Followers

Monday, March 23, 2009

கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு

மாடு,எருமை,துணி துவைக்கிற ஆறுன்னு முங்கியெழுந்த எனக்கு சின்னவயசுல கறுப்பு (கூடவே கற்பு)ன்னா என்னன்னே தெரியாது.பத்துக்கு ஒண்ணு கொஞ்சம் வெள்ளையடிச்ச மாதிரி தேறுவான்.மொத்த விகிதாசரத்துல கறுப்புதான் அதிகமிங்குறதால அதப் பத்தியெல்லாம் ஒரு நினைப்பே இல்லாமல் இருந்தது.

ஆனால் டவுனுக்குப் படிக்க(அது என்னவோ பி.ஏ வாம்) போயிட்டு வந்த ஒரு பக்கத்து வீட்டு அண்ணன்(பேரு மறந்து போயிடுச்சு)படிச்ச எளந்தாரிங்கிறதால கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாத்தான் திரிவாரு.அப்புறம் ஏதோ கெவர்மெண்ட் வேலை வேற கெடச்சா மனுசனுக்கு சொல்லவா வேண்டும்.இம்புட்டு கொடுத்து வச்ச மனுசனுக்கு ஒரே ஒரு பிரச்சினை என்னன்னா நாம கறுப்பா பொறந்துட்டேமேன்னு.மூஞ்சியக் கழுவுனா கண்ணாடி பார்க்கிறது,பவுடரப் போட்டா கண்ணாடியப் பார்க்கிறதுன்னு மனுசன் அந்த வயசுக்கே உள்ள தன் உணர்வுல மிதந்துகிட்டிருந்தாரு.கூடவே குமுதம்,விகடன் வாங்கிப் படிக்கிற பழக்கத்தால ஓசு குமுதத்துக்கு ஆசைப் பட்டு நான் அவர் வீட்டுக்கும் போயிட்டிருந்தேன்.

நான்:அண்ணா குமுதம் படிச்சிட்டீங்கன்னா கொடுங்களேன்.

அண்ணன்: இந்தா எடுத்துகிட்டுப் போ.டேய் நடராஜா நான் இன்னைக்கு கொஞ்சம் சிவப்பா இருக்கேனா.

நான்:ஆமாண்ணா நேத்தைக்கு விட கொஞ்சம் சிவப்பாத்தான் இருக்கிறீங்க.

இப்படி அவரைப் பார்க்கும் போதெல்லாம் என்ன பேசினாலும் பேச்சு இறுதியில் சிவப்புல வந்து முடிந்து விடும்.

நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.இப்படி ஒரு நாள் அண்ணன்கிட்ட பேசிகிட்டுருக்கும் போது நடராஜா பார் நான் எப்படி சிவப்பாயிட்டேன்னு முண்டா பனியனைத் திறந்து நெஞ்சைத் திறந்து காட்டுனாரே பார்க்கலாம்:)

இப்படி அவர் சொன்னதைப் போய் கூட்டாளிக கிட்டச் சொல்லிச் சிரிச்சி நெஞ்சழகன்னு பேரு வச்சோம்.

சரி அத விடுங்க! ஒரு நாள் பாவாடைப் பிராயத்திலிருந்த அத்தை மகள் தனத்துகிட்ட என்னைக் கட்டிக்கிறியான்னு விளையாட்டுக்கு கேட்டதுக்கு மாட்டேன் நீ கறுப்பாயிருக்கேன்னுடுச்சு.ஆனா இன்னொரு தூரத்து சொந்தம் கன்னியம்மா நம்ம கறுப்பு கவர்ச்சியிலோ அல்லது விளையாட்டுக்கு சித்தி வீட்டுல தங்கச்சி கூட நான் சேலை கட்டி விளையாண்டுதுல மயங்கியோ சித்தி வீட்டுக்கு அடிக்கடி ஓடி வந்துரும்.ரேடியோப் பொட்டில வர்ற இங்கிலீசு நியூசுல என்ன சொல்றாங்கன்னு என்னோட ஆங்கிலம் பரிட்சிக்கும்.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றாங்கன்னா இங்கிலிசுபீசுவேன்.(அவன் மூக்கால பேசறதெல்லாம் அப்ப யாருக்குப் புரியும்?இந்த மாதிரி இங்கிலீசு குசும்புக்கெல்லாம் சிரிக்கிறது சென்னை சினிமாத் தியேட்டர்களில் சகஜமப்பா:)
எல்லாம் எங்கே எப்படி புருசன் வீட்டுல குடித்தனம் நடத்துதுகளோ?நான் கல்லூரி, திரவியம் ஓடி பாலைவனம் வந்துட்டேன்.சும்மா சொல்லக்கூடாது வெயிலுக்கும்,குளுருக்கும் கறுப்பு நல்லாவே தாங்குது!

20 comments:

நசரேயன் said...

நானும் கருப்புதான்

அது சரி(18185106603874041862) said...

//
நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.
//

ரொம்ப பொய் சொல்லுவீங்க போலருக்கே :0))

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
நானும் கருப்புதான்

March 23, 2009 8:20 AM
//

அது தான் நீங்களே உங்க பதிவுல எழுதியிருந்தீங்களே...கரி பால்டீன்னு :0))

அது சரி(18185106603874041862) said...

ஒரு கோயின்ஸிடன்ஸ்....நான் நேத்து தான் அந்த படம் வெற்றிக் கொடிகட்டு பார்த்தேன்...

ஆங்...கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..டொய்யோங்க் டொய்யோங்க்...

ஆனா அதுல இன்னொரு குத்துப் பாட்டு இருக்கு...

டபாய்க்கிறாடா கண்ணம்மா டபாய்க்கிறாடா
துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...

:0))

குடுகுடுப்பை said...

எதுனா அரபிய பெண் குதிரைக்கிட்ட கேட்டுப்பாருங்க.

குடுகுடுப்பை said...

அதுவும் கருப்பு பிடிக்கும்னு சொன்னா நல்லாத்தானே இருக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றாங்கன்னா //

பலே பலே

ராஜ நடராஜன் said...

//நானும் கருப்புதான்//

வாங்க கருப்பு திராட்சை கனவுலக நாயகரே!

ராஜ நடராஜன் said...

////
நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.
//

ரொம்ப பொய் சொல்லுவீங்க போலருக்கே :0))//

பதிவுகளில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட பெயர்களைக் குறிப்பிட்டே வருகிறேன்.நீங்க நம்பலைன்னா தங்கராஜ்,மருதமுத்து,சக்திவேல்,சின்னப்பன்,ஜார்ஜ் போன்ற இளம் வயது நண்பர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும்:)

ராஜ நடராஜன் said...

//ஒரு கோயின்ஸிடன்ஸ்....நான் நேத்து தான் அந்த படம் வெற்றிக் கொடிகட்டு பார்த்தேன்...

ஆங்...கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..டொய்யோங்க் டொய்யோங்க்...//

அந்தப்பாட்டு கேட்டபோதே ராம்பாபு என்ற நண்பரிடம் சொன்னேன் பாட்டு ஹிட்டாகும்ன்னு.அவரோ இவரு கலருல இருக்குறதால சொல்றாருன்னு அவர் மனைவியிடம் என்னைப் பற்றிக் கலாய்த்தார்:)

ராஜ நடராஜன் said...

//துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...

:0))//

முதலாவது நான் இருப்பது குவைத்.அதென்ன வளைகுடாவுல எங்க இருந்தாலும் துபாய்க்காரன்னு ஒரு பேரு:)

இரண்டாவது தங்ஸ் அட்டை மாதிரி கூடவே ஒட்டிகிட்டு இருக்கிறதால இந்த மாதிரி யாரு கிட்டயும் பாட முடியல:)

ராஜ நடராஜன் said...

//எதுனா அரபிய பெண் குதிரைக்கிட்ட கேட்டுப்பாருங்க.//

அதுக மூஞ்சில கண்ணு மட்டும்தான் தெரியுது.உடம்பு முழுக்க கறுப்புதான்.தமிழ்,இந்தி்,ஆங்கிலம் முக்கோணத்துல மாட்டிகிட்டதால அரபி அடிச்சுப் போட்டாலும் வராது.

ராஜ நடராஜன் said...

////.நானும் 16 வயதினிலே ரஜனி மாதிரி இப்ப என்ன சொல்றாங்கன்னா //

பலே பலே//

பலே பலே விட கண்ணா!தமிழ்நாட்டுல கருப்பு பத்தியும் கற்பை பத்தியும் பேசவே கூடாது பஞ்ச் போட்டிருக்கலாமோ:) இது எப்டி இருக்கு?

கவிதா | Kavitha said...

//திரவியம் ஓடி பாலைவனம் வந்துட்டேன்.சும்மா சொல்லக்கூடாது வெயிலுக்கும்,குளுருக்கும் கறுப்பு நல்லாவே தாங்குது//

.. கறுப்பு ஒரு அழகுதான்.. வெயிலுக்கு தாங்குதா? ஏன் வெள்ளை நிறம் தாங்காதா? :)

ராஜ நடராஜன் said...

//.. கறுப்பு ஒரு அழகுதான்.. வெயிலுக்கு தாங்குதா? ஏன் வெள்ளை நிறம் தாங்காதா? :)//

45 டிகிரி வெயிலுக்கு மேலே எந்த வெள்ளை நிறம் தாங்கும்?ஏதோ பேரோட ஊர்ப்பேரும் சிலருக்கு சுத்திகிட்டு வர்றமாதிரி ஏர்கண்டிசனும் வீடு,கார்,ஆபிஸ்ன்னு சுத்திகிட்டு வர்றதால தப்பிச்சாங்க பயபுள்ளைக.

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
////
நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்.
//

ரொம்ப பொய் சொல்லுவீங்க போலருக்கே :0))//

பதிவுகளில் அவ்வப்போது சம்பந்தப்பட்ட பெயர்களைக் குறிப்பிட்டே வருகிறேன்.நீங்க நம்பலைன்னா தங்கராஜ்,மருதமுத்து,சக்திவேல்,சின்னப்பன்,ஜார்ஜ் போன்ற இளம் வயது நண்பர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும்:)
March 23, 2009 10:38 PM
//

அடடா...நான் அதை சொல்லவில்லைண்ணா...கறுப்பா இருக்கறவரை செவப்புன்னு சொன்னீங்கல்ல, அதைச் சொன்னேன்... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க போல...

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
//துபாய் போயி வந்தவன் கிட்ட டபாய்க்கிறாடா...

:0))//

முதலாவது நான் இருப்பது குவைத்.அதென்ன வளைகுடாவுல எங்க இருந்தாலும் துபாய்க்காரன்னு ஒரு பேரு:)

இரண்டாவது தங்ஸ் அட்டை மாதிரி கூடவே ஒட்டிகிட்டு இருக்கிறதால இந்த மாதிரி யாரு கிட்டயும் பாட முடியல:)
//

ஏன்னா எனக்கெல்லாம் வளைகுடான்னா துபாய் மட்டும் தான் தெரியும்...விவேகானந்தர் தெரு, துபாய் சந்து, துபாய்ன்னு யார்னா அட்ரஸ் குடுத்தாக்கூட அதுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புற ஆளு நானு :0))

ராஜ நடராஜன் said...

//அடடா...நான் அதை சொல்லவில்லைண்ணா...கறுப்பா இருக்கறவரை செவப்புன்னு சொன்னீங்கல்ல, அதைச் சொன்னேன்... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க போல...//

ஓ!திடீர்ன்னு கிட்னில டூப் லைட் எரிஞ்சிடுச்சு!இனிமேல் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கவேண்டும் போல:)

ராஜ நடராஜன் said...

//ஏன்னா எனக்கெல்லாம் வளைகுடான்னா துபாய் மட்டும் தான் தெரியும்...விவேகானந்தர் தெரு, துபாய் சந்து, துபாய்ன்னு யார்னா அட்ரஸ் குடுத்தாக்கூட அதுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புற ஆளு நானு :0))//

இதுக்கு தனியா ஒரு பதிவு போடணும் போல இருக்குது:)

கிரி said...

//நானும் அவரை திருப்திபடுத்தும் எண்ணத்துல அண்ணா சிவப்பாயிட்டீங்க சொல்லிகிட்டிருந்தேன்//

இதே ரேஞ்சுல போச்சுனா அவர் வெள்ளைக்காரனாத்தான் மாறி இருக்கணும் :-)))

அப்புறம் எனக்கும் கருப்பு தான் பிடிக்கும் ஹி ஹி ..கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு..அப்படின்னு எங்க தலைவி மாளவிகா வேற பாடி இருக்காங்க..;-)