Followers

Friday, December 3, 2010

இலங்கையின் மனித உரிமை மீறல் மீதான ஊடகப்பார்வை

தமிழக ஊடகங்களே உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலாத நிலையில் இந்திய ஆங்கில ஊடகங்களில் அவ்வப்போது இலங்கை குறித்தான மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலையின் ஒரு சில ஆவண்ங்களையும் Channel 4 வெளியிட்டதாக  செய்திகள் வர ஆரம்பித்திருப்பது இந்தியர்களின் பார்வையை இலங்கை மீதும்,ஈழத்தமிழர்கள் மீதும் கொண்டு வருவது சக்கரத்தின் சுழற்சியில் மாற்றங்களைக் கொண்டு வருமா என்பது இன்னும் வரும் காலங்களில் கணிக்க வேண்டியிருக்கிறது.

கூடவே விசில்கார அண்ணாச்சிJulian Assange யின் ஆவண வெளியீடுகள் சட்டரீதியாக போராடும் தமிழ் தரணிகளுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று நம்புவோம்.


உயிருக்கு ஆபத்தான நிலையிருந்தும் கூட ஜூலியன் தனது இணையதளத்தை வேறு தளத்திற்கு மாற்றி விட்டு வாங்கய்யா கேள்வி கேளுங்க  பதில் சொல்கிறேன் என்கிறார்.அவர் பக்கத்துல யாராவது இருந்தா இலங்கை குறித்தான ஒரு கேள்வியும் போட்டு வையுங்க.இவரைக்குறித்து சுடுதண்ணி சுடசுட டீ ஆத்துவதால் தலைப்புக்கு மீண்டும் வந்து விடுகிறேன்.

Channel 4 Video of Sri Lanka executions causes shockwaves 

என்று தலைப்பிட்டு இங்கே  வீடியோ  ஆவணப்பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் இலங்கை அரசு It's fake என்று உண்மையானது அல்ல என்று மறுத்திருக்கிறது.

Channel 4 தொலைக்காட்சி இதனை ஐக்கிய நாட்டின் குற்றங்களை விசாரிக்கும் குழுவுக்கு அனுப்பியிருப்பதாக தெரிகிறது.


பார்க்கலாம் எங்கே போகும் இந்த பாதையென்று!

21 comments:

Thekkikattan|தெகா said...

தமிழக ஊடகங்களே உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலாத நிலையில் //

அவிங்க நாறி நடு சந்தியில நிக்கிறத பார்க்கணும்ய்யா... மனசாட்சியே இல்லாத நாதாரிகள். பெரும் கடுப்பா இருக்கு. சில காணொளிகளை கண்டதிலிருந்து.

விக்லி லீக்ஸ், நிருவனர்க்கு இந்த உலக மக்கள் ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்காய்ங்க.

ராஜ நடராஜன் said...

//தமிழக ஊடகங்களே உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலாத நிலையில் //

அவிங்க நாறி நடு சந்தியில நிக்கிறத பார்க்கணும்ய்யா... மனசாட்சியே இல்லாத நாதாரிகள். பெரும் கடுப்பா இருக்கு. சில காணொளிகளை கண்டதிலிருந்து.

விக்லி லீக்ஸ், நிருவனர்க்கு இந்த உலக மக்கள் ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்காய்ங்க.//

தெகா!முதலில் ஜீலியன் அசாங்கிக்கு போயிடலாம்.இணைய மாற்றத்தில் பில்கேட்ஸ் எப்படி தவிர்க்க முடியாத பெயரோ இனி ஜீலியனும் அவ்வாறே.ஆனாலும் மனுசன் மக்கள் பார்க்கவேண்டிய ஆவணங்கள் இன்னும் மக்களிடம் போய்ச் சேரவில்லையென்கிறார்.

இப்ப மனதை சமாதானபடுத்திக்கொண்டு மனித மனம் இல்லாத பாவிகளை உலகம் மன்னிக்க விடக்கூடாது என்பதோடு அதற்கான அழுத்தங்களை உலகம் முழுவதும் அதிலும் முக்கியமாக தமிழகத்தில் ஏற்படுத்தி இந்தியாவின் இலங்கை ஆதரவுக்கரத்தை ஒடுக்க வேண்டும்.புவி இயலாய் இதுவே நிரந்தர வெற்றியை தரும்.

தமிழகம் என்ற காரணியாக மாநில அரசு என்னதான் காசைக்கொட்டிக்கொடுத்தாலும் சீனாவின் பக்கமும்,பாகிஸ்தான் மூலம் இந்தியாவுக்கு ஆப்பு வைக்கவே நினைக்கும்.அதற்கு உதாரணமாக எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையை விட்டு விமானம் ஏறிய கணமே சர்தாரி வந்து இலங்கையில் உட்கார்ந்து கொண்டது.

ராஜபக்சேவின் வாட்டர்லூவாம் லண்டன் பயணம்.

Rathi said...

//இந்தியர்களின் பார்வையை இலங்கை மீதும்,ஈழத்தமிழர்கள் மீதும் கொண்டு வருவது//

இப்பத்தான் tvrk வின் தளத்தில் இந்திய, தமிழக ஊடகங்களின் நிலைப்பாடு, வெளிப்பாடு பற்றி கேட்டிருந்தேன்.

இந்தியா இந்த விடயத்தில் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் முயற்சிகளை குழப்பாமல், ராஜபக்க்ஷேவுக்கு வக்காலத்து வாங்காமல் இருந்தாலே பெரிய உதவி.

தமிழக ஊடகங்கள் செய்யாவிட்டாலும் பதிவுலகில் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும், எங்களுக்கு தோள்கொடுக்கும் அத்தனை பதிவுலக நட்புக்கும் என் நன்றிகள்.

ராஜ நடராஜன் said...

தெகா!மத்திய அரசு என்பது மாநில அரசு என்று வந்து விட்டது.Typo.மன்னிக்கவும்.

ராஜ நடராஜன் said...

////இந்தியர்களின் பார்வையை இலங்கை மீதும்,ஈழத்தமிழர்கள் மீதும் கொண்டு வருவது//

இப்பத்தான் tvrk வின் தளத்தில் இந்திய, தமிழக ஊடகங்களின் நிலைப்பாடு, வெளிப்பாடு பற்றி கேட்டிருந்தேன்.

இந்தியா இந்த விடயத்தில் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் முயற்சிகளை குழப்பாமல், ராஜபக்க்ஷேவுக்கு வக்காலத்து வாங்காமல் இருந்தாலே பெரிய உதவி.

தமிழக ஊடகங்கள் செய்யாவிட்டாலும் பதிவுலகில் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும், எங்களுக்கு தோள்கொடுக்கும் அத்தனை பதிவுலக நட்புக்கும் என் நன்றிகள்.//

ரதி!நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா என்ற பெயரோடே இலங்கையும் ஈழமும் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பதிவுலக ஆதரவெல்லாம் நான் முன்பே எங்கோ குறிப்பிட்டது போல் நியாயமான Street voice.தமிழ் ஊடகங்கள் சரியாக பணியாற்றாத காரணத்தில் உண்மைகளை வெளிக்கொண்டு வர இணையதள முயற்சிகளே உதவுகின்றன என்பதோடு நமது செயல்பாடுகள் நின்று விடும்.

இதனையடுத்து அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட என்ற சொல்லில் அரசு இயந்திரங்களே இலங்கை,ஈழத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன.இந்த நிர்ணயித்திற்கு நிச்சயம் மக்களின் ஆதரவு என்பது ஒரு முக்கியமான அவசியம்.

எனவே இணையம்,மக்கள் ஆதரவு,அரசுகளின் இயக்கத்தை நம்க்கு சாதகமாக கொண்டு செல்லுதல் என்ற மூன்றிலே ஈழத்தின் வெற்றியிருக்கிறது.பார்க்கலாம் ராஜபக்சே இந்திய ஆதரவு எப்படி தொடர்கிறதென்று.நன்றி.

Thekkikattan|தெகா said...

//அதற்கு உதாரணமாக எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையை விட்டு விமானம் ஏறிய கணமே சர்தாரி வந்து இலங்கையில் உட்கார்ந்து கொண்டது.//

சின்னப் பசங்க கில்லி விளையாடுற மாதிரி இருக்கு; இவிங்க நகர்த்துற ராஜ தந்திர நகர்வுகள். கன்றாவி கருமாந்திரம். எவ்வளவு சீக்கிரம் ச்சூடு வாங்கிட்டு முழிச்சிக்கிறாய்ங்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லதுன்னுதான் தோணுது. இல்லன்னா, சீழ் கால் வழியா பிடிச்சு (சீனாவால) மேலிருந்து இறங்கிற புற்று நோயோட கலந்து இழுத்துக்கோ பரிச்சிக்கோன்னு கெடக்கப் போறோம்.

//புவி இயலாய் இதுவே நிரந்தர வெற்றியை தரும்.//

இதெல்லாம் யாருக்கு வேணும். நாங்க ரொம்ப பிச்ச்ச்சி நாட்டைச் சுரண்டுறதிலும், சகோ பகைமை பாராட்டுற ‘தனத்திலும்’ இன்னும், புவியியல், வரலாறு என்ற அகண்ட பாடமெல்லாம் வெகுதூரம்.

ராஜ நடராஜன் said...

////அதற்கு உதாரணமாக எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையை விட்டு விமானம் ஏறிய கணமே சர்தாரி வந்து இலங்கையில் உட்கார்ந்து கொண்டது.//

சின்னப் பசங்க கில்லி விளையாடுற மாதிரி இருக்கு; இவிங்க நகர்த்துற ராஜ தந்திர நகர்வுகள். கன்றாவி கருமாந்திரம். எவ்வளவு சீக்கிரம் ச்சூடு வாங்கிட்டு முழிச்சிக்கிறாய்ங்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லதுன்னுதான் தோணுது. இல்லன்னா, சீழ் கால் வழியா பிடிச்சு (சீனாவால) மேலிருந்து இறங்கிற புற்று நோயோட கலந்து இழுத்துக்கோ பரிச்சிக்கோன்னு கெடக்கப் போறோம்.

//புவி இயலாய் இதுவே நிரந்தர வெற்றியை தரும்.//

இதெல்லாம் யாருக்கு வேணும். நாங்க ரொம்ப பிச்ச்ச்சி நாட்டைச் சுரண்டுறதிலும், சகோ பகைமை பாராட்டுற ‘தனத்திலும்’ இன்னும், புவியியல், வரலாறு என்ற அகண்ட பாடமெல்லாம் வெகுதூரம்.//

தெகா!இது பெருசுக விளையாடுற நாற்கில்லி:)எனக்கு இதுவரைக்கும் புரியாத ஒன்று இவர்கள் நடத்தும் ராஜதந்திர நகர்வுகள்.இது எப்படியிருக்குதுன்னா பிளாக்மெயில் பண்றவன் அப்பப்ப போன் போட்டு காசு கொடு இல்லாட்டின்னா பயம் காட்டுற மாதிரி.ராஜதந்திர ரீதியாக சீனாவுக்கு எதிரா கோடிகளை கொட்டுகிறார்களாம்.நாளைக்கு இந்தியாகிட்டயும் காசையும் வாங்கிட்டு சீனாகிட்டயும் காசு வாங்க மாட்டான்னு என்ன நிச்சயம்?

அதோட நீங்க அமெரிக்கா ஓடிட்டீங்களா,நான் குவைத்துக்கு ஒடியாந்திட்டேனா,தமிழ்நாட்டுல இருக்கிற ஐ.ஏ.எஸ் ஆட்கள் ஆட்டையப்போட்டா போதும்ன்னு திருப்தி பட்டுக்கிறாங்களா பாராளுமன்ற வளாகத்தில் ஒரு பயலையும் காணோம்.இதுதான் சாக்குன்னு மேனனும்,நாராயணனும் பூந்துகிட்டு ராஜதந்திரம் செய்தா நாடு உருப்படுமா?

கும்மி said...

இன்று காலை NDTV தளத்தில் ராஜபக்சேயின் நிகழ்ச்சி ரத்தானது முதன்மையானதாக இடம்பெற்றிருந்தது. சேனல் 4 பற்றியும் செய்தி இருந்ததைப் பார்த்ததுமே, இவ்விஷயத்தில் வட இந்திய ஊடகங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன என்பது புரிந்தது. இப்பொழுது ஐநா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை பற்றியும் செய்தி வந்துள்ளது.

---
எப்பொழுதுமே காங்கிரஸ் அரசு, தன்னுடைய எண்ணவோட்டத்தை NDTV செய்தி வழியாக கசிய விட்டு, ஆழம் பார்க்கும். இப்பொழுது செய்திருப்பது, இலங்கை அரசுக்கான எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்று தோன்றுகின்றது. (இலங்கை இதற்கெல்லாம் அசையாது என்பது தெரியும்)

ராஜ நடராஜன் said...

//இன்று காலை NDTV தளத்தில் ராஜபக்சேயின் நிகழ்ச்சி ரத்தானது முதன்மையானதாக இடம்பெற்றிருந்தது. சேனல் 4 பற்றியும் செய்தி இருந்ததைப் பார்த்ததுமே, இவ்விஷயத்தில் வட இந்திய ஊடகங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன என்பது புரிந்தது. இப்பொழுது ஐநா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை பற்றியும் செய்தி வந்துள்ளது.

---
எப்பொழுதுமே காங்கிரஸ் அரசு, தன்னுடைய எண்ணவோட்டத்தை NDTV செய்தி வழியாக கசிய விட்டு, ஆழம் பார்க்கும். இப்பொழுது செய்திருப்பது, இலங்கை அரசுக்கான எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்று தோன்றுகின்றது. (இலங்கை இதற்கெல்லாம் அசையாது என்பது தெரியும்)//

கும்மி!ஒரு Flowவுல அல்லது blowவுல சொல்லிகிட்டே வந்தேன்.உனக்கு எத்தனை தடவ சொன்னாலும் திருந்தவே மாட்டேங்குறீயேன்னு கூகிளண்ணன் மறுபடியும் கோவிச்சுகிட்டு பின்னூட்ட அனுமதியில்லைன்னுட்டார்.எனவே சொல்ல நினைத்ததை மறுபடியும் நினைவு படுத்தி அடுத்த பின்னூட்டத்தில்.

ராஜ நடராஜன் said...

ஆங்க்!சொல்ல வந்தது நீங்கள் சொன்ன

//எப்பொழுதுமே காங்கிரஸ் அரசு, தன்னுடைய எண்ணவோட்டத்தை NDTV செய்தி வழியாக கசிய விட்டு, ஆழம் பார்க்கும். இப்பொழுது செய்திருப்பது, இலங்கை அரசுக்கான எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்று தோன்றுகின்றது. (இலங்கை இதற்கெல்லாம் அசையாது என்பது தெரியும்)//

என்பது எனது மன ஓட்டத்துடன் சமன்படுகிறதென்றேன்.எப்படின்னா NDTV ஆளும் கட்சியின் ஊதுகுழல் மாதிரி.ஆனால் இதில் Elite groups and all party members opinions are discussed which is a positive sign of journalism.

அடுத்து சொல்ல வந்தது நீங்கள் சொல்கிறபடி இலங்கை இதற்கெல்லாம் பயப்படாத படி ராஜதந்திர ரீதியாக தனை வலுவாக தலையும் வாலும் காட்டிக்கொண்டு இந்தியாவையும் சீனாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது எனபது நமது ராஜதந்திரிகளுக்கு புரிவதில்லை.

நாம் சொல்வதெல்லாம் ஏதோ சின்ன புள்ளக நேரம் போகாம கிறுக்குதுகள் என்று இந்த கிறுக்கர்கள் நினைக்கிறார்கள்.

தேசத்தையும் மானுடத்தையும் நம்மை விட நேசிப்பவர்கள் யார் என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை.இவ்வளவுதானுங்க கும்மி சொல்ல வந்தேன்,இதுக்குப்போய் கூகிளண்ணன் வளவளக்கிறாய்ன்னு கோவிச்சுகிட்டார்:)

கும்மி said...

//தலையும் வாலும் காட்டிக்கொண்டு இந்தியாவையும் சீனாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது எனபது நமது ராஜதந்திரிகளுக்கு புரிவதில்லை//

இருபது ஆண்டுகளாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் ஆயாசமாக இருக்கின்றது. :-(

கும்மி said...

//இதுக்குப்போய் கூகிளண்ணன் வளவளக்கிறாய்ன்னு கோவிச்சுகிட்டார்//

நெறைய தடவை கூகிளண்ணன் இந்த மாதிரி வெளிநடப்பு செஞ்சதுனால, நானும் கமென்ட் போடற வேலைய விட்டு அப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிருக்கேன். இப்பெல்லாம் கொஞ்ச பெருசா பின்னூட்டம் போகும் அப்படின்னு தோணுனா, மெயில்ல டைப் பண்ணி draft - ல போட்டு வச்சிக்கிட்டு, காப்பி -பேஸ்ட் பண்ணி, கமென்ட் பப்ளிஷ் ஆனதுக்கு அப்புறம் டெலிட் பண்ணிர்றேன்.

ராஜ நடராஜன் said...

////இதுக்குப்போய் கூகிளண்ணன் வளவளக்கிறாய்ன்னு கோவிச்சுகிட்டார்//

நெறைய தடவை கூகிளண்ணன் இந்த மாதிரி வெளிநடப்பு செஞ்சதுனால, நானும் கமென்ட் போடற வேலைய விட்டு அப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிருக்கேன். இப்பெல்லாம் கொஞ்ச பெருசா பின்னூட்டம் போகும் அப்படின்னு தோணுனா, மெயில்ல டைப் பண்ணி draft - ல போட்டு வச்சிக்கிட்டு, காப்பி -பேஸ்ட் பண்ணி, கமென்ட் பப்ளிஷ் ஆனதுக்கு அப்புறம் டெலிட் பண்ணிர்றேன்.//

நானும் சில தில்லாலங்கடி வேலை செய்யத்தான் செய்கிறேன்.பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி காப்பி-பேஸ்ட் செய்துக்க வேண்டியது.அப்புறம் மேலே ஹிஸ்டரி போய் பின்னூட்டத்தை திறந்தாலும் கூகிளண்ணன் கண்டுக்காம விட்டுருவாரு.இந்த முறை இரண்டுமே பலிக்கல:)

ராஜ நடராஜன் said...

////தலையும் வாலும் காட்டிக்கொண்டு இந்தியாவையும் சீனாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது எனபது நமது ராஜதந்திரிகளுக்கு புரிவதில்லை//

இருபது ஆண்டுகளாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்களே என்பதுதான் ஆயாசமாக இருக்கின்றது. :-(//

இந்த ஆளுக நாட்டு நலனுக்காக சில விட்டுக்கொடுப்புக்களை செய்திருக்கலாம்.2009 மேமாதம் 19ம் தேதி வரையும் அதனைத்தொடர்ந்து இதுவரையும் காங்கிரஸின் வன்மம் மட்டுமே தெரிகிறது.இப்போது களைத்துப்போட்ட கார்டுகளால் புதிய ஆட்டம் துவங்கியிருக்கலாம்.இன்னும் தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் கதைதான் நடக்குது.

இதற்கெல்லாம் ஒரே வழி.தமிழக ஒற்றுமை.ஆனால் அந்த மந்திர ரகசியம் எங்கே ஒளிந்து கிடக்கிறது என்பது மட்டும் இதுவரைப்புலப்படவேயில்லை.

ரதி தனது பின்னூட்டத்தில் சொன்னமாதிரி உதவி செய்யாட்டியும் பரவாயில்லை.உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே புதுவழிகள் பிறக்கும்.தமிழக கட்சிகள் இனியாவது இதனை உணருமா?

கும்மி said...

//.உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே புதுவழிகள் பிறக்கும்.தமிழக கட்சிகள் இனியாவது இதனை உணருமா?//

கருணாநிதி 'இல்லாத' சூழலில் இது நடைபெறக்கூடும் என்று எண்ணுகின்றேன். 2009 தொடக்கம் முதல் கருணாநிதி தமிழக மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை மிக லாகவகமாக திசைதிருப்பினார். இதுபோன்ற குறுக்கு புத்தி (சாணக்யத்தனம்?) இங்கிருக்கும் வேறு எந்த தலைவருக்கும் கிடையாது. கருணாநிதிக்கு பிந்தைய சூழலில், ஈழ விஷயத்தில் மறு நிர்மாணப் பணிகளில் பங்கு என்னும் கேரட் காண்பிக்கப்பட்டாலும், மக்களின் எழுச்சியை (அப்படி ஒன்று ஏற்பட்டால்) திசை திருப்பும் வல்லமை இப்பொழுதிருக்கும் மற்ற தலைவர்களுக்கு கிடையாது.

-
கருணாநிதி திசை திருப்பிய சில விஷயங்கள். போரை நிறுத்த சொல்லி ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, எம்.பி.க்களை ராஜினாமா செய்யவைக்கப் போவதாக கெடு வைத்து, போராட்டம் நீர்த்து போக வைக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி சில நிமிடங்கள் பேசியதும் ராஜினாமா முடிவு கைவிடப்பட்டது.

மீண்டும் போராட்டம் தொடங்கியதும், நிதி வசூல் செய்தது, மனிதச் சங்கிலி என்று வேறு விஷயங்களை செய்து நீர்த்துப் போக வைத்தார். கடைசி ஆப்பு மாணவர்கள் போராட்டத்தை கல்லூரிகளை மூடியதன் மூலம் செய்தார்.

Thekkikattan|தெகா said...

நாளைக்கு இந்தியாகிட்டயும் காசையும் வாங்கிட்டு சீனாகிட்டயும் காசு வாங்க மாட்டான்னு என்ன நிச்சயம்?//

இப்பவே நடக்கலைங்கிறீங்களா... அடக் கொடுமையே! யூட்யூப் முழுக்க எரைஞ்சி கெடக்கு சீனாக்காரன் ராஜபக்கி மனச எப்படி நக்கிட்டு இருக்கான்னு... அவ்வளவு கட்டுமானங்களை கட்டிக் கொடுக்கிறதாவும்... ஆட்களையும் கொண்டு வந்து இறக்கிதான் ஜரூரா நடந்திட்டு இருக்கும் போலவே வேலைகள். அவனுக்கு வேண்டியது அங்கே ஒரு தளவாடம் நம்மள கீழே இருந்து உன்னிப்பா கவனிக்க... உள்ளர வருவான் பாருவங்க நம்ம மூலமாவே.

//இதுதான் சாக்குன்னு மேனனும்,நாராயணனும் பூந்துகிட்டு ராஜதந்திரம் செய்தா நாடு உருப்படுமா?//

அட கேவலத்தை, இவிங்க பெட்டிக்கடை ஒட்டுப் பீடி சண்டையை நாட்டின் தலையில உட்கார்ந்திட்டு செய்றாய்ங்கப்பா :(( - சகோ வஞ்சம் பாராட்டுறாய்ங்கன்னு சொன்னேனே அதேதான் பண்ணிட்டு இருக்காங்க... near sighted குருட்டு ... நல்லா வாயில வருது!

Thekkikattan|தெகா said...

எனவே சொல்ல நினைத்ததை மறுபடியும் நினைவு படுத்தி அடுத்த பின்னூட்டத்தில்.//

இதை எத்தனை வருஷம் தான் சொல்லிட்டு இருப்பீங்க. கத்துக்க வேண்டாமா, ராஜ நட?

நீங்க ஒழுங்க நோட் பேட் ல அடிச்சு, கொண்டு வந்து ஒட்டுங்க, காணாம போச்சுன்னா திரும்பவும் உடைச்சு, உடைச்சு போட வசதியா இருக்கும்வோய்.

எல்லா இடத்திலும் இதே மாதிரி சொல்லிட்டு இருந்தா எவ்வளவு விசயம் மிஸ் ஆகுது சொல்ல வந்தது. இன்னொரு தடவை இந்த மாதிரி சொல்லி பார்த்தேய்ன்... :|

வானம்பாடிகள் said...

என்கே போகும் இந்த பாதையா. முட்டு சந்துக்குதாண்ணே. நாதாரிப் பயலுவ உலகம் இது. சை:))

ஹேமா said...

பெரியவங்க எல்லாருமா அலசு அலசுன்னு அலசுறீங்க.என்ன சொல்றதுன்னு இரண்டு பதிவுகளையும் பாத்திட்டு இருக்கேன்.

இந்திய அரசியல் தவிர மக்களின் உணர்வில் ஈழத்தமிழனுக்கு நின்மதி வேணும் என்பதில் ஆவலும் அக்கறையும் தெரிகிறது.ஆனால் ஊடகங்கள் வியாபார நோக்கில்தானே.சில வலிகள் பட்டால் மட்டுமே உணரமுடியும் !

Rathi said...

//நாம் சொல்வதெல்லாம் ஏதோ சின்ன புள்ளக நேரம் போகாம கிறுக்குதுகள் என்று இந்த கிறுக்கர்கள் நினைக்கிறார்கள்.//

உண்மையிலேயே சிரித்துவிட்டேன்.

//தேசத்தையும் மானுடத்தையும் நம்மை விட நேசிப்பவர்கள் யார் என்பதும் இவர்களுக்கு புரிவதில்லை.//

நீங்க சொல்ற மாதிரி பதிவுலகம் "Street Voice" ஆ இருக்கலாம். ஆனாலும், இந்திய தேசத்தையும் மானுடத்தையும் நேசிப்பவர்களின் உள்ளக்கிடக்கைகளை இங்குதான் என்னால் காணமுடிகிறது.

ஜோதிஜி said...

2009 தொடக்கம் முதல் கருணாநிதி தமிழக மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை மிக லாகவகமாக திசைதிருப்பினார். இதுபோன்ற குறுக்கு புத்தி (சாணக்யத்தனம்?) இங்கிருக்கும் வேறு எந்த தலைவருக்கும் கிடையாது

கும்மி தங்கராசா உங்க பெயர சொல்லு ராசா?

எத்தனை தெளிவா தீர்க்கமான ஆளுன்னு நிரூபிச்சிட்டீங்க.

எத்தனை பேர்களுக்கு இங்கே இது புரியுது.

நடராஜன் ஏற்கனவே ரஜினி ஆர் எம் வீரப்பன் உரையாடலை உங்கள் பின்னோட்டத்தில் தெரிவித்து இருந்தேன்.

அதன் நம்பக்த்தன்மைக்கு ராசா கும்மி இப்ப அற்புதமாக கும்மி விட்டார்.

கும்மிக்கு என் அன்புப் பரிசு (????)
தெகாவிடம் கடன் வாங்கி தருகின்றேன்.