Followers

Sunday, March 29, 2009

சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள்

மீ த பர்ஸ்ட்,ரிபீட்டே,சிரிப்பான் போன்ற வாக்கியங்கள் பதிவுகளில் மறுமொழியாளர்களின் யாருக்கும் சொந்தமில்லாத லோகோ மாதிரி ஆகி விட்டது.பதிவர்கள் பெரும்பாலும் தங்களது நையாண்டித்தனத்தால் பின்னூட்டமிடுவது பல நேரங்களில் மனதுக்குள் சிரிக்கவும்,புன்முறுவல் பூக்க வைக்கவும் செய்கிறது.சில சமயங்களில் முதலுக்கே மோசமாகி விடுமோன்னு இஃகி!கி என்ற வாய்விட்டு சிரிக்க வைத்து விடும் பதிவுகளும் பின்னூட்டங்களும் உண்டு.அப்படி ரசித்தவை, சிரித்தவை சில!

பதிவர் வருணின் ஸ்லம்டாக் மில்லியனரும் நான் கடவுளும் (http://timeforsomelove.blogspot.com/2009/02/blog-post_10.html ) பதிவில்

துளசி டீச்சரின் அசத்தல் பின்னூட்டம் ஒன்று .

// எதுக்கு இப்படி வேண்டாத சந்தேகம் உங்களுக்கு வந்துருக்கு.

எதா இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்தும்/கேவலப்படுத்திக்கும் உரிமை நமக்கு மட்டும்தான்.

அதென்ன மத்த ஆளுங்க அந்த உரிமை எடுத்துக்கறது?

நானும் இன்னும் கடவுள் பார்க்கலை.

சேரிநாயைப் பார்த்துட்டேன்.

நாயைக் கண்டால் கடவுளைக் காணோம்:-))))

மற்றொன்று பதிவர் கவிதாவின் நாமக்கல் சிபியைக் கிண்டலடிக்கும் நானெல்லாம் ஊர்ப் பெயரை கூடவே வச்சு சுத்துவதில்லை என்றது.

பதிவர் கவிதாவின் நின்று போன என் நிச்சயதார்த்தம் ( http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/blog-post_24.html ) சீரியசான பதிவில் பதிவர் நாமக்கல் சிபியின் பின்னூட்டம் இப்படிப் போகிறது....

நாமக்கல் சிபி: //விழுப்புரம் கவிதா! உங்களுக்கு பிடிச்சு இருந்தா வச்சுக்க வேண்டியது தானே, யாரு தடுக்க போறா?//

இப்படிக்கு

'நாமக்கல்' சிபி!

பதிவர் கவிதாவின் மறுமொழி பாருங்கள்:)

கவிதா: //விழுப்புரம் கவிதா! உங்களுக்கு பிடிச்சு இருந்தா வச்சுக்க வேண்டியது தானே, யாரு தடுக்க போறா?
//

கவிதா கெஜானனன் னே போதும்.. நான் என்ன சில பேரு மாதிரி ****** ஆ?? ஊர் பேரை கூடவே எடுத்துக்கிட்ட சுத்தறத்துக்கு... :)

(உங்களுக்கு என்ன வார்த்தை பிடிக்கிறதோ அந்த வார்த்தையை பில் பண்ணிக்கவும்..)

சிபி உங்களுக்கும் தான்... :))

எனது துண்டு போட்டுக்கவா பதிவில் வருங்கால முதல்வர்

"தஞ்சாவூர்லயும் உண்டு, கிராமத்துக்கு போகிற அனைத்து பஸ்ஸிலும் துண்டு போடும் பழக்கம்.

நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு."

ஆஸ்கர் நடிகையை பார்ட்டியில் சந்திக்கும் விக்கிரமாதித்தன் கதைகள் பதிவரின் வேதாளத்தின் நையாண்டித்தனம்.

வேதாளத்துக்குப் போட்டியா ஆவிகள் இருப்பது உண்மை எழுதும் கனவுலகப் பதிவர்

செய்யறதுக்கு வேலை இல்லேன்னா வரக்கூடிய பிரச்சினைகள்...ன்னு சக்கர நாற்காலியை சுழற்றி விட்டு சுற்றி சுற்றி வந்தேங்க பாடும்:)

இப்படி பதிவிலும் பின்னூட்டத்திலும் முத்து மாதிரி சில கிடைத்தால் பரவாயில்லை.ஆனால் பதிவும் பின்னூட்டமும் கும்மியும் குசும்புத்தனமாகவே இருக்கும் குசும்பனின் குசும்பு பற்றி என்ன சொல்ல? அக்கம் பக்கம் பார்த்துப் படி:)))

டிஸ்கி: வெண்ணிலா கபடிக்குழு 50 புரோட்டா போட்டியாளர் மாதிரி தேறும் பதிவர் யாராவது இருக்கிறீங்களா?

20 comments:

Tech Shankar said...

wonderful research !@$@#$@#%$%@#$@#$

சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

ராஜ நடராஜன் said...

வாங்க!வாங்க தமிழ் நெஞ்சரே மற்றும் சிரிப்பான் போடும் சிரிப்பழகரே:)

நசரேயன் said...

ஒ.. இப்படியெல்லாம் வேற இருக்கா?

ராஜ நடராஜன் said...

//ஒ.. இப்படியெல்லாம் வேற இருக்கா?//

குறிப்பிட்ட பதிவர்களில் நீங்கள் மட்டுமே எட்டிப்பார்த்திருக்கிறீர்கள்.இருங்க நான் போய் மற்றவர்களையும் கூட்டி வருகிறேன்:)

கவிதா | Kavitha said...

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!! :))))

நல்லா எழுதறீங்கப்பா பதிவு :) என்னவோ யாரும் அருவாளை தூக்காத வரை நாமும் காமெடியாக கமென்ட்ட வேண்டியது தானே.. :)

துளசி கோபால் said...

சீக்கிரம் மத்தவங்களையும் கூட்டிவாங்க. கூடிக் கும்மியடிக்க கை குறையுது:-)

ராஜ நடராஜன் said...

//ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!! :))))

நல்லா எழுதறீங்கப்பா பதிவு :) என்னவோ யாரும் அருவாளை தூக்காத வரை நாமும் காமெடியாக கமென்ட்ட வேண்டியது தானே.. :)//

நாமக்கல் பக்கமெல்லாம் முட்டைதான் பிரபலம்.

சிரிப்புடன் புத்திசாலித்தனம் கலந்து கமெண்ட்டுறீங்க:).வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

//சீக்கிரம் மத்தவங்களையும் கூட்டிவாங்க. கூடிக் கும்மியடிக்க கை குறையுது:-)//

வாங்க டீச்சர்.எல்லோருக்கும் சொல்லிட்டுத்தான் வந்தேன்.ஆணி நிறையவோ என்னமோ?

மணிகண்டன் said...

:)-

பதிவு - பின்னூட்டம் - கூட்டுக்கலவை தான் பல இடத்துல நல்லா இருக்கும்.

நாமக்கல் சிபி said...

:))

இந்த சிரிப்பானை நாமக்கல் சிபிதான் இட்டேன் என்பதை நிரூபிக்க துண்டை போட்டுத் தாண்டுகிறேன்!

ராஜ நடராஜன் said...

//:)-

பதிவு - பின்னூட்டம் - கூட்டுக்கலவை தான் பல இடத்துல நல்லா இருக்கும்.//

கூட்டாஞ்சோறுதான் ருசின்னு சொல்லுங்க:)

ராஜ நடராஜன் said...

//:))

இந்த சிரிப்பானை நாமக்கல் சிபிதான் இட்டேன் என்பதை நிரூபிக்க துண்டை போட்டுத் தாண்டுகிறேன்!//

வாங்க சிபி!பதிவர் கவிதா என்ன இந்த வாரு வாருறாங்க:)பின்னூட்டம் நினைத்து மீண்டும் ஒரு முறை சிரித்தேன்:)

குடுகுடுப்பை said...

பல நேரங்களில் என்னுடைய பதிவே பின்னூட்டதில்தான் ஆரம்பிக்கும்

ராஜ நடராஜன் said...

//பல நேரங்களில் என்னுடைய பதிவே பின்னூட்டதில்தான் ஆரம்பிக்கும்//

வாங்க வருங்கால முதல்வரே(நாட்டு நடப்புக்களைப் பார்த்தும் இன்னும் இப்படி ஒரு நினப்பு இருக்குதா என்ன:))

அப்ப இனிமேல் உங்க ட்ரேக்கை பாலோ பண்ணிட வேண்டியதுதான்:)

அது சரி(18185106603874041862) said...

//
நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு."

ஆஸ்கர் நடிகையை பார்ட்டியில் சந்திக்கும் விக்கிரமாதித்தன் கதைகள் பதிவரின் வேதாளத்தின் நையாண்டித்தனம்.

வேதாளத்துக்குப் போட்டியா ஆவிகள் இருப்பது உண்மை எழுதும் கனவுலகப் பதிவர்
//

வேதாளத்துக் கூட மீட்டிங் போட்ற ஒரு பதிவர்...ஆவிக்கூட கனவுல கதை வசனம் எழுதற ஒரு பதிவர்....இவங்களுக்கு கூடவே குடுகுடுப்பை அடிக்க ஒருத்தர்...அப்புறம் கறுப்பு தான் எனக்கு புடிச்சிருக்குன்னு விடாது கறுப்பு ரேஞ்சுக்கு இன்னொரு பதிவர்....

ஆஹா நல்லா சேந்தாங்கய்யா செட்டு :0))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
பல நேரங்களில் என்னுடைய பதிவே பின்னூட்டதில்தான் ஆரம்பிக்கும்

March 30, 2009 4:37 AM
//

அது பரவால்ல...என்னோட பின்னூட்டம் ரொம்ப பெரிசா போயிடுறதுனால சில சமயம் அதை பதிவாவே போட வேண்டியதாயிடுது...:0((

ராஜ நடராஜன் said...

//வேதாளத்துக் கூட மீட்டிங் போட்ற ஒரு பதிவர்...ஆவிக்கூட கனவுல கதை வசனம் எழுதற ஒரு பதிவர்....இவங்களுக்கு கூடவே குடுகுடுப்பை அடிக்க ஒருத்தர்...அப்புறம் கறுப்பு தான் எனக்கு புடிச்சிருக்குன்னு விடாது கறுப்பு ரேஞ்சுக்கு இன்னொரு பதிவர்....

ஆஹா நல்லா சேந்தாங்கய்யா செட்டு :0))//

ஒரு புன்முறுவல் போட்டுக்கறேன்:)

ராஜ நடராஜன் said...

//அது பரவால்ல...என்னோட பின்னூட்டம் ரொம்ப பெரிசா போயிடுறதுனால சில சமயம் அதை பதிவாவே போட வேண்டியதாயிடுது...:0((//

பெரிசா பின்னூட்டம் போடற நோய் எனக்கும் இருக்குதுங்க.வெறும் ஸ்மைலி சிரிப்பான் போட்டா பின்னூட்டம் போடறமாதிரியே இல்ல எனக்கு:)

வருண் said...

நடராசன்:

நான் இப்போத்தான் வாசிச்சேன்.

உயிருள்ள, உணர்ச்சிப்பூர்வமான, உரிமையுடன் எழுதப்பட்ட பின்னூட்டமது. It rarely comes out that well :-)

நான், நீ என்று நினைக்காமல் "நாம்" (இந்தியர்கள்), "அவர்கள்(foreigners)" என்று எண்ணவேண்டும் என்று டீச்சர் வலியுறுத்தியவிதம் அழகு.

"சேரிநாய்" என்று அவர்கள் படத்தையும், "கடவுள்' என்று நம் படத்தையும் விமர்சித்தது அதைவிட நல்லாயிருந்தது.

என்னைக்கேட்டால் பின்னூட்டம்னா அப்படித்தான் அர்த்தமா இருக்கனும்.

சும்மா அட்டண்டென்ஸ் கொடுப்பது போல் ஒருசிலர் இடும் பின்னூட்டங்களை நான் அவ்வளவு ரசிப்பதில்லை!