Followers

Sunday, September 9, 2012

விட்டேனா பார்!பனிப்போருக்கும் அப்பால்

முன்னோட்டம் விட்டதுக்கே (ட்ரெய்லர்) நண்பர்கள் படம் ஒரே மொக்கைன்னு பின்னூட்ட விமர்சனம் போட்டுட்டாங்க.பிலிமே இனி மேல்தான் வருது.என்ன பேசிகிட்டிருந்தோம்?சி.ஐ.ஏவும்,கே.பாலசந்தரைப் பற்றியுமா?இப்படி பேசினாத்தான் சம்பந்தமில்லாமல் தலைப்புங்கண்ணா.நாம் பேசுவது பனிப்போருக்கும் அப்பாலான மாற்றங்கள் பற்றி!ஒரு வேளை முன்பு மாதிரி இரட்டை அமெரிக்க,சோவியத் யூனியன் சூழ்நிலை இருந்திருந்தால் யூரி ககேரின்,ஆர்ம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்ட சங்கேத கோடுகள் இணையம் தழுவி வந்திருக்குமா என்பதும் கூட சந்தேகமே.நான் எங்கோ டீ ஆத்திகிட்டிருக்க நீங்க தினமணியும்,தினத்தந்தியும் வாசிச்சுகிட்டு உலகளாவிய அரசியலை அளசிகிட்டும் கூட இருந்திருக்க கூடும்:)

 அமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதால் சிஐஏ வும் இன்னும் நிலைக்கிறது.ஆனால் சோவியத் ரஷ்யா பிரிஞ்சு போன பின் கேஜிபி யும் அதில் பணிபுரிந்தவர்களும் என்ன ஆனார்கள்?சமீபத்து உதாரணமாக சதாம் ஹுசைனின் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் அமெரிக்க படையெடுப்புக்குப் பின் இவர்களை ராணுவத்தில் இணைத்தால் சதாமின் மற்றொரு முகமாக இவர்கள் செயல்படுவார்கள் என்று ராணுவத்தில் இணைக்காததால் தங்கள் ராணுவ திறன்களை அமெரிக்காவின் எதிர்ப்புக்கும் குண்டுவெடிப்புக்கும், ஈராக்கை விட்டு வேறு நாடுகளில் குடிபுகுந்தது என பலவிதமாக சிதறிப்போனது மாதிரி கேஜிபியில் பணிபுரிந்தவர்களும் பலவாறு சிதறிப்போனார்கள்.

இவற்றில் ராணுவ,அணு ஆயுத,வானியல் நுட்ப (Space Technology )ரகசியங்கள் கடத்தல் என்பவற்றோடு சிலர்,இணைய தளத்திற்குள்ளும் நுழைந்தார்கள். இணைய உபயோகிப்பாளர்களின் பெரும்பாலோனோர் இணையத்தை நேரடியான பயன்பாட்டுக்கு உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இதனை மாற்று பயன்பாட்டாக உபயோகிப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1.பொருளாதார நலத்தோடு செயல்படும் ஆன்லைன் ஹேக்கர்ஸ்,
2.பின்னூட்டம் போன்று சில்மிச வேலைகள் மற்றும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாத ஆபத்தில்லாத அனானி குழுவினர்,
3.தனது நாட்டு மக்களையும்,நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை கண்காணிக்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள்.

அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு உதாரணமாக எகிப்தில் நிகழ்ந்த அரேபிய வசந்தத்தை குறிப்பிடலாம்.எகிப்திய புரட்சிக்கு முக்கிய காரணமாக தகவல் பரிமாற்றத்திற்கு பங்கு வகுத்தது யூடியுப்,முகநூல்,ட்விட்டர்,பிளாக்கர் குழுவினரும் மற்றும் ஜிமெயில் போன்ற கடித தொடர்புகளே. இவற்றையெல்லாம் கண்காணிக்க ஹோஸ்னி முபாரக்கின் அரசு அமெரிக்காவிலிருந்து ஒரு மென் பொருளை அதிக விலை கொடுத்து வாங்கியதுடன் மக்கள் புரட்சி கட்டுக்குள் அடங்காமல் போனதும் இணையதள தொடர்பை துண்டிக்க இஸ்ரேலின் உதவியை (Narus of Sunnyvale, California-Isreal based American co)நாடியது.இந்த நிறுவனம் சவுதி அரேபியா,பாகிஸ்தான் போன்ற அரசுகளுக்கும் உதவுவதாக இணைய தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.பாகிஸ்தான் பற்றி குறிப்பிடும் போது 5.1/4 பிளாப்பி டிஸ்க் வலம் வந்துகிட்டிருந்த காலத்தில்   1990களின் கால வாக்கில் ட்ராஜன் மாதிரி பிளாப்பிக்குள் வைரஸ் புகுத்தி விளையாடிய பசீர்,அம்ஜத் என்ற இரண்டு வைரஸ்ரர்களை! இப்போதைய கணினி நுட்ப வளர்ச்சிக்குப் பின் விலாசம்,போன் எண்களை கண்டுபிடித்து 2008 வாக்கில் பாகிஸ்தான் சென்று கதவை தட்ட கதவை திறந்தது அதே பிளாப்பி டிஸ்க் அம்ஜத் என்ற கதையெல்லாம் அடுத்த பதிவு வரை சஸ்பென்ஸ்:)

தங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமாகவும்,சிறந்த தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் போட்டிகள் கூட நிகழ்த்தும் ஹேக்கர்ஸ் நிறைய பேர் இருந்தாலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டும்,தாங்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்று தெரியாமல் செயல்படும் குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பவை ரஷ்யாவை சார்ந்தவை.இப்பொழுது பனிப்போருக்குப் பின்னால் என்ற முந்தைய தலைப்பை ஒட்டி கிட்டத்தட்ட நகர்ந்து விட்டாலும் படத்தோட க்ளைமாக்ஸே இனி அடுத்த பதிவில்தான் வருகிறது.

6 comments:

வவ்வால் said...

நல்ல பகிர்வு, த.ம .2012.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!அமெரிக்காவில் பேசினால் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.நீங்க எந்த மாதிரி கைதட்டுறீங்கன்னு தெரியாதா என்ன:)

த.ம 2012? தபால் பெட்டி 2012 ன் குறுந்தொகையா:)

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//இப்போதைய கணினி நுட்ப வளர்ச்சிக்குப் பின் விலாசம்,போன் எண்களை கண்டுபிடித்து 2008 வாக்கில் பாகிஸ்தான் சென்று கதவை தட்ட கதவை திறந்தது அதே பிளாப்பி டிஸ்க் அம்ஜத் என்ற கதையெல்லாம் அடுத்த பதிவு வரை சஸ்பென்ஸ்:)//

என்ன...பதிவை ரொம்பவும் த்ரில்லா கொண்டு போறீங்க....

த.ம.2013...:-( (இது வவ்வாலுக்கு)

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

1.//அமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதால் சிஐஏ வும் இன்னும் நிலைக்கிறது.

இப்படியும் சொல்லலாம்

அமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதன் முக்கிய காரணம் சிஐஏ //

2.// குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பவை ரஷ்யாவை சார்ந்தவை.//
இபோதிய இரஷ்யாவை சேர்ந்தவர்கள் எனில் பனிபோருக்கு பிந்தைஅய் தலைமுரை அவ்வளவுதான்.

சகோ சோவியத் யூனியன் சிதறியது 1991ல். அப்பொது அது கணிணித் துறையில் வலிமை கொண்டதாக இருந்து இருப்பதன் வாய்ப்பு மிக குறைவு.
http://en.wikipedia.org/wiki/Timeline_of_computer_security_hacker_history//
அணு தொழில் நுடபம், ஆயுதம் போன்றவற்றில் வல்லமை கொண்ட சோவியத் அறிவியலாளர்கள் இருந்தார்கள் என்பது உண்மையே.


3. //எகிப்திய புரட்சிக்கு முக்கிய காரணமாக தகவல் பரிமாற்றத்திற்கு பங்கு வகுத்தது யூடியுப்,முகநூல்,ட்விட்டர்,பிளாக்கர் குழுவினரும் மற்றும் ஜிமெயில் போன்ற கடித தொடர்புகளே.//

இணையப் புரட்சி என்பதும் உளவுத் துறைகளால் கதை ,வசனம் எழுதி இயக்கப்படும் நாடகம் என்பதே என் கருத்து.

புதிய சுரண்டலுக்கு ஏற்ப மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றும் ஒரு திட்டத்தின் சிறு பகுதி என்பது என் கணிப்பு!!

துனிசியாவில் இருந்து லிபியா,எகிப்து என சிரியாவரை நடப்பது என்னமோ செய்யப் பார்க்கிறார்கள் எப்படி என சரியாக புரியவில்லை!!!



*********

ஹி ஹி

அதே போல் நீங்களும் பனிப்போருக்கு அப்பால் என்று சொல்லி கே ஜி பி,சோவியத்,ஹாக்கர், அரபு புரட்சி என எது எதையோ தொட்டு வருகிறீர்!!

ம்ம்ம்ம் குழப்புதே!!!!!!!!!!
பாக்கலாம் அடுத்த பகுதியை

நன்றி!!!!!!!!!!!!

வவ்வால் said...

சகோ.சார்வாகன்.

நீங்க மட்டும் தான் இந்த புரட்சி ,புண்ணாக்கின் பின்னால் என்ன இருக்குன்னு புரிஞ்சு இருக்கிங்க, இந்த ராச நடை எல்லாம் எதாவது சொன்னால் நான் கொட்டுறேன்னு சொல்லும்.

அப்படி இணையம் யூடூயுப் எல்லம் புரட்சி செய்யும் எனில் வால் ஸ்டீரீட் போராட்டம் மூலம் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் வந்திருக்கும்.

எகிப்தை விட அமெரிக்காவில் அதிகம் இணையம் பாவிப்போர் உள்ளனர்.

இவருக்கு தொ.காவில எவனாவது வந்து சொன்னா அதான் ஊன்மை ,இங்கே எல்லாம் இனிமே வந்தால் தம.2012 தான் போடணும் :-))
-----------------

சு.பி.சுவாமிகள்,

என்ன அடுத்த ஆண்டுக்கு இப்போவே காலண்டர் அடிக்குறிங்க, கவலையே படாதிங்க, நான் அடுத்த ஆண்டும் த.ம. 2013 போடுவேன், (இன்ஷா அல்லா ,நீங்க கூட சொல்லாம த.ம 2013 சொல்லிட்டு போறிங்க,இபோ வர வர ரொம்ப நாத்திகம் ஆகிட்டிங்க)

அப்படியே நான் மறைந்து போனாலும் ஆள்/ஆவி மூலம் த.ம 2013 போட வைப்பேன் :-))

Anonymous said...

நல்லதொரு பதிவு சகோ ... !!!

இணையம் என்பது ஒரு கூர்வாள் போன்றது .. மக்கள் தமக்குள் தாம் உறவுக் கொள்ளக் கூடியதாக உள்ளது .. ஆனால் இணையம் என்பது நன்மையும் செய்யும், தீமையும் செய்யும் ... !!!

ஒரு மக்களை நல்ல விடயங்களுக்காக ஒருங்கிணைக்க முடியும் .. அதே போல மூளைச் சலவை செய்து தீய வழிகளுக்கும் அவர்களை ஒருங்கிணைத்து விட முடியும் ...

ஒரு தேச அரசாங்கம் தமது மக்களைக் காப்பாற்ற இணையப் பாவணைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டியாதாக உள்ளது. குறிப்பாக அஸ்ஸாம் நிகழ்வின் போது பாகிஸ்தானிய ஆதரவுடன் பரப்ப பட்ட விசமச் செய்திகளை சொல்லலாம் .. அதே போல ஒரு அரசு நினைத்தால் மக்களின் குரலை இணையத்திலும் நசுக்க முடியும் .. சீனா, இரான், மத்தியக் கிழக்கு, இலங்கை, என்பது தொடங்கி இப்போது இந்தியா, மேற்கு நாடுகள் வரை அவை நீண்டுள்ளது !!!

இதில் கெட்டிக் காரன் எவனோ அவனே இணையத்தில் வெற்றியாளானாய் வருவான் !!! பெரும்பாலான ஹேக்கர்கஸ்கள் சீனா, ரசியாவில் இருந்து செயல்படுகின்றனர். அந்த நாட்டு அரசுகளே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன.

ஒரு கொசுறுத் தகவல். தெற்காசிய போர்னோகிராபி இணையதளங்கள் பலவும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன.. இது எப்படி இருக்கு ?!!! திரிஷா குளிக்கும் காட்சிக் கூட பாகிஸ்தான் சென்று அங்கிருந்து வெளிவரும் .. !!!