Followers

Friday, April 27, 2012

புதிய ஈழ சகோதர சண்டைகள்!

சமீபத்தில் பதிவர் ஜாக்கி சேகர் அரசியலுக்கும் அப்பாலான அபி அப்பாவைப் பற்றி சொல்லியிருந்தார்.மனம் கனத்தது என்பதனை விட கண்கள் பனித்தன சொல் பொருத்தமாக இருக்கும்.ஆனால் அரசியல் என்று வரும் போது அபி அப்பாவின் தூணைக்கட்டிப் பிடித்துக்கொள்ளும் அடிவருடித்தனம் சொல்லி மாளாது.தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பான இணைய நீரோட்டத்தை ஆழம் பார்க்கும் முதல் மாதிரியாகவே அவரது பதிவு இருந்ததை புலம் பெயர் ஈழ தமிழர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் என்பதை பதிவுகளின் கோபங்களும்,பின்னூட்டங்களும் உரக்கச் சொல்லுகின்றன.யாருக்கு பின்னூட்டம் சொல்வது என்றே தெரியவில்லை.அதனால் பதிவர் செந்தில் சென்ற பதிவுக்கு இட்ட ஒற்றைப் பின்னூட்டத்திற்கான எனது மறுமொழியையே எனது பின்னூட்ட கருத்தாக மீண்டும் ஒரு முறை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயலலிதா,வை,கோ இன்னும் அரசியலில் உள்ள பலரையும் காலை வாரி விடுவதிலேயே கண்ணும்,மண்டையுமாக இருக்கிறார்.அது போலவே ஜெயலலிதாவும் கூட.ஏனையோரும் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு குறைந்தவர்களாயில்லை.அதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன என்பது வேறு விசயம்.ஆனால் நான் மையப் படுத்த நினைப்பது தமிழர்களிடையே நிகழும் சகோதர சண்டைகளை.இணையமும் குறைந்ததாக இல்லையென்பதை பதிவுகளும் படம் போட்டுக் காண்பிக்கின்றன.இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.இப்படியான சிதறிக் கிடக்கும் தமிழர்களின் நிலையே இலங்கை அரசின் பலமாக அமைகிறது.

இன்றைய நிலையில் ஈழப்பிரச்சினை பல பரிமாணங்களை உட்கொண்டது.

1.தமிழகம் சார்ந்த அரசியல் மற்றும் மக்கள் குரல்களைப் பிரதிபலிப்பது.
2.இந்தியா மத்திய அரசின் இலங்கை  இரட்டை வெளிநாட்டுக்கொள்கைகள்
3.புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் அதன் எதிர்ப்பு நிலை
4.இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு விதமான  பிரதிபலிப்பு
5.அன்றாட வாழ்வில் சிரமப் படும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்
6.மனித உரிமைக் குழுக்களின் போர்க்குற்றங்களுக்கு எதிரான குரல்கள்
7.இலங்கை அரசுக்கு எதிரான சிங்களவர்களின் குரல்
8.அமெரிக்கா,சீனா,ரஷ்யா,இந்தியாவின் சுயநல உலக அரசியல்
8.இவை அனைத்தையும் பின் தள்ளிவிடும் போக்கான ராஜபக்சே அரசு.
9.ஐ.நா என்ற அமைப்பின் ஆமை வேகம்
10.தனி தமிழீழமா?ஒற்றைக் குடியரசா என்ற புதிர்

மேற்சொன்ன 10 பெரும் வளையத்துக்குள் ஒப்பிட்டால் சகோதர சண்டைகள் ஒரு பொருட்டானதே அல்ல.ஈழப்பிரச்சினை இப்பொழுது உலக அரங்கிற்குள் வந்து விட்டதால் மேற்கொண்டும் தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிப்போம்

கவிஞர் தாமரையின் இந்த காணொளி காணவும்.

http://www.colombotelegraph.com/index.php/thamarai-on-un-resolution-against-sri-lanka/.




30 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது.

வவ்வால் said...

கம்பும் உடையக்கூடாது பாம்பும் சாகக்கூடாது :--))

வருண் said...

எதோ ஒப்புக்கு, உங்களை நியாயஸ்தராக, நல்லவராகக் காட்ட, ஒரு தலைப்பைக் கொடுத்துப்புட்டு உங்க "சுயஆசை"யை எல்லாம் எழுதி (என்றுமே நிற்காத எம் ஜி ஆர் ஜால்ரா, கருணாநிதி வெறுப்பு) தீர்த்துக்கிட்டிங்க போல இருக்கு.

***ஆனால் அரசியல் என்று வரும் போது அபி அப்பாவின் தூணைக்கட்டிப் பிடித்துக்கொள்ளும் அடிவருடித்தனம் சொல்லி மாளாது.***

அபி அப்பாவைப்போல் நெறைய தீவீர பிரபல கழககண்மணிகள் இருக்காங்களே!! அவங்களை எல்லாம் இதேபோல் நீங்க விமர்சிச்சா ஆட்டொ வந்துடும்னு பயமா? ரொம்ப கவனமாத்தான் நீங்களும் இருக்கீங்க! இது மாதிரி அரசியலில் கருணாநிதியைவிட நீங்க எந்த வகையில் குறைவானவர்???

***இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு**

என்னங்க இது!!! இதெல்லாம் எதுக்கு இப்போ???பாவம் ரொம்பதான் நீங்க மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கீங்க இந்த மேட்டர்ல!!!

ரொம்ப தரக்குறைவான பதிவு இது ராஜநடராஜன் இது- உங்க உயர் லெவலுக்கு! :(

suvanappiriyan said...

//இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.//

இதில் நாஙகள் வந்து என்ன தீர்வை கண்டு விட முடியும் என்று நினைக்கிறீர்கள். கொஞ்சம் விபரமாக சொன்னால் தெரிந்து கொள்வேன்.

வருண் said...

நடராஜன்: ராஜிவ் இறக்கும் முன்னால தமிழ்நாட்டில் தி மு க ஆட்சி நடந்தபோது ( உங்க தொப்பி போய் சேர்ந்த பொறகுதான்) திமுக ஈழத்தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவா இருந்ததா இல்லையா?

ராஜிவ் மரணத்திற்கு பிறகுதான் எல்லா நிலைப்பாடும் மாறியது. இதை எத்தனை தடவைத் திருப்பித் திருப்பிசொல்றது???
ராஜிவ் மரணத்திற்கு பிறகு உங்க எம் சி யாரே உயிரோட இருந்து இருந்தாலும் ஒண்ணும் கிழிச்சு இருக்க முடியாதுனு தெரிந்து கொண்டு ஏன் நடிக்கிறீங்கனு தெரியலை!!

சரி, இன்னைக்கு கருணாநிதி ஆதரவு "கேலிக்கூத்து"னே இருக்கட்டும். அப்போ அமெரிக்கா ஆதரவும் அதே நிலைப்பாடுதான். போர்க்குற்றம் சம்மந்தமான எதற்காக அமெரிக்க ஆதரவைமட்டும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்றீங்க? அதையும் புறக்கணிக்க சொல்ல வேண்டியதுதானே முறை? It is ridiculous you guys accept America's support after all these things happened! It was not there for helping ezha thamizS then!!!

பார்ப்பாணுகளுக்கு அடுத்து கருணாநிதியை வெறுக்கும் கும்பல் நிரந்தர உறுப்பினர்தான் நீங்க. ஆனா என்னவோ ஏதோ நீங்க நியாயத்தின் பக்கம் இருப்பதுபோல போடுவதெல்லாம் வெறும் நாடகம், உங்க அரசியல், அம்புட்டுத்தான். தொடர்ந்து கருணாநிதிக்கு எதிர் பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறென்ன பேசத்தெரியும் உங்களுக்கு?

ஹேமா said...

நடா....அழுத்தம் இல்லை உங்கள் பதிவில்.இது நடாதானா ?!

ராஜ நடராஜன் said...

நண்டு வணக்கம்!மொத்த பின்னூட்டங்களையும் பார்த்து விட்டு கருத்து சொல்லலாமே என்று உங்கள் முதல் பின்னூட்டம் கண்டும் பேசாமல் இருந்து விட்டேன்.பின்னாடி வர்றவங்க வடிவாத்தான் கதைக்கிறாங்க!என்னன்னு பார்த்து விட்டு வருகிறேன்:)

முதல் போணிக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்!நலமாக இருக்கிறீர்களா?

கம்பு உடையக்கூடாது சரி!பாம்பும் சாகக்கூடாதுன்னா எப்படி:)புதுமொழியா இருக்கே!

நீங்களும்,வருணும் வந்தாத்தான் நம்ம கடை கச்சேரி களை கட்டும் போல:_

ராஜ நடராஜன் said...

வருண்!எப்படி இருக்கீங்க?பதிவையும் காணோம்,பதிவர்களுக்கு குஸ்தி பின்னூட்டங்களையும் காணோம்!

இலை மறை காயாக இருக்கும் நமக்கு எப்படியோ ஒரு பிம்பம் ஏற்படுத்துறதுக்கு நன்றி.ஆனால் அ.தி.மு.க அனுதாபி பிம்பம்தான் சகிக்கல.கலைஞர் கருணாநிதி என்னதான் தகுடுதத்தங்கள் செய்தாலும் அரசியல் அனுபவஸ்தன் என்பதுதான் எனது நிலைப்பாடு.ஒருவரை விமர்சனம் செய்வதாலேயே மாற்று அணிக்காரன் என்று பட்டம் கட்டுவது தவறான அரசியல் விமர்சனம்.

கண்ணுல படுற் பதிவுகளுக்குத்தான் விமர்சனம் செய்ய முடியும்.அபி அப்பா உஸ்தாதா பிள்ளைப்பூச்சியா என்ற வரலாற்றுப் பாடங்களையெல்லாம் நான் படிக்கவேயில்லை.அவரது பதிவுகளின் கருத்துக்கள் மட்டுமே இங்கே விமர்சனம்.தனி மனிதனாக அவரது குணங்களின் சிறப்பை ஜாக்கிசேகர் சொன்னதே அவருக்கான அங்கீகாரம்.நம்ம ஊர்ல ஆட்டோவெல்லாம் கிடையாதுங்க வருண்.ஒரு சுமோ மாதிரி ஏதாவது SUV வந்துடுமான்னு பயமான்னு கேளுங்க:)இங்கே பொதுக்கருத்துக்களை முகம் மறைக்காமல் துணிந்து வெளியிடுவதன் காரணம் நீங்க சொல்லும் ஆட்டோ கலாச்சாரமெல்லாம் ஒழியனும் என்றுதானே?நமக்கு அரசியல்,மதம் போன்றவை தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரிதான்.அதனால கருணாநிதியோடு இணைத்து வடிவேலு பில்டப்பெல்லாம் எனக்கு கொடுக்காதீங்க:)

போன தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்னாடி நான் அரசியல் பதிவு அதிகம் சொன்னதாகவே நினைவில்லை வருண்!

***இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு** இதுக்கும் என் மனநிலை பாதிப்புக்கும் என்னங்க சம்பந்தமிருக்குது?

எது தரம் எது தரமில்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.அதனை எனது 300க்கும் மேலான ஆமை வேக பதிவுகளும்,பின்னூட்டங்களும் நிரூபணம் செய்யும்.

மறுபடியும் ஏதோ சொல்றீங்க போல தெரியுது!அடுத்த ரவுண்டுல கண்டுக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

வணக்கம் சகோ சுவனப்பிரியன்!மதம் ஒரு தனி மனிதனுக்கும் ஆன்மீகத்துக்குமான உறவு என்ற வரையில் எனக்கு ஆட்சேபனையில்லை.தன்னம்பிக்கையில்லாத பலருக்கும் மதம் ஆன்மீகம் நோக்கிய ஊன்றுகோல் என்ற அளவை தாண்டி மதமின்றி மார்க்கமில்லை என்ற வியாபார கலாச்சாரம் எனக்கு உடன்பாடனதல்ல.

சமூகம் சார்ந்து மனிதனைப் பாதிக்கும் விசயங்களில் அக்கறை கொள்வதே சிறந்த மனிதாபிமானமாகும்.வெறுமனே மதம் என்ற ஒற்றைக்கோட்டில் மட்டுமே மனிதாபிமானம் காட்டுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

இனி உங்கள் கேள்விக்கான மறுமொழி.பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்களின் ஈழநிலைப்பாடு என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஈழப்போராட்டத்தில் பல சறுக்கல்கள்,தவறுகள் இருக்கலாம்.ஆனால் அந்த தவறுகளின் அடிப்படையிலேயே ஒரு விடுதலைப் போராட்டத்தை நோக்குவது நியாயமான ஒன்றல்ல.

இலங்கையின் தம்புள்ள மசூதி பற்றி உங்களில் யாராவது பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.சிங்கள அடிப்படைவாதிகளின் மத,இன இணக்கமற்ற முகம் இப்பொழுதாவது தெரிகிறதா?

இதில் இன்னும் பல சூட்சுமங்கள் உள்ளன.இது குறித்து உங்களால் கருத்து வெளியிட முடியாதபடியான சூழலில் இருக்கிறீர்கள்.

இந்த பிரபலமான வரிகளை இங்கே சொல்வது உங்கள் கேள்விக்குப் பொருத்தமாக இருக்கும்.

முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.

பிறகு அவர்கள் தொழிற்சங்க வாதிகளுக்காக வந்தார்கள்.

நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.

அடுத்து அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

நான் பேசவில்லை ; ஏனென்றால் நான் யூதன் இல்லை.

அடுத்து அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.

ராஜ நடராஜன் said...

வருண்!நம்ம கச்சேரியை மறுபடியும் துவங்கலாம்:)

நான் பதிவர் செந்திலுக்கு சொல்லிய மறுமொழி சுட்டியைப் படித்தீர்களா இல்லையா?ப்டிக்கலேன்னா அல்லது புரியலைன்னா மறுபடியும் ஒரு தடவை படிச்சிட்டு....

//திமுக ஈழத்தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவா இருந்ததா இல்லையா?//

என்ற கேள்வியை கேளுங்க.

சிவாஜி ரசிகனான என்னை எப்படியோ எம்.ஜி.ஆர் ரசிகனாக்க முயற்சி செய்றீங்க என்பது உங்க எம்.சி.ஆர் சொற்பதத்திலேயே புரியுது.இருந்தாலும் ராஜிவ் மரணத்திற்கு பிறகு உங்க எம் சி யாரே உயிரோட இருந்து இருந்தாலும் ஒண்ணும் கிழிச்சு இருக்க முடியாதுனு என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடே!எனவே நடிப்பரசன் பட்டமெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்:)

கருணாநிதி ஆதரவு கேலிக்கூத்துன்னு நீங்கதான் சொல்றீங்க நான் சொல்லவில்லை.மறுபடியும் பதிவர் செந்திலுக்கு சொன்ன முந்தைய பதிவின் பின்னூட்ட மறுமொழியைப் படிங்க.இருந்தாலும் இங்கே கருணாநிதியின் ஆதரவு நிலையை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.காரணம் பதவியின் வலிமையில் இருந்த காலத்தில் மானாட மயிலாட கலாச்சார நிகழ்வுகளில் கவனம் செலுத்தி விட்டு இப்பொழுது எதிர்க்கட்சி தகுதி கூட இல்லாத காலத்தில் ஆற அமர்ந்து உட்கார்ந்து ஈழ ஆதரவை வெளிப்படுத்துவது பலருக்கும் எரிச்சலையே உருவாக்கும்.ஆனால் அதனையும் கடந்து கலைஞர் கருணாநிதி என்ற சொல்லின் மீது அபிமானம் கொண்ட பல தி.மு.க தொண்டர்களின் ஆதரவுக்குரல் ஈழ விடுதலைக்கு தேவையென்ற காரணத்தால் அவரது அரசியல் சுயநலம் கலந்த காரணமாக இருந்த போதிலும் கருணாநிதியின் தமிழீழ கருத்தை வரவேற்கிறேன்.

ஜாதி,இன வேறுபாட்டு வெறுப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் உங்கள் இறுதி வாக்கியங்களின் கருத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன்:)

ராஜ நடராஜன் said...

ஹேமா!திட்டுவதோ,கோபம் கொள்வதோ தீர்வுகளுக்கு வழியல்ல என்பதால் இந்த பதிவு மந்தமாக இருக்க கூடும்.

புஸ் என்றால் ஊதி விடக்கூடிய இலங்கை நிலைப்பாட்டை வெற்றிகொள்ள முடியாமல் போவதற்கு நமது சகோதர சண்டைகளே முக்கிய காரணம்.

வவ்வால் said...

ராஜ்,

நலமே, நலமா? ஆணிப்புடுங்க அல்லது ஓட்டக பராமரிப்புக்கு போய்ட்டிங்களோனு நினைச்சேன் :-))

எல்லாம் பழைய மொழி தான் பாம்புக்கு உயிர்ப்பிச்சை அளித்து அதே சமயத்தில் அது உள்ளே வராமல்ல் தடுத்தால் போதும் என கோலாட்டம் ஆடுறது தான்.

எல்லாம் ஒரு மாதிரிக்கு செய்வது தான் ;-))

இலங்கை தமிழர் பிரச்சினையைப்பேசினால் அதிக ஓட்டு தமிழ்நாட்டில் கிடைக்கும் எனில் இந்நேரம் வைகோ முதல்வர் ஆகி இருக்கணும் ஆனால் அவருக்கு ஒரு எம்.எல்.ஏ இடம் கூட இல்லை :-))

அப்புறம் ஏன் இந்த வெத்து அரசியல் கோஷம் எல்லாம் ஒரு ஆல் ரவுண்டு பெர்ஃபார்மென்ஸ் காட்ட தான் :-))

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் படமா இருந்தாலும் காமெடிக்கு, அம்மா/அக்கா செண்டிமென்ட், காதல் என எல்லாத்துக்கும் கொஞ்சம் இடம் கொடுப்பது போல தமிழக அரசியல்வாதிகள் இலங்கைப்பிரச்சினையை இழுத்துப்போட்டுக்கொள்கிறார்கள், சமயத்தில் பின்நெருப்பாக மாறி சுட்டு விடுகிறது.

-----
நாம என்ன தான் நடுநிலைனு சொல்லிக்கிட்டாலும் சாயப்பட்டறை அதிபர்கள் கை சும்மா இருக்காது சாயத்த பூசி மகிழ்வார்கள், வருணும் சாயப்பட்டறை அதிபர் போல ,ஆனாலும் அவருக்கு ரொம்ப துணிச்சல் தான் வாயக்கொடுத்தா வாங்கிக்கட்டிப்போம்னு தெரிஞ்சும் மீண்டும் ஆரம்பிக்கிறார்... ஒரு ரவுண்டு கட்டலாமானு பார்க்கிறேன் முழுசா உள்ள வரட்டும் மடக்கிப்போட்டு "தெளிய" வச்சிடலாம் :-))
-----

ராஜ நடராஜன் said...

வவ்!வந்துட்டீங்களா!மிக்க மகிழ்ச்சி.
நமக்குத்தான் இணையம் சார்ந்த ஒட்டகம் மேய்க்கிற வேலையாகிப்போச்சே,அப்புறமெங்கே இதனை விட்டு ஓடி விடுவது.பதிவுகள் போடுவதை விட கூகிளை சுற்றிகிட்டு இருக்கிறேன்.நமக்கென்ன ஹிட் கணக்கா அல்லது பதிவு ஏத்தனுமின்னு நினைப்பா:)

உங்களின் பின்னூட்டங்களை பதிவர் கந்தசாமி மற்றும் மதுரன் பதிவுகளில் கண்டேன்.அதில் எதிர்மறையான கருத்தாக இருந்தாலும் விளம்பரம் தேடிக்கொள்வார்கள் என்ற கருத்து பிடித்திருந்ததோடு அதுவே உண்மையும் கூட.ஒரு வேளை மனித மனநிலையும் கூட அப்படியே செயல்படக் கூடும்.

// இலங்கை தமிழர் பிரச்சினையைப்பேசினால் அதிக ஓட்டு தமிழ்நாட்டில் கிடைக்கும் எனில் இந்நேரம் வைகோ முதல்வர் ஆகி இருக்கணும் ஆனால் அவருக்கு ஒரு எம்.எல்.ஏ இடம் கூட இல்லை :-))//

வை.கோ பற்றிய உங்கள் பின்னூட்டம் ஒரு விதத்தில் உண்மையென்ற போதிலும் அவரது குழப்ப அரசியலே அவருடைய தற்போதைய அரசியல் வாழ்க்கைக்கு காரணமெனலாம்.அதில் முக்கியமான ஒன்று பொடாவில் ஜெயா போட்டும் கூட அவரிடம் போய் உடனே ஒட்டிக்கொண்டதும்,ஒரு சில சீட்டு வித்தியாசங்களுக்காக தி.மு.கவை விட்டு அ.தி.மு.க போன சந்தர்ப்பவாத அரசியலையும் குறிப்பிடலாம்.

இன்றைய கலைஞரின் தமிழீழம் அறிக்கையை விடுங்கள்.மே 2009ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுமாறன்,ராமதாஸ்,திருமாவளவன்,கம்யூனிஸ தோழர்களை ஒன்றிணைத்திருக்கலாம்.அவருக்கான அரசியல் நிலைப்பாடா அல்லது ஈகோவா அதிலும் தவறியதிலும்,தொடர்ந்து ஈழ உணர்வாளர்களை ஒன்று திரட்டாமல் போனதும் கூட வை.கோவின் ஓட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு காரணம் எனலாம்.ஆனாலும் அவருக்கான ஈழக்குரலை மறுப்பதற்கில்லை.

இந்தமுறை கருணாநிதி தமிழீழ அறிக்கையை வெளியிடுவதில் வரும் பாராளுமன்ற தேர்தல் என்பதோடு பதவியும்,விழாக்களும் இல்லாத சூழலில் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டுமென்ற இறுதிகால ஆசையாக கூட இருக்கலாம்.அப்படியிருந்தால் காலம் கடந்த ஒன்றாக மட்டுமில்லாமல் அவரது அறிக்கையின் மீதான நம்பிக்கையின்மையையே உருவாக்குகிறதென்பதை பதிவுகள்,பின்னூட்டங்களின் பிரதிபலிப்பு வெளிப்படுத்துகின்றன.

நாம நடுநிலைமையில்லை என்றாலும் கூட அவ்வப்போது ஏற்படும் அலைகளுக்கு ஏற்பவே படகு ஓட்டுகிறோம்.ஆனால் தூரத்துல துடுப்பு போடும் நண்பர் வருணின் மாலை கண்ணுக்கு அ.தி.மு.க கொடிதான் கண்னுக்கு தெரியுது:)

நீங்க அவரை ‘தெளிய” வைக்க வேண்டிய அவசியமேயில்லை.அவருக்கு ஈடு கொடுக்கிற ரெண்டு பேர் நாம் இருவர்தான்:)

THE UFO said...

;.;.///இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.///.;.;.;

நடுவீட்டிலே பொணம் கிடந்தாலும், திருடனுக்கு கண்ணெல்லாம் நெத்தியிலே ஒட்டி இருக்கிற ஒத்த ரூவா மேலேதான் ங்கிற மாதிரி, இருக்கு நீங்க ஊடால சொன்ன இந்த விஷயம்.

இவுக சொல்ற பதிலுலதான் இப்போ பதிவுலக பிரச்சினைக்கு எல்ல்லாம் தீர்வு இருக்கும் என்று நினைக்கிறீர்களா என கேட்க வந்தால், ஏற்கனவே சொர்க்கப்பிரியன் கேட்டுட்டார்.

சரி, அதுக்கு 'இப்படி கருத்து சொல்லனும் அப்படி சொல்லனும்' னு என்ன பதில் சொல்லி இருக்கீங்கன்னு பார்த்தா, ஒஹ் ஒஹ் ஒஹ் ஒண்ணுமே இல்லை.

பேசாம வௌவால் சொன்ன மாதிரி, இந்த பதிவு எழுதறதுக்கு பதிலா நாலஞ்சு ஒட்டகத்தை உருப்படியா மேச்சி இருக்கலாம். வாயில்லா சீவனுங்க வாழ்த்தி இருக்குங்க,

வருண் said...

***இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயலலிதா,வை,கோ இன்னும் அரசியலில் உள்ள பலரையும் காலை வாரி விடுவதிலேயே கண்ணும்,மண்டையுமாக இருக்கிறார்.**

///சிவாஜி ரசிகனான என்னை எப்படியோ எம்.ஜி.ஆர் ரசிகனாக்க முயற்சி செய்றீங்க என்பது உங்க எம்.சி.ஆர் சொற்பதத்திலேயே புரியுது///

சிவாஜி ரசிகராக நீங்க இருப்பது இந்த வாதத்துக்கு தேவையே இல்லாத ஒண்ணூ. You must keep that aside here.

You are an MGR fan than an MK fan!

You are a JJ fan than an MK fan!

That's all matters here! So, please know about yourself. you are an MGR fan. That is whay you always worried about how he was "not treated fairly" by MK.

------------

I am VERY busy these days. Cant satisfy vavvaal's desire for now!

Take care!

THE UFO said...

=///=இலங்கையின் தம்புள்ள மசூதி பற்றி உங்களில் யாராவது பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.=///=

அடடா!

ஏனுங்கோ, பாதிக்கப்பட்டது தமிழர்கள். நீங்களும் தமிழர் என்று தான் நினைக்கிறேன். அப்புறம், இந்த பதிவை நீங்கள் போட்டால் என்ன?

ஒருத்தன் என்னதான்/நல்லவன் நீதிமான் வேஷம் போட்டாலும் அவனின் வார்த்தைகளும் எழுத்துக்களும் அவன் யார் என்று வேஷம் கலைத்து விடும்.

போங்க சார். முதலில் தமிழ் பேசும் அனைவரையும் தமிழர்களாக நினையுங்கள். இவன் மசூதி இடிபட்டால் இவன்தான் பதிவு போடணும். அவன் செத்தால் அவன்தான் கத்தனும். நமக்கென்ன. என்று நீங்கள் நெனக்காதீர்கள்.

அப்போது உங்களுக்காக அழ எவரும் வரமாட்டார்.

ராஜ நடராஜன் said...

Hi UFO!

ஒரு பதிவு மட்டும் போட்டுவிட்டு காணாமல் போன மாதிரி தெரிகிறதே:)

பதிவும்,பின்னூட்டங்களும் பல விசயங்களை தொட்டுச் செல்கின்றன.அத்தனையையும் விட்டு விட்டு நீங்கள் நெத்தியில இருக்குற ஒத்த ரூவா உதாரணம் சொல்வதன் மூலம் உங்கள் கண் எங்கே இருக்குதுன்னு புரியுது:)

அவுக சொல்ற பதிலில் தீர்ப்புக்கள் இல்லாவிட்டாலும் கூட உங்கள் உதாரணப்படி ஒப்பாரி வீட்டில் கூட சேர்ந்து துக்கம் விசாரிப்பதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.இவுக வீட்டுலதானே சாவுன்னு நினைச்சு ஒதுங்கியிருந்தா அவுக வீட்டையும் அண்ட ஆட்கள் இருக்காது.இப்போது அதுதான் நடக்குது.

சகோ.சுவனப்பிரியன் கேள்விக்கு பதிலை சொல்லியிருக்கிறேன்.புரியாமல் போனால் நான் பொறுப்பல்ல.

சுவனப்பிரியனிடமே இது என்னங்க பேர் என்று கேட்டிருந்தேன்.அவரும் பொறுமையாக அதற்கு மறுமொழி சொல்லியிருந்தார்.இருந்தாலும் சொர்க்கப்பிரியன் கேட்க அழகாக இருக்கிறது.சொற்பதத்திற்கு சுவனப்பிரியன் நன்றி சொல்லலாம்.

வேண்டாம் விட்டுடுங்க!வவ்வால் கடிக்கும்:)மதம் என்ற ஒற்றைக்கோட்டை மட்டும் பற்றிக்கொண்டு ஸ்டார் வார் செய்வதை விட ஹாயாக ஒட்டகம் மேய்ப்பது சுகமான விசயம்:)ஒட்டகத்துக்கு புல்லு போட வேண்டாம்.பெட்ரோல் ஊத்த வேண்டாம்.அது பாட்டுக்கு சுதந்திரமாக மேயும்.கொஞ்சம் தண்ணி மட்டும் காட்டுனா உங்க பாரம்,என்னோட பாரத்தையும் சேர்ந்து சுமக்கும்:)

இன்னுமொரு பின்னூட்டத்துல என்னமோ சொல்றீங்க போல இருக்குது.நம்ம வருணைக் கண்டுகிட்டு பதில் சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

வருண்!வவ்வால் சொன்ன மாதிரியேதான் பின்னூட்டம் போடுறீங்க!நான் எங்கே எந்த பதிவில் எம்.சி.ஆரை பச்சை குத்திக்கொண்டேன்:)

என்னோட வாயைக் கிளறுமின்னே பின்னூட்டம் போடுறீங்களா:)

I think you got a hidden agenda on me!

நம்ம பதிவு ஹிட் கணக்கு தளம் இல்லாத காரணத்தால் உங்களுக்கு எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப சண்டைக்கு வாங்க:)

ராஜ நடராஜன் said...

UFO!

நீங்க சொல்ற மாதிரியே நீங்க பதிவுகள் போடா விட்டாலும் நீங்க தொட முயற்சிக்கும் இரண்டு பின்னூட்டங்களிலிருந்து உங்கள் வேஷமும் கலைகிறது.

தம்புள்ள விசயம் என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த விசயம்.ஆனால் பதிவு போடுவதற்கான நேரமும் உந்துதலும் இல்லை.ஆப்கானிஸ்தானில் நின்ற பாமியன் சிலைகளுக்கு பதிவிட்ட மனநிலையே சிங்கள அடிப்படைவாதிகளின் மத இணக்கமற்ற செயலுக்கும்.

நீங்க அழ வராவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவன் துயரத்துக்கு அழும் மனிதாபிமானம் என்னிடம் நிறைந்தே இருக்கிறது.எனவே
குறைந்த பட்சம் இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கான குரலை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

கொஞ்சம் கால நேரக்கோளாறுகளால் உடனடியாக பின் தொடர்வதில்லை, ஆனால் நத்தை போல தொடர்ந்து கண்ணாடி இழை வடத்தின் மீது ஊர்ந்து கொண்டே இருக்கிறேன் ,விடுவதாயில்லை :-))

மு.க மீது சொன்னது எதிர் மறையாக இருப்பினும் அதற்கான காரணம் நானல்ல அவரே ,அன்னாரது நம்பகத்தன்மை பதங்கமாதல் போல ஆவியாகி கன காலம் ஆச்சு, இப்போது எனது உயிர் மூச்சு தனி ஈழம் தான் என்றால் ...மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா என வடிவேலு போல மக்கள் நகைச்சுவை ஆக்கி விடுகிறார்கள்.80 களில் ஒரு நிலைப்பாடு இருந்தது இல்லை எனவில்லை பின்னர் எல்லாம் சுயநலமாகவும், சந்தர்ப்பவாதமாகவும் மாறிப்போனதை மு.க வின் நெஞ்சுக்கு நீதியே ஒத்துக்கொள்ளும் .

ஷகிலாவின் ரசிகனுக்கு அசினோ ,அனுஷ்காவோ சப்பை பிகராக தான் தெரியும் ,ஷகிலாவே பிரமாண்ட பிரபஞ்ச பேரழகியாக தெரிவார், அதே போல மு.கவின் அல்லக்கைகளுக்கு அவரே தன்னிகரில்லா தானைத்தலைவனாக தெரிவதில் வியப்பில்லை ஆனால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,இல்லை எனில் நாசமாக போவீர்கள் என தெருவில் வித்தைக்காட்டும் மோடி மஸ்தான் ரத்தம் கக்கி சாவீர்கள் என சொல்வது போல சொன்னால் எப்படி.

சிலர் கண்டுக்காம விடலாம் எல்லாரும் விடுவார்களா அதான் சிலர் வளைச்சுப்போட்டு கும்மிட்டாங்க :-))

------
வைகோ குறித்து நீங்கள் சொன்னது அத்தனையும் சரியே, அதே சமயத்தில் தீவிரமாக ஈழப்பிரச்சினை பேசுகிறாரே என அவரையாவது வெற்றிப்பெற வைத்திருக்கலாமே ஏன் இல்லை, காரணம் தமிழக அரசியலில் ஒற்றைப்பிரச்சினையை மட்டும் பேசினால் வேலைக்கு ஆகாது அதுவும் ராமாதாசருக்கு அடுத்தப்படியாக அதிக பல்டி அடித்த வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகப்பட்டுவிட்டதால் அவரது வாய்ஜாலத்துக்கு மக்கள் செவி மடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழ்நாட்டில் நிலவும் 100 பிரச்சினைகளில் ஈழப்பிரச்சினையும் ஒன்று ஆனால் அந்த ஒன்றை வைத்தே இங்கே அரசியல் செய்து வெற்றிக்காண முடியாது.அய்யா ,அம்மையார் எல்லாம் ஊறுகாயாக தொட்டுக்கொண்டு நாங்களும் சும்மா இல்லைனு காட்டிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்பதே உண்மை.

அதுவும் அய்யாவுக்கு ஆட்சி அதிகாரம் போய்விட்டால் இந்த ஊறுகாய் அதிகம் தேவைப்படும் :-))
******
UFO or UBO(unidentified blogging object),

உங்களை எல்லாம் மேய்க்கும் போது ஒட்டகம் மேய்க்கப்படாதா ஒட்டகம் ரொம்ப நல்ல பிராணி என்ன கொஞ்சம் கப்பு அடிக்கும் அத எல்லாம் ஏன் மோந்துப்பார்க்கணும் , உங்களைப்போல விஷக்கடிக்கு எல்லாம் நாட்டு வைத்தியம் கைவசம் இருக்கு எனவே அதுக்கு எல்லாம் அசரக்கூடிய ஆளுங்க இல்லை நாங்க.

தமிழர்கள் என எல்லாம் ஒட்டுக்கா சேர்த்து தான் கொரல் கொடுக்கணும் சொல்றிங்கலே அது ரொம்ப நாயமான பேச்சுங்கண்ணா ஆனால் இப்படி இந்தியாவில் நடந்துவிட்டால் நீங்க என்னமா கூவுவிங்கண்னு ரோசணை செய்தாக்க இப்போ ஏன் கூவாம கீறிங்கண்ணு ஒரே கொயப்பமா இருக்குங்கண்ணா, இலங்கையில நீங்க இல்லாங்காட்டியும் ராசபட்சாவைபார்த்து நீங்க ரொம்ப மெர்சலாகிட்டிங்கண்னு தெரியுது, இல்லை நமக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல ஈழ தமிழனுங்க ரெண்டு கண்னையும் நொள்ளையாக்குன மவராசன நோவடிக்க கூடாதுன்ற உங்க நல்ல மனசும் தெரியுதுங்கண்ணா :-))
------

வவ்வால் said...

ராஜ்,

சாயப்பட்டரை காரங்க இப்படிலாம் பேசலைனா தான் ஆச்சர்யப்படணும் , வருண் உங்களை அகில உலக எம்சிஆர் ரசிகர் மன்ற தலைவரா ஆக்காமல் விட மாட்டார் போல இருக்கு, கூடவே செயலலலிதா பேரவைக்கும் பொறுப்பு கொடுக்கிறார் பாருங்க மனுஷன் கில்லாடி தான் போங்க.

இதை வச்சு கவுன்சிலர் சீட் கிடைக்குமானு ஒரு முயற்சி செய்து பாருங்க :-))

நீங்க சிவாசி ரசிகர்னு சொன்னதும் டெல்லி அன்னையின் "கை"புள்ள னு ஒரு முத்திரை குத்தாம விட்டாரேனு சந்தோஷப்பட்டுக்கலாம் :-))

ஹோலி பண்டிகை போல கையில பீச்சாங்குழலில் சாயம் எடுத்துக்கிட்டு அலையறதே ஒரு கும்பலுக்கு வேலையா போச்சு யார் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு சாயம் அடிச்சுடுறாங்க, அனேக சாயம் பூசுவோர் சங்க தலைவர் வருணா தான் இருப்பார்னு நினைக்கிறேன் :-))

----
வருண் , ரொம்ப பிசியா இருந்தா பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது வாங்க சாவகாசமா ஆட்டத்தை ஆரம்பிக்கலாம், ராஜ் முன்னரே சொன்னது போல ஹிட் , முதலிடம் இதுக்காக எல்லாம் முக்குற ஆளுங்க இல்லை ,எனவே எப்போதும் இலவச மடம் போல அடையா நெடுங்கதவுகள் வருக வருக என வரவேற்கும், வரவங்க நோக்கத்திற்கு ஏற்ப நல்லா "கவனிச்சு" அனுப்புவோம் :-))

------
//மே 2009ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுமாறன்,ராமதாஸ்,திருமாவளவன்,கம்யூனிஸ தோழர்களை ஒன்றிணைத்திருக்கலாம்.அவருக்கான அரசியல் நிலைப்பாடா அல்லது ஈகோவா அதிலும் தவறியதிலும்,தொடர்ந்து ஈழ உணர்வாளர்களை ஒன்று திரட்டாமல் போனதும் கூட வை.கோவின் ஓட்டு அரசியல் எடுபடாமல் போனதற்கு காரணம் எனலாம்.ஆனாலும் அவருக்கான ஈழக்குரலை மறுப்பதற்கில்லை.//
ராஜ்,

இதை குறிப்பிட்டு சொல்லணும் என நினைத்தேன் மறந்துவிட்டேன்,2009 காலக்கட்டத்தில் ஈழத்திற்காக உயிர் நீத்த முத்துக்குமாருக்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை அமிஞ்சிக்கரை புல்லா அவென்யுவில் நடந்தது மேற்கண்டவர்கள் அனைவரும் ஒன்றாக கலந்துக்கொண்ட கூட்டம் அது(அனேகமாக கடைசியானதும் அதுவே என நினைக்கிறேன்)

ஒன்றாக கலந்துக்கொண்டாலும் தனி தனியாக யார் அதிகம் குரல் கொடுத்தார்கள் என நிறுவுவதிலேயே அனைவரும் குறியாக இருந்தார்கள், யாருக்கும் ஒன்றாக செயல்ப்பட வேன்டும் என்ற எண்ணமே இல்லை, அதுவும் பார்வையாளர்களாக வந்தவர்களும் அவங்க அவங்க தலைவர்கள் பேசும் போது மட்டும் கை தட்டினார்கள். எனவே எல்லா வகையிலும் தனித்தீவாக இருந்தார்கள்.

யாரை முன்னிறுத்துவது என்பதில் ஒருமுகமாக முடிவு செய்யப்பட முடியவில்லை, இதனாலேயே பலவீனப்பட்டுப்போனது.

அப்போதெல்லாம் இரவு 1 மணி வரைக்கும் கூட நடக்கும் கூட்டங்களுக்கு போவதுண்டு , இப்போதெல்லாம் கண்டுக்கொள்வதேயில்லை.

இப்போது சிறையில் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் ,முருகன் ,பேரறிவாளன், சாந்தன் வழக்கில் கூட பிரிவிணை , ஈகோ மோதல்கள் நடக்கிறது.பேரறிவாளன் வழக்கை வைகோவும், மற்ற இருவர் வழக்கை சீமானும் நடத்துகிறார்கள், ஜெட்மலானி மூன்று பேருக்கும் வாதடலம் என சொன்னப்போது சீமான் ஏற்றுக்கொள்ளவில்லை என செய்தி, வைகோ அமர்த்திய வக்கீல் எனவே எங்கள் சார்பாக ஒரு வழக்கறிஞரை சேர்த்து வாதாட சொல்லி கடைசியில் தனி தனியாக தான் வாதிட்டார்கள்.இந்த அளவுக்கு தான் ஈழ அரசியல் செய்பவர்களின் ஒற்றுமை :-))

ராஜ நடராஜன் said...

வவ்!நீங்க வேற!நானே பதிவு போடுற களைப்பில பதிவைப் போட்டு விட்டு பின்னூட்ட வருமீன் கொக்கு மாதிரி காத்திருக்காமல் எங்கேயாவது ஓடி விடுகிறேன்.எனவே கால நேரக்கோளாறுகள் பிரச்சினையே இல்லை.

இந்த பதிவுக்கான கால சூழலில் பதிவர்கள் தவிர தினமணி,விகடன் என்று பல செய்தி தளங்களிலும் மு.கவை கும்மியெடுக்கிறதைப் பார்க்கிற போது அவரது புதிய அவதாரம் தேறுமா என்பதே சந்தேகமாகவே இருக்கிறது.இருந்தாலும் மனுசன் சளைப்பதாயில்லை.டெசோ ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.மு.கவின் தமிழீழ குரல் வடிவேலுத்தனமாக இருந்த போதும் அதனை தமிழர்கள் ஆதரிப்பது நல்லது.காரணம் இப்போதைய இலங்கையின் LLRC யின் அர்த்தமே நடந்தது நடந்து விட்டது இனிமேலாவது ஒற்றைக்குடியரசில் அதே பழைய சட்ட சாசனப்படி ஒன்றாக வாழ்வோம் என்பதே.உலக அரசியலும் LLRC க்கு பதில் சொல் என்றே இலங்கை அரசை வற்புறுத்துகின்றன.எனவே LLRC யின் அடிப்படை வெல்லும் சூழல் உருவானால் ஈழத்தமிழர்களின் நிலை என்ன?Back to square one.

மேலும் மு.கவை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை.ஈழத்தமிழர்கள் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.அவர் என்னதான் செய்கிறாரென்று பார்க்கலாம்.ஒருவேளை இப்போதைய விமர்சனங்களை சாக்காக வைத்துக் கொண்டே கூட நாளை டெசோ மறுபிறப்பு கொள்ளாததற்கு காரணம் தேடுவார்.இழப்பு ஈழத்தமிழர்களுக்கே.
பாராளுமன்றத்தில் தனியாக நின்றும் ஆனால் ஒன்றாக குரல் கொடுத்த தி.மு.க,அ.தி.மு.க மற்றும் ஏனைய கட்சிகளின் ஒருமித்த குரலே தமிழகம் சார்ந்து ஏதாவது ஒரு விடிவை ஈழத்தமிழர்களுக்கு தரும்.ஆனால் யதார்த்த நிலையோ நீங்கள் சொல்லும் வளைச்சுப்போட்டு கும்மிட்டாங்கதான்.நீங்கள் சொல்லும் 80களின் காலகட்ட (தி)மு.கவுக்கான ஆதரவும் சுயநலமான 2006ப் பின்பான விமர்சனமே எனது நிலையும்.

மு.கவின் அறிக்கையைப் படித்தீர்களா?அவர் மீதான உலகம் பரவிய தமிழர்களின் விமர்சனத்தை அவர் உணர்ந்தே இருக்கிறார்.அவர் செய்த தவறுக்கு பரிகாரமாக அவரது புதிய அவதாரம் இருக்கட்டுமே!

நீங்கள் சொல்லும் 100 பிரச்சினைகளில் 99 தமிழகம் சார்ந்த பிரச்சினை.100 வது மட்டுமே இலங்கை சார்ந்த ஈழப்பிரச்சினை.மொழி சார்ந்து மட்டுமல்ல,அநீதிக்கு எதிரான குரலாக கூட ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுக்கலாம்.

இப்பொழுது அய்யாவுக்கு அதிகம் ஊறுகாய் தேவைப்படுகிறதென்பதை விட அவர் ஏதோ ஒன்றை உள் வைத்துக்கொண்டுதான் தமிழீழம் என்ற அறிக்கையை தொடர்ந்து வெளியிடுகிற மாதிரி தெரிகிறது.அதில் அவரது பதவி,பாராளுமன்ற அங்கத்தினர்கள் கணக்கு கூட ஒளிந்திருக்க கூடும்.அல்லது அதுவே முக்கிய காரணமாகக் கூடும்.எது எப்படியிருந்த போதும் ஒட்ட மொத்த நிகழ்வுகளையே இந்திய இலங்கை சார்ந்த அமெரிக்க தூதரகங்கள் பதிவு செய்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டுக்காண்பிப்பதிலிருந்து உணரமுடிகிறது.கூடவே ஐ.நா அமைப்பு சார்ந்த மனித உரிமைக்குழுக்களும்.

வை.கோ பற்றிய நம் இருவரின் மதிப்பீடும் ஒன்றாகவே இருப்பதால் அது பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

UFO வுக்கு முனாடியே சொன்னேன் வவ்வால் கடிக்கும்ன்னு:)

அவரின் கேள்வியின் நிலைப்பாடு எப்படியாவது இருக்கட்டும்.ஆனால் நாம் மதங்கள் தாண்டிய மனிதர்கள் என்பதை இலங்கை புத்த பிட்சுக்களின் தம்புள்ள மசூதி செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிப்போம்.

ராஜ நடராஜன் said...

வவ்!முடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.ஆனால் ஈழ விமர்சனத்துக்கான அணுகுண்டை வீசுறீங்க.அது உண்மைதான் என்பதை காட்சி தளத்தில் இயக்குநர் ராம் அப்போதைய நிகழ்வுகளை சொல்லியிருந்ததை வாசித்திருந்தேன்.

நீங்கள் சொல்லும் கோணத்தில் யோசித்தால் இவர்களின் ஈழ ஆதரவோடு பிரச்சினைகளுக்கு காரணகர்த்தாக்களாக இவர்களின் தனி ஈகோ கூட காரணமாகிறது.இங்கே பாலஸ்தீனியப் பிரச்சினையோடு ஒப்பு நோக்குவது சரியாக இருக்குமென நினைக்கின்றேன்.ஐ.நா வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்தை பங்கு போடுவதில் ஏனைய வளைகுடா நாடுகளின் இணையாத குழப்பமான நிலையும் கூட இதுவரை பாலஸ்தீனியப் பிரச்சினை ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டிருப்பதற்கு காரணம்.முந்தைய எல்லை வரையறைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்பொழுது குறைந்த பட்சம் 1965க்கு முந்தைய நிலையிலான எல்லையை நிர்ணயிக்க வேண்டுகிறார்கள்.இது போன்ற சூழல்களைக் கூட நாளை LLRC யைக் கடந்த சூழல் உருவாகும் நிலையில் ஈழப்பிரச்சினை உருவாக்க கூடும்.குழப்புவதற்கான அத்தனை களநிலைகளும் இந்தியா,இலங்கை,கருணா,பிள்ளையான்,டக்ளஸ்,சிங்கள அடிப்படைவாதிகள் வகையறாக்கள் என நிறைய உண்டு.

நீங்கள் சொல்லும் யாரை முன்னிறுத்துவது என்ற ஒருமிகத்தன்மையின்மை தமிழகம் மட்டுமல்ல,புலம் பெயர்ந்தும் காணப்படுகிறது.அந்த விதத்தில் விடுதலைப்புலிகளின் தவறுகளை களைந்து நோக்கினால் இயக்கமும்,இயக்கம் சார்ந்த பிரபாகரனின் ஆளுமையின் ஒருமுகத்தன்மையும் பாராட்டபடவேண்டியவையே.

முருகன் ,பேரறிவாளன், சாந்தன் வழக்கின் பிரிவினைகள் இதுவரை நான் அறியாத ஒன்று.ஏதோ வை.கோவும்,ஜெத்மலானியும் முன்னின்று நடத்துகிறார்களே என்ற வரையில் மட்டுமே அறிந்திருந்தேன்.

இப்ப நம்ம அண்ணாத்தே வருணைக் கண்டுக்கிறதுக்கு முன்னாடி உங்க பின்னூட்டத்தில் விட்டுப்போன ஷகிலாவின் ரசிகர்களுக்கு அசின்,அனுஷ்கா சப்பை பிகர் ஒப்பீடு செம:)முன்னாடி பின்னூட்ட புளோவுல கவனிக்க மறந்து விட்டேன்.இப்ப ஒப்பீட்டை கற்பனை செய்து பார்த்தா சிரிப்பு கணினி ஸ்கிரீன் வரைக்கும் தெரியுது:)உண்மையை சொல்லப்போனால் ஷகீலா பற்றியெல்லாம் எனக்கு கற்றுக்கொடுத்த புண்ணியவான்கள் நம்ம பதிவுலக பிரபல பதிவர்கள் உஸ்தாத்துக்களே.நீங்க ரொம்ப ரொம்ப லேட்:)

இப்ப நம்ம அண்ணாத்தே வருணுக்கு வந்துடுவோம்.நாம கும்முவோம்ன்னு தெரிஞ்சும் அவர் ஏன் எடக்கு மடக்காகவே பின்னூட்டம் போடுறாருன்னு தெரியலை.ஆனாலும் அவர் வந்தா நமக்கு வாயசைக்க பின்னூட்டம் கொஞ்சம் களை கட்டுறது உண்மையும் கூட:)நானும் வருணின் ஆசைக்காவாவது ஜெயலலிதாவுக்கு ஒரு பதிவு போடலாமுன்னு பார்த்தால் அந்தம்மா சசிகலா சண்டை விவகாரங்கள் தவிர பெருசா நியுஸ் ஒன்னும் தர்றதில்ல.நான் என்ன செய்ய முடியும்:)

வவ்வால் said...

ராஜ்,

என்ன ஒருத்தரும் காணோம், எல்லாம் தேர இழுத்து தெருவில விட்டு போயிட்டாங்க, கடசில நான் தான் நிலைக்கு இழுத்து போகணுமோ :-))

நீங்க சொன்னார்ப்போல ஈழ விவகாரத்தில் அத்தனை குழப்ப முடிச்சுகளும் இருக்கு,அதுவே பின்னடைவுக்கும் காரணம்.

// நோக்கினால் இயக்கமும்,இயக்கம் சார்ந்த பிரபாகரனின் ஆளுமையின் ஒருமுகத்தன்மையும் பாராட்டபடவேண்டியவையே.//

அதே சமயத்தில் அவரது ஆளுமையும் பல பிரச்சினைகளை உருவாக்கியதே, கருணா எல்லாம் பிரிந்தார் மேலும் ஈழ போராட்டத்தின் ஏக போக தலைவராக அவர் இருக்க விரும்பி பலரையும் கொன்றார், ஆனால் சர்வதேச சமூகம் அவரை தனிப்பெரும் தலைவராக பார்க்கவோ முன்னிறுத்தவில்லையே.

எனவே தான் பிரச்சினை முடியாமல் இழுத்துப்போனது எனலாம்.

நீங்கள் பாலஸ்தீனத்தினை ஒப்பிட்டதால் அவர்களுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் ஈழ போராட்டத்தில் யாருக்கும் கிடைக்கவில்லையே.

யாசர் அராபத்துக்கு ஐநாவில் பேச வாய்ப்பு, அமைதி நோபெல் பரிசு என சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.முழுதாக பிரச்சினை முடிவுற்றதா என கேட்டால் இல்லை தான் அவர்கள் போராட்டத்தில் பல படிகள் முன்னோக்கி நகர்ந்தார்கள்.

-----
முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு என முதலில் செய்தி வந்ததும் சீமான் போய் என்ன செய்தார் எனில் உங்கள் உடல்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதிக்கொடுங்கள் எனக்கேட்டுள்ளார், அதில் பேரறிவாளன் வைகோவை தான் எனக்கு முதலில் தெரியும் என சொல்லி அவருக்கு தான் எழுதிக்கொடுப்பேன் என சொல்லவே அங்கிருந்தே இரண்டு அணியாக பிரிந்து வழக்கு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

எப்படிலாம் அரசியல் செய்கிறார்கள் பாருங்கள், இதெல்லாம் பல பத்திரிக்கைகளிலும் வந்துவிட்டது.
----

உஸ்தாது சொல்லி கொடுத்தாங்களா ..அந்த உஸ்தாது பதிவில எக்ஸ்ட்ராவா ரெண்டு பிட்ட போட்டு இருப்பேன் நான் பாருங்க, பதிவை விட பின்னூட்டம் போட முதலிடம் தருவதால் அப்படியான கில்மா பதிவுகள் போடுவதில்லை.

ஷகிலாவ நினைச்சு சிலிர்க்காம சிரிச்சிங்களா :-))
-----
வீம்புக்கென்றே எதாவது சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்வதில் சிலருக்கு ஆசையிருக்கும் அப்படியானவராக இருக்கிறார், வந்தால் வண்டி நல்லா ஓட்டலாம் :-))

ராஜ நடராஜன் said...

ம்க்கும்!அவங்கவங்களுக்கு பர்தா,மதம்ன்னு சண்டை போடுறதுக்கே நேரம் பத்தலை.இதுல நம்மள வேற கண்டுக்குவாங்களாக்கும்:)அப்படியே யாராவது வந்தாலும் நன்றி!அருமைன்னு சொல்லவிட்டாத்தானே தட்டச்சு பட்டன்களுக்கே வலிக்கிற மாதிரி நீங்களும்,நானும் கச்சேரி செய்ய வேண்டியது!யார் எட்டிப் பார்ப்பாங்க?

சகோதர சண்டைகள் போடாமல் இருந்திருந்தாலும் பிரபாகரனுக்கான உயிர் ஆபத்துக்கள் இருந்திருக்கும் தானே?ஈழப்போராளிகளைப் பொறுத்த வரையில் survival of the fittest என்பது மாதிரி செய்து விட்டார்கள்.இருந்த போதிலும் தனக்கென்றும் தனது சொல்லுக்கென்றும் உயிர் கொடுக்கவும் தயங்காத போராளிகளை உருவாக்கியதும்,நில,கடல்,விமானப் படையெனும் வரைக்கும் உருவாக்கியதும் பிரபாகரனின் ஆளுமையே என்பேன்.முள்ளிவாய்க்காலுக்கும் முந்தைய காலகட்டங்களில் ராஜிவின் மரணத்தை அடுத்து அனைத்து தமிழர்கள் போலவே எனக்கும் பிரபாகரன் குறித்த விமர்சனங்கள் இருந்தது.அனைத்துலக ஊடகர்கள் சந்திப்பில் பிரபாகரனின் ஆளுமையை விட அன்டன் பாலசிங்கமே பிரபாகரனுக்கும்,ஊடகர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்ததை காண நேர்ந்தது.ஓஸ்லோ மற்றும் ஏனைய பேச்சு வார்த்தைகள் தோல்வியுறும் போது விடுதலைப்புலிகள் தான் குறுக்கீடாக இருக்கிறார்கள் என்பது மாதிரியாகவே பிரதிபலித்தார்கள்.ஆனால் போருக்கு அப்பாலான காலகட்ட இலங்கை நகர்வுகள் முந்தைய நிலையை நான் மட்டுமல்ல தமிழர்களில் பெரும்பாலோருக்கான நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறதென்றே நினைக்கின்றேன்.ராஜபக்சே அரசின் செயல்பாட்டையெல்லாம் தொடர்ந்து கவனிக்கும் போது சிங்கள அடிப்படைவாதத்தை சரியாக புரிந்து கொண்ட மனிதன் பிரபாகரன் என்பேன்.

ஈழப்பிரச்சினையுடன்,பாலஸ்தீன ஒப்பீடும் போது மேலும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ்,பத்தா என இரு இயக்கங்களாக ஆயுத,அரசியல் குழுக்களாக பிரிந்தே பணிபுரிந்தாலும்,மக்கள் ஆதரவு பெற்ற ஹமாஸை விட அனுசரித்துப் போகலாம் என்ற பத்தாவே இஸ்ரேலுக்கும்,அமெரிக்காவுக்கும் பேச்சு வார்த்தைக்குப் பிடித்துப் போனது.பாலஸ்தீனியர்களுக்கு அரேபிய நாடுகள் பொருளாதார உதவி,ஆதரவு என்ற பெரும் வலு போல் விடுதலைப்புலிகளுக்கு இல்லாமல் போய் விட்டது.தமிழகம்,அரேபிய நாடுகள் என்ற அழுத்தங்கள்,ஆதரவு,எதிர்ப்பு இரண்டுக்குமே இருந்தாலும் அரேபிய நாடுகளின் அழுத்தங்கள்,ஆதரவு,எதிர்ப்புடன் ஒப்பிடும் போது ராஜிவின் மரணம், போர் காலத்தின் கருணாநிதியின் குழறுபடிகள் திசை திருப்பல்களில் முக்கிய காரணிகளாக அமைந்து விட்டது.

பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் மாதிரி இல்லாமல் அல்லது LLRC என்ற முகப்பூச்சுடன் கூட நின்று விடலாம்.அல்லது ஈழத்தமிழர்களுக்கும் விடுதலைக்கான வாய்ப்புக்கள் மேற்கத்திய நாடுகள் காய்நகர்த்தலைப் பொறுத்தும்,தமிழர்கள் போராடுகின்ற முறையைப் பொறுத்தும் அமையும்.அல்லது போதுமடா சாமியென்று சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கேயுடன் சிங்களக்கொடியை தூக்குவது மாதிரியும் கூட அமையும்.ஈழ மக்களின் மனநிலை ஒன்றுபட்ட இலங்கையா,இந்தியாவின் 13ம் உடன்படிக்கையா அல்லது தமிழீழமா என்பது யாருக்குமே தெரியாது.ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்.மக்களின் அபிலாசை என்ன என்பதை ஐ.நா வாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும்.

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டத்திற்கும் இந்தப் பின்னூட்டத்திற்கும் ஒரு சாண்ட்விச் சாப்பிடும் நேரம்:)

யாசர் அராபத்தின் முந்தைய பின்புலம நோக்கினால் ஆயுதக் கலாச்சார நம்பிக்கையினால் கட்டமைக்கப்பட்டதும் அவரது உடையும் அப்படியே.அராபத்துக்கு ஐ.நா அரங்கம்,நோபல் சிபாரிசு போன்ற சாதகங்கள் இருந்தாலும் யாசர் அராபத் இப்பொழுது மறந்து போன வரலாறு.பிரபாகரனுக்கான எதிர் விமர்சனங்கள் இருந்த போதிலும் தமிழர்களின் வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிப்பார்.கலைஞர் கருணாநிதியின் மீதான விமர்சனங்களை முன் வைப்பதோடு அவரது பதிலான போராளிகளுக்கு மரணமில்லையென்பதும் உண்மை.

நீங்கள் சொல்லும் வை.கோ,சீமான் உள்குத்துக்குள் அதிர்ச்சியையே தருகிறது.இவர்கள் இணைந்து செயலாற்றாத வரை தீர்வுகளுக்கான வழிகள் சிக்கலானதாகவே இருக்கும்.

ராஜ நடராஜன் said...

வவ்!அன்றைக்காவது பின்னூட்டம் போடும் போது சிரித்தேன்.முந்தா நாள் வண்டி டிராபிக்கில ஆமை வேகத்துல நகருது.பி.பி.சி வானொலி ஓடிகிட்டிருக்கு.திடீரென ஷகீலா ரசிகனும்,அசின் ரசிகனும் டேஷ்போர்டுக்கு முன்னாடி வந்து விட்டார்கள்.பக்கத்து ட்ராக்குல வண்டி ஓட்டுறவன் அனிச்சையாக திரும்புனான்னா கிறுக்கன் மொபைலில் பேசி சிரிச்சிகிட்டுப் போறான் என்றே நினைத்திருப்பார்கள்:)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!வவ்வால் சொன்ன மாதிரியேதான் பின்னூட்டம் போடுறீங்க!***

நெஜமாவே உங்க லெவெலுக்கு தரமாக விவாதிக்க, கருத்தை வெளிப்படுத்த, வவ்வால்தான் சரியான ஆள். நான் தெரியாமல் வந்து எதையோ சொல்லிப்புட்டேன். என் தவறை உணர்ந்து ஒதுங்கிக்கிறேன். நம்ம எத்தனை முறை ஒருவரை ஒருவர் சரி செய்தாலும் மறுபடியும் ஆரம்பிச்ச எடத்திலேயேதான் வந்து நிக்கிது. இதெதுக்கு சொல்லுங்க?! :)

ராஜ நடராஜன் said...

வருண்!இந்தப் படம் இன்னுமா ஓடுது:) படம் தயாரிச்ச எனக்கே மறந்து போச்சு போங்க.

அட!கோவிச்சுக்காதீங்க!பதிவுல,பின்னூட்டத்திலும் முன்னப் பின்ன அப்படித்தான் இருக்கும்.அது இல்லாமல் நாம கொடுக்கல் வாங்கல் செய்வது எப்படி:)

நான் தான் முன்னாடியே உங்களுக்கு சொன்னேனே பதிவு பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுவேன்னு.நீங்க வில்லங்கம் பண்ற மாதிரியா தெரிஞ்சதுன்னா வரமாட்டேன்னு.

உங்களுக்கு தெரியாத சில விசயங்களை திறந்தும் கூட காட்டிவிட்டேன்.ஆனால் நீங்க எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி பிரமோசன் கொடுக்குறதிலேயே குறியாக இருக்குறீங்க.அப்படியிருந்தும் நான் உங்க கூட நட்பாக மல்லுக்கட்டத்தானே செய்றேன்:)