பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் உணர்ச்சிகரமான ஒன்று கூடுதலால் இன்று ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்.விமானத்தளத்தில் நின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கூட்டத்திலிருந்து துவங்கி அவர் தங்கியிருந்த டோர்செஸ்டர் ஹோட்டலின் முன்பு கூடியிருந்த மக்களைக் கண்டு பிரிட்டனின் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்து கொண்டு நாட்டின் தலை என்ற டிப்ளமட்டிக் என்ற தனி அங்கீகாரத்தால் தப்பித்தோம் பிழைத்தோமென்று நாடு திரும்புகிறார்.
தமிழ் மக்களின் நியாயமான உணர்வுகள் உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்களின் அடிமனத்தில் கனல் விட்டு எழுந்து கொண்டிருக்கிறதென்பதே உண்மை.இதற்கு விதிவிலக்காக சில வழிதவறிய ஆடுகளும்,இலங்கையின் சர்வாதிகார எமெர்ஜென்சி சட்டங்களால் தமிழர்கள் வாய்மூடியாகவும், தவறுகளை சுட்டிக்காட்ட வலுவில்லாத நிலையில் சமத்துவம் பேணும் சில சிங்களவர்களும் இருக்கலாம்.
இவற்றைத் தவிர்த்து தமிழகம் நோக்கினால் அரசியல் களத்தில் நின்று ஈழத்தமிழர்களுக்காக அமைப்பு ரீதியாகவும்,தனிமனித குரல்கொடுப்பவர்கள் தவிர ஏனைய தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே அறியாத் நிலையிலே கண்ணைக்கட்டி விடப்பட்டிருக்கிறார்கள்.ஈழம் திசை மாறிப்பயணித்ததில் மாநில அரசுக்கும்,மத்திய அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறதென்று கிளிப்பிள்ளையாக திரும்ப திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது.
கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுருக்கிறது என்று இன்னுமா தமிழக அரசும்,மாநில அரசும் நினைத்துக்கொண்டிருக்கப் போகின்றன?எங்களுக்கு ஊழல் குற்றங்களையும், குடும்ப அரசியலுக்கு ஜெயலலிதாவுக்கு பதில் சொல்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறதென்று சொன்னால் தள்ளி நின்று தயவுசெய்து மக்களின் உணர்வுகளுக்கு வழி விடவாவது செய்யுங்கள்.குறைந்த பட்சம் நாட்டை விட்டுத் துரத்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சி செய்வது எப்படியென்பதை பிரிட்டன்காரனைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.கூடவே ஜனநாயக ரீதியாக மக்கள் போராடுவது எப்படியென்பதை லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களைப்பார்த்து தமிழ்மக்களும்,மொத்த இந்தியர்களும் இனியாவது கற்றுக்கொள்ளட்டும்.போராட்டமென்றால் கல்லெறிதலும்,பஸ் எரித்தலும் ,ரயில் கொளுத்தலும் நாட்டின் உடமைகளை சேதமாக்குவதல்ல.ஆனால் இவற்றின் காரணகர்த்தாக்களே நீங்களல்லவா?
அடக்குமுறைகளிலும்,சிறை அடைப்புக்களிலும்,மக்களை திசை திருப்பி களியாட்டங்களிலும்,போதையிலும் தள்ளிவிட்டு ஊடகச்செய்திகள் கூட மக்களை போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்று அரசு நடத்துவது மக்களுக்கான மக்களால் நடக்கும் ஆட்சிமுறையல்ல.நாற்காலிச் சண்டைக்காக விடாப்பிடியாக கருணாநிதியும்,ஜெயலலிதாவும் ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக்கொள்வது களைப்பையே தருகிறது.உலகின் எந்த நிர்வாகமும் இப்படி தின்மும் அறிக்கை விட்டுக்கொள்வதேயில்லை.இரு தினங்களுக்கு முன்பான எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று கணக்கு காண்பிப்பதும் அதற்கு தகுந்த மாதிரி ஜெயலலிதா சொல்லும் நகைப்புக்குரியது உண்மையென்பதும் கட்சி சார்பற்றவர்களுக்கு நன்றாகவே புரிகிறது.
ரஜனி படத்து சாகும் நாட்கள் தெரிந்து போனா வாழும் நாட்கள் நரகம்ங்கிற மாதிரி அளவுக்கு மீறிய பணமும் கூட வாழும் நாட்களில் நரகமே.உங்களுக்கெல்லாம் தினமும் இரவில் மெய்மறந்த தூக்கம் வருகிறதா?அரசியல் ரீதியாக எந்த நிலைப்பாடு எடுத்து இருவருமே ஒருவரை ஒருவர் கும்மிக்கொண்டிருந்தாலும் ராஜபக்சே இந்தியா வருவதையும் ,மனிதப்படுகொலை கறைபடிந்தவர்களையும் கோயில் குளமென்று இந்தியா சுற்ற உங்கள் அரசியல் அழுத்தங்கள் கொண்டு அனுமதித்து இருக்க மாட்டீர்கள்.
இணைய உலகம் பரந்து கிடக்கிறது.வந்து பாருங்கள்!அதில் தமிழனின் அவலங்களும்,மனித உரிமை மீறல்களும் தலைவன் என்பதையும் அம்மா என்பதையும் கேலிசெய்து முகத்தில் அறைந்து பதில் சொல்லும்.
27 comments:
சிந்திப்பவர்களை கண்டால் ஆளுபவர்களுக்கு தேளை கண்டது போல்...கண்மூடி நித்திரையில் இருக்கும் தமிழக தமிழர்கள் உண்மையில் நித்திரையில் இருகிறார்களா இல்லை நடிக்கிறார்களா என்று தெரியவில்லை.
கடைசி வரிகள் எதையோ கழட்டி அடித்தது போல் இருக்கிறது.
//சிந்திப்பவர்களை கண்டால் ஆளுபவர்களுக்கு தேளை கண்டது போல்...கண்மூடி நித்திரையில் இருக்கும் தமிழக தமிழர்கள் உண்மையில் நித்திரையில் இருகிறார்களா இல்லை நடிக்கிறார்களா என்று தெரியவில்லை.//
வந்து நேரடியாவே பார்த்துட்டாப் போச்சு:)மக்களுக்கு எது கொடுக்கப்படுகிறதோ அதையே பிரதிபலிப்பார்கள் என்று முன்பு எங்கோ சொன்னமாதிரி நினைவு. தமிழ் ஊடகங்களை கவனித்தால் ஒன்று பட்டும் படாமலும் அல்லது முழுப்பூசணிக்காயை முழுசா மறைக்க விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.அதிகார பயங்கள் இவர்களை எவ்வளவு ஆக்கிரமித்துள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
//கடைசி வரிகள் எதையோ கழட்டி அடித்தது போல் இருக்கிறது.//
ஜோதிஜி!இணையத்தில் கிடைக்கும் ஆவணங்கள்,படங்கள் மனதை மிகவும் பாதிக்கின்றன.ஒருவிதத்தில் இணையம் கற்காத கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.ஏனென்றால் அநீதிகள் கண்ணுக்குத் தெரிவதில்லையல்லவா?
very deeply said. thank you.
//very deeply said. thank you.//
Hope the unbiased views will reach the people largely.Thanks for your appriciation.
உங்களுக்கெல்லாம் தினமும் இரவில் மெய்மறந்த தூக்கம் வருகிறதா?//
அப்படின்னா என்ன ராஜ நட. மனிதனர்களாக உலாவித் திரியும் நான்கு கால் பிராணிகள்...
//படங்கள் மனதை மிகவும் பாதிக்கின்றன.//
எத்தனை உண்மை, நேற்று இரவு தூக்கம் போச்சுங்க. சானல் 4 புது காணொளி பார்த்தது :((
////இணைய உலகம் பரந்து கிடக்கிறது.வந்து பாருங்கள்!அதில் தமிழனின் அவலங்களும்,மனித உரிமை மீறல்களும் தலைவன் என்பதையும் அம்மா என்பதையும் கேலிசெய்து முகத்தில் அறைந்து பதில் சொல்லும்.///// உண்மை
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.
உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.
ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.
//ஜனநாயக ரீதியாக மக்கள் போராடுவது எப்படியென்பதை லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களைப்பார்த்//
ராஜ நடராஜன்,
விமான நிலையப்போராட்டம் தான் பிரித்தானியா வாழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னரான அத்தனை போராட்டமும் கடந்த சில நாட்களாக "ஐரோப்பா" தமிழர்கள் எல்லோரும் தங்கள் பங்களிப்பை செய்கிறார்கள்.
உண்மையில், இங்கே ஓர் விடயத்தை பெருமைக்காக இல்லை, யத்தார்த்த பூர்வமாக சொல்லவேண்டும். பொதுவாக கடந்த வருடம் மே மாதத்திற்கு பிறகு பொதுவாக ஐரோப்பா, கனடா இன்னும் சில நாடுகளில் ஈழத்தமிழர்களின் "ஜனநாயகப் பண்புகள், போராட்டங்கள்" பற்றி ஊடகங்களே பாராட்டுமளவிற்கு பொறுமை காத்திருக்கிறோம், எங்கள் அம்மா, சகோதரிகள் சீரழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்கிற நிலையிலும்.
//ஒருவிதத்தில் இணையம் கற்காத கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.//
எப்படி சொல்றீங்க. கடைசியா இதுக்கு பதில் சொன்னா போதும்.(திசை மாறாமல் இருக்க)
உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.
//உங்களுக்கெல்லாம் தினமும் இரவில் மெய்மறந்த தூக்கம் வருகிறதா?//
அப்படின்னா என்ன ராஜ நட. மனிதனர்களாக உலாவித் திரியும் நான்கு கால் பிராணிகள்...
//படங்கள் மனதை மிகவும் பாதிக்கின்றன.//
எத்தனை உண்மை, நேற்று இரவு தூக்கம் போச்சுங்க. சானல் 4 புது காணொளி பார்த்தது :((//
தெகா!கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அடுத்த பெஞ்சுல உட்கார்ந்திருந்தீங்க:)இங்க வந்துட்டு அங்கே வந்தது தெரியல.
நான்கு கால் பிராணி,எட்டுக்கால் பூச்சின்னு எது சொன்னாலும் இவர்களுக்கு அறிக்கையே பிரதானமாக இருக்குது.மெய்யாலுமே இந்தப்படங்களைப் பற்றியெல்லாம் அல்லக்கைகள் யாரும் சொல்லவே மாட்டாங்களா:(
//////இணைய உலகம் பரந்து கிடக்கிறது.வந்து பாருங்கள்!அதில் தமிழனின் அவலங்களும்,மனித உரிமை மீறல்களும் தலைவன் என்பதையும் அம்மா என்பதையும் கேலிசெய்து முகத்தில் அறைந்து பதில் சொல்லும்.///// உண்மை//
உங்கள் பெயர் வித்தியாசமாகவும் அன்பாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள் நந்தா ஆண்டாள்மகன்.
//அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.
உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.
ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.//
தமிழ்மலர்!வணக்கம்.உங்கள் பதிவுக்கு அடிக்கடி வருகிறேன்.நிருபர் வட்டம்ங்கிறீங்க அதனால விசயம் தெரிஞ்சவங்களா இருப்பேங்களேன்னு ஒண்ணும் சொல்லாமல் வந்து விடுவது வழக்கம்.
என்னோட பார்வையில் இந்தியன் என்பதெல்லாம் வெட்கி தலைக்குனிய வேண்டிய ஒன்றே அல்ல.இந்தியன் என்பதை கௌரவப்படுத்த தவறி விடுகிறோம் என்பதே உண்மை.
//உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள். //
தமிழ்மலர்!இந்த எழுச்சியை நீர்த்துப்போகச் செய்யாமல் இனியாவது தொடர்ந்து போராட வேண்டியது அவசியம்.பதம் பார்க்கும் விதமாக தமிழ்நாட்டில் ஒன்றுபடுவதும் தமிழக முதல்வர் இனியும் எப்படி செயல்படப்போகிறார் என்று வெள்ளோட்டம் பார்ப்பதும் அவசியம்.
////ஜனநாயக ரீதியாக மக்கள் போராடுவது எப்படியென்பதை லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களைப்பார்த்//
ராஜ நடராஜன்,
விமான நிலையப்போராட்டம் தான் பிரித்தானியா வாழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னரான அத்தனை போராட்டமும் கடந்த சில நாட்களாக "ஐரோப்பா" தமிழர்கள் எல்லோரும் தங்கள் பங்களிப்பை செய்கிறார்கள்.
உண்மையில், இங்கே ஓர் விடயத்தை பெருமைக்காக இல்லை, யத்தார்த்த பூர்வமாக சொல்லவேண்டும். பொதுவாக கடந்த வருடம் மே மாதத்திற்கு பிறகு பொதுவாக ஐரோப்பா, கனடா இன்னும் சில நாடுகளில் ஈழத்தமிழர்களின் "ஜனநாயகப் பண்புகள், போராட்டங்கள்" பற்றி ஊடகங்களே பாராட்டுமளவிற்கு பொறுமை காத்திருக்கிறோம், எங்கள் அம்மா, சகோதரிகள் சீரழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்கிற நிலையிலும்.//
ரதி!நானும் நேற்று கேள்விப்பட்டேன்.பிரான்சிலிருந்தெல்லாம் மக்கள் போராட்டக்குரல் எழுப்ப வந்ததாக.பின்னூட்டம் மூலம் மொத்த ஐரோப்பியாவும் வந்தது என்று இதனை பொதுவில் வைத்ததற்கு நன்றி.
போராட்ட ஜனநாயகப் பண்புகள் பாராட்ட வேண்டிய ஒன்று.இதனை தமிழ்நாட்டுக்காரனாக எமது மக்களும் கற்றுக்கொள்ளும் காலத்திற்கு காத்திருக்கிறேன்.
அம்மா,சகோதரிகள் இன்னும் கொல்லப்படுவது என்பது பாதுகாவலன் இல்லாத நாடு என்பதால்.தான் ஆட விட்டாலும் தன் சதை ஆடுமென்பார்கள்.கருணாக்களுக்கும் ஆடுகிறது சதை மேடையில்.
////ஒருவிதத்தில் இணையம் கற்காத கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.//
எப்படி சொல்றீங்க. கடைசியா இதுக்கு பதில் சொன்னா போதும்.(திசை மாறாமல் இருக்க)//
கபீஷ்! எப்படியிருக்கீங்க?கும்மியடிக்க வர இயலவில்லை.மன்னிக்கவும்.
கற்கவில்லை என்பதை எப்படி சொல்கிறேனென்றால் இத்தனை கும்மு கும்முறாங்க பதிவர்கள்.இதுவரைக்கும் ஒரு அறிக்கை கூட இருவரும் வெளியிட்டதில்லை:)
முக்கியமான ஒன்று முதல்வர் கைப்பட கடிதம் எழுதுவதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு டைப்படிக்க வராதுன்னு:)
//உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.//
உங்கள் பதிவுக்கு வந்து வணக்கமும் சொல்லி விட்டுத்தான் வந்தேன்.
இவனுக திருந்த மாட்டானுக.. காரணம் செருப்பால அடிச்சா கூட வாங்கிட்டு ஓட்டு போடுற கூட்டம் இருக்கிற வரைக்கும்.. இனமாவது? உணர்வாவது..
ஒருவேளை உப்பை இலவசமா கொடுத்தால் எதாவது மாற்றம் வருமோ? :(.
காணொளிகளும், படங்களும் மனமிருப்பவர்களுக்கெல்லாம் மனச்சிதைவை ஏற்படுத்துகின்றன.
:banghead:
இந்தப் பதிவுக்குக் கூட மைனஸ் ஓட்டுப் போடும் தமிழ்ச் சமூகம்..... வாய்ப்பே இல்லை :(
இந்தியர்கள் எனும் பொது இனி தமிழர்களை நிறுத்தி பேசுவது அர்த்தமில்லாதது...காஷ்மீரிகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது மற்ற இந்தியர்கள் பேன் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.. இந்தியர்கள் என்பது பெரும் செய்திசேனல்கள் கிண்டிகிளறி வைக்கும் களி அது... அப்படி ஒன்று இல்லவே இல்லை.. மிக கவனமாக சமகால பிரச்சினைகளை கவனியுங்கள் ஏதாவது ஒருவிஷயத்திலாவது நாம் இந்தியன் எனும் பிறரது துக்கத்தில் பங்கேற்று இருப்போமா... இல்லை.. இந்த பன்னாடை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை இனி ஒன்றும் செய்யமுடியாது.. விட்டுத்தள்ளுங்கள் நம்மை (உங்களை) போன்ற பிளாக்கில் எழுதுபவர்கள் சினிமாக்கரானிடமிருந்து முதலில் இந்த சமுகத்தை காப்பாற்ற வேண்டும் பெரும் டார்த்தினியம் போல வளர்ந்த சகல சம்பத்துகளையும் அரித்து தின்றுக்கொண்டிருக்கிறது..
ஒருவேளை உப்பை இலவசமா கொடுத்தால் எதாவது மாற்றம் வருமோ? :(.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>?????????????
இந்தப் பதிவுக்குக் கூட மைனஸ் ஓட்டுப் போடும் தமிழ்ச் சமூகம்..... வாய்ப்பே இல்லை :(
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்று திருந்துவார்கள்,என் இனிய தமிழ் மக்கள்,இதுகளைக் கேட்டாவது?
ராட்ச்சன் ராசபக்சேவை கைது செய்யக்கோரி தூதரகத்திற்கு மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் இயக்கத்தினரை சென்னையில் தமிழக அரசு கைது செய்துள்ளது.
எதிர்ப்பை தெரிவிக்கச் சென்ற இனமானமுள்ள தமிழர்களை, சோனியாவிற்கு சொம்பு தூக்கும் விதமாக தமிழீன அரசு இவ்வாறு செய்துள்ளது.
இவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்கள் பரவாயில்லை, அவர்களாவது எதிர்ப்பை தெரிவிக்க அனுமதித்துள்ளனர்.
Post a Comment