Followers

Wednesday, January 25, 2012

எம்.எஃப் ஹுசைனை அரவணைத்து சல்மான் ருஷ்டியை கைவிடலாமா?

 முந்தைய கலிலியோ பதிவில் நானும் பதிவர் வவ்வாலும் எம்.எஃப் ஹுசைனுக்கு குரல் கொடுத்து விட்டு சல்மான் ருஷ்டியை கை விட்டு விடலாமா என பின்னூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம்.சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் இலக்கிய விழா வருகைக்கு எதிர்ப்பு குறித்து ஹிந்து பத்திரிகையும், NDTV தொலைக்காட்சியும் பொது விவாத விழிப்புணர்வை உருவாக்கியுள்ளன.
நேர பகிர்வு தாமதத்தில் பதிவு போட இயலாத சூழலில் பதிவர் தருமி சல்மான் ருஷ்டி குறித்த முதல் கருத்து வெளியாடலை முன் வைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.(பதிவர் தருமி!இந்தப் பதிவை ஒருவேளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!சல்மான் ருஷ்டியென முழுப்பெயரையும் உச்சரியுங்கள். இல்லையெனில் ருஷ்டியாவது போடுங்கள்.சல்மான் என்று விளித்ததும் ஒஸ்தி யோட ஒரிஜனல் இங்கே எங்கே வந்தார் என்ற குழப்பமே தோன்றியது:)..

இனி பதிவின் சாரத்துக்கு செல்லும் முன் எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம் என்ற பதிவையும் உள்வாங்கிக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் சமனீடு குறித்த எனது பார்வையை புரிந்து கொள்ள வசதிப்படும்.

மதம் சார்ந்த,சாராத கருத்துக்கள் பதிவுலகில் வலம் வருவது ஒருபுறமிருக்க பெங்களா தேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்,இந்தியாவின் சல்மான் ருஷ்டி போன்றவர்களின் இலக்கிய வெளிப்பாடுகளுக்கு வரும் உயிர் பயம் மிரட்டல்களிலிருந்து மத தீவிரவாதங்களின் அளவுகோலை கணிக்க இயலும். சும்மா கிடந்ததை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்பவே சல்மான் ருஷ்டிக்கு எதிரான ஈரானிய கோமினியின் செயலும் கூட.Satanic verses என்ற வார்த்தையின் சாத்தானின் வேதம் என்ற சொல்லாடலுக்கு கூட கோமினியே உரிமை கோரலாம்:)முன்னாடி நம்மூர்ல பாம்புக்கும் கீரிக்கும் சண்டைப் போட விடுகிறேன் எனும் மோடி மஸ்தான் வேலையே சாத்தானின் வேதம் பிரச்சினையும்.

இப்பொழுது நாவலின் பெயர்கள்,உட்பொருள் என பல வியாக்கியானங்கள் வெளிவரத்தொடங்கியிருந்தாலும் சல்மான் ருஷ்டி புத்தகத்தை வெளியிட்ட காலகட்டத்தில் புத்தகத்தின் உட்பொருள் அறிந்த ஒரே ஆள் சல்மான் ருஷ்டியாக மட்டுமே இருக்க முடியும்.பேனை பெருமாளாக்கின கதையாக பெயர்களின் உவமை காரணமாக மதம் சார்ந்த ஆய்வாளர்கள் கருத்து வெளியிட,சிறு நெருபபை ஜுவாலையாக்கிய பெருமை கோமினிக்கே. பத்வா,கொலை மிரட்டல்கள் வந்த காலகட்டத்திலும் கூட விமர்சனத்துக்குள்ளான வரிகள் எவை என்பது குறித்து யாருக்கும் தெரியாது.குறைந்த பட்சம் பத்வா கொடுத்த கையோடு கோமினியே விமர்சனத்துக்குரிய வரிகள் என்ன என்று விளக்கியிருக்கலாம். கோமினி பத்வா கொடுத்து விட்டாரா?அப்ப சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடவேண்டியதுதான் என்ற ரீதியிலேயே சுமார் 8 ஆண்டுகள் சல்மான் ருஷ்டியின் குரல் எந்த எழுத்து அரங்க வட்டங்களிலோ ஒலிக்கப்படவில்லை.
பின்பு மிதவாதியான முகமது கட்டாமி(Mohammad Khatami))ஈரான் ஆட்சியின் தலைமைக்கு வந்தவுடன் சல்மான் ருஷ்டியையோ அவர் மீதான கொலை மிரட்டலையோ ஆதரிக்கப்போவதுமில்லை.என்ற தீர்மானத்திற்கு பின் சல்மான் ருஷ்டியின் குரல் பொதுவெளியில் ஒலிக்கத்துவங்கியது. 

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் மத தீவிரவாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவின் மத தீவிரவாதம் குண்டுவெடிப்புக்களாக வெளிப்பட்டாலும், குண்டுவெடிப்பின் பின்ணணியில் இந்துத்வா மத தீவிரவாதமும் ஒளிந்து கொண்டிருப்பதால்,பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கிய மத தீவிரவாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒப்பிட்டால் இந்திய மத தீவிரவாதம் கட்டுக்குள் உள்ளதென்றே கொள்ளலாம்.மிரட்டல்கள்,உயிர் பயங்கள் உருவாக்குவதின் காரணமாக அமைதியை விரும்புவர்களின் குரல்கள் வெளிப்படாமல் இஸ்லாமியத் தீவிரவாதம் மட்டுமே தன் முகத்தைக் காட்டுவதால் இஸ்லாமியத்தின் இயல்பான பிம்பம் மென் மேலும் சரிந்து விடுவது என் போன்று வளைகுடா நாடுகளில் வாழும் மதசார்பற்றவர்களுக்கு வருத்தமே.

இவற்றோடு மதக் கோட்பாடு நூல்களும் தொடர்ந்து பயணிப்பதும் கூட மனிதர்களின் தொடர் உணர்வலைகளின் பொருட்டே என்பதும் ஆச்சரியமளிக்கும் ஒன்றும் கூட..நான் சிறுவயதில் கண்ட ஒற்றை ஆலமரம் யாரோ ஒருவர் பத்திக்குச்சி கொளுத்தி வைக்க காலப்போக்கில் ஆலமரக்கோயில் ஆகிப்போனதும், மழை காலத்து சறுக்கும் சாலையோ,சேரன் போக்குவரத்து வாகனக் கோளாறோ, வாகனம் ஓட்டியின் தவறான கணிப்போ ஒரு வாகனத்தின் மொத்த உயிர்களும் விபத்தால் இறக்க காலப்போக்கில் அந்த இடம் முனியாண்டி கோயிலாகிப்போனதை காண நேர்ந்தது. 

மனித பயங்களுக்கு அப்பாற்பட்டு,கேள்விகளுக்கான முழு பதிலாக பாமரனுக்கும் புரியும் சூழலில்,பரிணாமக் கோட்பாடுகளும் மனித சக்தியின் மொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் காலகட்டத்தில் மத நம்பிக்கைகள் கடவுளிடமிருந்து விடுபட்டு ஈனஸ்வரமாக ஒலிக்கும் காலகட்டத்தில் மதவாதங்கள் அடிபட்டு முந்தைய சந்ததியின் கலாச்சார. கருவூலங்கள் என்ற நிலையில் மட்டுமே மதநூல்களும், மதம் சார்ந்த கோட்பாடுகளும் நிற்க கூடும்.இதற்கு உதாரணமாக எகிப்தில் உள்ள பிரமிடுகளைக் கூறலாம்.மேற்கத்திய நாட்டவர்களுக்கும்,மனித வரலாற்றில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கும், பைபிளின் பழைய அதிகாரங்களுடன் தொடர்பு படுத்துபவர்களுக்கும் முக்கியமாக  சுற்றுலா பொருளாதாரத்தை தருவதால் மட்டுமே எகிப்திய அரசுக்கும் பிரமிடு ஒரு பிரமிப்பான விசயம்.மேலும் நமது உள்ளூர்க்குள்ளே இருக்கும் கட்டிடங்களின் பாரம்பரியம் பற்றிக் கவலைப்படாத மனநிலையே சராசரி எகிப்தியர்களின் மனநிலையும்.

இந்துத்வா தீவிரவாதம் இந்தியா சார்ந்த ஒன்று மட்டுமே.அதன் எல்லைகள் இன்னும் நாடுகளீன் எல்லைகளைக் கடக்கவில்லை.ஆனால இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் பிறப்பிடம் ஆழ்ந்த நிகழ்வுகளை சுமார் 60களின் இறுதி துவங்கி 9/11 வரை உற்று நோக்கினால் இதன் பூர்வீகம் பாகிஸ்தானில் முன்பு கூடி ஊக்குவிக்கப்பட்ட இஸ்லாமிய மதக்கூட்டங்களாக இருக்க கூடும்.இதன் தாக்கங்களாக பம்பாய்,,கோவை குண்டு வெடிப்பு போன்றவற்றை சொல்லலாம்.சுதந்திர இந்தியாவின் இந்து,இஸ்லாமிய வேறுபாட்டின் துவக்கமாக 1993ல் தாவுத் இப்ராஹிம் உதவியுடன் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்த பம்பாய் குண்டுவெடிப்பே பிரச்சினைகளின் துவக்கமாக கூறலாம்.இதனைத் தொடர்ந்த சிமி என்ற இஸ்லாமிய மாணவர் அமைப்பும், பி..ஜே.பியின் இந்துத்வா தீவிரவாதம்,பாபர் மசூதி இடிப்பு என்ற இந்து தலிபானிசம்,நரேந்திர மோடியின் அரசியல் சூதாட்டங்களாக குஜராத் கலவரங்கள் என நிகழ்வுகள் தொடர் கதையாகின்றன.

என் மாமாவின் நண்பர் ஒரு இஸ்லாமியர்.கோவை அலங்கார் ஓட்டலுக்கருகில் அவரது வீடு இருந்தது.மாமா நண்பரின் வீட்டில் உணவருந்தும் அன்னியோன்ய காலமெல்லாம் இருந்த கோவை இரவுக்காவல் போலிஸ்நிலையங்களாக பின்பு மாறிவிட்டது வருத்தத்திற்குரிய ஒன்று.

பாகிஸ்தானிய மத தீவிரவாதத்திற்கு காரணமென்ன என்று யோசித்தால் இந்திய,பாகிஸ்தான் பிரிவினை துவங்கி,அமெரிக்கா,ரஷ்யா பனிப்போர் காலத்தில் பூகோள நலன்கள் அடிப்படையில் ஜனநாயக இந்தியாவை விட்டு அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் சாய அதே பூகோள நலன்கள் அடிப்படையில் இந்தியா ரஷ்யா பக்கம் சாய,அமெரிக்காவின் ஹென்றி கிஸ்ஸிங்கரால் காஷ்மீர் பிரச்சினைக்கு தூபமிட்டது,ரஷ்யாவின் ஆப்கானி|ஸ்தான் ஆக்கிரமிப்பு எதிராக மதத்தின் அடிப்படையில் போராட வந்தவர்களை ஒன்றி திரட்டியதில் ஒசாமாவின் பங்கும்,அமெரிக்காவின் சி.ஐ.ஏ பண,ஆயுத பங்களிப்பும், சவுதி அரேபியாவின் மதம் சார்ந்த பணப் பங்கீடுமென முந்தைய ரகசியங்கள் 9/11க்குப் பின் பொதுவுக்கு வந்து விட்டன.
இந்தியா மீதான பாகிஸ்தானின் வன்மம் பாகிஸ்தானிலிருந்து பெங்களாதேஷைப் பிரித்ததில் துவங்கி நேரு காலத்து காஷ்மீர் பிரச்சினையை வலுப்படுத்துவதிலும்,காஷ்மீர் இந்துக்களை அப்புறப்படுத்தும் இஸ்லாமிய தீவிரவாதத்திலும்,காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினரை சிறை செய்து கொலை செய்த நிகழ்வுகளாய் காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலமாக ஊக்குவிக்கப்படுகிறது.மதம் தவிர்த்து பதிவுகள் போட மாட்டேன் என்கிற பதிவர்கள் போல:) மதம் தவிர்த்து பள்ளியில் வேறு பாடங்கள் இல்லையென தலிபான் பள்ளிகள் பாகிஸ்தானுக்குள் ஊக்குவிக்கப்படுகின்றன.இந்தியாவுக்கு எதிரான பயிற்சி களங்கள் பாகிஸ்தானுக்குள் அரசு ஆதரவுடன் உருவாக்கப்படுகின்றன.

பாகிஸ்தானுக்குள் உருவாகும் இந்தியாவுக்கான எதிரான தீவிரவாதத்தை முடுக்கி விட்டதில் தாவுத் இப்ராகிமின் பங்கும்,சிமி மாணவ இயக்கத்திற்கும் முக்கிய பங்குண்டு.சிமி மாணவ இயக்கத்தின் மறுபக்கத்தையும் இந்திய முஸ்லீம்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னவென்றும் ஆராயப்படவேண்டிய ஒன்று என்ற போதிலும் இதற்கு அடிப்படையாக மதம் என்ற சொல் குறுக்கே வந்து முட்டுக்கட்டைபோட்டு பிரச்சினையை திசை திருப்பி விடுகிறது.
இதற்கு எதிர்வினையாக இந்துத்வா செயல்பாடுகளும் கிரியா ஊக்கியாக செயல்பட இஸ்லாமிய தீவிரவாதத்தின் தன்மை மதத்தின் பொதுத்தன்மை அடிப்படையில் சாதாரண நம்பிக்கையாளனையும் பற்றிக்கொள்கிறது.தான் எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக உணரும் மனிதனுக்கு மதம் சார்ந்து எந்த கருத்து வந்தாலும் ஒரே பாய்ச்சல்தான் என்பதனை விட மத உணர்வுகளை தூண்டி விடும் தீய பந்து குழு,தஸ்லிமா நஸ்.ரீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மஜ்லிஸ் போன்ற குழுவினர்,இந்துத்வா தீவிரவாதம் போன்றவை மனித நலன்களுக்கும்,மதங்களின் ஒற்றுமைக்கும் மிகவும் ஆபத்தானவை.

இதில் இன்னுமொரு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் ஈரானிலிருந்து ஷியா கோமினியிடமிருந்து வந்த பத்வா காரணமாக சவுதி அரேபியாவும்,ஏனைய இஸ்லாமிய நாடுகளும் சல்மான் ருஷ்டி விசயத்தில் அடக்கி வாசிக்கும் பூகோள அரசியலும் குறிப்பிடத்தக்கது.

கோமினியின் சல்மான் ருஷ்டி மீதான பத்வாவும, அதனைத் தொடர்ந்த கொலை மிரட்டல்களும் முகமது கட்டாமியின் கருத்துக்குப் பின்பான காலவெள்ளத்தில் மறக்கப்பட வேண்டிவையாகவும்,சல்மான் ருஷ்டியின் கருத்து பரிமாற்றங்கள் செய்து அதன் அடிப்படையில் மீண்டும் எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால் கூட நியாயமாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு மனித வாழ்வின் காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்வை பிற்கால சந்ததிக்கு கொண்டு செல்வது கவிதை, இலக்கியம், ஓவியம், அறிவியல் கண்டுபிடிப்புக்கள் போன்றவை. இவற்றை அழிக்கும் எந்த ஒரு இசமும் வரலாற்றில் பின் தங்கிப்போவதோடு எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.

மதம் சார்ந்த கருத்துக்கள் ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்களை உருவாக்குவதை விட பிரிவினை உணர்வுகளையும்,கோபங்களையுமே முன்வைக்குமென்று தெரிந்திருந்தும்  நான் சார்ந்த உணர்வுகளை எம்.எஃப்.ஹுசைனுக்கு சொன்ன கருத்தையும்,சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு மிரட்டல் குறித்த கால இடைவெளியை ஒப்பீடாக பதிவு செய்யும் நோக்கிலேயே இந்த பதிவு பகிரப்படுகிறது.
சல்மான் ருஷ்டி குறித்து பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லையென்பதை பதிவர் தருமிக்கு சல்மான் ருஷ்டி குறித்த பின்னூட்டம் சொல்லும் போது "இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்கிய V.S.Naipaul பற்றியோ India: A Wounded Civilization என்ற புத்தகம் பற்றியோ எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள்:)" என்று குறிப்பிட்டிருந்தேன்.இலக்கிய வாசக வட்டத்தில் மட்டுமே  சலசலப்பை உண்டான புத்தகம்.படிப்பவர்களுக்கு இரு எழுத்தாளர்களுக்கும உண்டான சலசலப்பின் வித்தியாசம் புரியும்.



116 comments:

வவ்வால் said...

ராஜ்,

ஊரடங்கு உத்தரவை கலைச்சிட்டிங்களா :-))

ஹூசைனுக்கு கொடுத்த ஆதரவை ஏன் சல்மான் ருஷ்டிக்கு கொடுக்க கூடாது என்ற கேள்விக்குள் ஒரு மத அரசியல் இருக்கு என்பதும் ஒரு காரணம்.

ஹூசைன் இந்துக்கடவுள் சரச்வதியை வரைந்து பிரச்சினைக்குள் மாட்டியதால் அவர் இந்துதுவாக்களின் கோபத்துக்கு ஆளானார்.தன்னிச்சையாகவே இஸ்லாமிய கருத்தாக்கம் கொண்டவர்கள் ஆதரவு தந்தார்கள். மதச்சார்பின்மை பேசும் அரசும் ஆதரவு அளித்தது.

ருஷ்டி இஸ்லாமியருக்கு எதிரான கருத்தாக்கம் கொண்டது போல் நாவல் எழுதியதால் இஸ்லாமிய மதவாதிகள் எதிர்ப்பை பெற்றார். ஆனால் இந்துத்துவாக்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை, என்ர நிலையே இருக்கிறது. மேலும் மதச்சார்பின்மை அரசும் தவிர்க்க பார்க்கிறது. மேற்கத்திய உலகம் தான் தொடர்ந்து அவரை சுவிகரித்து வைத்துள்ளது.

இதுக்கு பெயர் தான் இந்திய மதச்சார்பின்மை :-))

நீங்க சொன்னாப்போல பெருச்சாளியை பெருமாள் ஆக்கியது மத அடிப்படை வாதிகளே.

முகது நபி ஏதொ ஒரு இடத்தில் சாத்தானின் தூண்டுதலால் மெக்காவில் 3 ஏஞ்சல்கள் இருப்பதாக சொன்னேன் என்கிறாராம், அதனை சாத்தானின் வேதம்னு குறிப்பிடுவார்களாம், புத்தகத்தின் பேரும் அதில் வரும் ஒரு கேரக்டர் (மகுண்ட்) பேரும் மறைமுகமாக இஸ்லாத்தை குறிக்கிறது என்று தான் இந்த கலாட்டா. ஏன் மகுண்ட் என்பது முகுந்த் என்ற் இந்து பெயர் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லாம் மதவாதிகளின் ஏகபோக முடிவு :-))

சார்வாகன் said...

வ்ணக்கம் சகோ
நன்றாக வரலாற்றை அலசி உள்ளீர்
நம் பங்கிற்கு
எம் எஃப் ஹுசைனை நாட்டை விட்டே விரட்டியவர்கள் சல்மான் ருஷ்டிக்காக குரல் கொடுக்க முடியுமா? இருவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மதத்தை குறி வைத்தே எழுதினார்கள் என்றோ அதினால் ஏதாவது பயன் பெற்றார்கள் என கூற இயலுமா?

கோயில்களில் இல்லாத நிர்வாண சிற்பமா? இல்லை இபின் இஷக்,அல் தபரி கூறாததை சல்மான் ருஷ்டி கூறினாரா?

இரு மதவாதங்களும் ஒன்றையொன்று வளர்க்கிறது என்பதுதான் உண்மை.இப்போது காங்கிரஸ் ஓட்டுக்காக ருஷ்டியை தடை செய்ததால் இந்துத்வா சக்திகளுக்கு இன்னொரு விதத்தில் இறங்கி போகும்.பாஜக இதை வைத்து எதிர்வினைகளை ஓட்டாக மாற்ற முயலும்.
இதே போல் ஷாபானு வழக்கில் பல்டி அடித்த ராஜீவ் அரசு,இராமர் கோயிலை திறந்து அப்பிரச்சினைக்கு வழி வகுத்தது.மத ரீதியான பிளவு ஏற்பட்டதில் ,பாஜகதான் அதில் பயன் அடைந்தது.
இதில் முஸ்லிம் தலைவர்கள் ருஷ்டியை கண்டு கொள்ளாமல் விட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.இதன் விளைவுகள் என்ன நடக்குமோ!!!!


மத சார்பின்மை என்பதை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் மதவாதிகளுக்கும் காங்கிரஸ்க்கும் போட்டி.
இப்போது இது எவ்வகையில் அரசியல் ஆக்கப்படும்?
யார் பயனடைவார் என்பது மட்டுமே அரசியல்.

UNMAIKAL said...

CLICK TO READ

>>>>> பெண் பித்தனும் சர்வதேச எழுத்து விபச்சாரனுமாகிய சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா? சர்வதேச இலக்கிய விழாவா ? ருஷ்டிக்கு ஆப்பு! வச்சது யாரு? <<<<<


.

Robin said...

மேலே ஒரு ஆள் எப்படி எம்பிக் குதிக்கிறார் பாருங்க :)

Riyas said...

வணக்கம் நண்பரே.. நலமா?

பதிவை முழுமையாக படித்தேன் கருத்துச்சொல்லுமளவுக்கு எனக்கு அறிவு போதாதுன்னு நினைக்கிறேன்..

இந்த சல்மான் ருஷ்டி பற்றி நானும் நிறைய தேடியிருக்கிறேன்.. அந்த சாத்தானின் கவிதைகள் தொகுப்பில் அவர் அப்பிடி என்னதான் சொல்லியிருக்கார் என்று பார்ப்பதற்கு.. அதைப்பற்றித்தெரியாமல் கருத்துச்சொல்வது கடினம்,,

மனித உயிர்களின் மதிப்புத்தெரியாமல் மதத்தின் பெயரால் நடாத்தப்படும் பயங்கரவாதத்திற்கு என்னிடம் மாற்று கருத்து கிடையது,
அவை அழித்தொழிக்கபடவேண்டியவையே..

ராஜ நடராஜன் said...

வவ்!பி.ஜே.பிக்கு எதிரான இஸ்லாமிய ஓட்டுகள் இருப்பதால் மட்டுமே காங்கிரஸ் கள்ள் மௌனம் சாதிக்கிறது.சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வராமல் போனது இந்திய ஜனநாயகத்துக்கு மட்டுமே அவமானம்.இது இன்னுமொரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு இந்தியா அடிபணிந்த வரலாற்று நிகழ்வு.ஈரானின் மிரட்டல் இஸ்லாமிய அடிப்படைவாத நாட்டுக்கு வேண்டுமென்றால் பொருத்தமாக இருக்கலாம்.இந்தியா போன்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மதசார்பற்ற நாடு என்று பறைசாற்றிக்கொள்ளும் தேசத்திற்கு உகந்ததல்ல.

ஹுசைனின் சரஸ்வதி படத்தையாவது கலை என்ற கண்ணோட்டத்தில் காணலாம்.டைம்ஸ் பத்திரிகை தென்னிந்தியாவை பெண்ணின் கால் பகுதி மாதிரி அட்டைப்படம் வரைந்ததை இன்னும் எத்த்னை இந்துத்வாவாதிகள் நினைவில் வைத்திருப்பார்கள்?

நமது குரல் முந்தைய ஊரடங்கு உத்தரவு மாதிரி ஒரு தலைப்பட்சமானதல்ல என்பதை உணர்த்துவதற்காகவே ஹுசைனுடனான சல்மான் ருஷ்டியின் ஒப்பீடு.ஒவ்வொருவருக்கும் அவரது குரலை இலக்கியமாகவோ,ஓவியமாகவோ,கவிதையாகவோ வெளிப்படுத்தும் உரிமை உண்டு.பிடிக்கவில்லையென்றால் தனது கண்டனக்குரலை ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டமாக வெளிப்படுத்தி விட்டு விடுவதே நல்லது.உயிர் மிரட்டல்கள் தீவிரவாதத்தின் செல்லக்குழந்தைகளே.

இந்திய மதச்சார்பின்மை நீங்க சிரிப்பான் போட்டது போலவே பல்லைக்காட்டுகிறது.

சல்மான் ருஷ்டி புத்தகம் வெளியிட்டதும் சேது படம் மாதிரி தூங்கிக்கொண்டிருக்க கோமினியின் பத்வா காரணமாக ராயல்டி மீட்டர் வட்டி மாதிரி ஏற சல்மான் ருஷ்டி டாலர் கோடிஸ்வரனாக மாறிவிட்டார்.

கோமினி ராயல்டியில் பங்கு கேட்க நியாயமுண்டு:)

மகுண்ட முகுந்தன்னு ஆகியிருந்தாலும் கூட இந்துத்வாவாதிகள் பத்வா மாதிரி தீவிரத்தனம் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே.உதாரணமா முன்னாடி காதலர் தினம் கொண்டாடக்கூடாதுன்னு குரல் விட்ட பெங்களூர் பேர்வழியின் சத்தம் இன்னும் ஒலிக்கிறதா?

சல்மான் ருஷ்டி மருண்ட மகுண்ட சொல்லின் காரணத்தை பதிவர் சார்வாகனின் அடுத்த பின்னோட்டத்தோடு இணைத்து விடுகிறேன்.கோத்து விடறதுங்கிறது இதுதானோ:)

ராஜ நடராஜன் said...

சகோ சார்வாகன்!வவ்வாலின் முந்தைய பின்னுட்டத்தின் இறுதிப்பகுதிக்கு பதிலாக உங்கள் பின்னூட்டமே அமையும் என நினைக்கிறேன்.

நமக்கு எந்த மதத்தையோ,மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தவோ விருப்பமில்லை.அதே சமயத்தில் பொதுவான மனித பிரச்சினைகளுடன் மதமும் ஒன்றிணைந்து வருவதால் மதம் குறித்த பார்வையையும் பேசவேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.

சல்மான் ருஷ்டியின் எதிர்ப்புக்கு காரணமென்ன என்ற Satanic verses controversial lines என்ற தேடலில் விக்கிபீடியா கீழே குறிப்பிடும் சொற்களை கொண்டு வருகிறது.
“The title refers to an alleged incident in the ministry of the Prophet Muhammad, when a few verses were supposedly spoken by Muhammad as part of the Qur'an and then subsequently withdrawn on the grounds that the devil had sent them, deceiving Muhammad into thinking they came from God. These "Satanic Verses" are therefore not found in the Qur'an, but are described by Ibn Ishaq in the first biography of Muhammad, and also appear in other biographies of the prophet's life. The disputed verses permitted prayers of intercession to be made to three pre-Islamic Meccan goddesses: Allāt, Uzza, and Manah— a violation of the Islamic principle of monotheism.”

மேற்கொண்ட வரிகள் இஸ்லாமிய ஒற்றை இறைவன் கொள்கையை நேர்மாறானதாக உள்ளதோடு நீங்கள் கூறும் இபின் இஷக் போன்றவர்களையெல்லாம் சல்மான் ருஷ்டி துணைக்கழைக்க வேண்டியதாக உள்ளது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு குரலுக்கேற்ப சல்மான் ருஷ்டி மீதான அக்கறை கொண்டவர்களும்,கோபமுடையவர்களும் புத்தக வாசிப்புக்குப் பின் முடிவுகள் கொள்வதே சரியான தீர்ப்பாகவும்,விமர்சனங்களாகவும் அமையும்.

நிர்வாணமாக கோயில் சிலைகள் வடித்தவனும் அந்த அந்த காலகட்டத்து சிற்பி எனும் கலைஞன்.அந்த் அளவீட்டில் ஹுசேன் என்ற ஓவியனும் கலைஞனே.

இரு மதவாதங்களும் ஒன்றுக்கொன்று தீவிரவாதங்களை உருவாக்குகிறதென்ற போதிலும் இந்துத்வா இந்தியா சார்ந்த ஒன்றாகவும்,இஸ்லாமியத்தீவிர வாதம் நாடுகளின் எல்லைகள் கடந்து தாய்லாந்து,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,இந்தியா,ஈராக்,ஆப்பிரிக்கா,ஸ்பெயின்,போர்ச்சுகல்,லண்டன்,அமெரிக்கா என எல்லைகள் கடந்த ஒன்று.

இதற்கான மூல காரணங்களாக முந்தைய காலனித்துவமும்,அமெரிக்க சுரண்டல்களும் கூட மறைந்து கிடக்கின்றன என்பது இன்னொரு பதிவில் அலச வேண்டிய ஒன்று.

நீங்கள் குறிப்பிட்ட படி ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸும்,பி.ஜே.பியும் இந்திய மதசார்பின்மையை குழிதோண்டிப் புதைப்பதில் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவு.

ராஜ நடராஜன் said...

//மனித உயிர்களின் மதிப்புத்தெரியாமல் மதத்தின் பெயரால் நடாத்தப்படும் பயங்கரவாதத்திற்கு என்னிடம் மாற்று கருத்து கிடையது,
அவை அழித்தொழிக்கபடவேண்டியவையே..//

சகோ.ரியாஸ்!உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

எனக்கும்,என்னோடு உரையாடல் செய்யும் ஏனைய பதிவர்களுக்கும் மதங்களுக்கும் அப்பால் மனித நேயம் வளர வேண்டுமென்பதே கனவு.இதில் இந்துத்வா தீவிரவாதமாக இருந்தாலும் சரி,இஸ்லாமிய தீவிரவாதமாக இருந்தாலும் சரி.மத தீவிரவாதங்கள் கலை,இலக்கியம் ஊடாகவும் பரவுகிறது என்பதற்கு ஹுசேனும்,சல்மான் ருஷ்டியுமே சாட்சி.தஸ்லீமா நஸ்ரின் போன்ற பெண்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டிய ஒன்று.

ஆரோக்கியமான நேர்,எதிர் விவாதங்களில் பெயர்கள் எல்லாம் பொருட்டல்ல என்பதால் மீண்டும் இணைந்து கொள்வோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

உண்மைகள்!சல்மான் ருஷ்டிக்கு ஆப்பு வச்சது யாரு என்ற பதிவை நீங்கள் தொடுப்பு கொடுப்பதற்கு முன்பே பதிவு க்யூ வரிசையில் நின்ற போதே படித்தேன்.பெரிதாக கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லையென்ற குழப்பும் பதிவு என்பதால் கருத்து சொல்லவில்லை.

தொடுப்புக்கு நன்றி என்பதை விட எல்லா இடத்துக்கும் போய் மேய இயலாததால் தர்க்கரீதியான மூளைக்கு வேலை கொடுக்கும் இணைப்புக்களை வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//Robin said...

மேலே ஒரு ஆள் எப்படி எம்பிக் குதிக்கிறார் பாருங்க :)//

ராபின்!சில நேரங்களில் பின்னூட்டங்கள் இடும் உண்மை அவர்.

நீங்க அவரை எம் பி ஆக்கிட்டீங்களே!
இவராவது தொடுப்பாவது கொடுக்கிறார்.நம்மளும் அனுப்பி வச்சோமே எம்.பி என்ற பெயரில் சிலரை.எங்கேயாவது எதற்காகவாவது குரல் கொடுத்துள்ளார்களா பாராளுமன்றத்தில்.எம் புருசனும் பார்லிமெண்ட் போனார் என அவங்க வீட்டுப் பெண்மணிகள் பெருமை பட்டுக்கொள்ளவே தகுதியானவர்கள்:)

ராஜ நடராஜன் said...

பதிவையும்,பின்னூட்டங்களையும் தொடர்பவர்களுக்கு சல்மான் ருஷ்டி NDTV யின் பர்கா தத்துக்கு கொடுத்த கான்பரன்ஸ் காணல் தொடுப்பு
http://www.ndtv.com/video/player/news/im-returning-to-india-deal-with-it-salman-rushdie-to-ndtv/221965?hp

பதிவையும்,பின்னூட்டங்களின் சாரத்தையே ருஷ்டியும் வெளிப்படுத்துகிறார்.

சல்மான் ருஷ்டி கடந்த நான்கு வருடங்களாக பல முறை இந்தியா வந்துள்ளார் என்பதும் இந்த முறை தடைக்கு முக்கிய காரணம் தேர்தல் மட்டுமே என்பதை பதிவுலக நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஹேமா said...

வந்தேன்...வாசித்தேன் !

A.R.ராஜகோபாலன் said...

மனிதம் போய் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை இது, யார் தொடங்கினார்கள் என்பதை மறந்து யார் முடிக்கப் போகிறோம் என்ற ஆரோக்கிய சிந்தனை என்று வரும்?????????????

ஆனால் ஒன்று மக்கள் மதத்தை மறந்தாலும் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளும், சந்தர்ப்பவாத மதவாதிகளும் இந்த மதத்தை பிடித்து தொங்கிகொண்டுதான் இருக்கப் போகிறார்கள், அந்த கயிறே இந்திய மதச்சார்பின்மையின் தூக்கு கயிறு.

எல்லா மதமும் அமைதியையும் அன்பையும் தவிர்த்து எதையும் போதிக்கவில்லை, பிறர் மதத்தை மதிக்காதவனால் தன் மதத்தையும் மதிக்க முடியாது என்பது என் கருத்து.

அருமையான பகிர்வு சார்.

Robin said...

//இவராவது தொடுப்பாவது கொடுக்கிறார்.//
நீங்க ஒண்ணு. அவரு குடுக்குற தொடுப்ப பாருங்க. கேவலமா இருக்கும். ஒவ்வொரு பதிவிலும் இப்படி கழிந்து வைத்து விடுவார். ஆனால் அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் குடுத்து பாருங்க, ஜால்ரா பின்னூட்டமா இருந்தா மட்டும்தான் போடுவார். இவரு நம்புரதுதான் உண்மையாம், அதனால்தான் உண்மைன்னு பேரு வச்சிருக்காரு. இது வேறு யாருமல்ல, நம்ம வாஞ்சூர் பாய்தான்!

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

வந்தேன்...வாசித்தேன் !//

ஹேமா!உரைநடைக்காரன்கிட்டேயும் கவிதையா:)

ராஜ நடராஜன் said...

//Blogger A.R.ராஜகோபாலன் said...

மனிதம் போய் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த வினை இது, யார் தொடங்கினார்கள் என்பதை மறந்து யார் முடிக்கப் போகிறோம் என்ற ஆரோக்கிய சிந்தனை என்று வரும்?????????????//

ARR! வாங்க!மத தீவிரவாதம் இப்பொழுது உலகளாவிய ஒன்றாகப் போனது.இதன் பிரதிபலிப்புக்களை பதிவுகளில் காண்பதோடு,ஓவியம்,இலக்கியம் என பரவலாகி விட்டது.

எண்ணைப் பொருளாதாரத்து மாற்று சக்தி வரும் வரை இதன் தாக்கம் இருக்கும்.அல்லது செவ்வாய்,சந்திர கிரக பிரவேசம்ங்கிற நிலையில் புதிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.நம்மால் இயன்றது மதசார்பற்ற குரலை இந்த காலகட்டத்தில் பதிவு செய்வதே.நன்றி.

ராஜ நடராஜன் said...

//Robin said...

//இவராவது தொடுப்பாவது கொடுக்கிறார்.//
நீங்க ஒண்ணு. அவரு குடுக்குற தொடுப்ப பாருங்க. கேவலமா இருக்கும். ஒவ்வொரு பதிவிலும் இப்படி கழிந்து வைத்து விடுவார். ஆனால் அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் குடுத்து பாருங்க, ஜால்ரா பின்னூட்டமா இருந்தா மட்டும்தான் போடுவார். இவரு நம்புரதுதான் உண்மையாம், அதனால்தான் உண்மைன்னு பேரு வச்சிருக்காரு. இது வேறு யாருமல்ல, நம்ம வாஞ்சூர் பாய்தான்!//

ராபின்!நீங்க இந்த உண்மையை முதல் பின்னூட்டத்திலேயே வெளிப்படித்தியிருக்கலாம்.நான் யாரையும் புண்படுத்த விரும்புவதில்லை.ஆனால் உண்மையென்ற பெயரில் திரியும் பொய்யர் விதிவிலக்காக கொள்ளலாம்.

மனிதர்களை இணைப்பது மிகவும் சிரமமான காரியம்.ஆனால் உடைப்பதென்பதோ,பகைமை உருவாக்குவதென்பதோ மிகவும் எளியது.இதனை அறியாமலும் சில பதிவர்கள்.இதனை அறிந்தும் வெறுப்புக்களை பதிவுலகில் தோற்றுவிப்போர் சிலர்.வயது ஏற ஏற சிலருக்கு மனம் விசாலமாகும்.சிலருக்கு சூதும்,வாதும்,பிரித்தாளும் மதவெறியும் உண்டாகும்.உண்மை என்ற முக்காடு இரண்டாம் வகை.இவர்களை அடையாளம் காண்பதும் புனைப்பெயரில் இருப்பவர்களை முகமூடி கிழிப்பதும் அவசியமான ஒன்று.

அந்த விதத்தில் இவரது முகமூடியை நீங்கள் கிழித்துள்ளீர்கள்.

அவர் கொடுத்த தொடுப்பின் தலைப்பும் நான் கொடுத்த NDTVயின் இணப்பும் ஒரே கருத்தை சார்ந்ததே.ஆனால் அவற்றின் தராதரம் அவரவர் எழுத்தில் வெளிப்படும்.

பொதுவா பதிவு போடாம எந்த புற்றுல எந்த பாம்பு இருக்கிறதென அறிவதும் தேவையான ஒன்று போல தெரிகிறதே:)

ருஷ்டியின் புத்தகம் சாத்தான் வேதம் ஓதுகிறதோ இல்லையோ பதிவுலகில் சாத்தான்கள் வேதம் ஓதவே செய்கின்றன.

I feel bad to vent my anger over here but sometimes it is necessary against a venom pouring people like so called names UNMAIKAL.

Robin said...

சமீபகாலமாக தமிழ் பதிவுலகத்தில் நடைபெறும் கூத்துக்களை அறிந்திருப்பீர்கள். தமிழ்மண நிர்வாகி உள்நோக்கமின்றி சாதாரணமாக சொன்ன விஷயத்தை ஊத்தி பெரிதாக்கி கலவரத்தை உண்டாக்கினர், இப்போது சல்மான் ருஷ்டி மீது தாக்குதல், இப்படியே போய் கொண்டிருந்தால் இனிமேல் தும்மல் வந்தால்கூட பயந்துதான் தும்ம வேண்டும் என்ற நிலை ஏற்படும். இந்த மாதிரி நிலைமை இஸ்லாமிய நாடுகளில்தான் சகஜம். இந்த நிலைமை இங்கும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது. மற்றவருடைய கருத்து சுதந்திரத்தை மறுத்து தன்னுடைய கருத்தை மட்டும் வலுக்கட்டாயமாக திணிக்கும் இணைய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

பொதுவில் வைக்கப்படும் எந்தக் கருத்தையும் யாரும் விமர்சனம் செய்யலாம், அது மதக் கருத்துக்களாக இருந்தாலும் சரி. ஒருவர் கடவுள் உண்டு என்று பதிவிட்டால் இன்னொருவர் கடவுள் இல்லை என்பார். எது சரி என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. ஆனால் யாரும் தங்களுக்கு எதிர்கருத்திடுபவரை தடை செய்யமுடியாது. இதுதான் கருத்து சுதந்திரம். தங்கள் பதிவை யாரும் விமர்சிக்ககூடாதென்றால் பொதுவில் வைக்கக்கூடாது. மத நம்பிக்கைகளை பதிவு செய்யும்போது தங்கள் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் சொல்லிக்கொண்டு சென்றால் யாரும் எதிர்ப்பதில்லை.அதை விடுத்து பொய் தகவல்களை வெளியிடுவதும், சந்தடிசாக்கில் மற்றவர்களைவிட நாங்கள்தான் யோக்கியம் என்று எழுதுவதும் எதிர்பதிவுகள் எழுதவே தூண்டும். மேற்படி நபர் மற்றவர்களின் நம்பிக்கைகளை கேவலமாக விமர்சிப்பவர், ஆனால் தன்னுடைய நம்பிக்கைகளை யாரும் விமர்சித்துவிட்டால் கும்பல் சேர்த்து பேயாட்டம் ஆடுவார். இவர் செய்வதைப்போல இஸ்லாமிய மதத்தை கேவலமாக பதிவெழுதி, அதன் லிங்கை இவர் பதிவில் பின்னூட்டமாக இட்டால் அனுமதிப்பாரா? தங்களுக்குள் சொல்லி வைத்துக்கொண்டு தமிழ்மணம் மகுடத்தை ஹைஜாக் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.

தருமி said...

//ஒஸ்தி யோட ஒரிஜனல் இங்கே எங்கே வந்தார் என்ற குழப்பமே தோன்றியது:).//

தலைப்பில் சரியான முழுப்பெயர் கொடுத்திருப்பதால் அப்படி தோன்றாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் 'உங்கள் சொல்லுக்காக' மாற்றி விட்டேன்.

தருமி said...

//தமிழ்மணம் மகுடத்தை ஹைஜாக் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.//

என்ன லாபம், ராபின்!

தருமி said...

நல்ல கட்டுரை. எனக்கு சில புது செய்திகளைத் தெரிவித்தன. நன்றி

ராஜ நடராஜன் said...

//சமீபகாலமாக தமிழ் பதிவுலகத்தில் நடைபெறும் கூத்துக்களை அறிந்திருப்பீர்கள். தமிழ்மண நிர்வாகி உள்நோக்கமின்றி சாதாரணமாக சொன்ன விஷயத்தை ஊத்தி பெரிதாக்கி கலவரத்தை உண்டாக்கினர், இப்போது சல்மான் ருஷ்டி மீது தாக்குதல், இப்படியே போய் கொண்டிருந்தால் இனிமேல் தும்மல் வந்தால்கூட பயந்துதான் தும்ம வேண்டும் என்ற நிலை ஏற்படும். இந்த மாதிரி நிலைமை இஸ்லாமிய நாடுகளில்தான் சகஜம். இந்த நிலைமை இங்கும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது. மற்றவருடைய கருத்து சுதந்திரத்தை மறுத்து தன்னுடைய கருத்தை மட்டும் வலுக்கட்டாயமாக திணிக்கும் இணைய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

பொதுவில் வைக்கப்படும் எந்தக் கருத்தையும் யாரும் விமர்சனம் செய்யலாம், அது மதக் கருத்துக்களாக இருந்தாலும் சரி. ஒருவர் கடவுள் உண்டு என்று பதிவிட்டால் இன்னொருவர் கடவுள் இல்லை என்பார். எது சரி என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. ஆனால் யாரும் தங்களுக்கு எதிர்கருத்திடுபவரை தடை செய்யமுடியாது. இதுதான் கருத்து சுதந்திரம். தங்கள் பதிவை யாரும் விமர்சிக்ககூடாதென்றால் பொதுவில் வைக்கக்கூடாது. மத நம்பிக்கைகளை பதிவு செய்யும்போது தங்கள் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் சொல்லிக்கொண்டு சென்றால் யாரும் எதிர்ப்பதில்லை.அதை விடுத்து பொய் தகவல்களை வெளியிடுவதும், சந்தடிசாக்கில் மற்றவர்களைவிட நாங்கள்தான் யோக்கியம் என்று எழுதுவதும் எதிர்பதிவுகள் எழுதவே தூண்டும். மேற்படி நபர் மற்றவர்களின் நம்பிக்கைகளை கேவலமாக விமர்சிப்பவர், ஆனால் தன்னுடைய நம்பிக்கைகளை யாரும் விமர்சித்துவிட்டால் கும்பல் சேர்த்து பேயாட்டம் ஆடுவார். இவர் செய்வதைப்போல இஸ்லாமிய மதத்தை கேவலமாக பதிவெழுதி, அதன் லிங்கை இவர் பதிவில் பின்னூட்டமாக இட்டால் அனுமதிப்பாரா? தங்களுக்குள் சொல்லி வைத்துக்கொண்டு தமிழ்மணம் மகுடத்தை ஹைஜாக் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது. //

ராபின்!எந்த வரிக்கு நான் பாராட்டு தெரிவிப்பேன்!தவறை சுட்டிக்காட்டவும் செய்கிறீர்கள்.அதே சமயத்தில் அவரை புண்படுத்தாத விதத்திலும் கேள்விகளை முன் வைக்கிறீர்கள்.இந்த டீல் எனக்குப் பிடிச்சிருக்குது:)

தமிழ்மண நிர்வாகிக்கு எதிரான குரலும்,சல்மான் ருஷ்டிக்கு எதிரான குரலும் மதம் என்ற ஒற்றைக்கோட்டில் சந்தித்தாலும் பதிவுகள்,பதிவர்கள் ஒரு கால கட்டத்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது.மீறிப் போனா ஒரு 100 வருட வாழ்க்கை!

ஆனால் சல்மான் ருஷ்டி மீதான மிரட்டல்கள் இந்திய ஜனநாயகத்தை ஆட்டிப்பார்க்கும் முயற்சிகள்.இது இன்னுமொரு தலைமுறைக்கும் கொண்டு சேரும் எதிர்கால விளைவுகள்.சல்மான் ருஷ்டி ராஜிவ் காந்தியிடம் 1988ல் கேட்டது போல் (தொடுப்பில் அவர் சொன்னது)...

Which type of government you envision for India? என்ற கேள்வி இப்பொழுது மன்மோகன் சிங்குக்கும் பொருந்தும்.

We are observing this blogger's fanatical views.I hope he will change his venom pouring ideas.

Robin said...

//என்ன லாபம், ராபின்!// மகுடத்தைப் பிடித்துவிட்டதும் "நாங்கள் ஜெயித்துவிட்டோம் பார்" என்ற அற்ப சந்தோசம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் அவர்களுக்குப் பாதகமாகத்தான் முடியப்போகிறது.

Robin said...

இக்பால் செல்வன் என்ற பதிவர் இவர்களின் இறைத்தூதரின் படத்தைப் போட்டுவிட்டார் என்பதற்காக கண்டபடி திட்டி சிலர் பதிவிவெழுத அவர் மனம் உடைந்து பதிவுலகத்தை விட்டே சென்றுவிட்டார். இன்னும் பலர் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பதுபோல ஒதுங்கி இருக்கிறார்கள். முதலில் ஓரிரு இஸ்லாமியர்கள் ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் சேர்ந்து இப்போது ஒரு கும்பலே 'அரிவாளுடன்' சுற்றி வருகிறது. இவர்கள் ஆசைப்படும் இஸ்லாமிய அரசாங்கம் இந்தியாவில் ஏற்பட்டால் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்களில் பலரும்கூட முஸ்லிம் பெயர்தாங்கிகள் என்று பட்டம் கொடுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவார்கள். நல்லவேளை இவர்களின் பொய் பிரச்சாரம் அவ்வளவாக இங்கு எடுபடவில்லை. வெளியில் சகோ என்று அழைத்து உள்ளுக்குள் வன்மத்துடன் திரியும் இவர்களை நம்பி ஜால்ரா அடிக்கும் ஒரு சிலரும் உண்டு. சிலர் இவர்களின் ஓட்டுக்காகவும் ஜால்ரா அடிப்பதுண்டு.

ராஜ நடராஜன் said...

// சமீபகாலமாக தமிழ் பதிவுலகத்தில் நடைபெறும் கூத்துக்களை அறிந்திருப்பீர்கள். தமிழ்மண நிர்வாகி உள்நோக்கமின்றி சாதாரணமாக சொன்ன விஷயத்தை ஊத்தி பெரிதாக்கி கலவரத்தை உண்டாக்கினர், இப்போது சல்மான் ருஷ்டி மீது தாக்குதல், இப்படியே போய் கொண்டிருந்தால் இனிமேல் தும்மல் வந்தால்கூட பயந்துதான் தும்ம வேண்டும் என்ற நிலை ஏற்படும். இந்த மாதிரி நிலைமை இஸ்லாமிய நாடுகளில்தான் சகஜம். இந்த நிலைமை இங்கும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது. மற்றவருடைய கருத்து சுதந்திரத்தை மறுத்து தன்னுடைய கருத்தை மட்டும் வலுக்கட்டாயமாக திணிக்கும் இணைய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

பொதுவில் வைக்கப்படும் எந்தக் கருத்தையும் யாரும் விமர்சனம் செய்யலாம், அது மதக் கருத்துக்களாக இருந்தாலும் சரி. ஒருவர் கடவுள் உண்டு என்று பதிவிட்டால் இன்னொருவர் கடவுள் இல்லை என்பார். எது சரி என்பது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. ஆனால் யாரும் தங்களுக்கு எதிர்கருத்திடுபவரை தடை செய்யமுடியாது. இதுதான் கருத்து சுதந்திரம். தங்கள் பதிவை யாரும் விமர்சிக்ககூடாதென்றால் பொதுவில் வைக்கக்கூடாது. மத நம்பிக்கைகளை பதிவு செய்யும்போது தங்கள் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் சொல்லிக்கொண்டு சென்றால் யாரும் எதிர்ப்பதில்லை.அதை விடுத்து பொய் தகவல்களை வெளியிடுவதும், சந்தடிசாக்கில் மற்றவர்களைவிட நாங்கள்தான் யோக்கியம் என்று எழுதுவதும் எதிர்பதிவுகள் எழுதவே தூண்டும். மேற்படி நபர் மற்றவர்களின் நம்பிக்கைகளை கேவலமாக விமர்சிப்பவர், ஆனால் தன்னுடைய நம்பிக்கைகளை யாரும் விமர்சித்துவிட்டால் கும்பல் சேர்த்து பேயாட்டம் ஆடுவார். இவர் செய்வதைப்போல இஸ்லாமிய மதத்தை கேவலமாக பதிவெழுதி, அதன் லிங்கை இவர் பதிவில் பின்னூட்டமாக இட்டால் அனுமதிப்பாரா? தங்களுக்குள் சொல்லி வைத்துக்கொண்டு தமிழ்மணம் மகுடத்தை ஹைஜாக் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.

January 26, 2012 4:45 PM
Delete
Blogger தருமி said...

//ஒஸ்தி யோட ஒரிஜனல் இங்கே எங்கே வந்தார் என்ற குழப்பமே தோன்றியது:).//

தலைப்பில் சரியான முழுப்பெயர் கொடுத்திருப்பதால் அப்படி தோன்றாது என்று நினைக்கிறேன். இருந்தாலும் 'உங்கள் சொல்லுக்காக' மாற்றி விட்டேன்.//

ஒரு வழியா பதிவை பார்த்திட்டீங்க:)
நன்றி.

நமக்கு பின்னூட்ட எண்ணிக்கையை விட உரையாடலே முக்கியமென்பதால் உங்களின் அடுத்த பின்னூட்ட மறுமொழிகளையும் இங்கேயே இணைத்து விடுகிறேன்.

நண்பர் ராபின் சொன்ன தமிழ்மணம் மகுடம் எனக்கும் கூட சமீப காலமாக உறுத்தும் விசயம்.நல்ல எழுத்துக்கு அங்கீகாரம் வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழ்மண நிர்வாகிகளில் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதால் என்ன பிரயோசனம் என்று விட்டு விட முடியாது.

மற்றவர்கள் எப்படியோ பத்திரிகை தலைப்பு செய்தி மாதிரி தலைப்புக்களை ஒரு முறை மேய்ந்து விட்டு பின் இடது புறம் சூடா என்ன கிடைக்குது என்று தேடுவதும்,மகுடத்தில் யார் உட்கார்ந்திருக்காங்கன்னு ஒரு பார்வை விட்டு விட்டு வலது புறம் பின்னூட்ட பதிவுகள் எவை இடம் பெற்றிருக்கின்றன என்று பின்பு தமிழ்மண நட்சத்திரக்கும் போய் விட்டு வருவதே என் வாசக வழக்கம்.

முந்தைய மகுடத்தின் மதிப்பு போய் குழுவாகவே ஓட்டுப்போட்டு மகுடத்தை சூட்டிக்கொள்கிறார்கள் என்பது வாங்கும் ஓட்டு, கள்ள ஓட்டு என இரண்டுமே பார்வையிடுகிறவர்களுக்கு புரிகிறது.

சிலரின் அற்ப சந்தோசத்திற்கான பகுதியல்ல மகுடம் என்பது எனது கருத்து.

ரஜனிக்கு 0 அலோகிரதத்தில் இணைய இணைப்பு இல்லாமலே ரஜனி தளம் ஓடுகிற தொழில் நுட்பம் மாதிரி தமிழ்மண் நிர்வாகிகள் புதுசா ஏதாவது கண்டு பிடிச்சாத்தான் உண்டு.பாவம் அவங்களும் என்ன செய்வாங்க?அவங்களும் போற போக்குல படகு ஓடட்டும்ன்னு விட்டுட்டாங்க போல இருக்குது.

ராஜ நடராஜன் said...

//Blogger தருமி said...

நல்ல கட்டுரை. எனக்கு சில புது செய்திகளைத் தெரிவித்தன. நன்றி//

புது செய்திகள் என்னவென்று சொன்னீங்கன்னா உங்க அனுபவத்தோடு இன்னும் கருத்துரையாடல் அளவலாவல் மற்றும் மல்லுக்கட்ட வசதிப்படும்:)

Robin said...

இஸ்லாத்தைப் பற்றி யார் விமர்சித்தாலும் "ஒத்தைக்கு ஒத்தை வாறியா, எங்க பி.ஜே.விடம் வந்து மோதிப்பார்" என்று உதார் விடுவார்கள். இந்த பி.ஜே.வும் அவர் கும்பலும் விவாதம் நடத்தும் லட்சணத்தைப் பாருங்கள்.

http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/

ஒரு 'அறிஞர்' இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார் என்றால் இவரைப் பின்பற்றுவர்களின் கதி?

தருமி said...

////என்ன லாபம், ராபின்!// மகுடத்தைப் பிடித்துவிட்டதும் "நாங்கள் ஜெயித்துவிட்டோம் பார்" என்ற அற்ப சந்தோசம் ஏற்படுகிறது.//

அது "அற்ப" சந்தோஷம் தான். எனக்கு முதலில் எரிச்சல் வந்தது. பின் எந்த வகைப் பதிவும் -சில அர்த்தம் கெட்ட பதிவுகளும் - அந்த நிலைக்கு வந்தபின் அவர்களைப் பார்த்துப் பரிதாபம் வந்தது. mass psychology இவ்வளவு மோசமாக நம் பதிவுகளில் இருக்கிறதே .. அந்த அளவிற்கு அவர்கள் ஒரு வ்கை 'பரிதவிப்பில்' இருக்கிறார்களே என்றும் தோன்றியது.

இது மிகப் பெரியதாகத் தோன்றாததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில பதிவுகளில் விவாதம் இல்லாத சில மதப் பதிவுகளில் வரிசையாக அவர்கள் 'ஆஹா', 'அற்புதம்' போன்ற பரணி பாடுவார்கள். அந்த வேடிக்கையைத் தொடர்ந்து பார்த்து வந்ததால் இதுவும் இன்னொரு வேடிக்கையாகி விட்டது.

என்னைத் திட்டி வந்த மயிலோடு ஒரு பதிவைப் போட்டதும் சுவனப்பிரியன் முதலில் கொடுத்த பதிலும், பின்னால் அவர் அந்தப் பதிவரிடம் பேசுகின்றேன் என்பதுவும், அந்தப் பதிவர் இப்போது அட்ரஸ் இல்லாமல் போனதும் அவர்கள் தங்களுக்குள் வைத்துள்ள 'ஒட்டுறவுகள்'ப் புரிய வைக்கிறது.
அவர்களிடையே உள்ள கட்டுமானம் தெரிகிறது. நல்ல வேளை இன்னும் அவர்கள் சிறு பான்மையர்தான். பெரும்பான்மையராக ஆனால் எப்படியிருப்பார்கள் என்பதை நினைக்கவும் பயமாக இருக்கிறது.

united they stand !!!!!!!!!!!

தருமி said...

மதப் பதிவுகளுக்கு வரும் பதிவர்கள் மிகக் குறைவு. சிலர் மட்டும் மதங்களை, மத நம்பிக்கைகளைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதிக பதிவர்கள் அவர்கள் பதிவுகளை வாசிப்பதுமில்லை; விவாதிப்பதுமில்லை. அவர்களுக்கு ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லா பதிவர்களும் அவர்கள் பக்கம் நிற்பது போன்ற ஒரு நம்பிக்கை.

நம் நாட்டு 'அறிவுஜீவிகள்' பலருக்கும் இஸ்லாமைக் கேள்வி கேட்பது ஒரு ஆகாத விஷயம்!

ராஜ நடராஜன் said...

ராபின்!என்னோடு எப்பவும் எசப்பாட்டு பாடும் பதிவர் வவ்வால் திறப்பு விழா கொடியேற்றியும் கூட நீங்க வந்தபின் தான் பதிவின் பின்னூட்டம் களை கட்டுற மாதிரி தெரிகிறது:)

சமீப கால ப்திவுலக கூத்துக்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம்.முன்பும் கூட மதம் சார்ந்த கருத்துக்கள் வந்து கொண்டுதான் இருந்தன.அதே போல் தருமி,கோவி.கண்ணன் போன்றவர்களின் கருத்துக்களும் மெச்சூரிட்டியாகத்தான் இருந்தது.அவரவர் போக்கில் கருத்துக்களை முன் வைத்த போது பிரச்சினைகள் ஒன்றுமில்லை.ஆனால் தமக்கென்று ஒரு கூட்டம் கூடியவுடன் பதிவுலகை ஹைஜாக் செய்யும் போக்கில் உருவான சூழலே எதிர்ப் பதிவுகள் என்று துவங்கி அவையும் கூட மென்மையாக இல்லாத போது ஒவ்வொருவர் மனம் புண்படும் சூழலை உருவாக்கி விட்டது.இவற்றிற்கு அடிப்படைக் காரணம் தங்களின் சொந்த நம்பிக்கைகளை பொதுவில் கொண்டு வந்து திணித்த காரணமல்லவா? உலகம் வானம்,பூமி,காற்று,மேகம்,கடல்,ஒலி,ஒளி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் இன்னும் பல அண்டங்கள்,மனித உயிர்கள்,நம்பிக்கைகள்,பிரச்சினைகள் என்ற பல கூறுகளைக் கொண்டது.நம்பிக்கை தவிர எதுவும் பேசமாட்டேன் என்பதோடு அதனை மற்றவர் மீது திணிக்கும் தன்மையல்லவா பிரச்சினைகளை உருவாக்குகிறது?பதிவர் சார்வாகன் கூட மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கிறார்.விரும்பியவர்கள் தேர்ந்தெடுக்கொள்ளலாம்.இல்லையென்றாலும் மாற்றுக் கருத்து விவாதங்களும் செய்யத்தான் செய்கிறார்கள்.இன்னும் சிலர் காலேஜ்ல புரபசர் லெக்சர் போடுறார் என்று எஸ்கேப் ஆகியும் விடுகிறார்கள்:)ஏதாவது வெறுப்பு உணர்வைக் கொண்டு வருகிறதா?

ந்ம்மால் மொத்த இந்திய மதவாதங்களை குறைத்து விட முடியாது.குறைந்த பட்சம் பதிவுலகிலாவது மதம் சார்ந்த ஒற்றைப்பார்வை வளராமல் இருப்பது நல்லது.

இக்பால் செல்வன் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினார்.அவரது ப்திவுகள் நின்று போனது பதிவுலகிற்கு இழப்பே.சிலர் போல் இலங்கையில் இருக்கும் முஸ்லீம்கள் மட்டுமே நண்பேண்டா என்ற பார்வையில்லாமல் வடக்கு,கிழக்கு,தென்பகுதிகளின் மக்கள் பிரச்சினைகளை வரைபடம் போட்டு விளக்கினால் எப்படி வரவேற்பார்கள்.

இந்த பதிவிலும்,பின்னூட்டங்களிலும் ஹுசைனும்,ருஷ்டியும் ஒன்று என்ற மனிதாபிமான சிந்தனைகளே முன் வைக்கப்படுகின்றன.

ராபின்!இந்தியா பலபரிமாணங்களைக் கொண்டதால் சல்மான் ருஷ்டி,ஹுசைன் தேச துறவறம் மாதிரி குறைகளும் இல்லாமல் இல்லை.ஆனால் மதம் சாராமல் அரச பதவியில் பல மொழி,மதம் சார்ந்த மனிதர்களையும் அறிமுகப்படுத்தி பரிட்சித்துப் பார்த்து விட்டது என்பதை இந்திய குடியரசு தினமான இன்று நினைவுபடுத்திக்கொள்வோம்.

இந்துத்வாவின் அகண்ட பாரதம் மாதிரி இஸ்லாமிய அரசாங்கம் என்பதும் பகல் கனவாகவே முடியும்.குறைந்த பட்சம் அதற்கான புத்திசாலித்தனம் கூட இல்லாத பட்சத்தில்:)

ராஜ நடராஜன் said...

// //Blogger தருமி said...

நல்ல கட்டுரை. எனக்கு சில புது செய்திகளைத் தெரிவித்தன. நன்றி//

புது செய்திகள் என்னவென்று சொன்னீங்கன்னா உங்க அனுபவத்தோடு இன்னும் கருத்துரையாடல் அளவலாவல் மற்றும் மல்லுக்கட்ட வசதிப்படும்:)

January 26, 2012 6:41 PM
Delete
Blogger Robin said...

இஸ்லாத்தைப் பற்றி யார் விமர்சித்தாலும் "ஒத்தைக்கு ஒத்தை வாறியா, எங்க பி.ஜே.விடம் வந்து மோதிப்பார்" என்று உதார் விடுவார்கள். இந்த பி.ஜே.வும் அவர் கும்பலும் விவாதம் நடத்தும் லட்சணத்தைப் பாருங்கள்.

http://onlinepj.com/bayan-video/vivathangal/debate-bible/

ஒரு 'அறிஞர்' இவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார் என்றால் இவரைப் பின்பற்றுவர்களின் கதி?//

ராபின்!பிஜே போன்றவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?ஒரு வேளை அவர் பின்னூட்ட நண்பராக இருந்தால் கூட மாற்றுக்கருத்துக்களை நட்பாக முன்வைக்க முயற்சி செய்யலாம்.

சிலருக்கு அரசியல் தலைவர்கள் மீது தன் குடும்பத்தை விட ஈடுபாடு அதிகமாக இருக்கும்.பாரதிராஜாவின் உண்மைத் தோழன் நினைவுக்கு வருகிறது.அதே போல் சிலருக்கு மதப்பிரச்சாரகர்கள் மீதும் அதீத தீவிரம் இருக்கும்.பதிவுலகம் சம்பந்தமில்லாமல் இருக்கும் மூன்றாம் நிலை மனிதர்கள் பற்றி பேசுவதை விட பதிவுகளில் தீவிர மதவாதங்களை முன்வைப்பவர்களை மட்டும் விமர்சனம் செய்வோம்.

பதிவர் தருமி முக்கியமான ஒன்றை முன்னிலைப்படுத்துகிறார்.அது பற்றி பார்ப்போம் இனி.

சிராஜ் said...

/* .சுதந்திர இந்தியாவின் இந்து,இஸ்லாமிய வேறுபாட்டின் துவக்கமாக 1993ல் தாவுத் இப்ராஹிம் உதவியுடன் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்த பம்பாய் குண்டுவெடிப்பே பிரச்சினைகளின் துவக்கமாக கூறலாம்.இதனைத் தொடர்ந்த சிமி என்ற இஸ்லாமிய மாணவர் அமைப்பும், பி..ஜே.பியின் இந்துத்வா தீவிரவாதம்,பாபர் மசூதி இடிப்பு என்ற இந்து தலிபானிசம்,நரேந்திர மோடியின் அரசியல் சூதாட்டங்களாக குஜராத் கலவரங்கள் என நிகழ்வுகள் தொடர் கதையாகின்றன. */

சகோ ராஜ நடராஜன்,

உண்மையில் இந்து முஸ்லிம் பிரிவினை பம்பாய் குண்டு வெடிப்பில் தான் தொடங்கியதா???? என்னே உங்கள் புரிந்துணர்வு???? RSS என்ற வார்த்தையே உங்கள் கட்டுரையில் காணவில்லையே??? அய்யா.. RSS என்ற அமைப்பு என்று(1924 ???) ஆரம்பிக்கப் பட்டதோ அன்றே தொடங்கி விட்டது இந்த பிரிவினை. ரொம்ப சாமர்த்தியமாக 1993 ல் இருந்து தொடங்குகிறீர்கள் நண்பரே.

/* இதற்கு எதிர்வினையாக இந்துத்வா செயல்பாடுகளும் கிரியா ஊக்கியாக செயல்பட இஸ்லாமிய தீவிரவாதத்தின் தன்மை மதத்தின் பொதுத்தன்மை அடிப்படையில் சாதாரண நம்பிக்கையாளனையும் பற்றிக்கொள்கிறது */

ரொம்ப அற்புதமா ஆராச்சி பண்ணி இருக்கீங்க நண்பரே. இஸ்லாமிய தீவிர வாதத்திற்கு எதிரான இந்து தீவிரவாதமா?? சபாஸ். RSS எப்ப ஆரம்பிக்கப் பட்டது? SIMI எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?????
ரொம்ப நடுநிலையான பதிவு நண்பரே.தொடரட்டும் உங்கள் பணி....

சிராஜ் said...

சகோ ராஜ நடராஜன் மன்னிக்கவும். இது பதிவிற்கு தொடர்பில்லாத கேள்வி என்பதால்.

/* Robin said...


மேலே ஒரு ஆள் எப்படி எம்பிக் குதிக்கிறார் பாருங்க :)

January 25, 2012 6:03 பம் */

சகோ ராபின்,

இஸ்லாத்திற்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் பின்னூட்டம் வாயிலாக பேசுகிறீர்கள். ஆனால் கிருத்துவத்தை யாரும் தாக்கினால் அவர்களுக்கு நீங்கள் பதில் ஏதும் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு வால் பையனின் பதிவில் உங்களை காண முடியவில்லை. அதற்க்கான காரணம் என்னவோ????

நான் என் மத்தத்தை தாக்கினால் கண்டுகொள்ள மாட்டேன் என்றால் பிற மதங்களையும் கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டியது தானே சகோ. கண்டுகொள்வதிலையா அல்லது விவாதிக்க பயமா???? தெரிந்து கொள்ள ஆசை அதனால் தான் கேட்டேன்.

ராஜ நடராஜன் said...

@பதிவர் தருமி!

பின்னூட்டத்தில் நண்பர் ராபின் அவர்களின் கருத்தை ஒட்டி உங்கள் பின்னூட்டத்திற்கு மறுமொழியாக தட்டச்சு செய்து கொண்டே வந்தேன்.அதிகப் பிரசங்கி என்று கூகிள் கோபித்துக்கொண்டு இணைக்க மறுத்து விட்டார்.மீண்டும் வார்த்தைகளை அதே வரிசையில் கோர்க்க முடியவில்லை.மன்னிக்கவும்.

சாரம் இதுதான்.பதிவுகளுக்கு அவர்களுக்குள்ளாகவே பின்னூட்டங்கள் இடுவது பின்புலத்தின் கட்டுமானத்தை விளம்பரப்படுத்துகிறது.இணையமும்,பதிவுலகமும் கலந்துரையாடல் மொழி சார்ந்த ஒன்று.அதனை நோக்கியல்லாது Ifever they have any hidden agenda they are not going to succeed it except making a division among us.

ஒசாமா தனது சொத்துக்களனைத்தும் மத தீவிரவாதத்திற்கென செலவழித்து பொருளாதாரம்,கட்டுமானம்,மனித வளம் என்ற மொத்த கட்டமைப்பே 9/11க்குப் பின் சிதறி விட்டது.

தனது மதம் என்று மட்டும் பார்வையில்லாமல் தான் சார்ந்த மக்களில் ஏழைகளுக்கு உதவி,கல்வி,அனைத்து தரப்பு மக்களையும் உள்வாங்கிக் கொண்டு அரசியல் அங்கீகாரம்,மித வாதம் என்ற நோக்கில் பயணிப்பதில் மட்டுமே எதிர்கால இந்தியா இவர்களையும் உள்வாங்கிக் கொள்ளும்.காலனித்துவ காலங்கள்,உலகப்போர்கள்,9/11 போன்றவை உலகின் முக்கிய காலகட்டங்கள்.இவற்றின் உள்ளீடுகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளாமல் வெறுமனே மதம் என்ற ஒற்றைக் கோட்டில் பயணம் செய்வது அனைவருக்கும் எதிர் விளைவுகளையே உருவாக்கும்.

நேற்று பதிவர் சார்வாகன் கொடுத்த Exodus படத்தின் சிறு பகுதிகளைக் கண்டேன்.பதிவர் சார்வாகன் என்ன பிட்டு பிட்டா படம் போடுறாரு:)எனக்கு ப்டம் பார்த்தால் படத்தோடு ஒன்றி விடவேண்டும்.முழுப்படம் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் மீதி பிட்டுகளையும் காணப்போகிறேன்.

Exodus அறிமுகத்துக்கு மீண்டுமொரு முறை நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ.சிராஜ்!வாங்க.

முதலில் கண்ணில் பட்டது ஆர்.எஸ்.எஸ் துவங்கிய காலம் என்பது.ஆர்.எஸ்.எஸ் காலகட்டத்தை இந்து,முஸ்லீம்களின் பிரச்சினைகளை பதிவில் இந்திய,பாகிஸ்தான் பிரிவினையென்று ஒற்றை வார்த்தைக்குள் கொண்டு வந்து விட்டேன்.நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்துக்குள் நுழைந்தால் காந்தி,முகமதி அலி ஜின்னா என்று இந்திய சுதந்திரத்திற்கு என்று பதிவு திசை திரும்பி விடும்.

சுதந்திர இந்தியாவிற்கு பின் இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்ட காலங்கள் நிக்சன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிஸ்ஸிங்கர் வகுத்த கொள்கைகளும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகள் எல்லாம் பேச வேண்டி வரும்.பாகிஸ்தானிய உலக மதமாநாடுகளையெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை.காஷ்மீர் பிரச்சினை காஷ்மீர் மக்களின் பிரச்சினை என்பதோடு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் சூதாட்டமும் உள்ளது என்பதெல்லாம் எனது பழைய பதிவுகளில் காணக்கிடைக்க கூடும்.இல்லாவிட்டால் இன்னுமொரு முறை கால சூழல்களில் விவாதித்து விடலாம்.

1993க்கு முந்தைய இந்தியாவை உலுக்கிய குண்டுவெடிப்புக்கள் எவை என்று நீங்கள் விளக்குங்கள்.

பின்னூட்டம் நீளம் கருதி அடுத்து...

ராஜ நடராஜன் said...

சகோ.சிராஜ்!நீங்க ஆர்.எஸ்.எஸ் லிருந்து துவங்குங்கள் என்பது என்னமோ நான் ஆர்.எஸ்.எஸ் சார்பாளன் என்கிற மாதிரி தெரிகிறதே:)

ஆர்.எஸ்.எஸ் என்ற கிழடு தட்டிய இயக்கத்தை நீங்கதான் பெருசா நினைக்கிறீங்க போல இருக்குதே.அவற்றின் காற்றும் கூட என் மீது படாமல் வளர்த்தது தமிழகம் என்பதில் பெருமையே எனக்கு:)

சகோ!எனக்கென்று குறிப்பிட்ட விவாதக் களங்கள் கிடையாது.அவ்வப்போது நிகழும் நிகழ்வுகளின் சாரத்தை ஒட்டி எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.மதங்கள்,அரசியல் நிலைப்பாடுகள் கடந்து நோக்குவதால் எதனையும் ஆரோக்கிய விமர்சனம் செய்யும் இயல்பு வந்து ஒட்டிக்கொள்கிறது.மற்றபடி தனிமனித வெறுப்புக்களை நான் முன்னிலைப்படுத்துவதில்லை.

நான் எங்கே இங்கே பணி செய்கிறேன்?சம்பளமா கொடுக்குறாங்க சகோ:)மதம் குறித்து விமர்சனம் செய்வதால் சிலரிடம் கோப பார்வையை வாங்கிக் கட்டிக்கொள்வது தவிர ஒன்றுமில்லை.அதே நேரத்தில் பதிவுகள் கலந்துரையாடல் என்பதால் ஹுசைன்,சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு ஏற்படும் அநீதிகளைக் கண்டு மௌனியாகவும் இருக்க முடியவில்லை.என்ன செய்வது.

ஆமா!நீங்க ஹுசைன் பக்கமா?ருஷ்டியின் பக்கமா?அல்லது என்னை மாதிரி இருவரையும் அரவணைக்கும் நிலையா?சொல்லி விட்டுப் போங்களேன்:)
Just kidding!உங்களுக்கான கருத்துரிமை அதிகாரம் உங்களுக்கே.

ராஜ நடராஜன் said...

//ராஜ் said...

சகோ ராஜ நடராஜன் மன்னிக்கவும். இது பதிவிற்கு தொடர்பில்லாத கேள்வி என்பதால்.

/* Robin said...


மேலே ஒரு ஆள் எப்படி எம்பிக் குதிக்கிறார் பாருங்க :)

January 25, 2012 6:03 பம் */

சகோ ராபின்,

இஸ்லாத்திற்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் பின்னூட்டம் வாயிலாக பேசுகிறீர்கள். ஆனால் கிருத்துவத்தை யாரும் தாக்கினால் அவர்களுக்கு நீங்கள் பதில் ஏதும் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு வால் பையனின் பதிவில் உங்களை காண முடியவில்லை. அதற்க்கான காரணம் என்னவோ????

நான் என் மத்தத்தை தாக்கினால் கண்டுகொள்ள மாட்டேன் என்றால் பிற மதங்களையும் கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டியது தானே சகோ. கண்டுகொள்வதிலையா அல்லது விவாதிக்க பயமா???? தெரிந்து கொள்ள ஆசை அதனால் தான் கேட்டேன்.//

Robin! The ball is on your court.

வவ்வால் said...

ராஜ்,

//சமீப கால ப்திவுலக கூத்துக்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம்.//

ருஷ்டிக்கும் அப்பாலும் போய்க்கொண்டிருப்பதை பார்த்தேன். இது கொஞ்சம் சிக்கலாகவும் ,நான் சில காலம் அஞ்ஞாத வாசத்தில் இருந்ததால் சரியாக புரியாததாலும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். ஓரளவு புரியுது, இன்னும் கொஞ்சம் உள்வாங்கிக்கொண்டு யார் எந்தப்பக்கம்னு கண்டுப்பிடித்து விட்டு எசப்பாட்டு கட்டலாம்னு இருக்கேன்.


அடிக்கிறதே கும்மி இதுல இவங்க எல்லாம் வரிஞ்சுக்கட்டிக்கிட்டு குழுவா சண்டையிடுவது செம காமெடி. அது மட்டும் இப்போதைக்கு புரியுது :-))


இப்போ கச்சைக்கட்டும் ஆட்களின் பதிவெல்லாம் ஒரு நோட்டம் விட்டுக்கிட்டு இருக்கேன் , கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு போல இருக்கு, காபி & பேஸ்ட், சினிமா, மொக்கை, கும்மி இதை தாண்டி உள்ள எதுவும் இல்லை.ஆனால் கூச்சமே இல்லாமல் பெரிதாக தமிழ்குடிதாங்கிகள் போல் கூவிக்கிட்டு இருக்காங்க. :-))

ஒன்றும் இல்லை என்றாலும் தலைப்பெல்லாம் அவளோட ராவுகள், போல ஆபாசமாகவே இருக்கு, ஒரு பதிவையும் படிங்கனு அடுத்தவங்களுக்கு நாம பரிந்துரை செய்யவே முடியாது :-))

இது போல எழுதக்கட்டன சேவை வேறுப்பயன்படுத்துகிறார்கள் :-))

வவ்வால் said...

ராஜ்,

விட்டுப்போச்சு, ஆபாச, மொக்கைக்கும்மிக்கு அடுத்து மதவாதிகளின் உருட்டுக்கட்டை கும்மி யார் எது சொன்னாலும் மதம் .... மதம் னு மதசாயம் பூசுக்கிட்டு அலையறவங்க எண்ணிக்கையும் அதிகமாகிடுச்சு :-))

இவங்க எல்லாரும் எனக்கு சமதூரத்தில் இருக்காங்க, தயவு தாட்சண்யம் பார்க்காம நாடுக்கடத்த சொன்னா சரினு சொல்லும் முதல் ஆள் நான் தான் :-))

சிராஜ் said...

/* ஆமா!நீங்க ஹுசைன் பக்கமா?ருஷ்டியின் பக்கமா?அல்லது என்னை மாதிரி இருவரையும் அரவணைக்கும் நிலையா?சொல்லி விட்டுப் போங்களேன்:)
*/

நான் ஹுசைன் மற்றும் சல்மான் ருஷ்டி இருவரையும் எதிர்க்கிறேன். நம்புவீர்களா????

என்னைப் பொறுத்தவரை முதலில் நிர்வாணப் படம் வரைவதே தவறு, உலகில் எவ்வளவோ இருக்கிறது வரைவதற்கு அதை விடுத்து இதெல்லாம் தேவை இல்லாத வேலை. அதிலும் பிற மத கடவுள்களின் படங்களை வரைவது நிச்சயம் தவறு. பிறமதங்களின் கொள்கையில் மாற்றுக்கருத்து இருந்தால் தாராளமாக விவாதிக்கலாம். மற்றபடி ஓவியம் தீட்டுவதெல்லாம் டூ மச். அவர் தாயையோ, மகளையோ நிர்வாணமாக வரைந்திருப்பாரா ஹுசைன்?????

முதலில் ஒரு உண்மை. நான் சாத்தானிக் வெர்சஸ் புத்தகத்தை படிக்கவில்லை. கேள்வி பட்டது தான். நான் கேள்விப்பட்ட வகையில் அவர் அதை உள்குத்து போல் தான் எழுதி உள்ளார். இஸ்லாத்தையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் தாக்கிதான் எழுதி உள்ளார். இதுவும் தேவை இல்லாத ஒன்றுதான். ஆரோக்கியமான விவாதத்திற்கும் வஞ்சகமான தாக்குதலுக்கும் நாம் வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

சிராஜ் said...

/* இப்போ கச்சைக்கட்டும் ஆட்களின் பதிவெல்லாம் ஒரு நோட்டம் விட்டுக்கிட்டு இருக்கேன் , கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு போல இருக்கு, காபி & பேஸ்ட், சினிமா, மொக்கை, கும்மி இதை தாண்டி உள்ள எதுவும் இல்லை.ஆனால் கூச்சமே இல்லாமல் பெரிதாக தமிழ்குடிதாங்கிகள் போல் கூவிக்கிட்டு இருக்காங்க. :-))
*/

சகோ வவ்வால்,

இது யாரை குறிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா??? ஏனெனில் இஸ்லாத்திற்காக பரிந்து பேசிவரும் எந்த இஸ்லாமிய பதிவரும் சினிமா பற்றியோ, ஆபாச தலைப்புகளோ வைப்பதில்லை. ஆகவே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிராஜ் said...

சகோ ராபின், வவ்வால், ராஜ நடராஜன்,

நாளை சந்திப்போம், இறைவன் நாடினால். ராபின் உங்கள் பதிலை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.

ராஜ நடராஜன் said...

வவ்!நான் Exodus யூடியுப் படத்துக்கு போகலாமென்றிருந்தேன்.நீங்க வந்துட்டீங்க!

பதிவுலக கூத்துக்களுக்கு காரணம் பின்னூட்டங்கள் கலந்துரையாடலுக்கான தளம் என்ற முந்தைய உங்களின் முதல் இன்னிங்ஸ் போய் புதிய பரபரப்பு,ஹிட் எண்ணிக்கை,அலெக்ஸா ரேட் என்ற புதிய சூழலால் பின்னூட்ட விவாதங்கள் பின் தள்ளிப்போய் விட்டன.பழைய உஸ்தாதுகள் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டால் ஒருவேளை மாற்றங்கள் வரலாம்.

ருஷ்டியையும் தாண்டி விவாதம் வேறு திசையில் மாறிப்போவதற்கு காரணம் நண்பர் ராபின் சுட்டிய பின்னூட்டம்.இந்த பின்னூட்டம் முந்தைய பதிவுகளில் தலை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

நீங்க புனை பெயரில் இருந்தாலும் ஒரே முகத்தோடுதான் வருகிறீர்கள்.ஆனால் சிலர் எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் மாதிரி வருகிறார்கள் என்பது ராபின் சொல்லியே புரிந்தது.வாய்ப்புக்கள் இருந்தும் அடுத்தவர் புரபைல்,ஐ.பி போன்றவற்றில் நாட்டம் கொள்வதில்லை.

அவளோட ராவுகள் மாதிரி தலைப்பா:)உள்குத்து யாருக்கு என்பது எனக்குப் புரிந்தாலும் சகோ.சிராஜ் என் காதுல மட்டும் கூவுங்கன்னு சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன்:)அவர் சொல்ற மாதிரி சினிமா,மொக்கை போன்றவைகளுக்கும் இஸ்லாமிய பதிவுகள் இடுபவர்களுக்கும் எந்த ஒட்டும் இல்லையென்பது மட்டும் உண்மை சொல்லிக்கிறேன்.

அதுக்குப் பதிலா....”மொக்கைக்கும்மிக்கு அடுத்து மதவாதிகளின் உருட்டுக்கட்டை கும்மி யார் எது சொன்னாலும் மதம் .... மதம் னு மதசாயம் பூசுக்கிட்டு அலையறவங்க எண்ணிக்கையும் அதிகமாகிடுச்சு :-))”

அடைப்பானும் வவ்வாலே:)

ராஜ நடராஜன் said...

//நான் ஹுசைன் மற்றும் சல்மான் ருஷ்டி இருவரையும் எதிர்க்கிறேன். நம்புவீர்களா???? //

சகோ.சிராஜ்!மதங்களையும் கடந்து சிந்திக்க வேண்டும் என நான் வலியுறுத்துவதன் காரண்ம்...நீங்கள் ருஷ்டியை இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகுகிறீர்கள்.அதே வேளையில் ஹுசைனை இந்திய தத்துவார்த்தங்களின் அடிப்படையில் ஆராய தவறி விடுகிறீர்கள்.

நிர்வாண சிலைகளுக்கு பிரான்ஸ் போன்ற மேலைநாட்டு கலாச்சாரங்களுக்குப் போகவேண்டாம்.
பதிவர் சார்வாகன் பின்னூட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்டு விட்டார்.இந்திய கோயில்களில் இல்லாத நிர்வாணமா?இந்திய கோயில்களின் சிலைகளின் நிர்வாணத்தை ஆபாசம் என்ற கோணத்தில் சிந்தித்தால் இந்து மதத்தின் உள்வாங்கும் திறனை இழந்து விட வேண்டி வரும் என்பதோடு நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட படி ஆப்கானிஸ்தான் பாமியான் சிலை இடிப்பு என்ற நிலைக்கு வந்து விடும் ஆபத்தும் இருக்கிறது. சிலை வடித்தவனின் கலைநயம் இந்தக்காலம் வரை தெரியாமலே கூட போயிருக்கும்.இந்தியாவின் முடியாட்சி காலத்தில் மன்னனின் அனுமதியில்லாமல் நிர்வாண சிலைகள் அதுவும் கோயில்களில் சாத்தியமா?கட்டிடக்கலை என்பதோடு சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,வாஸ்து என பலவற்றை உள்ளடக்கியவை அந்த சிலைகள்.ஹுசைனின் ஓவியங்கள் ஆயில் பெயிண்ட்களால் திரைச்சீலைகளில் வடிவமைக்கப் பட்டதால் காலவெள்ளத்தில் அழிந்து விடும் சாத்தியங்கள் கூட முன்பு இருந்தன.இணையம் ஒருவேளை ஹுசனை எதிர்காலத்துக்கும் கூட கொண்டு செல்லும்.
இப்ப ருஷ்டி பக்கம் திரும்பினால் பதிவில் குறிப்பிட்டது போல் கோமினி புயலைக்கிளப்பியிருக்கா விட்டால் புத்தகம் சார்ந்த எதிரான கருத்துக்கள் சில சலசலப்பை உருவாக்கி விட்டு அமிழ்ந்து போயிருக்க கூடும்.ஒருவேளை மத ஆராய்ச்சியாளர்களுக்கு சல்மான் ருஷ்டியின் புத்தகத்தின் உள் அர்த்த உவமைகள் புரிந்திருக்கலாம்.சாதாரணமாக தொழுகைக்கு செல்லும் மதநம்பிக்கையாளனுக்கு சல்மான் ருஷ்டியின் புத்தகம் தேவையற்ற ஒன்று என்பதோடு தொழுகைக்கு சம்பந்தமில்லாத ஒன்று.

ஒருவேளை ருஷ்டியின் தவறு என்றே வைத்துக்கொண்டாலும் 8 வருடங்களுக்கும் மேலான உயிர் மீதான பயமே பெரிய தண்டனை.அதனை பின்வந்த முகமது கடாமி மிதப்படுத்தியும் கூட இன்னும் ஒரு மனிதன் மீதான வன்மம் உங்களுக்கு தவறாகப் படவில்லையா?

ராஜப்க்சே போன்ற மனித உயிர்வதைக்காரர்களே அரச் பதவியென்ற போர்வையில் இந்தியாவுக்குள் வரவேறகபடும் போது இந்திய குடியுரிமை கொண்ட சல்மான் ருஷ்டியை வரக்கூடாது என்று தடை செய்வது இந்திய சட்டத்துக்கு விரோதமானது என்பதோடு மததீவிர வாதத்தின் தன்மையை வெளிப்படுத்த வில்லையா?

மன்னிப்போம் என்ற கோட்பாடுகளுக்கு எதிராக கொலை செய்வோம் என்ற தீவிர மதவாதம் தவறானது.

சல்மான் ருஷ்டியை வர விடாமல் தடுத்தது இந்திய இறையாண்மைக்கே இழுக்கு.

ராஜ நடராஜன் said...

// /* இப்போ கச்சைக்கட்டும் ஆட்களின் பதிவெல்லாம் ஒரு நோட்டம் விட்டுக்கிட்டு இருக்கேன் , கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு போல இருக்கு, காபி & பேஸ்ட், சினிமா, மொக்கை, கும்மி இதை தாண்டி உள்ள எதுவும் இல்லை.ஆனால் கூச்சமே இல்லாமல் பெரிதாக தமிழ்குடிதாங்கிகள் போல் கூவிக்கிட்டு இருக்காங்க. :-))
*/

சகோ வவ்வால்,

இது யாரை குறிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா??? ஏனெனில் இஸ்லாத்திற்காக பரிந்து பேசிவரும் எந்த இஸ்லாமிய பதிவரும் சினிமா பற்றியோ, ஆபாச தலைப்புகளோ வைப்பதில்லை. ஆகவே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

January 26, 2012 9:37 PM
Delete
Blogger சிராஜ் said...

சகோ ராபின், வவ்வால், ராஜ நடராஜன்,

நாளை சந்திப்போம், இறைவன் நாடினால். ராபின் உங்கள் பதிலை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.//

சகோ.சிராஜ்!நான் உங்களிடம் எதிர் மாறான க்ருத்துக்களை முன் வைத்தாலும் வெள்ளிக்கிழமை தொழுகை போன்ற த்னி மனித உணர்வுகளை மதிக்கவே செய்கிறேன்.நல்லிணக்கத்திற்கு வெள்ளிக்கிழமை தொழுகை உதவட்டும்.உங்கள் பின்னூட்டங்கள் மறுபடியும் திரும்பும் பட்சத்தில் கலந்துரையாடலை தொடர்கிறேன்.நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

//ராஜப்க்சே போன்ற மனித உயிர்வதைக்காரர்களே அரச் பதவியென்ற போர்வையில் இந்தியாவுக்குள் வரவேறகபடும் போது இந்திய குடியுரிமை கொண்ட சல்மான் ருஷ்டியை வரக்கூடாது என்று தடை செய்வது இந்திய சட்டத்துக்கு விரோதமானது என்பதோடு மததீவிர வாதத்தின் தன்மையை வெளிப்படுத்த வில்லையா?//


இந்த இடத்தில் தான் ஒரு அரசின் பங்களிப்பு என்ன என்பது வருகிறது, கொள்கை, செயல்ப்பாடு எல்லாம் கேள்விக்குள்ளாகிறது. இராஜபக்சே வரவை பாதுகாப்புடன் ஏற்ப்பாடு செய்ய முடியும் எனில் ஏன் ருஷ்டி வரவை பாதுகாப்புக்காரணங்கள் காட்டி தள்ளிவிட வேண்டும்.இறையாண்மையை மிரட்டி பணியவைக்க இடம் கொடுப்பது அரசும்,அரசியல்வாதிகளுமே.

ஏன் எனில் இங்கே மைனாரிட்டி ஒட்டு அரசியலுக்கு நிரம்ப முக்கியத்துவம் தரப்படுகிறது. அதுவும் மதம் சார்ந்து என்பதால் அரசு கவலைக்கொள்கிறது. மொழி இனம் சார்ந்து வெறுப்புக்குள்ளான ஒருவர் வந்தால் மக்கள் தங்கள் எதிர்ப்பை ஓட்டில் காட்ட மாட்டார்கள் என்று அரசும்,அரசியல்வாதிகளும் நினைக்கிறார்கள். எப்படியாவது கூட்டணி, மற்றும் வசிகர பேச்சால் சரிக்கட்ட முடியும் என நினைக்கிறார்கள்.

அதுவே சிறுபான்மையினத்தவர் எனில் ஜமாத்/ சர்ச் சொல்லுபவருக்கு ஓட்டு போடுவார்கள் எனவே அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம் என்ற குறுகிய ஓட்டு அரசியலே காரணம்,இந்த இடத்தில் இந்து மத தலைவர்களின் சொல்லுக்கு யாரும் ஓட்டுப்போடுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். அப்படி நடக்குமானால் ராமகோபாலன் சொல்பவரே தமிழக முதல்வர் ஆகி இருப்பார்.

மற்ற மதங்களில் மதத்தின் வீச்சு , வழிப்பாடு தாண்டி ஒருவரின் வாழ்கையிலும், அன்றாட செயல்பாடுகளிலும் கட்டுப்படுத்த செய்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் சிந்தனை முழுக்க மதம் சார்ந்தே இருக்கிறது.ஆனால் இதனை எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

நம்ம அரசின் மதச்சார்பின்மை என்பது மதத்துக்கு மதம் ஒரு வேறுபட்ட அளவுக்கோளுடன் இருக்கிறது. போலி மதச்சார்பின்மை எனலாம்.

--------------------

சிராஜ்,

நான் விட்டுப்போச்சுனு போட்டதைப்பார்க்கவில்லை போல.

மதம் பற்றிப்பேசுபவர்கள் அப்படி செய்யவில்லை, ஆனால் சினிமா , கிசு...கிசு என்று எழுதும் இஸ்லாமியப்பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு பெயரில் மதம் என்று முழங்கலாம் யார்க்கண்டது.

இப்போது முன்னணியில் இருப்பது குறித்தான போட்டியில் சண்டைப்போடுபவர்கள் பற்றி நான் சொன்னது. அடுத்தக்கேட்டகரியில் மதப்பிரச்சார பதிவர்கள். இரண்டுமே தேவையில்லாத குப்பைகள் என்பேன். ஏன் எனில் எதுவுமே சிலக்காலம் கழித்துப்பார்த்தால் சிரிப்பை மட்டுமே தரும்.

Robin said...

//சகோ ராபின்,

இஸ்லாத்திற்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் பின்னூட்டம் வாயிலாக பேசுகிறீர்கள். ஆனால் கிருத்துவத்தை யாரும் தாக்கினால் அவர்களுக்கு நீங்கள் பதில் ஏதும் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு வால் பையனின் பதிவில் உங்களை காண முடியவில்லை. அதற்க்கான காரணம் என்னவோ???? //

கிறிஸ்தவத்தை விமர்சித்து வரும் பதிவுகளில் விவாதித்து இருக்கிறேன். தருமி சார் பதிவுகள் உட்பட பல பதிவுகளில் என்னுடைய விவாதத்தை பார்க்க முடியும். நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்ளும் பதிவர்களின் பதிவுகளில் விவாதிக்க விரும்புவதில்லை, அதைப் போல இடும் பின்னூட்டத்தை ஒழித்து வைத்துக்கொள்ளும் சில இஸ்லாமியர்களின் பதிவுகளிலும் பின்னூட்டமிட விரும்புவதில்லை.

//நான் என் மத்தத்தை தாக்கினால் கண்டுகொள்ள மாட்டேன் என்றால் பிற மதங்களையும் கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டியது தானே சகோ. கண்டுகொள்வதிலையா அல்லது விவாதிக்க பயமா???? தெரிந்து கொள்ள ஆசை அதனால் தான் கேட்டேன்.// இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை முக்கியமாக பைபிளை அதிகமாக விமர்சிப்பதால் இஸ்லாத்தையும் விமர்சிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. என் மதத்தில் நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று மட்டும் சொன்னால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து பிற மதங்களை தாக்கி உங்கள் மதம் சிறந்தது என்று நிறுவ முயன்றால் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். விவாதிக்க பயப்படும் அளவுக்கு கிறிஸ்தவம் பலவீனமானது அல்ல.

Robin said...

//ராபின்!பிஜே போன்றவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?ஒரு வேளை அவர் பின்னூட்ட நண்பராக இருந்தால் கூட மாற்றுக்கருத்துக்களை நட்பாக முன்வைக்க முயற்சி செய்யலாம்.// பதிவுலகில் கலவரம் செய்யும் இஸ்லாமியர்கள் பி.ஜே வின் ஆட்கள்தான். இவர்களிடம் விவாதிக்கச் சென்றால் உடனே பி.ஜெ விடம் வந்து மோதிப்பார் என்பார்கள் :)

சிராஜ் said...

சகோ ராபின்,

/* அதைப் போல இடும் பின்னூட்டத்தை ஒழித்து வைத்துக்கொள்ளும் சில இஸ்லாமியர்களின் பதிவுகளிலும் பின்னூட்டமிட விரும்புவதில்லை. */

எனக்கு தெரிந்து பின்னூட்டவாதி முஹம்மது ஆசிக், எதிர்க்குரல் ஆசிக் அஹமது, வலையுலகம் ஹைதர் அலி, சுவனப்பிரியன், இறை அடிமை குலாம் போன்றவர்கள் தான் இஸ்லாம் பற்றி அதிகம் எழுதுகிறார்கள். இவர்கள் உங்கள் பின்னூட்டத்தை வெளியிடவில்லை என்றால் என்னால் நம்ப முடியவில்லை.

சிராஜ் said...

சகோ ராபின்,

/* இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தை முக்கியமாக பைபிளை அதிகமாக விமர்சிப்பதால் இஸ்லாத்தையும் விமர்சிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. என் மதத்தில் நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று மட்டும் சொன்னால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து பிற மதங்களை தாக்கி உங்கள் மதம் சிறந்தது என்று நிறுவ முயன்றால் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். விவாதிக்க பயப்படும் அளவுக்கு கிறிஸ்தவம் பலவீனமானது அல்ல.. */

காலம் காலமா, கிட்ட தட்ட 1400 வருடங்கள் கிறித்தவ உலகம் இஸ்லாத்திற்கு எதிராக இதே வேலையை தான் செய்கிறது ராபின். நாங்கள் பைபிள் இறை வேதம் அல்ல என்று நேரடியாக மோதுகிறோம். ஆனால் கிறித்தவர்கள் தங்களின் மீடியா பலத்தின் மூலம், இஸ்லாம் காட்டு மிராண்டிகளின் மதம் என்று தொடர் பிரச்சாரம் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறீர்கள். நாங்க இப்பதானே ஆரம்பிக்கிறோம்.
டிஸ்கி : பைபிலைத்தான் விமர்சிப்போம். ஆனால் ஈஷா நபி அவர்களை(கிறித்துவத்தின் படி இயேசு) யாரும் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.

வவ்வால் said...

சகோ.சிராஜ்,

என்னமோ இஸ்லாமிய ஆதரவாளர்கள் எல்லாம் திறந்த மனதுடன் எல்லாப்பின்னூட்டதையும் வெளியிடுவது போல சொல்கிறீர்கள். என்னுடைய பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்துள்ளார்கள். மேலும் மட்டுறுத்தல் வைத்துக்கொண்டு தாமதாமக வெளியிடுவார்கள், அதற்குள் வேறு சிலர் ஒரு ஆட்டம் ஆடி இருப்பார்கள். இப்படி பல நடந்து இருக்கு.

//நாங்கள் பைபிள் இறை வேதம் அல்ல என்று நேரடியாக மோதுகிறோம்.//

ஏன் குரான் இறை வேதம்னு சொல்லி பெருமைப்பாடிக்காம பைபிள் இறைவேதம் அல்லனு மோதனும்?

முதலில் குரானே இறை வேதம் அல்லனு சொன்னா கேட்கவாப்போறிங்க. இப்போ இருப்பது காலிப் ஒமர் கத்தாப் தொகுத்த குரான் என்பது விக்கி முதல் அனைத்திலும் இருப்பதை கவனிப்பதில்லையா? இப்போ விக்கி ல் தப்பா போட்டு இருக்கான் சொல்வீங்களே :-))

மேலும் முகமது நபி பயன்ப்படித்திய குரான் ஆயிஷா வசம் இருந்து கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட்டது என்றும் இருக்கு. அது ஏன் ?

Robin said...

//காலம் காலமா, கிட்ட தட்ட 1400 வருடங்கள் கிறித்தவ உலகம் இஸ்லாத்திற்கு எதிராக இதே வேலையை தான் செய்கிறது //
முகமது காலத்திலேயே கிறிஸ்தவர்கள் இவரை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்ளாததால் கொல்லப்பட்டார்கள். அன்று முகமது தொடங்கி வைத்த கொலைவெறியாட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. உதாரணம்: நைஜீரியா.

//ராபின். நாங்கள் பைபிள் இறை வேதம் அல்ல என்று நேரடியாக மோதுகிறோம். // அதற்குத்தான் நாங்கள் பதிலளிக்கிறோம். அப்புறம், எங்களை ஏன் தாக்குகிறீர்கள் என்று புலம்புவது ஏன்?

//ஆனால் கிறித்தவர்கள் தங்களின் மீடியா பலத்தின் மூலம், இஸ்லாம் காட்டு மிராண்டிகளின் மதம் என்று தொடர் பிரச்சாரம் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறீர்கள்.// வெற்றி பெற்றார்களா, உங்க ஆட்கள் வேற மாதிரி சொல்கிறார்களே. ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் மீடியா பலம் இல்லையா?

// நாங்க இப்பதானே ஆரம்பிக்கிறோம்.// இப்போது அல்ல முகமது காலத்திலேயே தொடங்கி விட்டது.

//டிஸ்கி : பைபிலைத்தான் விமர்சிப்போம். //
நாங்கள் குரானையும், அதைக் கொடுத்த முகமதுவையும் விமர்சிப்போம்.

//ஆனால் ஈஷா நபி அவர்களை(கிறித்துவத்தின் படி இயேசு) யாரும் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.// இயேசு நாதரை விமர்சித்த எத்தனை பதிவுகளில் உங்க ஆட்கள் போய் பதில் கொடுத்திருக்கிறார்கள். இயேசு நாதரை நபி என்று சொல்வதே அவரை சிறுமைப்படுத்தும் செயல்தான். இதை விடக் கொடுமை அஹிம்சையை போதித்த இயேசு நாதரை முகமதுவுடன் ஒப்பிட்டு ஏசுவுக்கு பிறகு வந்த தீர்க்கதரிசி(?)தான் எங்க ஆள் என்பது.

ராஜ நடராஜன் said...

//இந்த இடத்தில் தான் ஒரு அரசின் பங்களிப்பு என்ன என்பது வருகிறது, கொள்கை, செயல்ப்பாடு எல்லாம் கேள்விக்குள்ளாகிறது. இராஜபக்சே வரவை பாதுகாப்புடன் ஏற்ப்பாடு செய்ய முடியும் எனில் ஏன் ருஷ்டி வரவை பாதுகாப்புக்காரணங்கள் காட்டி தள்ளிவிட வேண்டும்.இறையாண்மையை மிரட்டி பணியவைக்க இடம் கொடுப்பது அரசும்,அரசியல்வாதிகளுமே.//

வவ்!உஙகளுடனான கலந்துரையாடலுக்கு அடைப்பான் தேவையில்லையென்ற போதிலும் மேற்சொன்ன உங்களின் வரிகளை மீண்டும் பதிய வைக்க வேண்டிய அவசியமாகிறது.சில திரைப்படப் பாடல்களை இரண்டு முறை,மூன்று முறை ஹம்மிங் செய்ய வைத்தால் ரசிகர்களின் மனதில் பதிய வைப்பது போல:)

பங்களிப்பு,கொள்கையெல்லாம் கேள்விக்குறியாக போவதுமட்டுமல்லாமல் மன்மோகன் சிங்கின் அரசு அமெரிக்க அரசியலில் ஜனாதிபதி 3வது வருசம் முடியறதுக்குள்ளேயே limping duck என்ற நொண்டி வாத்துன்னு பட்டம் கொடுத்துடுவாங்க.மன்மோகன் இரண்டாம் ஐந்தாண்டில் இன்னும் பொருளாதாரத்தை வளப்படுத்துவார்ன்னு நம்பிக்கையில் மறுபடியும் உட்கார வைச்சா இரண்டாம் ஆட்சியில் ஊழல் புகார்கள்,முதுகெலும்பில்லாத பிரதமர் என்ற அடைமொழியை நிரந்தரமாக வரலாற்றில் பதிய வைத்துக்கொண்டார்.ராஜபக்சே அரச அதிகாரத்திலிருந்த போர்க்குற்றவாளியாக இருந்தாலும் Diplomatic protocol என்ற பாதுகாப்பில் காமன்வெல்த் கேமில் வந்து உட்கார்ந்து கொள்கிறார் என்று வைத்துக்கொண்டாலும் கூட இந்தாளு டக்ளஸ் தேவானந்தா இந்திய நீதிமன்ற குற்றவாளியாக இருந்தும் இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் டக்ளசுடன் கைகுழுக்கும் போது இந்திய நீதித்துறையும் அல்லவா செத்துப்போகிறது.இப்படி போர்க்குற்றவாளி,நீதிக்குற்றவாளிகளுக்கெல்லாம் பாதுகாப்பு தரும் இந்திய அரசால் ஒரு எழுத்தாளனுக்கு பாதுகாப்பு தர இயலாத நிலையிலா இந்திய பாதுகாப்புத் துறை இருக்கிறது?
Shame on you congress governance:(

ராஜ நடராஜன் said...

//மதம் பற்றிப்பேசுபவர்கள் அப்படி செய்யவில்லை, ஆனால் சினிமா , கிசு...கிசு என்று எழுதும் இஸ்லாமியப்பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு பெயரில் மதம் என்று முழங்கலாம் யார்க்கண்டது.//

வவ்!நான் சமீபத்திய சினிமா விமர்சகன்!!!:) என்பதால் திரைப்படத்துக்கு வக்காலத்து வக்கீலாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.மதம் சார்ந்து சிந்திப்பவர்கள் ஏதாவது ஒன்றில் முற்போக்கு கருத்துக்கொண்டவர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வியை முன்வைக்க வேண்டியதாக உள்ளது.என்னைக்கூட மூளைச்சலவை(Brain wash)செய்ய முடியுமென ஒசாமா அடிச்சு ஆடிகிட்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருச்சி நண்பர் என்னிடம் சொன்னது ஏரோப்பிளேன் கண்டுபிடிச்சதும்,விஞ்ஞானமும் எங்கள் மதக்கோட்பாடுகளுக்கு எதிரானதென்றார்.இது எப்படியிருக்குது:)

மதவாதிகள் ஏன் ஜோதி தியேட்டரை இணையத்தில் பிரபல படுத்திய லக்கிலுக் மாதிரி (அண்ணே!ஜோதி தியேட்டர் எந்த திசையில் இருக்குதுன்னும் கூட எனக்கு தெரியாது.உங்களது பழைய ஆட்டங்களைப் பார்த்துத்தான் அப்படியொரு இடம் இருக்கிறதென்ற அறிவு தந்த அறிவுக்களஞ்சியமான இடம் உங்கள் பதிவுகள்தாண்ணே:))
படங்களை திரைப்படங்களாய் நினைக்கிறீர்கள்.முன்பு கொடுக்கப்படுவதையே நுகரும் கலாச்சாரம் போய் தனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி வாய்ப்புக்கள் வந்த காலகட்டத்தில் திரைப்படம் பார்ப்பதே மார்க்கத்துக்கு எதிரானது என்ற கொள்கையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.உலகளாவிய வறுமைக்கு காரணங்கள் என்ன நோபல் பரிசு பெற்ற அமிர்த்யா சென் கருத்தும் ஏனைய பொருளாதார விமர்சகர்கள் கருத்துடன் கூடிய நல்ல டாகுமெண்டரிகள் இலவசமாக கிடைக்கின்றன.டிஸ்கவரி,நேசனல் ஜியாகிராபி போன்றவை கருத்தோட்டமான படங்களை வெளியிடுகின்றன.தமிழ் சினிமாவின் கருப்பு பக்கங்கள் என சில இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்தையும் பதிவு செய்து வந்துள்ளது திரைப்பட ஆர்வலர்களுக்கு நன்கு புரியும்.ஆங்கிலப் படங்களின் பொருளாதார வசதி காரணமாக விஞ்ஞான உட்புகுத்தல்களை காட்சிக்குள் வைக்கிறார்கள்.இந்திப் படங்கள் இப்பொழுது உலகளாவிய முதலீட்டில் தயாரிக்கும் பொருளாதார வலுவைக் கொண்டது.ஈரான்,லத்தினீய,போர்ச்சுகீசிய,கொரிய படங்கள் இன்னும் பன்மொழிப்படங்கள் அவரவர் வாழ்வியல் சார்ந்து பேசுகின்றன.

மூளையை பூஜ்யமாக்கிக் கொண்டு திரைப்படம் மார்க்கத்திற்கு எதிரானது என்பவர்களை அண்டத்தின் எந்த கோளத்தில் குடியேற்றுவதென தெரியவில்லை:)

தருமி said...

சிராஜ் அவர்களின் திருவசனம்:

//ஈஷா நபி அவர்களை(கிறித்துவத்தின் படி இயேசு) யாரும் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். //

இந்த தீவிரவாதம் தேவையா என்பது தான் கேள்வி.

தருமி said...

//தமிழ்மணம் மகுடத்தை ஹைஜாக் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.//

இப்போது சுவன்ப்பிரியன் வந்துட்டாரே ...
நல்ல அறிவியல் பதிவு!!!!

ராஜ நடராஜன் said...

//விவாதிக்க பயப்படும் அளவுக்கு கிறிஸ்தவம் பலவீனமானது அல்ல.//

ராபின்!நான் கிறுஸ்த பள்ளியில்தான் படித்தேன்.படித்த காலத்திலிருந்து இந்தப் பின்னூட்டம் வரையிலான பொது அறிவிலும் கலிலியோ காலத்து கிறுஸ்தவமும் கூட இருந்து தவறுகளை விமர்சிக்கும் துணிவுடன் புராட்டஸ்டண்ட் பிரிவுகள் உருவாகியும் கூட நேர் சார்பு விமர்சனங்களை விட எதிர் விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டே நடை போடுகிறது.இந்தப் பதிவில் ருஷ்டிக்கு சம்பந்தமுள்ளதால் கிறுஸ்தவம் குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.கலிலியோ காலத்து கிறுஸ்தவம் மாதிரி இப்போதைய இஸ்லாமியத்தின் நிலை:)ஒரு நாள் மார்க்க கோட்பாடுகளும் மாறவே செய்யும்.அப்படி மாறாவிட்டால் தன்னைப் புதுப்பிக்காமல் பின் தங்கி விடும் சாத்தியமே அதிகம்.

இயேசு கிறுஸ்து வாழ்க்கை குறித்து புத்தகங்கள்,திரைப்படங்கள்,விமர்சன திரைப்படங்கள் கூட வந்து அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் வலிமை படைத்தது கிறுஸ்துவம்.இல்லையென்றால் Brave heart படம் தயாரித்த மெல் ஜிப்சனின் படமான The passion of the Christ போன்ற படத்துக்கெல்லாம் ருஷ்டிக்கு வழங்கிய மாதிரி பத்வா வழங்கப்பட்டிருக்கும்:)

கிறுஸ்தவ மிஷனரி,தெரசா என்று மனிதர் மீதான அன்பு என்ற நிலை போய் அமெரிக்காவின் பண உதவியில் அல்லேலுயா மிஷனரியில் தினகரன் கார்பரேட்டுகள் உருவாகிய காலகட்டத்தில் கிறுஸ்துவத்தின் மீதான விமர்சனத்தையும் முன்வைக்க வேண்டியிருக்கிறது.ஆனால் அதனையும் உள்வாங்கிக்கொள்ளும் வலிமை கிறுஸ்துவத்திற்கு உண்டு என்பதில் இஸ்லாமியத்திலிருந்து வேறுபடுகிறது.

ராஜ நடராஜன் said...

//பதிவுலகில் கலவரம் செய்யும் இஸ்லாமியர்கள் பி.ஜே வின் ஆட்கள்தான். இவர்களிடம் விவாதிக்கச் சென்றால் உடனே பி.ஜெ விடம் வந்து மோதிப்பார் என்பார்கள் :)//

ராபின்!இந்த தகவலை பதிவில் வைக்காமல் பின்னூட்டத்தில் கலந்துக்குறவங்க மட்டும் அறிந்து கொள்கின்ற மாதிரி இருக்கிறதே!முன்பு வின் தொலைக்காட்சியில் பி.ஜே குழுவினர் உச்சஸ்தாயி குரலைக் கேட்கும் போதெல்லாம் வடிவேலு படம் பார்க்கிற மாதிரியான உணர்வே வரும்:)இப்ப வின் தொலைக்காட்சி எனக்கு கிடைப்பதில்லை.

பி.ஜேயின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள்தானா பதிவுலகை ஆக்கிரமித்துள்ள பக்தர்கள்:)

உங்ககிட்ட கற்றுக்கொள்ள இன்னும் நிறைய செய்திகள் கிடைக்கும் போல தெரியுதே!

தருமி said...

இந்த தகவலை பதிவில் வைக்காமல் பின்னூட்டத்தில் கலந்துக்குறவங்க மட்டும் அறிந்து கொள்கின்ற மாதிரி இருக்கிறதே!//

பின் குறிப்பாக பதிவில் சேர்த்து விட வேண்டியதுதானே!

வின் தொல்லைக்காட்சி பார்த்ததில்லை.

விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்போவதாகச் சொன்ன - பர்தா வேண்டுமா; வேண்டாமா? என்று இஸ்லாமியப் பெண்களின் விவாதம் - இவர்களின் அரட்டலால் நின்றது இவர்களது தீவிரவாதத்திற்கு இன்னொரு சான்று. இது தீவிரவாதம் மட்டுமல்ல; அராஜகமும் கூட. பாவம் .. அந்தக் காட்சியில் எதிரணியில் பங்கு பெற்ற பெண்களை இவர்கள் என்ன செய்தார்களோ!

Robin said...

Blogger ராஜ நடராஜன்,

உங்கள் புரிதல் சரிதான். கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு இருண்டகாலத்திலிருந்து மீண்டு வந்து விட்டோம். மதமும் அரசியலும் இணைந்தால் பிரச்சினைதான் Separation of Church and State என்ற கொள்கையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தை வியாபாரமாக செய்த மறைந்த தினகரன், இவரைப் பின்பற்றி வியாபாரம் செய்யும் குட்டி வியாபாரிகளைப் பற்றியும் நான் தமிழ் கிறிஸ்தவ போரத்தில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் இப்படி ஒரு மறுமலர்ச்சி இஸ்லாத்தில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கு செல்லவே தீவிர இஸ்லாமியர்களால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இன்றைக்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பிற மதத்தவரும் சுதந்திரமாக வாழமுடியும் ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

இந்த வித்தியாசத்திற்குக் காரணம் கிறிஸ்தவத்தின் அடிப்படையிலிருந்து நேர் எதிரானது இஸ்லாம் என்பதுதான்.

Robin said...

மதப்புத்தகங்களை ஆன்மீகத்திற்கு மட்டும் பயன்படுத்துவதே நல்லது. அதை விடுத்து அதை ஒரு அறிவியல் புத்தகமாக நினைத்து "ஆகா குர்ஆனில் அறிவியல் இருக்கிறது வந்து பாருங்கள்" என்றால் அது காமெடியாகத்தான் முடியும்.

ராஜ நடராஜன் said...

Blogger தருமி said...

சிராஜ் அவர்களின் திருவசனம்:
//ஈஷா நபி அவர்களை(கிறித்துவத்தின் படி இயேசு) யாரும் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். //

இந்த தீவிரவாதம் தேவையா என்பது தான் கேள்வி.//

நண்பர்கள் ராபின்,சிராஜ் கருத்துரையாடலகளின் சாரம் எனக்கு கல்லூரி ராகிங் காலத்தையே நினைவு படுத்துகிறது.இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.அதே போல் பதிவர் வவ்வால் பின்னூட்டத்தில் குறிப்பிடுவது போல் இன்னும் சில வருடங்கள் கழித்து இந்தப் பதிவையெல்லாம் படிச்சா சிரிப்பையே வரவழைக்கும் என்பதால் உங்க பின்னூட்டத்துக்கு பதில்.

நான் பதிவில் ஒசாமைக் கொண்டுவந்ததின் காரணம் இதுதான்.மதக்கோட்பாட்டின் தன்மையில் இஸ்லாமிய,கிறுஸ்துவத்திற்கு ஆரம்ப கால சில ஒற்றுமைகள் தென்பட்டாலும் இப்பொழுது வாழும் சமூக சூழலில் மேற்கத்திய கலாச்சாரமும்,மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரமும் Clash of religious civilization என்ற கோட்டில் வந்து முட்டிக்கொள்கின்றன.மதங்களின் வசனங்களுக்குள் நுழைந்தால் போரடிக்கும்ங்கிறதால மத்திய கிழக்கு கலாச்சாரம் எல்லாவற்றையும் மூடு என்கிறது.மேற்கத்திய கலாச்சாரம் திறந்த நிலையே சுகம் என்கிறது.இந்த திறந்த நிலை தனது கலாச்சார கோட்பாடுகளுக்கு மாற்றானதென்பதோடு தனது கோட்பாட்டையும் எதிர்க்கிறதென்ற பயத்தால் வருவதே எதிர் தரப்பு மீதான கோபங்கள்.இது தவிர யூதர்களை இஸ்ரேலை விட்டே துரத்தி விட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிற்து.இப்போதைய பிரமிடுகள் வரலாற்றின் எச்சங்களாய் இன்னும் நின்று கொண்டிருக்கின்றன.

இப்ப தீவிரவாதம் பக்கம் பின்னூட்டத்தை திருப்பினால் பதிவில் குறிப்பிட்ட பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஒசாமா,கிஸ்ஸிங்கர்,அமெரிக்க,சவுதி அரேபிய பொருளாதார உதவி,மார்க்க சிந்தனைகள்,கோமினி,ருஷ்டி,இந்துத்வா என்ற பல பரிமாணங்கள் உலக நடப்பில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற போதிலும் தீவிரவாதத்தின் கூறுகள் பதிவுகள்,பின்னூட்டங்கள் வரை தொடர்கிறது எனபது மட்டுமே நமது கவலை.

ராஜ நடராஜன் said...

Blogger A.R.ராஜகோபாலன் said...
//எல்லா மதமும் அமைதியையும் அன்பையும் தவிர்த்து எதையும் போதிக்கவில்லை, பிறர் மதத்தை மதிக்காதவனால் தன் மதத்தையும் மதிக்க முடியாது என்பது என் கருத்து.//

முந்தைய பின்னூட்டத்தின் சாரத்தை ஒட்டி பதிவர் A.R.ராஜகோபாலன் அவரது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட வரிகளை இங்கே மீண்டும் நினைவு படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//தருமி said...

இந்த தகவலை பதிவில் வைக்காமல் பின்னூட்டத்தில் கலந்துக்குறவங்க மட்டும் அறிந்து கொள்கின்ற மாதிரி இருக்கிறதே!//

பின் குறிப்பாக பதிவில் சேர்த்து விட வேண்டியதுதானே!

வின் தொல்லைக்காட்சி பார்த்ததில்லை.//

தருமி ஐயா!ராபின் சொன்ன தகவலுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னுமொரு தனி ஆவர்த்தனம் செய்து விடலாம்:)கூகிளார் கோவிச்சுக்கவா போகிறார்?

கிடைப்பதை மட்டுமே பருகுகிறோம் என்பதற்கு நான் வின் டி.வி பார்ப்பதும்,நீங்க விஜய் டி.வி பார்ப்பதும் ஒரு நல்ல உதாரணம்.

//விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்போவதாகச் சொன்ன - பர்தா வேண்டுமா; வேண்டாமா? என்று இஸ்லாமியப் பெண்களின் விவாதம் - இவர்களின் அரட்டலால் நின்றது இவர்களது தீவிரவாதத்திற்கு இன்னொரு சான்று. இது தீவிரவாதம் மட்டுமல்ல; அராஜகமும் கூட. பாவம் .. அந்தக் காட்சியில் எதிரணியில் பங்கு பெற்ற பெண்களை இவர்கள் என்ன செய்தார்களோ!//

உலகம் முழுவதுமே ஆணாதிக்கத்தால் மட்டுமே இயங்குகிறதென்பது கண்கூடு.அதிலும் மார்க்க பந்துக்களின் ஆணாதிக்கம் சொல்லவே வேண்டாம்.பதிவுலகம் கூட பெண்களை வரவேற்று பின் துரத்தி விட்ட சம்பவங்கள் கூட உண்டு.பெண்கள் இயக்கங்கள் இன்னும் வலுப்படவும் அவர்கள் குறித்தான ஆண்களின் கலந்துரையாடலில் கலந்துரையாடுவது மெதுவான மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.குறைந்த பட்சம் உங்கள் பதிவில் குறிப்பிட்ட சல்மா போன்றவர்கள் போல் குரல் கொடுப்பதும் கூட ஏதாவது ஒரு கால கட்டத்தில் பெண்களுக்கான சரியான இடத்தை அடையாளம் காட்டும்.இதிலிருந்து விடுபட முடியாமல் பெண்களின் psychic,குடும்ப சூழல் கூட ஒரு காரணம் எனலாம்.அப்படியும் சிலர் விஜய் தொலைக்காட்சி முன் வரும் போது மத எதிர்ப்பாளர்களின் அடக்கு முறைக்கு எதிராக விமர்சனங்களையும்,பதிவு,பின்னூட்டங்கள் வைப்பதும் கூட அவசியமான ஒன்று.

ராஜ நடராஜன் said...

//Robin said...

Blogger ராஜ நடராஜன்,

உங்கள் புரிதல் சரிதான். கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு இருண்டகாலத்திலிருந்து மீண்டு வந்து விட்டோம். மதமும் அரசியலும் இணைந்தால் பிரச்சினைதான் Separation of Church and State என்ற கொள்கையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தை வியாபாரமாக செய்த மறைந்த தினகரன், இவரைப் பின்பற்றி வியாபாரம் செய்யும் குட்டி வியாபாரிகளைப் பற்றியும் நான் தமிழ் கிறிஸ்தவ போரத்தில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் இப்படி ஒரு மறுமலர்ச்சி இஸ்லாத்தில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கு செல்லவே தீவிர இஸ்லாமியர்களால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இன்றைக்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பிற மதத்தவரும் சுதந்திரமாக வாழமுடியும் ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

இந்த வித்தியாசத்திற்குக் காரணம் கிறிஸ்தவத்தின் அடிப்படையிலிருந்து நேர் எதிரானது இஸ்லாம் என்பதுதான்.//

சகோ ராபின்!நான் உங்கள் பெயரைக் கவனிக்காமல் சகோ.சிராஜ்தான் பின்னூட்டமிடுகிறாரோ என்று ஆச்சரியத்தில் முழுப்பின்னூட்டமும் படித்து திரும்ப பெயர் காணும் போது அதற்கான் புரிதல் உங்களிடமிருந்தே என்பது பின்பு தெரிய வந்தது.

சவுதி அரேபியாவில் இஸ்லாமியம் எப்படியோ,ஆனால் ஏனைய வளைகுடா நாடுகள் தங்கள் மதக்கலாச்சாரத்தையும் விடாமல் அதே நேரத்தில் எண்ணைப்பொருளாதாரம் தரும் வசதியில் தங்கள் நாட்டை கட்டியெழுப்பவே செய்கிறார்கள்.இந்தக் கட்டுமானம் இந்தியாவில் ஆமை வேகம் எனப்தோடு இந்தியாவில் செய்ய தயங்கும் கூலி வேலைகளுக்கான ஊதியம் இந்திய ஒப்பிடுதலில் அதிகம் என்பதாலேயே வளைகுடா நாடுகளில் ஆசிய மக்களின் இமிக்ரேசன் இன்னும் தொடர்கிறது.மதமாற்றம் மூளைச் சலவைகளையெல்லாம் எந்த நாடும் தீவிரப்படுத்துவதில்லை.சில மத இயக்கங்கள் செயல்பட்டாலும் யாரையும் வற்புறுத்தியெல்லாம் மதமாற்றம் செய்வதில்லை.அனைத்து நாட்டு மக்களையும் உள்வாங்கிக்கொண்டும் அவரவர் கலாச்சாரத் தன்மைக்கு அமைவாகவே நாட்டின் சட்டத்தை மதிக்கும் நோக்கில் நகர்கின்றன.மற்றபடி சம உரிமைக் கோட்பாடுகளுக்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லையென்பதோடு வீடுகளில் பணி புரியும் டிரைவர்,பணிப்பெண்கள் பலர் திருப்தியில்லாமல் கட்டாயத்தின் பேரில் பணிபுரிகிறார்கள் என்ற மறுபக்கங்களும் உண்டு.முந்தைய கால கட்டத்தில் தூதரகங்களுக்கு அபயம் தேடி ஓடும் ஆசியப் பணிப்பெண்கள் அதிகமே.

அரேபியர்களில் சிலரே குடியுரிமை இல்லாமல் பிதுன்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் குடியுரிமை போன்றவை ஆசிய நாட்டிலிருந்து வந்து பணிபுரிபவர்களுக்கு பகல் கனவே.அந்த விதத்தில் மேற்கத்திய நாடுகள் ப்ல கலாச்சாரங்களை உள்வாங்கிக்கொண்டு சம உரிமை தருகிறார்கள் என்பது உண்மையே.

இஸ்லாத்தின் மறுமலர்ச்சி அவசியமான ஒன்று.ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக நிற்பது அமெரிக்காவின் கொள்கைகளும் கூட.

ராஜ நடராஜன் said...

// Blogger ராஜ நடராஜன்,

உங்கள் புரிதல் சரிதான். கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு இருண்டகாலத்திலிருந்து மீண்டு வந்து விட்டோம். மதமும் அரசியலும் இணைந்தால் பிரச்சினைதான் Separation of Church and State என்ற கொள்கையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவத்தை வியாபாரமாக செய்த மறைந்த தினகரன், இவரைப் பின்பற்றி வியாபாரம் செய்யும் குட்டி வியாபாரிகளைப் பற்றியும் நான் தமிழ் கிறிஸ்தவ போரத்தில் எழுதியிருக்கிறேன்.

ஆனால் இப்படி ஒரு மறுமலர்ச்சி இஸ்லாத்தில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கு செல்லவே தீவிர இஸ்லாமியர்களால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இன்றைக்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பிற மதத்தவரும் சுதந்திரமாக வாழமுடியும் ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

இந்த வித்தியாசத்திற்குக் காரணம் கிறிஸ்தவத்தின் அடிப்படையிலிருந்து நேர் எதிரானது இஸ்லாம் என்பதுதான்.

January 27, 2012 2:01 PM
Delete
Blogger Robin said...

மதப்புத்தகங்களை ஆன்மீகத்திற்கு மட்டும் பயன்படுத்துவதே நல்லது. அதை விடுத்து அதை ஒரு அறிவியல் புத்தகமாக நினைத்து "ஆகா குர்ஆனில் அறிவியல் இருக்கிறது வந்து பாருங்கள்" என்றால் அது காமெடியாகத்தான் முடியும்.//

அவங்க சொல்றது காமெடியோ இல்லையோ நீங்க சொல்றது காமெடியாத்தான் இருக்குது:)

ராஜ நடராஜன் said...

// சிராஜ் அவர்களின் திருவசனம்:

//ஈஷா நபி அவர்களை(கிறித்துவத்தின் படி இயேசு) யாரும் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். //

இந்த தீவிரவாதம் தேவையா என்பது தான் கேள்வி.

January 27, 2012 1:35 PM
Delete
Blogger தருமி said...

//தமிழ்மணம் மகுடத்தை ஹைஜாக் செய்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.//

இப்போது சுவன்ப்பிரியன் வந்துட்டாரே ...
நல்ல அறிவியல் பதிவு!!!!//

நான் இப்பத்தான் தமிழ்மணம் பக்கம் சென்றேன்.அம்மி மெல்ல நகர்வது கூட உங்களுக்குப் பிடிக்காது போல தெரிகிறதே:)

ராஜ நடராஜன் said...

//சி.பி.பொதுவா சோ நினைப்பதும்,சொல்வதும் நிகழ்ந்ததா சரித்திரமே கிடையாது.இப்பொழுது நொண்டிக்குதிரை காங்கிரஸ் திரும்ப வரும் சாத்தியம் இல்லாததால் பி.ஜே.பி ஏதாவது ஒருவரை முன்னிறுத்தியே ஆகவேண்டும்.

இதில் அத்வானிக்கு பாபர் மசூதி பிரச்சினை,மோடிக்கு குஜராத கலவரங்கள்,ஜெயலலிதாவுக்கு ஊழல் ராணி என்ற கறுப்பு பக்கங்கள் இருக்கின்றன.

சோவின் வார்த்தையின் படி இந்திய ஜனநாயகத்தில் திருடனுக்கு ஓட்டு போடுவதா?ஜேப்படிக்காரனுக்கு ஓட்டுப் போடுவதா என்றே ஓட்டுப்போட வேண்டிய சூழல்.

பிரதமர் கனவின் மூவரில் யார் திருடன்?யார் ஜேப்படிக்காரன் என்பதையும் சோ தெரிவித்து விடலாமே:)

சும்ம ரெண்டு வரிலதான் இந்தப் பின்னூட்டம் சொல்லலாமென்று பார்த்தேன்.ஹுசைன்,ருஷ்டி பதிவுக்கு இதனை ஒட்ட வைக்க வேண்டிய அவசியம் இருப்பதால் உங்களிடமிருந்து களவாணிப் பட்டம் வாங்கிக்கொள்கிறேன்:)//

மேலே சொன்ன பின்னூட்டம் அட்ரா சக்கை பதிவர் சி.பி.செந்தில் குமாருக்கு போட்டது.சகோ.சிராஜ்க்கு நாம ஆர்.எஸ்.எஸ் காரனோ என்ற சந்தேகம் வருவதால் அப்படியெல்லாம் இல்லைன்னு சோ போன்ற ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளை இங்கே கட்டி இழுத்து வந்து விட்டேன்.

இனி சகோ.சிராஜ் பாடு!சோவோட பாடு:)

வவ்வால் said...

ராஜ்,

ஆங்காங்கே வெட்டி ஒட்ட முடியாததால் மொத்தமாக ஒரு பின்னூட்டம்.

நீங்கா இப்படிக்கா ஒரு முறை போறிங்க,அப்படிக்காவும் போறிங்க.ஆக சிறந்த நடுநிலைவாதி நீங்களே!

வளைகுடா நாடுகளில் மதமாற்றம் செய்ய தூண்டல் இருக்கோ என்னமோ தெரியாது.ஆனால் வளைகுடா நாடுகள் ,ஆப்ரிக்க,ஆசிய நாடுகளில் மதப்பிரச்சாரம் செய்ய, மதமாற்றம் செய்ய பொருள் உதவி செய்கின்றன.

உதாரனமாக வின் டிவி ஐ சொல்லலாம் முன்னர் அது தேவ நாதன் என்பவர் கைவசம் இருந்தது.பின்னர் ஹொட்டல் அதிபர் அபு பேக்கர் கை மாற்றியது எப்படி எனில் வளைகுடா வாழ் இஸ்லாமியர்களிடம் இதற்காக நிதி திரட்டப்பட்டது. ஒரு பங்கு சுமார் 5000 என நினைக்கிறேன்.மேலும் அரபிய இஸ்லாமிய பவுண்டேஷன்கள் மூலமும் நிதி வந்தது.தொடர்ந்து வருகிறது.

மேலும் அரபி படிக்க, மதம் மாற்ற செய்ய என ஆட்களூக்கு நிதி உதவி செய்கிறது.கிருத்துவ மிஷனரிகள் செய்யவில்லையா எனலாம்.ஆனால் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை அல்லவா இவர்கள் முன்னெடுத்து செல்கிறார்கள்.

கிருத்துவ மிஷனரிகள் நிறைய கல்வி கூடங்கள், மருத்துவ மனைகள், என நடத்துகிறார்கள், இலவசமாகவோ, கட்டணமோ.ஆனால் அங்கே அனைவருக்கும் இடம் உண்டு.கூடவே மத பிரசங்கம். அது போல எத்தனை இஸ்லாமிய அமைப்புகள் செய்கின் றன.

இந்து மிஷன் மருத்துவமனையில் அனைவருக்கும் மருத்துவம் குறைந்த கட்டணத்தில் உண்டு. ராமகிருஷ்ணா மிஷன் மூலம் கல்வி நிலையங்கள் அனைவருக்குமே என நடத்தப்படுகிறது.

இது போல இஸ்லாமிய மதஸ்தாபனத்தால் அனைவருக்குமே என பொதுவாக ஏதேனும் சேவை செய்யப்படுகிறதா?

சென்னையில் நியூ காலெஜ், SIET மகளீர் கல்லூரிசொல்லலாம்.அதுவும் கூட தனிப்பட்ட நபர்களால் அறக்கட்டளை மூலம் செயல்ப்படுத்தப்படுவது.அப்படிப்பார்த்தால் பச்சையப்ப முதலியார் அறக்கட்டளை, செங்கல்வராயன் அறக்கட்டளை என நிறைய இருக்கு.

வக்கப் வாரியம் மூலம் செயல்ப்படுவதை எல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது ஏன் எனில் இந்து சமய அறநிலையம் மூலமும் கல்வி நிலையங்கள் செயல்ப்படுகின்றன. இரண்டுக்கும் அரசு உதவி உண்டு.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் எவ்வித சேவையும் செய்யாமல்,சமுதாயத்திற்கு ஒரு துரும்பும் நகர்த்தாமல் , இம்மார்க்கம் உயர்வானத் இதில் சேர்ந்தால் உனக்குப்பெருமை என்று மட்டும் சொல்லி பரப்பும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது என்பதைசுட்டிக்காட்டவே.

வவ்வால் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

வவ்!Exodus படம் பற்றி பதிவர் சார்வாகன் பதிவர் தருமியின் பின்னூட்டத்தில் தொடுப்பு கொடுத்திருந்தார்.படம் பிட்டு பிட்டா இருக்கிறதால இங்கே பின்னூட்ட பகுதி வந்து பின் பதிவர் தருமியின் பின்னூட்டத்துக்குப் போய் அடுத்து அவரின் பதிவின் பின்னூட்டத்துக்குப் போய் வெட்டி ஒட்டி படம் பார்க்க வேண்டியதால் திரும்ப திரும்ப இங்கே பின்னூட்டப் பகுதி வருகிற வேலைல மறுபடியும் உங்களோடு பின்னூட்டம் பார்த்தேன்.

நான் எந்த கட்டமைப்பு சார்ந்தும் நிற்காமல் பேசுவதால் சில சமயம் இங்கிட்டும் மறுநேரம் அங்கிட்டும் போகிறேன் என நினைக்கிறேன்.சில சமயம் அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கைகளை விமர்சிக்கத் தோன்றும்.சில சமயம் அறிவுஜீவித்தனம் அத்தனையையும் உள்வாங்குவதும்,புது முயற்சிகள் கண்டு பிரமிக்கத் தோன்றும்.இந்தியாவின் அரசியல் தகுடுதத்தங்களைக் கண்டு கோபம் வரும்.அதே சமயத்தில் எத்தனை விதமான மொழிகளோடு,மத வேறுபாடுகளோடு,பிரச்சினைக்குள்ளும் முன்னேற முண்டியடித்துக்கொண்டிருக்கிறதே என்ற தேசபக்தியும் அவ்வப்போது வந்து சேர்ந்து கொள்ளும்.வளைகுடா நாடுகள் உள்ளுக்குள் மதம் சார்ந்து நிற்பதற்கும்,நம்ம ஆளுக மதம் கொண்டு சுற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் என்பதால் இங்கே இப்பொழுது நான் இங்கும் அங்கும் போவதாக தெரிகிறது என்பது உண்மையே.

வெளி நாடுகளுக்கு பண உதவி,மதம் பரப்பல் என்ற சில வளைகுடா கொள்கைகள் இருக்கலாம்.அதற்கென வங்கிகள் கூட இருக்கின்றன.ஒருவேளை இந்த மாதிரி அமைப்புக்களில் பணம் பெற்றுக்கொண்டும் கூட தமிழகம் மற்றும் இந்தியா சார்ந்து மத பரப்புரைகள் நிகழக்கூடும்.9/11க்குப் பின்பும் நிகழ்கிறதா என உறுதியாகத் தெரியவில்லை.

என்னது!வின் தொலைக்காட்சி தேவநாதனிடமிருந்து அபுபக்கர் என்பவரிடம் போய் விட்டதா?இது புதிய தகவலாச்சே!தேவநாதன் வசம் இருந்த போது அவர்கள் அனைத்து மதத்திற்கும் நேரம் ஒதுக்கியே செயல்பட்டார்கள்.நீதியின் குரல் போன்ற நிகழ்ச்சியெல்லாம் சன்,கலைஞர் தொலைக்காட்சியில் நிகழாத ஒன்று.அரசியல் பதிவுகள் இடும் மணிபிளாக் தளம் வின் தொலைக்காட்சியில் அரசியல் அரட்டைகள் கூடிய செய்திகள் வாசித்துக்கொண்டிருந்தார்.அவரது களம் பேச்சுத்தான் போல இருக்குது.பிளாக்ல தமிழ் தட்டச்சுப் பிழைக்கு மார்க் வைத்தால் முதல் மார்க் அவருக்குத்தான் கிட்டும்:)பின்னூட்டத்திலும் சொல்லியும் பார்த்தாச்சு.மொபலில் தட்டுகிறாரோ தெரியவில்லை.கேட்கிற மாதிரி தெரியல.

நீங்கள் சொன்ன கல்வி சார் நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டுகள் அளவிட முடியாதவை.மத சார்புகளற்று விதிவிலக்காக நன்கொடை என்ற நிலையில் மட்டுமே இயங்கிய நிறுவனங்களும் கூட இருக்கத்தானே செய்கின்றன.இவற்றால் பொருளாதாரம் தவிர்த்த அபாயங்கள் இல்லையென்றே சொல்லலாம்.தினகரன் கார்பரேட் பற்றி நண்பர் ராபினிடம் மேலே பின்னூட்டத்தில் பேசியாகி விட்டது.

ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் நம் மக்கள் விட்டில் பூச்சிகளாய் சிக்கிக்கொள்வது இப்பொழுதும்,எதிர்கால இந்தியாவுக்கும் கவலை தரக்கூடிய ஒன்றே.இந்திய ஜனநாயகத்திற்கு ஓட்டு அரசியல் முக்கியம் என்பதால் இவை ஊக்குவிக்கப்படுவதும்,கண்டு கொள்ளாத நிலைப்பாடுமே உள்ளன.
மார்க்கம் பொது சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை.பிரிவினை உணர்வுகளைக் கொண்டு வராமல் இருந்தாலே அதுவே பெரிய பொது சேவை:)

நாம் மட்டுமே ஒரு கட்டுக்குள் இல்லாத இப்ப என்னமோ புதுசா வார்த்தையெல்லாம் சொல்றாங்களே நான் லீனியர் என மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுக்கொண்டுள்ளோம்:)

Robin said...

சிராஜ் நான் பதில் சொல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. வேற பதிவுகளில்கூட போய் என்னை தேடியிருக்காரு. சரி, மனுஷன் இவ்வளவு ஆசைபடுராரேன்னு மெனக்கெட்டு உக்காந்து பதில் சொன்னா ஆளு சொல்லாம கொள்ளாம போயிற்றாரே.

தருமி said...

//மார்க்கம் பொது சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை.பிரிவினை உணர்வுகளைக் கொண்டு வராமல் இருந்தாலே அதுவே பெரிய பொது சேவை:)//

நடப்பதோ அதுதான் ... :(
சகோ & non-சகோ உணர்வுகள் ...

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

//Robin said...

சிராஜ் நான் பதில் சொல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. வேற பதிவுகளில்கூட போய் என்னை தேடியிருக்காரு. சரி, மனுஷன் இவ்வளவு ஆசைபடுராரேன்னு மெனக்கெட்டு உக்காந்து பதில் சொன்னா ஆளு சொல்லாம கொள்ளாம போயிற்றாரே.//

ராபின்!வடை சூடு ஆறிடுச்சுன்னு நினைக்கிறேன்:)

(பதிவர் வவ்வாலுக்கான மறுமொழியும் கூடவே சேர்ந்து வந்து ஒட்டிக்கொண்டு விட்டதால் முந்தைய பின்னூட்டத்தை நான் நீக்கிவிட்டேன்)

ரொம்ப பொறுப்பாகத்தான் நடந்து கொள்கிறோமோ:)

ராஜ நடராஜன் said...

//Blogger தருமி said...

//மார்க்கம் பொது சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை.பிரிவினை உணர்வுகளைக் கொண்டு வராமல் இருந்தாலே அதுவே பெரிய பொது சேவை:)//

நடப்பதோ அதுதான் ... :(
சகோ & non-சகோ உணர்வுகள் ...//

பரவாயில்லையே!எனக்கும் கூட பஞ்ச் டயலாக் வரும்போல தெரியுதே!வெட்டி ஒட்டிட்டீங்க:)

முன்பு யாராவது ஒரு பதிவர் பதிவுலகை விட்டுப் போகிறேன்னு அறிக்கை விட்டால் போகாதே!போகாதே என் பதிவா ன்னு அத்தனை பேரும் பின்னூட்டத்துல ஒப்பாரி வச்சி அழுதிடுவாங்க.

இப்ப மூட்டைப்பூச்சிகள் அதிகமா கடிக்குதுன்னு கோவி.கண்ணன் அழுதுகிட்டே அறிக்கை விட்டா அப்பாடி!ஒரு பெரிய விக்கெட் விழுந்துடுச்சுடான்னு இதுவே கடைசி பதிவா இருக்கட்டும்ன்னு பின்னூட்ட வாழ்த்து சொல்றாங்க:)

ச்கோ உணர்வுகள் இப்ப புரிஞ்சிருக்குமே:)

Robin said...

//வடை சூடு ஆறிடுச்சுன்னு நினைக்கிறேன்:)// அவரு இன்னொரு பெயரில் வடை சுட்டுக்கிட்டு இருக்கிறாரு.

வவ்வால் said...

ராஜ்.

நான் லீனியர் விட இப்போலாம் ஆட்டோ பிக்‌ஷன் தான் சூடு. இது ஆட்டோ கமெண்ட் தமிழில் தானியங்கி பின்னூட்டம் :-)) ஆங்காங்கே கூகிள் மேப், டாஸ்மாக் பில்லுனு தூவிட்டா போதும் :-))

//அதற்கென வங்கிகள் கூட இருக்கின்றன.ஒருவேளை இந்த மாதிரி அமைப்புக்களில் பணம் பெற்றுக்கொண்டும் கூட தமிழகம் மற்றும் இந்தியா சார்ந்து மத பரப்புரைகள் நிகழக்கூடும்.9/11க்குப் பின்பும் நிகழ்கிறதா என உறுதியாகத் தெரியவில்லை.//

இப்பவும் நடக்குது. மண்ணடிப்பக்கம் போனால் பார்க்கலாம் ரூம் எடுத்து தங்கி உருது, குரான் படித்து, மார்க்கம்
படிக்கிறார்கள். அப்படி வருவது பெரும்பாலும் தென்மாவட்ட இளைஞர்களே.அதுவும் இது போல நடப்பது என்னமோ ரகசியம் போல இருக்கும்,, அந்த இளைஞர்கள் வெளியில் யாருடனும் பழக மாட்டார்கள். பள்ளிவாசல் போவதும் அறைக்கு வருவதும் மட்டுமே வேலை.

இது போன்ற ஆள்பிடித்து மதப்பிரச்சாரகர்கள் ஆக்கும் வேலை கிருத்துவத்திலும் உண்டு. லயோலாவில் ஊருக்கு ஒருவர் என சர்ச் மூலம் தெரிவு செய்யப்பட்டு அனுப்புபவர்களை இலவசமாக படிக்க வைப்பார்கள் , பின்னர் இறையியல் படிக்க வைத்து ஃபாதர் ஆக்கிவிடுகிறார்கள்.பெரும்பாலும் ஏழ்மையான பின்புலம் கொண்டவர்கள் இப்படி படிக்க முன்வருவார்கள்.

//ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் நம் மக்கள் விட்டில் பூச்சிகளாய் சிக்கிக்கொள்வது இப்பொழுதும்,எதிர்கால இந்தியாவுக்கும் கவலை தரக்கூடிய ஒன்றே.இந்திய ஜனநாயகத்திற்கு ஓட்டு அரசியல் முக்கியம் என்பதால் இவை ஊக்குவிக்கப்படுவதும்,கண்டு கொள்ளாத நிலைப்பாடுமே உள்ளன.//

இதற்கு அடிப்படை இந்திய சமூகத்தில் நிலவும் ஏழ்மை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள்ள் ஆகியவையே.ஏதோ ஒன்றால் பாதிக்கப்படுவர்கள் மேலேற இப்படி வரும் மதம் சார்ந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டியதாகிறது.

மேலும் இந்தியாவில் மதத்தினை பரப்பவும், வளர்க்கவும் அனுமதி இருக்கும் போது அரசு கண்டுக்கொள்ள வில்லைனு ஏன் கவலைப்படுறிங்க. வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்துவிட்டு இங்கே அற்புத சுகம் அளிக்கும் ஆவிக்கூட்டம்னு மீட்டிங்க் போடுறாங்க ரெவெரண்ட்கள் ,அதையே அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை .:-))

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு தலையும் ஓட்டு தான், எல்லாமே , மதம், ஜாதி என்ற இரண்டு வகையில் அடங்கிடும், ஏதோ ஒன்றை முன்னிறுத்தி வெற்றி தோல்வி ,எனவே அரசியல்வாதிகள் அதுக்கு ஏற்றார்ப்போல 5 ஆண்டு தேர்தல் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் அத்வானி குதிரைக்கட்டாமல் ரதம் ஓட்டுறார். சல்மான் ருஷ்டி வந்தா மைனாரிட்டி அதிருப்தி ஆகும்னு தடை. ஆளுக்கு ஒரு ஆட்டம் போடுறாங்க, ஆட்டத்துக்கு ஏற்ப வசூல் கிடைக்குது :-))

சகோதரத்துவம் ,சமத்துவம் எல்லாம் ஏட்டில் மட்டும் அதிகம் அச்சாகிக்கொண்டு இன்னும் நாங்கள் இருக்கோம் என்று நினைவுப்படுத்துகிறது :-))

//பரவாயில்லை.பிரிவினை உணர்வுகளைக் கொண்டு வராமல் இருந்தாலே அதுவே பெரிய பொது சேவை:)//

இந்த மதவாதிகள் அவங்க மதம் ஒஸ்தினு சொல்லி பரப்பாமல், அடுத்தவங்க மதம் ஆய் மதம்னு சொல்லில பரப்புறாங்க, அப்புறம் எங்கே இருந்து பிரிவினை உணர்வு வராமல்ப்போகும்.

இங்கே சிராஜ் கூட சொல்கிறாரே, பைபிள் இறைவேதம் அல்லனு சொல்வோம் ஆனால் ஏசு ரொம்ப நல்லவர் என்றும் சொல்வோம், அவருக்கு நாங்க செக்கியுரிடி அவர காப்பாத்துவோம்னு. இவர் மத நூல் ஒஸ்தி சொல்லிக்கட்டும் ,அது என்ன அடுத்தவங்க நூல் நாஸ்தினு சொல்ல ஆர்வம். அப்புறம் எங்கே இருந்து வரும் ஒற்றுமை ? எப்பவும் குஸ்தி தான். அரசியல்வாதிக்கு குஜால் தான்!

இறைத்தூதர்னு சொல்லும் போதெல்லாம் யாகாவ முனிவர்னு ஒருத்தர் சிரிக்காம ஜோக் அடிப்பார் அவர் நியாபகம் வரும், பாவம் இப்போ மேல போய் அருள்வாக்கு சொல்லிக்கிட்டு இருக்கார்.

இதுல காமெடி என்னைப்போல ஆளுங்க எல்லாமே நாஸ்தினு சொன்னா ரென்டுப்பேரும் ஒன்னுக்கூடி கும்ம வருவாங்க. அதுவும் கொஞ்ச நேரம் தான் :-))

வவ்வால் said...

ராஜ்,

//ஒரு பெரிய விக்கெட் விழுந்துடுச்சுடான்னு இதுவே கடைசி பதிவா இருக்கட்டும்ன்னு பின்னூட்ட வாழ்த்து சொல்றாங்க:)//

அதெல்லாம் அவரப்பார்த்து பயப்படுறவங்க வேலையா இருக்கும். அவங்க தான் அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு இருக்காங்க.

-----------

////வடை சூடு ஆறிடுச்சுன்னு நினைக்கிறேன்:)// அவரு இன்னொரு பெயரில் வடை சுட்டுக்கிட்டு இருக்கிறாரு//

பெரிய துப்பரியும் சாம்புலால் ஆ இருப்பார் போல ராபின், யார் எந்த கெட்-அப்ல வடை சுடுறாங்க எல்லாம் சொல்கிறார் :-))

தருமி said...

//சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..! //

அந்த 'பப்பு' இப்போவெல்லாம் வேகுறதில்லை. எங்க காலத்தில் இருந்தது.

தருமி said...

//எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..! // --ஆஷிக்.

அப்படியே தன்னையே கண்ணாடியில் பார்த்துப் பேசுவதுபோல் சரியாக பேசிவிட்டாரே!

Robin said...

//பெரிய துப்பரியும் சாம்புலால் ஆ இருப்பார் போல ராபின், யார் எந்த கெட்-அப்ல வடை சுடுறாங்க எல்லாம் சொல்கிறார் :-))//
எல்லாம் சில க்ளு வச்சு கண்டிபிடிக்கிரதுதான் வவ்ஸ்:) ஆனால் இது பல சமயங்களில் சரியாக இருக்கும், சில நேரங்களில் தவறிவிடும்.

ராஜ நடராஜன் said...

//Blogger Robin said...

//வடை சூடு ஆறிடுச்சுன்னு நினைக்கிறேன்:)// அவரு இன்னொரு பெயரில் வடை சுட்டுக்கிட்டு இருக்கிறாரு.//

//பெரிய துப்பரியும் சாம்புலால் ஆ இருப்பார் போல ராபின், யார் எந்த கெட்-அப்ல வடை சுடுறாங்க எல்லாம் சொல்கிறார் :-))//

வவ்&ராபின்!வெட்டி ஒட்டுறதுல கூட நன்மையிருக்கும் போல இருக்குதே:)

நீங்க துப்பறியும் சாம்புவா இல்ல ஷெர்லாக் ஹோம்ஸா! நிறைய துப்பறியும் தகவல் வெச்சிருக்கீங்க.

வவ்வால் எங்கேயோ விஜயோட பஞ்ச் டயலாக்கை பின்னூட்டத்துல சொன்னது...

நாங்க சும்மாவே காட்டுவோம்.நீங்க வேற காட்டு காட்டுங்கிற மாதிரி...

நாங்கெ ஒன்றுமே தெரியாம இந்தக் காய்ச்சு காய்ச்சறோம்.

துப்பறியும் டெக்னிக் சொல்லிக் கொடுத்தீங்கன்னா இன்னும் காய்ச்சுவோமில்ல:)

ராஜ நடராஜன் said...

//Robin said...

//பெரிய துப்பரியும் சாம்புலால் ஆ இருப்பார் போல ராபின், யார் எந்த கெட்-அப்ல வடை சுடுறாங்க எல்லாம் சொல்கிறார் :-))//
எல்லாம் சில க்ளு வச்சு கண்டிபிடிக்கிரதுதான் வவ்ஸ்:) ஆனால் இது பல சமயங்களில் சரியாக இருக்கும், சில நேரங்களில் தவறிவிடும்.//

ராபின்!இப்பத்தான் சிரிச்சிகிட்டே முந்தைய பின்னூட்டத்தை வெளியிட்டேன்.அதன் பின்னே நீங்க பொறி வெச்சு பிடிக்கிற க்ளூவைக் கண்டேன்.

அது சரி!பல சமயம் எலி மாட்டிகிட்டாலும் சில சமயம் தப்பிச்சிடறதும் உண்டே:)

சீரியஸ் பதிவை காமெடியாக்கிட்டீங்களே:)

சிரிச்சு சிரிச்சு முடியல ராபின்:)நன்றி.

ராஜ நடராஜன் said...

// //சமூகத்துக்கு ஆபத்தானவர்களான இவர் போன்ற 'வெறிநிலை'யில் உள்ளவர்களுக்கு, நமது இஸ்லாமிய நல்லுபதேசம் மூலம் சாராசரி சிந்தனை கொண்ட... நல்ல 'நார்மல் நிலை' மனிதர்களாக இவர்களை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்..! //

அந்த 'பப்பு' இப்போவெல்லாம் வேகுறதில்லை. எங்க காலத்தில் இருந்தது.

January 28, 2012 6:01 PM
Delete
Blogger தருமி said...

//எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..! // --ஆஷிக்.

அப்படியே தன்னையே கண்ணாடியில் பார்த்துப் பேசுவதுபோல் சரியாக பேசிவிட்டாரே!//

இது எங்கே எப்போதுன்னே விளங்கவில்லையே!நான் எல்லா பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் மேய்வதேயில்லை.

வவ்வால் said...

ராஜ்,

//வவ்வால் எங்கேயோ விஜயோட பஞ்ச் டயலாக்கை பின்னூட்டத்துல சொன்னது...

நாங்க சும்மாவே காட்டுவோம்.நீங்க வேற காட்டு காட்டுங்கிற மாதிரி...

நாங்கெ ஒன்றுமே தெரியாம இந்தக் காய்ச்சு காய்ச்சறோம்.

துப்பறியும் டெக்னிக் சொல்லிக் கொடுத்தீங்கன்னா இன்னும் காய்ச்சுவோமில்ல:)//

ஹி..ஹி இன்னும் மறக்கலைப்போல தெகா வின் 7ஆம் அறிவு பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை. பாவம் பால்க்காரர் சந்துரு ஓடிப்புட்டார் அதோட.

அதானே சொல்லிக்கொடுத்தா இன்னும் நல்லா காய்ச்சுவோம்ல , ராபின் .
மக்கள் ஏதோ சாராயம் காய்ச்ச கூட்டு சதி பண்றாங்கனு நினைச்சுக்கப்போவுது :-))

ராஜ நடராஜன் said...

வவ்!அதென்ன புதுசா தானிய்ங்கிப் பின்னூட்டம்? நமக்கு சிலசமயம் விடியற்காலை நேரத்துல குணா கமலுக்கு மாதிரி அப்படியே கவிதை மாதிரி பதிவுக்கு ஐடியா கொட்டும்.அவதார் படம் பார்த்தீங்கதானே!அதாவது மனித உடலுக்கும்,கணினிக்கும் வயர் கனெக்சன் கொடுத்து உடல் அசைவுக்கு ஏற்ப உருவான அனிமேசன் டெக்னிக்கே அவதார் படம்.

அந்த மாதிரி மூளையின் சிந்த்னைகளை அப்படியே கணினி தானியங்கியா உள்வாங்கிகிட்டா பதிவு போட எவ்வளவு நல்லாயிருக்கும்ன்னு தோணும்.

அப்படியொரு தொழில் நுட்பம் வந்து அதில் இணையம் மாதிரி இணைப்பு இருந்தா உலகின் வறுமையை போக்குவது எப்படின்னு யோசிப்பது,புதிய கண்டு பிடிப்புக்களை யோசிப்பது,மருத்துவ சிந்தனைகள்,இலக்கியம்,கவிதை இன்னும் பல மனித வளத்திற்கான சிந்தனைகள் வருவதோடு நாடுகளின் தகுடுதத்தங்கள்,யார் எங்கே குண்டு வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள்,திருட்டு,கொலை,கொள்ளை போன்ற மனித வாழ்வியலுக்கு எதிரானவற்றைக் கூட முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமே என்ற அதீத கற்பனையெல்லாம் தோன்றும்:)

உலகின் தானியங்கிகள் என்றால் பூமி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் என்ற அண்டத்தின் சுழற்சி மட்டுமே.

பப்ளிஷ் பட்டனை தட்டாத தானியங்கிப் பின்னூட்டம் ஏதாவது இருந்தா சொல்லுங்க:)

ராஜ நடராஜன் said...

//
ஹி..ஹி இன்னும் மறக்கலைப்போல தெகா வின் 7ஆம் அறிவு பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தை. பாவம் பால்க்காரர் சந்துரு ஓடிப்புட்டார் அதோட.

அதானே சொல்லிக்கொடுத்தா இன்னும் நல்லா காய்ச்சுவோம்ல , ராபின் .
மக்கள் ஏதோ சாராயம் காய்ச்ச கூட்டு சதி பண்றாங்கனு நினைச்சுக்கப்போவுது :-))//

வவ்!டாஸ்மாக்தான் நினைச்ச இடத்துல திறந்து கிடக்குதே.இந்தக் காலத்துல யாரு அந்தக் காய்ச்சு காச்சுறா:)

இந்தக் காலத்துல ஒண்ணு காலர தூக்கி விட்டுகிட்டு பஞ்ச் டயலாக்கு.இல்லைன்னா நம்ம மாதிரி பொதுவில் ஆனால் யாருமே கண்டுக்காத காய்ச்சுதான்:)

யார் யாரோ தமிழ்மணத்துக்கு என்ன என்னமோ வேண்டுகோள் விடறாங்க.நாமும் கூட அலுக்காம,அசராமப் பின்னூட்டம் போடற அணின்னு மூணாவது அணி உருவாக்கினா என்ன:)

வவ்வால் said...

தருமிய்யா ,

இந்தப்பதிவுக்கே தானியங்கி பின்னூட்ட நடை தாறுமாறா போகுது நீங்க வேற எங்கோ இருந்து இங்கே இறக்குமதி செய்து இணையா ரெண்டு கதை , திரைக்கதை வச்சு படம் காட்டப்பார்க்குறிங்களே :-))

(மலையாளப்படத்துக்கு ஆங்கில நறுக்கு போடுவாங்க சில சமயம் அது போல இருக்கே)

ர----------

ராஜ்,

தருமிய்யா இந்தப்பதிவில் இருந்து தொலைநகல் செய்து இங்கே போட்டு இருக்கார் :-))

//http://manithaabimaani.blogspot.com/2012/01/blog-post_28.html

வவ்வால் said...

ராஜ்,

நீங்க சாருநிவேதா பக்கம்லாம் போற பழக்கம் இல்லையா நல்ல காமெடிக்கு உத்திரவாதமான விலாசம்.

நான் லீனியர்னு சொன்னிங்களே ,,அதுலாம் போய் ஆட்டோ பிக்‌ஷன் வந்துடுச்சு சொன்னதை பார்க்கலையா. ஆட்டோ பிக்‌ஷன் போல இது ஆட்டோ கமெண்ட். என்ன சொல்ல வரோம்னு நாம தீர்மானிக்காம வரும் பின்னூட்டங்கள் தானே தீர்மானிக்குது அத சொன்னேன்,,மேலும் ஆரம்பிச்சா எந்த இடத்தில் நிறுத்துவதுனு தெரியாம போய்க்கிட்டே இருக்குல்ல.

//அந்த மாதிரி மூளையின் சிந்த்னைகளை அப்படியே கணினி தானியங்கியா உள்வாங்கிகிட்டா பதிவு போட எவ்வளவு நல்லாயிருக்கும்ன்னு தோணும்.//

இப்போவும் செய்யலாம் உங்க கபாலத்தில ரெண்டு மூனு புரோப் மாட்டனும். ஸ்டீவன் ஹாக்கின்ஸ் கிட்டத்தட்ட அதான் பயன்ப்படுத்துறார். அவர் கண்ணால என்ன பார்க்கிறார் என்பதை உணரும் சென்சார் அவரது ஆப்டிக் நெர்வ் இல் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில பல சென்சார்கள் உதவியுடன் எல்லாமே. அவருக்கான உருவாக்கப்பட்ட குரலை கொடுப்பது ஒரு இந்தியர் என்று கேள்வி.

//நாடுகளின் தகுடுதத்தங்கள்,யார் எங்கே குண்டு வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள்,திருட்டு,கொலை,கொள்ளை போன்ற மனித வாழ்வியலுக்கு எதிரானவற்றைக் கூட முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமே என்ற அதீத கற்பனையெல்லாம் தோன்றும்://

அது எப்படி முடியும் அதுவும் என்கிரைப்படாக, செக்யூர்ட் அலைவரிசையாகவே இருக்கும், ஹேக்கிங் தான் செய்யனும் :-))

//உலகின் தானியங்கிகள் என்றால் பூமி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் என்ற அண்டத்தின் சுழற்சி மட்டுமே.//

பூமி சுழலும் வேகம் மைக்ரோ செகண்டுகளில் மெதுவாகின்றதாம். எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மெதுவாகும் போல. பெருவெடிப்பின் விசை தான்ன் இன்னும் ஓட்டுது. இறுதியாக எல்லாம் நின்றுவிடுமானு தெரியவில்லை , அதற்கு முன்னரே சூரியன் விழுங்கிவிடும்.

டாஸ்மாக் விலைக்கட்டுப்படியாகதவர்கள் நாடுவது நாட்டு சரக்கையே.இன்னும் இருக்கு.சென்னைல அனகாபுத்தூர் சரக்குனு பெயர் போன சரக்கெல்லாம் இருக்கு ஒரு பாக்கெட் 20 ரூ அப்போ.

காலரதூக்காம காய்ச்சுர வேலைய நானும் ஆதிகாலத்தில இருந்து செய்கிறேன். சலிக்காம :-))

//நாமும் கூட அலுக்காம,அசராமப் பின்னூட்டம் போடற அணின்னு மூணாவது அணி உருவாக்கினா என்ன:)நாமும் கூட அலுக்காம,அசராமப் பின்னூட்டம் போடற அணின்னு மூணாவது அணி உருவாக்கினா என்ன:)//

ஹி..ஹி அப்படி வைக்க கும்மி கூட்டம் ஒத்துக்காது அவங்களுக்கு ரெண்டு வரிக்கு மேல பின்னூட்டம் எழுத வராது :-))

ராஜ நடராஜன் said...

வவ்!மண்ணடிக் கதையெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் போது தமிழக உளவுத்துறைக்கு தெரியாமலா இருக்கப்போவுது.

அதென்ன தென்மாவட்ட இளைஞர்கள் தனியாக குறிப்பிடுகிறீர்கள்?எப்படியோ மதம் பரப்பலுக்கும்,ஏழ்மைக்கும்,வறுமைக்கும் ஒரு முக்கிய தொடர்பு இருப்பதும் மத மூளைச்சல்வை செய்வதற்கு எளிதாகவும் இருக்கிறதென நினைக்கின்றேன்.அவரவர் சுய அறிவுடன் எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமை ஜனநாயக நாட்டில் இருக்கிறது.ஆனால் மக்கள வாழ்க்கை நீரோட்டத்தோட கலந்து பயண்ம் செய்யாத,ரகசியமாக யாருடனும் பழகாத இளைஞர்கள் குண்டுக் கலாச்சாரத்துக்கான Sleeping Cell என்பதற்கே ஊக்குவிக்கப்படுவார்கள்.

கிறுஸ்தவத்தில் மதப்பிரச்சாரத்திற்கு என ஊக்குவிக்கப்படுபவர்கள் ஒருவேளை அல்லேலுயா பிரிவாக இருக்கலாம்.சி.எஸ்.ஐ போன்றவற்றில் ஆசிரியர்கள்,ஆசிரியர்களின் பிள்ளைகள்,பிரதர்களாக விரும்புவர்கள் என்று பாஸ்டர் டிகிரிக்கு படிக்க வைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.முன்பு தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே ஊக்குவிக்கப்பட மதப்பிரச்சாரம் வடநாடு என்று பரவவும் தென்னிந்தியா மாதிரி சகிப்புத்தன்மையில்லாமல் குஜராத்தில் கொளுத்தி விட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

தென்னக மாநிலங்களை மார்க்கமாக இருப்பவர்களும்,அல்லேலுயாக்களும் ஆக்கிரமித்துக் கொள்ள வட இந்தியாவை இந்துத்வா ஆக்கிரமித்துக்கொண்டது.நம்ம மார்க்க பந்துக்களோ நம்மிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள்:)

இந்துத்வா என்றதும் நீங்க சொல்லும் ரதசக்கரமில்லாமலே ரதம் ஓட்டும் அத்வானி,போட்டியா மோடி,சோ தூண்டி விட்டோ அல்லது ஜெயலலிதாவுக்கே பிரதமர் பதவி கனவோ மூன்று பேர் போட்டியில் இப்ப கட்காரி சுஸ்மா சுவராஜ்,அருண் ஜெட்லியும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்று கேள்வி.

ஆமா!மோடி ஒருவேளை பிரதமர் ஆனா அமெரிக்கா விசா கொடுக்குமா:)முதல் மந்திரிக்கும்,பிரதமருக்கும் தனித்தனிப் புரோட்டக்கலா அல்லது இந்தியாவில் ராஜபக்சேவுக்கும்,டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மாதிரி ஒரே புரோட்டக்கலா:)

வவ்வால் said...

ராஜ்,
திருத்தம்,

http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html

தருமிய்யா போட்டது மேற்கண்ட சுவனப்பிரியன் பதிவில் இருந்து. அது முன்னர் நான் போட்டப்பதிவில் காபி & பேஸ்ட் ஆக இருக்கு. ம்கும் பெரிய வரலாற்றுக்குறிப்புனு காபி பண்றானுங்க, இவனுங்க காமெடி மொக்கை காமடி :-))

ராஜ நடராஜன் said...

//சகோதரத்துவம் ,சமத்துவம் எல்லாம் ஏட்டில் மட்டும் அதிகம் அச்சாகிக்கொண்டு இன்னும் நாங்கள் இருக்கோம் என்று நினைவுப்படுத்துகிறது :-))//

நீங்க ஏன் சிரிக்கிறீங்க:)ஏட்டிலாவது இருக்குதேன்னு மகிழ்ச்சி கொள்ள
வேண்டியதுதான்.அதுவுமில்லாமல் உலகம் இன்னும் சுழல்வது அதாவது மனிதர்களின் வாழ்வியல் சுழ்ல்வது நீங்க நினைக்கிற மாதிரி மைனாரிட்டி சமத்துவம்,சகோதரத்துவம் மாதிரியில்லாமல் இந்த சொற்களுக்கான பொருள் கூட அறியாமல் நடைமுறை வாழ்க்கையில் நிறைய பேர் சமத்துவம்,சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள் என நினைக்கிறேன்.வேற எந்த நாடுகளை விடவும் இந்தியா என்ற நாட்டை உதாரணமாக கூறலாம்.என்னடா இடதுபக்கமிருந்து மறுபடியும் வலதுபக்கம் போகிறேன் என்று பார்க்கிறீர்களா!இந்தியா மிகவும் ஒரு காம்ப்ளெக்சான கட்டமைப்பு.ருஷ்டியை விடக்கூடாதென்று மதவெறியும் தெரியுது.பம்பாய் குண்டுவெடிப்பும் நடக்குது.ஆனால் வெடித்த மூன்றாம் நாளே தனது இயல்பு வாழ்க்கையை முன் கொண்டு செல்லும் வாழ்க்கையின் யதார்த்தமும் தெரிகிறது.தி வெட்னஸ்டே படம் மாதிரி காமன் மேன் குண்டர்கள் மாதிரி குண்டு வைக்காமல் உண்மையான காமன் மேன் ஓரளவுக்கு சகோதரத்துவமாகவே இருக்கிறான்.

குண்டுக்கலாச்சார மத உணர்வுகளை விமர்சிக்கும் அதே நேரத்தில் வாழ்வியலின் அழகையும்தான் ரசிப்போமே.

மறுபடியும் பக்கம் தாண்டி விடுகிறேன்.யாகவா முனிவர்ன்னு ஒருத்தரைக் குறிப்பிட்டீங்களே வீரபாண்டியன் நடுவரான நிகழ்ச்சியில் கலாட்டா செய்தாரே அவரா?விவேக் கூட மைல்சாமிய வச்சுகிட்டு ஒரு படத்துல கலாய்ச்சாரே அவரா:)

வவ்வால் said...

ராஜ்,

//வவ்!மண்ணடிக் கதையெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் போது தமிழக உளவுத்துறைக்கு தெரியாமலா இருக்கப்போவுது.//


உளவுத்துறை எதுவும் செய்வதில்லை, அவர்களுக்கு பொலிட்டிகல் சர்வெய்லன்ஸுக்கே எல்லா நேரமும் போய்டுது.

பெரும்பாலும் நோட் போட்டு அனுப்பி வைப்பார்கல். எதாவது ஆச்சுனா அப்பவே நோட் அனுப்பினென் சொல்லிடுவாங்க. எப்போதும் நடவடிக்கை இருப்பதில்லை.

//அதென்ன தென்மாவட்ட இளைஞர்கள் தனியாக குறிப்பிடுகிறீர்கள்?//

நான் மண்ணடியில் ஒரு வீட்டிற்கு போய் இருந்தேன், மேல் மாடியில் சிறு சிறு அறைகளாக ஒரு 10 ரூம் இருக்கும் போட்டு வைத்திருந்தார்கள். அதில் எல்லாம் இப்படி மார்க்கம் படிக்க வந்தவர்கள் தான், கீழக்கரை , நாகர்கோயில், இது போல தெற்கில் இருந்து வருவாங்க என்று சொன்னார்.

இன்னும் சொல்லப்போனால் அங்கே ஏகப்பட்ட லாட்ஜ்கள் இருக்கும், எதுக்கு எனில் ஹார்பரில் கப்பல் நிற்கும் போது அதில் இருப்பவர்கள் வருவார்கள். விபச்சாரம் தான் அது போன்ற லாட்ஜ்களின் முக்கிய நோக்கமே.

நான் வட சென்னையை ரியலாக எப்படி இருக்கும்னு பார்த்தவன். நைட்ல நடமாடினால் சந்தேக கேசில் உள்ளே கேள்வியே கேட்காம புடிப்பாங்க. ரெண்டு தட்டு தட்டிடு கேஸ் போடாம விட்ருவாங்க. புடிச்சா உடனே ஆள் வரனும் நமக்கு, இல்லைனா இலவச போலிஸ் அடி தான் :-))

இதுல ஒரு காமெடி என்னனா 4-5 கும்பலா தண்ணி அடிச்சுட்டு நைட்டுல ரோட்டுல கலாட்டா பண்ணிக்கிட்டு இருப்பாங்க அவங்களை போலீஸ் பார்த்தாலும் ஏய் இங்கே என்ன சத்தம் கிளம்புனு , லத்திய தரைல தட்டி மிரட்டி மட்டும் அனுப்பும். ஆனா தனியா நைட் ஷோ பார்த்துட்டு வருபவனை வளைச்சு வளைச்சு கேள்வி கேட்பாங்க :-))


தனியா நைட்ல வருபவன் கிரிமினல்னு எதாவது கிரிமினல் சைக்காலஜி இருக்குமோ?

------------

எல்லாப்பிரிவிலும் உண்டு , நான் லயோலா கல்லூரியை உதாரணம் காட்டி இருக்கேன், நீங்க பெந்தே கோஸ்ட் ல செய்வாங்க சொல்றிங்களே, புரோட்டஸ்டன்ட் அவங்க.

பெரும்பாலும் பொருளாதாரக்காரணங்களுக்காகவே ஃபாஸ்டர் படிக்க போறாங்க.

ராஜ நடராஜன் said...

//தருமிய்யா ,

இந்தப்பதிவுக்கே தானியங்கி பின்னூட்ட நடை தாறுமாறா போகுது நீங்க வேற எங்கோ இருந்து இங்கே இறக்குமதி செய்து இணையா ரெண்டு கதை , திரைக்கதை வச்சு படம் காட்டப்பார்க்குறிங்களே :-))

(மலையாளப்படத்துக்கு ஆங்கில நறுக்கு போடுவாங்க சில சமயம் அது போல இருக்கே)//

நானு ஒரு தருமி ஐயா போட்டுக்குறேன்.மனிதாபிமானின்னு புதுசா யாரோ ஒருவர் முளைச்சிருக்கிறார்:)நம்ம துப்பறியும் ராபினை விட்டுக் கண்டு பிடிச்சிடலாம்:)அவர் பேட்டைக்கு பெயரளவிலாவது புதுசா இருப்பதால் கண்டுக்க வேண்டாம்.

நான் முன்பு சிலசமயம் பதிவர்கள் கோவி.கண்ணன் vs சுவனப்பிரியன் பின்னூட்ட விவாதங்களைப் படிப்பதுண்டு என்றாலும் அவர்களின் விவாதங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லாமலே இருந்தேன்.இப்ப சமீப காலமாக ராபின் எங்கேயோ பின்னுட்டத்துல குறிப்பிட்ட படி பதிவர் சுவனப்பிரியன் பதிவுகள் படித்தா காமெடியா இருக்கும்ங்கிற மாதிரி மூளைக்கு வேலை கொடுக்காத பதிவுகளையோ டெம்ப்ளட் கமெண்டுகள் மாதிரி இருப்பவற்றையோ படிப்பதில்லை.

அறிவு பூர்வமாக விவாத களத்தில் ஏதாவது இருந்தால் வரவேற்போமே!

ராஜ நடராஜன் said...

வவ்!சாரு நிவேதிதாவும் உள்ளே வந்து புகுந்துகிட்டாரா:)எனக்கு பிரான்ஸ்,லத்தீன் அமெரிக்க,கேரள புகழ் சாருவை அறிமுகப்படுத்தினதே நம்ம பதிவுலக அண்ணாத்தைகள்தான்:)அவரது தளமெல்லாம் திறந்து வெச்சு தாஜ் கொரமண்டலில் தண்ணி அடிச்சு சட்டையப் பிச்சுகிட்டேன்,கையில இன்னும் காசில்ல நன்கொடை அனுப்புங்கன்னு பேங்க அக்கவுண்டெல்லாம் கொடுத்துகிட்டிருந்தார்.

தளம் வேற ஓசுலதானே கிடைக்குதென்று
சரி என்னதான் சொல்கிறாரென்று பார்க்கலாமேயென பார்த்தால் கோவாலுன்னோ என்னமோ ஒரு போஸ்டாபிஸ் குமாஸ்தா கேரக்டர் ட்ரெயின் புடிச்சு கஷ்டப்பட்டு வேலைக்குப் போவதையெல்லாம் விளக்கிட்டிருந்தார்.இடையிடையே அந்த டாவு கடுதாசி போட்டுச்சு,இந்தப் பொண்ணு இத சொல்லுச்சுன்னு ஆரம்பிச்சு தமக்கு தாமே பிரபல பதிவர் நாமம் சூட்டிகிட்ட சிலர் அவருக்கு அல்லக்கையாக மாற் இன்னும் சிலர் யோவ்!பச்சை நீலமாவா எழுதுவேன்னு சாருவுக்கு எதிராக கிளம்ப இப்ப இருக்குற மார்க்கமா இருக்குறவங்க ஒரு பக்கமும் கும்மிகள் கூட்டம் இன்னொரு பக்கமும் மாதிரி சாரு மண்டை காஞ்சு போய் தளத்துக்கு பின்னூட்ட தடா கொண்டு வந்திட்டாரு.எழுதுறேன் பேர்வழின்னு சாரு vs ஜெயமோகன்னு அங்கே வேற ஒரு இலக்கிய உள்குத்து சண்டை.இதெல்லாம் நீங்க இல்லாத நேரத்துல நடந்தது.நமக்கும் தோதா ஆளு ஒருத்தரும் மாட்டாததால் ஊமணாம் மூஞ்சியாட்டம் எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டேயிருந்தேன்:)

அப்புறம் சாருவே ஒரு பெண்ணோட சாட்டில தப்பு தப்பா பேசுனாறா அல்லது அப்படி பேச வைக்க் அவர மாட்டி விட்டாங்களான்னு தெரியல.அவரது தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ரா,மதன்,சாருவின் பேச்சு காணொளியைக் கண்டதோடு சரி.சாரு யாரு ங்கிறதே இப்ப நீங்க நினைவு படுத்தித்தான் ஞாபகம் வருது:)

//ஆட்டோ பிக்‌ஷன் போல இது ஆட்டோ கமெண்ட். என்ன சொல்ல வரோம்னு நாம தீர்மானிக்காம வரும் பின்னூட்டங்கள் தானே தீர்மானிக்குது அத சொன்னேன்,,மேலும் ஆரம்பிச்சா எந்த இடத்தில் நிறுத்துவதுனு தெரியாம போய்க்கிட்டே இருக்குல்ல.//

ஓ!நீங்க சொல்றதே இப்பத்தான் எனக்கு உறைக்குது.அப்ப நீங்க சொல்ற மாதிரி தானியிங்கப் பின்னூட்டோம்தான்:)எங்கே துவங்குது எங்கே முடியுதுன்னு முன்னறிவிப்பு இல்லாமலே மூளை சொல்ற மாதிரி அது பாட்டுக்கு போய்கிட்டேயிருக்குதில்ல!

நான் அவதார் அனிமேசன் டெக்னிக்கை குறிப்பிட்டு ஹாக்கின்ஸை எப்படி மறந்தேன்?சொன்னாப்ல அவர் உடலில் புரோப் பட்டன்களை கணினியுடன் இணைத்து அல்லவா பேச வைக்கிறார்கள்!!அதுவும் அவருக்கு குரல் கொடுப்பது ஒரு இந்தியர்ங்கிற அளவுக்கு தேடல்களை வச்சிகிட்டு மார்க்கப் பிள்ளப்பூச்சிகளை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கிற அளவுக்கு உங்க மூளைக்கு சேதாரம் ஏற்படுகிறதே:)

அலைவரிசையும் கூட என்கிரைப்டா,செக்யூரா இருக்குமா!அதுக்கும் இன்னொரு விக்கிலீக்ஸ் வேணுமாக்கும்?அப்ப தீவிரவாதம் ஒழிக்கிறது கட்டுபடியாகாது:)
//பூமி சுழலும் வேகம் மைக்ரோ செகண்டுகளில் மெதுவாகின்றதாம். எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மெதுவாகும் போல. பெருவெடிப்பின் விசை தான்ன் இன்னும் ஓட்டுது. இறுதியாக எல்லாம் நின்றுவிடுமானு தெரியவில்லை , அதற்கு முன்னரே சூரியன் விழுங்கிவிடும். //

உலகம் 2000 ஆண்டுல அழிஞ்சுடும்ங்கிற மாதிரி பயம் காட்டுறீங்களே:)பைபிள் எந்த ஆகமம்ன்னு தெரியல.ஒரு வேளை நண்பர் ராபின் உதவக்கூடும்.நாடு அக்னி ஜுவாலைகளால் நிரப்ப படும்ங்கிற மாதிர் வசனம் இருப்பதை சுட்டிக்காட்டி வளைகுடாப் போரில் ஈராக் குவைத் எண்ணைக் கிணறுகளுக்கு தீ வைத்ததோ அல்லது அமெரிக்கா உள்ளே புகுந்த பின் தீ பற்றிக்கொண்டதோ இதோ உலகின் இறுதி நாட்கள் வந்து விட்டதென்றார்கள்.நீங்க இப்ப புதுசா எடுத்து விடுறீங்க.பதிவுலகில் வேறு மும்முரமா சண்டை நடக்குது.சண்டையெல்லாம் போடாமலே உலகம் முடிவுக்கு வந்து விடுமோ:)

ராஜ நடராஜன் said...

வவ்!என்னது டாஸ்மாக் விலை கட்டுபடியாகலையா?டாஸ்மாக்,முக்கியமாக சென்னை வட்டாரங்களில் க்யூ போட்டுல்ல வியாபாரமாகுது.காசு போதலைன்னா கட்டிங்க்ன்னு வேற ஒரு புது டெக்னிக் வேற ஓடுதே:)
நீங்க சொல்ற க்ளையண்ட் போதஒ பத்தாம கிளாச ஏத்துனோமா,ஊறுகாயை நக்கினோமோ,மல்லாந்துட்டோமான்னுஇருப்பவர்களாக இருக்கலாம்.

//காலரதூக்காம காய்ச்சுர வேலைய நானும் ஆதிகாலத்தில இருந்து செய்கிறேன். சலிக்காம :-))//

உங்களுக்கு கூட்டாளிக கூட்டம் இன்னும் அதிகம் சேரல.சேர்ந்துச்சுன்னா காலர தூக்கி விட்டுட்டே இன்னும் காய்ச்சலாம்:)

//ஹி..ஹி அப்படி வைக்க கும்மி கூட்டம் ஒத்துக்காது அவங்களுக்கு ரெண்டு வரிக்கு மேல பின்னூட்டம் எழுத வராது :-))//

ஹி...ஹி...ஹி...டெம்ளட் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு பட்டாபட்டின்னு ஒரு பதிவர் டிஸ்கியெல்லாம் போட்டுப்பார்த்தார்.நடக்கிற மாதிரி தெரியல:)

பின்னூட்டம் போட்டுகிட்டேயிருக்கும் போது முந்தைய பின்னூட்டத்தில் பைபிள் ஆகமம் பற்றி சொன்னது இப்ப நினைவுக்கு வந்துடுச்சு.
Revelation!வெளிப்பாடுன்னு தமிழ் அர்த்தம்ன்னு நினைக்கிறேன்.இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டுதான் கிறுஸ்துவர்களில் சிலர் உலகம் அழியப்போகுது.புதிய உலகம் தோன்றுமென்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
ஹிரோசிமா மாதிரி மனுசனே மனுசனுக்கு சூன்யம் வச்சுகிட்டால் ஒழிய உலகம் அழியாது.ஓசான் ஓட்டைகளுக்கு கூட அமெரிக்காவும்,சைனாவும் விடுற அதிக புகைதான் காரணமாம்.இப்ப வளைகுடா நாடுகளும் ஜனத்தொகை ரீதியாக இந்தியாவும் அதிக வாகன ஓட்டும் நாடாகி விட்டதும் ஒரு காரணம்.

ராஜ நடராஜன் said...

வவ்!பொலிட்டிகல் சர்வேயலன்ஸ்க்கே நேரம் போதலைங்கிறதும் இந்தியாவில் குண்டு வெடிப்புக்கள் இன்னும் தொடர்வதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்குமோ.நாம் திருடனைப் புடிச்சு கொடுத்தும் விட்டுட்டா அப்புறம் என்ன செய்யறது.

இந்தியாவில் அரசியல்வாதிகளும்,உயர் பீரோகிராட்டுகளும் சூழ்நிலைக்கைதிகள் மாதிரியில்ல?எங்கே போனாலும் செக்யூரிட்டி பாதுகாப்புன்னு.தங்கள் சுதந்திரம் இழந்த லக்சூரி கொண்டாடுபவர்கள்.

ஹார்பர் கப்பல் சரக்குகள் பர்மா பஜாருக்கு பயணம் செய்வதுதான் ஆதிகாலம் முதல் தொடரும் கதை.ஜோதி தியேட்டர் பற்றியெல்லாம் பேசும் பதிவர்கள் மண்ணடி லாட்ஜ்கள் பற்றியெல்லாம் பொதுவில் வைக்காமல் விட்டு விட்டார்களே என்பது ஆச்சரியம்தான்.

நீங்க போலிஸ் என்றதும் நினைவுக்கு வருவது தமிழகத்திலும் இன்ஸ்பெக்டர்களுக்கும்,போலிஸ்களுக்கும் பயிற்சி தந்து பின்புதான் நடைமுறையில் மக்களுடன் இறக்கி விடுகிறார்கள்.நான் ஒரு முறை நண்பர் ஒருவர் இன்ஸ்பெக்டர் ட்ரெயினிங்கில் இருக்கும் போது சந்திக்கப் போனேன்.கிட்டத்தட்ட மிலிட்டரி ட்ரெயினிங்க் மாதிரி அவ்வளவு ஒரு திட்டமிடலுடன் கூடிய பயிற்சி.ஆனால் அந்தப் பயிற்சிகள் களத்தில் எதுவும் பலனில்லாம்ல் போய் விடுவது எப்படியென்று தெரியவில்லை.பொருளாதாரம் சார்ந்த ஒன்றா அல்லது குற்றவாளிகளுடன் கலந்து அவர்களும் மனரீதியாக குற்றவாளிகள் மாதிரி ஆகி விடுகிறார்களா?

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை லண்டன் போலிஸிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கேயும் இந்தியா போலவே பயிற்சி தந்தே மக்களிடம் அனுப்புகிறார்கள்.100க்கு ஒரு ஆள் பதவியை த்வறான வழியில் பயன்படுத்துபவராக இருப்பார்.அப்படியும் மாட்டிக்கொண்டால் நீதிமன்றம் முன்பு சரியான தீர்ப்புதான்.எனவே உள்துறை சார்ந்த குற்றங்கள் மிகவும் குறைவே.

மனித உரிமை மீறல்களில் இந்திய காவல்துறைக்கு மிகுந்த பங்குண்டு.
அதென்ன ஒண்டியா வந்தா போலிஸ் அடி.கூட்டமா வந்தா போங்கடான்னு விட்டு விடுவதென்ற சித்தாந்தம்.

நீங்க காவல்துறையென்றதும் முந்தைய ஆட்சியில் வெட்டுப்பட்டு இறந்த இன்ஸ்பெக்டரின் புகைப்படம் வந்து தொலைக்கிறது.என்ன மனிதாபிமானமற்ற முறையில் ஒரு அதிகாரியை வெட்டியுள்ளார்கள்.ஒருவேளை இந்த மாதிரி கிரிமினல்களை ஒடுக்கும் பணியில் கூட காவல்துறை கடுமையாகிப் போகின்றதோ?

வவ்வால் said...

ராஜ்,

ஆட்டோ பிக்‌ஷன் சொன்னதும் கப்புனு பிடிக்கலையா அதான், சாரு பத்தி சொன்னேன் , நீங்க அவர நல்லாவே பாலோவ் செய்து இருக்கிங்க. அவர் எக்சைல் நாவல் ஆட்டோ பிக்‌ஷனாம் :))

ஒரு கதை தானே எழுதிகொள்(ல்)வது போல , பின்னூட்டமும் தானே எழுதிக்கொள்கிறதுஎனக்கு :-))

ஹாக்கின்ஸ்,சோலார் சிஸ்டம்ன்னு கட்டுக்குள் இல்லாம பாய்கிறது பின்னூட்டம்.

மார்க்க பிள்ளைப்பூச்சிகளுக்கும் அவ்வப்ப்போது மருந்து அடிக்க மறப்பதில்லை.

இப்போ சூரியன் மஞ்சள் குள்ளனா இருக்கு அது சிவப்பு ராட்சனா ஆகும் போது பூமியை விழுங்கும் .ஆன சில மில்லியன் ஆண்டுகள் ஆகும்.அதை பார்க்கும் பாக்யம் நமக்கு இல்லைனு வருத்தமா இருக்கு.இது புதுசு இல்லை , பழைய அறிவியல் தான் , நாம் மறந்து விட்டோம்.

வவ்வால் said...

ராஜ்,

போதை பற்றவில்லை என்பதை விட , வருமானம் கம்மி, டாஸ்மாக்கில் விலை அதிகம் னு இருக்கு.கம்மியா காசு இருக்கிறவன்ட இப்போவும் பாக்கெட் சரக்கு தேடிப்போறாங்க.இப்பவும் சென்னை புற நகரில் ஜோரா ஒடுது.

//உங்களுக்கு கூட்டாளிக கூட்டம் இன்னும் அதிகம் சேரல.சேர்ந்துச்சுன்னா காலர தூக்கி விட்டுட்டே இன்னும் காய்ச்சலாம்:)//


டைம் /னெட் சரி இல்லை , இல்லைனா சிங்கிலாவே காய்ச்சுவேன் :-))

ஓசோன் ஓட்டைய அடைக்க கார்பன் புட் பிரின்ட். மரம் வளர்த்து அடைக்கலாம் சொல்றாங்க.அதுவும் வேற நாட்டில் மரம் வளர்த்தா கூட போதுமாம்.கார்பன் கிரெடிட் சொல்றாங்க.அது எப்படி புகை விடுற நாட்டு ஓட்டையை அடைக்கும்னு தெரியலை :-))

நம்ம உளவுத்துறை எல்லாம் துருப்பிடிச்ச சரக்கு.

எங்கே பாதுகாப்பில் சூழல் கைதி எல்லாம் செக்கிய்யூரிட்டியோட சின்ன வீட்டுக்கு போறாங்க. :-))

ஜோதி பத்தி பேசுறவங்க எல்லாம் கேள்வி ஞானத்தில பேசுர பார்ட்டிங்க.அங்கே இப்போலாம் நான் கடவுள் போல படம் தான் ஒடுது.

மண்ணடில என்ன நடக்குதுனு அங்கே போய் வரவங்களுக்கு தான் தெரியும்.

போலிஸ் டிரெனியிங் எல்லாம் சம்பிரதாயமான ஒன்று.ரிசெர்வ் போலீஸ்ல இருந்து ஸ்டேஷனுக்கு வர காசு கொடுத்தா தான் உண்டு.ஏரியாவுக்கு ஒரு ரேட். அப்புறமெங்கே சட்டம் ஒழுங்க காப்பாத :-))

தருமி said...

//எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..! // --ஆஷிக்.

அப்படியே தன்னையே கண்ணாடியில் பார்த்துப் பேசுவதுபோல் சரியாக பேசிவிட்டாரே!

Robin said...

//உலகம் 2000 ஆண்டுல அழிஞ்சுடும்ங்கிற மாதிரி பயம் காட்டுறீங்களே:)பைபிள் எந்த ஆகமம்ன்னு தெரியல.ஒரு வேளை நண்பர் ராபின் உதவக்கூடும்.//

இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்று பைபிளில் எங்கும் இல்லை. சொல்லப்போனால் இப்போது நாம் பின்பற்றும் காலண்டர் அப்போது கிடையாது. இப்போதைய காலண்டர் சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பு கிரிகோரி என்ற போப் அறிமுகப்படுத்தியதுதான். ஆனால் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்பு சில சம்பவங்கள் நடக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ராஜ நடராஜன் said...

வவ்!இதுவரைக்கும் ஆட்டோபயாகிரபிதானே பிரபலம்.சாரு விடற ரீலுக்கெல்லாம் பெயர் ஆட்டோபிக்சனா?அதாவது தானாகவே புளுகுறதுக்கு பெயர் ஆட்டோபிக்சனா!
கொஞ்சம் கௌரமா சுயகதை ங்கிறாரோ?சென்னையில ஓட்டலில் முதல் நாள் மிச்சம் மீதியானதையெல்லாம் கலந்து வடைகறின்னு தருவாங்களே,அந்த மாதிரி சாருவோட பழைய கதைகளையெல்லாம் கலந்து கட்டியதுதான் எக்ஸைல்ங்கிறாங்க.நான் படிக்காம என்னத்த கருத்து சொல்றதுன்னு தெரியாமலே முன்னாடி பேச்சுவாக்குல பரவும் வதந்தி இப்ப இணையம் மூலமா பரவுறதை வச்சுத்தான் இதை சொல்றேன்.

ஹாக்கின்ஸ்,சோலார் சிஸ்டம் என பின்னூட்டம் பல திசைகளில் பாய்ந்தாலும் பட்டர்பிளை எபக்ட் மாதிரி பதிவு,பின்னூட்டங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு இருக்கவே செய்கிறது.சோலார் கதிர்கள் வேற போன வாரம் அனல் கக்கிடுச்சாம்.இங்கே எங்களுக்கு 3 டிகிரி குளிர்தான் கிட்டியது:)
உலகம் என்றைக்காவது ஒரு நாள் அழிஞ்சுடும்ங்கிறதால நம்ம பின்னூட்டங்கள் கூட ஆவியா அண்டத்துல சுத்திகிட்டிருக்கட்டுமே:

பிள்ளைப்பூச்சிகளுக்கு அவ்வப்போது நீங்க மருந்து அடிச்சாலும் ஹிரோசிமா குண்டுக்கே தப்பிச்ச கரப்பான் பூச்சிகள் மாதிரித்தான் சுத்திகிட்டிருக்கப் போவுது.விடுங்க!

தருமி ஐயா பதிவுக்கு பதிவர் சார்வாகன் எக்ஸோடஸ் என்ற படத்தின் தொடுப்பு கொடுத்திருந்தார்.

அடுத்து தானியங்கி பின்னூட்டங்கள்ன்னு சின்னதா ஒரு பதிவு போட்டுட்டு எக்ஸோடஸ் பதிவுதான்.படம் பிட்டுப்படம் பார்க்கிற மாதிரி துண்டு துண்டாகத்தான் இருக்கும்.சில துண்டு இல்லாமல் கூட இருக்கும் என நினைக்கிறேன்.கிட்டத்தட்ட 20 பிட்டு 3.20 மணி நேர முழுப்படம்ன்னு நினைக்கிறேன்.
படம் பார்த்துட்டா காலரை தூக்கி விடாமலே பின்னுட்டம் காய்ச்ச வசதிப்படும்.

http://www.youtube.com/watch?v=ySvaWWYGbq0&feature=related//

நேற்று உங்களுக்குப் பின்னூட்டம் போட்டு முடிச்சுட்டு பாதி விட்ட படத்தை பார்த்து முடிச்சேன்.

ராஜ நடராஜன் said...

டைம் மேனேஜ்மென்ட் பற்றி நீங்கதான் ஆலோசிக்கனும்.இந்தியாவுல நெட் செம சப்பைன்னு ஊருக்கு வந்த போது தெரிந்தது.இந்தியாகிட்ட ஆட்டையப் போட்ட ஸ்வான் கம்பெனி விற்ற எஸ்டிலாட் சர்வீஸெல்லாம் இங்கே நல்லாவே இருக்குது.இந்தியாவின் பயனாளிகள் கூட்டம்,மின்சாரம்ன்னு நிறைய பிரச்சினைகள் இருக்குது.இப்ப 3Gலேயிருந்து 4Gக்கு இந்தியா மாறப்போகுது.டவர் பிரச்சினையெல்லாம் கிடையாதாம்.அதற்குள் மாதவன் நாயர் ராஜினாமா விவகாரம் வேற முளைக்குது.

ஜோதி ரசனையாளர்கள் நீங்க சொல்ற மாதிரி கேள்வி ஞானிகள் கிடையாது.முன்னாடி ஆண்டு அனுபவச்ச பார்ட்டிக!குஜால் பதிவுகள் போட்டே சிலர் பிரபலமாயிட்டாங்க:)நீங்க காணாமல் போயிட்டதால உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

மண்ணடியைத்தான் இப்பொழுது பொதுவில் கொண்டு வந்தீட்டிங்களே.இனி சட்டம்,ஒழுங்கு பாடு.

இன்ஸ்பெக்டர்கள் விசயம் பேசுவோம்.இவர்கள் பணம் கொடுத்து போட்ட பணத்தை எடுக்குற பிரச்சினைக்கு முதல் கட்டமாக அரசு இவர்களின் ஊதியம்,வாகன வசதி,வீடு போன்றவைகளை கட்டாயம் செலுத்தனும்.கூடவே யாருக்கு என்ன பார்ட் டைம் தொழிலாக யாரையாவது நியமித்து வாடகை மாதிரி வருமானங்கள் வரும்படி செய்யலாம்.உதாரணமாக டாக்சி போன்றவைகளுக்கு உரிமம்.அமெரிக்கா.லண்டன்,வளைகுடா போன்ற நாடுகளுக்கு பயிற்சி போன்றவை அவசியமான ஒன்று.
(ஒரு வேளை வெளிநாடு பயிற்சிக்கு அனுப்பினா அங்கேயே போய் செட்டிலாகிடுவாங்களோன்னு அரசு பயப்படுதோ:)

தமிழ் நாடு போலிஸ் ஸ்காட்லான்ட் யார்டுக்கே சவால் விடுதுங்கிறாங்க.நீங்களோ துருப்புடிச்சிடுச்சுங்கிறீங்களே!

ராஜ நடராஜன் said...

Blogger தருமி said...

//எப்படியெனில், தம் விருப்பத்துக்கு மாறாக எழுதுவோரை இன்று திரட்டியில் இருந்து நீக்க நினைக்கும் இவர் போகப்போக... "உலகத்தில் இருந்தே இவர்களை நீக்கினால்(?) என்ன?" என்றும் கூட நினைக்க ஆரம்பிக்கலாம்..! // --ஆஷிக்.

அப்படியே தன்னையே கண்ணாடியில் பார்த்துப் பேசுவதுபோல் சரியாக பேசிவிட்டாரே!//

எதுவும் அவரவர் வாய்மொழி அறியப்படும்.வேறு என்ன சொல்ல!

தொடுப்பை இப்பத்தான் பார்த்தேன்.நீங்களும் வவ்வால் கூட சேர்ந்துட்டு உலகம் சுற்றும் வாலிபனாகிட்டீங்க போல இருக்குதே.நண்பர் ராபின் பின்னூட்டத்துல சொன்னமாதிரி ரொம்ப காமெடியாத்தான் இருக்குது:)
நல்லவேளை கலைஞர் ஆட்சிக்கு வரல.இல்லாட்டி குச்சுப்பூ பிச்சுப்பூதான்.

எனக்கென்னமோ அவங்க கருத்து சுதந்திரம்ன்னு மார்க்க சகோக்களை கண்டுக்காம விட்டுட்டா நல்லதென்றே தெரிகிறது.ஹெவி வெயிட் சேம்பியன்கள் பெதர் வெயிட்காரங்ககிட்ட போய் மோதுற மாதிரி இருக்குது:)

அங்கேயெல்லாம் போய் மல்லுக்கட்டுற நேரத்துக்கு பதிவர் சார்வாகன் கடையில ஒரு காணொளி பார்த்துடாலாம்ன்னு தோணுது.

ஓ!அதை வேற எப்ப பார்த்து எப்ப முடிக்கிறதென்று வேற சொன்னீங்க போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//Robin said...

//உலகம் 2000 ஆண்டுல அழிஞ்சுடும்ங்கிற மாதிரி பயம் காட்டுறீங்களே:)பைபிள் எந்த ஆகமம்ன்னு தெரியல.ஒரு வேளை நண்பர் ராபின் உதவக்கூடும்.//

இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்று பைபிளில் எங்கும் இல்லை. சொல்லப்போனால் இப்போது நாம் பின்பற்றும் காலண்டர் அப்போது கிடையாது. இப்போதைய காலண்டர் சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பு கிரிகோரி என்ற போப் அறிமுகப்படுத்தியதுதான். ஆனால் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்பு சில சம்பவங்கள் நடக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.//

ராபின்!துப்பறியும் சாம்பு அரதப் பழசா இருப்பதால் இனிமேல் உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் பட்டத்தை வவ்வால் சார்பா கொடுத்திடாமென்று நினைக்கின்றேன்:)

நீங்க சொல்ற மாதிரி 2000ல் உலகம் அழியும்ன்னு பைபில் இல்லைதான்.ஆனால் இன்னும் ஒரு 25,30 வருசம் இருக்குதேங்கிற தைரியத்துல 70களின் இறுதியிலேயே இந்த வதந்தியைக் கிளப்பி விட்டுட்டாங்க.

ஆகமம் வெளிப்பாடு,Revelation என பின்பு நினைவு வந்துடுச்சு.

விவிலியம் சொல்வதற்கு ஒப்புமையாக மாதிரி வளைகுடா எண்ணைக்கிணறுகள் பற்றியெறிந்தது,ஜார்ஜ் புஷ் ஈரான் மீதான படையெடுப்பின் பயங்கரம் போன்றவற்றை சிலர் நம்புகிறார்கள்.

இப்ப நண்பர் வவ்வால் வேறு சூரிய கதிர்கள் போன்றவை என்றாவது ஒருநாள் உலகம் அழியுமென்கிறார்.அதற்குள் மனிதன் சந்திரன்,செவ்வாய் என வேறு கிரகத்திற்கு போய் விடுவான் என்றே நினைக்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

2000 இல் அழியும் , இறுதி தீர்ப்பு நாள் வரும், செத்தவங்க,சாகதவங்க எல்லாம் ஒன்னா நிக்க வச்சு பாவம் ,புண்ணியத்துக்கு ஏற்ப இடம் ஒதுக்குவார்னு ஒரு கிருத்துவ்வ நம்பிக்கை. ஆனால் 2000 னுநேரா சொல்லாம மில்லனியம்னு இருக்காம், 1000 , 2000 னு ரெண்டு மில்லனியம் போய்டுச்சு :-))

இப்போ 2012 மயன் காலண்டர் கணக்கு சொல்றாங்க. 12 க்கு அப்புறம் ஆண்டு இல்லையாம்.

ராபின் சொல்றது கிரிகோரி காலண்டர் முறை. ஆனால் கோஸ்பெலில் மில்லனியம்னு சொல்லி வச்சுட்டாங்ளே. 2011 மார்ச்சில் அழியும்னு அமெரிக்காவில்ஒ ரு சர்ச் சொல்லி பீதி கிளப்ப்யது முன்னர்.

சாரு கதைப்படிக்காமலே விமர்சிக்கலாம் :-)) அந்த அளவுக்கு பதிவுகளில் பிச்சு போட்டாங்க.மாமல்லன்னு ஒருத்தர் 4 அத்தியாம் மேல படிக்க முடியாதுனு விமர்சனம் போட்டார்.அதுக்கு ஒரு அக்கப்போர்.சாரு கதை ஊசிப்போன வடை கறி :-))

எக்சோடஸ் பத்தி சார்வாகன் சொன்னப்போவே நோட்டிடேன். சமயம் க்கிடைத்தால் பார்க்கலாம்னு.

இதுவும் யூதர்களின் டயஸ்போராவா ரியுனியன் போலனு ஐம்டிபில பார்த்தேன்.இஸ்ரேலில் மீள்குடியேற்றம் செய்வதை எடுத்து இருக்காங்க போல. நிலமெல்லாம் ரத்தம் , பா.ராகவன் எழுதி இருப்பார் இது பத்தி.யூதர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து நிலம் பிடித்து, கூடுதல் விலைக்கு வாங்கினு இஸ்ரேல் உருவாக்கியதாக.

பிட்டுக்கு பின்னூட்டம் சுமந்தவர்னு உங்களை வரலாறு நினைவு கூறும். அண்டவெளியில் ஆவியா திரிந்து வேற்றுக்கிரகம் போனாலும் போகும் :-))

வவ்வால் said...

ராஜ்,

டான் பிரவுனின் ஏஞ்சல்ஸ் அன்ட் டெமான் இந்த மில்லனியத்தில் உலகம் அழியும் கான்செப்ட் வச்சு வாட்டிகன் போடும் டிராமா, சதி எல்லாம் சொல்லும் கதை தான்.

தருமிய்யா எனக்கு முன்னாடியே சுத்த ஆரம்பிச்ச வாலிபர் :-))

//எனக்கென்னமோ அவங்க கருத்து சுதந்திரம்ன்னு மார்க்க சகோக்களை கண்டுக்காம விட்டுட்டா நல்லதென்றே தெரிகிறது.//

கண்டுக்காம விட்டா நல்லது தான் , ஆனால் சில சமயங்களில் கொசுத்தொல்லை ஓவரா போயிடுது :-)) அப்போ அப்போ மூட்டம் போட்டு விடுறது :-))

//தமிழ் நாடு போலிஸ் ஸ்காட்லான்ட் யார்டுக்கே சவால் விடுதுங்கிறாங்க.நீங்களோ துருப்புடிச்சிடுச்சுங்கிறீங்களே!//

இந்த சொலவடையை கண்டுப்பிடிச்ச புண்ணியவான் யாருனு தெரியல , தமிழ் நடிகருக்கு லோக நாயகன்னு பட்டம் போட்டுக்கிறா போல :-))

ராஜ நடராஜன் said...

வவ்!கிரிகோரி காலண்டரை நம்ம ஷெர்லாக் ஹோம்ஸ் ராபினுக்கு விட்டுடலாம்.

சாருவைப் பத்தி இன்னுமா கலாய்க்கனும்?அவரது தொண்டரடியார்கள் யாராவது உங்களை அவருக்குப் போட்டுக்கொடுத்துடப் போறாங்க!மண்ணடிப் பக்கம் வேற சுத்துறீங்கன்னு வேற சொல்லிட்டீங்க:)

கோடிஸ்வரன் போட்டில "சரியான விடை"ன்னு கத்தற மாதிரி வட்டிக்கும்,குட்டிக்கும்,நிலம் வாங்கி பாலஸ்தீனிய அரேபியர்களை கவிழ்த்தது இஸ்ரேலின் அப்போதைய மொசாத் இயக்கம் என்பதை தமிழகத்திலிருந்து கண்டு பிடிச்ச இரண்டாவது ஆள் நீங்க!முதல் ஆள் யாருன்னு கேட்கப்படாது:)

எக்ஸோடஸ் பற்றி இங்கேயே சொல்லிட்டா அப்புறம் புது பதிவுக்கு சரக்கு இல்லாம போய்டுமேன்னு இஸ்ரேலை இத்தோடு விட்டுடலாம்.

மேல் பார்வைக்கு பின்னூட்டம் எங்கெல்லாமோ சுத்தினாலும் உள்ளே வெறும் பூஜ்யம் மற்றும் ஒன்று எண்கள் மட்டுமே எனபதால் மூதாதையர் சொத்துன்னு அண்டத்துல ஆவியா சுத்துற எண்களையெல்லாம் புதிய மனுசங்க ஏலியனை ஏவி விட்டுக் கூட கொண்டு போய் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க.

கூடவே பொதுசேவை செய்யறவங்க ஆவியும் போய் சேர்ந்திடுமோ:)

பிட்டுக்கு பின்னூட்டம் சுமந்தவரா?இணையத்துல இட்லி,வடைதான் விற்கிறாங்க.அதுவும் நம்ம பதிவர் மனோ பஹ்ரைன்லருந்து இட்லி,வடை,தோசை,ஆப்பம்,டீ,காபின்னு மொத்தமா நன்றாகவே பின்னூட்டம் வித்துகிட்டிருந்தார்.ரொம்ப நல்ல மனுசன்.நண்பர்கள் சிலர் பதிவுகள் போட மாட்டேன்னு அடம் புடிச்சு ஒதுங்கிகிட்டதால நண்பேன்டான்னு நட்புக்கு ஆதரவா மனோ வின் பதிவுகளைக் காண முடியல.

தானியங்கிப் பின்னூட்டங்கள் எங்கே போய் முடியுமோ!யாமறியோம்:)

ராஜ நடராஜன் said...

//தருமிய்யா எனக்கு முன்னாடியே சுத்த ஆரம்பிச்ச வாலிபர் :-))//

தருமிய்யா முதுகுல காமிராவெல்லாம் போட்டு சுத்திகிட்டு கல்லூரி டீக்கடை பெஞ்சு கதையெல்லாம் போட்ட வாலிபர்தான்.இப்பத்தான் புரபைல் மாத்திட்டாங்க.

எக்ஸோடஸ் கூட பொன்னியின் செல்வனும் ஆங்கிலத்துக்கு ஒன்று,தமிழுக்கு ஒன்று சரித்திரம் சார்ந்த நாவலை சொல்லியிருந்தார்.எக்ஸோடஸ்ல தருமிய்யாவை பிச்சுடலாம்.

சினிமாவுக்கு விளம்பரம் மாதிரி அடுத்து இன்னுமொரு பதிவு தானியங்கிப் பின்னூட்டங்கள் ன்னு போட்டுட்டு அப்புறமா விக்கி,ஐம்டிபியெல்லாம் துணைக்கு கூப்பிட்டு எக்ஸோடஸ் பற்றிக் கூவிடலாம்.புது சினிமாவுக்கு படம் வருவதற்கு முன்னாடியே தினந்தந்தில விளம்பரம் கொடுத்த மாதிரியில்ல எக்ஸோடஸ் விளம்பர பின்னூட்டம் ஓடுது:)

எக்ஸோடஸ் பதிவுக்கு இந்த நிமிடம் வரை கதை,திரைக்கதை,வசனம், பின்னூட்டம்ன்னு ஒன்றுமே தயார் செய்யல.ஆனால் படத்தயாரிப்பாளரா தருமிய்யாவும்,விநியோகஸ்தரா சகோ.சார்வாகனையும் நியமிச்சாச்சு.ஏன்னா பதிவோட கருவுக்கு இவர்கள் இரண்டு பேருமே காரண கர்த்தாக்கள்.உங்களையும் சேர்த்து நடிக்க வைச்சுட்டா படம் ஓடுதோ இல்லையோ,பின்னூட்டம் ஓஹோன்னு ஓடிடும்:)

ராஜ நடராஜன் said...

////எனக்கென்னமோ அவங்க கருத்து சுதந்திரம்ன்னு மார்க்க சகோக்களை கண்டுக்காம விட்டுட்டா நல்லதென்றே தெரிகிறது.//

கண்டுக்காம விட்டா நல்லது தான் , ஆனால் சில சமயங்களில் கொசுத்தொல்லை ஓவரா போயிடுது :-)) அப்போ அப்போ மூட்டம் போட்டு விடுறது :-))//

உங்களுக்கென்ன பச்ச இலை,வேப்பிலைன்னு மந்திருச்சு விடவும்,மூட்டம் போடவும் கைவசம் நிறைய சரக்கு இருக்குது.இல்லாததுக பாவம் எப்படி எப்படியெல்லாமோ கும்மியடிக்குதுக:)

////தமிழ் நாடு போலிஸ் ஸ்காட்லான்ட் யார்டுக்கே சவால் விடுதுங்கிறாங்க.நீங்களோ துருப்புடிச்சிடுச்சுங்கிறீங்களே!//

இந்த சொலவடையை கண்டுப்பிடிச்ச புண்ணியவான் யாருனு தெரியல , தமிழ் நடிகருக்கு லோக நாயகன்னு பட்டம் போட்டுக்கிறா போல :-))//

லோக நாயகனோட போதாத காலம் மருதநாயகம் பொட்டிக்குள்ள முடங்கிடுச்சு.இல்லாட்டி எலிசபெத் ராணியைக் கூட்டி வந்து படத்துவக்க விழா நடத்தியதற்கு மெல் ஜிப்சன் Brave heart மாதிரி படம் உலகளாவிய அளவில் பெயர் வாங்கியிருக்கும்.இருக்குறதிலேயே அதென்னமோ பயர்ன்னு சொல்வாங்களே புதுசா ஏதாவது சாதிக்கனும்ங்கிற மனுசனை புடிச்சிகிட்டு!நீங்க பவர்ஸ்டாரின் லத்திகாவை 10 முறை பார்க்க கடவீர்:)

சிவாஜியெல்லாம் மார்லன் பிராண்டோவை சாப்பிடக்கூடிய மனுசன்.போதாத காலம் தமிழ்நாட்டுல பிறந்து நடிச்சிட்டார்.மெரினாவில் வெண்கல சிலை கிடைச்சதுதான் மிச்சம்.செல்லுலாய்ட் இருந்ததோ அவர் முகம் தப்பிச்சது.இல்லாட்டி அந்த சிலையோட முகம் ஆராயவே ஒரு தலைமுறைக்கு வேலை வந்திருக்கும்:)

kankaatchi.blogspot.com said...

குடிக்கும் தண்ணீரை உருபெருக்கி மூலம் பார்த்தால் அதை குடிக்கமுடியாது .நம் தாகமும் தீராது அதுபோல்தான் மதமும் அதை சார்ந்த விஷயங்களும் .
மக்கள் வேறுபாடுகளை மறந்தாலும் சுயநல சக்திகளான அரசியல் கிருமிகள் அதை வளரவிட்டு குளிர் காய்கின்றன என்பதுதான் உண்மை .

ராஜ நடராஜன் said...

//enpaarvaiyil said...

குடிக்கும் தண்ணீரை உருபெருக்கி மூலம் பார்த்தால் அதை குடிக்கமுடியாது .நம் தாகமும் தீராது அதுபோல்தான் மதமும் அதை சார்ந்த விஷயங்களும் .
மக்கள் வேறுபாடுகளை மறந்தாலும் சுயநல சக்திகளான அரசியல் கிருமிகள் அதை வளரவிட்டு குளிர் காய்கின்றன என்பதுதான் உண்மை .//

மைக்ரோஸ்கோபிக்கின் தமிழ்ப் பொருள் உருப்பெருக்கியா!அழகிய தமிழ் பதம் தந்ததற்கு முதற்கண் வணக்கம் உங்களுக்கு.

ஓட்டு அரசியலுக்கு மதமும்,அது சார்ந்த உணர்வுகளும் தூண்டி விடப்படுகின்றன என்ற போதிலும் இப்பொழுது பதிவுலகமும் மதம் சார்ந்து பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் சகிப்புத் தன்மையற்ற நிலையாக ஒரு எழுத்தாளனுக்கு பத்வா வழங்கப்படுவதும்,அதை விட இந்திய குடியுரிமை உள்ள ஒருவரை வரவிடாமல் உயிர்பயம் காட்டியதற்கு தலைகுனிந்த கொண்ட இந்திய ஜனநாயகம் மதசார்பற்ற நிலையிலிருந்து சறுக்கலையே காட்டுகிறது.

இதே போன்ற சூழலில்தான் காஷ்மீரின் அரசியல்வாதியின் பெண்ணைக் கடத்துவதில் துவங்கிய பயம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்துவது வரை தொடர்ந்து தீவிரவாதத்தின் முன் இந்திய ஜனநாயகம் மண்டியிட்டுக்கொண்டது.

வவ்வால் said...

ராஜ்,

சிவாஜி, கமல், மருதநாயகம் எல்லாம் பின்னர் தொடர்கிறேன். இப்போ புது சரக்கு ல இறங்கியாச்சு :-))

//மைக்ரோஸ்கோபிக்கின் தமிழ்ப் பொருள் உருப்பெருக்கியா!அழகிய தமிழ் பதம் தந்ததற்கு முதற்கண் வணக்கம் உங்களுக்கு.//

உருப்பெருக்கி = magifying glass, ஆலமரம்,அரசமரம் இல்லை புளிய மரத்தடியிலோ கை ரேகை அழியாம இருக்கானு பார்த்து எதிர்க்காலத்தினை சொல்லும் விஞ்ஞானிகள் வைத்திருப்பது :-))

மைக்ரோ ஸ்கோப் = நுண்ணோக்கி , வெற்றுக்கண்ணுக்கு புலப்படாதவற்றையும் பெரிதாக்கி காட்டும்.எலெக்ட்ரான் மைக்கிரோஸ்கோப் =மின்னனு நுண்ணோக்கி, அணு,அணுத்துணை துகள்களையும் (sub atomic particle)பெரிதாக்கி காட்டும். இன்னும் தெளிவாக காட்ட எக்ஸ் கதிர் நுண்ணோக்கி. பிரதிபலிக்கும் ஒளி/ கதிரின் அலை நீளம் எவ்வளவு சின்னதாக இருக்கோ அவ்வளவு சிறிய துகளையும் பெருதாக்கி காட்டும் என்பது நுண்ணோக்கி செயல்படும் தத்துவம்.

புளுரேய் டிவிடி யும் இப்படித்தான் சிறிய அலை நீளம் அதிக சேமிக்கும் திறன் என்ற அடிப்படை.

தானியங்கிப்பின்னூட்டம் அபிராமி அந்தாதிப்போல முடிவில் இருந்து துவக்கமாய் போய்க்கொண்டே இருக்கே :-))

கோவி.கண்ணன் said...

//"எம்.எஃப் ஹுசைனை அரவணைத்து சல்மான் ருஷ்டியை கைவிடலாமா?"//

தாவூத் நோய்வாய்ப்பட்டு படுத்து இருக்கிறாராம், அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை செய்தால் ஒத்துழைப்போம், நீங்கள் குறிப்பிட்டவர்கள் மார்க்கத்திற்கு எதிரானவர்கள், பிற மதக்கடவுளை வரைவது தடுக்கப்பட்டு இருக்கிறது ஹுசைன் தவறு இழைத்துவிட்டார், ருஷ்டி மதத்தை விமர்சனம் செய்துவிட்டார்.

ஓசாமாவுக்கு சிறப்பு தொழுகை நடத்தியது போல் தாவூத் நலம்பெற தொழுவோம்.

:)

Radhakrishnan said...

நிறையவே பல விசயங்களை அலசி இருக்கும் பதிவுதான் இது. பின்னூட்டங்களும் பல விசயங்களை அலசி இருக்கிறது. நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை தவிர இரு தனி நபர்களின் செயல்பாடுகள் குறித்து என்ன சொல்வது என தெரியவில்லை. ஹூசைன் வரைந்ததை பார்த்ததும் இல்லை, சல்மான் ருஷ்டி எழுதியதை படித்ததும் இல்லை இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. வாழ்வில் எத்தனையோ இருக்கிறது என்கிறார்கள்!