Followers

Monday, June 30, 2008

எனக்கும் எக்ஸ்புளோரருக்கும் என்ன சண்டை?

இத்தனை நாட்கள் நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தே?திடீர்ன்னு என் மேல் என்ன கோபம்?அல்லது யூனிகோடுக்கும் உனக்கும் ஏதாவது மனஸ்தாபமா? உன்கிட்ட அன்பாத்தானே இருந்தேன்?நேற்று முதல் தொடாதே தொடாதே ன்னு எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறாயே?

போடின்னு கோவிச்சுகிட்டு நெருப்பு நரிக்கு ஹலோ சொன்னா வாய்யா மச்சான்! உட்கார்ன்னு அழகா உபசரிக்குது.தமிழ்மணத்துக்கு கூட்டிட்டுப் போகவான்னு கேட்குது.ஒழுங்கா என்கிட்ட சண்டை போடாம இருக்குறதுன்னா இரு இல்ல உன் முகத்துலேயே முழிக்காம நெருப்பு நரியே கதின்னு இருக்கப் போறேன்.

நாட்டாமைகள் யாராவது இந்த சண்டையை தீர்த்து வச்சீங்கன்னா ஒரு கும்புடு போடுவேன்.

5 comments:

பிரேம்ஜி said...

நெருப்பு நரி ரொம்ப வேகமா முன்னேறிட்டிருக்கு.இப்ப நான் அது தான் உபயோகிக்கறேன்.ஆனா எக்ஸ்ப்லோரர் ஐ விடவும் மனசில்ல.

வெண்பூ said...

நான் சொல்ல நினைச்சதை நீங்களே Label ஆக போட்டுட்டீங்க‌ :))))

ராஜ நடராஜன் said...

வணக்கம் பிரேம்ஜி.

ஆங்கிலத் தேடலுக்கு நெருப்பு நரி நன்றாகவே இருக்கிறது.ஆனா தமிழ் எழுத்துக்கள் அதில் சுகமாயில்லை.அந்த ஒரு காரணத்துக்காகவே எக்ஸ்புளோரரை விட மனமில்லை.

Anonymous said...

ஆங்கிலத் தேடலுக்கு நெருப்பு நரி நன்றாகவே இருக்கிறது.ஆனா தமிழ் எழுத்துக்கள் அதில் சுகமாயில்லை.அந்த ஒரு காரணத்துக்காகவே எக்ஸ்புளோரரை விட மனமில்லை//
ஆனால் நெருப்பு நரி 3 ல் தமிழ் பிரச்சனை இல்லை.

http://www.mozilla.com/en-US/firefox/

ராஜ நடராஜன் said...

//ஆனால் நெருப்பு நரி 3 ல் தமிழ் பிரச்சனை இல்லை.//

எனக்குத் தெரியாத தகவல் இது.தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.