Followers

Wednesday, December 10, 2008

கோளங்களின் புள்ளிகளில்-பகுதி 1

முன் டிஸ்கி: கனவுல தூக்கத்தில் எழுதியது.கோ(ர்)வையா இல்லைன்னு யாரும் தயவு செய்து கமெண்ட வேண்டாம்.இந்தப் பதிவிற்கு "கணக்கு வாத்தியாரும் நமிதாவும் கனவுல"ன்னுதான் தலைப்பு வந்தது.சரி நாம்தான் ஹிட் கணக்க கண்டுக்காத ஆளாச்சேன்னு சீரியசான!!! ஒரு விசயத்தைச் சொல்லும் போது தலைப்பும் அண்டங்களைப் பற்றியிருக்கட்டுமேன்னு தலைப்பு மேலே உள்ளபடி.மேலும் படங்கள் எப்படி உல்டா செய்யப்படுகின்றன எனத் தெரிந்து கொள்ள வேண்டியும் இது ஒரு பரிசோதனைப் பதிவு.

இனி.....

நல்ல தூக்கம்.யார் யார் கனவிலோ யார் யாரெல்லாமோ வர்றாங்க.பழமைவாதி கூட காளமேகப் புலவர் வருவதாக சொல்கிறார்.ஒரு அரிஸ்டாடில்,ஒரு சாக்ரடிஸ் இல்லைன்னா நம்ம தாத்தா காந்தி அல்லது பக்கத்து ஊட்டு பெரியாராவது வந்து ஏதாவது சொன்னா நல்லாயிருக்கும்ன்னு மனசுல தோணுது.ஆனால் வந்தது கனவில் எட்டாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் சுந்தரம் வாத்தி.இப்பத்தான் வாத்திங்கிற மரியாதையெல்லாம்.அப்பவெல்லாம் அந்த நீண்ட கைகளைப் பார்த்தால் எப்ப யாரைக் கேள்வி கேட்பார் யார் கன்னம் பழுக்குமென்றே தெரியாமல் வகுப்பில் பம்மிகிட்டு கிடப்போம்.முன்னால் பெஞ்சுக்காரன் தலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வவதெல்லாம் ஒரு கலை.இல்லைன்னா அம்மணிக முன்னால் அறை வாங்குவது யாரு?கணக்கு வாத்தியாருக்கும் கன்னத்துக்கும்,கைக்கும் பிரம்புக்கும் அப்படி என்ன பந்தமோ தெரியவில்லை. கணக்கு பற்றி நினைத்தாலே பிரம்பும் அந்த நீண்ட கைகளும்தான் நினைவுக்கு வருகிறது.

நம்ம கதைதான் இப்படியென்று நினைத்தால் ஊர் ஊருக்கு நமக்கு கூட்டாளிகள் இருப்பது பதிவுப் பக்கம் வந்த பிறகுதான் தெரிந்து ரொம்ப சந்தோசப் பட்டேன்:) ஆங்!என்ன சொல்லிகிட்டிருந்தேன்!கணக்கு வாத்தியார் கனவுல வந்தாரா! " வயசுக்கெல்லாம் வந்து என்ன என்னவோ ஆயுடிச்சுங்க சார்ன்னு சொன்னதும்" அப்ப உனக்கு விவரம் அதிகம் வந்திருச்சுன்னு சொல்லு!அப்ப ஆங்கிலத்தில் ஒரு கணக்குப் போடு என்றார்.தமிழிலேயே கணக்கு சுத்தம்!இதுல ஆங்கிலத்தில கணக்குப் போடுன்னு இப்படி பரிட்சை வினாக்களை கொடுத்தால் கணக்குப் போட்ட மாதிரிதான்.

பீட்டர்,பீட்டர்ன்னு ஒரு அமெரிக்கா பையன் ஒருத்தன் இருந்தான். இந்த ஊருக்கு வந்த புதிதில் ஒரு பெப்சி ரூ 10 ஒரு பண்ணு ரூ 5 ஒரு வெனிலா ரூ20ன்னு ஆக மொத்தம் ரூ35ன்னு நான் மனதில் கணக்குப் போட்டு முடிக்கவும், நம்ம பீட்டர் கால்குலேட்டரை கையில் வைத்துக் கொண்டு அலம்பல் செய்து கொண்டிருந்தான்.அப்புறம் ஜப்பான் கால்குலேட்டர் நல்லாயிருக்குன்னு வாங்கியதும் இருந்த மனக்கணக்கும் மறந்து போய் பீட்டர் வந்து ஒட்டிக்கொண்டான்.இதுவாவது பரவாயில்லை அப்பவெல்லாம் தேவையான முக்கியமான தொலைபேசி எண்கள் அத்தனையும் தொலைகாட்சி விளம்பர வேகத்தில் கண்முன்னே நிற்கும்.தற்நாட்களில் எல்லா எண்களையும் செல்போனில் ஒளிச்சு வச்சதும் இப்ப பட்டனை அமுக்குனால் மட்டுமே எண்கள் தெரியும் அவல நிலைக்கு வந்து விட்டேன்.இன்னும் சொல்லப் போனால் எனது செல்போன் எண் தவிர எந்த எண்ணுக்கும் செல்போனைத் தடவினால்தான் ஆச்சு.

இப்படிப் பட்ட நிலையில் இப்படியொரு ஆங்கிலக் கணக்கு.(கனவு எங்கிருந்து எங்கெல்லாம் தாவுது பாருங்க)சுந்தரம் வாத்தியார் மறுபடியும் கனவுத்திரையக் களைச்சிட்டு திரும்ப வந்து ஆங்கிலக் கணக்குக்கு விடை கேட்டார். சரி நாம்தான் மக்கு....

வகுப்புக்கு சில கணக்குப் புலிகள் இருப்பது போல் பதிவுகளிலும் சில கணக்கு கொக்குகள் இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் இவங்ககிட்ட விடைத்தாள் காட்டினா என்னன்னு ஒரு போதிமர நினைப்புடன் விடைத்தாள் இங்கே.

This is a trip at high speed,
jumping distances by factor of 10.
Start with 100 equivalent to 1 meter, and increasing sizes by
factor of 10s ,or 101 (10 meters), 102 (10x10 = 100 meters, 103
(10x10x10 = 1.000 meters), 104 (10x10x10x10 = 10.000 meters),
so on, until the limit of our inmagination in direction to the
macro-cosmos.

விடை தெரியவில்லையென்றாலும் கணக்கின் படிகளை எழுதினால் சில கணக்கிகள்(கணக்கு வாத்திக்கு மறுபெயர்) மார்க் தருவதால் தெரிந்ததை உளறி வைத்தேன்.

"இது 10 ஆல் பெருக்கும் தூரத்தைக் கடக்கும் ஒரு மிக வேகமான பயணம்.
அதாவது 10 x 10 = 100 மீட்டர்
10 x 10 x 10 = 1000 மீட்டர்
10 x 10 x 10 x 10 = 10000 மீட்டர்
இப்படியே நமது கற்பனைக்கு எட்டியவரை எண்களைப் பெருக்கிக் கொண்டே போனால் என்னவாகும் என்பதனை பிலிம் காட்டும் பயணம் இது" அப்படின்னு சொல்றதுக்குள்ளே வாத்தியார் ஆளைக் காணோம்.

அப்புறம் அரைக்கண் மெல்லத் திறந்தது.அரைத்தூக்கத்தில் அலுவலகத்தில்தான் தூக்க சுகம்ன்னு உறுதிப்படுத்திகிட்டு கண்கள் மீண்டும் சந்தோசமாக மூடிக்கொண்டன.கண்கள் மூடிய சில கணங்களில் இன்னொரு கனவு.



ஒரு அரேபியன் குதிரை மாடர்ன் ஆர்ட்களில் வரும் இறக்கைகள் இல்லாமல் நிஜமான அதன் அழகில் நின்று கொண்டிருந்தது.சரி சும்மா தானே தூங்குகிறாய் என்கூட ஒரு ரவுண்டு வர்றது என்று அரபி மொழியில் கேட்டது.சரின்னு சொன்னதும் எங்கே போகிறோம் என்றதற்கு உங்கள் வீட்டுக் கொல்லப் புறத்து தோட்டத்திலிருந்துதான் பயணம் ஆரம்பம் என்றது. எங்கே போகிறோம் என்பதை பயணத்தில் நீயே தெரிந்து கொள்வாய் என்றது.

கற்பனைக் குதிரை ஜம்முன்னு உட்கார்ந்துகிட்டு நல்லா கடிவாளத்தை மட்டும் இறுக்கப் பிடிச்சுக்க.மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றது.குதிரையை அன்பா கழுத்துப் பக்கம் ஒரு தட்டு தட்டுனா ஒரு 100 மீட்டர் மேலே வானத்தை நோக்கிப் பறந்தது. கீழே பார்த்தால் எங்க வீட்டுத் தோட்டம்.


இனி குதிரை ஆட்டோ மோடுல அதுபாட்டுக்கு மேலே சொன்ன கணக்குல பறக்க ஆரம்பித்தது.நான் அடிக்கடி பூலோகத்திலிருந்து எவ்வளவு தூரம் வந்து விட்டோம்ன்னு விமானத்தின் கண்ணாடி சீட்டுலருந்து பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டே வந்தேன்.விமானம்ன்னு நினைப்பு வந்ததும் நல்லவேளை இந்தக் குதிரை "அதுசரி" அண்ணன் பதிவில் வருகிற வேதாளம் மாதிரி விக்கிரமாதித்தன் கிட்ட டெக்கீலாவெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யலை.அரேபியன் குதிரைங்கிறதால சும்மா கொள்ளும்,வெல்லமும்,கொல்லுத்தண்ணியும் வயிறு நிறைய இப்பத்தான் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்றது.(இல்லாத ஊருக்கு டெக்கீலாவும் கசக்கும்!ன்னு குதிரை முணு முணுப்பது மெல்ல என் காதில் கேட்டது:))வேதாளம் பின்னால போனா அது பாட்டுக்கு கதை சொல்ல ஆரம்பிக்கும்ன்னு நினைச்சு குதிரைய இன்னொரு முறை அன்பா ஒரு தட்டு தட்டினேன்.



கீழே பார்த்தால் குதிரை தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு கண்ணால அளக்கும் தூரத்துக்கு வந்திடிச்சு

இனி இப்படி ஊர்க்கதையெல்லாம் பேசிட்டு மீட்டர் கணக்கில பயணம் செய்தால் வேலைக்காவது.அதனால் குதிரையை கிலோ மீட்டர் மோடுக்கு மாத்தியாச்சு.கிலோ மீட்டர் கணக்குன்னா குதிரையிலிருந்து தாவி பாராசூட்டுல குதிக்கிற தூரத்துக்கு வந்தாச்சு.

இப்ப குதிரை இலை தாண்டி,வீடு தாண்டி,கட்டிடங்கள் கண்ணுக்குத் தெரியும் தூரத்துக்கு வந்திடுச்சு.யோவ் என்னய்யா நினச்சிகிட்டு இருக்கிறே!அஞ்சு நிமிசத்துக்கு ஒரு முறை குதிரை,குதிரைன்னு மரியாதையில்லாம!ஒழுங்காப் பேர் சொல்லி கூப்பிடுன்னு சொன்னது.சரி நீ அரபிக்குதிரை மாதிரி இருக்கிறாய் என்று மனோராமா ஆச்சியே உன்னோடு ஒப்பிட்ட காரணத்தால் இனிமேல் உன்பெயர் நமிதான்னே அழைக்கப்படுவாயாக என தாஜா பண்ணி குதிரைய சீ.... நமிதாவைக் கன்னத்தில் கிள்ளினால் வெட்கப் பட்டுக்கொண்டு மேலும் பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்தது.

இப்ப இந்த தூரத்தில் பார்த்தால் வீடெல்லாம் மறைந்து ஏதோ ஒரு நகரம் மட்டும் கண்ணில் தெரியுது.நமீதாக் கண்ணு!இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயேன்!

இதென்ன புல்லு புல்லா தெரியுதுன்னு நமிதாகிட்டக் கேட்டா அது சொல்லுது" மச்சா!இது புளோரிடா மாகாணம்"

சரி!சரி!இந்த ஊரெல்லாம் உன் புண்ணியத்துல பார்த்தாச்சு.மேலே கிளம்புன்னு சொன்னதும் இன்னும் 10 மடங்கு வேகத்தில் நமிதா.

இப்ப நமிதா சொன்னது" இந்த தூரத்திலதான் சேட்டிலைட்ல இருந்தெல்லாம் சினிமாப் படம் காட்டுறாங்க,அரசியல்வாதிகளைப் பேட்டி எடுத்து அனுப்புறாங்க அப்படின்னு தொலைகாட்சிக் காரங்களோட ரவுசெல்லாம் இந்த தூரத்திலிருந்துதான் ஆரம்பம்ன்னு சொல்லிச்சு.சரி!சரி இதெல்லாம் உனக்கு மட்டும்தான் தெரியுமுன்னு சும்மா பீத்திக்காம வேகத்தைக் கூட்டுன்னு சொன்னதும் நமீதா போன அடுத்த தூரம் எனக்குப் பிரமிப்பைத் தந்தது.

அடேயப்பா!கண்டம் விட்டு கண்டம் வந்து இப்ப பூமிப் பந்தே கண்ணுக்குத் தெரியுதேன்னு எனக்கு ஒரே வியப்பு.சரி!உன்னோட வேகத்தை இன்னும் 10 மடங்கு கூட்டு என்றேன்.

நமிதாவின் அயராத வேகத்தின் தூரத்தில் இப்ப பூமிப் பந்து ஒரு கால் பந்து அளவிற்கு வந்து விட்டது. அதனைச் சுற்றியும் புள்ளி புள்ளியாக என்னனென்னமோ கிரகங்கள்.அதென்ன பூமியச் சுற்றி எவெனோ அரண் அமைத்து விட்டானே என்று கேட்டதற்கு "ஓ!அதுவா அது சந்திரன் ஊரைச்சுற்றும் வழி என்றது நமிதா

அடேயப்பா!இம்புட்டு தூரத்திலேயா சந்திரன் பூமியைச் சுற்றி வலம் வருதுன்னு நான் வாய் பொளக்க இதுக்கே இப்படி வாயப் பொளக்கிறயெ மச்சா இன்னும் போக வேண்டிய தூரம் சிந்துபாத் கதை மாதிரி எவ்வளவு இருக்குன்னு நமிதா சொன்னதும் அப்ப கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு பயணத்தை தொடங்கலாமென்றேன்.

பின் டிஸ்கி: தூக்கமும் அரேபியன் குதிரை மட்டும்தான் நம்முடைய சரக்கு.POWER OF 10 கணக்கு வாத்தியாரும் படங்களின் நாயகர்களும் யாரென்று தெரியவில்லை.இருந்தாலும் இங்கே நன்றியை முதலில் தெரிவித்து விட்டு பதிவுகளின் பகுதிகள் இறுதியிலும் பட உரிமையாளர்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

9 comments:

கிரி said...

ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு :-)

ராஜ நடராஜன் said...

//ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு :-)//

அய்!கிரியண்ணங்கிட்ட இருந்து முதல் போணீ.நன்றி.

ராஜ நடராஜன் said...

கிரி!முதல் போணி சந்தோசத்தில் பொறுமையப் பத்தி சொல்ல மறந்து விட்டேன்.இதுக்கே இந்தப் பாராட்டுன்னா மெகா சீரியல் மாதிரி வரப்போகும் பகுதிகளுக்கு என்ன சொல்லப் போகிறீர்களோ:)

பழமைபேசி said...

உங்களுக்கும் கனவாக்கூ? நடக்கட்டு, நடக்கட்டு....

ராஜ நடராஜன் said...

//உங்களுக்கும் கனவாக்கூ? நடக்கட்டு, நடக்கட்டு....//

கனவு எம்புட்டுப் பெருசுன்னு கடைசிப் பகுதிக்கு அப்புறந்தேன தெரியுமுங்க!

குடுகுடுப்பை said...

கொஞ்சம் பெரிய கனவுதான்.

அனுபவங்களை எழுதுவதை விட இந்த மாதிரி எழுத கற்பனை நிறைய வேண்டும், உங்களிடம் அது இருக்கிறது.

பழமைபேசி said...

அண்ணே, அடுத்த பகுதி?

ராஜ நடராஜன் said...

//கொஞ்சம் பெரிய கனவுதான்.

அனுபவங்களை எழுதுவதை விட இந்த மாதிரி எழுத கற்பனை நிறைய வேண்டும், உங்களிடம் அது இருக்கிறது.//

குடு குடுப்பையாரே!ஜக்கம்மா சந்தோசமாகவே சொல்றீங்க.நன்றி.

ராஜ நடராஜன் said...

//அண்ணே, அடுத்த பகுதி?//

பழம பேசிலையின்னா உங்களுக்கு தூக்கம் வராதாக்கு:)நமீதாவுக்கு தூக்க கலக்கம். டிஸ்கவரில போய்க்கோன்னு முரண்டு பிடிக்குது.