சந்தை நிலவரம் மட்டும் சேகரித்துள்ளேன்.(பங்குச் சந்தையல்ல)இங்கே மெக்டொனால்ட்,கென்டக்கி கோழி,பிசா இத்தாலி யெல்லாம் கோலோச்சினாலும் இந்திய உணவகத்திற்கு சைவத்திற்கு ஒரு உடுப்பியும்,அசைவத்திற்கு ஒரு மொகல்மஹாலும் துவங்கி கிளைகள் ஆரம்பித்து ஜே ஜே லாபம் கொள்கிறார்கள்.பிரம்மச்சரியர்களின் துணைவர்களாக சேட்டன்கள் ஓரளவுக்கு மலிவு விலையில் புரோட்டா போட்டு சந்திரனில் கூட சாயா சத்தம்போடும் கூற்றினை உண்மையாக்கும்படி உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். நம்மூர்க்காரர்கள் திருச்சி ஓட்டல் என்றும் பாலிவுட் என்றும் பெயருடன் அங்கொன்று இங்கொன்றாகத் தென்படுகிறார்கள்.ஆனால் நம்மவர்களின் அசல் சுவைக்குப் பஞ்சம்.ஆனாலும் இட்லி தோசையாவது தருகிறார்களே என்று திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது.
துணி வியாபாரம் செய்பவர்கள் கடைகள் கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் கடிகாரக் கடையாக மாறிப்போய் விடுகிறது அல்லது வேறு ஏதாவது ஒன்றாய் கண்ணில் தென்படுகிறது.ஆனால் உணவகங்கள் மட்டும் அப்படியே இடம் மாறாமல் ஆட்சி புரிகிறது.யாரும் தோல்வி கண்ட மாதிரி தெரியவில்லை.
நம்மர்வர்களில் குறிப்பாக செட்டிநாடு உணவகம் அசைவத்திற்கும் சரவண பவன் உணவு சைவத்திற்கும் இடம் காலியாகவே உள்ளது.நண்பர் ஒருவர் செட்டிநாடு உணவு கொண்டு வரவேண்டும் என்று முயன்று பொருளாதாரக் காரணங்களால் கைவிட்டு விட்டார்.ஒரு மண்ணின் மைந்தரின் பண உதவியுடனோ அல்லது தூங்கும் பங்கோ கிடைத்தால் மட்டும் போதும்.குறுகிய காலத்தில் அதென்னமோ பிரேக் ஈவன் பாய்ண்ட் ( யாராவது தமிழாக்கத்துக்கு உதவ வாருங்களேன்) உடைத்து பாக்கெட்டுக்குள் டினாரை சேமிக்கலாம்.சென்னைக்கும் பக்கத்து வீட்டு அமீரகத்தார்கள் யாராவது காதில் விழுகிறதா?
1 comment:
பிரேக் ஈவன் பாய்ண்ட் ( யாராவது தமிழாக்கத்துக்கு உதவ வாருங்களேன்)//
அத லாப நட்ட மையப்புள்ளின்னு சொல்லுவாங்க. நா இப்ப தான் உங்க இடுகைகளை எல்லாம் படிக்கத் துவங்கி இருக்கேன். நல்ல நல்ல மேட்டரா எழுதுறீங்க.அப்புறம் ஏன் பின்னூட்டம் குறைவா இருக்குன்னு எனக்கு புரியல? ஒரு வேளை நல்ல மேட்டர்களா இருப்பதாலயோ?
Post a Comment