Followers

Thursday, June 19, 2008

அ"ழ"கை இழக்கும் சென்னை நகரம்.

சில மாதங்களுக்கு முன்பு டைரக்டர் சீமான் அவர்களின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பார்வையிட நேரிட்டது.அழகான தமிழ் உச்சரிப்பில் தமிழின் அழகு தெரிந்தது.போன வாரம் கலைஞர் திரையில் சிரிப்போம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இளம் இயக்குனர் ஒருவர் பங்கேற்றார்.பெயரினைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.ஆனால் பேசும் தமிழின் அழகில் யார் இவர் என யோசிக்க வைத்தது.தான் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்றார்.சன் நிகழ்ச்சிகளை முன்பெல்லாம் பார்க்கும்போது கேட்கும் தங்கிலீஷ் ஐயோ ஐயோ என மனசை நோகச்செய்யும்.நல்லவேளை இப்பொழுது ஊமைப் படங்கள் மட்டும் காட்டுகிறார்கள்.கானாப் பாட்டு நிகழ்ச்சியிலும் இன்னும் சென்னையைச் சார்ந்த தமிழ் உச்சரிப்புக்களின் சில நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் "ள" வும் "ழ"வும் சுத்தமாக இசைப்பதில்லை.வல்லினம்,மெல்லினம்,இடையினம் என்பதெல்லாம் கடந்தகாலப் பள்ளிப் பாடங்களாக மட்டும் போய்விட்டது.காற்றின் சுவாசம்,அருந்தும் நீர்,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,வாழும் மண் என அனைத்தும் உடற்கூறிலும் வாழ்க்கை நெறிபாட்டிலும்,கலாச்சாரத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.இதில் அருந்தும் நீரின் காரணமாக ஒரு மொழியின் எழுத்து மாறுபட்டுப்போகிறதா எனும் ஐயம் தொன்றுகிறது.ஆங்கிலக் கல்வியில் பயின்றவர்கள் ஆங்கிலமே துணையாக நாட்களைக் கடத்தி விடுகிறார்கள்.புழக்கத்திற்கு தமிழ் அதிகம் பழக்கத்தில் கொண்டு வராத காரணத்தால் மூன்று விகிதாச்சாரம் ஆங்கிலம் ஒரு பங்கு தமிழ் என ஒரு கலவையாக தமிழ் புதியதோர் வடிவம் கொள்கிறது.அரசாங்கப் பணிகளில் உள்ளோர் ஐம்பதுக்கு ஐம்பது விகிதாச்சாரத்தில் ரசாயன மாற்றம் காண்கிறார்கள்.சராசரி மனிதர்கள் வழக்குத் தமிழ் பேசினாலும் ல மட்டும் அனைவருக்கும் பொது உடமையாகிப் போய்விட்டது.முன்பெல்லாம் சென்னை நகர மொழியைப் பற்றி கிண்டலும் கேலியும் பேசியே அந்த லாவகத்தில் பேசும் விகிதாச்சாரம் குறைந்து போய்விட்டது போல் தெரிகிறது.ஆனால் அந்த இடத்தை இந்த ல பொதுவுடமையாக ஆக்கிரமித்துக் கொண்டது போல் தெரிகிறது.

10 comments:

தமிழகத்தின் தலைவன் said...

http://mohideen44.blogspot.com/2008/06/blog-post_4515.html

தமிழ்சினிமா said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்

வடுவூர் குமார் said...

இங்கும் அதே தான், பலரிடம். :-(

மஞ்சூர் ராசா said...

உங்கள் ஆதங்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.

மிக முக்கியமாக தமிழ் தொலக்காட்சி ஊடகங்களில் ஒழுங்காக தமிழை பேசினாலே பலரும் அதை பின்பற்றுவார்கள். முக்கியமாக தமிழ் தமிழ் என ஊரை ஏமாற்றி ஆட்சியாளர்களின் குடும்ப தொலைக்காட்சிகள்.

அடுத்து தமிழ் பத்திரிகைகள்.
தமிழில் அருமையான வார்த்தைகள் இருந்தாலும் தமிங்கலத்தில் வேண்டுமென்றே எழுதுவது.

இவர்கள் திருந்தினாலே அதை தொடரும் பலர் திருந்த முடியும்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் தொலைக்காட்சியில் மட்டுமே தமிழை சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கேள்விகேட்பவர்கள் கூட நல்ல தமிழில் பேச முயற்சித்தது மிகவும் பாராட்டக்கூடிய ஒரு அம்சமாக இருந்தது.

மங்களூர் சிவா said...

'வாலை'ப்பல தோல் 'வலு'க்கும்

:(((((((((

ராஜ நடராஜன் said...

தமிழகத்தின் தலைவர் வாழ்க:)

ராஜ நடராஜன் said...

தமிழ் சினிமா,வடுவூர் குமார் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//'வாலை'ப்பல தோல் 'வலு'க்கும்

:((((((((( //

வருத்தமாகத்தான் இருக்கிறது.இதனை எப்படியாவது மாற்றும் முயற்சி வேண்டும்.

ராஜ நடராஜன் said...

ம்ஞ்சூர் ராசா அவர்களுக்கு

எனது புலம்பல்களுக்கு விடை அளித்துள்ளீர்கள்.உண்மையில் நீங்கள் சொன்னது போல் சின்னத்திரையும்,பத்திரிகைகளும் மாற்றம் அடைந்தாலே போதும்.மக்களின் மனதில் உள்மனதில் வார்த்தைகள் படியும்.

கிரி said...

ரொம்ப அளகா சொன்னீங்க :-))))))))))