தலைப்பு நம்ம வடிவேலு சொல்லும் எத்தனை அடிச்சாலும் தாங்குறானய்யா!புதுசா ஏதாவது செய்தி வந்தா பழையவற்றை மறந்து விட்டு புது அவலுக்கு தாவி விடுகிறோம்.நான் பழையவற்றை நினைவுபடுத்தி விட்டு புதுசுக்கு தாண்டுகிறேன்.எஸ்.எம்.கிருஷ்ணா எந்த எந்த ஊருக்கு பயணப்படுகிறார் என்பது தெரிவதில்லை.சில நேரங்களில் நாட்டுக்கு நல்லது என்று பறக்கும் பயணங்களைக் கூட செய்திருக்க கூடும்.அவை ஊடகத்தில் அமுக்கியும் வாசிக்கப்பட்டிருக்க கூடும்.
ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் போய் வாங்கிக்கட்டிக்கொண்டு வந்ததையும் என் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி வந்த பின் தந்த ஊடக பேட்டியும் சரவெடிமாதிரி வெடிச்சு பின் அமுங்கிப் போனது.அதற்குப் பின் நானும் கிருஷ்ணாவை மறந்துவிட்டேன்.நேற்றுக்கும் முந்தைய தினம் ராஜபக்சே பிரிட்டன் பயணம் குறித்து தகவல்களை லண்டன்வாழ் புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று கவனிக்கையில் குறுக்கே எஸ்.எம்.கிருஷ்ணா மறுபடியும் வந்து கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டார்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற முதுமொழி மாறாக கிருஷ்ணா வருவார் பின்னே டக்ளஸ் தேவானந்தா வருவார் முன்னே என்று படை சூழ வரும் கிருஷ்ணாவுக்கு வழிகாட்டியாக டக்ளஸ் நடந்து வந்த தோரணை இருக்கிறதே!சொல்லி மாயாது:( இந்த ஆளு பேரே கதிர்வேலு நித்யானந்த டக்ளஸ் தேவானந்தா என்பது இங்கே http://www.pakistan-karachi.info/Douglas_Devananda என தேடலில் பாகிஸ்தான் தளமொன்று சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.
இந்தியனைப் பொறுத்தவரையில் சட்டங்களும் முக்கியமாக நீதித்துறையும் கேலிக்குரியதாக்கப்படுகின்றன என்பதற்கு டக்ளஸ் இந்திய தலைகளோட கரம் கோர்ப்பதும் வழிகாட்டும் படலங்களும் சிறந்த உதாரணங்கள்.
டக்ளஸ் கிருஷ்ணாவுடன் வரும் புகைப்படத்தை தேடியதில் கிட்டவில்லை.சந்தர்ப்பங்கள் யாருக்காவது கிட்டினால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.அதுவரைக்கும் நம்ம Mr.clean உடனான படத்தோடு ஆறுதலையடைய வேண்டுகிறேன். அரசன் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே.
சரி!திருடனும்,கொலைகாரனும்தான் பொதுவாழ்க்கை நாயகர்கள் என்பது மக்களின் தலைவிதியாகிப்போச்சு.கிருஷ்ணா! இலங்கைக்கு போனதுதான் போனீர்கள்.திட்டமிட்ட ஈழத்தின் தமிழ்க்கூட்டமைப்பு அமைச்சர்களுடன் ஆறுதலுக்கோ அல்லது தொலைகாட்சி செய்தியென்ற முகப்பூச்சுக்காக வேண்டியாகினும் அவர்களை சந்தித்து வந்திருக்கலாமே.அவர்கள்தான் ஜனநாயகத்தில் சங்கமாகி விட்டோமென்ற மக்கள் தேர்வாளர்களாயிற்றே. நேரம்,கால,இடம்,சூழ்நிலைகள் அமையவில்லையா அல்லது மத்திய அரசின் உள்நிலைப்பாட்டில் தவிர்ப்பா என்பது உங்களது மனசாட்சிக்கே வெளிச்சம்.நீங்கள் போனதின் ஒரே இந்திய பயன் சீனாவுக்கு முட்டுக்கட்டை போடும் இலங்கை தூதரக திறப்பு விழா மட்டுமே.தூதரக கட்டிடத்தை வச்சுகிட்டு ஒற்றர் வேலை மட்டுமே செய்ய முடியும்.சீனாக்காரன் இலங்கையில் கட்டமைப்புக்களை நிறுவிக்கொண்டிருக்கிறான் இந்தியாவுக்கு ஆப்பு வைக்க.
உட்கார்ந்து கொண்டு பார்ப்பவனுக்கு தெரிவது ஊர்சுற்றுபவனுக்கு தெரியாமல் போவது எப்படி சாத்தியம்?
9 comments:
கிருஷ்ணா!தமிழ்க்கூட்டமைப்பை சந்திக்காமலே வந்து விட்டீர்களே என்று கேட்டால் அட!நீ வேற!நானே பாகிஸ்தானிலிருந்து சர்தாரி வந்துட்டார்ங்கிற பயத்துல அவசரமா மூட்டைய கட்டிகிட்டு வந்தேன்கிறார்.இவருகிட்ட புலம்பி என்ன செய்யறது?அவ்வ்வ்வ்வ்வ்.....
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....இதையெல்லாம் ஒரு கதையா எழுதிக்கிட்டு....
நீங்க வேற நடா !
இங்க க்ளிக் பண்ணுங்க. இமேஜ் கிடைக்கும்.
நானும் நரசிம்மராவை என்னடா இந்த மனுசன் இப்படி இருக்காரே என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அவரின் கடைசி காலம்? கொடுமையிலும் கொடுமை.
இதே போல் அடுத்த நபர் இந்த பிரதமர். ஒரு வகையில் பாவம் மற்றொரு வகையில் பரிதாபம்.
திருட்டுக்கு உடந்தையாய் இருப்பவர்களுக்குத்தான் நமது இபிகோ அதிக தண்டனை அளிக்கிறது.
உட்கார்ந்து கொண்டு பார்ப்பவனுக்கு தெரிவது ஊர்சுற்றுபவனுக்கு தெரியாமல் போவது எப்படி சாத்தியம்?
......அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.
//அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....இதையெல்லாம் ஒரு கதையா எழுதிக்கிட்டு....
நீங்க வேற நடா !//
அப்படியில்லை ஹேமா!அரசியல் ரீதியாக தமிழ்க்கூட்டமைப்புக்கு இது பின்னடைவே.அவ்வளவு தூரம் போய் விட்டு ஆறுதலுக்காவது தமிழ்க்கூட்டமைப்பை சந்தித்திருக்கலாம்.வருத்தமளிக்கிறது.
//இங்க க்ளிக் பண்ணுங்க. இமேஜ் கிடைக்கும்.//
கும்மி!பார்க்காத படத்துக்கு நன்றி.ஆனால் நான் தேடுவது இதுவல்ல.கிருஷ்ணாவின் இடது பக்கமும் வலதுபக்கமும் முகம் தெரியாத பாதுகாப்பு மற்றும் இலங்கை குழு.டக்ளஸ் கெத்தா நாலு அடி கிருஷ்ணாவுக்கு முன்னாடி நடந்து வந்துகிட்டிருக்கிறார்.நான் GTVயில் காணொளி கண்டேன்.
//நானும் நரசிம்மராவை என்னடா இந்த மனுசன் இப்படி இருக்காரே என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அவரின் கடைசி காலம்? கொடுமையிலும் கொடுமை.
இதே போல் அடுத்த நபர் இந்த பிரதமர். ஒரு வகையில் பாவம் மற்றொரு வகையில் பரிதாபம்.
திருட்டுக்கு உடந்தையாய் இருப்பவர்களுக்குத்தான் நமது இபிகோ அதிக தண்டனை அளிக்கிறது.//
ஜோதிஜி!நரசிம்ம ராவின் ஆட்சிக்காலம் இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனை எனலாம்.
மன்மோகன் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராகவே காணப்படுகிறார்.ஆனால் ஆளுமை இல்லை.
//உட்கார்ந்து கொண்டு பார்ப்பவனுக்கு தெரிவது ஊர்சுற்றுபவனுக்கு தெரியாமல் போவது எப்படி சாத்தியம்?
......அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா.//
ஹேமா!இதோ உங்களுக்கு ஒரு volunteer ஆக assistant.அப்ப சுட்டுற வேண்டியதுதான்:)
//சரியா போச்சு. நானே வெட்டி பேச்சு பேசிக்கிட்டு இருக்கேன். இதுக்கு volunteer ஆக assistant வேலைக்கு அவங்களே வந்து ஆஜர் போடுறாங்களேனு புல்லரிச்சு போச்சு.//
எப்பூடி:)
Post a Comment