Followers

Monday, June 20, 2011

தமிழ் மணத்திற்கு நன்றி

ஹேமா!நன்றி சொல்றதுக்குள்ளே வந்து நாற்காலியைப் பிடிச்சிட்டீங்க போல இருக்குதே!என்னோட பதவிக்காலம் 20ம் தேதி முடியத்தானே!நான் தமிழ்மணம் கவர்னர்களிடம் பிராது கொடுக்கப்போறேன்.

ஒரு வாரமாக நிறைய எழுதிவிட்டு ஒற்றை வரியில் தமிழ்மணத்துக்கு நன்றின்னு சொல்லி விட்டு டாட்டா காட்டிவிட்டால் நல்லாயிருக்காது:) எனவே வழக்கமாக வள வளக்கும் பாணியில் இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேனே!

பொது ஊடகங்கள் செய்ய வேண்டிய பணியின் ஒரு பகுதியை தமிழ்மணம் செய்கிறது என்பதோடு பல பரிமாணங்களை தமிழ்மணம் திரட்டித் தருவது தமிழுக்கான அரும்பணி.இதனை எப்படி உபயோகித்துக்கொள்கிறோம் என்பதில் தமிழ் பதிவுலகின் எதிர்காலமிருக்கிறது.

பலரும் பதிவுலகில் தமது கருத்துக்களை வைக்கும் நிலை உருவாகும் போது பதிவுகள் எழுத்தாளன் என்ற தகுதியை தருவதை விட கருத்து பரிமாற்றம் என்ற நிலையையே எதிர்காலத்தில் தரும்.ஒரு வரம்புக்குள் இல்லாமல் எழுத்தின் பல பரிமாணங்களை பதிவுலகமே முன் வைக்கிறது என்பதோடு சமூகத்தின் தளங்களை சரியாக பிரதிபலிக்கும் ஊடகமாக பதிவுலகமே பல பரிமாணங்களிலே இது வரை பயணிக்கிறது.கூடவே கிள்ளி விடுவது,கீச்சிடுவது,பொது இடத்தில் இப்படியா குந்திக்குவ குரல் விடுவது என்று ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் கருத்து,உலக வலம்,நகைச்சுவை,சமையல்,அரசியல்,தொழில்நுட்பம்,உதவி,வேலைவாய்ப்புக்கள்,ஈழம் குறித்த அக்கறை,ஈழ விமர்சனம்,திரைப்படங்கள்,உடைக்கும் செய்திகள் என பல பரிமாணங்களை பதிவுலகின் திரட்டியாக தமிழ்மணம் செயல்படுகிறது.தமிழ் தொலைக்காட்சிகளும்,பத்திரிகைகளும் கண்ணாமூச்சி விளையாட உலக நிகழ்வுகளை கணநேரங்களில் முந்திக்கொண்டு வந்து தருவது இணையமும் இணையம் சார்ந்த பதிவுலகும் அதன் அடிநாதமாக விளங்கும் தமிழ்மணமே.

வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி என்ற மகிழ்ச்சியாகவே இருக்கிறது.கட்டுடைப்புக்களோடும்,சமூகஉணர்வோடும்,இலகுபடுத்திக் கொள்ளும் முகமாகவும் கற்றல் என்ற கடலை நீந்தும் இனிய அனுபவத்தை தரும் தமிழ்மணத்தின் நிர்வாக குழுவுக்கும், பதிவுலக நட்புக்களுக்கும் நன்றி.

11 comments:

Anonymous said...

///வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி என்ற மகிழ்ச்சியாகவே இருக்கிறது./// உண்மை தான் பாஸ்...

ராஜ நடராஜன் said...

வாங்க கந்தசாமி!உங்களின் தொடர் பின்னூட்டங்களுக்கும்,நட்புக்கும் நன்றி.

ஹேமா said...

நடா....என்ன்னடா என் பேர்ல பதிவு தொடங்குதேன்னு பாத்தேன்.
திட்டுறீங்களா.திட்டுங்க.நான் இன்னும் நல்லா இருபேனே!

தமிழ்மணத்திலதான் சொன்னாங்க.
”உங்களது நட்சத்திர வாரம் இந்திய/இலங்கை நேரப்படி சூன் 20 திங்கள் கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கும்”ன்னு.
சுவிஸ்ன் நேரவித்தியாசத்தால் இரவு 3 மணிவரையிலதான் பதிவு போட்டேன்.அதாவது எனக்கு திங்கட்கிழமை ஆச்சுத்தானே.
உண்மையாவே தப்பு
பண்ணிட்டேனா நடா !

உங்கள் நடசத்திர வாரம் ஈழமக்கள் அரசியல் ஆர்வமுள்ளவர்கள் அத்தனைபேருக்குமே பிரயோசனமான பதிவுகள்.
உண்மையில் ஜொலித்தீர்கள்.
வெளீயில் தெரியாத எத்தனையோ விஷயங்கள் தெரிய வந்தது.
என்னால் இத்தனை எழுதமுடியாது.
ரதி,ஜோதிஜிக்கு அடுத்து நீங்கள்.
மனதாரப் பாராட்டுகிறேன் நடா !

rajamelaiyur said...

//
வாழ்க்கைச் சூழலில் தமிழே தொடாத நேரத்தையெல்லாம் நினைக்கும் போது தமிழ் மணமும், பதிவுலக நட்புக்களும் கடந்த சில வருடங்களின் வாழ்க்கையின் இனிமையான கணங்களின் ஒரு பகுதி
//

உண்மை ...உண்மை ...

ராஜ நடராஜன் said...

ஹேமா!13 முதல் 20 வரை தமிழ் மணம் கால்ஷீட்!நள்ளிரவு 12மணிக்கே பேக்கப் சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியலை:)

நல்வாழ்த்துக்கள்.கவிதையும்,உரைநடையும்,உப்புமடசந்தி தமிழும் நட்சத்திர வாரத்தில் ஜொலிக்கட்டும்.

ராஜ நடராஜன் said...

ராஜா டீச்சர்:)உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி.

ஒரு பின்னூட்டத்துக்கு இன்னொரு பின்னூட்டம் போடுவேன் என்று நான் பின்னூட்டங்கள் போடுவதில்லை.தமிழ் மணம் முகப்பில் கண்டால் ஹலோ சொல்லுவதே எனது வழக்கம்.

உங்க சிந்திக்கிற போஸ் பசக்குன்னு ஒட்டிகிச்சு.அடுத்த தடவை கண்டால்.... இப்ப ஒரு பாடல் பிரபலமா விளம்பரம் ஆகுது.....

கண்டேனே....உனைக்கண்டேனே என்ற பாடல் மாதிரி

கண்டேனே....உங்களைக் கண்டேனே என பின்னூட்டம் இடுகிறேன்.நன்றி.

Amudhavan said...

எல்லா நேரமும் வெறும் ஆழமான விஷயங்களையே போட்டு மூழ்கடித்துக்கொண்டிருக்கமுடியாது. சமயங்களில் மனதைக்கொஞ்சம் லேசாகவும் வைப்பதற்கான பதிவுகளும் வேண்டும்தாம்.ஆனால் சில பதிவுகள் ஒரேயடியாக வெறும் உமியை மட்டுமே பார்க்கிற கண்களைப் பொட்டையாக்கிவிடும் அளவுக்குத் தூவி விடும் வேலையைச் செய்யும்போதுதான் இத்தனை அருமையான ஊடகத்தை இவர்கள் இப்படி மாற்றுகிறார்களே என்ற வருத்தம் வருவதையும் மறுப்பதற்கில்லை. பின்னூட்டம் என்ற பெயரில் வரும் மறுமொழிகள் இன்னமும் மோசம். தங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிக அருமையாகப் பயன்படுத்தினீர்கள்,பாராட்டுக்கள்.

சிவானந்தம் said...

இந்த நட்சத்திர பதிவை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு வாரம் இந்த பொறுப்பில் இருந்தாலும் இதற்கான உங்களின் உழைப்பு அபிரிதமானது. வலைத்தளம் மூலம் இதுபோன்ற ஆக்கபூர்வமான பதிவுகள் தொடர்ந்தால் நல்லது.

தமிழன்-கறுப்பி... said...

நன்றி ராஜநடராஜன், ஒரு முறையான வாரம்.

A.R.ராஜகோபாலன் said...

தமிழ்மணத்தின்
பயனையும்
பயன்பாட்டையும்
பயனுள்ள வகையில் சொல்லிவிதம் அருமை.
உங்களின் வார்த்தையின் ஆழமாய் என்னை கட்டி போட்டு விடுகின்றது , ஒருவரியே என்னை பலமுறை படிக்க வைத்து ரசிக்க வைக்கிறது நன்றி

ராஜ நடராஜன் said...

ARR!உங்க பின்னூட்டத்தை தாமதமாகவே பார்த்தேன்.நன்றி.