Followers

Monday, September 10, 2012

பகிர்தலும் நன்றே - TED ideas worth spreading

பனிப்போருக்கு அப்பாற்பட்ட மாற்றமாக சோவியத் உடைந்ததும்,ஜெர்மன் சுவர் வீழ்ந்ததையும் விடவும்  உலகின் 21ம் நூற்றாண்டின்  புரட்சியாக தகவல் தொழில் நுட்பமும் இணையம் சார்ந்த மாற்றங்களுமே முக்கியமானவை.(தலைப்பு இன்னும்  ஒரே கன்பூசன்னா இருக்கே:))

இது வரையிலும் மேசைக்கணினி,மடிக்கணினி என்ற நிலையிலிருந்து கணினி திரையுடன் கூடிய மூடித்திறக்காதவாறு கணினி திரை,தட்டச்சு கீபோர்டு ,எலிக்குட்டி என மூன்றும் தனித்தனியாக வயரும் வேண்டாம் கயிறும் வேண்டாம் என புதுக்கணினிகள் எட்டிப்பார்க்கின்றன.

இதை விட  காணொளிகள்,வீடியோ,தொலைக்காட்சி போன்றவைகளைக் காண கணினியே தேவையில்லையென்ற இணைய தொடர்புகள் கூடிய Sling box,Tivo,Roku என பல சாதனங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் இவை அமெரிக்காவின் நுகர்வை ஒட்டியே கிடைக்கிறது. மற்றவர்களுக்கும் மாற்று வழிகள் சிலவும் இருக்கின்றன.இதனையெல்லாம் தொட்டால் பதிவு இன்னும் நீளமாகப் போய்விடும் என்பதோட நாடுகளின் சட்ட சிக்கல்கள் என்பதால் தற்போதைக்கான தேவையாக கணினி சார்ந்தே இயங்குவதும் தேடல் தேடி அலைவதும் ரசனை சார்ந்து மட்டுமல்ல புதிய சிந்தனைகளை நோக்கி செல்ல TED பற்றி பேசுவோம்.



அமெரிக்காவின் போர் முக கெட்ட குணங்களுக்கு மாற்றாகவும் உலகின் அடுத்த தலைமுறைக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மேற்கத்திய சிந்தனைகளோடு பலர் இருப்பதை காணமுடிகிறது.நாம் பெரும்பாலும் அரசியல், பொருளாதாரம்,சமூகம்,மதம்அறிவியல் சார்ந்தே சிந்திக்கிறோம். இங்குமங்கும் சில சலசலப்புக்கள் உருவானாலும் கூட திரட்டிகளும்,பிளாக்கர்களும் கருத்து பரிமாறல் என்ற எல்லையை நோக்கியே பயணம் செல்கிறார்கள்.
 
நாம் வலையர்களாக தினமும் தட்டச்சி பேசிக்கொள்வதைப் போல் ideas worth spreading என்ற வாசகங்களோடு TED என்ற குழுவும் நேரில் பேசிக்கொள்கிறார்கள். TED குழுவினர் மதம்,தேசம்,பணம் என்ற எல்லைகளைக் கடந்து உலகின் புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.கேபிடலிச,கம்யூனிச,சோசியலிச கொள்கைகளின் நிறை குறைகள் அலசுகிறார்கள்.உலக மயமாக்கல்,ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சீனா எப்படி இந்தியாவை முந்திக்கொண்டது எனவும் மனித உரிமைகள்,ஜனநாயகம் சார்ந்து சீனா இன்னும் பின் தங்கியிருப்பது போன்றவையெல்லாம் பேசப்படுகின்றன. 

எகிப்தின் அரேபிய வசந்தத்தில் அல்ஜசிரா தொலைக்காட்சியின் நேரலை பங்கு பற்றி அலசப்படுகிறது. TED குறித்த தேடலில் இந்த குழு பற்றி ஏற்கனவே சிலர் அறிந்திருக்கிறார்கள்.அவர்களுக்கான சுட்டி,காணொளி,தமிழில் இதனைக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற ஆர்வலர்கள் சிலர் இருப்பதையெல்லாம் பிள்ளையாண்டான் என்பவர் பதிவு செய்திருக்கிறார்.நம்ம கே.ஆர்.பி செந்திலும் TED பற்றி அவரது தளத்தில் பேசியிருக்கிறார்.ஆனால் இவை பரவலாக போய்ச் சேரவில்லையென்பதை உணரமுடிகிறது.

    (புதிய மத அடையாளக் குறியீடுகள்)
மத அடையாளங்களை தமது பாரம்பரிய நம்பிக்கைகள் என்ற அளவிலும் பல தனி மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும் ஊன்று கோல் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டு கோள்களின் உருவாக்கம்,முதல் செல், நியாண்டர்தால்,ஹோமோசெபியன் என்பதன் தொடராகவே இன்றைய மனிதன் என்பதை காணொளிப் பிரியர் சகோ.சார்வாகன் தமிழில் அழகாக வைத்தாலும் கூட நம்பிக்கை பழக்கத்தில் அதனை ஏற்றுக்கொள்ள பலருக்கும் விருப்பமின்மை மனரீதியானது.அறிவியல் உண்மைகளை வெறுமனே வெளிப்படுத்தி விட முடியாது.அதற்கான ஆதாரங்கள்,ஜர்னல் தியரி, உறுதிபடுத்தல் என பலவும் அடங்கியுள்ளன.அதன்படி ஹோமோ ஹேபிலிஸ் என்ற குரங்கின் வழியே இன்றைய மனிதன் என்பதையெல்லாம் TED குழுவில் பேசப்படுகிறது.TED குழு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால் ஒவ்வொரு துறை வல்லுனர்ளும் ஆய்வு செய்பவர்களுமே உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே கருத்து பகிர்வு செய்கிறார்கள்.

(தலைப்பு பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைன்னு இகி...இகி க்க வேண்டாம்.நம்ம தாத்தாவுக்கும் தாத்தா ஹோமோ ஹெபிலிஸ் இவர்தானாம்!நம்பினால் நம்புங்க)
பரிணாமம் சார்ந்து மட்டுமல்ல சமூகம், பொருளாதாரம், அரசியல், கல்வி, விவசாயம் என பலவும் பேசப்படுகின்றன.நம்ம ஊர் சசி தரூர் கூட கேபிடலிசத்தின் இரு பக்கங்கள் என இந்தியாவின் பரிமாணங்களை சொல்லி இத்தாலியில் பிறந்த சோனியாவின் தலைமையில் தாரளமயமாக்கலின் பிரதமர் மன்மோகன் சிங்கை இஸ்லாமிய அப்துல் கலாம் பதவியேற்பு செய்து வைத்தது உலகில் எங்கும் நிகழாத அதிசயம் என தனது இந்திய விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். இன்னொருவர் கொரியாவா,சீனாவா என தெரியவில்லை இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் உள்ள பொருளாதார,,ஜனநாயக வித்தியாசங்களை பட்டியலிட்டு விட்டார்.பார்க்கும் போது நம்மீது நமக்கே பரிதாபம் ஏற்படுவதோடு ஜனநாயகத்துக்கு ஏற்படும் கெட்ட பெயருக்கான நிர்வாக சீர்கேடுகள் குறித்த கோபமும் எழுகின்றது.ஆமை நடை வெற்ரியெல்லாம் பள்ளிப்பாடத்துக்கே உதவும்.பொருளாதாரத்தில் முயல் அல்ல ஓடும் பந்தய குதிரையே வெல்லும்.

இதில் Anthropology எனும் பழைய மண்டையோடுகளின் காலம்,வயது,ஆணா பெண்ணா எனவும்,டைனோசர்கள் வாழ்ந்த காலம் பற்றியும்,கோளங்களின் ஆண்டுகள்,முதல் உயிருக்கான குரோம்சாம்கள்,நியாண்டர்தால் காலத்திற்கு பின்பான ஹோமோசெபியன் என பலவும் பேசப்படுகின்றன.

குற்றங்களும்,தண்டனைகளும் என்ற தலைப்பில் சிறு குற்றங்களுக்கான காரணங்களிலிருந்து என்ரோன்,ஷேர் மார்க்கெட் வரையிலான கார்பரேட் குற்றங்களும் விவாதிக்கப்படுகின்றன.இதில் குறிப்பிடும்படியாக காவல்துறைக்கு தனிமனிதர்களை துன்புறுத்தும் அதிகாரம் கொடுக்கக்கூடாது எனவும்,இதனை சீனா சட்டபூர்வமாக்கியிருப்பதாகவும் கூறுவது இந்தியா சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

மும்பாய் தீவிரவாத தாக்குதலில் காவல்துறை குண்டு வைத்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்க 1298 என்ற தனியார் குழு ஆம்புலன்ஸ் உடனடி சிகிச்சைக்கு உதவியதில் சுமார் 150 உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதை அறிய முடிகிறது.

நாம் சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போல் சுவர்களில் வண்னங்களால் கிறுக்கி வைத்ததைப் பார்த்த ஒரு பெண் சுவர் முழுவதும் 

before I die I want to--------------

என்று நிரப்பி வைக்க பலரும் ஆக்கபூர்வமாக எழுதி வைத்ததை காணமுடிந்தது என்கிறார்.டெல்லி, குஜராத், உதயபூர், மும்பாய், கோவா, கேரளா, பஞ்சாப், வாரனாசி என பல இடங்களில் இந்தியாவில் செயல்படும் இந்த குழுமம் தமிழகத்தில் இல்லாததன் காரணம் என்ன?

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக  விமானம் ஏர்போர்ஸ் 1ல் பயணம் செய்து விட்டு இப்பொழுது விமான நிலையத்தில் கையை நீட்டிக்கொண்டு விமான பயண பாதுகாப்புக்காக மற்ற பயணிகளோடு நிற்கும் என்னோட நிலையைப் பார்த்தீர்களா என்று சொல்லி சிரிப்பூட்டும் முந்தைய அமெரிக்க துணை ஜனாதிபதி அல்கோர், இங்கிலாந்தின் முந்தைய பிரதமர் கார்டன் பிரவுன், இப்போதைய டேவிட் கெமரான் என்பவர்களோடு மொஹஞ்சோ தாரோ அடையாளங்கள் சித்திர வடிவான மொழி வடிவமே எனும் இந்திய ராவ் வரை   TED குழுமத்தின் அங்கத்தினர்கள்.TED Talks போன்ற கலந்துரையாடல்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதியின் கனவை நோக்கிய மேற்கத்திய சிந்தனை.படம் பார்த்தால் போதும்.நன்றி.


சுட்டிகளுக்கும் நன்றி நன்றி:

நம்ம கே.ஆர்.பி செந்தில்

http://krpsenthil.blogspot.com/2010/07/ted.html

http://pillaiyaandaan.blogspot.com/2011/02/ted.html
பிள்ளையாண்டான் சொன்ன சுட்டிகள்

இன்னும் கூகிளில் தேடியவை

மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.


http://www.ted.com/talks/lang/ta/marisa_fick_jordan_shares_the_wonder_of_zulu_wire_art.html

அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்
http://www.ted.com/talks/lang/ta/aditi_shankardass_a_second_opinion_on_learning_disorders.html

அதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்

http://www.ted.com/talks/lang/ta/dan_pink_on_motivation.html

மனம் திறக்கிறார் பில் கேட்ஸ்

http://www.ted.com/talks/lang/ta/bill_gates_unplugged.html


மிஷ்கின் இங்வாலே: இரத்தக் கசிவில்லா இரத்தப் பரிசோதனை
http://www.ted.com/talks/lang/ta/myshkin_ingawale_a_blood_test_without_bleeding.html

ப்யாடீ மேஸ் விளக்கும் "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்

http://www.ted.com/talks/lang/ta/pattie_maes_demos_the_sixth_sense.html

வாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்
http://www.ted.com/talks/lang/ta/wadah_khanfar_a_historic_moment_in_the_arab_world.html

லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்
http://www.ted.com/talks/lang/ta/lalitesh_katragadda_making_maps_to_fight_disaster_build_economies.html

























6 comments:

ஜோதிஜி said...

நடாஜி

கணினியில் அதிக நேரம் படிக்க முடியவில்லை என்ற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த பதிவைப் பார்த்து ஒவ்வொரு சுட்டியாகப் போய்ப் பார்த்த பிறகு வலைதளம் இன்னும் வேறொரு வகையில் பிடிஎஃப் முறையில் ஒவ்வொரு தளத்தையும் நாம் புத்தகம் படிப்பது போல வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.

வவ்வுஜி, சார்வாகன், உங்கள் தளம் போன்ற அத்தனையும் தனியாக எங்கேயாவது மாட்டிக் கொண்டு வேறு வழியே இல்லை என்கிற போது கிடைக்கும் ஓய்வில், பொறுமையும் ஒன்று சேர நிறைய படிக்க முடியும். பல விசயங்களைப் பற்றி உருப்படியாக அதிகமாக தெரிந்து கொள்ள முடியும்.

இப்போதைய வலைதளம் அவசரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. நிச்சயம் குப்பைகள் ஒரு நாள் ஒதுங்கி கீழே மக்காகி புதைந்து போகும் சமயத்தில் இது போன்ற தளங்கள் வெளியே வந்து நிற்கும். நம்ம கூகுள் காரன் இந்த விசயத்தில் தெளிவாகவே இருக்கான். பல விசயங்களுக்கு தேடி அலைந்த போது பார்த்த உண்மை இது.

நிச்சயம் இந்த பதிவுக்கு அதிகம் உழைத்து இருப்பீர்கள். நல்வாழ்த்துகள்.

suvanappiriyan said...

நிறைய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி! சுட்டிகளை இனி மேல்தான் படிக்க வேண்டும்.

வவ்வால் said...

ராச நடராசர்,

//(தலைப்பு இன்னும் ஒரே கன்பூசன்னா இருக்கே:))//

இனிமே ஒன்னியும் கன்பூசனே இல்லிங்க, சூப்பர் ஸ்டார் எந்திரன் படம் நடிச்சது கூட பனிப்போருக்கு அப்பால் தான் என்ற அறிவொளி எனக்க்கு உங்கள் மூலம் கிட்டிவிட்டது :-))

இந்தப்பதிவை நான் படிக்க காரனம் கூட பனிப்போருக்கு அப்பால் ஏட்ர்பட்ட மாற்றங்களே காரணம்!

நல்ல பஜ்ஜ்சி சுட்டு இருக்கிங்க, பொறுமையாப்படிக்கிறேன், ஆனால் எனக்கு டெட் மேல ஈர்ப்பு இல்லை அதை சொன்னால் என் மேல பாய்வீங்க, எனவே டெட் என்பதும் பனிப்போருக்கு அப்பால் ஏற்பட்ட மாற்றம் என்பதை வழிமொழிந்து அப்படியே ஓரங்கட்டிக்கிறேன்!

----------

ஜோதிஜி,,

இப்படியா ஊமைக்குத்தா குத்துறது, அதாவது ரொம்ப கொடுமையா என்ன செய்றதே தெரியலைனா தான் படிக்கலாம்னு வகைப்படுத்திட்டிங்களே அவ்வ் :-))
-------------

Easy (EZ) Editorial Calendar said...

நிறைய தகவல்கள்.....பகிர்வுக்கு நன்றி!!!


நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஜோதிஜி said...

pls check google chart

வருண் said...

***"பகிர்தலும் நன்றே - TED ideas worth spreading"***

என்னங்க நீங்களே ஆங்கிலத் தலைப்பு!
(தலைப்பிலேயே ஒரு குறை கண்டுபிடிச்சாச்சு! )

TED ideas worth sharing பத்தி பேசலையா? இது வேறயா? அதேதான்போல. ரெண்டும் ஒண்ணுதான் போல, சரி விடுங்க.

இந்த TED ம் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் சிந்தனையால் உருவானதுதானா?

அப்படினா அதை இந்தியர்கள் கட்டாயம் புறக்கணிக்கனும்னு சொல்றீங்களா?

ஆமாவா? அப்போ சரி! :)

இல்லையா?!!!

ஏன்??????????????????????