Followers

Wednesday, December 1, 2010

ராஜபக்சேவுக்கு ஒரு ஆப்பு

 மக்கள் போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றியாக ராஜபக்சே லண்டனில் பேச இருந்த லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதை அதன் அதிகார பூர்வ அதிகாரி கடித எழுத்தில் கையெழுத்திட்டு உறுதிப் படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 50ஆயிரம் புலம் பெயர் தமிழர்கள் கூடுவார்கள் என்று நம்ப படுவதாலும் நிகழ்ச்சிக்கும் ராஜபக்சேவுக்கும் பாதுகாப்பில்லை என்று கருதியே இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கொண்டு ராஜபக்சே என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அதை விட பதவியில் இருக்கும் திமிரில் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதை நிறுத்திக்கொண்டு மனிதனாக மக்களுக்கு நல்லது என்ன செய்யலாம் என்பதை மனதில் கொள்ளட்டும்.

இந்த செய்தியை தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏனைய மானிடம் நிலைக்க போராடுபவர்களுக்கும் எடுத்துச் செல்வோமாக.ஒற்றுமை தமிழனிடமிருந்தால் ராஜபக்சே என்ன கோத்தபாய என்ன ?காலம் அதன் தீர்ப்பை சரியாகவே எழுதும்.குளிரையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள்.

21 comments:

நசரேயன் said...

கடமை ஆத்திட்டேன்

ராஜ நடராஜன் said...

//கடமை ஆத்திட்டேன்//

கடமை ஆத்திக்கு நன்றி.

Unknown said...

ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள்.

ராஜ நடராஜன் said...

//ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள்.//

இது யாரு kama? முதல் வருகைக்கு நன்றி.

Bibiliobibuli said...

சமயம் பார்த்து ராஜபக்க்ஷேவுக்கு ஆப்புவைத்ததில் ஒரு பங்கு Channel 4 ஐயும் சாரும்.

ஹேமா said...

தமிழனின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.சனல் 4 இன்னும் புதிதான போர்க்குற்றக் காணொளிகளைக் காட்டுகிறது.
அவமானமும் அதிருப்தியும் கொண்டுள்ளாராம்.என்றாலும் இந்தச் சம்பவத்தின் அழுத்தம் !

ஆ.ஞானசேகரன் said...

//குளிரையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள். //

பாராட்டுகளும்

உமர் | Umar said...

தன்னெழுச்சியாய் நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. லண்டன் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

Act-Now அமைப்பினர் நடத்தும் Purchase & Return போராட்டம் போன்று இதுவும் ஏற்பாடு & ரத்து என்று முடிவடைந்துள்ளது.

நம் ஒற்றுமையையும், ராஜபக்சேக்கு எதிர்ப்பையும் தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.

Thekkikattan|தெகா said...

உங்க கடமை ஆத்திக்கும் நன்றி...

சதுக்க பூதம் said...

http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/243811
ராஜபக்சேக்கு தமிழர் படு கொலையில் உள்ள தொடர்பை காட்டும் wikileaksந் ஆவணம்

karthikkumar said...

சின்ன ஆப்புதான் இருந்தாலும் செமையா வெச்சிருக்காங்க
http://muraimaman.blogspot.com/2010/12/blog-post.html

ராஜ நடராஜன் said...

//சமயம் பார்த்து ராஜபக்க்ஷேவுக்கு ஆப்புவைத்ததில் ஒரு பங்கு Channel 4 ஐயும் சாரும்.//

ரதி!Channel 4 காட்சிகளைக் கண்டால் மனம் கொதிப்பதிலும்,சீமானின் கர்ஜனையிலும் என்ன தவறு இருக்க முடியுமென்றே மனம் கோபப்படுகிறது.

ராஜ நடராஜன் said...

//தமிழனின் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.சனல் 4 இன்னும் புதிதான போர்க்குற்றக் காணொளிகளைக் காட்டுகிறது.
அவமானமும் அதிருப்தியும் கொண்டுள்ளாராம்.என்றாலும் இந்தச் சம்பவத்தின் அழுத்தம் !//

ஹேமா!புலம்பெயர் தமிழர்களைப்பார்த்தாவது எங்க ஊரு தலைகள் திருந்துமா?

நாம் வேண்டுவதெல்லாம் ராஜபக்சே குற்றங்களை ஏற்றுக்கொண்டு மனிதனாக மாறவேண்டும் என்பதே.நாற்காலி என்பது ஒரு சொகுசு.அதுவே சுவாசமல்ல.

ராஜ நடராஜன் said...

////குளிரையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள். //

பாராட்டுகளும்//

தல!உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//தன்னெழுச்சியாய் நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. லண்டன் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

Act-Now அமைப்பினர் நடத்தும் Purchase & Return போராட்டம் போன்று இதுவும் ஏற்பாடு & ரத்து என்று முடிவடைந்துள்ளது.

நம் ஒற்றுமையையும், ராஜபக்சேக்கு எதிர்ப்பையும் தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.//

கும்மி!சரியாக சொன்னீர்கள் தன்னெழுச்சிப்போராட்டமென்று.இதனை முடக்குவதற்கும் முட்டுக்கட்டை போடாத பிரிட்டனின் பிரதமருக்கும்,ஏனைய அமைச்சரக அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.நம்ம ஊர்லயும்தான் ஒண்ணு உட்கார்ந்துகிட்டு கிடக்குதே:(

ராஜ நடராஜன் said...

//உங்க கடமை ஆத்திக்கும் நன்றி...//

ஆத்தி!நாம செய்தி கிடைத்த மறுகணத்தில் பதிவு போட்டா தமிழகத் தொலைக்காட்சிகள் தூங்கி எந்திருச்சு மக்கள் செய்திகள் மட்டும் 9 மணிச் செய்திகள் என்று துண்டுச்செய்தி போட்டதைப் பார்த்தேன்.ஏனைய ஊடகங்கள் இப்பத்தான் பல்லு விளக்கிட்டிருங்கான்னு நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/243811
ராஜபக்சேக்கு தமிழர் படு கொலையில் உள்ள தொடர்பை காட்டும் wikileaksந் ஆவணம்//

சதுக்கபூதம்!பகிர்வுக்கு மிக்க நன்றி.

ராஜ நடராஜன் said...

//சின்ன ஆப்புதான் இருந்தாலும் செமையா வெச்சிருக்காங்க
http://muraimaman.blogspot.com/2010/12/blog-post.html//

கார்த்திக்!ஜனநாயக்ப்போராட்டங்களே அதிகார போதையை தணிக்குமென்று நம்புவோமாக.கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

// உயிருடன் மரண தண்டனையை அனுபவிக்கிறான் அந்த ராட்சசன். தங்கள் பதிவை இன்று முதல் பின் தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி! (madrasbhavan.blogspot.com, nanbendaa.blogspot.com)//

சிவகுமார்!வாங்க!ஹிட் கணக்குக்காக வேண்டியோ பிரபலத்துக்கோ நான் எழுதுவதில்லை.இன்னும் சொல்லப்போனால் பொதுவுலகில் low profile லில் இருப்பதே தனிமனித சுதந்திரத்தை தரும் என்பது எனது எண்ணம்.

இந்த மாதிரி பதிவுகள் நமது கண்முன்னே நிகழும் துயரங்களை தீர்க்க வழியில்லாத காரணத்தால் மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கு வடிகாலாக சொல்லப்படுபவை.

கைகோர்த்துக்கொள்வோம் ஈழத்தமிழர்களின் துயரங்களிலும் அவர்களின் சம உரிமை வாழ்வுக்கான சிறு துளியான பங்கீடாக.நன்றி.

vasu balaji said...

/நாம் வேண்டுவதெல்லாம் ராஜபக்சே குற்றங்களை ஏற்றுக்கொண்டு மனிதனாக மாறவேண்டும் என்பதே.நாற்காலி என்பது ஒரு சொகுசு.அதுவே சுவாசமல்ல./

hi hi. தாத்தாவை ஒத்துக்கச் சொல்லு நான் ஒத்துக்குறேன்னு டயலாக் பேசினா நாம எங்க போறது.அவ்வ்வ்.

செல்ஃபோனில் தகவல் பறிமாரி அருமையாக கட்டுக் கோப்பாக போலீசுக்கு வேலையின்றி செய்த ஆர்பாட்டம் வியக்க வைக்கிறது.

ராஜ நடராஜன் said...

////http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/243811
ராஜபக்சேக்கு தமிழர் படு கொலையில் உள்ள தொடர்பை காட்டும் wikileaksந் ஆவணம்//

சதுக்க பூதம்!நீங்கள் கொடுத்த கார்டியனின் சுட்டியையும் மஞ்சள் நிறக் குறீப்பீடையும் கண்டேன்.தகவல்கள் இயங்கும் முறை,காலத்துக்கேற்றாற் போல் கிடப்பில் போடவோ அல்லது தேவைப்படும் போது உபயோகித்துக்கொள்ளவோ அரசாங்க பதிவுகள் உபயோகப்படுகின்றன என்பது புரிகின்றது.கூடவே அரசியல் ரீதியாக தமிழ்க்கூட்டமைப்பு தலைவர்களாய் சம்பந்தன்,சிவாஜிலிங்கம்,மனோ போன்றவர்களின் நிலைப்பாடு யதார்த்தமானதும் கூட.பொன்சேகா,ராஜபக்சேவின் உள்சண்டைகளைக் கூட அமெரிக்கா பதிவு செய்து வைத்துள்ளதும் ஆச்சரியப்படுத்துகின்றன.தற்போது விக்கிலீக்கின் கேபிள் திறப்பு ஒரு மிகச்சிறந்த ஆவணம்.ஆனால் பொதுவில் வைக்கப்பட்ட ரகசியங்களை அமெரிக்கா இனி எப்படி கையாளப்போகிறதென்பதும் கேள்விக்குறியானதே.

இனி,முக்கியமாக அரசு அதிபராக ராஜபக்சேவுக்கு கேபிள் தகவல்களும் இன்னும் நமது கண்ணுக்குத் தெரியாத விசயங்களும் கூட தெரிந்துருக்கும் பட்சத்தில் தனது தலைக்கு மேல் கத்தி என்கின்ற பயத்திலேயே மேலும் மேலும் தவறான பாதைகளை(மக்களை மீள் குடியமைப்பில் தாமதம்,Rehabilation என்ற பெயரில் சிறையடைப்பு மற்றும் சமீபத்திய வடகிழக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதில் என்ன தவறு என்பதும் சில)தேர்ந்தெடுக்கிறார் என நினைக்கிறேன்.நான் வாரிசு அரசியலை வெறுப்பதன் ஒரு காரணம் தனது சகோதரர்கள்,மகன் தரும் தைரியத்தில் தவறான அணுகுமுறைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான இலங்கையின் ஆட்சிமுறை போன்றவை.இல்லையென்றால் அடக்கி வாசிக்கும் சாத்தியங்கள் கூட இலங்கையில் நிகழ்ந்திருக்கும்

போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களாக ஆவணங்கள்,புகைப்படங்கள் போன்றவை நிறைந்து கிடக்கின்றன.இன்னும் குரல்களை உயர்த்துவோம் என்றாவது ஒருநாள் நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்.