Followers

Wednesday, June 25, 2008

எந்த புத்தகக் கணினி வாங்கலாம்?

எந்த புத்தகக் கணினி வாங்கலாம்?இப்பவெல்லாம் யாரும் மடியில் கணினிகளை தாலாட்டுவதை பார்க்க இயலவில்லை.எல்லோரும் தோளில் மாட்டிக்கொண்டு திரிவதால் வேண்டுமானால் தோள் கணினி என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம்.

தோள் கணினிகளின் பங்குச் சந்தை நிலவரம் என்ன?எனக்குத் தெரிந்து டெல்,கம் பேக்(?) அல்லது ஹம்பக்(?)ஏசர் என்பவர்கள் சந்தையில் ஆடி விளையாண்டாலும் சந்தையின் கதாநாயகன் என்னவோ தொஷிபா மட்டுமே.தோள் கணினிகளின் பங்குச் சந்தையில் சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 70 சதம் தொஷிபாவின் கையில்.இனி வகைகள் கீழே:-

சாட்டிலைட்= வீட்டு உதவிக்காக = விலை 850 டாலர் முதல் 1500 டாலர் வரை.

சாட்டிலைட் புரோ= அதுதான் பெயரிலேயே தெரியுதே புரொ ன்னு. = விலை 1000 முதல் 1300 டாலர் வரை.

டெக்கரா= விமானத்திலேயே சுத்தி திரியும் பன்னாட்டு வியாபாரிகளுக்கு = விலை 1300 முதல் 1600 டாலர் வரை.

போர்ட்டிஜ் = கனத்தையெல்லாம் என்னால் தூக்க முடியாது என்பவர்களுக்கு = விலை 1750 முதல் 2000 டாலர் வரை.

கொஸ்மியோ= தொலைக்காட்சிகளைக் கூட கணினியில்தான் பார்ப்பேன் என அடம் பிடிப்பவர்களுக்கு = விலை 1600 முதல் 2250 டாலர் வரை

பதிவுக்கு மட்டும் சின்னச் சின்ன வேலைகளுக்கு என்றால் மேற்சொன்ன ஏசர்,கம்பேக் போன்றவர்களை நாடுவது நலம்.

இவங்களையெல்லாம் மிஞ்சும்படி மேக்நோட் என்று உலகத்திலேயே ஒல்லியானவள் நான் தான் என்ற விளம்பரத்துடன் _ அது ஆப்பிள் பிரியர்களுக்கு. விலை விபரம் தெரியவில்லை.

மேற்கண்ட விலையுடன் உள்ளுர் வரி,விற்பனை வரி,லாபம் என்று கொஞ்சம் கறந்துவிடுவார்கள்.இதில் விலையினை சமன் செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய சில விபரங்கள்.

Processor between 1.83 GHz to 2.5 GHz with latest technology of Core Duo / Core 2 Duo

Ram 1 GB to 3 GB

HDD 100 GB to 320GB.

Screen 12" /15.4"/ 17" with TFT or Crystal Screen

மேலும் கணினியைச் சுற்றி என்ன என்ன கைப்பைகள்(option) தேவை என்ற நிர்ணயம்.பெரும்பாலோர் யு.எஸ்.பி (USB) யையே பயன்படுத்துகிறார்கள். பயர்வயர்(Firewire) இருந்தால் நலமாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் மேலாக பாக்கெட்டின் எடையை கவனித்துக் கொண்டு கடையின் கண்ணாடி கதவுகளுக்குள் நுழையவும்.

ஒரு டிஸ்கி போட்டுடலாமா: விலை விபரங்கள் தேச தேசத்துக்கு வித்தியாசப்படும்.எந்தப் பொருள் வாங்கச் சென்றாலும் கையில் பணம் இல்லாமல் செல்வது நல்லது.கூடவே வாங்குகிற மாதிரி பந்தா காட்டிவிட்டு வந்து விடவும். காரணம் வீட்டுக்கு வந்து யோசனை செய்தபின் அல்லது யாருடனாவது மொக்கை போட்டுக்கொண்டு பின் இதைத்தான் வாங்கப்போகிறோம் என்ற தெளிவுக்கு வந்தவுடன் பணத்தோடு மீண்டும் செல்வது நல்லது.

4 comments:

Athisha said...

processor centrino or centrino duo
வாக பார்த்து வாங்கவும்



toshibaவின் இந்திய சந்தையில் விற்பனை சற்று பின்தங்கியே உள்ளது
(அதற்கு மிக முக்கிய காரணம் HCL கம்பெனியே toshibaவின் service and support வழங்குகிறது .)


இந்தியாவில் HP மற்றும் dell மிக அதிக மடிகணினிகளை சென்ற வருடத்தில் விற்றுள்ளனர்.

குறைந்த பட்ஜெட்டில் வாங்க எண்ணுபவர்கள் acer ஐ முயற்ச்சிக்கலாம் .


Intel லில் பணிபுரிவதால் கூறுகிறேன் .

மேலும் மடிக்கணிணிகுறித்த விபரங்களுக்கு dhoniv@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம் .

ராஜ நடராஜன் said...

//இந்தியாவில் HP மற்றும் dell மிக அதிக மடிகணினிகளை சென்ற வருடத்தில் விற்றுள்ளனர்.//

தகவலுக்கு நன்றிங்க.இந்த ஊரில் மண்ணின் மைந்தர்களுக்கு கணினி வாங்குவது கடலை மிட்டாய் வாங்குவது போல் என்பதால் ஒருவேளை தொஷிபா முன் நிலை வகிக்கிறது போலும்.

வேளராசி said...

தகவலுக்கு நன்றி நண்பரே.

ராஜ நடராஜன் said...

//தகவலுக்கு நன்றி நண்பரே//


வாங்க வேளராசி.வருகைக்கு நன்றி.