட்டீங்க போலீருக்கு
பதிவில் தெரியும் உங்கள் ஆதங்கம் நன்றாகவே எங்களுக்கு புரிகிறது
ஆனால் புரிய வேண்டியவங்களுக்கு புரியாதே சார்//

வாங்க கரிகால சோழரே!உங்கள் பின்னூட்டமும் பதிவர் தருமியின் பின்னூட்டம் போலவே தவறிவிட்டது.
இதோ முந்தையப் பின்னூட்ட மறுமொழி சொல்லும்வரை உங்கள் பின்னூட்டத்திற்கான பொருள் விளங்கவில்லை.இப்பொழுது புரிகிறது:)நன்றி.

ராஜ நடராஜன் said...

//Karikal@ன் - கரிகாலன் said...

//குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று பெண்கள் திட்டுவது போல் மதம் என்ற சொல்லில் அப்படி என்னதான் இருக்குதோன்னு தெரியவில்லை//

//காரணம் மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை//

இதையும் நீங்கதான் எழுதியிருக்கிறீங்க
அப்புறம் எதுக்கு சார் உங்க நேரத்தை விரயம் செய்றீங்க//

கரிகால சோழரே!உங்களின் இன்னுமொரு பின்னூட்டம் கண்டேன்.இந்தப் பதிவின் நேரத்தை விட பின்னூட்டங்கள் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன.கால விரயமா என்று தெரியவில்லை.பதிவுலகம் இன்னும் மதம் சார்ந்து எப்படி திரும்பும் என்று எதிர்காலத்தில் தீர்மானிப்பதற்கான அசைபோடுதலாக் கடந்த கால நினைவுகளாக இந்தப் பதிவு மாறும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மதிப்பிற்குரிய ஐயா தள நிர்வாகி அவர்களுக்கு,

//எதைப் படிக்க வேண்டும் படிக்கக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நினைக்கிறேன்.நீங்கள் அதையேன் படிக்கவில்லையென்று எதிர்க்கேள்விகள் போடுகிறீர்கள்.//

இதைத்தான்... இதைத்தான்... இதையேத்தான் நானும் உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

அத்வானி பாபர் மசூதி இடிப்பு பற்றி எழுதினால்... தலிபான் பாமியான் சிலை இடிப்பு பற்றி ஏன் எழுதவில்லை... என்று கேட்பது மட்டும் சரியா..? (பதிவில் இன்னும் நிறைய உள்ளன... ஓர் உதாரணம் இது)

எதை எழுத வேண்டும் எழுதக்கூடாதென்று தீர்மானிப்பது எனது உரிமை என நினைக்கிறேன்.நீங்கள் அதையேன் எழுதவில்லையென்று எதிர்க்கேள்விகள் போடுகிறீர்கள்.

சரிதானே..? நடுநிலை முக்காடு இன்னும் நன்றாக விளகுகிறதா..?

முகம் மூடி இருப்பதுதான் இஸ்லாமிய மார்க்கம் என்ற பொருள்படி இங்கே எழுதினீர்கள். அது தவறு என்று அறிய இஸ்லாமை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினால்...

என்னோடு பேசுவதை நிறுத்தி விடுகிறீர்கள்.

ஆனால்....

அந்த 'கழிவறை புகழ்' பதிவர் போல பின்னூட்டப்பெட்டியை மூடி விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ராஜ நடராஜன் said...

சகோ சிராஜ்!நண்பர் வவ்வாலுடன் இணைந்து பின்னூட்டங்களை சரியான பாதையிலேயே கொண்டு செல்கிறீர்கள்.நன்றி.

குல்பியானந்தா,தாடி போன்ற பதிவுகள் என்னைப் பொறுத்தவரை தவறானவைதான்.ஆனால் அவைகளுக்குப் பின்பான உள்குத்துக்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால் மதம் தவிர வேறில்லை என்ற நிலைப்பாட்டில் சிலர் இருப்பதன் காரணம் கொண்டுதான்.ஒரு இந்துத்வாவாதியையோ அல்லது கிறுஸ்தவனையோ மதம் குறித்து ஏதாவது கிண்டல் சொன்னால் தூசி தட்டிய மாதிரி போய்விடுவார்கள்.ஆனால் இஸ்லாமியர்களைக் கோபப்படுத்துவது எளிது என்பது குல்பியானந்தா போன்ற பதிவுகளில் உறுதியாகிறது.மதத்தின் கடின நிலை முறுகல் நிலைக்கு கொண்டு செல்கிறது.இதற்கு இலங்கைத் தமிழனாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லையென நினைக்கிறேன்.

மேலும் யாரும் கண்டிப்பதில்லையென்பதற்கு காரணம் மதம் குறித்து மட்டுமே பதிவிடுவதின் மீதான கோபம் கூட இருக்கலாம்.

சமூக ரீதியாக இஸ்லாமியர்கள் இந்தியாவில் மிகவும் பின் தங்கியுள்ளார்கள்.கல்வி,பொருளாதாரம் என முன்னேறுவது மட்டுமே இஸ்லாமியர்களுக்கான அங்கீகாரமாக இருக்க முடியும்.இதே நிலை இலங்கையில் வடகிழக்கில் வாழும் அனைவருக்கும் பொருந்தும்.இது தவிர்த்து மதத்திற்கு முக்கியம் கொடுத்து அதன் பாதையில் மட்டுமே சென்றால் பாகிஸ்தானில் ஒருபகுதியினருக்கு கல்வி,சமூக அந்தஸ்தில்லாத நிலையே தொடரும்.

9/11 இஸ்லாத்தை இன்னும் இக்கட்டில் தள்ளியுள்ளது.எனவே மேற்கத்திய கல்வி,விஞ்ஞானம் என்று முன்னேறுவதிலும் கூட தடைகள் உள்ளன.எனவே இந்திய இஸ்லாமியனாக இந்தியா தரும் கருத்துரிமை,சம வாழ்வு கோட்பாட்டில் கல்வி,பொருளாதாரம் சார்ந்து முன்னேறுவதே புத்திசாலித்தனம்.அதை விடுத்து மதம் மட்டுமே பிரதானம் என்ற கோட்பாட்டில் சென்றால் இஸ்லாமியர்களின் கோபங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

உங்களின் தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ!முகமது ஆஷிக்!நான் பதிவர் சிராஜின் பின்னூட்டத்துக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லிகிட்டிருக்கேன்.நீங்களோ பதிவின் சாரத்தில் வாங்க சண்டை போடலாம்ங்கிறீங்க.

உங்களைக் கோபப்படுத்தவோ,புண்படுத்தவோ விரும்பவில்லை.அதனால்தான் தர்க்கரீதியாக ஆரோக்கியமான் விவாதமாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் மறுமொழி சொல்லவேண்டாமே என நினைக்கிறேன்.நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

மதிப்பிற்குரிய தள நிர்வாகி அவர்களே,

//பதிவர் சிராஜின் பின்னூட்டத்துக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லிகிட்டிருக்கேன்.//---அப்படியா..?

அப்படி என்ன ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் என்று சகோ.சிராஜிடம் இனி கேட்கிறேனே..!

//குல்பியானந்தா,தாடி போன்ற பதிவுகள் என்னைப் பொறுத்தவரை தவறானவைதான்.//

இந்த பதிவுகளை...

//யாரும் கண்டிப்பதில்லையென்பதற்கு காரணம் மதம் குறித்து மட்டுமே பதிவிடுவதின் மீதான கோபம் கூட இருக்கலாம்.//

"உங்களுக்கு நல்லா வேனும்யா..." என்பது போன்ற இந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன், சகோ.சிராஜ்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//ஒரு இந்துத்வாவாதியையோ அல்லது கிறுஸ்தவனையோ மதம் குறித்து ஏதாவது கிண்டல் சொன்னால் தூசி தட்டிய மாதிரி போய்விடுவார்கள்.//

---ஆக, எங்களின் மதம் குறித்து கிண்டல் செய்வது சரி என்பதும்...

தூசி போல தட்டி விட்டு போகத்தான் போகவேண்டும், அதுதான் உங்கள் தலைவிதி என்பதும்...

சரியா என்று சகோ.சிராஜ்... நீங்கள் கேட்டு சொல்லுங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//சமூக ரீதியாக இஸ்லாமியர்கள் இந்தியாவில் மிகவும் பின் தங்கியுள்ளார்கள்.//

---இதை ராஜேந்திர சச்சார் கமிஷன்,
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் ஆதார புள்ளி விபரத்தோடு... கூடவே பல தெளிவான பரிந்துரைகளையும் அரசுக்கு கூறியுள்ளன.

அவற்றை எல்லாம் எதற்கு இந்த அரசு அமல்படுத்தவில்லை என்று... இந்திய முஸ்லிம்கள் குறித்து அக்கறை கொண்ட 'நடுநிலை முக்காட்டு பதிவர்கள்' வாயை திறப்பது இல்லை என்பதால் முஸ்லிம் பதிவர்கள் அதை தங்கள் பதிவில் எழுதலாமா... வேண்டாமா... என்று கேட்டு சொல்லுங்கள் சகோ.சிராஜ்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//9/11 இஸ்லாத்தை இன்னும் இக்கட்டில் தள்ளியுள்ளது.//--உண்மை.

இந்த அக்கிரமத்துக்கு காரணகர்த்தா முஸ்லிம்கள் என்று நடுநிலை முக்காட்டு பதிவர்கள் தவாறாக நம்பிக்கொண்டு இருக்கும்போது...

தான் செய்துவிட்டு முஸ்லிம்கள் மீது அநியாய பழி போட்ட இதற்குரிய அமெரிக்க/யூத பின்னணிகளை...

(இது அமெரிக்கர்களே கொடுக்கும் ஆதாரம்: விபரம் அறிய...
http://en.wikipedia.org/wiki/Loose_Change_%28film%29 )

முஸ்லிம்கள் தங்கள் பதிவில் போட்டு விளக்கி எதிர்க்கலாமா.. வேண்டாமா.. என்று கேட்டு சொல்லுங்கள் சகோ.சிராஜ்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அப்புறம்....

//இந்திய இஸ்லாமியனாக// வேண்டுமானால் முஸ்லிமாக இருக்க கூடாதா சகோ.சிராஜ்..?

//இந்தியா தரும் கருத்துரிமை,சம வாழ்வு கோட்பாட்டில் கல்வி,பொருளாதாரம் சார்ந்து முன்னேறுவது// இதெல்லாவற்றிற்கும் இஸ்லாம் குறுக்கே நிற்கிறதா சகோ.சிராஜ்..?

//மதம் மட்டுமே பிரதானம் என்ற கோட்பாட்டில் சென்றால் இஸ்லாமியர்களின் கோபங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.//

---எப்போதும் கோபத்தோடு இருக்க இஸ்லாம் சொல்கிறதா சகோ.சிராஜ்.

இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் ஒரு காரியத்தை இந்தியனாக செய்ய முடியுமா சகோ.சிராஜ்..?

உதாரணம்--
அரசு நடத்தும் டாஸ்மாக்கை இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?

அரசு விற்கும் லாட்டரி டிக்கட்டை இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?

கொல்கத்தா/மும்பை அரசு அங்கீகரித்து இருக்கும் விபச்சார விடுதிகளை இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சிராஜ்....
ஒரு விளக்கம்..!

//இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?//

என்றால்... கூட சேர்ந்து நாமும் அதில் சட்டப்பூர்வமாக இந்தியனாக ஈடுபடலாமா அல்லது முஸ்லிமாக ஒதுங்கி நிற்கலாமா..?

இஸ்லாமிய கோட்பாட்டை முன்னிலை படுத்தி, முஸ்லிமாக ஒதுங்கி நின்றால்...

அது,

/இந்தியா தரும் கருத்துரிமை,சம வாழ்வு கோட்பாட்டில் கல்வி,பொருளாதாரம் சார்ந்து முன்னேறுவது/ முஸ்லிம்களுக்கு தடைப்படுமா..?

வவ்வால் said...

ராஜ்,

ஹி..ஹி இந்த அக்கப்போருக்கு நடுவிலும் நாங்க பேசிக்கிட்டு இருக்கிறத கவனிக்கிறிங்களா?

சகோ.சிராஜ் கொஞ்சம் பொறுப்பா. பொறுமையா பேசுவதால் சாத்தியம் ஆச்சு. ஆஷிக் கொஞ்சம் துடுக்கா வாதத் திறமைக்கு வெற்றி கிடைக்கும்னு பேசுகிறார். ஆனால் வாதத்தில் வெற்றிப்பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் காட்டும் வேகம் சிந்திப்பதில் குறைந்து விடுகிறது. இதுக்காக என் மேல் பாய்வாரா? :-))

//இந்த மாதம்
வட்டாட்சியார் அலுவலகத்தில் ராத்திரியில் ரகசியமாக
பாகிஸ்தான் கொடி ஏற்றி
அதன்மூலம் மதக்கலவம் தூண்டி
அதை பி ஜெ பிக்கு ஓட்டு அறுவடை யாக்க முயற்சித்த கயவர்களை...
பற்றி கண்டித்து வேண்டாம்... வருத்தப்பட்டாவது உங்களில் எத்தனை நடுநிலை முக்காடுகள் பதிவு போட்டுள்ளீர்கள்,
சொல்ல முடியுமா..?

அதை நான் பதிவாக போட்டால் தீவிரவாதி என்பீர்கள்.

சரி வேண்டாம்...

எனவே...
ஒரு மாற்றுப்பார்வையுடன்...

அவர்களை கண்டுபிடித்த காவல்துறை நல்லவர்களை பாராட்டி பதிவிட்டேன்.

உங்களில் எத்தனை நடுநிலை முக்காடுகள் இவர்களை பாராட்டி உள்ளீர்கள்..?
சொல்ல முடியுமா..?//

ஆஷிக்கிற்கு இங்கிருந்து ஆரம்பித்தாலே போதும் என நினைக்கிறேன்...

காவல் துறையினர் கடமையைப்பாரட்டியது சிறப்பான குணம். சரி எத்தனைப்பேர் இதை செய்தார்கள் என்று கேட்டீர்கள். அதுவும் சரி என வைத்துக்கொள்வோம். சரி நீங்கள் ஏன் பாராட்டினீர்கள் ... உங்களுக்கு காக்கி சட்டை என்றால் ஒரு பக்தி... பாசமா?

ஏன் என்பது நான் சொல்லாமல் புரிந்திருக்கும்.

ஏன் மற்றவர்கள் பாராட்டவில்லை நல்லக்கேள்வி, இப்போது பாராட்ட மறந்தவர்கள் இமாம் அலியை கைது செய்த போதும், என் கவுண்டர் செய்த போதும் பாராட்டவில்லை என்பதாக நான் நினைக்கிறேன்.ஒரு வேளைப்பாராட்டி இருந்தால் கண்டிப்பாக தெரிந்திருக்கும் உங்களுக்கு. சொல்லுங்களேன்.

நீங்கள் பாராட்டியதைப் பாராட்டவில்லை எனில் நடுநிலை முக்காடு/முந்தாணை நழுவியதாகப்பார்க்கப்படுமா?

அப்படி எனில் பாமியான் புத்த சிலை இடிப்புக்கு மட்டும் கண்டனம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று நீங்களும் கேட்டீர்கள், சரியாக்கேட்டாய் என் செல்லமேனு உங்களுக்கு பாராட்டும் கிடைக்கும். ஆனால் பாபர் மசூதி இடிப்பு என்பது இஸ்லாமியர்களின் மீதான அடக்கு முறை அது தவறு என்று , இஸ்லாமியர் அல்லாதோரும் சொல்வார்கள்.

அதே சமயத்தில் பாமியான் புத்த சிலை இடிப்பு தவறு என்று இஸ்லாமியர்கள் சொல்வது இல்லை, மார்கத்துக்கு எதிரானது சிலைகள் இடித்தால் என்ன தப்பு என்று ஒன்றாக முழங்குவதைக்கேட்டிருக்கிறோம்.

தொடரும்...

வவ்வால் said...

தொடரும்...
ஆஷிக்,

//இங்கே...முகத்தை மூட சொல்வது மார்க்கம் என்றும், முகத்தை மறைக்காதவர்கள் மார்க்கத்தை கழட்டி விட்டு வெளியே சென்று விட்டதாகவும் எழுதி உள்ளீர்கள//

இது காரோட்டும் பெண்கள் முகம் மறைக்காமைக்கு என்று நினைக்கிறேன்.

ராஜ் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல, மார்க்கம் சொன்னது என்று சொல்லி அரசின் சட்டத்தை மீறவில்லை ஒத்துழைத்தார்கள் என்று சொல்லவே.

உதாரணமாக , இந்தியாவில் புகைப்பட வாக்காளர் பட்டியலுக்கு படம் எடுக்க முகாம் வைத்து படம் எடுத்தார்கள் , ஆனால் புர்கா நீக்காமல் படம் எடுக்க வேண்டும், இது மார்கத்துக்கு எதிரானது என்று தமிழ் நாட்டில் முழக்கம் எழுந்தது.

முகத்தை மூடிக்கொண்டு புகைப்படம் எடுத்தால் அந்த வாக்காளர் அட்டையில் யார் ஓட்டு போட வந்தார்கள் என்று எப்படித்தெரியும் என்று கூட யோசிக்காமல் மார்க்க போதனை செய்தார்கள் தமிழ் நாட்டில்.

சிறிய சர்ச்சைக்கு பின் புகைப்படம் எடுக்கப்பட்டது ஆனால் அந்தப்பட்டியல் பொதுப்பார்வைக்கு வைக்கக்கூடாது என்று மீண்டும் ஒரு சர்ச்சை.அதுவும் பின்னர் அடங்கியது. இதெல்லாம் தான் வரட்டுத்தனமான கொள்கைகள்.

ஒரு நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட பின்னரே மதம்,மார்க்கம் எல்லாம் என்பதை சுட்டிக்காட்டவே ராஜ் சொன்ன வளைகுடாவில் காரோட்டும் பெண்கள் . மற்றப்படி அவர் எங்கே மதத்தை விட்டு போனார்கள் சொன்னார்.

நீங்களாகவே வலிந்து ஒரு காரணத்தை ஏன் திணிப்பானேன்.

-------------------
இது வேறு....

இப்போதும் கூட இஸ்லாம் அறிவியல் மார்க்கம் என்பீர்கள், ஆனால் பரிணாமவியலை இல்லை என்பீர்கள். யார் வேண்டுமானாலும் வாதம் செய்ய வாருங்கள் என்றீர்கள். அஸ்மா அவர்கள் பதிவில் என்னிடமும் இப்படி ஏதோ சொன்னீர்கள், சுவனப்பிரியன் பதிவில் சார்வாகனிடமும் சொன்னீர்கள்.5 நிமிடத்தில் உங்களை பதில் சொல்ல முடியாமல் ஓட வைக்க முடியும். ஆனால் வாதத்தில் வெல்வதல்ல எனது நோக்கம். ஆனால் நீங்கலோ யாரோலோ திணிக்கப்பட்ட கருத்துக்களை ஏன்,எதற்கு என யோசிக்காமல் சவால் விட்டுக்கொண்டு உலா வருகிறீர்கள்.

உங்கள் பதிவில் அப்படி என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று கேள்வியும்போட்டுள்ளேன் பாருங்கள். முடிந்தால் என்னிடம் உங்கள் கேள்விகளை தொடருங்கள். நான் கேட்டதுக்கு ஒரு முன்னுரைக்கொடுத்து விட்டு.

வவ்வால் said...

ராஜ்,

ஆஹா நான் ஒரு பின்னூட்டம் தயார் செய்வதற்குள் குலுக்கி உடைத்த கோலி சோடா போல பொங்கிட்டாரே ஆஷிக் :-))

//உதாரணம்--
அரசு நடத்தும் டாஸ்மாக்கை இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?

அரசு விற்கும் லாட்டரி டிக்கட்டை இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?

கொல்கத்தா/மும்பை அரசு அங்கீகரித்து இருக்கும் விபச்சார விடுதிகளை இந்திய முஸ்லிமாக ஆதரிக்கலாமா கூடாதா...?//

அமெரிக்க/ஐரோப்பிய யூனியனில் மேற் சொன்ன அனைத்தும் கட்டுப்பாடின்றி கிடைக்கிறது, அங்கும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் ஆதரிக்கிறார்களா இல்லை எதிர்க்கிறார்களா அல்லது கூட சேர்ந்த்து அனுபவிக்கிறார்களா என்பதைக்கேட்டு விட்டு பின்னர் ஒரு முடிவுக்கு வரவும் ஆஷிக் :-))


இன்னும் சொல்லப்போனால் வளைகுடா நாடுகளில் கூட எல்லாம் நடைப்பெறுகிறது. கோடம்பாக்கது துணை நடிகைகள் கலைச்சேவைக்கு என வளைகுடா நாடுகளுக்கு போய் வருகிறார்கள்.

இதெல்லாம் சமூக அவலம் இல்லையா எனலாம்,ஆனால் அவர்கள் நாங்கள் கஷ்டப்ப்டும் போது யார் வந்தார்கள் ,இப்போ என்ன அட்வைஸ் என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?

சரி உங்களுக்கு வங்கி கணக்கு இருக்கா? சேவிங்க்ஸ் கணக்கா? கரண்ட் அக்கவுண்டா? எப்படி முதலீட்டை நிர்வகிக்கிறீர்கள்? நீங்கள் மார்க்க சீலர் ஆச்சே என்பதால் கேட்டேன் :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்! என முழுசாகவே போட்டுக்கிறேன்.இல்லாட்டி கூட்ட நெரிசலில் நீங்கள் காணாமல் போவீர்கள்.

கடைசிப் பந்திக்கு உங்களிடம் உட்கார்ந்து கொள்ளலாமே என இப்பொழுது உங்களுடன்.

நீங்க சொன்னமாதிரிதான் இன்றைக்கு சினிமா கூடப் பார்க்கவில்லை:)
சரியான மருந்து கிடைக்கும் பட்சத்தில் மத வியாதி தீர்க்கக் கூடிய ஒன்றுதான்.ஒருவேளை முற்றிய நோய் காரணமாக குணமாக காலம் பிடிக்கலாம்.இதற்கு மருத்துவ கல்லூரியில் படித்தெல்லாம் குணப்படுத்த முடியாது.ஒருவேளை இந்துத்வாவாதிகள் தங்களுக்கென்று தனியாக தளம் அமைத்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில் இதற்கான தாக்கம் பதிவுகளில் குறையலாம்.

மேற்கத்திய கலாச்சாரத்துடனான clash of civilization இஸ்லாமிய தீவிரவாதமாக ஒசாமா
மூலமாக உருவாகியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.கூடவே நீங்கள் நினைவு படுத்தியபடி யாசர் அராபத்தின் பாலஸ்தீனிய போராட்டங்கள் கூட வெற்றிபெறாமல் இழுத்தடிக்கப்பட்டதும் கூட தற்போதைய இஸ்லாமின் சூழலுக்கு காரணமாக இருக்கலாம்.

விடுதலைப்புலிகளை கிளிநொச்சி நகர்வுக்கான காலகட்டத்திற்கும் முன்பாக 2003ம் வருடத்திற்கு முந்தைய காலகட்டமாகவும் போர் மேக சூழல் துவங்கி கிளிநொச்சி நகர்வு என்ற நிலைகளில் மட்டுமே விவாதங்களையும்,விமர்சனங்களையும் முன்வைக்க முடியும்.

ப்திவு சார்ந்து இலங்கை முஸ்லீம்கள் இடநகர்வு,படுகொலையில் பங்கு கொண்டவர்களாக கிழக்கே கருணா,பிள்ளையான் குழுக்கள் கூட பங்குதாரர்கள்.ஆனால் கோபத்தையும்,பாரத்தையும் சுமப்பவர்கள் என்னவோ விடுதலைப்புலிகள் மட்டுமே.

இன்று இந்தியா வெற்றிகரமாக சுதந்திரமான தேசமாகி விட்டதால் சுதந்திரப் போராட்டத்தின் இழப்புக்கள்,தவறுகள் என எதுவுமே விமர்சனத்துக்குள்ளாவதில்லை.எந்தப் போராட்டத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும்.வெற்றி தோல்விகளைப் பொறுத்தே விமர்சனங்கள் மாறும்.

ஈழத்தமிழர்கள் போராட்டத்திலும் சில கருப்பு பக்கங்களாக முஸ்லீம்கள் நகர்வு,ராஜிவ் கொலை என தவறுகள் இருக்கவே செய்கின்றன.இவைகளின் காரணம் கொண்டே அவர்களின் ஆயுதம் ஏந்த்லையும்,விடுதலைப் போராட்டத்தையும் தவறெனவோ,ம்க்க்ளின் ஆதரவையோ கொச்சைப்படுத்தி விடவோ முடியாது.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் சாயலை தமிழகம் துவக்கத்தில் ஆதரவு,ராஜிவ் கொலையின் கால கட்ட கோபம்,முல்லிவாய்க்காலுக்கு அப்பாலான் தற்போதைய ஆதரவு என சரியாகவே பிரதிபலிக்கிறது.

நீங்கள் நினைவுபடுத்தும் யாசர் அராபத் கூட துவக்கத்தில் டெரரிஸ்ட் என்றே முத்திரை குத்தபப்ட்டவர்.மேலும் இஸ்ரேல் மக்கள் மீதான தற்கொலைத் தாக்குதலை பால்ஸ்தீனிய ஹமாஸ் இயக்கங்கள் செய்தவையே.ஆனாலும் அவர்களுக்கான சுதந்திரப் போராட்டத்தில் நியாய்ம் உண்டு.பாலஸ்தீனிய விடுதலைக்கு இந்தியா ஆதரவு நிலையே.ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான் நிலைக்கு ராஜிவ் கொலை,புவியியல் சுயநலங்கள்,அரசியல் என காரணங்கள் இருக்கின்றன.

//இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி எல்லா மதத்தினரும் பாலஸ்தீனத்திற்கு சாதகமான எண்ணமோ அல்லது எதிர்ப்போ காட்டாமல் இருக்கிறார்கள். ஆனால் ஈழம் என்பதற்கு எதிரான எண்ணம் எப்படி வளர்த்துக்கொள்கிறார்கல் சிலர் என்பது எனக்கு புரியவில்லை.//

பாலஸ்தீனியப் போராட்டம் குறித்து இந்திய எலைட் குழுக்கள்,பத்திரிகைகள்,டெல்லி அரசியல் தவிர யாருக்கும் விரிவான பார்வையில்லை.இந்திய முஸ்லீம்களுக்கோ மதம் என்ற ஒற்றைப் பார்வை மட்டும் போதும் பாலஸ்தீனியத்தை ஆதரிக்க.எனவே உங்கள் வார்த்தைகள் அடைப்பனாக...

//இப்போது யார் மீது யார் கல்லெறிகிறார்கள் என்பதே தெரியாமல் சரமாறியாக எறிந்துக்கொண்டு இருக்கிறார்கல் என்றே தெரிகிறது.மாட்டினவனுக்கு மண்டை பிளப்பு தான் :-))//

உங்கள் சிரிப்பானுக்கு எதிர் சிரிப்பான் போட்டுக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!தமிழ்மணம் முடக்கம் செய்வோம் கோசம் எழும்பிய காலகட்டத்தில் நீங்கள் பதிவையும்,பின்னூட்டங்களையும் நீங்கள் கண்டீர்களா எனத்தெரியவில்லை.விவாதக் களம் பன்னிக்குட்டி ராமசாமியின் தளத்தில் தமிழ்மண நிறுவனர் ஒருவரின் கருத்துக்கு எதிர்கருத்தென பதிவின் சாரத்தை திசை திருப்பி விட்டார்கள்.அதே டெக்னிக்கை ஆஷிக் இங்கே பயன்படுத்துகிறார்.

முதலில் குரல் விடுவதும் பின் உள்குத்து பதிவுகள்,அதற்கு எதிர்பதிவுகள் என பதிவுலகம் திசை திரும்பி இன்னும் கசப்பான உணர்வுகளை கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடில்லை.

எனது தளத்தை தொடரும் நண்பர்கள் துவக்கத்தில் சொன்ன ஓடிவருவார்கள் பாருங்கள்,ஆதரவு முகமூடி போன்ற சொற்களுக்கு இப்பொழுதுதான் பொருள் புரிகிறது.

ஆஷிக் என்க்கு நடுநிலை முக்காடு பட்டம் தந்ததற்கும் அவரது இயல்புகளை அடையாளம் காட்டியதற்கும் நன்றி சொல்லி விட்டு நமது விவாதங்களைத் தொடரலாமே?

ராஜ நடராஜன் said...

//இதற்கு மருத்துவ கல்லூரியில் படித்தெல்லாம் குணப்படுத்த முடியாது.ஒருவேளை இந்துத்வாவாதிகள் தங்களுக்கென்று தனியாக தளம் அமைத்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில் இதற்கான தாக்கம் பதிவுகளில் குறையலாம்.//

வவ்வால்!ஆஷிக் அவர்களின் பின்னூட்டத்திலும் கூட ஒரு நன்மையென்றால் நீண்ட நெரிசலான பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லும் வேகத்தில் எழுத்துப்பிழைகள் செய்கிறேன் என்று சுட்டிக்காட்டினார்.அது உண்மையும் கூட என்பது மேலே அடைப்பானில் பொருள் மாற்றம் வந்ததை திரும்ப பார்க்கும் போது காண முடிந்தது.

எனவே இந்துத்துவாவாதிகள் போல் தனியாக தளம் அமைத்துக்கொண்டு என திருத்தி வாசிக்கவும்.

பத்திரிகை திருத்தம் விளக்கம் மாதிரி ஆகிப்போச்சே எனது பதிவு:)

வவ்வால் said...

ராஜ்,

எந்த பந்தியா இருந்தா என்ன,நம்ம வீட்டில் கணக்கா? விவாதிக்கலாம் தான் ஆனால், இதுக்கு ஒத்து போக நாம் தயார் ஆனால் மாற்று முகாம் தயாரா?

மருத்துவ கல்லூரி என்று சொன்னது தீர்வு எங்கே கிடைக்கும் என்பதன் குறியீடு , ரொம்ப குழம்பி போய் இருக்கிங்களோ.இது போன்ற விவாதங்களின் போது இப்போதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதில்லை.

சூளை நோய் என்று சொன்னதும் ஒரு குறியீடு,அது அல்சர் அல்லது அது போன்ற ஒரு வயிற்று வலி. எனவே வயிறு உபாதையில் கத்துவது போலத்தான் மதவாதிகளின் வாதமும்,வலி இல்லாதப்போது தேமே என்று இருப்பார்கள் :-))

அல்சருக்கு மருந்தை விட உணவுக்கட்டுப்பாடே போதும். மதத்துக்கு உணர்வுக்கட்டுப்பாடு :-))

அடடா இப்படிலாம் என்னையும் யோசிக்க வைக்குறாங்க பாருங்க :-))

----------

யாசர் அராபத் ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்தியவராக இருந்தாலும் அவருக்கு ஒரு போராளி இமேஜ் தான் இந்தியாவில் ,அவரை யாரும் துவேசத்துடன் பேச வில்லை என்று புரியவைக்கவே சொன்னது.

இராஜிவ் மரணம் பெருவாரியான அனுதாப தாக்கத்தை புலிகள் இழக்க காரணம் ஆயிற்று.அதே சமயம் வெகு ஜனம் ஈழ மக்களை வெறுக்கவும் இல்லை. புலிகளை ஆதரிக்காமல் ஈழ மக்களை ஆதரிப்போம் என்பதான ஒரு வழுக்கும் நிலை. இது ஈழ ஆதரவு மக்கள் சக்தி பெரும் சக்தியாக மாற தொடர்ந்து ஒரு தடையாகவும் இருந்தது. முள்ளி வாய்க்கால் காலக்கட்டத்தில் நன்கு தெரிந்தது.

-------------

சாந்தியும் பிரச்சினையின் போது நானும் பார்த்தேனே, அது தடம் புரண் டு வேறு திசையில் போனது. நானும் ஒரு சில பின்னூட்டங்கள் போட்டு ,நானும் ஒரு நடுநிலைவியாதி என காட்டிக்கொண்டேன் :-))பின்னர் தனியே ஒரு பதிவு போட்டு ,அது தவறான மொழிப்பெயர்ப்பு என்று சிக்காடா எல்லாம் சொன்னேன் , நீங்களும் பின்னூட்டம் போட்டீர்கள்.நீங்கள் கவனித்துப்பார்த்தால் தெரியும் இப்போது அதன் பயன்பாடு குறைந்திருப்பதை(பின்னணியில் என் பதிவும் ஒரு காரணம் என சுயப்பெருமை கொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு) :-))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.வவ்வால்,

வினவில் பின்னூட்டமிடும் காலத்திலேயே தாலிபானை தாளித்து இருக்கேன். உங்கள் ஆசைக்கு மீண்டும் ஒருமுறை இங்கே...

அதற்கு முன், பாமியான் பின்னணியையும் இன்று அறிந்து கொள்ளுங்கள்.

ஆப்கான் மக்கள் வறுமையில் செத்துக்கொண்டு இருக்க, உதவிக்கு ஐநாவிடம் தாலிபான் அரசு பணம் கேட்டால் அது கொடுக்க மறுத்து விட்டது. ஆனால், பாமியான் சிலையை world heritage center என்று அறிவித்து அதனை காப்பாற்றி பாதுகாக்க பல மில்லியன் டாலர் கொடுக்க முன் வந்தது.

"மனிதனுக்கு இல்லாத பணம் ஒன்றுக்கும் உதவாத கல்லுக்கா" என்று பாமியான் சிலையை தாலிபான் இடிப்பதாக அறிவித்தார்கள். அப்போது ஜப்பான் போன்ற அரசுகள் கூட இடிப்பதற்கு பதிலாக ஈட்டுத்தொகை கொடுக்க முன்வந்தும் கூட...

பாமியன் சிலையை தாலிபான் காட்டுமிராண்டிகள் இடித்ததுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

அடுத்து...

பாமியான் சிலை இடிப்பையும் பாபர் மசூதி இடிப்பையும் இணைக்கும் 'அறிவார்ந்த' உங்களிடம் இந்த கேள்வியை வைக்கிறேன்..!

பாமியான் புத்த சிலையை உடைப்பதற்கு பலத்த எதிர்ப்பு ஆப்கானிய எல்லைக்கு அப்பால் இருந்துதான் வந்தது.

ஏனெனில், அப்போது(ம் இப்போதும்) ஆப்கானில் அந்த இடிப்பை எதிர்க்க ஒரு பவுத்தர் கூட இல்லை..!

ஆனால்,

பாபர் மசூதி இடிக்கப்படும்போது... அதுபோன்ற நிலைமையா இந்தியாவில்..?

ஆக, இரண்டு இடிப்பும் ஒன்றா..?

சிந்தித்து பதில் சொல்லுங்கள்.

பாபர் மசூதி அத்வானி விஷயத்தில் எனது அதே போன்ற கண்டனத்தை இங்கே வார்த்தை மாறாமல் உங்களால் பதிய முடியுமா..?

தொடரும்....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தொடர்கிறது....
சகோ.வவ்வால்,

இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்...

ஏதோ ஒரு பழைய 'இசம்' ஒரு அதிகார வரம்புக்கு உட்பட்ட வட்டத்தில்(நாட்டில்) அல்லது மக்கள் வட்டாரத்தில் வழக்கொழிந்து போய் விட்டால், அது சுத்தமாக புதிய 'இசம்' ஆளும் வர்க்கத்தால் அல்லது மக்களால் அழிக்கப்படுகிறது. இது வரலாற்று இயல்பு.

இங்கே கவனிக்கபடுவது யாதெனில், அந்த பழைய 'இசத்'துக்கு மிச்சமீதி சொந்தக்கார் யாரேனும் அங்கே உள்ளாரா என்பதுதான். அப்படி ஒருவரேனும் இருந்தால்.... அவர் உரிமையயை நசுக்கி... அதில் அழிப்பு காட்டுமிராண்டித்தனம் கூடாது.

கம்யூனிசம் செத்து சோவியத் உடைந்தபோது பிரம்மாண்ட ஸ்டாலின் சிலைகள் மக்களால் உடைபட்டதை அறிந்திருப்பீர்கள்.

சதாம் உசேன் சிலைகள், பென் அலி சிலைகளை எல்லாம் மக்கள் உடைத்ததை பார்த்து இருப்பீர்கள்.

சைவ மன்னன் வைணவ மன்னனை தோற்கடித்து நாட்டை கைப்பற்றிய பின்னர் வைணவ கோவில்களை இடித்தது... vice versa. இப்படி நிறைய... நம் வரலாறில் படித்து இருப்பீர்கள்.

அடுத்து...

சகோ.வவ்வால்...

//உங்கள் பதிவில் அப்படி என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று கேள்வியும்போட்டுள்ளேன் பாருங்கள்.//

---என்ன சொல்கிறீர்கள்...?

இப்படி எந்த கேள்வி பின்னூட்டமும் என் தளத்தில் உங்களால் இடப்படவில்லை. இன்பாக்ஸ் எம்ப்டி யாகத்தான் உள்ளது. செக் பண்ணி விட்டேன்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///////////////////////////////////
உங்கள் பதிவில் அப்படி என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று கேள்வியும்போட்டுள்ளேன் பாருங்கள். முடிந்தால் என்னிடம் உங்கள் கேள்விகளை தொடருங்கள். நான் கேட்டதுக்கு ஒரு முன்னுரைக்கொடுத்து விட்டு.
///////////////////////////////////

ஹலோ... மிஸ்டர் வவ்வால்,

நான் அவரை போகச்சொன்னது எங்கே..?
நீங்கள் வந்தது எங்கே...?

அப்புறம்...

நீங்கள் போட்டதாக கூறிய அந்த கேள்வி பின்னூட்டம் எங்கே..?

ஏனுங்கோ திரு வவ்வால்...

இதிலுமா...
உங்கள் தலைகீழ் டுபாக்கூர் ரீல் 'திறமை'யை காண்பிப்பீர்கள்...?

உங்களிடமிருந்து
ஒரு
பின்னூட்டமும்
இதுவரை
எனக்கு
வரவில்லை..!

கோவி.கண்ணன் said...

திரும்ப திரும்ப விளக்கம் என்ற பெயரில் சொன்னதையே திரும்பச் சொல்லுவாங்க, உங்களையும் விளக்கச் சொல்லி மாற்றி மாற்றி அதையே சொல்லுவார்கள், உங்களுக்கு அலுக்காமல் இருந்தால் 200 பின்னூட்டம் வரைக்கும் சென்று அதன் பிறகு பின்னூட்ட பெட்டியை மூடலாம்.

நான் மதவாதி என்று அறிந்துள்ள குறிப்பிட்ட ஆள்களுக்கு பதில் சொல்வதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.

சிராஜ் said...

/* திரும்ப திரும்ப விளக்கம் என்ற பெயரில் சொன்னதையே திரும்பச் சொல்லுவாங்க, உங்களையும் விளக்கச் சொல்லி மாற்றி மாற்றி அதையே சொல்லுவார்கள், உங்களுக்கு அலுக்காமல் இருந்தால் 200 பின்னூட்டம் வரைக்கும் சென்று அதன் பிறகு பின்னூட்ட பெட்டியை மூடலாம்.

நான் மதவாதி என்று அறிந்துள்ள குறிப்பிட்ட ஆள்களுக்கு பதில் சொல்வதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். */

கோவி,

இந்த விவாதத்துக்கு நீங்க பிட் ஆகா மாட்டீங்க. சோ, கொஞ்சம் ஓரம்.
மற்றவர்களுக்கு முடிந்தால் இன்று இரவு பின்னூட்டமிடுகிறோம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்,கோவி.கண்ண்ன்,சிராஜ்,

இந்தப் பதிவு எதற்காக சொல்லப்பட்டதோ அதன் இலக்கை எட்டவில்லை.

பின்னூட்டமிட்ட அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி.

101க்கு முய் வச்சு முடிச்சிடறேன்.லூஸ்ல விடுங்க.

வவ்வால் said...

சகோ,ஆஷிக்,

//பாபர் மசூதி இடிக்கப்படும்போது... அதுபோன்ற நிலைமையா இந்தியாவில்..?

ஆக, இரண்டு இடிப்பும் ஒன்றா..?

சிந்தித்து பதில் சொல்லுங்கள்.

பாபர் மசூதி அத்வானி விஷயத்தில் எனது அதே போன்ற கண்டனத்தை இங்கே வார்த்தை மாறாமல் உங்களால் பதிய முடியுமா..?//

உங்களைக்கேட்டால் நான் அப்போதே சொன்னேன் என்பீர்கள், அதையே நாம சொன்னா எப்போ என்பீர்கள் :-))

இரண்டு இடிப்பும் ஒன்றா? ஆம் ஒன்றே மத அடிப்படைவாதிகளின் இடிப்பு என்பேன்.

"பாபர் மசூதி இடிப்பு என்பது அநியாயமான ஓட்டு அரசியல், மத அடிப்படைவாதிகளின் பிற்ப்போக்கான செயல். அதற்கு எனது கடும்..கடும் கண்டனங்கள்."வன்மையாக கண்டிக்கிறேன்!

உங்கள் கண் முன்னால் மீண்டும் சொல்லிட்டேன் ஆஷிக்.இதை எப்போவும் சொல்வேன்.

----------------

//இங்கே கவனிக்கபடுவது யாதெனில், அந்த பழைய 'இசத்'துக்கு மிச்சமீதி சொந்தக்கார் யாரேனும் அங்கே உள்ளாரா என்பதுதான். அப்படி ஒருவரேனும் இருந்தால்.... அவர் உரிமையயை நசுக்கி... அதில் அழிப்பு காட்டுமிராண்டித்தனம் கூடாது.//

அதாவது நீங்கள் கன்டித்தது பெயரளவில் என்று சொல்வதாக ஆகிறது இப்போது. பாமியான் சிலைகள் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்று சின்னம் என்பதற்கு கூட மதிப்பில்லை இடிக்கலாம் சரி என்பதாக உள்ளது . ஏன் அதுக்குள்ள ரிவர்ஸ் கியர் போடுறிங்க சகோ.

//கம்யூனிசம் செத்து சோவியத் உடைந்தபோது பிரம்மாண்ட ஸ்டாலின் சிலைகள் மக்களால் உடைபட்டதை அறிந்திருப்பீர்கள்.

சதாம் உசேன் சிலைகள், பென் அலி சிலைகளை எல்லாம் மக்கள் உடைத்ததை பார்த்து இருப்பீர்கள்.//

சதாம் உசேன் சொந்த நாட்டிலேயே ஷியா பிரிவு முஸ்லீம்களை கொன்றவர், ஸ்டாலின் அதிகாரத்துக்காக அவரது இயக்கத்தினரையும் கொன்றவர், இவர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அஹிம்சாவாதியான புத்தரும் ஒன்று என்று ஒரே தட்டில் வைக்கிறீர்கள்?

என்ன ஒரு புரட்சிகரமான சிந்தனை :-))

//சைவ மன்னன் வைணவ மன்னனை தோற்கடித்து நாட்டை கைப்பற்றிய பின்னர் வைணவ கோவில்களை இடித்தது... vice versa. இப்படி நிறைய... நம் வரலாறில் படித்து இருப்பீர்கள்.//

இதெல்லாம் முற்கால மன்னராட்சி வரலாறு, பாமியான் சிலை இடிப்பு என்பது நிகழ்கால வரலாறு அறிவியல், பகுத்தறி, சமுக சிந்தனைகளில் மாற்றம் வந்த 21 ஆம் நூற்றாண்டு. வித்தியாசம் தெரிகிறதா?
--------------

//நான் அவரை போகச்சொன்னது எங்கே..?
நீங்கள் வந்தது எங்கே...?

அப்புறம்...

நீங்கள் போட்டதாக கூறிய அந்த கேள்வி பின்னூட்டம் எங்கே..?

ஏனுங்கோ திரு வவ்வால்...

இதிலுமா...
உங்கள் தலைகீழ் டுபாக்கூர் ரீல் 'திறமை'யை காண்பிப்பீர்கள்...?//

நீங்கள் கொடுத்த சுட்டி என்னை எதிர்க்குரல் என்ற தளத்துக்கு இட்டு சென்றது. அங்கே நிறைய சுட்டிகளின் தொகுப்பு இருந்தது. ஆனால் பின்னூட்ட பொட்டி மூடி இருக்கு சரியா?

பின்னர் நியண்டர் தால் , பொது மூதாதையர் பற்றிப்பேசும் ஒரு பதிவினை பரிணாமம் குறித்து ஆரம்பிக்க சரியான புள்ளி என நினைத்து பின்னூட்டம் இட்டேன் சரியா?

ஆனால் வரவில்லை என்கிறீர்கள், மட்டுறுத்தல் வைத்திருப்பது நீங்கள், என்னாச்சுனு எனக்கு எப்படி தெரியும்.

அதுக்குள்ள எதுக்கு இப்படி துள்ளிக்குதிக்கிறிங்க, பாத்து சுளுக்கு புடிச்சுக்கும் :-))

ஏன் ஊரை சுத்திக்கிட்டு , இங்கேயே இப்போ மீண்டும் என் கேள்வியை வைக்கிறேன்.

மனிதன் பரணாம வழி தோன்றினான் என்பது அறிவியல். இதற்கு மாற்றாக மனிதன் எப்படி தோன்றினான் என்பதற்கு உங்கள் மார்க்க/ சொந்த கருத்து என்ன?

மேலும் பரிணாமவியல் குறித்தான கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

வவ்வால் said...

ராஜ்,

//இந்தப் பதிவு எதற்காக சொல்லப்பட்டதோ அதன் இலக்கை எட்டவில்லை.//

ஹி..ஹி ஆண்டுகள் பலவாக எட்ட இயலாத இலக்கை ஒரு பதிவில் எட்ட நினைக்கும் உமது பேராசைக்கு ஒரு எல்லையே இல்லையா :-))

சரி மொய் வச்சு முடிச்சுடுங்க, பின்னொரு சந்தர்ப்பத்தில் சிராஜ், ஆஷிக் அவர்களுடன் எனது வேதாள வேட்டையை தொடர்கிறேன் :-))

பேசாம நானே ஒரு கடை தொறந்துடலாமா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ தள நிர்வாகி அவர்களுக்கு,

//இந்தப் பதிவு எதற்காக சொல்லப்பட்டதோ அதன் இலக்கை எட்டவில்லை.//

---'தாம் விரும்பிய வண்ணம் மட்டுமே மற்றவர் எழுத வேண்டும்' என்ற நோக்கில் தவறான ஒப்பீடுகளுடன் பொருட்குற்றத்தோடு எழுதப்பட்ட இந்த பதிவு அதன் இலக்கை அடையாதது மகிழ்ச்சியே..!


பதிவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லமுடியாவிட்டால்...

//101க்கு முய் வச்சு முடிச்சிடறேன்.லூஸ்ல விடுங்க.//

ஹா...ஹா...ஹா... காமடி..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ வவ்வால்,

ஒரு இசம் செத்தால், இன்னொரு இசம் வந்து அதன் அடையாளத்தை இடிப்பது ஆதி காலத்திலிருந்து நடந்து வருவதற்கான ஒப்பீடு.

அனைத்துக்கும் எனது கண்டனங்கள்.

உங்கள் கண்டனத்துக்கு நன்றி சகோ.வவ்வால்.

ஆனால், நமது கண்டனங்களில் வேறுபாடு உண்டு. எப்படி..?

ஆப்கான் போன்ற நிலை...
அதாவது,
இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையில், unesco பாபர் மசூதி ஐ world heritage center என்று அறிவித்து பராமரிக்க சொல்லி இருந்து, பின்னர் அது இடிக்கப்பட்டால்... இந்தியாவில் அல்ல, உலக அளவில் பாமியான் அளவுக்கு கண்டனம் வந்திருக்காது..!!! ஒத்துக்கொள்கிறீர்களா..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ வவ்வால்...

நீங்கள் பார்த்த வளைகுடா ஷேக்குகள்,
நீங்கள் பார்த்த அமெரிக்க/ஐரோப்பிய முஸ்லிம்கள் போலவே,
நானும் டாஸ்மாக்கில் தண்ணி அடித்து, மணிப்பூர் அரசு லாட்டரி வாங்கி, கொல்கத்தாவில் சட்டப்பூர்வமாக விபச்சாரம் செய்யலாம் என்கிறீர்களா..?

இதற்கு... சுத்தி வளைக்காமல், பூசி மெழுகாமல் "ஆம்/இல்லை" என்ற பதில் சொல்ல முடியுமா..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ வவ்வால்,

//நீங்கள் கொடுத்த சுட்டி என்னை எதிர்க்குரல் என்ற தளத்துக்கு இட்டு சென்றது.//

---'எதிர்க்குரல்' எனது தளம் அல்ல என்பதை நீங்கள் அறிந்து இருக்கும் விஷயம்... 'உங்கள் தளத்துக்கு வந்தேன்' என்று நீங்கள் சொல்லாததில் குட்டு உடைபட்டு விட்டதே..!

ஹா...ஹா...ஹா.....

பகலில் பசுமாடு தெரியவில்லையே வவ்வால் உங்களுக்கு..!

என்னதான் விவாதிக்க போகிறீர்களோ போங்கள்..!

உங்கள் பின்னூட்டம் அங்கே வெளியிடப்பட்டு அந்த பதிவரும் பதில் சொல்லி இருக்கிறார்..!

ஹே..ஹே..ஹே..

அங்கே போய் பாருங்கள்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ கழிப்பறை விரும்பும் பதிவர்

(பெயர் சொன்னால்... என் பெயரை சொன்னதால் 'தமிழ்மண சூடான இடுகை பதிவு' என்று பெருமை கொள்வீர்களே.. அதனால் பெயரை சொல்லவில்லை..!)

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை முஸ்லிம்கள் கொண்டாடுவது போல, பொங்கலும் அனைத்து சமயத்தவரால் கொண்டாடப்பட வேண்டும் என்ற உங்கள் பதிவில்,

'பொங்கலில் சூரிய வணக்க வழிபாடும், பொங்கல் படையலும் உள்ளதே அதை தவிர்க்க சொல்லுங்களேன்' என்ற சகோ.எம்.எம்.அப்துல்லா போன்றவர்கள் கேட்ட கேள்விக்கும்,

பொங்கலின் அடிப்படையையே பகுத்தறிவு கோணத்தில அடித்து நொறுக்கிய சகோ.அதிரைக்காரன் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல்...

'இனி இந்த பதிவை சரி' என்று சொல்லி கூட எவரும் கமென்ட் போட மாட்டார் என்றுணர்ந்து...

அந்த பதிவின் பின்னூட்ட பெட்டியை நீங்கள் முடக்கி வைத்தீர்கள்.

இதுபோன்று நான் போட்ட ஒரு பதிவு ஒன்றை 'அது தவறான புரிதல்' என்று ஒருவர் பின்னூட்டத்தில் நிரூபித்ததை நான் உணர்ந்து விட்டால்,

அனைவருக்கும் வருத்தம் தெரிவித்து,
புரியவைத்தவருக்கு நன்றி சொல்லி...
அந்த பதிவை நீக்கி விடுவேனே அன்றி...
உங்களை போல செய்ய மாட்டேன்.

அந்த மோசமான முன்னுதாரணத்தை இங்கேயும் இந்த தள உரிமையாளருக்கும் அதே நிலைபாட்டை பரிந்துரை செய்கிறீர்கள்..! :-((

//நான் ஒருவேளை அவ்வித நிலைப்பாடு கொண்டிருந்தால் என்னை யாரோ
செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கும்.// (உங்களின் வசனம் உங்களுக்கே..)

வவ்வால் said...

சகோ.ஆஷிக்,

//ஆனால், நமது கண்டனங்களில் வேறுபாடு உண்டு. எப்படி..?

ஆப்கான் போன்ற நிலை...
அதாவது,
இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையில், unesco பாபர் மசூதி ஐ world heritage center என்று அறிவித்து பராமரிக்க சொல்லி இருந்து, பின்னர் அது இடிக்கப்பட்டால்... இந்தியாவில் அல்ல, உலக அளவில் பாமியான் அளவுக்கு கண்டனம் வந்திருக்காது..!!! ஒத்துக்கொள்கிறீர்களா..?//

ஹி..ஹி முதலில் கண்டனம் சொல்வீங்களா கேட்டிங்க சொல்வேன் என்றதும் அதில் வித்தியாசம் கண்டுப்பிடிக்கிறிங்க, இப்படி இருந்தா என்னாகும், அப்படி இருந்தா என்ன ஆகும் என்று அடுத்த கேள்வி?

சரி நீங்க சொன்னது எல்லாம் ரொம்ப சரினு சொன்னால் கூட சத்தமாக சொல்லவில்லை .. அடிவயித்தல இருந்து 122 டெசிபலில் சத்தமாக சொல்லனும் சொல்வீங்களோ :-))

-------
//நீங்கள் பார்த்த வளைகுடா ஷேக்குகள்,
நீங்கள் பார்த்த அமெரிக்க/ஐரோப்பிய முஸ்லிம்கள் போலவே,
நானும் டாஸ்மாக்கில் தண்ணி அடித்து, மணிப்பூர் அரசு லாட்டரி வாங்கி, கொல்கத்தாவில் சட்டப்பூர்வமாக விபச்சாரம் செய்யலாம் என்கிறீர்களா..//

கேள்விக்கேட்டது நீங்கள், அங்கேயும் முஸ்லீம்கள் இருக்காங்க அவங்களையே கேளுங்கள் என்றால் ஏன் என்னிடம் கேட்கிறிங்க, நான் தான் காபிர் ஆச்சே. மார்க்கம் சார்ந்த, அத்தகைய கலாச்சாரத்தில் வாழ்பவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டால் தானே ஒரு முடிவு எடுக்க முடியும். நான் சொன்னால் நீங்க காபிர் அப்படித்தான் சொல்வீங்க என்று சொல்ல மாட்டீர்கள் என்று என்ன உத்திரவாதம் :-))

என்னைக்கேட்டால் சந்தையில் என்ன கிடைக்கிரதோ அது பிடித்திருந்தால் வாங்கி நுகர செய்யும் நுகர்வோன் , பிடிக்கலைனா வாங்க மாட்டேன். அதே போல ஏன் விக்கிறாங்க என்று கேட்கவும் மாட்டேன்.ஏன் எனில் நீங்களே சொன்னது போல சட்டத்திற்குட்பட்டு தானே நடக்குது.

-------------

//---'எதிர்க்குரல்' எனது தளம் அல்ல என்பதை நீங்கள் அறிந்து இருக்கும் விஷயம்... 'உங்கள் தளத்துக்கு வந்தேன்' என்று நீங்கள் சொல்லாததில் குட்டு உடைபட்டு விட்டதே..!

ஹா...ஹா...ஹா.....

பகலில் பசுமாடு தெரியவில்லையே வவ்வால் உங்களுக்கு..!

என்னதான் விவாதிக்க போகிறீர்களோ போங்கள்..!//

ஹா.. ஹா ... ஆஷிக் என்ன கலாய்ச்சுட்டாராம் :-))

உங்களை குற்றம் சாட்டிப்பேசாமல் பேச நான் முயல்கிறேன் , ஆனால் குற்றம் சொல்ல புதிதாக காரணங்களைக்கண்டுப்பபிடிக்க பார்க்கிறீர்கள் நீங்கள் :-))

சுட்டிக்கொடுத்தது நீங்கள், அதில் எழுதியவர்ப்பெயர் ஆஷிக் அஹமது(நீங்களா என்று தெரியவில்லை என இப்போவே சொல்லிடுறேன்) எனவே முதலில் உங்கள் தளம் என்று நினைத்து சொன்னேன், மீண்டும் போய்ப்பார்த்தேன் ஒரு வேளை நீங்கள் இல்லையோ என்று சந்தேகம் வரவே பொதுவாக எதிர்க்குரல் தளம் என்றே சொல்வோம் என்று சொன்னேன்.

இது வரைக்கும் உங்கள் தளம் பெயர் என்ன என்று எனக்கு தெரியாது அது தான் என் குற்றம் போல :-))

ஆனால் நீங்களோ இதான் சாக்குனு பாயுறிங்க. யார் தளம் என்று தெரியாமல் உங்களை குற்றம் சாட்டிப்பேச வேண்டாம்னு நான் நினைக்க அதுக்கு இப்படி ஒரு காரணம் கற்பிக்கிறீர்கள்.

முடியலை அவ்வ்வ்!

சுட்டிக்கொடுத்த புண்ணியவன் அவரே அது யார் தளம்னு சொல்லி தொலைத்திருந்தா ஏன் இப்படி ஆகப்போகுது.

பேருக்கு பஞ்சமா எல்லாம் ஆஷிக் அகமதுனு எழுதுறாங்களா :-)) இல்லை நான் தான் பேர தப்பா படிச்சேனா?

நல்லவேளை வவ்வால்னு பேரு வச்சுக்கிட்டேன் , என்னப்போன்ற் இன்னொரு பெயர் இல்லை இங்கே :-))

இப்படி சாதாரண விஷயம் கூட புரியாமல் விஷமம் செய்ய ஆசைப்படுவரிம் என்ன கருத்துரையாடல் செய்ய முடியும்

...இப்பவே கண்ணைக்கட்டுதே ஸ்ஸ்ஸ் ப்ப்பா :-))

வவ்வால் said...

சகோ.சிராஜ்,

//முஸ்லிம்களை பொறுத்த வரை.
இஸ்லாம்...
நாடு...
மொழி...

இது தான் வரிசை. நான் அறிந்த வகையில் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்படிதான். மாற்றுக்கருத்து உள்ளவர்களும் இருக்கலாம். நம்புவீர்களோ மாட்டீர்களோ, நான் இந்த ஆர்டர் மாறி யாரையும் சந்தித்தது இல்லை. சில சமயங்களில் 2 ம், 3 ம் இடம் மாறலாம்.//

வித்தியாசம் இல்லாமல் இணைக்கும் பசையாக ,மொழி, மண் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று சொன்னேன்.

ஆனால் மதம் தான் முதலிடத்தில் இணைக்கும் பசை என்கிறீர்கள் , இந்தப்புள்ளியில் தான் பிரிவினை வாதம் தலை தூக்குகிறது என்பதோடு அல்லாமல் தீவிரம் அடைகிறது, காயப்படுத்தும் நிகழ்வுகளும் அதிகரிக்கிறது.


உ.ம்:

இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று இந்தியாவில் சிலர் ஆசைப்படவும் மதம் முதலிடத்தில் இருப்பதும் ஒரு காரணமாகி விடுகிறது போல.

பாகிஸ்தான் அணிக்கு மதம் இஸ்லாம் , மொழி உருது என்று இரண்டு பசை , இருக்கு , இந்திய முஸ்லீம்களுக்கும் அந்த இரண்டு பசை இருப்பதாக பாவிக்கிறார்கள், எனவே 3 இணைப்பு காரணிகளில் இரண்டு இருப்பது வலிமைப்பெறுகிறதோ என தோன்றுகிறது.

பதில் , பதிலுக்கு பதில் ... கேள்வி ,கேள்விக்கு கேள்வி ... மீண்டும் பதில் ... பதிலுக்கு பதில் ... கேள்விக்கு கேள்வி.... :-))

சிராஜ் said...

சகோ வவ்வால்,

/* வித்தியாசம் இல்லாமல் இணைக்கும் பசையாக ,மொழி, மண் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று சொன்னேன் */

நாடு மற்றும் மொழி இவற்றை கொண்டு உலகளாவிய சகோதரத்துவம் ஏற்ப்பட வாய்ப்பே இல்லை. உணர்ச்சிவசப் படாமல் யோசித்தால் விடை காண்பது ஒன்றும் பரமபதம் விளையாட்டல்ல... இது சம்பந்தமாக சகோ குலாம் அற்ப்புதமான ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை இங்கே குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்....

http://iraiadimai.blogspot.com/2012/01/blog-post.html

சிராஜ் said...

சகோ வவ்வால்,

சகோ குலாமின் கருத்தை நான் 100 % வழி மொழிகிறேன். நீங்களும் இதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சிராஜ் said...

ஹ்ம்ம்.. இங்க பின்னூட்டம் முடிஞ்சிருச்சா?????? இல்ல இன்னும் ஓடுமா சகோ நடா????

குலாமோட பதிவ கண்டிப்பா படிங்க சகோஸ் வவ்வால் மற்றும் நடா

வருண் said...

என்னங்க நடக்குது இங்கே! பதிவுலகில் என்ன பதிவு எழுதினாலும் அது "அதே, ஒரே பாதையில்" போகுது!!!

சகோ ஆசிக்!

பதிவுலகில் யாருமே "பர்ஃபெக்ட்" கெடையாதுங்க. எந்த ஒரு பதிவிலும் சரி, பின்னூட்டத்திலும் சரி, ஆயிரம் தவறுகள் கண்டுபிடிக்கலாம்.

இந்தக்கூற்றில் உங்க பதிவு, உங்க பின்னூட்டத்தையும் சேர்த்துத்தான். நீங்க ஒரு வரியைப் பிடித்துக்கொண்டு எங்கேபோனாலும் அதையே கோடிட்டுக் காட்டிக்கொண்டு இருப்பது எப்படி சரியாகும்? பதிவில் உள்ள தவறையும் பின்னூட்டத்தையும் ஒரு முறை சுட்டிக்காட்டினாலே போதும், புரிந்துகொள்வார்கள்.

பதிவில் "முக்காடு"ங்கிற வார்த்தை இருந்தபோதே நெனைத்தேன், இது எங்கே போயி முடியப்போதோனு!

Personally when I argue and fight with any person I get to know him more. It is a learning lesson for me. I hope you guys learn each other- esp the good part of others-, not hating each other more after a hot argument because of opinion differences.

Take care you all!

சிராஜ் said...

சகோ வருண்,

நிச்சயமாக நான், ஆசிக், ரியாஸ் மற்றும் பிற சகோதரர்கள் நடா வுக்கோ வவ்வாலுக்கோ அல்லது வேறு யாருக்குமோ எதிரி கிடையாது. கருத்து மோதல் தான். அதனால் இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. அவரவர் நியாயங்கள் அவரவருக்கு. இதில் யாரேனும் ஒருவர் மற்றவரின் கருத்தை ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் போகலாம். எப்படி ஆயினும் நாம் அனைவரும் சகோதரர்களே.
எல்லோரும் ஆதாம் ஏவாளில் இருந்து வந்தவர்கள் தானே.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,
என் அறிவுக்கு நன்கு சரி என்று பட்ட கருத்தை அடுத்தவர் தவறாக சொல்லும்போது அதை சரியான வாதங்களை எடுத்துவைத்து மருதளிக்கிறேன். அவ்வளவுதான். சரி என்று தெரிந்த பின்னரும் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் மனசாட்சியை பொறுத்தது. எனக்கு யார் மீதும் எந்த கோபமும் கிடையாது. எவரும் இங்கே எனக்கு எதிரியும் இல்லை. இந்த விவாதத்தை சிலர் சண்டை போல உருவகப்படுத்துவதுதான் வருத்தம் அடைய வைக்கிறது.

Riyas said...

இந்தப்படம் இன்னுமா ஓடுது?

எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.. கடைய மூடியாச்சி.

ஹேமா said...

அப்பாடி...நல்லாவே தொடங்கி...நடந்து முடிஞ்சிருக்கு !

வருண் said...

நன்றி, சகோதரர்கள் சிராஜ் & ஆசிக்! எல்லாம் சுமூகமாகத்தான் நல்ல புரிதலுடன் போயிக்கொண்டு இருக்கு என்றால் நல்லதுதான்! நான் திடீர்னு வந்ததால் என்னால் இங்கே உள்ள நிலவரம் தெளிவாக அறிய முடியவில்லை!

தொடருங்கள் உங்கள் விவாதத்தை உங்களுக்கு திருப்தி வரும் வரையில்! :)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வவ்வால்....

இப்படி ஒரு அரதப்பழசான இற்றுப்போன உவமையுடன் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

//இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று இந்தியாவில் சிலர் ஆசைப்படவும் மதம் முதலிடத்தில் இருப்பதும் ஒரு காரணமாகி விடுகிறது போல.//

என்னுடன் பணியாற்றும் ஒரு முஸ்லிம் பாகிஸ்தானி ஒரு முறை தன் நாட்டு ஹாக்கி அணிக்கு பதிலாக இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற விரும்பினார். காரணம், (அச்சமயம்) இந்தியாதான் திறமை மிக்க அணி என்றார்.

'ஒரு விளையாட்டில் இரண்டு அணியில் திறமையான ஒரு அணி வெல்லட்டும்' என்பதில் தேசபக்தியையோ மதத்தையோ நுழைத்து பார்ப்பது என்ற உங்கள் அளவுகோல் தவறானது.

இல்லை... சரியானதுதான் என்றால்,

'அந்த சில' இந்திய முஸ்லிம்கள், (தன் மத ஆட்கள்) பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி தவிர வேறு எந்த போட்டியையும் பார்ப்பது இல்லை என்று நீங்கள் சொல்வீர்களா..?

வவ்வால் said...

சகோ.ஆஷிக்,

//உங்கள் பின்னூட்டம் அங்கே வெளியிடப்பட்டு அந்த பதிவரும் பதில் சொல்லி இருக்கிறார்..!

ஹே..ஹே..ஹே..

அங்கே போய் பாருங்கள்..!//

இப்போ பார்த்துட்டேன். பெயரை ,இடமிருந்து வலமாய் படித்தால் அவரு , வலமிருந்து இடமா படிச்சா நீங்க :-))

அதான் குழப்பிடுச்சு (நல்லா வைக்கிறாங்கப்பா பேரு)

அப்புறம் மட்டுறுத்தல் வைத்திருந்ததால் என் கமெண்ட் வந்திச்சானு கூட எனக்கு அப்போ தெரியாது, இப்போ சொன்னப்பிறகு பார்த்தேன் , பதில் சொல்லி இருக்கார் ஆனால் இல்லை :-))

மறுமொழி மட்டுறுத்தல் வைத்துக்கொண்டு என்ன ஒரு வீரா"வேசம்" :-))

உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றது என்பது போல, கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நேரமோ பொறுமையோ இல்லையாம். நானே அவர்பதிவுகளைப்படிச்சு தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டுமாம் :-))

நீங்களா ஒன்றுக்கூடிப்பேசி , ஒரு தீர்ப்பும் எழுதிக்கொண்டு , ஆகா சிறந்த வாதம் ,சிறந்த தீர்ப்புனு சொல்லிப்பீங்க. இதுல அங்கே போய் விவாதிக்க முடியுமா என்று போகும் இடமெல்லாம் சவால் வேற விடுவிங்க , எப்படி இதெல்லாம் அவ்வ்வ் :-))

அதான் நண்பர் சார்வாகான் நீங்க சொன்னத லூஸ்ல விட்டார் போல. அப்பவே நினைச்சேன் மைட்டோ காண்ட்ரியல் ஈவ் என்றெல்லாம் தெளிவாக பரிணாமம் பேசுபவர் சும்மா விடுகிறாரே என்று. இப்போ தான் எனக்கு புரியுது( ரொம்ப லேட்டோ)

அவர் கொஞ்சம் அகடெமிக்கலா டிரீட் செய்பவர் , மென்மையான போக்கில இருக்கிறார். நான் எல்லாம் அப்படி இல்லை ( வவ்வால் பெரிய புடுங்கி என்று பட்டம் வாங்கியவர் என்பதை ஒரு சுய விளம்பரமாக சொல்லிக்கொள்கிறேன்) ஹி .. ஹி நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ எப்பூடி :-))

-------------------

ராஜ்,

உங்க மொய் உங்களுகே , பின்னூட்ட பொட்டிய மூடினா அதுக்கும் ஒரு பேச்சு வருது. பேசாமே அப்படியே விடுங்க, இது ஒரு "சைக்கிள்" என்று தெரிந்தும் ஏறி உட்காருவோம். ஓடும் வரை ஓடட்டும் :-)))

படத்த ஓட்டுங்க ரீல் அந்துப்போறவரைக்கும் பார்க்கலாம் :-)) எனக்கு ஒரு ஃப்ரீ பாஸ்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வவ்வால்...
///பெயரை ,இடமிருந்து வலமாய் படித்தால் அவரு , வலமிருந்து இடமா படிச்சா நீங்க :-))//

"~முஹம்மத் ஆஷிக்_citizen of world~"
இந்த பெயரை
இடமிருந்து வலமாய் படித்தால்...
"ஆஷிக் அஹமத்"

ஓகே சகோ.
நல்லா தெளிவாத்தான் இருக்கீங்க..! :-))

வவ்வால் said...

சகோ.சிராஜ்,

//நாடு மற்றும் மொழி இவற்றை கொண்டு உலகளாவிய சகோதரத்துவம் ஏற்ப்பட வாய்ப்பே இல்லை. //

இதன் மூலம் நீங்கள் மறைமுகமாக சொல்ல வருவது மதத்தால் மட்டுமே என்பதா? அது எப்படி ... 600 கோடி மக்களையும் ஒரே மதமாக மாற்றியா? :-))

ஒரு மாநிலத்துக்குள்ள இருக்கும் போதே , ஒரே மொழி பேசும் போதே , இணக்கம் வரலை இதுல நீங்க உலகளாவிய சகோதரத்துவம் னு பேசுறிங்க? அப்படினா என்ன என்பது புரிந்து தான் பேசுறிங்களா என்பதே சந்தேகமா இருக்கு!

இதுல குலாம் சொல்வது 100% சரினு நீங்களே சொல்லிக்கிட்டு எங்களை வேறப்படிக்க சொல்றிங்க! படம் எடுத்தவங்களே சூப்பர் ஹிட் ! காணத்தவறாதீர்கள் என்று போஸ்டர் ஒட்டுவது போல இருக்கு :-))

ராஜ நடராஜன் said...

100 நாள் ஆச்சுன்னா தியேட்டரை விட்டு படத்தை தூக்குற்து வழக்கம்.புதுப்படம் போடலாம்ன்னு பார்த்தால் இல்ல இந்தப்படம்தான் நல்லாயிருக்குன்னு பின்னூட்டம் 123க்கு வந்துடுச்சு.இனி ஓடுறவரைக்கும் ஓடட்டும்ன்னு விட்டுடறேன்:)

ராஜ நடராஜன் said...

சகோ ஆசிக்!

மாற்றுக்கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.ஆனால் விவாதம் உங்களையோ என்னையோ அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இணைப்பு எழுத்தில் இருக்கவேண்டும்.ஒன்றைத் தொட்ட கருத்தினை ஒட்டிய வாதம் முடிந்து இன்னொரு கேள்விக்கான ஒரு தொடர் நிலையிருந்து நான் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளும் திறன் உங்களுக்கு இருந்தோ அல்லது உங்களது எழுத்தினை ரசிக்கும் தன்மை எனக்கு இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஆரோக்கியமான விவாதத்தை முன்கொண்டு செல்லமுடியும்.அப்படியில்லாவிட்டாலும் இந்தப்பதிவு உங்களுக்கானதாக இருக்கும் பட்சத்தில் உங்களுடன் விவாத மல்லுக்கட்டுக்கு நிற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.நீங்களோ ஒன்றைத் தொட்ட் பின்னூட்டத்துக்கு எனது மறுமொழி சொல்லி முடிக்கும் முன் இன்னொரு மரத்துக்கு தாவி விடுகிறீர்கள்:)

இன்றைய ஓய்வுக்குப் பின் உங்களின் எழுத்தின் ரிதம் கட்டுக்குள் வருகிற மாதிரி தெரிகிறது.

நான் முன்பே சொன்னபடி உங்களை புண்ப்டுத்தும் விதமாக விவாதம் வந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் உங்களோடு விவாதத்தை தவிர்த்தேன்.நீங்களோ நான் மாட்டாத கோபத்தில் ச்கோ.சிராஜ்க்கு கேட்டுச்சொல்லப்பா துது விட்டீர்கள்.அவர் பின்னூட்டங்களைக் கவனிக்கவில்லையோ அல்லது விவாதம் போகும் போக்கு கண்டு அமைதியாக இருந்து விட்டாரோ பதிவர் வ்வ்வாலை பிடித்துக்கொண்டீர்கள்.வ்வ்வாலின் அறிவுத்திறனுக்கு நானோ அல்லது நீங்களோ சம எடை கொண்டவர்கள் அல்ல.ஆனால் உங்களின் நான் முன்பே சொன்ன இயல்பு தன்மைகள் அவரையும் கடும் சொற்களோடு பின்னூட்டமிடுகிறீர்கள்.விரோதிகள் அல்ல என்ற சொல்லாடலோடு கோவி.கண்ணனை வேறு கடும் சொற்களை உபயோகிக்கிறீர்கள்.நீங்கள் எவ்வளவு நாட்கள் பதிவுலகில் இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது.கோவி.கண்ணனும்,சுவனப்பிரியனும் நீண்ட நாட்களாக விவாதம் செய்பவர்கள்.ஆனால் தற்போதைய பதிவுலக விவாத நிலைக்கு சென்றதில்லை.அவர்களது விவாதங்கள் பலருக்கும் ஒவ்வாமையாக இருந்தும் கூட க்ருத்தடிப்படையில் விவாதிக்கொண்டுதான் உள்ளார்கள்.ஆனால் அவர் மீதும் தாக்குதல் தொடுக்கும் நிலையில் உங்களின் பின்னூட்ட நிலை எனக்கு உகந்ததல்ல என்பதாலேயே உங்களை இப்பொழுதும் தவிர்க்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!எனக்கும் கூட ஆஷிக் முகமதா!ஆசிக் அகமதா என்ற பெயர்க்குழப்பங்கள் உண்டு.இத்னை மேலே அவரது பின்னூட்டத்துக்கு மறுமொழி சொல்லும் போதே குழப்பத்தை சொன்னேன்.அவரோ எப்பவோ போட்ட பின்னூட்டம் தெரியுது.என்னைத் தெரியலையாக்கும்ங்கிற மாதிரி பின்னூட்டம் போடுகிறார்.ஆனால் இருவரில் ஒருவர் ஓரளவுக்கு புத்திசாலி.அது இவராக இருக்கலாம் அல்லது அவராக இருக்கலாம்:) இனி மேல்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

இது உங்களுக்கான விளக்கமாக இருந்த போதிலும் இதிலும் சகோ.ஆஷிக் பொருள் குற்றம் காண்பதற்கு சாத்தியம் இருக்கிறதென்பது எனக்கே புரிகிறது:)

இனி பின்னூட்டங்களை ஓர் பார்வையிட்டு விட்டு ஏதாவது சொல்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//சிராஜ் said...

சகோ வவ்வால்,

/* வித்தியாசம் இல்லாமல் இணைக்கும் பசையாக ,மொழி, மண் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று சொன்னேன் */

நாடு மற்றும் மொழி இவற்றை கொண்டு உலகளாவிய சகோதரத்துவம் ஏற்ப்பட வாய்ப்பே இல்லை. உணர்ச்சிவசப் படாமல் யோசித்தால் விடை காண்பது ஒன்றும் பரமபதம் விளையாட்டல்ல... இது சம்பந்தமாக சகோ குலாம் அற்ப்புதமான ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை இங்கே குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்....

http://iraiadimai.blogspot.com/2012/01/blog-post.html//

சகோ.சிராஜ்!நீங்கள் கொடுத்த தொடுப்பை உங்களின் அடுத்த பின்னூட்டம் கண்டு சென்றேன்.

தொடுப்பினைப் படிக்கும் போது “Man is born free but every where he chained in life" என்ற ரூசோவின் வாக்கியமே நினைவுக்கு வருகிறது.

//நாடு மற்றும் மொழி இவற்றை கொண்டு உலகளாவிய சகோதரத்துவம் ஏற்ப்பட வாய்ப்பே இல்லை.//

இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் உலக்ளாவிய சகோதரத்துவம் உருவாகலாம் என்றே நினைக்கிறேன்.இப்பொழுதே கூட நாடு கடந்த பன்மொழிக் கலாச்சார மக்களை ஐரோப்பா நாடுகளும்,வளைகுடா நாடுகளும் உள்வாங்கிக்கொண்டுள்ளன.சகோ.ஆஷிக் கூட சிட்டிசன் ஆஃப் வோர்ல்ட் கனவில் இருக்கிறாரே:)மனித வாழ்வின் கோட்பாடுகள் மாற்றங்கள் கொண்ட்தே.இதில் அரசியல்,மதம்,பொருளாதாரம் என் எதுவும் விதிவிலக்கல்ல.இவற்றை தேவைக்கேற்ப நகர்த்தி செல்வது மக்களின் கூட்டு உணர்வே.

ராஜ நடராஜன் said...

//Riyas said...

இந்தப்படம் இன்னுமா ஓடுது?

எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.. கடைய மூடியாச்சி.//

சகோ.ரியாஸ்!நானும் புதுப்படம் காட்டலாம்ன்னுதான் பார்க்கிறேன்.101தான் கடைசின்னு கூட விளம்பரம் கொடுத்துப்பார்த்தேன்.இந்தப் படமே ஓடட்டும்ன்னு அடம்பிடிக்கும் போது நான் என்ன செய்யட்டும்:)

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

அப்பாடி...நல்லாவே தொடங்கி...நடந்து முடிஞ்சிருக்கு !//

ஹேமா!அரங்கில் உட்கார்ந்து படம் பார்க்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கும்.படத்தை ஓட்டுறவனுக்குத்தானே ரீல் பிய்ந்து போகாமல்,விசில் சத்தம் கேட்காமல் படத்தை ஓட்டுற கஷ்டம் தெரியும்:)

ராஜ நடராஜன் said...

January 20, 2012 5:21 PM
Delete
Blogger வருண் said...

என்னங்க நடக்குது இங்கே! பதிவுலகில் என்ன பதிவு எழுதினாலும் அது "அதே, ஒரே பாதையில்" போகுது!!!

சகோ ஆசிக்!

பதிவுலகில் யாருமே "பர்ஃபெக்ட்" கெடையாதுங்க. எந்த ஒரு பதிவிலும் சரி, பின்னூட்டத்திலும் சரி, ஆயிரம் தவறுகள் கண்டுபிடிக்கலாம்.

இந்தக்கூற்றில் உங்க பதிவு, உங்க பின்னூட்டத்தையும் சேர்த்துத்தான். நீங்க ஒரு வரியைப் பிடித்துக்கொண்டு எங்கேபோனாலும் அதையே கோடிட்டுக் காட்டிக்கொண்டு இருப்பது எப்படி சரியாகும்? பதிவில் உள்ள தவறையும் பின்னூட்டத்தையும் ஒரு முறை சுட்டிக்காட்டினாலே போதும், புரிந்துகொள்வார்கள்.

பதிவில் "முக்காடு"ங்கிற வார்த்தை இருந்தபோதே நெனைத்தேன், இது எங்கே போயி முடியப்போதோனு!

Personally when I argue and fight with any person I get to know him more. It is a learning lesson for me. I hope you guys learn each other- esp the good part of others-, not hating each other more after a hot argument because of opinion differences.

Take care you all!//

வாங்க வாராது வந்த வருண பகவானே:)

பதிவின் தலைப்பை நான் நினைக்கும் போது முன்பு நம்ம ஊர்ல ஜட்கா வண்டில ரோட்டின் முன்ப்க்கம் தவிர மாற்று திசைகளைப் பார்க்ககூடாதென குதிரைக்கு மறைப்பு கட்டுவாங்க.அந்த மாதிரி பொருளில் வைத்தது.

தமிழே யோசிச்சு யோசிச்சுதான் சொல்லனும் போல இருக்குதே :)

I am still trying my level best not to ride the horse on a diverted direction:)

வவ்வால் said...

ராஜ்,

//வ்வ்வாலின் அறிவுத்திறனுக்கு நானோ அல்லது நீங்களோ சம எடை கொண்டவர்கள் அல்ல.//

உங்க ரெண்டு பேருடன் ஒப்பிட்டால் அறிவுத்திறனில் நான் லைட் வெயிட் தான் ,ஆனால் அதை இப்படி வெட்ட வெளிச்சம் ஆக்கி என்னை காலி பண்ணிட்டிங்களே :-((

////நாடு மற்றும் மொழி இவற்றை கொண்டு உலகளாவிய சகோதரத்துவம் ஏற்ப்பட வாய்ப்பே இல்லை.//

இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் உலக்ளாவிய சகோதரத்துவம் உருவாகலாம் என்றே நினைக்கிறேன்.இப்பொழுதே கூட நாடு கடந்த பன்மொழிக் கலாச்சார மக்களை ஐரோப்பா நாடுகளும்,வளைகுடா நாடுகளும் உள்வாங்கிக்கொண்டுள்ளன.சகோ.ஆஷிக் கூட சிட்டிசன் ஆஃப் வோர்ல்ட் கனவில் இருக்கிறாரே:)//

ராஜ்,

அப்படி சிராஜ் சொன்னதில் ஒரு பழம் பெரும் ரகசியம் இருக்கு, நீங்க அதை புரிஞ்சுக்கலையா, அவருக்கு நான் போட்ட பின்னூட்டம் பாருங்க , லேசா கோடிக்காட்டி இருக்கேன். இதை நான் எப்போவோ படிச்சது , அதாவது உலகம் முழுக்க ஒரே மார்க்கம் வரும் , ஒரே நாடு,ஒரே ஆட்சி போல போகும் அது .இது இறைத்தூதரின் வேதவாக்குனு சொன்னாபோல இருக்கு. உண்மைல ஏக மதம் வரும்னு சொன்னாரா நபினு தெரியல ஆனால் அப்போ அப்போ இது போல சொல்லிக்கிறாங்க.

ஆஷிக் போட்டு இருக்கிற உலககுடிமகனில் இதான் ஒளிஞ்சு இருக்கு. நீங்க சமரச சன்மார்க்க உலகின் குடிமகன் என்று நினைச்சுக்கிட்டிங்களா :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!அறிவுத்திறன் ஒப்பீட்டில் உயர்வு நவிழ்ச்சி அணி ஒன்றும் இல்லை.அதற்காக நீங்கள் ஒன்றும் மறு ஒப்பீடு செய்து வருத்தப் பட்டுக்கொள்ள வேண்டாம்:)

ஒருவர் நம்மை மறைமுகமாகவோ,உள்குத்தாகவோ,கிண்டலாகவோ குல்பியானந்தா,தாடி என்று பதிவுகள் இடும் போது வரும் பொது தாக்கம் மாதிரி மற்றவர்களையும் நாம் சுட்டும் தனிப் பின்னூட்டம் பாதிக்கும் என்பதறியாமல் ரத்தம்,தக்காளி வடிவேலின் இடத்தை நிரப்புவது பற்றி மேலும் என்ன சொல்ல?

இதில் பின்னூட்டப் பெட்டியை மூடிவிடுவேனோ என்ற நப்பாசை வேறு:)என் எழுத்தின் எல்லையை நான் அறிந்தே வைத்திருக்கிறேன்

அடுத்து இன்னுமொரு சினிமாக் கதைக்கு போய்விடலாமா?இல்லை இன்னும் தொடருமா?

ஹேமா said...

இன்னும் ரீல் பிஞ்சுபோகாம படம் ஓடிக்கிட்டு இருக்கா நடா.கெட்டிக்காரன் நீங்க.என்ன ரதியைத்தான் காணோம்.இன்னும் பொங்கல் சாப்பாடு மிச்சம் இருக்காக்கும் கனடாவில !

வவ்வால் said...

ராஜ்,

//வவ்வால்!அறிவுத்திறன் ஒப்பீட்டில் உயர்வு நவிழ்ச்சி அணி ஒன்றும் இல்லை.அதற்காக நீங்கள் ஒன்றும் மறு ஒப்பீடு செய்து வருத்தப் பட்டுக்கொள்ள வேண்டாம்:)//

வெற்றுக்கோப்பையில் தான் தேநீர் நிரப்ப முடியும், எனவே சுட..சுட தேநீர் குடித்து வெற்றாய் வைத்திருப்பேன் கோப்பையை ... அப்போ தானே அடுத்த ரவுண்டு நிரப்ப முடியும் :-))

வடிவேல் ....தக்காளி... சிவப்பு எல்லாருக்கும் வார்த்தையின் மீதே கண்கள் ... கருத்துகள் காணாமல் போனோர் பட்டியலில் :-))

//இதில் பின்னூட்டப் பெட்டியை மூடிவிடுவேனோ என்ற நப்பாசை வேறு:)என் எழுத்தின் எல்லையை நான் அறிந்தே வைத்திருக்கிறேன்//

அடையா நெடுங்கதவுனு தெரியலை...எழுத்துக்கு வேற எல்லை எதுக்கு எல்லையிலா ஏகவெளியா விடுங்க :-)) சரித்திரம் ,பூகோளம் , பூபாளம்னு எம்புட்டோ பார்த்தாச்சு , ஷாமல், கஃப் னு புழுதிப்ப்யலையும் பார்த்தா என்ன இப்போ? பார்க்கலாம்.


//அடுத்து இன்னுமொரு சினிமாக் கதைக்கு போய்விடலாமா?இல்லை இன்னும் தொடருமா//

இடப்புற மூளைக்கு வேலைக்கொடுத்தாச்சு , அப்புறம் வலப்புறத்த மட்டும் விடுவானேன் , அதையும் தீட்டி வைப்போம். படத்த ஓட்டுங்க :-))

கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணனை வேறு கடும் சொற்களை உபயோகிக்கிறீர்கள்.நீங்கள் எவ்வளவு நாட்கள் பதிவுலகில் இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது.கோவி.கண்ணனும்,சுவனப்பிரியனும் நீண்ட நாட்களாக விவாதம் செய்பவர்கள்.ஆனால் தற்போதைய பதிவுலக விவாத நிலைக்கு சென்றதில்லை//

வருந்த வேண்டாம் ராஜ நடராஜன் சார், நான் இந்த மதவாதிகளின் கூச்சலுக்கு எங்கும் பதில் சொல்ல விரும்பியதே இல்லை, இவர்களை நான் மனிதர்களாகவே நினைப்பதில்லை என்கிற ஆத்திரம் அவ்வப்போது கொட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள். என்னளவில் மதவாதிகளின் சுயரூபங்களை வெளிப்படுத்த வைத்துள்ளேன் என்பது என் எழுத்தின் வெற்றி தான்.

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

இன்னும் ரீல் பிஞ்சுபோகாம படம் ஓடிக்கிட்டு இருக்கா நடா.கெட்டிக்காரன் நீங்க.என்ன ரதியைத்தான் காணோம்.இன்னும் பொங்கல் சாப்பாடு மிச்சம் இருக்காக்கும் கனடாவில !//

அப்பாடா!கூட்டம் குறைஞ்சு போச்சு:)
ரதி மன்மதன் அம்பு படத்தையே இப்பத்தான் பார்த்தாங்களாம்.மெல்ல வருவாங்க.

ராஜ நடராஜன் said...

//வெற்றுக்கோப்பையில் தான் தேநீர் நிரப்ப முடியும், எனவே சுட..சுட தேநீர் குடித்து வெற்றாய் வைத்திருப்பேன் கோப்பையை ... அப்போ தானே அடுத்த ரவுண்டு நிரப்ப முடியும் :-))//

பதிவுகள் மேயறதும் கூட தேநீர் குடிச்சுட்டு காலி பண்ணி வைக்கிற கோப்பையாக்கும்!நல்லாயிருக்குதே பொருத்தம்:)

//ஷாமல், கஃப் னு புழுதிப்ப்யலையும் பார்த்தா என்ன இப்போ? பார்க்கலாம்.//

ஷாமல்,கஃப் இரண்டுமே பேட்டைக்கு புது வார்த்தையா தெரியுதே!விளக்கவும்.

//இடப்புற மூளைக்கு வேலைக்கொடுத்தாச்சு , அப்புறம் வலப்புறத்த மட்டும் விடுவானேன் , அதையும் தீட்டி வைப்போம். படத்த ஓட்டுங்க :-))//

கலிலியோ புதுப்படம் போட்டாச்சு.
அது உங்க ஏரியா.

ராஜ நடராஜன் said...

//வருந்த வேண்டாம் ராஜ நடராஜன் சார், நான் இந்த மதவாதிகளின் கூச்சலுக்கு எங்கும் பதில் சொல்ல விரும்பியதே இல்லை, இவர்களை நான் மனிதர்களாகவே நினைப்பதில்லை என்கிற ஆத்திரம் அவ்வப்போது கொட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள். என்னளவில் மதவாதிகளின் சுயரூபங்களை வெளிப்படுத்த வைத்துள்ளேன் என்பது என் எழுத்தின் வெற்றி தான்.//

கோவி!அடுத்து கலிலியோ படம் போட்டிருக்கேன்.கலிலியோவுக்கே அப்படியொரு நிலமைன்னா:)

கோபங்கள் தவிர்ப்போம்.மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கும் மனபாவம் இரண்டு பக்கமும் இருந்தால் பதிவுலகம் மாதிரி கலந்துரையாடல் எங்கே சாத்தியம்?

தொடர்வோம் பயணத்தை.நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

//பதிவுகள் மேயறதும் கூட தேநீர் குடிச்சுட்டு காலி பண்ணி வைக்கிற கோப்பையாக்கும்!நல்லாயிருக்குதே பொருத்தம்:)//

இணையம் வருவது ஒரு பொழுதுப்போக்கிற்கு தான், முற்றிலும் அதுக்கே இடம் கொடுக்காமல் நல்ல விஷயங்களும் கற்றுக்கொள்ள/ தெரிந்துக்கொள்ளலாமே என நினைப்பேன். கில்மா முதல் எல்லாமே என்னோட பார்வையில் படும். கில்மா மட்டும் பொழுதுப்போக்க போதும்னு நினைப்பதில்லை.

கில்மா/ சினிமானு பதிவு மட்டும் எழுதுறவங்க கற்ப்பிக்கற நியாயம் இருக்கே செம காமெடி.என்னமோ கோடிக்கணக்கில போட்டு படம் எடுக்கிறவங்க கவலைப்ப்டுகிறாப்போல இப்படி எழுதினா தான் கூட்டம் வருது சொல்வாங்க. அதை ரெகுலரா படிக்கிறவங்க்களும் நாங்க ரிலாக்ஸ் செய்ய வருகிறோம் தேடிப்பிடித்து நல்லப்பதிவை படிக்கனும் னு என்னக்கட்டாயம் சொல்வாங்க.

இதைவிட கொடுமை என்னனா அப்புறமா நல்லத்தரமான பதிவுகளே வரவில்லைனு ஒரு பதிவும் எழுதுவாங்க :-))

நல்லாத்தீனிப்போடுவது போல சிலப்பதிவுகள் எனக்கு மாட்டும், அத அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன், உங்கப்பதிவும் அவ்வகையே.அதுவும் மட்டுறுத்தல் இல்லாம இருப்பது இன்னும் வசதி :-))

அடுத்த மோசமான கலாச்சாரமா இந்த மதவாதிங்க. சரி எழுதுறாங்க ஓ/கே என்னாத்துக்கு திரிச்சு எழுதனும். அப்புறம் அவங்க எழுதுவதிலே ஒரு தெளிவும் இருப்பதில்லை. விஷயமும் தெரிவதில்லை. குருட்டுத்தனமா சொல்வாங்க. அது அவங்க மதநூல்களில் கூட அப்படி இருக்காது என்பது தெரியாது, சும்மா யாரோ சொன்னத கேட்டுடு பேசுவாங்க.

இங்கே பேசின சிலருக்கு மத நூலில் அடிப்படையில் என்ன இருக்குனு கூட தெரியலை , ஆனால் சொல்வது சரினு பேசிக்கிட்டு இருந்தாங்க. இதை இங்கே சண்டையாக்க கூடாது என்பதாலேயே சும்மா மொக்கைப்போட்டு வச்சேன்.வேறு சந்தர்ப்பதில் மாட்டாமலா போவாங்க :-))


//ஷாமல்,கஃப் இரண்டுமே பேட்டைக்கு புது வார்த்தையா தெரியுதே!விளக்கவும்.//

எண்ணைப்பேட்டைல இருந்துக்கிட்டு இப்படி சொல்லிட்டிங்களே. வருடா வருடம் சவுதி, துபாய் னு கல்ப்ல அடிக்கிற புழுதிப்புயல் பேரு தான் அது. ஒரு வேளை அரபி பேர தப்பா சொல்லிட்டனோ.shamal. kauf windsஆங்கிலத்தில். யூடுயுப் ல வீடியோ எல்லாம் இருக்கு , மணல் பறக்கும் காத்து :-))

//கலிலியோ புதுப்படம் போட்டாச்சு.
அது உங்க ஏரியா.//

அடுத்த ஆட்டத்துக்கு போயாச்சா, இதை சில்வர் ஜூப்லி ஆக்கலாம்னு பார்த்தேன். ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தா கண்டினியு செய்யலாம் :-))

இப்போ புது படம் , புது பின்னூட்டம்னு கலக்குறிங்க ராஜ் :-))