Followers

Monday, December 31, 2012

ஒரு பதிவு உருவாகும் கதை

இந்த பதிவு திடீர்ன்னு முளைப்பதற்கு இரண்டு காரணங்கள்.முதலாவதாக நணபர் ஜோதிஜி வலைச்சரத்தை அலங்கரிக்கும் முகமாக சொல்லியிருந்த பதிவிடும் திட்டமிடல். திட்டமிடல் எதுவுமே இல்லாமல் அப்படியே இங்கே வந்து உட்கார்ந்து கொள்ளும் நம்ம பதிவு ஸ்டைல்.

இரண்டாவதாக தமிழின் தலையெழுத்து என்ற தலைப்பில் விடுதலை தளத்தின் கருத்தும்.தமிழகத்தில் இந்தி,தமிழ்,ஆங்கிலம் மும்மொழி திட்டம் தோல்வியடைந்ததில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பும்,மாணவர் போராட்டம் வலுவடைந்து மத்திய அரசின் மறுபரிசீலனையில் இந்தியை பின் தள்ளிவிட்டு தமிழ்,ஆங்கிலம் தமிழகத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. 

கலைஞரின் குடும்ப நலன் அரசியல் இப்போது சந்திக்கு வந்துவிட்டாலும் கூட அவரது ஆட்சிக்கால கல்வி சீர்திருத்தங்களை பாராட்ட வேண்டும்.இந்தி படம் பார்க்க முடியலை,டெல்லியில் எழுத்தர்,தட்டச்சர்,கணக்குப்பிள்ளை வேலைக்கு தமிழர்கள் போட்டி போட முடியவில்லையென்ற  பொதுவான ஆதங்கங்கள் தவிர தமிழர்களுக்கு எந்த வித இழப்புமில்லை.ஆனால் வாரே வாவ் என்று உச்சுக்கொட்டும் இந்தி கவிதைகள்,ஹிந்துஸ்தானி இசை,கஜல் போன்றவற்றை ரசிக்க முடியாமல் போவதற்கு இந்திமொழி புரியவில்லையே என்ற வருத்தம் சரியாக இருக்கும்.,ஒரு மொழி மண் சார்ந்தே உச்சரிக்கப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் மெட்ராஸ் (சென்னை) தமிழ்,தஞ்சாவூர்,கும்பகோணம் பகுதி தமிழ்,மதுரை,நெல்லை,கொங்கு,ஈழத்தமிழ் எனலாம்.

அது போலவே இந்தி உச்சரிப்பும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன.நமக்குத்தான் இந்தி தெரியாதே நம்மை விட்டு விடுவோம்.கேரளாவில் ரயில் பிடித்து சந்திரனில் சாயா கடை போடும் சேட்டன்கள்,ஏமண்டி மரியாதை ஆந்திரகாருகள் இந்தி பேசுகிறார்கள்.இவர்கள் இந்தியை பற்றி சொல்வதற்கு முன் சேட்டன் சாயா கடை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.முன்பு மெட்ராஸில் கார் உபரி சாதனங்கள் விற்கும் காயலாங்கடை மவுண்ட்ரோட்டின் மத்தியில் இருக்கும.அந்தப்பகுதியை இப்பொழுது நவீன சென்னை மின்பொருள் அங்காடிகளாக மாறி விட்டன.

ஆங்கிலப் படம் பார்ப்பவர்களுக்கும்,அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும் ஸ்கேரேப் எனப்படும் பழைய கார்களை நொறுக்குமிடம் தெரிந்திருக்கும்.வளைகுடா நாடுகளில் யாருமே நடக்க கூடாதுன்னு எழுதாத சட்டம் என்பதால் எங்கும் வாகன மயமென்பதால் பன்னாட்டு கார் உற்பத்தியாளருக்கு நல்ல போணி.பழைய வாகனங்கள் உபரி பாகங்களுக்காகவும்,விபத்தில் காவல் துறை சேமிப்பு கிடங்காகவும் நகரின் எல்லையை தாண்டி இருக்கிறது.கார் ரேடியேட்டர் ஃபேன் மற்றும் நம்ம வழக்கமாக வண்டி பழுது பார்க்கும் பாகிஸ்தானிய பழுதுபார்க்குமிடமிருப்பதால் சென்ற வாரம் செல்ல நேரிட்டது.

அமெரிக்க ஹம்மர் வண்டியிலிருந்து கொரியாவின் ஹுண்டாய் வரை கடை பரப்பியிருக்கும் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,ஈரான்,சிரியாக்காரர்களில் ஒரே ஒரு சாயா,பரோட்டா கடையொன்று நம்ம இந்திய சேட்டனுடையது.இப்படி உழைப்பை கொட்டும் சேட்டன்களின் இந்தியும் சரி, இந்தி படங்களில் முதலீடு செய்யும் ஆந்திரக்காரர்களின் இந்தியும் சரி இந்திப்பட உலகில் ஒரு நக்கலான நையாண்டி முறையிலே மெதராஸி இந்தி என சித்தரிக்கபடுகிறது.இந்த நையாண்டியின் வரலாறு நம்ம ஆச்சி மனோரமா இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் இருவரும் சேர்ந்து நடித்த குன்வாரா பாப்' என்ற படம். (பிரம்மச்சாரித் தந்தை) என்ற இந்தி படத்தில் மெஹ்மூத் இந்தியை உச்சரிக்கும் முறையில் துவங்குகிறதென்பது எனது ஆராய்ச்சி.மாற்றுக்கருத்து இருந்தாலும் உள்வாங்கிக்கொள்ளலாம்.பிரச்சினையில்லை.

 மேலும் தென் மாநிலங்களில் எந்த மாநிலத்தவர்கள் இந்தியை மெஹ்மூத் ஸ்டைலில் உச்சரிக்கிறார்கள் என்று கவனித்ததில் ஆந்திரவாடுகள் உச்சரிப்பு மெஹ்மூத் உச்சரிப்புடம் கொஞ்சம் ஒட்டிப்போகின்ற மாதிரி தெரிகிறது. இப்பொழுதும் என்னை கிண்டல் செய்யும் ஒரு குஜராத்திக்காரன் மெஹ்மூத் ஸ்டைல் இந்தியிலே என்னோடு பேசுவான்:) அவனுக்கு தெரியுமா நம்ம அரை குறை இந்தியே இந்தி படம் பார்த்துத்தான் கற்றுக்கொண்டதென்பது.

சரி!என்னனென்னமோ உளறுவதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னா முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பல மொழி கற்றுத் தேர்ந்தவராம்.கிட்டத்தட்ட பத்து,பதினெட்டு மொழிப்புலமை கொண்டவராம்.
அப்ப தலைப்பின் விகுதி? எந்த மொழியும் உருப்படியா இல்ல.மூக்கும் முழியுமா இருந்த பெண்ணோடு படித்த பிரெஞ்சு முதல் இன்|றைய அரபி வரை எதுவும் நாக்கில் ஒட்டாமல் சொல் தடுமாற்றங்களில் பேசும் போது வீட்டில் வாங்கிக்கட்டிக்கொள்வது மட்டுமே மிச்சம்.எனக்கே இப்படின்னா இப்ப புரியுதா நரசிம்ம ராவ் ஏன் வாயே திறக்கம இருந்தார்ன்னு?அவர் சொல்லிக்கொடுத்த பேசும் நுட்பத்தைத்தான் இப்ப மன்மோகன் சிங் பயன்படுத்துகிறார்.

கொஞ்சம் உளறுகிற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு முதலில் வைத்த தலைப்பு  நரசிம்மராவின் மௌனமும் என்னோட உளறுவாயும்.

மனம் போன போக்கில் சொல்லியவை எத்தனையென்று இன்னும் எண்ணிப்பார்க்கவில்லை.2012க்கு இதுதான் கடைசி பதிவு.

நன்றாக தமிழ் பேச முயற்சி செய்வோம்:)

அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.





11 comments:

வவ்வால் said...

ராச நட,

//எனக்கே இப்படின்னா இப்ப புரியுதா நரசிம்ம ராவ் ஏன் வாயே திறக்கம இருந்தார்ன்னு?//

அது என்ன எனக்கே இப்படின்னா? அதெல்லாம் நல்லா படிச்சவங்க சொல்லிக்கோணும் :-))
நீர் அரைகுறையா படிச்சுப்புட்டு ஏன் ஒய்ய் நரசிம்ம ராவுகாரை இழுக்கிறீர்?

//அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.//

இப்பத்தான் 2012 காலண்டரையே கிழிக்கிறீர், புதுசா காசுக்கொடுத்து 2013 காலண்டர் வாங்கும் :-))

வவ்வால் said...

மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

2013 இலாவது சிறப்பாக மொக்கை போட வாழ்த்துக்கள்:-))

ஆத்மா said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தாருக்கும் உரித்தாகட்டும்

சார்வாகன் said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருண் said...

***அனைவருக்கும் 2012 வாழ்த்துக்கள்.***

ஆரம்பத்துல வாழ்த்துறதுக்கு, வருடம் முடிந்து வாழ்த்துறது ஒரு வகைக்கு நல்லதுதான். உயிரோட இருக்கார்களானு தெரிந்துகொண்டு வாழ்த்தலாம்! :)))

வருண் said...

***கொஞ்சம் உளறுகிற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு முதலில் வைத்த தலைப்பு நரசிம்மராவின் மௌனமும் என்னோட உளறுவாயும்.***

நீங்க ரொம்ப கவனமா (எவனும் தப்புக் கண்டுபிடிச்சிடுவானோ?னு ஒரே கவலையில் ;)) ) பதிவு மற்றும் பின்னூட்டம் எல்லாம் எழுதுவதால, நீங்க சொல்லும் கருத்திலும்சை , சொல்லும் விதத்திலும் எதார்த்தம் பார்ப்பது மிகவும் அரிது. இது கொஞ்சம் எதார்த்தமான வரிகள் மாரி இருக்கு.:)) 2013 எல்லாமே எதார்த்தமா எழுதுங்க ஓய்!!! :)

ராஜ நடராஜன் said...

வவ்சு!எனக்கே இப்படின்னா நீங்க சொல்ற மாதிரி அரைகுறையான எனக்கே என்றுதான் பொருள்.

அதென்னமோ நானும் ஒரே துறையில் முழு கவனம் செலுத்தனும்ன்னு பலமுறை முயற்சி செய்தேன்.கடைசியா வந்து சேர்ந்தது பல மரம் தாவும் வவ்வால் மாதிரியே ஆகிப்புட்டேன்:)

நேற்றைக்குப் போட்ட பதிவு இப்ப புத்தாண்டில் வந்து உட்கார்ந்துகிட்டதுக்கு நான் பொறுப்பல்ல.என்னோட காலண்டர் சரியாதான் கிழியுது:)

உங்ககிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கவும்,திருப்பி வாங்கி தரும் மகிழ்ச்சியே தனி:)

இப்ப ஆங்கில புத்தாண்டு நலவாழ்த்து சொல்லிகிட்டு பின்பு பொங்கல் வைப்போம்.

ராஜ நடராஜன் said...

ஆத்மா!நம்ம பதிவுகளுக்கு பெரும்பாலும் பதிவுலக அறிமுக நண்பர்களின் பெயர் வரிசையே அதிகமாக இருக்கும்.உங்கள் பெயர் வித்தியாசமாகவும்,புதிதாகவும் இருந்ததால் யார் என்ற ஆவலில் எட்டிப்பார்த்தேன்.

முன்பு காபி அடிப்பதைத்தான் இப்பொழுது காபி பேஸ்ட் என்கிறோம்:)

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!இரண்டு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் நாம் என்பதால் இப்போதைக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை பகிர்வோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

வருண்!பதிவர்களை நன்றாக கூர்ந்து கவனிக்கிறீங்கன்னு தெரியுது.முக்கியமா என்னை:)

நீங்க சொன்னதில் பாதி உண்மை.யதார்த்தமாக,ஹிப்பகிரஸி இல்லாமல் இருக்கனும்ன்னுதான் நினைக்கிறேன்.சில சமயம் இயல்வது பல சமயம் சாத்தியப்படுவதில்லை.காரணம் பதிவுலக்ம் பல பரிமாணங்கள் கொண்டது.

பதிவுகள் எப்படி வரனும்ன்னு கவனம் செலுத்துவதில்லை.ஆனால் பின்னூட்டங்களில் நிச்சயமாக கவனம் செலுத்துகிறேன் எனப்து உண்மை.பெரும்பாலும் அடுத்தவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்று மண்டை வரை முயற்சி செய்வேன்.பல முறை அதனையும் மீறி கை தட்டிவிடும் தவறுகளை பலமுறை உணர்ந்தே செய்கிறேன் என்பதற்கு சமூக கோபங்கள் என்பதை விட என்னோட ரத்த கொதிப்பு காரணமாக இருக்கலாம்:)

சில நேரங்களில் எதிர்மறையான பின்னூட்டமென்றாலும் சொல்லி விட தோன்றும்.சொல்லி விடுவேன்.பல நேரஙகளில் ஒருவரின் கருத்துரிமையென்று மௌனமாகி விடுவதுண்டு.

ஜோதிஜி said...

இன்று தான் படித்தேன்.