Followers

Sunday, December 23, 2012

டெல்லி பஸ்ஸில் உயிரோடு பி.சி. ஸ்ரீராமின் வானம் வசப்படும்

தற்போதைய டெல்லி மருத்துவக்கல்லூரிப் பெண்ணின் பரிதாபம் எப்போதோ பார்த்து மறந்து போய் விட்ட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய படம் என்ற ஒற்றை  பிளாஷ் பேக் நினைவை நினைவுக்கு கொண்டு வந்தது.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் என்ற பெயர் பலருக்கு நினைவில் இருந்தாலும் அவர் இயக்கிய படத்தை அப்பொழுதே மறந்து விட்டதால் தமிழகம் இப்பொழுது நிச்சயம் மறந்திருக்கும்.எப்படியோ சில புண்ணியவான்கள் ஒளிப்பதிவாளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பெயரை பதிவு செய்த உதவியோடு அவர் இயக்கிய படத்தை தேடினால் வானம் வசப்படும் என்ற சிறு குறிப்போடு  மேலும் இணைய தேடலில் கூகிள் வேற உருப்படியா வேலையிருந்தா பார் சொல்லுது.இறுதியாக கதாசிரியர் சுஜாதா என்ற குறிப்போடு கூடல் தளம் வானம் வசப்படும் திரை விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருப்பதை கண்டு பிடிக்க முடிந்தது.

யதார்த்தமான கதை,நிகழும் சாத்தியங்களான சம்பவங்கள்,பெயர் தெரியா புதுமுகங்கள் என படம் வந்த வேகத்திலேயே படப்பெட்டிக்குள் போய் படுத்து உறங்கி விட்டது.இப்பொழுதுதான் கற்பனை டெல்லியில் உயிர் பெற்று வந்து விட்டதே!யாராவது படத்தை இணையத்தில் பி.சி. ஸ்ரீராமின் அனுமதியோடு கொண்டு வரலாமே!

முந்தைய திரை கற்பனை இப்பொழுது டெல்லியில் உயிர் வதை செய்கிறது.

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அப்பிடியா...? உடனே அந்தப்படத்தை பார்க்கனுமே...!

ராஜ நடராஜன் said...

மனோ!நலமா?நட்புக்கு நீங்க பதிவு விட்ட கையோடு இப்படி ஏதாவது பெயர் பார்த்தால்தான் ஆச்சு.

முன்பு VHS டேப் காலத்தில் ஒரு படம் நாலைந்து வருசத்துக்கும் கிடைக்கும்.இப்ப கமர்சியல் படமே திரைக்கு வந்த வேகத்தில் காணாமல் போவதால் இந்த மாதிரி படங்கள் கிடைக்குமான்னு தெரியல.டிவிடி கடையில் கிடைக்குதான்னு தெரியல.பார்க்கனும்.

சென்னைவாசிகளுக்கு ஒருவேளை கிடைக்க கூடும்.சி.பி இருக்கிறாரே!கண்டுபுடிக்கலாமே.

ராஜ நடராஜன் said...

மனோ!பின்னூட்டம் போட்ட கையோடு வீடியோ கடைக்கு போன் போட்டேன்.இல்லையாம்.